தலைப்பு:
அழிக்க முடியாத இஸ்லாம்.
"اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ"
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; (அல்குர்ஆன் : 3:19)
அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை அவன் பட்டித்தொட்டியெல்லாம் கொண்டுப்போய் சேர்ப்பான்.என்றும் உலகம் அழியும் நாளில் இந்த தீனை ஏற்காதார் உலகில் இல்லை என்கிற நிலை உருவாகும் என்றும் அண்ணலம் பெருமானார் (ஸல்)அவர்கள் உறுதிப்பட கூறியிருக்கிறார்கள்.ஆனால் எதிரிகள் இந்த தீனை எளிதில் வளரவிடமாட்டார்கள்.
1400 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் தாகுதலுக்குள்ளாக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.
நபி (ஸல்)அவர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை இதே நிலை தான் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை,ஊடங்கள்,சமூகவலைதளங்களில் இஸ்லாத்திற்கெதிரான பரப்புரைகள்,இஸ்லாமியர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை தாக்குதல்கள் என ஏராளம்...
உலகளவில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும்,இஸ்லாத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான சூழ்ச்சி வலைகள் பிண்ணப்பட்டு, முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
ஆனால் எங்கெல்லாம் இஸ்லாம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிக வீரியத்துடன் எதிர்ப்புகளைச் சமாளித்து மீண்டு வரும். இது தான் இஸ்லாத்தின் தனித்தன்மை.
இஸ்லாத்தின் அசுரவளர்ச்சி விரோதிகளுக்கு இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் குரோதத்தையும்,வெறுப்பையும் அதிகமாக்குகின்றது.
இஸ்லாமோஃபோபியா.
இஸ்லாமோபோபியா (Islamophobia அதாவது இஸ்லாமியர்வெறுப்பு மனநிலை) என்பது இஸ்லாம் அல்லது பொதுவாக முஸ்லிம்களின் மதத்திற்கு எதிரான அச்சம், வெறுப்பு, தப்பெண்ணம் அல்லது எதிர்மறையான முன்முடிவுகள் ஆகும்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கும்,இஸ்லாத்தை அழிப்பதற்கும் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு,பல முடிவுகள்,வரைவுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் ஒன்றுதான் இஸ்லாமோபோபியா Islamophobia என்கிற திட்டம்.
பொதுவாக உலகெங்கிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாமிய விரோதத்தை மக்களின் உள்ளங்களில் விதைப்பது,சினிமா,மீடியாக்கள்,பத்திரிகைகளில் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் "அடிப்படைவாதிகள்""பயங்கரவாதிகள்"என தவறாக சித்தரித்துக்காட்டுவது.
இஸ்லாமிய நாடுகள் மீதும், மஸ்ஜித்களின் மீதும்,இஸ்லாமிய அடையாளங்களோடுள்ளவர்கள்(தொப்பி,தாடி,ஃபர்தா)மீதும் தாக்குதல் தொடுபப்து போன்ற எண்ணற்ற தாக்குதல் "இஸ்லாமோபோபியா" என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.
ஆனால் இஸ்லாத்தின் உயர்ந்த, உன்னதம் மிக்க தத்துவங்கள் மனிதமனங்களை வென்றுவிடுகின்றன.
இஸ்லாம் ஒர் மனிதகுல பாதுகாப்பு.
"அநீதமாக ஒரு மனிதன் கொள்ளப்படுவது மனிதஇனமே கொள்ளப்படுவதற்கு நிகராகும்"போன்ற இஸ்லாத்தின் மனிதநேய போதனைகள் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்திற்கெதிரான தவறான பொய்ப்பிரச்சாரங்களை தவிடுப்பொடியாக்கி மக்களை சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கின்றன.
ஒரு புறம் இஸ்லாமோபோபியா என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சசி வலைகள் பின்னப்படுகின்றன. மறுபுறம் இஸ்லாம் அதன் சத்திய பாட்டையில் வீறுகொண்டு நடைப்போடுகின்றது.
இறைவன் நாடினால் நாளை மேற்கத்திய கலாச்சாரம் ஒழிந்து அங்கெல்லாம் இஸ்லாமியமயமாகவும் வாய்ப்புள்ளது.
காரணம் இஸ்லாத்திற்கெதிராக அவர்களின் மீடியாக்கள்,சமூகவலைதளங்கள்,பத்திரிக்கைகளில் "இஸ்மிலாமிய அதீத மதப்பற்று" (Islamic Redicalism)، "இஸ்லாமிய தீவிரவாதம்"(Terrorism Islamic)، "இஸ்லாமிய அடிப்படைவாதம்"(Extremism Islamic)، "இஸ்லாமிய வன்முறை" (Violence Islamic)என்பனப் போன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும் பொய்ப் பரப்புரைகள் மக்களை சிந்திக்க தூண்டுகின்றன.
உலகில் வாழும் 150கோடிகளுக்கு அதிகமான ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீது கடந்த 20 வருடங்களாக தீவிரவாத முத்திரைக் குத்துவதற்கான பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையின் படி: The Roots of islamo phobia வெறுப்பின் வேர் இஸ்லாம் என்ற தலைப்பிட்டு 7 அமைப்புகளை உருவாக்கி 2001 முதல் 2005 வரை இஸ்லாதிற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதிவேலைகள் செய்வதற்காக கிட்டத்தட்ட 43 மில்லயன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஓர் அறிக்கை:வெறும் ஐந்தாண்டுகளில் 33 அமைப்புகளுக்கு மட்டும் இஸ்லாதிற்கெதிராக சதிச்செயல்களில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்ட தொகை 206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
Islamophobia வை உருவாக்குவதில் மேற்கத்திய ஊடகங்கள்.
இன்றைய உலகம் ஊடகப் பயங்கரவாதத்தின் (Media Terrorism) கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. ஊடகத் தொழில் நுட்பத்தில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள மேற்குலகின் தயாரிப்புக்களுக்கும் விரிவுபடுத்தலுக்கும் முன்னால் ஏனைய ஊடகங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மேற்கு ஊடகங்களின் ஆதிக்கமே தொழிற்படுகின்றது. இதனால் மேற்கத்தேயத்தின் சிந்தனைகளும் கருத்துக்களும் உலகமயப்படுத்தப்பட்டுள்ளன.
2001/09/11 க்குப் பின்னர் மேற்குலகின் தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என பல்வேறு தளங்களிலும் இஸ்லாமியப் பீதியை மேற்குலகு உலகமயப்படுத்தியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்னணி ஊடக நிறுவனங்களாக செயற்பட்டு வருபவை யூத செல்வந்தர்களுக்கு சொந்தமானவை.
இது மட்டுமன்றி இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி பல பத்திரிகை வெளியீடுகளை செய்தி வருகின்றனர். வத்திகானில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட தினசரிகள் வெளிவருகின்றன. இது தவிர வாராந்த, மாதாந்த இதழ்கள் வெளிவருகின்றன.
இன்னும் 154 ஒளிபரப்பு நிலையங்கள் இஸ்லாத்தை பற்றி பிழையான கருத்துக்களை முன்வைப்பதற்காக அங்கு செயற்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஓர் அறிக்கைக் கூறுகிறது:2017ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் பிரபல்யமான ஐந்து பெரும் பத்திரிக்கை நிறுவனங்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சுமார் 5000 செய்திகளை வெளியிட்டுருக்கின்றன.
நியூஸ்வீக் மற்றும் டைம் நாளிதழ் இஸ்லாம் குறித்து இருபது தலைப்பு செய்திகளை வெளியிட்டன.அவற்றில் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்தன.
இந்தியாவிலும் பல செய்திநிறுவனங்கள் இன்றைய உலக ஊடகப் பயங்கரவாதத்தின் (Media Terrorism) கோரப்பிடியில் சிக்கியிருக்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
காரணம் தொடந்து இஸ்லாத்திற்கு எதிரான பரப்புரைகள் செய்வதில் பல மீடியாக்கள் ஆர்வம் காட்டுகின்றன.
2020 கொரானா முதல்அலை வந்த போது தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு கொரானாவை வேண்டுமென்றே பரப்பியதாக ஓர் பிம்பத்தை உருவாக்கமுனைந்தன.
சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் அமெரிக்க,இஸ்ரேலின் செல்லப்பிள்ளை,அவரது நடவடிக்கை தொடர்ந்து சர்ச்சையாகி விடுகின்றன.
சவூதிக்கு நிறைய டூரிஸ்டகள் வந்தால் வருமானம் பெருகும் . பயணிகள் வரவேண்டுமானால் மது மாது களியாட்டத்திற்கும் ஆபாசத்திற்கும் அனுமதியளித்தால் தான் அது சாத்தியமாகும் என்பதால் இளவரசர் முஹம்மது ஸல்மான் பொறுப்பேற்றதும். மக்கா மதீனா இரண்டு நகரங்களை தவிர மற்ற பகுதி புனிதப் பகுதிஅல்ல என்று அறிவித்தார்.
இதை விட இளவரசர் ஸல்மான் சவூதி அரேபியாவை நவீனப் பாதைக்கு மாற்ற நினைக்கும் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை.
பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி, உள்ளிட்ட விஷயங்களை அவர் செயல்படுத்தியுள்ளார்.
தற்போது சவூதியில் தப்லீக் ஜமாத் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு தடை உத்தரவு கடந்த 30 வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும் அதனை பயங்கரவாத்தோடு தொடர்புப்படுத்தி அறிக்கைவெளியிட்டுருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு இந்தியாவின் தாருல்உலூம் தேவ்பந்த், ஜம்இய்யதுல் உலமாயே ஹிந்த்,மற்றும் உலக அறிஞர்கள் கடும்கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகங்கள் சவூதி அரசாங்கத்தின் இந்த அறிக்கையை முதன்மை செய்தியாக வெளியிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் சவூதியில் தப்லீக் ஜமாதிற்கு தடை என்று பரப்புரை செய்கின்றன.
இதுப் போன்றே 'லவ் ஜிஹாத்'என்றும் இஸ்லாமிய தீவிரவாதம்,பழமைவாதம் என்றும் இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்திவெளியிட்டுவருகின்றன.
இந்திய,பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறும் சாதாரண கிரிகெட் விளையாட்டைக்கூட இரு நாட்டிற்கிடையில் நடைபெறும் போராக சித்திரித்திக்கட்டுவது மீடியாக்களின் கீழ்தரமான வழமையில் உள்ள ஓர் விஷ(ய)ம்.
இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் கலந்த உணர்வினால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள் மனதாலும் உடலாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களின் சதவீதம் ஃப்ரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அதிகம் கூறப்பட்டாலும் ஜெர்மனி, பிரிட்டன் ஸ்ரீலங்கா,மற்றும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் எல்லா இடங்களிலும் இஸ்லாமோஃபோபியா தலைவிரித்து ஆடுவதைக் கண்கூடாகக் காண இயலும்.
இந்தியாவில் பசுவின் பெயரால் முஸ்லிம்களை கொலைசெய்வதும்,ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச் சொல்லி வற்புறுத்தி தாக்குவதும்.கலவரங்கள் செய்து இஸ்லாமியர்களின் உயிருக்கும்,உடமைக்கும் சேதம் ஏற்படுத்துவதையும்.
ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களே இஸ்லாமியர்களுக்கெதிரான பல சட்டங்களைப் போட்டுமுடக்குவதும் இப்படி பல இன்னல்களை இந்திய இஸ்லாமியர்கள் எதிர்க்கொள்கின்றனர்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே!
அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது உலகில் அதிகமாகப் பேசப்பட்ட மதம் இஸ்லாம் என்றாலும் அத்தாக்குதலில் மறைக்கப்பட்ட உண்மைகளும், சதிகளும் பின்னர் மெதுவாக அம்பலமாகின. அதன்பின் அமெரிக்கர்கள் மட்டுமன்றி ஏனைய மேற்கத்தேய ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தனர்.
அதன் விளைவு இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மைத் தன்மையுடன் ஒரிறைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அப்போது புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகமாகி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகமாகிக் கொண்டே போவதால், உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சியின் வேகம் துரிதமாகிக் கொண்டே போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இன்று உலகில் மிகவும் வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. அதே போன்றுதான் (கிறைஸ்ட்)சர்ச் தாக்குதலின் பின்னரும் நியூசிலாந்தில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகரித்திருப்பதாக ஊடக செய்திகளில் காண முடிகிறது.
இன்னும் ஏராளமான நாடுகளில் வாழும் மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஆராய ஆரம்பித்திருப்பது இஸ்லாமிய எதிர்ப்பாளர்ளுக்கு பேரிடி தரும் செய்தியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது.
ஓர் ஆய்வில்: 21 ஆம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது.
2050ல் ஐரோப்பா இஸ்லாமியமயமாகும் என்கிறது ஓர் ஆய்வு.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகம் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த மாயைகனை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.
அன்று பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று அதற்கான பரிகாரம் தேடுகிறார்கள். பாபர் மசூதியின் கூம்பின் மீது நின்று இடித்த பல்பீர்சிங் இன்று முகமது அமீர்! தாம் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரகராக பாழடைந்த மஸ்ஜிதுகளைப் புதுப்பித்து வலம் வந்தார்.
இஸ்லாத்தையும், முஹம்மத் நபியவர்களையும் தவறாகச் சித்தரித்து படம் எடுத்து உலகத்தையே உலுக்கிய ஆர்நோத் வான் டோர்ன் இன்று இஸ்லாமியனாக வாழ்கிறார். இஸ்லாமைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இறைவன் நாடினால் இந்தியாவில் இன்று ஆட்டம் போடும் காவிகள் சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்பார்கள்.
يُرِيدُونَ لِيُطْفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُون
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (திருக்குர்ஆன் 9:32)
தடைகளைத் தாண்டி இஸ்லாம் வளரும்.
குர்ஆன் வசனங்களோ,நபியின் போதனைகளோ கேட்டுவிடக்கூடாது என்று தம் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்ட துஃபைல் இப்னு அம்ர் அத் தவ்ஸி (ரலி)அவர்கள் கடைசியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு,தனது தவ்ஸ் கோத்திரத்தில் உள்ள 1000 நபர்களை இஸ்லாமியராக்கிவிட்டார்கள்.
தான் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வை துஃபைல் (ரலி)அவர்கள் விவரிக்கிறார்கள்.
நான் மக்கா வந்துசேர்ந்தேன். மக்காவில் குறைஷ் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பார்த்தார்களோ இல்லையோ, உடனே ஓடோடிவந்து எனக்கு அழகிய முறையில் வரவேற்பு அளித்தார்கள். அவர்களிடையே மிகவும் கண்ணியமானதோர் இல்லத்தில் எனக்குத் தங்கும் வசதி செய்துகொடுத்தார்கள்.பின்னர் என்னிடம் வந்து ஒன்றுகூடிய அந்தத் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பின்வருமாறு எச்சரித்தனர்:
“துஃபைலே! நீர் எங்கள் ஊருக்கு வருகை தந்துள்ளீர். எங்கள் ஊரில் தன்னை நபியென்று கருதிக்கொண்டிருக்கும் இந்த மனிதர் (முஹம்மத்), எங்களின் மரபுகளையெல்லாம் கெடுத்துச் சுட்டிச்சுவராக்கிவிட்டார். எங்களின் ஒருமைப்பாட்டை உடைத்துவிட்டார். எங்களுடைய சமூகக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டார். எங்களுக்கு நேர்ந்த இந்த அவலம் உமக்கும் உம் சமூகத்தில் உமது தலைமைக்கும் நேர்ந்துவிடுமோ என்பதே எங்கள் அச்சம்.எனவே, அந்த மனிதரிடம் பேச்சுக்கொடுக்காதீர். அவர் சொல்லும் செய்தி எதற்கும் கண்டிப்பாகக் காது கொடுத்துவிடாதீர். அவரது சொல் மதியை மயக்கும் ஆற்றல் பெற்றவை. அதைக் கேட்டால் தந்தையும் தனயனுமே தகராறு செய்துகொள்வர். உடன்பிறந்த அண்ணன் தம்பிகளே அடித்துக்கொள்வர். அவரது வார்த்தையின் வசீகரம் கணவன் மனைவியைக்கூட எதிரெதிர் துருவங்களாக்கிவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்“.
அல்லாஹ்வின் மீதாணையாக, குறைஷியர் இவ்வாறு முஹம்மத் பற்றிய வினோதமான தகவல்களை என்னிடம் தொடர்ந்து எடுத்துச்சொல்லிக்கொண்டிருந்தனர். அவருடைய நூதனமான நவடிக்கைகள் மூலம் எனக்கும் என் சமூகத்திற்கும் ஆபத்து நேரும் என அச்சமூட்டிக்கொண்டிருந்தனர். இறுதியில், அவரிடம் நான் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. அவர் கூறும் எதற்கும் காது கொடுக்கப்போவதில்லை. ஏன், அவர் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டேன்.
காலை நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்தேன். கஅபாவை தவாஃப் சுற்ற வேண்டும், அங்குள்ள சிலைகளைத் தொட்டுத் தடவி அருளாசி பெற வேண்டும் என்பது எனது நோக்கம். இதுதான் கஅபாவுக்கு நாங்கள் கொடுக்கும் கௌரவம். இதுதான் எங்களின் ஹஜ். இந்த நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தபோது என்னிரு காதுகளிலும் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். முஹம்மத் எடுத்துரைக்கும் எதுவும் காற்றுவாக்கில்கூட என் காதைத் தீண்டிவிடக் கூடாது என்கிற அச்சமே இதற்குக் காரணம்.
இருப்பினும் நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்த மாத்திரத்தில் பார்த்தேன். முஹம்மத் கஅபாவுக்கு அருகில் தொழுதுகொண்டும் வழிபாடு செய்துகொண்டும் இருந்தார். அந்தத் தொழுகையும் வழிபாடும் எங்களுக்கு விநோதமாகத் தெரிந்தது. எனவே, அந்தக் காட்சி என்னை மேற்கொண்டு நகரவிடாமல் அங்கேயே கட்டிப்போட்டது. அவரின் வழிபாட்டு முறை எனக்குள் ஏதோ சலனத்தை ஏற்படுத்தியது. என்னை அறியாமலேயே என் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நோக்கி நெருங்கியது. இறுதியில், யார் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேனோ அவருக்கு அருகிலேயே நான் போய்ச்சேர்ந்தேன். அவருடைய வார்த்தைகளில் சிலவற்றை என் காதில் விழவைத்தே தீருவது என்பதில் அல்லாஹ்வும் தீர்மானமாக இருந்தான். தேனினும் இனிய அந்த வார்த்தைகள் என் செவியில் வந்து விழுந்தன.
உள்ளத்தைப் பறிகொடுத்த துஃபைல்.
அப்போது நான் எனக்குள்ளேயே இப்படிப் பேசிக்கொண்டேன்: ‘’தாயற்றுப் போனவனே! துஃபைலே! நீயொரு புலவன். புலமை மிக்கவன். நல்லதும் அல்லதும் உனக்கு அத்துப்படி. இந்த ஆள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில் உனக்கென்ன தயக்கம்? அவர் சொல்வது நல்லதெனில் ஏற்றுக்கொள். அல்லதெனில் விட்டுவிட வேண்டியதுதானே’’.
இப்படி எனக்குள்ளேயே பேசிக்கொண்ட நான், சிறிது நேரம் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது முஹம்மத் தமது இல்லத்திற்குத் திரும்பலானார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். அவர் தமது இல்லத்தில் நுழைந்ததும் நானும் உள்ளே நுழைந்தேன். பின்னர் அவரிடம் இப்படிச் சொன்னேன்:
‘’முஹம்மதே! உம் சமுதாயத்தார் உம்மைப் பற்றி என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உமது நிலைப்பாட்டைக் குறித்து எனக்கு அச்சமூட்டிக்கொண்டே இருந்தனர். எனவே, நீர் கூறும் எதையும் காது கொடுத்துக் கேட்கக் கூடாது என்ற முடிவில் என்னிரு காதுகளில் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். ஆனால், அவற்றில் சிலவற்றை என் காதுகளில் அல்லாஹ் வலிந்து விழவைத்தான். உமது கூற்று அழகாக இருந்த்து. எனவே, உமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைப்பீராக’’.
இவ்வாறு நான் கூறியதும் முஹம்மத் தமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைத்தார். அல்இக்லாஸ் (112), அல்ஃபலக் (113) ஆகிய அத்தியாயங்களை எனக்கு ஓதிக்காட்டினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களின் கூற்றைவிட மிக அழகான நேர்மையான ஒரு கூற்றை இதுவரை நான் செவியுற்றதில்லை. அப்போதே நான் எனது கரத்தை அவர்களிடம் நீட்டி, ‘’அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்’’ என்று ஓரிறை உறுதிமொழி கூறி இஸ்லாத்தைத் தழுவினேன்.
பின்னர் மக்காவிலேயே சிறிது காலம் தங்கி இஸ்லாத்தின் கட்டளைகளைக் கற்றறிந்தேன். திருக்குர்ஆனில் என்னால் முடிந்ததை மனனமிட்டேன். என்னுடைய சமுதாயத்தாரிடம் திரும்பிச் செல்லலாம் என்று நான் முடிவு செய்தபோது நபியவர்களிடம் சென்று, ‘’அல்லாஹ்வின் தூதரே! என் சமூகத்தில் நான் ஒரு முக்கியப் புள்ளி. என் பேச்சுக்கு மறுபேச்சு யாரும் பேசமாட்டார்கள். எனவே, நான் அவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் எனக்கு ஒரு சான்றை வழங்க வேண்டும். அது எனது அழைப்புப் பணியில் எனக்கு உறுதுணையாக அமைய வேண்டும்’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘’இறைவா! துஃபைலுக்கு நீ ஒரு சான்றை வழங்குவாயாக’’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
துஃபைல் (ரலி) கூறுகிறார்: நான் சென்று தவ்ஸ் குலத்தார் வசித்த பகுதியில் இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டுவந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அப்பால் பத்ர், உஹுத், கன்தக் (அகழ்) ஆகிய அறப்போர்கள் நடந்து முடிந்திருந்தன.
அப்போது நான் மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என்னுடன் தவ்ஸ் குலத்தில் எண்பது குடும்பங்களும் வந்திருந்தன. அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்துவந்தனர். எங்களால் நபியவர்கள் மனமகிழ்ந்தார்கள். கைபர் போரில் கிடைத்த போர்ச்செல்வங்களைப் பங்கிடும்போது மற்ற முஸ்லிம்களுடன் சேர்த்து எங்களுக்கும் பங்கு வழங்கினார்கள்.
எனவே முஸா நபி(அலை)அவர்களை ஃபிர்அவ்னின் கோட்டையில் வளர்த்ததை போல அல்லாஹுத்தஆலா இந்த தீனுல் இஸ்லாத்தை எதிரிகளின் கோட்டையில் வைத்தே வளர்ப்பான் என்பது தான் வரலாறுக் கூறும் செய்தி.
அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி....
ஜெருசலேம் நகரத்தை உமர்(ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் சேர்த்த பொழுது அந்நகரில் எவ்விதமான ரத்தக்களறியும் ஏற்படவில்லை. மாறாக அந்நகரத்தின் கிறிஸ்தவ தலைவர் சோப்ரொனியூஸ்க்கும் மற்ற கிறிஸ்துவ மக்களுக்கும் உமர்(ரலி) அவர்கள் அளித்த வாக்குறுதி....
"அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் எலியா நகரத்தின் மக்களில் நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், தேவாலயங்களுக்கும், சிலுவைகளுக்கும், அவர்கள் மதத்தினுடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கின்றேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவை அழிக்கப்படவும் மாட்டாது. இந்நகரில் வாழும் குடிமக்கள் அணியும் சிலுவைகளும், உடைமைகளும் அழிக்கப்பட மாட்டாது. அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் ஏற்படாது"என்று உடன்படிக்கை செய்தார்கள்.
இதற்கு மாறாக இஸ்லாமை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்கா தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. இஸ்லாத்தின் மீது விஷம கருத்துக்களை பரப்புவதிலும், இஸ்லாமியர்களுக்கு துன்பம் கொடுப்பதில் இன்பம் காணுவதிலும் முதல் நாடு அமெரிக்காதான்.
ஆனால் எங்கு இஸ்லாத்திற்கு எதிராண அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் அளவுக்கு அதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீப்போல் பரவும்.
செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடம் ஏற்பட்டது. அதற்குப்பிறகு தான் அவர்கள் இஸ்லாத்தை திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமாண புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தண. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளண. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றண என்ற அமெரிக்க செய்தி ஊடகமாண CNN குறிப்பிடுகிறது.2000-ஆம் ஆண்டில் 10 இலட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 இலட்சமாக அதிகரித்துள்ளது.
(ASARB) என்பதின் உறுப்பிணர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்::இஸ்லாத்தை வெட்டுவதற்கு அது வாழை மரம் அல்ல... அது ஆலமரம்.....வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருக்கும். நீ 50 ஜ வெட்டினால் 500 ஆக வளரும்.
அதே போல் ஒருவன் இஸ்லாமை விட்டு வெளியே செல்கிறான் என்றால் அவன் செல்ல வில்லை...அவனை இஸ்லாம் தூக்கி எறிந்து விட்டது என்று தான் அர்த்தமாகும்..
தீயவர்களை இஸ்லாம் நீக்கிவிடும்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள் (நூல் : புகாரி (1883)
இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் தனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாக அந்த கிராமவாசி எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்துவிட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார். மதம் மாறிவிட்ட இவரை ஏன் நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? என்றால் இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்பதை "மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்கள் மட்டும் வைத்திருக்கும் " என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.
ஆகவே இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறுவதாலோ, இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரம் செய்வதாலோ, இஸ்லாமிய அழைப்பு பணிகளை முடக்குவதாலோ, இஸ்லாமிய கலாச்சாரத்தை அழிப்பதாலோ இஸ்லாத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுபடுத்த முடியாது...
No comments:
Post a Comment