Thursday, 3 March 2022

ஜும்ஆ பயான் 04/03/2022

தலைப்பு :

துஆ எனும் ஆயுதம்.



மனிதன் தேவையுடையவன் .தன் தேவையனைத்தையும் ஒரு முஸ்லிம்  முதல் கோரிக்கையாக அல்லாஹ்விடமே
வைக்கவேண்டும். அல்லாஹ் தான் ஒட்டு மொத்த மனித சஞ்சாரத்தின் தேவையை நிறை வேற்றுபவனாக இருக்கிறான். செறுப்பின் வார்அறுந்தாலும், காலில் முள் தைத்தாலும் தன் ரப்பிடமே அதன் நிவாரணத்தை கேட்க வேண்டும். சிறிய பெரிய எந்த தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். அதற்கு ஒர் வழியாக தான் துஆ எனும் வசீலாவை அல்லாஹ்வும், ரசூலும் நமக்கு காண்பித்து தந்துள்ளார்கள்.

துஆ ஒர் முக்கிய வணக்கமாகும்.இன்னும் சொல்லப்போனால் இபாதாத்களின் மூளை,வணக்கவழிபாடுகளின் கருப்பொருளாகும்۔நாம் செய்யும் ஒவ்வொரு அமலும் துஆவின் மூலமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. துஆ மற்ற இபாதத்களைப் போன்று அதுவும் ஒரு இபாதத்தாகும். இறைவன் தன்னிடம் தன் அடியான் துஆ செய்வதை விரும்புகிறான். 

மேலும் நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.ஒரு அடியான் தன் ரப்பின் பால் தன் இரண்டு கைகளையும் உயர்த்திய பிறகு அந்த கையை வெறுங்கையாக விடுவதை அல்லாஹ் வெட்கப்படுகிறான். (திர்மிதி)

ஒரு மனிதன் மரணித்து விட்ட பிறகும் அவனுக்கு வந்து கொண்டே இருக்கும் அமல்களில் ஒன்று துஆவுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹழ்ரத் அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதன் அல்லாஹ்விடம் துஆ கேட்கவில்லையோ அந்த மனிதனின் மீது அல்லாஹ் கோபமடைகிறான்.(திர்மிதி)

துஆ ஒர் இபாதத்தாகும்.

۔ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ رضي الله عنهما قَالَ : سَمِعْتُ النَّبِيَّ ﷺ یَقُوْلُ : اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ، ثُمَّ قَرَأَ : {وَقَالَ رَبُّکُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَکُمْ ط اِنَّ الَّذِيْنَ یَسْتَکْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَo} [غافر، 40 : 60]۔

رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ وَأَبُوْ دَاوُد۔                          

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;துஆ அதுவே வணக்கமாகும்.

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்...

عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ رضی الله عنه أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ : اَلدُّعَائُ مُخُّ الْعِبَادَةِ۔

رَوَاهُ التِّرْمِذِي۔

"துஆ வணக்கங்களின்  மூளை" என நபி (ஸல்) கூறினார்கள்.

மேலும் வணக்கவழிபாடு அனைத்திலும் துஆவுக்கு முக்கிய இடமுண்டு.துஆ அன்றி எந்த அமலும் முழுமைப் பெறுவது கிடையாது.துஆ,ஸஜ்தா இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அடியான் அல்லாஹ்விற்கு மிக நெக்கமாகிவிடுகிறான்.

அதிலும் குறிப்பாக துஆவுடைய சந்தர்பத்தில் அல்லாஹ் அடியானின் பிடறி நரம்பை விட மிக நெருக்கமாகிவிடுகிறான்.துஆ மனிதனின் பேராயுதம்.விதியையே மாற்றும் சக்தி அதற்கு உண்டு.

துஆ மனிதனின் இயற்கை குணம் என்கிறது திருமறை...

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيْبًا اِلَيْهِ 

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; (அல்குர்ஆன் : 39:8)

அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ கேட்பது,நபிமார்கள் நல்லோர்களின் பண்பாகும்.நபிமார்கள் கேட்ட துஆக்களின் கூற்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறது.

துஆ கேட்பதன் அவசியம்

எல்லா மனிதர்களுமே தேவையுள்ளவர்கள்.வானம்,பூமி அனைத்தின் பொக்கிஷங்களும் அல்லாஹ்வின் கைவசம் உள்ளன.அவற்றை மனிதனுக்கு அவனை தவிர யாராலும் கொடுக்க இயலாது

وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ‌ 

அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள்.(அல்குர்ஆன் : 47:38)

ஆக கொடுப்பவன் அல்லாஹ்,அதனை அடியான் துஆ என்கிற இபாதத்தின் மூலம் கேட்டு பெறவேண்டும்.

துஆவின் முக்கியத்துவம்

அல்லாஹ் வெறுமனே துஆ கேளுங்கள் என கூறாமல் துஆ கேட்பதன் வழிமுறைகளையும் விளக்கமாக கூறுகிறான்.

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன் : 2:186

நபிகள் பெருமானார்ﷺஅவர்கள் துஆவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அதன் சிறப்புகளையும்,ஒழுக்கங்களையும் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَيْسَ شَيئٌ أَکْرَمَ عَلَی اللهِ تَعَالَی مِنَ الدُّعَاءِ۔

رَوَاهُ التِّرْمِذِيُّ

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹுதஆலாவிடம் துஆவை விட மிகச் சங்கையான விஷயம் வேறெதுவுமில்லை.

۔ عَنِ ابْنِ عُمَرَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَنْ فُتِحَ لَهُ مِنْکُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ، وَمَا سُئِلَ اللهُ شَيْئًا یَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ یُسْأَلَ الْعَافِیَةَ، وَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ : إِنَّ الدُّعَاءَ یَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ یَنْزِلْ، فَعَلَيْکُمْ عِبَادَ اللهِ، بِالدُّعَاءِ۔ رَوَاهُ التِّرْمِذِيُّ۔

عن علي رضي الله عنهم قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم : " الدعاء سلاح المؤمن ، وعماد الدين ، ونور السماوات والأرض " . " هذا حديث صحيح

عَنْ أَبِي ھُرَيْرَةَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَنْ لَمْ یَسْأَلِ اللهَ عزوجل یَغْضَبْ عَلَيْهِ۔ رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْحَاکِمُ وَالْبُخَارِيُّ فِي الْأَدَبِ

துஆவின் வலிமை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முன்காலத்தில் மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. 

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். 

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          (புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).


விதியை மாற்றும் துஆ.

عن أنس، قال:

أدركت في هذه الأمة ثلاثا لو كانوا في بني إسرائيل لما تقاسمتها الأمم، لكان عجبا، قلن: ما هن يا أبا حمزة؟ قال: كنا في الصفة عند رسول الله صلى الله عليه وسلم

فأتته امرأة مهاجرة ومعها ابن لها قد بلغ، فأضاف المرأة إلى النساء، وأضاف ابنها إلينا، فلم يلبث أن أصابه وباء المدينة، فمرض أياما ثم قبض، فغمضه النبي صلى الله عليه وسلم وأمر بجهازه، فلما أردنا أن نغسله، قال: يا أنس ائت أمه، فأعلمها، قال: فأعلمتها، فجاءت حتى جلست عند قدميه فأخذت بهما، ثم قالت: اللهم إني أسلمت لك طوعا وخلعت الأوثان زهدا، وهاجرت إليك رغبة، اللهم لا تشمت بي عبدة الأوثان، ولا تحملني من هذه المصيبة ما لا طاقة لي بحملها، قال: فو الله ما تقضى كلامها حتى حرك قدميه، وألقى الثوب عن وجهه، وعاش حتى قبض الله رسول صلى الله عليه وسلم، وحتى هلكت أمه.

அப்துல்லாஹ் இப்னு அவ்ன் (ரலி)அவர்கள் ஹழ்ரத் அனஸ்(ரலி)அவர்களின் கூற்றை அறிவிக்கிறார்கள:

நான் இந்த உம்மத்தில் இஸ்ரவேலர்களிடம் உள்ள மூன்று விஷயங்களைப் பெற்றுக்கொண்டேன்.அவற்றுக்கு நிகராகவோ,சமமாகவோ வேறேந்த உம்மத்தும் கிடையாது.

அபு ஹம்ஸாவே!"அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன" என நான் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார்;ஒரு தடவை நாங்கள் ஸுப்பா திண்ணையில், நாயகம்رﷺஅவர்களுக்கு அருகாமையில் அமர்ந்திருந்தோம்.அப்பொழுது ஒரு முஹாஜிர் பெண்மணி தன் வாலிபமான மகனோடு வந்தாள்.நாயகம் ﷺஅப்பெண்ணை (மதீனா)பெண்களிடமும்,அவளின் மகனை எங்களிடமும் ஒப்படைத்தார்கள்.சில காலங்களுக்கு பின்னால் மதினாவில் ஓர் கொள்ளை நோய் பரவியது.அதனால் அவ்வாலிபர் நோயுற்று,சில தினங்களில் மரணத்தை தழுவினார். 

நாயகம்ﷺஅவர்கள் அவரின் இரு கண்களை மூடிவிட்டு,அவரின் ஜனாஸாவின் தயாரிபிற்கு  உத்தரவிட்டார்கள்.நாங்கள் அவரை குளிப்பாட்ட தயாரானோம்.

அப்போது நாயாகம்ﷺஅவர்கள் அவரின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கும் படி சொன்னார்கள்.அவ்வாறே நான் அவரின் தாயாருக்கு தகவல் கூறினேன்.அத்தாய் வந்து,தனது மகனின் பாதங்களுக்கு அருகே அமர்ந்தார்கள்.மய்யித்தின் பாதங்களை பற்றிக்கொண்டு அத்தாய் துஆ செய்யலானாள்...

"யா அல்லாஹ்!நான் மனமகிழ்வோடு இஸ்லாத்தை தழுவினேன்.

(எனது உள்ளத்திலிந்து) சிலைகளை முற்றிலும் அகற்றிவிட்டேன்.

நான் சுமப்பதற்கு சக்திப் பெறாத இச்சோதனையை என் மீது சாட்டிவிடதே!"

அனஸ்( ரலி)அவர்கள் சொல்கிறார்கள்;அல்லாஹ்வின் மீதாணையாக!அப்பெண் துஆ செய்து முடிப்பதற்குள்ளாக,அவளின் மகனின் பாதங்கள் அசைந்தன.கஃபன் துணியை முகத்திலிருந்து விலக்கிக்கொண்டு உயிர்ந்தெழுந்தார்.அதன் பின் நீண்ட காலம் அவர் உயிர்வாழ்ந்தார்.அவருக்கு முன்னால் நாயாகம்ﷺஅவர்களும்,அவரின் தாயாரும் கூட மரணித்து விட்டனர்.

துஆவின் முக்கிய  நிபந்தனைகள்.

1)இக்லாஸ்:அல்லாஹ் நம் தேவைகளை நிறைவேற்றக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கையுடனும்,மனத்தூய்மையுடனும் கேட்பது.

فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.(அல்குர்ஆன் : 40:14)

2)நம் துஆவை அல்லாஹ் கபூல் செய்வான் என முழுமையாக நம்பிக்கைக் கொள்வது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ ، 

3) அல்லாஹ்வின் சிந்தனையோடு துஆ செய்வது.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ ) والحديث حسنه الألباني في صحيح الترمذي .

4)துஆவின் முக்கிய நிபந்தனை ஹலாலை பேணுவது.நம் உணவு,உடை,சம்பாத்தியம் அனைத்தும் ஹலாலாக இருப்பது.

عن أبى هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله صلى الله عليه وسلم ـ:(إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين؛ فقال تعالى: (يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا) وقال تعالى: (يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم) ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر؛ يمد يديه إلى السماء: يا رب. يا رب ومطعمه حرام، ومشربه حرام، وملبسه حرام، وغذى بالحرام؛ فأنى يستجاب له؟!) رواه مسلم

5)துஆவின் துவக்கத்தில் ஹம்து அல்லாஹ்வை புகழ்வது.நபிகளார் மீது ஸலவாத்து சொல்வது.

وقال ﷺ: إذا دعا أحدكم فليبدأ بتحميد ربه والثناء عليه، ثم يصلي علي ثم يدعو

6)பாவங்களை நினைத்து வருந்தி,அவற்றை விட்டொழிக்க உறுதிக்கொள்வது. 

7)மிதமான சப்தத்தில் துஆ கேட்பது.அதிக இறைச்சலோடு துஆ கேட்கக்கூடாது.

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

(அல்குர்ஆன் : 7:55)

துஆ ஒப்புக்கொள்ளப்படும் சில முக்கிய சந்தர்ப்பங்களும்,  நேரங்களும்.

1)ரமலானின் கடைசி 10 இரவுகள்.

 லைலதுல் கத்ரு இரவுகள்.

2)ரமலானின் பகல்,இரவு,ஸஹர்,இஃப்தார் என எல்லா நேரங்களும்.ஈதுல் ஃபித்ரின் இரவு.

3)அரஃபா 9ஆம் நாளின் ஸவால் நேரத்திலிருந்து சூரியன் மறையும் நேரம் வரை.

4)துல்ஹஜ் பத்தாம் நாள் ஃபஜ்ரு முதல் சூரிய உதயம் வரை.

5)ஜும்ஆ நாளின் இரவு,பகல்

6)பாதி இரவிலிருந்து சுப்ஹ் சாதிக் நேரம் வரை(தஹஜ்ஜுத் வேலை)

7)ஜும்ஆ நேரத்தில்...

8)பாங்கு,இகாமத்திற்கிடையில்...

9)பர்ளு தொழுகைக்கு பின்னால்...

10)ஸஜ்தாவில்...

11)ஜம் ஜம் நீர் அருந்தியதற்கு பின்னால்...

12)திலாவதே குர்ஆனுக்கு பின்னால்...

13)ஜிஹாதில் போர் நடக்கும் நேரத்தில்...

14)முஸ்லிம்கள் (இஜ்திமா)ஓரிடத்தில் ஒன்றுக்கூடும் போது...

15)மழை பொழியும் போது...

16)கஃபாவில் பார்வைப் பட்ட முதல் நேரம்...

துஆ என்பது இறைவனிடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் ஓர் சிறந்த வணக்கமாகும்.துஆ தடுமாற்றமான உள்ளங்களை சாந்தப்படுத்தும்,வழிகேடர்களை நன்நெறிப்படுத்தும்,இறையச்சம் கொண்டோரை இறையோடு நெருக்கமாக்கி வைக்கும்,பாவிகளுக்கு பாவமிட்சி பெற்றுத்தரும்.எனவே துஆ கேட்க சோம்பேறித்தனம் கூடாது.அது பெரும் கைசேதமும்,நஷ்டமும் ஆகும்.

துஆ எதிரிகள்,ஆபத்துக்கள்,சிரமங்கள் அனைத்தையும் விட்டும் தற்காக்கும் பேராயுதமாகும்.


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...