தலைப்பு :
பொறாமை வேண்டாம்.
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)
மனித வாழ்வில் உடல் சார்ந்த நோய்கள் சோதனைகளாக வருவதைப் போன்றே, சில உள்ளம் சார்ந்த நோய்களும் அவனை சோதனைக்குள்ளாக்கும்.பொய்,புறம், குரோதம்,பொறாமை என்பன போன்றவை உள்ளம் சார்ந்த வியாதிகளாகும்.
இவற்றில் பொறாமை எனும் வியாதி மிக கொடிய மன நோயாகும்.இது மனித உள்ளத்தை மாத்திரம் அல்ல அவனின் உடலுக்கும் கேடுவிளைவித்துவிடும்.
பொறாமை என்றால் என்ன?
அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியிருக்கக்கூடிய கல்வி,செல்வம்,அழகு,பதவி, புகழ்,சொத்து சுகங்கள் ஆகிய நிஃமத்துகளை (வளங்கள்)பார்க்கும் போது நிகழும்" ஒரு வித வெறுப்புணர்ச்சியே பொறாமையாகும்.
செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.
இன்ன நபர் போன்று நானும் ஆக வேண்டும் என்று எண்ணினால் அது பொறாமையாக ஆகாது. இவனெல்லாம் இப்படி இருக்கிறானே? இவனுக்கு மட்டும் இப்படி பொருளாதாரம் கிடைக்கிறதே என்று வேதனை அடைவதுதான் பொறாமை.
நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும்.
நம்மிடம் இல்லாத ஒன்று...
நமக்கு கிடைக்காத ஒன்று...
நாம் அடைய விரும்பும் ஒன்று...
இன்னொருவரிடம் இருந்தால்...
ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும்.
அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும்.
அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும்.
பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும்.
முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்கும்.
இவை எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் (4.32)
அறிஞப்பெருமக்கள்;
பொறாமையை நான்காக வகைப்படுத்துகிறார்கள்.
முதலாவது:
அந்த நிஃமத் பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது.அது தனக்கு கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் சரியே!
இரண்டாவது:
அந்த நிஃமத் பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது,அது தனக்கு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.(எ.க அழகியப் பெண்,அழகான இல்லம்) இவ்விரண்டு வகைகளும் பெரும் பாவங்களாகும்.ஹராம் ஆகும்.
மூன்றாவது:
தான் விரும்பிய ஒன்று கிடைக்காத விரக்தியில், அடுத்தவருக்குள்ள ஒரு நிஃமத் அவரிடம் இருக்கக்கூடாது என ஆசைப்படுவது.இதுவும் ஹராமாகும்
நான்காவது:
அடுத்தவருக்குள்ள நிஃமத்தை போன்றதொரு நிஃமத் தனக்க கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.அது அவரிடம் இருக்கக்கூடாது என்ற தப்பெண்ணம் இருக்காது.
இவ்வகை உலகக்காரியங்களில் மன்னிக்கப்படும்.மறுமைக்கான காரியங்களில் வரவேற்கக்கப்படும்.
பொறாமையின் துவக்கம்..
அல்லாஹ் ஆதம்(அலை)அவர்களை படைத்த போது,மலக்குமார்களை ஆதம்(அலை)அவர்களுக்கு ஸஜ்தா செய்ய கட்டளையிட்டான்.
அப்போது இப்லீஸோ,நெருப்பால் படைக்கப்பட்ட படைப்பாகிய தனக்கு கிடைக்காத மரியாதை,மண்ணிணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு கிடைப்பாதா என ஆதம் (அலை)அவர்களின் மீது பொறாமைக்கொண்டு,அல்லாஹ்விடமே தர்கித்து,நிறந்தர சாபத்திற்கு ஆளானான்.
ஆக பொறாமை ஒருவனின் நல்ல அமல்களை அழித்து, அவனது நற்பெயர்களை கெடுத்து, இவ்வுலகிலும், மறு உலகிலும் ஈடேற்றம் பெறமுடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதனை இப்லீஸின் வரலாறு நமக்கு காட்டுகிறத
பூமியில் பொறாமையினால் நிகழ்ந்த முதல் குற்றம் கொலை.
ஆதம் நபிக்கு ஹாபீல்-காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவர்களுக்கும் உடன் பிறந்த இரு சகோதரிகள், ஹாபிழுடன் பிறந்த சகோதரியை காபில் திருமணம் செய்ய வேண்டும். காபிலுடன் பிறந்த சகோதரியை ஹாபிழ் திருமணம் செய்ய வேண்டும். இது தான் கட்டளை, காபிழுடன் பிறந்த சகோதரி அழகாக இருந்ததால் அதை காபில் ஹாபிலுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இருவருக்கும் பகை நீண்டது, எந்த அளவுக்கு என்றால் கொலை காபில் ஆபிலை கொலை செய்யும் அளவுக்கு சென்றது. ஹாபிலை காபில் ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்து விட்டான். ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்யும் சம்பவம் தான் உலகில் முதன் முதலில் நடந்த கொலை. ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே இந்த திருமண பிரச்சினை பிரச்சினையாக எழுந்தது. இதில் இறைவன் புறத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்க இருவரும் குர்பான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது.
இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)
فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۙ
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.(அல்குர்ஆன் : 5:31)
காபில் தனது சகோதரர் ஹாபில் மீது கொண்ட பொறாமையினால்,அவரை கொலை செய்தான். இதுவே உலகில் நிகழ்ந்த முதல் கொலை குற்றம் என்கிறது திருமறை...
முதலில் கொலையை அறிமுகப்படுத்தியதின் காரணமாக இவ்வுலகில் யார் கொலை செய்தாலும் அதில் ஒரு பங்கு அவரை (காபிலை) சேரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொறாமையின் காரணமாக யூசுஃப் நபியை கொலைசெய்ய திட்டம்.
إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُّبِينٍ
12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் – நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ
12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِن كُنتُمْ فَاعِلِينَ
12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் – அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்
பொறாமைக்காரனை அல்லாஹ் எச்சரிக்கிறான்...
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)
பொறாமை எனும் தீ
பொறாமை ஷைதானின் குணம் என்பதால் அது ஒரு விதமான உஷ்ணத்தை மனிதனில் உண்டாக்கும்.
மனிதன் கோபம் கொள்ளும் போது கூட உஷ்ணத்தை உணருகிறான்,இந்த குணங்கள் மனிதனின் உடலையும் பாதிக்கின்றன.
அதனால் தான் நபிﷺஅவர்கள் "கோபம் வந்தால் தண்ணீர் அருந்துங்கள்,அது கோபத்தை தணிக்கும்" என்றார்கள் தமிழில் பொறாமையை வயிற்றேரிச்சல் என்பார்கள்.
இதே கருத்துப்பட நபிﷺஅவர்கள் பொறாமையை நெருப்புக்கு ஒப்பாக்கி உவமை கூறியுள்ளார்கள்.
- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: பொறாமை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்.நிச்சயமாக பொறாமை ,நெருப்பு விறகைத் தின்பதைப் போல நன்மைகளைத் தின்றுவிடும்-அல்லது காய்ந்த புல்லை நெருப்புத் தின்பது போல நன்மைகளைத் தின்றுவிடும்.(அபூ தாவூது)
எனவே பொறாமை எனும் தீய குணம் பொறாமைக்காரனை பலகீனப்படுத்தோவதோடல்லாமல்,அல்லாஹ் ரஸுலின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
صحبتِ صالح ترا صالح کند
"நல்லோர்களின் சகவாசம் உனை நல்லவானாக்கும்"
சிறந்த மனிதன் யார்?
[عن عبدالله بن عمرو:] قيل لرسولِ اللهِ ﷺ أيُّ الناسِ أفضلُ قال كلُّ مخمومِ القلبِ صدوقِ اللسانِ قالوا صدوقُ اللسانِ نعرفُه فما مخمومُ القلبِ قال هو التقيُّ النقيُّ لا إثمَ فيه ولا بغيَ ولا غِلَّ ولا حسدَ صحيح ابن ماجه ٣٤١٦
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.
யார் மீது பொறாமைப்பட வேண்டும்......(غبطة )
عَنِ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்) (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி-5025)
இந்த பொறாமைக்கு அரபியில் (غبطة கிப்தா) எனப்படும். கிப்தா என்றால் பிறரிடம் இருப்பது தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைக் கொள்வது. இது ஷரீஅத்தில் தடுக்கப்பட்டது அல்ல.
சுவர்க்கம் செல்ல வேண்டுமா?
இதோ சுவர்க்க வாசியான ஒர் சஹாபியின் அற்புத நிகழ்வு....
٢- [عن أنس بن مالك:] كنّا جُلوسًا مع رسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ فقال: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهلِ الجَنَّةِ، فطَلَعَ رَجُلٌ من الأنصارِ، تَنطِفُ لحيَتُهُ من وَضوئِهِ، قد تَعَلَّقَ نَعْلَيهِ في يَدِه الشِّمالِ، فلمّا كان الغدُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ ذلك، فطَلَعَ ذلك الرَّجُلُ مثلَ المرةِ الأولى. فلمّا كان اليومُ الثالثُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ مَقالَتِهِ أيضًا، فطَلَعَ ذلك الرَّجُلُ على مِثْلِ حالِه الأولى، فلمّا قام النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ تَبِعَهُ عبدُ اللهِ بنُ عَمْرِو بنِ العاصِ فقال: إنِّي لاحَيتُ أبي فأقسَمْتُ ألّا أدخُلَ عليه ثلاثًا، فإنْ رَأيْتَ أنْ تُؤويَني إليكَ حتى تَمضيَ فَعَلتَ؟ قال: نَعَمْ. قال أنَسٌ: وكان عبدُ اللهِ يُحَدِّثُ أنَّه باتَ معه تلك اللَّياليَ الثَّلاثَ، فلم يَرَهُ يقومُ من الليلِ شيئًا، غيرَ أنَّه إذا تَعارَّ وتَقَلَّبَ على فِراشِهِ ذَكَرَ اللهَ عزَّ وجَلَّ وكبَّرَ، حتى يقومَ لصلاةِ الفجرِ. قال عبدُ اللهِ: غيرَ أني لم أَسمَعْهُ يقولُ إلّا خَيْرًا، فلمّا مَضَتِ الثلاثُ ليالٍ وكِدْتُ أنْ أحقِرَ عمَلَهُ، قلتُ: يا عبدَ اللهِ، إنِّي لم يكن بَيْني وبينَ أبي غَضَبٌ ولا هَجْرٌ ثَمَّ، ولكِنْ سَمِعتُ رسولَ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ يقولُ لكَ ثلاثَ مِرارٍ: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهْلِ الجَنَّةِ فطَلَعتَ أنتَ الثلاثَ مِرارٍ، فأرَدْتُ أنْ آويَ إليكَ لِأنظُرَ ما عَمَلُكَ، فأقتَديَ به، فلم أرَكَ تَعمَلُ كثيرَ عَمَلٍ، فما الذي بَلَغَ بكَ ما قال رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ، فقال: ما هو إلّا ما رَأيتَ. قال: فلمّا وَلَّيتُ دَعاني، فقال: ما هو إلّا ما رَأيتَ، غيرَ أنِّي لا أجِدُ في نَفْسي لِأحَدٍ من المسلمينَ غِشًّا، ولا أحسُدُ أحَدًا على خَيْرٍ أعطاهُ اللهُ إيّاهُ. فقال عبدُ اللهِ: هذه التي بَلَغَتْ بكَ، وهي التي لا نُطيقُ. وأحمد (١٢٦٩٧)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை என்று கூறிவிட்டு அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார். நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் என் உள்ளத்தில் இருந்ததில்லை. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான் பொறாமை கொள்ள மாட்டேன். என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.
பிறர் மீது பொறாமைப்படாமல் இருப்பதை நாம் பழகிக் கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.
பொறாமையின் விளைவுகள்.
பொறாமையினால் உள்ளத்தில் அடுத்தவர் மீது வெறுப்பு,கோபம்,குரோதம் போன்ற பாவங்கள் உண்டாகும்.
பொறாமையினால் பொறாமைக்கொள்ளப்படுபவரின் மகிழ்ச்சி துக்கத்தையும்,அவரின் துன்பம் மகிழ்ச்சியையும் தரும்.
இப்படி அடுத்தவரை கவனிப்பதால் அல்லது தன்னோடு ஒப்பிட்டு பார்ப்பாதால் வாழ்வில் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் பொறாமைக்காரான் இழந்து தவிக்க நேரிடும்.
பொறாமை மனிதனை அவதூறு பரப்புதல்,உரிமையை பறித்தல்,கொலைப் போன்ற பெரும் பாவங்களில் சேர்த்துவிடும்.
எனவே பொறாமையை தவிர்த்து இறைவனின் அன்பை பெற்று வாழும் பாக்கியத்தை இறைவனிடம் இறைஞ்சுவோமாக! ஆமின்...
வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment