தலைப்பு:
பாக்கியம் நிறைந்த பராஅத் இரவு 2022.
புனிதம் மிக்க ஷஃபான் மாதத்தின் பாக்கியங்கள் நிறைந்த இரவே "ஷபே பராஅத்" ஆகும்.
ஷப் شب என்றால் ஃபார்ஸி மொழியில் இரவு என்றுப் பொருள்.
பராஅத் برأتஎன்றால் "விடுதலைப் பெறுவது""விடுதலை தருவது"என்று பொருளாகும்.
இப்புனித இரவிலே அல்லாஹுதஆலா ஏராளமான முஸ்லிம்களுக்கு நரகவிடுதலை அளிக்கின்றான் என்பதாலும், இன்னும் இவ்விரவிலே தவ்பா செய்யக்கூடடிய முஸ்லீம்களுக்கு பாவமீட்சி வழங்கப்படுவதாலும் இந்த இரவுக்கு برأت பராஅத் என்று பெயராகும்.இன்னும் لیلتہ المبارکہ பரகத் பொருந்திய இரவு என்றும், விதி நிர்ணையிக்கப்படுவதால் لیلتہ الصکஎன்றும்,அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குவதால் لیلتہ الرحمتہ என்றும் பெயர்கள் உள்ளன.
ஷஃபான் மாதத்தை பற்றி ஷைகுனா அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்)
1) رقة மன இலகள்.
மனிதனின் உள்ளம் கடினமானதாக இருக்கக் கூடாது. மாறாக ஒரு முஃமினின் உள்ளம் இலகியதாகவும், பாசமுள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டும் அது இந்த மாதத்திலே கிடைக்க பெறுகிறது.
2) اللين فى الخلق குணத்தில் மென்மை
குணத்திலே மென்மையான தன்மை ஏற்படுவதற்கும் இம்மாதத்தின் அமல்கள் காரணமாக உள்ளன.
3) القوة في الطاعة வழிபாட்டில் உறுதி.
வழிப்படுவதிலே, வணக்கங்கள் செய்வதிலே சக்திகள் பிறக்கின்றது.
4) الصاخة في النفس ஆன்மாவில் மென்மை.
நப்ஸ் என்று சொல்லப்படும் ஆன்மாவிலே ஒரு மெல்லிய தான தன்மை மிருதுவான தன்னம மனிதனுக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அந்த நஃப்ஸ் நல்ல அமல்கள் செய்வதற்கு ஊக்க முடையதாக ஆகிறது.
5) السقاوة في العمل
அமலிலே தெளிவான நிலை ஏற்படுகிறது.
6)الحركة في الخير
நன்மையான செயல்களிலே ஈடுபடுதல். ஆர்வமாக அந்த காரியங்களை செய்தல் ஏற்படும்.
7)الركوبة في العمل
தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தி கண்ணீர் வடிக்கும் நிலை.கண்களிலே ஈரம் கசிந்திருப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
கண்களில் கண்ணீர் கசியும் தன்னம அல்லாஹ்வின் மீது இவனுக்கு பயம் உள்ளது என்பதற்கு அடையாளமாகும்.
அல்லாஹ்வின் பயம், ஆகிரத்தின் பயம், கப்ரின் பயம், மவ்த்தின் பயம், தன் பாவங்களை பற்றியுள்ள பயம் ஒரு மனிதனுக்கு இருந்தால் எப்போதுமே அவனின் கண்கள் கசிந்து கொண்டே இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் அதிகம் கவலைப் படுவர்களாக இருந்தார்கள்.கவலை என்றால் சோகமான முகமுடையவர்களாக இருந்தார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக மனக்கவலை அவர்களுக்கு அதிகமாக இருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் நேர்வழி பெற வேண்டும் என கவலைப்பட்டார்கள்.கண்ணீர்விட்டார்கள்.
ஒரே ஒரு சொட்டு கண்ணீர் நரக நெருப்பை அனைத்து விடும். இந்த உலகத்தில் உள்ள கடல் நீரை கொட்டினாலும் அனையாத நரக நெருப்பு ஒரு சொட்டு கண்ணீரால் அணைந்து விடும்./
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விற்கு பிடித்தமான கண்கள் இரண்டு. 1) அல்லாஹ்வின் பாதையிலே விழித்திருந்த கண்.
2) தன் பாவத்தை நினைத்து நினைத்து அழுகின்ற கண்.
இந்த இரண்டு கண்களும் அல்லாஹ்விற்கு விருப்பமான கண்கள் என நபி (ஸல்) குறிப்பிடுகின்றார்கள். இந்த அழும் தன்மை இம்மாதத்தின் பரக்கத்தினால் ஏற்படுகிறது.
8) البرودة في المعاصي
பாவத்தை நினைத்து நடுங்கும் தன்மை இந்த மாதத்தின் பரக்கத்தினால் ஏற்பட்டு விடும்.
9) التواضع في الخلق
மக்களிடத்திலே பணிவோடு வாழ்வதும், பணிவோடு உறவாடுவதும் இந்த மாத பரக்கத்தினால் ஏற்படும்.
10)الحياة عند السماع الحق
உண்மையை சத்தியத்தை கேட்கக் கூடிய நேரத்திலே அந்த சத்தியத்தை தன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் தன்னம இந்த மாதத்திலே ஏற்படுகிறது.
ஆக இந்த ஷஃபான் மாதம் சிறப்பான மாதமாகும். அதிலே குறிப்பாக இந்த 15-வது நாள் இரவிலே பல அமல்களை, பல சிறப்புக்களை சொல்லியுள்ளார்கள்.
பராஅத் இரவுப் பற்றி....
ஷைகுனா ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்)அவர்கள் தங்களின் "குன்யதுத் தாலிபீன்" எனும் கிதாபில் இந்த இரவின் சிறப்பை எழுதுகிறார்கள்;
இந்த இரவு இரண்டு விதங்களில் பராஅத் எனப்படுகிறது.
ஒன்று அல்லாஹ் துர்பாக்கியவான்களுக்கு தன்னிடமிருந்து விலக்கு அளிக்கிறான்.
மற்றொன்று அல்லாஹுதஆலா தன் நேசர்களுக்கு சிரமம்,கவலை,இழிவு போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
பூமியில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு இரண்டு ஈதுப் பெருநாட்களைப் போலவே,
வானிலுள்ள மலாயிகத்துமார்களுக்கு ஷபே பராஅத்,லைலதுல் கத்ரு ஆகிய இரவுகள் ஈதுபெருநாட்களாகும்.
முஸ்லிம்கள், பகலில் ஈது கொண்டாடுவார்கள் இரவில் உறங்குவார்கள்.
மலக்குமார்கள் தூங்குவது கிடையாது அவர்களுக்கு இரவுகளும் ஈதுகளாகும்.
பராஅத் மன்னிப்பு வழங்கும் இரவு.
حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.
அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்: "ஒருநாள் இரவு வேளையில் நபி ﷺ அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான்." (நூல் :திர்மிதீ)
عن عائشة عن النبي -صلى الله عليه وسلم- قال: ((هل تدرين ما هذه الليل؟ " يعني ليلة النصف من شعبان قالت: ما فيها يا رسول الله فقال: " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم،
நபி ﷺஅன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம்ﷺஅன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.(நூல் மிஷ்காத் )
பராஅத் இரவின் தனிச்சிறப்புகள்.
பராஅத் இரவில் அல்லாஹ்வின் ஏராளமான ரஹ்மத்களும், நாயகம்ﷺஅவர்களின் துஆ பரகத்தும் கிடைக்கப்பெறுவதால் இவ்விரவு ஏனைய இரவுகளை காட்டிலும் மகத்துவமும்,சிறப்பும் பெறுகிறது.என்பதில் சந்தேகம் இல்லை.
குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் அறிஞப்பெருமக்கள் பராஅத் இரவுக்கு பிரத்யேகமாக இரு சிறப்புகளை கூறுகிறார்கள்.
1)இந்த இரவில் அல்லாஹுதஆலாقضاء وقدر களா கத்ரில் நிர்ணையித்தவற்றை மலக்குமார்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுக்கும் பூர்வாங்கப் பணிகள் நடைபெகின்றது.
சுருக்கமாக ஒருவருடத்திற்கான பட்ஜெட் எனலாம்.
ஒருவருட பிறப்பு,இறப்பு,ரிஸ்க்,மழை, நோய்,ஆரோக்கியம் என அனைத்தும் பராஅத் இரவில் அந்தந்த மலக்குமார்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
2)இந்த இரவின் மஃரிபிலிருந்து சுப்ஹு வரை அல்லாஹ்வின் மக்ஃபிரதும்,பிரத்யேக ரஹ்மத்துகளும் இறங்குகின்றன.
قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،
நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான்.
(அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)
அல்லாஹுதஆலா தன் அடியார்களின் மீது கருணையும்,கிருபையும் உள்ளவன். இதுப்போன்ற இரவுகளில் அடியார்களுக்கு மக்ஃபிரத்தையும்,ரஹ்மத்தையும் வாரிவழங்கிவிடுகிறான்.
அல்லாமா அப்துல் வஹ்ஹாப் ஸகஃபீ (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:
நான் ஒரு ஜனாஸாவை மூன்று ஆண்களும்,ஒரு பெண்ணும் சுமந்து செல்லக் கண்டேன்.உடனே சென்று அந்த பெண்ணிடமிருந்து நான் வாங்கி சுமந்து சென்று அடக்கம் செய்தோம். அப்பெண்ணிடம்; "இது யாருடைய ஜனாஸா எனக்கேட்டேன்.
அப்பெண் "இது என் மகனின் ஜனாஸா,அவன் பார்ப்பதற்கு அருவருப்பானத்தோற்றத்திலும்,அவனின் நடத்தை பிடிக்காததாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் யாரும் அவனின் ஜனாஸாவிற்கு வரவில்லை.ஜனாஸாவை தூக்க ஆளில்லாததால் என் உறவினர்களோடு சேர்ந்து நானும் சுமந்துவந்தேன்."என கண்ணீர் மல்கக் கூறினாள்.
அன்றிரவு நான் கனவொன்று கண்டேன். வெண்ணிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்,அவரின் முகம் பொவுர்ணமி இரவின் சந்திரனைப் போல பிரகாசமாக இருந்தது.அவர் என்னிடம் வந்து சொன்னார்"என்னை நீங்கள் அடக்கம் செய்தீர்கள் அதற்கு மிக்க நன்றி!
மக்களெல்லாம் என்னை இழிவாக கருதிய காரணத்தினால் கருணையாளன் அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உயர்ந்த அந்தஸ்தை வாழங்கிவிட்டான்"
ஒரு ஹதிஸில்....
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي رواه البخاري (7453)، ومسلم (2751).
நபிﷺஅவர்கள் சொன்னார்கள்:அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது, தன்னிடமுள்ள அர்ஷுக்கு மேல் எழுதினான். "நிச்சயமாக என் ரஹ்மத் (எனும் கருணை) எனது கோபத்தை முந்திவிட்டது" (அறிவிப்பவர் :அபூஹுரைரா ) நூல் :(புகாரி,முஸ்லிம்.
قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ
அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.(அல்குர்ஆன் : 7:156)
அல்லாஹ்வின் கருணையினால் தான் உலகம் இயங்குகிறது.இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளிக்கின்றான்.பாவிகளின் பிழைகளை மன்னித்தருள்கிறான்.
பராஅத் நோன்பும்,இரவு வணக்கமும்.
பராஅத் இரவில் வணக்கவழிப்பாடுகளில் கழிப்பதும்,பகல் நோன்பு நோற்பதும் முஸ்தஹப்பான அமல்களாகும்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் ایامِ بیض எனப்படும் பிறை 13,14,15ஆகிய மூன்று தினங்கள் நோற்கக்கூடிய சுன்னத்தான மூன்று நோன்புகளை ஷஃபானில் நோற்பது மிகச்சிறப்பானதாகும்.
பராஅத் அன்று மக்ரிப் முதல் பஜ்ரு வரை மஸ்ஜிதில் இஃதிகாஃப் நிய்யதில் தங்கி அமல்கள் செய்யலாம்.தனியாக தஸ்பீஹ் தொழுகை,வாழ்நாளில் தவறிப்போன களாத்தொழுகைகளை தொழலாம்,திக்ரு,திலாவதே குர்ஆன்,அதிகமாக துஆ,மக்ஃபிரத்,தஹஜ்ஜுத் என பயனுள்ளதாக அவ்விரவை கழிக்க முயற்சிக்கலாம்.
அல்லாஹுதஆலா அவனின் அளப்பெரும் கிருபையால் நம் பிழைகளைப் பொருத்து,நல் அமல்களை செய்யும் பாக்கியத்தை தருவானாக!ஆமீன்...
No comments:
Post a Comment