நோன்பின் சிறப்புக்கள்.
அல்லாஹுத்தஆலா, மனிதனை அவனது அனைத்து படைப்புகளிலும் சிறந்தவனாக ஆக்கியுள்ளான், மனிதன் அவனது இயல்பிலே நன்மை- தீமை,நற்பண்பு-தீயபண்பு, அடிபணிதல்-கீழ்ப்படியாமை,சிறந்த-சீர்கெட்ட இப்படி நேர்முரணான இருகுணங்களை பெற்ற படைப்பாக உள்ளான்.
விளைவு:நன்மையும் தீமையும் எந்த மனிதனிடமிருந்தும் வெளிப்படலாம். ஒரே மனிதனில் நல்ல, கெட்ட இருவேறுசெயல்கள் வெளிப்படுவது சாத்தியமே, ஆனால் ஒருவன் கெட்ட செயல்களையும் பாவங்களையும் தவிர்த்து, தனது வாழ்க்கையையும் தனது பொன்னான தருணங்களையும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் அலங்கரித்தால், இவை அனைத்தும் வெற்றிகரமானவையாகவும், உன்னதமானவையாகவும். படைத்த ரப்பிடம் நெருக்கத்தையும், கண்ணியத்தை பெற்றுத்தரும் சிறந்த அடையாளமாகும்,இதனையே تقویٰ இறையச்சம் எனப்படும்.நோன்பின் நோக்கமும்,அடிப்படையும்تقویٰ இறையச்சம் என்கிறது திருமறை...
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.(அல்குர்ஆன் : 2:183)
இறையச்சம் "تقویٰ"என்பதன் பொருள்: ஒருவன் தன்னைத் தீமையிலிருந்து தற்காத்துக்கொள்வதாகும், இதன் முக்கிய வழிகளில் ஒன்று நோன்பு ஆகும். நபித்தோழர்களில் ஒருவர் அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களிடம்“அல்லாஹ்வின் தூதரேﷺ!அல்லாஹுத்தஆலா எனக்கு நன்மையளிக்கும் ஓர் அமலை காட்டித்தாருங்கள்"என்று கேட்டார்.
அதற்கு நபி ﷺஅவர்கள் பதில் சொன்னார்கள்:
’’علیک بالصوم، فإنہٗ لامثل لہٗ‘‘ (سنن نسائی، ج:۱، ص:۱۴۰)
"நோன்பை கடைப்பிடி!காரணம் அதற்கு நிகர் வேறில்லை."
அருள் மழைப்பொழியும் ரமலான்.
இதோ! புனித ரமலான் மாதம் நம்மை எதிர்நோக்கி வர காத்திருக்கின்றது.இது நற்காரியங்கள்,வணக்க வழிபாடுகளின் பருவ காலமாகும்.
இதனால்தான் ரமலான் மாதம் இஸ்லாமிய வருடத்தின் அனைத்து மாதங்களை விடவும் அதிகமான மகத்துவங்களும்,சிறப்புகளும்,பரக்கத்துகளும் வாய்ந்த மாதமாக உள்ளது.
இம்மாதத்தில் அல்லாஹுத்தஆலா தன் முஃமினான அடியானுக்கு தன் பொருத்தத்தையும்,அன்பையும்,ஆத்ம ஒளியையும் பரிசாக வழங்குகிறான்.
இம்மாதத்தில் ஒவ்வொரு வணக்கத்திற்கும் நன்மைகள் அளிக்கப்படுவதுடனே பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» ( مُتَّفَقٌ عَلَيْهِ
ஈமானோடு (நம்பிக்கை கொண்டு) (நற் கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி)
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قام رمضان إيمانا واحتسابا ، غفر له ما تقدم من ذنبه "([21])
இறைத்தூதர்ﷺஅவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்.
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"
عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ اللَّهُ : ( كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ
. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.(புஹாரி: 1904 அபூஹுரைரா (ரலி).)
سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ ) البخاري ( 1763 ) ومسلم ( 1947 ) .
708. ”சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!”என நபி ﷺஅவர்கள் கூறினார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الصِّيَامُ جُنَّةٌ فَلا يَرْفُثْ وَلا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ. وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ..يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَ. رواه البخاري (1894)، ومسلم (1151)
”நோன்பு நரகத்திருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரீ (1894)
قال رسول الله -صلى الله عليه وسلم-: (لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ، وَلَخُلُوفُ فيه أَطْيَبُ عِنْدَ اللهِ مِن رِيحِ المِسْكِ)..
”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: (அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (1904)
أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي "(رواية لمسلم)
”ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறுகிறார்கள்.அறிவிப்பவர் (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (2119)
நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்திற்கு வழங்கிய முக்கியத்துவமும்,உம்மத்திற்கு வழிகாட்டுதலும் ஆர்வமூட்டுதலும்.
1)நபி ﷺஅவர்கள் ஷஃபான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல வேறந்த மாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
2)ஷஃபான் பிறை
قال الرسول صلى الله عليه وسلم : “أحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ
நபிﷺஅவர்கள் கூறினார்கள்:ரமலானிற்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்.
அபூஹுரைரா(ரலி): திர்மிதி.
3) ஸஹர்
قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم :(( تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً )) [2]،
ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி ﷺஅவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم
(فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ، أَكْلَةُ السَّحَرِ)
நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபிﷺ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
நபி ﷺஅவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபிﷺ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
4) இஃப்தார்
1/1233- عَنْ سَهْلِ بنِ سَعْدٍ ، أَنَّ رسُولَ اللَّهِ ﷺ قَالَ: لاَ يَزالُ النَّاسُ بخَيْرٍ مَا عَجلوا الفِطْرَ متفقٌ عَلَيْهِ.
நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபிﷺ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
நோன்பு திறக்கும் துஆ
நபி ﷺஅவர்கள் நோன்பு திறக்கும் போது “ذَہَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَائَதஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்). அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).
இன்னொறு அறிவிப்பில்...
اَللّٰہُمَّ لَکَ صُمْتُ وَعَلٰی رِزْقِکَ أَفْطَرْتُ۔‘‘
"யா அல்லாஹ்!உனக்காகவே நோன்பு நோற்றேன்.உன் ரிஸ்கை வைத்தை நோன்பு திறக்கிறேன்"என்று நபி ﷺகூறுவார்கள்.
إن للصائم عنده فطره دعوة لا ترد ) أخرجه أحمد
”நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ அங்கீகரிக்கப் படும். ”
قال صلى الله عليه وسلم : ] إنَّ لله تعالى عتقاء في كل يوم و ليلة – يعني في رمضان – وإنَّ لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة [[ رواه الإمام أحمد وصححه الألباني (2169) في صحيح الجامع ]
அல்லாஹுத்தஆலா ரமலானில் ஒவ்வொரு இரவும் பகலும் நரக விடுதலை அளிக்கிறான்.ஒவ்வொரு நாளும் ஒரு துஆவை அங்கீகரிக்கிறான்.
5) இறுதி பத்து
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ
நாயகம்ﷺஅவர்கள் ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள்.
(அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2024.)
6) லைலதுல் கத்ர்
عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسولَ الله صلى الله عليه وسلم قال: «تَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ»
ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி ﷺஅவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புகாரி)
حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ بِمَ أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤ25168
“அல்லாஹ்வின் தூதரேﷺ! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி ﷺஅவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபுஅன்னீ ”(இறைவா! நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!) என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.
7) நோன்பை விடுவது
தக்க காரணம் இன்றி நோன்பை விடுவது,காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபிﷺ கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். நான் மலையில் எறியதும் கடுமையான சத்தத்தை கேட்டு இது என்ன சத்தம் என்று அவர்களிடம் வினவினேன். இது நரக வாசிகள் ஊலையிடும் சத்தம் என்று கூறிவிட்டு என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.
அப்போது தலை கீழாக தொங்கவிடப்பட்டு தமது வாய்கள் அறுக்கப்பட்டு வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்து யார் இவர்கள் என்று அந்த இருவரிடமும் கேட்டேன்.
அப்போது இவர்கள் தான் நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பைத் திறந்து கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டது.
(நூல்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 1609. இமாம் ஹாகிம் , இமாம் தஹபி ஆகியோர் ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளனர்.)
நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பை திறப்பதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோம்பேறித்தனமாக நோன்பை விட்டு விடுபவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்ல முடியும்?
8) ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான காரியங்கள்.
அவற்றில் இரண்டு காரியங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுத் தரும் 1)’’لاإلٰہ إلا اللّٰہ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் 2)استغفارபாவ மன்னிப்பு
மற்ற இரண்டு காரியங்கள் அடியானுக்கு அவசியமானவையாகும்1)சுவனத்தை வேண்டுவது 2)நரக விடுதலை கேட்பது.
9) இஃதிகாப்
‘இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி ﷺஅவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)
எவர் ரமலானின் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பாரோ அவருக்கு இரண்டு ஹஜ்,இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்(நபிமொழி)
10) குர்ஆன் ஓதுதல்:
குர்ஆன் இறக்கியருளப்பட்டதே இம்மாதம் சிறப்பு பெற காரணம் என 2:185 ஆம் வசனம் கூறுகிறது.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:
(( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ )) [ متفق عليه ]
நபி ﷺஅவர்கள் மக்களில் அதிகம் கொடைக் கொடுப்பவராக இருந்தார்கள் .ரமலான் மாதத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்திக்கும் சமயத்தில் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். அவர்(ஜிப்ரயீல்) ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் நபியை சந்தித்து குர்ஆன் ஓதிக்காட்டுவார்.(அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள். அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் :புகாரி, முஸ்லிம் )
நபி ﷺஅவர்கள் மரணித்தை தழுவிய அவ்வாண்டு ஜிப்ரயீல் (அலை )அவர்கள் ரமலானில் இரண்டு தடவைகள் குர்ஆன் ஓதிக் காட்டினார்கள் என பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு ரிவாயத் உள்ளது.
இந்த மாதம் குர்ஆன் ஓதுவதும், குர்ஆன் ஓதுவதை கேட்பதும், இரண்டுமே சிறப்புக்குரிய அமல்கள் ஆகும்.
11) நோன்பில் பாவத்தை தவிர்த்தல்.
நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.
சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
12)ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது.
நம் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக சிறந்த மாதமாகும்.
ரமலானின் மூலச்சொல் رمض ரமல் என்றால் கரிக்குதல் என்று பொருள்.எப்படி நெருப்பு விறகை எரித்து சாம்பலாக்கி விடுகிறதோ,அதுபோல் ரமலான் பாவத்தை எரித்து இல்லாமலாக்கிவிடுக்கிறது.
இம்மாததில் அல்லாஹுத்தஆலா தன் கிருபையால் நோன்பின் பரக்கத்தால் முஃமீன்களின் பாவங்களை எறித்து சம்பலாக்கிவிடுகிறான்.
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِين.
ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: புகாரி-1899 )
காழி இயாள்(ரஹ்)அவர்கள் இந்த ஹதீஸுக்கு கூறும் விளக்கம்;
இந்த ஹதீஸுக்கு வெளிப்படையான விளக்கம் என்றால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுவதும்,நரக வாயில்கள் அடைக்கப்படுவதும்,நோன்பாளிக்கு இடையூறு செய்யாமல் இருக்க ஷைத்தான்கள் விலங்கிடப்படுவது
இவை அனைத்துமே ஓர் முக்கிய நிகழ்வுக்காக அரசாங்கம் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை கைது செய்வதைப் போன்றதாகும்.
இந்த ஹதீஸிற்கு உள்ரங்கமான விளக்கம் என்றால்:ஷைத்தான் விலங்கிடப்படுவதன் பொருள் மற்ற காலங்களை போல ரமலானில் அடியார்களை ஷைதானால் வழிகெடுக்கமுடிவதில்லை.ஷைத்தானின் சூழ்ச்சிகள் இம்மாதத்தில் குறைகிறது.
சுவனவாயில் திறக்கப்படுவதன் பொருள்;அல்லாஹுத்தஆலா இம்மாதத்தில் அடியார்களுக்கு நல்லறங்களை செய்யும் வாயில்களை திறந்துவிடுகிறான்.இதனால் ரமலானில் நோன்புநோற்பபது,இறைவணக்கத்தில் அதிகம் ஈடுப்படுவது போன்ற பல அமல்களை இலகுவாக செய்யமுடிகிறது.
(نووی شرحِ مسلم، از برکاتِ رمضان ، ص:۴۴)
ரமலான் மிகச்சிறந்த மாதமாகும்.ரமலானின் மகத்துவத்தை அடியார்கள் விளங்கிவிட்டால்,காலம் முழுக்க ரமலானாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
ரமலானுக்குள்ள தனித்துவமான சிறப்புகளில் சில...
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல்குர்ஆன் : 2:185)
2)இம்மாதத்தில்தான் லைலத்துல் கத்ர் இரவில் "لوحِ محفوظ"லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முழு குர்ஆன் பூமிக்கு இறக்கி அருளப்பட்டது
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (அல்குர்ஆன் : 97:1)
அதனால் தான் இம்மாததிலும்,தராவீஹ் தொழுகையிலும் குர்ஆன் ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
3)ரமலானில் ஒவ்வொரு இரவிலும் அழைப்பாளர் ஒருவர் இவ்விதம் அழைப்பு விடுக்கிறார்
: ’’یا باغي الخیر! أقبل ویا باغي الشر! اقصر۔‘‘ (مشکوٰۃ، ص:۱۷۳)
"நன்மையை நாடுபவரே!நன்மையில் முன்னேறுங்கள்,தீமை செய்வோரே!தீமையை குறைத்துக் கொள்ளுங்கள்."(நூல்:மிஷ்காத்)
ரமலான் மாதத்தில் பொதுவாகவே முஃமின்களுக்கு நல்ல அமல்கள்,நல்லறங்கள் செய்வதற்கு ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது.
حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ، ثنا سَلَمَةُ بْنُ وَرْدَانَ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، يَقُولُ : ارْتَقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ ، فَقَالَ : " آمِينَ " ، ثُمَّ ارْتَقَى ثَانِيَةً ، فَقَالَ : " آمِينَ " ، ثُمَّ اسْتَوَى عَلَيْهِ فَقَالَ : " آمِينَ " ، فَقَالَ أَصْحَابُهُ : عَلَى مَا أَمَّنْتَ يَا رَسُولَ اللَّهِ ؟ ! . فَقَالَ : " أَتَانِي جِبْرِيلُ فَقَالَ : يَا مُحَمَّدُ ! رَغِمَ أَنْفُ امْرِئٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ ، فَقُلْتُ : آمِينَ ، ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ امْرِئٍ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يُدْخِلاهُ الْجَنَّةَ ، فَقُلْتُ : آمِينَ ، ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ امْرِئٍ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ ، فَقُلْتُ : آمِينَ "
நபிﷺ அவர்கள் மிம்பரில் ஏறி, ”ஆமீன், ஆமீன், ஆமீன்” என்று கூறினார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதரேﷺ! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபிﷺ அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ”எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி))
எனவே ரமலான் மாதத்தில் ஒருவர் முயற்சித்து, நல்லறங்களில் ஈடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான்.
காரணம் ரமலான் நோன்பின் பலனே பாவமன்னிப்பு என நபி ﷺஅவர்கள் கூறியுள்ளார்கள்.
أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قام رمضان إيمانا واحتسابا ، غفر له ما تقدم من ذنبه "([21])
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"
4)இஸ்லாத்தில் ஒரு நல்அமல் இன்னொரு அமலை செய்ய தூண்டும்.ஒரு வணக்கம் இன்னொரு வணக்கம் புரிய சக்தி அளிக்கும்.
ரமலான் மாதம் நோன்பு, ஏனைய 11 மாதங்களில் தொழுகை போன்ற அமல்களில் ஈடுபட ஆர்வத்தையும்,ஆற்றலையும் வழங்கி விடும்.
ரமலான் மாதத்தில் நல்ல முறையில் அமல் செய்தவர்களின் வாழ்வில் அது ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
5)ரமலான் நோன்பு,அடியானுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது.
ரமலானில் நோன்பு இருப்பதோடு தராவீஹ்,தஹஜ்ஜுத்,அவ்வாபீன்,இஷ்ராக்,தஹ்பீஹ் தொழுகை, குர்ஆன் திலாவத்,திக்ர்,தான தர்மங்கள்,இஃதிகாப்,லைலதுல்கத்ரு போன்ற எண்ணற்ற அமல்கள் புரிந்து அல்லாஹ்வின் நெருக்கம் பெற ரமலான் நோன்பு காரணமாக அமைகிறது.
எனவே புனித ரமலான் மாதத்தின் மகத்துவத்தை விளங்கி அதனை அமல்களால் அலங்கரிக்க நாம் தயாராக வேண்டும்,ரமலான் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்,அதனை நாம் சுமையாக கருதாமல், அருளாக கருதி அமல் செய்ய முயற்சிக்க வேண்டும்.
உலமாக்கள் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்;யூதன் ஒருவர் ரமலான் மாதத்தில் தன் மகன் பகல் நேரத்தில் பகிரங்கமாக உணவு உண்ணுவதை தடுத்து அவனை அடித்து கண்டித்தார்.மேலும் இம்மாதத்தின் மகத்துவத்தை அவனுக்கு எடுத்துரைத்தார்.
அதே வாரத்தில் அந்த யூதன் மரணத்தை தழுவுகிறார்.அவ்வூரிலுள்ள ஒரு ஆலிம் கனவிலே அந்த யூதன் சுவனத்தில் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டார் அதற்கு அவர் நான் ரமலான் மாதத்தை சங்கைப்படுத்தியதால் அல்லாஹ் எனக்கு மரண தருவாயில் கலிமா சொல்லும் பாக்கியத்தை தந்தான்.الحمد للہ எனது முடிவை ஈமானோடு ஆக்கிவிட்டான் என்று நடந்த சம்பவத்தை கூறினார். (نزہۃ المجالس ، مترجم: ۳۲۵۱)
அல்லாஹுத்தஆலா நமக்கு ரமலானை சங்கை செய்யும் வாய்ப்பை அளித்து,நம் எல்லா நல்லறங்களையும் அங்கீகரித்து,கியாம நாளில் அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களின் ஷஃபாஅத்தை பெற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸை அடைய கிருபை செய்வானாக!ஆமீன்...
No comments:
Post a Comment