ஜகாத் زکوٰۃ என்ற அரபி வார்த்தைக்கு அரபி அகராதியில்" வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன.
ஷரிஅத்தில் இது ஓர் مالی عبادت பொருள்சார்ந்த வணக்கமாகும்.
இது வெறுமன ஏழைகளுக்கு பொருளை அளவிட்டு உதவும் ஓர் அமல் அல்ல, இதனால் ஜகாத் கொடுப்பவரின் உள்ளம் பரிசுத்தமாகிمخلص உளத்தூய்மையான அடியானாக ஆகிறான்.
ஜகாத் கொடுப்பது, அல்லாஹ் தனக்கு அருளிய எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்று, நன்றி செலுத்த சிறந்த வழியாக அமைகிறது. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன.
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
(அல்குர்ஆன் : 64:17)
ஜகாத் கடமையான ஆண்டு.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’ எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.(நூல் : ரஹீக்)
ஜகாத், இஸ்லாத்தின் அடிப்படை கடமையாகும்.
عَنِ أَبي عبدِ الرَّحمنِ عبدِ اللهِ بْنِ عُمَرَ بن الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " بنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيتِ، وَصَوْمِ رَمَضَانَ". [متفق عليه]
நபி (ஸல்) அவர்கள் கூறியதாகஅப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறுகின்றார்கள் : ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது''.
(நூல்; புஹாரி,முஸ்லிம்)
திருமறை குர்ஆனில் தொழுகையுடன் சேர்த்து ஜகாத்தை 32 வசனங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இதுவே ஜகாத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள போதுமான சான்றாகும்.
(ردالمحتار،کتاب الزکاۃ، ج۳، ص۲۰۲)
தவிர ஜகாத் கொடுப்பவர் இம்மை,மறுமையின் பாக்கியங்களை தனதாக்கிக்கொள்கிறார்.
ஜகாத் கடமை குர்ஆன்,ஹதீஸ் வாயிலாக நிரூபணமான ஒன்றாகும்.
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்.
(அல்குர்ஆன் : 2:43)
தொழுகைக்கு பிறகு ஜகாத் முக்கிய கடமையாகும்.அதனால் தான் குர்ஆனில் ஈமானுக்கு பிறகு தொழுகையை கூறும் போது அதனோடு சேர்த்து ஜகாத்தை கூறப்படுகிறது.
குர்ஆனில் ஜகாத் கொடுக்காதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை மற்றும் கடுமையான எச்சரிக்கை...
1)ஜகாத்தை மறுப்போர் காஃபிர்.
الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
(அல்குர்ஆன் : 41:7)
2)கியாம நாளில் கிடைக்கும் கடுமையான தண்டனை.
وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(அல்குர்ஆன் : 9:34)
يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 9:35)
குர்ஆனில் ஜகாத்தை நிறை வேற்றுபவருக்குள்ள நன்மாராயங்கள்...
1)ஜகாத்தை நிறைவேற்றுபவர் நாளை மறுமையில் எல்லா விதமான பயம்,கவலைகளை விட்டும் பாதுகாக்கப்படுவார்.
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:277)
2)ஜகாத்தை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.நாயகம் ﷺஅவர்களின் துஆ கிடைக்கும்.
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 9:103)
ஜகாத் யார் மீது கடமை?
வசதிப்படைத்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் ஜகாத்واجبகடமையாகும்.
வயதுக்கு வந்தோர், வராதோர்.புத்திசுவாதினமுள்ளவர், புத்திசுவாதினமில்லாதவர் அனைவரின் மீதும் கடமையாகும்.
ஒரே நிபந்தனை نصاب "நிஸாப்"என்கிற அளவை ஜகாத் கொடுப்பவர் சொந்தமாக்கி கொண்டவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு :
வட்டி,இலஞ்சம்,திருட்டு,கொள்ளை இதுப்போன்ற ஹராமான வழியில் பொருளை சம்பாதித்து அதிலிருந்து ஜகாத்தை நிறைவேற்றுவதால் எந்த பயனும் கிடைக்காது.ஹலாலான முறையில் சம்பாதித்த பொருளின் ஜகாத்தே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜகாத் பெற தகுதியானவர்கள்.
எட்டு பிரிவினரை குர்ஆன் வகைப்படுத்துகிறது.
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
ஜகாத் எனும் தானம்....
1)தரித்திரர்களுக்கும், (பரம ஏழை)
2)ஏழைகளுக்கும்,(ஜகாத் நிஸாப் அளவு பொருளாதாரம் இல்லாதவர்கள்)
3)தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,(இஸ்லாமிய ஆட்சியில் ஜகாத்,சதகா போன்றவற்றை மக்களிடம் ரூபாய் வசூல் செய்து பைதுல்மாலில் சேர்ப்பவர்கள்.
(தற்காலத்தில் மதரஸா,மஸ்ஜிதுகளுக்கு சந்தா வசூலிப்பவர்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்.எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும்)
4)இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், (மாற்று மத சகோதரர்களுக்கு ஜகாத் கொடுப்பது. ஆரம்ப காலத்தில் இதற்கு அனுமதி இருந்தது.பிற்காலத்தில் இது தடைசெய்யப்பட்டு விட்டது.இப்போது எந்த முஸ்லிம் அல்லாதவருக்கும் ஜகாத் கொடுக்க அனுமதி இல்லை.)
5)அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,(தற்காலத்தில் அடிமைகள் இல்லாததால் இது செயல்பாட்டில் இல்லை)
6)கடன் பட்டிருப்பவர்களுக்கும், (ஏழ்மையின் காரணமாக கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் கடனாளிகளுக்கு உதவி செய்வது)
7)அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), (ஆயுதங்களை வாங்க வசதியில்லாத போராளிகளுக்கு ஜகாத் கொடுப்பது அல்லது குர்ஆன்,ஹதீஸை கற்பதில் மூழ்கியிருக்கும் மாணவர்களுக்கு கொடுப்பது)
8)வழிப்போக்கர்களுக்கும் . (பயணத்தில் தேவையான பணமின்றி தவிப்பவர்.தனது ஊரில் பெரிய செல்வந்தராக இருந்தாலும் பயணத்தில் இவர் ஜகாத் பெற தகுதியானவராகி விடுகிறார்)(அல்குர்ஆன் : 9:60 -தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆன் 4:392)
ஜகாத் எவற்றில் கடமை?
ஜகாத் நான்கு பொருள்களில் கடமையாகும்.
1)தங்கம்,வெள்ளி
2)விளைச்சல் பொருள்கள்
3)வியாபாரப்பொருட்கள்
4)கால்நடைகள்(ஆடு,மாடு,ஒட்டகை)
தங்கத்தின் "நிஸாப்"அளவு:
87 கிராம் 480 மில்லி கிராம்(சுமார் 11 சவரனுக்குச் சமம்.)(ابن ماجہ1/1448)
குறிப்பு;சேமிப்பு தங்கம்,(புழக்கத்தில் உள்ள) அணியும் தங்கம் அனைத்திற்கும் ஜகாத் கடமையாகும்.
(سنن ابودائود کتاب الزکوٰۃ اوردیکھئے حاکم جز اول صفحہ 390 ۔
(فتح الباری جز چار صفحہ 13
عمرو بن العاص رضي الله عنهما أن امرأة دخلت على النبي ﷺ وفي يد ابنتها مسكتان من ذهب، فقال النبي ﷺ: أتعطين زكاة هذا؟ قالت: لا، قال: أيسرك أن يسوِّرك الله بهما يوم القيامة سوارين من نار فألقتهما وقالت: هما لله ولرسوله[2]، قال الحافظ ابن القطان: إسناده صحيح.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா? என அவர்ளிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதில் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ்(ரலி), ஆதாரம்: இப்னு ஹஸம் )
வெள்ளியின் "நிஸாப்"அளவு:
612 கிராம் 360 மில்லி கிராம்(ابن ماجہ)
பணம்: வங்கியில் சேமித்து வைத்துள்ள பணம் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
ஜகாத் பண மதிப்பீடு..
ஒரு இலட்சத்திற்கான ஜகாத்-2500
இரண்டு இலட்சத்தின் ஜகாத்-5000
மூன்று இலட்சத்தின் ஜகாத் -7500
நான்கு இலட்சத்தின் ஜகாத் -10000
ஐந்து இலட்சத்தின் ஜகாத் -12500
ஆறு இலட்சத்தின் ஜகாத் -15000
ஏழு இலட்சத்தின் ஜகாத் -17500
எட்டு இலட்சத்தின் ஜகாத் -20000
ஒன்பது இலட்சத்தின் ஜகாத் -22500
பத்து இலட்சத்தின் ஜகாத் -25000
இருபது இலட்சத்தின் ஜகாத் -50000
முப்பது இலட்சத்தின் ஜகாத் -75000
நாற்பது இலட்சத்தின் ஜகாத் -100000
ஐம்பது இலட்சத்தின் ஜகாத் -125000
ஒரு கோடி ஜகாத் -250000
இரண்டு கோடி ஜகாத் -500000
வியாபாரப் பொருட்களின் ஜகாத்.
கம்பெனியில்,கடையில் உள்ள வியாபாரப் பொருட்கள் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலை அளவுக்கு இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
இந்த வியாபாரப் பொருட்கள் நிஸாபின் அளவை விட குறைவாக இருந்தால் ஜகாத் கடமையாகாது.
ஜகாத்தின் விளக்கம்;
பொருளின் சந்தை மதிப்பு அல்லது பொருளின் எடையை கவனித்து ஜகாத் நிர்ணையிக்கப்படும்.(صحیح بخاری کتاب الزکاۃ)
வியாபாரப் பொருட்கள்:
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியே ஆக வேண்டும்.
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
தானியங்கள், விளைச்சல் பொருட்களின் ஜகாத் 10 சதவிகிதம்:-
قال أيضًا رسول الله صلى الله عليه وسلم:
«فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا [ عَثَرِيًّا: ما يُشْرب من غير سَقْي إما بعروقه أو بواسطة المطر والسيول والأنهار] الْعُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْح [ سُقِي بالنضح: أي بنَضْح الماء والتَّكَلُّف في استخراجه]ِ نِصْفُ الْعُشْرِ» (رواه البخاري).
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒரு பங்கு (1/20) கொடுக்க வேண்டும்.)
(உற்பத்தியில் 10 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
(صحیح بخاری کتاب الزکاۃ)
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை. அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கே கவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.
وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ وَلَا تُسْرِفُوْا اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஜகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும் நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
கால்நடைகளில் ஆடு,மாடு,ஒட்டகை இம்மூன்றில் ஜகாத் கடமையாகும்.
இவற்றின் நிஸாப் அளவு;
(1)ஆடுகள்.
1 முதல் 39 வரை - ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை - ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை- “இரண்டு ஆடுகள்”
201 முதல் 399 வரை - “மூன்று ஆடுகள்”
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண் 1454))
(வெள்ளாடு, செம்மரியாடு, ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)
(2)மாடுகள் (எருமைகள்)
1 முதல் 29 வரை - ஸகாத் இல்லை;
30 முதல் 39 வரை - ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை - 2 வருடம் நிறைவு பெற்ற ஒரு கன்று
60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் கொடுக்க வேண்டும்.
(3) ஒட்டகைகள்.
1 முதல் 4 வரை - ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை - ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
76 முதல் 90 வரை 2 வருடம் நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம் நிறைவு பெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
ஒவ்வொரு 40 க்கும் ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவு பெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம் நிறைவு பெற்ற 1 பெண் ஒட்டகம்.
சில சட்டங்கள்.
#வாடகைக்கு விடப்படும் வீடுகள்,கடைகளுக்கு ஜகாத் கிடையாது.ஆனால் வாடகையில் வரும் வருமானம் நிஸாப் அளவை அடைந்தால் அந்த வருமானத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
#வாடகைக்கு விடப்படும் வாகனங்களுக்கும் ஜகாத் கிடையாது.
ஆனால் வாடகையில் வரும் வருமானம் நிஸாப் அளவை அடைந்தால் அந்த வருமானத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
குறிப்பு;வீட்டு உபயோகத்திற்காக உள்ள வாகனங்கள்,உபயோகப்பொருட்கள்,வீடு,நிலங்கள் இவற்றில் ஜகாத் கிடையாது.
#இலாப நோக்கத்தோடு (ஃபிளாட்கள்) வாங்கிய நிலங்களுக்கு ஜகாத் கொடுக்கவேண்டும்.
சொந்ததேவைக்காக வாங்கிய நிலங்களுக்கு ஜகாத் இல்லை.
سنن ابی دائودکتاب الزکوٰۃ حدیث نمبر1562)
#ஒருவரிடம் கொஞ்சம் தங்கம்,கொஞ்சம் வெள்ளி,கொஞ்சம் பணம்,கொஞ்சம் வியாபாரப்பொருட்கள் இருந்து,இவற்றை மொத்தமாக சேர்த்து கணக்கிட்டால் ஜகாதுடைய நிஸாப் வருமென்றால் அதற்கும் ஜகாத் கொடுக்கவேண்டும்.
ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்கல் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 7556)
رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் : 24:37)
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறியை போதிப்பதாகும். இதுவே பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது.
உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது) (அல் குர்ஆன் 59.7)
இன்று உலகளாவிய முஸ்லிம் சமூகம் வறுமை என்னும் கொடிய நோயினால் பீடித்கப்பட்டு நலிந்த ஒரு சமூகமாக மாறியுள்ளது. வறிய மக்களது வாழ்வாதாரத்தில் முன்னேற்றங்கள் கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை முற்று முழுதான வறுனம ஒழிப்புக்கு ஏதுவாக அமையயவில்லை. ஆனால் ஸகாத் எனும் இஸ்லாமிய வறுனம ஒழிப்புத் திட்டத்தின் மூலம் வறிய மக்களது வாழ்வாதாரத்தில் பல முன்னேற்றங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சில நாட்களிலேயே ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதம் இஸ்லாமியப் புத்தாண்டு தொடங்கிற்று. சென்ற ஆண்டிற்கான ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) தங்களது தோழர்களை பல கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதன் விவரமாவது:
ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுப்பப்பட்ட கோத்திரத்தாரின் பெயர்கள்:
1. உயைனா இப்னு ஹிஸ்ன் (ரழி) - பனூ தமீம்.
2. யஜீது இப்னு அல் ஹுஸைன் (ரழி) - அஸ்லம், கிஃபார்
3. அப்பாது இப்னு பஷீர் அஷ்ஹலி (ரழி) - சுலைம், முஜைனா
4. ராஃபி இப்னு மக்கீஸ் (ரழி) - ஜுஹைனா
5. அம்ரு இப்னு ஆஸ் (ரழி) - பனூ ஃபஜாரா
6. ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கிளாப்
7. பஷீர் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கஅப்
8. இப்னு லுத்பிய்யா அஜ்தி (ரழி) - பனூ துப்யான்
9. முஹாஜிர் இப்னு அபூ உமைய்யா (ரழி) - ஸன்ஆ நகரம் (இவர்கள் ஸன்ஆவிற்கு அனுப்பப்பட்ட காலத்தில் தான் தன்னை நபி என்று வாதிட்ட அஸ்வது அனஸி அங்குத் தோன்றினான்)
10. ஜியாது இப்னு லபீது (ரழி) - ஹழர மவுத் (யமன் நாட்டிலுள்ள ஓர் ஊர்)
11. அதீ இப்னு ஹாத்தம் (ரழி) - தை மற்றும் பனூ அஸத்
12. மாலிக் இப்னு நுவைரா (ரழி) - பனூ ஹன்ளலா
13. ஜிப்கான் இப்னு பத்ர் (ரழி) - பனூ ஸஅதின் ஒரு பிரிவினருக்கு
14. கைஸ் இப்னு ஆஸிம் (ரழி) - பனூ ஸஅதின் மற்றொரு பிரிவினருக்கு
15. அலா இப்னு ஹழ்ரமி (ரழி) - பஹ்ரைன் தீவு
16. அலீ இப்னு அபூதாலிப் (ரழி) - நஜ்ரான் பிரதேசம் (ஜகாத் மற்றும் ஜிஸ்யா வசூலிப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள்.)
உக்பா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி 851)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்’ ‘நானே உன்னுடைய புதையல்’ என்று கூறும்.’
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.’ பிறகுوَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌஎவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:180)என்ற வசனத்தை ஓதினார்கள்.
எனவே அல்லாஹ் கடமையாக்கிய ஜகாத் எனும் பொருளாதார கடமையை சரியாக நிறைவேற்ற அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமின்...
No comments:
Post a Comment