தலைப்பு:
புத்தாண்டு 2022.
وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். (அல்குர்ஆன் 103-1.103-2)
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்ந்து தங்களுக்கிடையில்"Happy newyear""புத்தாண்டு வாழ்த்துக்கள்"சொல்லிக்கொள்வதை நவநாகரீகமாக, ஊடகங்கள்,சமூகவலைதலங்கள் வழியாக சித்தரித்துக்காட்டப்படுகிறது.
உண்மையிலே இது மதங்களை கடந்த பொதுப்பண்டிகை தானா என்றால்? இல்லை மாறாக இது கிட்டத்தட்ட கிருத்துவர்களின் மதப் பண்டிகை.
பிரிட்டன் என்ற நாடு உலகில் தன் காலணி ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் தன் கலாச்சாரத்தை திணித்து சென்றது.
உலகில் பல நாடுகளை தன் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை தந்திருந்தாலும், ஆண்டு,ஆடை, மொழி, போன்ற பழக்கவழக்கங்களில் அதன் கலாச்சார அடிமைகளாக்கி சென்றுவிட்டது.
இந்தியா,இலங்கை போன்ற நாடுகளும்,ஏன் அரபு நாடுகளும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றன.
டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை கண்விழித்திருந்து சரியாக இரவு 12 மணி ஆனதும் அனைவரும் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி Happy New year எனக் கூச்சிலிடுவதும்,வான வேடிக்கைகளும், கேக் வெட்டுவதும், மது,மாது,கிளப், கேலிக்கைககள் என எல்லா அனாச்சாரங்களும்,சமூக அவலங்களும் அன்றைய ஓர் இரவில் அரங்கேற்றப்படுகின்றன.
இந்த களியாட்டங்களில் இஸ்லாமியர்களும் பங்குகொண்டு கேக்வெட்டுவதும்,பட்டாசு வெடிப்பதும்,அன்றைய நாளில் மட்டும் சிலர் ஃபஜ்ரு தொழுவதையும் காணமுடிகிறது. இது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான செயலாகும்.
ஒரு ஹதீஸில்...
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ) رواه أبو داود (اللباس / 3512) قال الألباني في صحيح أبي داود : حسن صحيح . برقم (3401)
"எவர் (ஏதோனுமொரு) கூட்டத்தவர்களுக்கு ஒப்பாகுவாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்"என நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
كان النبي عليه الصلاة والسلام يكره مشابهة أهل الكتابين
நாயகம் (ஸல்)அவர்கள் எந்த செயலிலும் யூத,நஸராக்களுக்கு ஒப்பாகுவதை வெறுத்தார்கள்.
وقال: ((لا رهبانية في الإسلام)) ، وأمر بالسحور ، ونهى عن المواصلة
அதனால் தான் நாயகம் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தில் துறவரத்தையும்,ஸஹர் இல்லாத நோன்பையும்,தொடர் நோன்பையும் தடைச்செய்தார்கள்.
யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காகவே முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பிற்கு முன்போ பின்போ ஒரு நோன்பை சேர்த்து நோற்க்கச்சொன்னார்கள்.
அது போலவே முஷ்ரிகீன்களுக்கு மாற்றாமாக...
عن ابن عمر رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((خالفوا المشركين: أحفوا الشوارب وأوفوا اللحى)) رواه البخاري و مسلم
"முஷ்ரிகுகளுக்கு மாற்றம் செய்யுங்கள்: மீசையை கத்தரியுங்கள்,தாடியை வளருங்கள்"என்றார்கள்.
கிருத்துவர்களின் நாள்காட்டியை பொதுவானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும்.இந்த சூழ்ச்சிவலையில் இஸ்லாமியர்களும் சிக்கிக்கொள்வதென்பது வேதனையான ஒன்றாகும்.
யூத, கிறித்தவத்தையே நீங்கள் பின்பற்றுவீர்கள்.
3456» حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)). [طرفه 7320، تحفة 4171].
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்து)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 3456. )
யூத ,கிறித்தவ நடைமுறை அனைத்துக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதே நபி (ஸல்) அவர்களின் நடைமுறை.
இணைவைப்பாளர்களுக்கு சாதாரண தலைமுடியில் கூட மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஏந்தல் நபி (ஸல்)அவர்கள்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْدِلُ شَعَرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ فَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியை, (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை, (இரண்டு பக்கங்களிலும்) பிரித்துக் கொண்டார்கள். (ஸஹீஹ் புகாரி : 3558.)
காலம் கரையுதே.....
புத்தாண்டு கொண்டாடும் அன்பர்களுக்கு!
புத்தாண்டு நமக்கு உணர்த்துவயாதெனில் நம் ஆயுளில் ஓர் ஆண்டு கழிந்து விட்டது,இவ்வாழ்வு இறைவன் நமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடையாகும்.அல்லாஹ்வின் அருட்கொடை நம்மைவிட்டும் செல்லும் போது கைசேதப்படவேண்டுமே ஒழிய அதை எப்படி கொண்டாட முடியும்.உண்மையில் கழிந்துவிட்ட ஆண்டில் நாம் செய்த நல்லறங்கள்,பாவச் செயல்கள் குறித்து சிந்தக்கவேண்டும்.
قال ابن مسعود:( ما ندمت على شيء، ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزد فيه عملي! )قیمة الزمن عند العلماء، ص: ۲۷)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்:
நான் எதைக்குறித்தும் கைசேதப்படுவதில்லை,சூரியன் மறையும் ஓர் நாளில் எனது பட்டோலையில் எந்த நல்அமல்களும் அதிகமாகாமல் கழியும் அந்நாளே எனக்கு கைசேதமாகும்.
قال الحسن البصري:(يا ابن آدم إنما أنت أيام!، فإذا ذهب يوم ذهب بعضك)
ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் சொன்னார்கள்:
"ஆதமின் மகனே!நாள்களின் ஒட்டுமொத்த தொகுப்பு நீ,
விளங்கிக்கொள்!ஒரு நாள் கழியும் போது நீ உன் சிலதை இழக்கிறாய்"
இவ்வாழ்வு நமக்கு நிரந்தர மறுமை வாழ்வின் தயாரிப்பிற்காக தரப்பட்டுள்ளது.நாம் நம் வாழ்வை எவ்வளவு பயனுள்ள வழியில் கழிப்பதென சிந்தித்து செயல்பட வேண்டும்.
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ. رواه الترمذي
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
யூத,கிருத்துவர்களின் பல அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் "அன்னையர் தினம்" "தந்தையர் தினம்"" காதலர்தினம்"" ஆசிரியர் தினம்""குழந்தைகள் தினம்"என்கிற பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் குடும்பஅமைப்புகள் சிதைந்து போய் விட்டன.பெற்றோர்களை பராமரிக்காத பிளைகளும்,வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்களும்,இப்படி குடும்ப அமைப்புகளை சிதைத்து விட்டு, பெயருக்கு வருடத்தில் ஒரு முறை இது போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றனர்.இஸ்லாத்தில் உறவுமுறைகளை பேணிவாழ்வதை வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுப் போன்று பெயருக்கு கொண்டாடப்படும் அர்த்தமற்ற தினங்கள் இஸ்லாத்தில் கிடையாது.
காலம் ஒர் அமானிதம்.
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு இவ்வுலக வாழ்வை அமானிதமாக வழங்கியுள்ளான்.
நாளை மறுமையில் மனிதனிடம்.....
عَنْ عُمُرِكَ فِيمَا أَفْنَيْتَ، وَعَنْ شَبَابِكَ فِيمَا أَبْلَيْتَ
"உன் வாழ்நாளை எவ்விதம் கழித்தாய்?"என்றும் "உன் இளமையை எவ்வழியில் பயன்படுத்தினாய்?"என்றும் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும் என்கிறது நபிமொழி.
எனவே உலகில் வாழும்போது மனிதன்,தன் மனம்போன போக்கில் வாழ்வை களியாட்டங்களில் வீணாக்குவதை விட்டுவிட்டு,அல்லாஹ்,ரஸுல் காட்டிய வழியில் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளும் போது அவன் இறைப்பொருத்தைப் பெற்றுக்கொள்கிறான்.
உலக வாழ்வு என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய பெரும் வாய்ப்பாகும்,வாழ்வில் ஒவ்வொரு பொழுதுமே விலைமதிப்பற்ற அருளாகும்.காலம் மக்கத்தான அருளாக இருப்பதால் தான் அல்லாஹ் தன் திருமறையில் காலத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு,அக்காலத்தை வீணாக கழிக்கும் மனிதனை நஷ்டவாளி என்கிறான்.
وَالْعَصْرِۙ
காலத்தின் மீது சத்தியமாக.
(அல்குர்ஆன் : 103:1)
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 103:2)
பிரிதோர் இடத்தில்...
وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.(அல்குர்ஆன் : 25:62)
காலத்தின் மதிப்பை உணர்த்தும் நபிமொழி...
اغتنِمْ خمسًا قبل خمسٍ: شبابَك قبل هِرَمِك، وصِحَّتَك قبل سِقَمِك، وغناك قبل فقرِك، وفراغَك قبل شُغلِك، وحياتَك قبل موتِك
ஐந்துக்கு முன் ஐந்தை (வாய்ப்பாக)கனீமத்தாக கருதுங்கள்:
வயோதிகற்கு முன் வாலிபத்தையும்,
நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும்,
வறுமைக்கு முன் செல்வத்தையும்,
அலுவல்களுக்கு முன் ஓய்வையும்,
மரணத்திற்கு முன் வாழ்வையும்,
(வாய்ப்பாக கருதுங்கள்).
மனித வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் மறுமைக்காக நன்மைகளை விதைக்கும் பருவகாலம்,அதன் பலாபலனை நாளை மறுமையில் அறுவடைச்செய்யலாம்.
எனவே மனிதன் தன் வாழ்நாளை வீண்வேலைகள்,களியாட்டாங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் வீணடித்துவிடக்கூடாது.
உலக செல்வங்களை சம்பாதிப்பதிலே மூழ்கிவிடக்கூடாது.காரணம் பொருளை இன்றில்லையென்றாலும் ஒரு நாள் சம்பாதிக்க இயலும், ஆனால் நம்மை விட்டும் கழிந்த பொழுதுகளில் ஓர் நொடியைக் கூட நம்மால் திரும்பக்கொண்டுவர இயலாது.
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.(அல்குர்ஆன் : 10:45)
وقد كان عمر بن الخطاب - رضي الله عنه- يكره إضاعة الوقت، والبطالة، والتعطل، فيقول: (إني لأكره أن أرى أحدكم سبهللاً - فارغاً- لا في عمل دنيا ولا عمل آخرة)
உமர் (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்:உங்களில் எவரும் உலக அலுவலோ அல்லது மறுமையின் அமல்களோ செய்யாமல் ஓய்வாக இருப்பதையும்,நேரத்தை வீணடிப்பதையும் கண்டு நான் வெறுக்கிறேன்.
. قال يحيى بن هبيرة أستاذ الإمام ابن الجوزي -رحمه الله-: الوقتُ أنفَسُ ما عُنِيت بحفظِه وأراه أسهَل
இஸ்லாத்தில் இரண்டு ஈது பெருநாள்கள் கூட வெறுமனே அர்த்தமற்ற கொண்டாட்டங்கள்,களியாட்டாங்கள்,வீண்விரயங்கள் இல்லாத இறைவழிப்பாடகவும்,ஏழை எளியோருக்கு உதவும் மனப்பான்மையை உண்டாக்கும் நாள்களாக போற்றப்படுகிறது.இவை தவிர மற்ற கொண்டாட்டங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
காலம் சுருங்குவது கியாமத் நாளின் அடையாளம்.
٢٣- [عن أنس بن مالك:] لا تقومُ الساعةُ، حتى يتقاربَ الزمانُ، فتكون السنةُ كالشهرِ، والشهرُ كالجمعةِ، وتكون الجمعةُ كاليومِ، ويكون اليومُ كالساعةِ، وتكون الساعةُ كالضرمةِ بالنارِ
الألباني (ت ١٤٢٠)، تخريج مشكاة المصابيح ٥٣٧٦ • له شاهد مرفوعاً به إسناده صحيح على شرط مسلم
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
கியாம நாள் காலங்கள் சுருங்கும் வரை ஏற்படாது. எனவே ஒரு வருடம் ஒரு மாதமாக, ஒரு மாதம் ஒரு வாரமாக, ஒரு வாரம் ஒரு நாளாக, ஒரு நாள் ஒரு மணி நேரமாக, ஒரு மணி நேரம் ஒரு செடி நெருப்பில் கறியும் அளவு போல் காலத்தில் பரக்கத் பிடுங்கப்படும் வரை கியாம நாள் ஏற்படாது.
காலமாக நான் இருக்கிறேன்.
الحديث القدسي الذي يقول فيه النبيُّ (صل) لا تسبُّوا الدهر، فإنَّ الله هو الدهر
காலத்தை திட்டாதீர்கள் ஏனெனில் காலமாக அல்லாஹ் இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா 92 இடத்தில் சத்தியமிட்டு சொல்கிறான்.அதில் 18 இடங்களில் காலத்தின் மீது சத்தியமிட்டு பேசுகிறான்.
அதிகாலை நேரத்தின் மீது சத்தியமாக!
ழுஹா நேரத்தின் மீது சத்தியமாக!
அஸர் நேரத்தின் மீது சத்தியமாக!
பகலின் மீது சத்தியமாக! இரவின் மீது சத்தியமாக! இப்படி காலத்தின் அத்துனை பகுதிகள் மீதும் அல்லாஹ் சத்தியமிட்டு கூறுவதில் பல அத்தாட்சிகள் அதிலே பொதிந்திருப்பதை நாம் உணரலாம்.
அல்லாஹ் தான் படைத்த உயிரினம் அல்லாத படைப்புகளான சூரியன்,சந்திரன், வேதம், ஞானம் ஆகியவற்றின் மீது ஏன் சத்தியம் செய்கிறான் என்றால் அவைகள் அனைத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது! என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியாகும். மேலும் இந்த படைப்புகள் அனைத்தும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஏன்? அழிவு நாள் வரை அவன் கட்டளையின்றி அணுவளவும் அசையாது.
எனவே தான் காலமாக நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
Time is gold காலம் பொன்போன்றது என்பார்கள்.
Time is money.காலம் பணத்தின் மதிப்புடையது என்பார்கள்.
ஆனால் இஸ்லாம் Time is life காலம் தான் வாழ்க்கை என்று சொல்கிறது.
நேரத்தின் பெறுமதியை பின்வரும் சந்தர்ப்பங்களை சந்தித்தவர்களிடம் கேட்கலாம்.
1) ஒரு வருடத்தின் பெறுமதியை பரீட்சையில் தோற்ற மாணவனிடம் கேட்கலாம்.
2) ஒரு மாதத்தின் பெறுமதியை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் கேட்கலாம்.
3) ஒரு நிமிடத்தின் பெறுமதியை பஸ்வண்டியைத் தவறவிட்டவனிடம் கேட்கலாம்.
4) ஒரு செக்கன்டின் பெறுமதியை விபத்தில் தப்பியவனிடம் கேட்கலாம்.
5) நுண்ணொடியின் பெறுமதியை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டவனிடம் கேட்கலாம்.
ஒரு வினாடியின் அருமை.
2012-இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் "ஜமைக்கா' நாட்டைச்சேர்ந்த உசேன் போல்ட் என்பவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.63 விநாடிகளில் வந்து தங்கப்பதக்கம் பெற்று உலகின் அதிவேக ஓட்டக்காரன் என்ற சாதனை படைத்ததும், அவரைத் தொடர்ந்து 9.75 விநாடிகளில் அதாவது சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் 2-ஆம் இடம் பெற்ற விளையாட்டு வீரருக்கும் காலம் எத்துணை உன்னதமானது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
மனிதன் எத்தனை திட்டங்கள் வைத்திருந்தாலும் அல்லாஹ்வின் ஒரு நொடி போதும் அவன் திட்டங்கள் அனைத்தும் அழிந்து விடும்.
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 7:34)
மாற்றத்தின் நேரம் அதிகாலை.
உலகில் பெரும் பெரும் மாற்றங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் நடைபெறுகின்றன. உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆத் கூட்டத்தைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (திருக்குர்ஆன் 46:25)
சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகின்றான்: “திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (திருக்குர்ஆன் 7:91)
லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?” (திருக்குர்ஆன் 11: 81)
ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான்: “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்”. (திருக்குர்ஆன் 29:37).
2004-ல் ஏற்பட்ட சுனாமி, துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம், 2009- ல் ஆப்பிரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
காலண்டரின் வரலாறு...
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் சில வரலாற்று நிகழ்வுகளை வைத்து காலங்கள் கணிக்கப்பட்டு வந்தன.
ஆதியில் வாழ்ந்தவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிறப்பை வைத்து காலத்தை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி இப்ராஹீம் (அலை) நெருப்பில் தூக்கி போடப்பட்ட வருடத்தை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி யூசுப் (அலை) அவர்கள் எகிப்தில் ஆட்சியாளராக ஆன போது அதைக் கணக்கிட்டு வந்தார்கள்.
பிறகு பனு இஸ்ராயில் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளை வருடமாக கணக்கிட்டு வந்தார்கள்.பிறகு நபி ஈஸா (அலை) பிறந்தநாள் அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நாளை இன்று வரை வருடமாக கணித்து வருகிறர்கள்.
முஸ்லிம்கள் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து வருடங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இது தான் ஆண்டுகள் கணக்கிடப்பட்ட வரலாறு.
புத்தாண்டு தின வரலாறு.
முதலில் புத்தாண்டு தினமே ஒரு குழப்பமான வரலாற்று பின்னணியை கொண்டது.ஆரம்பத்தில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை.
ரோமானிய காலண்டர்.
அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.
ஜூலியன் காலண்டர்.
புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர்
கிரிகோரியன் காலண்டர்.
குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று உலக மக்கள் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறார்கள்.
கிருத்துவர்களின் நாள்காட்டியை பொதுவானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும்.இந்த சூழ்ச்சிவலையில் இஸ்லாமியர்களும் சிக்கிக்கொள்வதென்பது வேதனையான ஒன்றாகும்.
ஹிஜ்ரா ஆண்டு...
நமக்கென நாயகம் (ஸல்)அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்ட,உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கிய ஹிஜ்ரா நாள்காட்டி முறை இருக்கிறது.
நம்மில் பலருக்கு இஸ்லாமிய மாதங்களோ,வருடமோ தெரிவதில்லை. வருடத்தில் ஈதுக் கொண்டாடுவதற்கும்,திருமணத்தில் பெயருக்கு வருடம்,பிறை போடுவதற்கு மட்டுமே இஸ்லாமிய ஹிஜ்ரீ கணக்கு தேவைப்படுகிறது.
அர்த்தமில்லாத புத்தாண்டு...
புத்தாண்டு தினம் முதற்கொண்டு ஆங்கில மாதங்களின் பெயர்கள் வரை அனைத்தும் இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமானவையும், அர்த்தமில்லாதவையும் தான்.
ஜனவரி :
ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.
பிப்ரவரி :
மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.
மார்ச் :
மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியதுதான் மார்ச் மாதம் ஆகும்.
ஏப்ரல் :
ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.
மே :
இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும்.
ஜூன் :
ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும்.
ஜூலை :
மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார்.
ஆகஸ்ட் :
ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது.
செப்டம்பர் :
ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
அக்டோபர் :
அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது.
நவம்பர் :
நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
டிசம்பர் :
புத்தாண்டு எனும் சமூகச் சீரழிவு.
அன்றிரவு வயது வித்தியாசமின்றி மது அருந்தப்படுகிறது.ஆண்,பெண் கலப்பு சர்வசாதாரணமாகவும்,ஆட்டம் பாட்டம்,காமகளியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.
புத்தாண்டு அடுத்தவர்களின் கலாச்சாரம் இன்னொன்று இந்த கொண்டாட்டங்களில் எந்த நன்மைகளுமில்லாத,பாவச்செயல்களால் நிறைந்துகாணப்படுகின்றன.
عن ثابت بن الضحاك قال: " نذر رجل أن ينحر إبلا ببوانة، فسأل النبي ﷺ فقال: هل كان فيها وثن من أوثان الجاهلية يُعبد؟ قالوا: لا. قال: فهل كان فيها عيد من أعيادهم؟ قالوا: لا. فقال رسول الله ﷺ: أوف بنذرك، فإنه لا وفاء لنذر في معصية الله، ولا فيما لا يملك ابن آدم" رواه أبو داود. وإسناده على شرطهما
ஒரு நபித்தோழர் "புவானா"எனும் ஓர் இடத்தில் ஒட்டகம் அறுக்க நேர்ச்சை செய்திருந்தார்.நாயகம் (ஸல்)அவர்களிடம் அனுமதிகோரிய போது,
நபியவர்கள் "அவ்வவிடத்தில் அறியாமைக்கால மக்கள் வணங்கிய சிலைக்களில் ஏதேனும் இருக்கின்றனவா?"என்றுக்கேட்டார்கள்.
அவர் "இல்லை" என்றார்.
மீண்டும் நபியர்கள் "அங்கு அவர்களின் விழாக்கள் ஏதும் கொண்டாடப்படுகின்றனவா"?என்று கேட்டார்கள்.
"இல்லை" என்றார் அவர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) -நூல்: அபூதாவூத் -
நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தில் மற்றவர்களின் கலாச்சாரமோ,பழக்கவழக்கங்களோ, அனுஷ்டானங்களையோ அனுமதித்ததில்லை.
இறுதியாக....
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُخَارِقٍ سَمِعْتُ طَارِقًا قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், 'உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 6098)
எனவே நாம் அந்நிய கலாச்சாரத்தின் நடைமுறைக்கு அடிமையாகமால், நடைமுறையில் சிறந்த நடைமுறையான நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை பின்பற்றி வாழ்வோமாக!ஆமின்...
2 comments:
Masha allah hazard jazakallah khair
Alhamdulillah
Post a Comment