Wednesday, 30 March 2022

ஜும்ஆ பயான் 01/04/2022

 தலைப்பு:

திருக்குர்ஆனை ஒதுவோம்.

__________________________________________

மக்களிடம் ஒரு காலம் வரும்.  அப்போது சிலந்தி கூடு கட்டுமளவிற்கு (நீண்ட காலம்) குர்ஆனைப் (பெட்டிக்குள்) பூட்டியே வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் பயன் பெற மாட்டார்கள். (ளஹ்ஹாக் (ரஹ்)

📚 ஜாமிஉ பயானில் இல்மி  2/3201

_________________________________________
_________________________________________

அல்லாஹுதஆலா புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் மீது நோன்பை கடமையாக்கியிருப்பது, இம்மாதத்தில் இறைமறை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதற்கு நன்றியை வெளிப்படுத்துவதற்கே ஆகும்.

இறைமறையாம் குர்ஆன், மாந்தர்களுக்கு நேர்வழிக்காட்டிட இறைவன் அருளியப் பெரும் பாக்கியமாகும். அதனால் தான் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம், மற்ற மாதங்களை காட்டிலும் சிறப்புவாய்ந்ததாக உள்ளது.

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்குர்ஆன் : 2:185)

திருமறையும்,ரமலான் மாதமும் ஒவ்வொன்றுமே தனிச்சிறப்புகள் வாய்ந்தவைகள் தாம், அவ்விரண்டும் ஒன்று சேரும் போது எல்லையற்ற சிறப்புகளை அடைகின்றன.அதனால் தான் ரமலானில் குர்ஆன் அதிகமாக ஓதப்படுகின்றது.

நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்தில் வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை)அவர்களிடம் முழு குர்ஆனையும் ஓதிக்காட்டுவார்கள்.ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதுதலில் ஈடுப்பாடுவார்கள்.

குர்ஆனின் சிபாரிசு.

ரமலான்,குர்ஆன் இரண்டிற்குமுள்ள ஒற்றுமை,இவை இரண்டுமே கியாமத் நாளில் சிபாரிசு செய்யும்.

ورد عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: « الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ ، قَالَ: «فَيُشَفَّعَانِ».رواه أحمد

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்; 

மறுமை நாளில் நோன்பும்,குர்ஆனும் அடியானுக்காக சிபாரிசுச் செய்யும்.

நோன்பு கூறும்"எத்தனையோ தினங்கள் இவனை பகலில் உணவையும்,மனோ இச்சையையும் விட்டும் நான் தடுத்திருக்கிறேன்.எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்"

குர்ஆன் கூறும் "நான் இவனை இரவு உறங்குவதை விட்டும் தடுத்திருக்கிறேன்.எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்"

அப்போது அவ்விரண்டின் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.(நூல்;அஹ்மத்)

ஆம் குர்ஆனோடு தொடர்புள்ள எல்லாவற்றையும் அல்லாஹ் சிறப்பாக்கிவைத்துவிடுகின்றான்.

குர்ஆன் இறங்கிய ரமலான் மற்ற மாதங்களை விடவும் சிறப்பையும்,

குர்ஆன் இறங்கிய ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலதுல் கத்ர் இரவாகவும்.

குர்ஆனை சுமந்து வந்த வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை)அவர்கள் மற்ற மலக்குமார்களை விடவும் சிறந்த மலக்கு ஆகிறார்.

குர்ஆனை பெற்றுக்கொண்ட நம் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் நபிமார்களில் சிறந்த நபியாகிறார்கள்.

குர்ஆன் இறங்கிய காலம் காலங்களில் சிறந்த காலமாகின்றது.

குர்ஆனை பெற்ற முதல் தலைமுறையினர் "ஸஹாபா"எனும் சிறப்பை பெறுகின்றனர்.

குர்ஆன் வழங்கப்பெற்ற இந்த உம்மத்,சமுதாயங்களில் சிறந்த சமுதாயமாகின்றது.

குர்ஆனை கற்போர்,கற்பிப்போர் என எவரெல்லாம் குர்ஆனோடு தொடர்பில் இருக்கின்றனரோ அனைவரும் சிறப்பை பெறுகின்றனர்.

திருமறை குர்ஆனின் மகத்துவத்தை விளங்க, இது இறைவனின் வார்த்தைகள்.இறைத்தன்மை என்பதே போதுமானதாகும்.

எதார்த்தத்தில் உலகில் சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படும் கஃபதுல்லாஹ்,நபிமார்கள்,மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷ்,குர்ஸீ,சுவனம்,லவ்ஹு எனும் ஏடு,கலம் எனும் எழுதுகோல்,அல்லாஹ்விற்கு நெருக்கமான மலக்குமார்கள்,இப்படி சிறப்புவாய்ந்தவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் படைப்பினங்களாகும்.

ஆனால் குர்ஆன் ஒரு படைப்போ,தனி ஒரு பொருளோ அல்ல.அது இறைவனின் தனித்துமான தன்மை,அது அவனோடு என்றுமே நிலைத்திருக்கும்.

இந்த உன்னதமான வேதத்தை தான் அல்லாஹ் தன் நேசத்திற்குறிய நபி முஹம்மதுﷺஅவர்களிடம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டிட அருளாக வழங்கினான்.  


ரமலான் மாதத்தில் நபியும் குர்ஆனும்.

நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 6)


மனைவியின் மடியில் குர்ஆன்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹ் புகாரி 297)


எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வேதம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.                      என் தாய் தந்தையர் எனக்கு விபரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் இருந்ததில்லை. பின்னர் ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூ பக்ரு அவர்களுக்குத் தோன்றியபோது தம் வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக் கொண்டுமிருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும் குழந்தைகளும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூ பக்ரு மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும்போது அவரால் தம் கண்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.            (ஸஹீஹ் புகாரி 476)


குர்ஆன் ஓதாதவனின் நிலை.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.'  அனஸ்(ரலி) அறிவித்தார்.                   ஸஹீஹ் புகாரி (1338)


எச்சரிக்கை செய்யப்பட்ட கூட்டம்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 

அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி(ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே - ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களைவிட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (3344)

குர்ஆனால் சிறியவர்களுக்கு கிடைத்த அந்தஸ்து.

 அம்ர் இப்னு சலிமா(ரலி) அறிவித்தார். 

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், 'மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், 'அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்... கூறுகிறார்' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், 'அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)' என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, 'அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், 'உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.                (ஸஹீஹ் புகாரி (4302)


நாயகத்தின் கண்ணீர்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்' என்று கூறினார்கள். நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு 'அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'நிறுத்துங்கள்' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு 'அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்போது நபி(ஸல்) அவர்கள், 'நிறுத்துங்கள்' என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.           (ஸஹீஹ் புகாரி (4582)

திலாவத்تلاوت & கிராஅத் قرأت

கிராஅத்,திலாவத் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

கிராஅத் قرأت என்றால் 

”جمع الحروف“ یا ”ضم الکلمات بعضھا الی بعض“

எழுத்துக்களின் தொகுப்பு,அல்லது வாக்கியங்கள் சிலதை சிலவற்றோடு சேர்ப்பதாகும்.கருத்தை சிந்திப்பதோ அல்லது அதன் படி அமல் செய்வதோ நோக்கமாக இருக்காது.

திலாவத் تلاوت என்றால் கருத்தை சிந்திப்பதும்,அதன் படி அமல் செய்வதும், நோக்கமாக இருக்கும்.

இமாம் ராகிப் (ரஹ்)அவர்கள் திலாவத்திற்கு கூறும் விளக்கம்:

والتلاوة تختصُّ باِتِّبَاعِ کُتُبِ اللہِ المنزلةِ تارةً بالقرأةِ وتارةً بالارتسام

திலாவத் என்கிற பதம் குர்ஆன் ஓதுதலுக்கு மாத்திரம் பயன்ப்படுத்தப்படும்,

திலாவத் என்றால் اتباعபின்பற்றுதல் என்று பொருளாகும்,சில சமயம் கிராஅத்தையும்,சில சமயம் அதன் படி அமல் செய்வதையும் பின்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளப்படும். 

இறைவேதமான குர்ஆனை    ஒதியதன் படி அமல் செய்வது வாஜிப் என்பதால் திலாவத் என்கிற பதத்தை குர்ஆனுக்கு மட்டும் பயன் படுத்தப்படும். 

கிராஅத் அப்படியல்ல அதை எல்லாவற்றிற்கும் சொல்லலாம்.


திலாவதே குர்ஆனின் முக்கியத்துவம்.

1)அல்லாஹுதஆலா இறுதி தூதர் நம் கண்மணி நாயகம்ﷺஅவர்களை அனுப்பியதன் நோக்கத்தை திருமறையில் குறிப்பிடுகையில்,முதல் முக்கிய கடமையாக تلاوتِ قرآن குர்ஆன் திலாவதை கூறுகிறான்.

2)செய்யதுனா இப்ராஹீம் (அலை)அவர்கள் இந்த இஸ்லாமிய சமூகத்திற்கும்,அந்த சமூகத்திற்கு சிறந்த நபிக்காக துஆ செய்யும் போதும்,நபியின் முதல் முக்கிய கடமையாக திலாவதை கேட்கிறார்கள்.

3)திலாவதே குர்ஆன் அல்லாஹுதஆலாவிற்கு விருப்பமான அமலாகும்.

4)கண்மணி நாயகம்ﷺஅவர்களின் விருப்பமான அமலாகவும்,அனைத்து ஸஹாபாப்பெருமக்களும் விரும்பி ஈடுப்படக்கூடிய அமலாகவும் திலாவதே குர்ஆன் உள்ளது.

5)அல்லாஹ் அடியார்களை குர்ஆன் ஓத பணிக்கின்றான்.குர்ஆனை ஓதுபவருக்கு சிறப்பைபையும்,அபரிமிதமான நன்மைகளையும் வழங்கிவிடுகின்றான்.


துஆ,திக்ரை விடவும் சிறந்த அமல்.

அமல்கள் அனைத்தையும் விட சிறந்த அமல் குர்ஆன் ஓதுவதே என பல் வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.

سُئل صلى الله عليه وسلَّم عن أفضل عبادة يتقرب بها المؤمن إلى الله؟ فقال صلى الله عليه وسلَّم:

"أَفْضَلُ عُبَادَةِ أُمَّتِي قِرَاءَةُ الْقُرْآنِ" (البيهقي عن النعمان بن           البشير)

ஒரு முஃமினை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைக்கும் வணக்கங்களில் ஆக சிறந்தது எது? என நாயகம்ﷺஅவர்களிடம்  வினவப்பட்டது.

அதற்கு கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்;எனது உம்மத்தில் வணக்கங்களில் ஆகச் சிறந்தது,குர்ஆன் ஓதுவதாகும்.            . அறிவிப்பவர்:நுஃமான் இப்னு பஷீர் (ரலி)அவர்கள் (நூல்:பைஹகீ)

திக்ரின் சிறப்புகளை கூறும் ஹதீஸ்களில் திக்ரு எல்லா அமல்களை விட சிறந்தது எனவும்,ஸலவாத்தின் சிறப்புகளை கூறும் போது ஸலவாத்து சிறந்தது எனவும்,துஆவை கூறும் போது துஆ சிறந்தது எனவும் ஹதிஸ்களில் வருகின்றன.      

اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ,

துஆ அதுவே வணக்கமாகும்.

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَيْسَ شَيئٌ أَکْرَمَ عَلَی اللهِ تَعَالَی مِنَ الدُّعَاءِ۔ (رَوَاهُ التِّرْمِذِيُّ

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹுதஆலாவிடம் துஆவை விட மிகச் சங்கையான விஷயம் வேறெதுவுமில்லை.

ஆக குர்ஆன் ஓதுதல்,திக்ரு,ஸலவாத்து,துஆ இந்நான்கில் முன்னுரிமை எதற்கு தரவேண்டும் என்பதில் உலமாக்களின் தேர்வு குர்ஆன் ஓதுவதற்கே ஆகும்.

இதற்கு ஆதாரமாக இமாம் நவவீ (ரஹ்)அவர்கள் ஒரு ஹதிஸே குதுஸியைக் கூறுகிறார்கள்:

 وعن ابي سعيد قال : قال رسول اللہ صلی اللہ علیہ وسلم: یقول الرب تبارک وتعالیٰ:مَنْ شَغَلَهُ الْقُرْآنُ عَنْ ذِكْرِي وَمَسْأَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِي السَّائِلِينَ  وفضل کلام اللہ علی سائر الکلام کفضل اللہ علی خلقہ ): رواه الترمذي (2926) ، والدارمي (3356)

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹுதஆலா கூறுகின்றான் "எவர் என்னை திக்ரு செய்வது இன்னும் துஆ செய்வதை விட்டும் குர்ஆன் ஓதுதலில் ஈடுப்படுகின்றாரோ அவருக்கு கேட்போருக்கு வழங்குவதைக் காட்டிலும் மிகச் சிறப்பானதை நான் வழங்கிடுவேன்".

படைப்பினங்களை விட அல்லாஹ் சிறந்தவனாக இருப்பதை போல எல்லா வார்த்தைகளை விட அல்லாஹ்வின் வார்த்தைகள் சிறப்பானதாகும்.

(அறிவிப்பவர்:அபு ஸஈது அல் குத்ரீ (ரலி)அவர்கள் நூல்:திர்மிதீ)

இந்த ஹதீஸில் திக்ரு,ஸலவாத்து,துஆ இவற்றை விட குர்ஆன் ஓதுவதே சிறப்பானது என்பது தெளிவாகின்றது.

“ قال صاحب ”فتح العلام“: الاشتغالُ بھا افضلُ من الاشتغالِ بذکرِ لم یَخُصَّ بمحلٍ أو وقتٍ معینٍ فانْ خُصَّ بِہ بأن وَرَدَ الشرع بہ فیہ فالاشتغالُ بہ افضلُ، مثلاً الصلاة علی النبی صلی اللہ علیہ وسلم طَلَبَتْ لیلةَ الجمعة فالاشتغال بھا افضلُ من الاشتغال بقرأة لم تطلب لیلة الجمعة․․ ولو تعارضا خاصًّا ․․․ روعی الأقلُّ وقوعاً(۱۰) 

ஆனால் அந்தந்த அமல்களுளுக்கான பிரத்யேகமான வேளைகளில் அந்தந்த அமல்களில் ஈடுப்படுவதே சிறப்பானதாகும்.

குர்ஆனை பார்த்து ஓதுவதின் சிறப்பு.

குர்ஆனை மனனமாக (பார்க்காமல்)ஓதுவதை விட பார்த்து ஓதுவது சிறப்பனது.காரணம் குர்ஆனை பார்ப்பதே இபாதத் ஆகும்.

பார்த்து ஒதும் போது பார்ப்பது,ஓதுவது இந்த இரண்டு நன்மைகளும் கிடைக்கின்றன.

 النَّظْرَ فی المصحفِ عبادةٌ مطلوبةٌ فتجتمعُ القرأةُ والنظرُ

மேலும் குர்ஆன் பிரதியை கரங்களில் எடுப்பது,அதனை சுமப்பதன் நன்மைகளும் கிடைக்கின்றன.

இமாமுனா கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்

قرأةُ القرآن مِنَ المصاحِفِ افضلُ اِذْ یَزِیْدُ فی العملِ النظرُ وتأملُ المصحف وحَمْلُہ فیزیدُ الأجرُ

 குர்ஆனை  பிரதியில் (பார்த்து) ஓதுவது மிகச்சிறந்தது காரணம் பார்ப்பது,குர்ஆனை சிந்திப்பது,அதனை சுமப்பது என அமல்களில் அதிகம் இருக்கின்றது.எனவே கூலி அதிகம் கிடைக்கும்.

ஒரு அறிவிப்பில்:குர்ஆனை ப்பார்த்து ஓதுவதன் சிறப்பு வெறுமனே நாவால் ஓதுவதை காட்டிலும் சிறப்பானதாகும், அது நஃபிலை விட ஃபர்ளின் சிறப்பை போன்றதாகும் என வந்துள்ளது.

இமாமுனா கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:ஸஹாபாக்கள் எந்த ஒரு நாளும் குர்ஆன் பிரதியை பார்க்காமல் கழிவதை வெறுக்கக்கூடியவார்களாக இருந்தார்கள்.

 ویکرہونَ اَنْ یخرج یومٌ ولم ینظروا فی المصحف

அதிகமாக குர்ஆன் ஓதவதின் சிறப்பு.

குர்ஆனுக்கு செலுத்தக்கூடிய கடமைகளில் மிக முக்கியமானது ஓதுவதாகும்.

குர்ஆன் ஓதுவது திக்ருகளில் சிறப்பானது.

فقال صلى الله عليه وسلَّم:

"أَفْضَلُ عُبَادَةِ أُمَّتِي قِرَاءَةُ الْقُرْآنِ"

(البيهقي عن النعمان بن البشير)

அதற்கு கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னிர்கள்;எனது உம்மத்தில் வணக்கங்களில் ஆகச் சிறந்தது,குர்ஆன் ஓதுவதாகும்.

(அறிவிப்பவர்:நுஃமான் இப்னு பஷீர் (ரலி)அவர்கள் )

அல்லாஹ்தஆலா இரவு,பகல் பாராமல் குர்ஆன் ஓதுபவர்களை புகழ்ந்துக்கூறுகின்றான்.நாயகம் (ஸல்)அவர்கள் அத்தகையோருக்கு துஆ செய்கிறார்கள்.

وارزقنی تلاوتَہ اناءَ اللیلِ واناءَ النھار

அறிஞப் பெருமக்களின் கூற்று:

یُستحبُّ الاکثارُ مِنْ قرأةِ القرآنِ وتلاوتِہ

குர்ஆன் ஒதுவதை அதிகரிப்பது விரும்பதக்கதாகும். 

குர்ஆனை அதிகப்படியாக ஓதுவதுடனே தஜ்வீதோடும்,தர்த்திலோடும் ஓதுவதற்கு முயற்சிக்க வேண்டும்.குர்ஆன் எப்படி இறக்கியருளப்பெற்றதோ அதே அமைப்பில் ஓதுவதே சிறந்ததாகும்.

لَاَن أقرأ البقرةَ وآل عمران أرتِّلُھما وأتدبَّرُھما أحبُّ اِلیَّ مِن اَن اقرأ القرآنَ کلَّہ ھذرمة

இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:பகரா,ஆலஇம்ரான் இவ்விரண்டு சூராக்களை தர்த்தீலாகவும்,சிந்தித்தும் நான் ஓதுவது,குர்ஆன் முழுவதையும் வேகவேகமாக ஓதிமுடிப்பதை காட்டிலும் எனக்கு விருப்பமானதாகும்.

وعن عبيدة المليكي وكانت له صحبة قال : قال رسول الله - صلى الله عليه وسلم - ( يا أهل القرآن لا تتوسدوا القرآن واتلوه حق تلاوته من آناء الليل والنهار ، وأفشوه وتغنوه وتدبروا ما فيه لعلكم تفلحون ، ولا تعجلوا ثوابه فإن له ثوابا ) رواه البيهقي في شعب الإيمان .

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்: "குர்ஆன் உடையவர்களே!, நீங்கள் (குர்ஆனை) தலையணையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்.  இரவு இன்னும் பகலின் இரு ஓரங்களில் அதனை ஓத வேண்டிய முறைப்படி ஓதவும், அதை (மக்களிடம்)பரப்பவும், ராகமாக ஓதவும், அதில் உள்ள வற்றை(கருத்தை) சிந்திக்கவும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், அதற்கு வெகுமதி அளிக்க அவசரப்பட வேண்டாம், ஏனென்றால் அதற்கு நிச்சயம் ஒரு வெகுமதி உண்டு ."(நூல்:பைஹகீ)


கருத்தை விளங்காமல்  குர்ஆன் ஓதுவதும் நன்மையானதே...

குர்ஆனுக்குறிய தனிச்சிறப்பு,அதனை விளங்காமல் ஓதினாலும் நன்மையாகும்,இச்சிறப்பு உலகில் வேறெந்த வேதத்திற்கோ,நூலுக்கோ கிடையாது.

இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:குர்ஆனை விளங்கி ஓதுபவருக்கு,இருபது நன்மைகள் கிடைக்கும்.

குர்ஆனை விளங்காமல் ஓதுபருக்கு பத்து நன்மைகள் கிடைக்கும்.

فعن عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قال: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ ﴿الم﴾ حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ» أخرجه الترمذي

 கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னிர்கள்; எவர் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுவாரோ,அதனால்  அவருக்கு ஒரு நன்மை உண்டு.ஒரு நன்மை என்றால் அது போன்று பத்து மடங்காகும்.

அலிஃப்,லாம்,மீம் الم இதனை நான் ஒரு எழுத்து என்று சொல்மாட்டேன்.அலிஃப்أَلِفٌ  ஒரு எழுத்தாகும்,லாம் لَامٌ ஒரு எழுத்தாகும்,மீம் مِيمٌ ஒரு எழுத்தாகும்.

(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் நூல்:திர்மிதீ)

திருமறை குர்ஆனில் சில சூராக்கள் الم இது போன்ற எழுத்துக்களில் துவங்கும்,அதற்கு (”حروف مقطعات“)"ஹுரூஃபே முகத்தஆத்" எனறு சொல்லப்படும்,அதன் விளக்கம் அல்லாஹ்வை தவிர வேறுயாருக்கும் தெரியாது.

அந்த எழுத்துக்களுக்கும் நன்மை கிடைக்கும் என நபி (ஸல்)அவர்கள் கூறியிப்பது,அர்த்தம் விளங்காமல் குர்ஆன் ஓதினால் நன்மை கிடைக்கும் என்பதனை  உறுதிசெய்கின்றது.

ஆக குர்ஆனை எப்படி ஓதினாலும் நன்மை கிடைக்கும்,ஒளு இல்லாமல் ஓதலாம்,பார்க்காமல் ஓதலாம், எல்லாவற்றிற்கும் தனித்தனி நன்மை உண்டு.

இமாமுனா கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:தொழுகையில் குர்ஆனை நின்றநிலையில்  ஓதினால் நூறு நன்மைகள் கிடைக்கும்,அமர்ந்து தொழுபர் ஓதினால் ஐம்பது நன்மைகள் கிடைக்கும்.தொழுகையில் இல்லாமல் உளுவுடன் ஓதினால் இருபத்தைந்து நன்மைகள் கிடைக்கும்.ஒளு இல்லாமல் ஓதுபவருக்கு பத்து நன்மைகள் கிடைக்கும்.

அல்லாமா இப்னு ஜவ்ஸீ (ரஹ்)அவர்கள் தனது ”مناقب احمد بن حنبل“என்ற இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்களின் சிறப்புக்களை கூறும் கிதாபில், இமாம் அவர்களின் ஒரு கனவை கூறுகிறார்கள்;இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் கனவில் இறைவனை காணுகிறார்கள்,இமாம் அவர்கள் இறைவனிடம் கேட்கிறார்கள் "ரப்பே!உன் நெருக்கத்தை விரும்புபவர்களுக்கு உன் நெருக்கத்தை பெற்றுத்தரும் அமல்களில் உனக்கு உவப்பான அமல் எது?

அல்லாஹுதஆலா பதில் கூறினான். "அஹ்மதே! எனது கலாம்(குர்ஆனின் வார்த்தைகளை ஓதுவதே என் நெருக்கத்தை பெற எனக்கு விருப்பமான அமல்)

மீண்டும் இமாம் அவர்கள் கேட்டடார்கள்:( இச்சிறப்பு யாருக்கு கிடைக்கும்?)குர்ஆனை விளங்கி ஓதுபவருக்கா?அல்லது விளங்காமல் ஓதுபவருக்கா?

அதற்கு அல்லாஹ் "விளங்கி ஓதினாலும் அல்லது விளங்காமல் ஓதினாலும் சரியே! "என்று கூறினான்.(இஹ்யா உலூமுத்தீன்)

கல்வி ஞானம் அதிகரிக்க...

عن عبدالله بن مسعود رضي الله عنه أنه قال:

"من أراد العلم فعليه بالقرآن فإن فيه خبر الأولين والآخرين"

இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் சொன்னார்கள்;எவர் கல்வி ஞானத்தை நாடுகிறாரோ,அவர் குர்ஆனை பற்றிப்பிடிக்கட்டும்.அதிலே முன்னோர்,பின்னோரின் செய்தி இருகின்றது.

வீட்டில் நூரானிய்யத் மற்றும் (பரகத்)அபிவிருத்தி  ஏற்பட...

  عنأَنَسٍ ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ):(نَوِّرُوا مَنَازِلَكُمْ بِالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ

علم اور

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னிர்கள்;தொழுகை மற்றும் குர்ஆன் ஓதுவதைக் கொண்டு உங்கள் இல்லங்களை ஒளிப்பொருந்தியதாக ஆக்குங்கள்.                (அறிவிப்பவர்:ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் )


மரண வேதனை இலகுவாக...

قَالَ رَسُولُ اللهِ (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ):

ما منْ ميتٍ يموتُ، فيُقرأُ عندهُ سورةُ ( يس )، إلا هوَّنَ اللهُ عز وجل عليهِ .

الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني 

ஷைதானின் தீங்கை விட்டும் பாதுகாப்புப் பெற...

قَالَ رَسُولُ اللهِ (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ):مَن یقرأ القرآنَ لا یزالُ فی حِرَزٍ وحِصْن(۴۰)۔   الراوي :حضرت علی مرتضیٰ


அனைத்து நோய்களுக்கும் மருந்து.

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் 

(படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.             (அல்குர்ஆன் : 17:82)


குர்ஆன் ஓதுவதினால் கிடைக்கும் பலாபலன்களில் சில...

1)நன்மை,நற்கூலி

2)பாவமீட்சி

3)இறையருள்,ஸகீனா எனும் அமைதி

4)மறுமையில் நபிமார்கள்,சித்தீகீன்களோடு எழுப்பப்படுதல்

5)நரகம் செல்ல தகுதியானவருக்கு சிபாரிசு

6)சுவனத்தில் சேர்க்கும்

7)நரகை விட்டும் காக்கும்

8)உள்ளத்தை உயிர்ப்பிக்கும்

9)உள்ளத்தை ஒளிப்பொருந்தியதாக்கும்

10)கல்வி ஞானம்

11)நினைவாற்றல்

12)போதுமென்ற மனம்

13)ஷைதானை விட்டும் பாதுகாப்பு

14)வீட்டில் கைரு,பரகத் ஏற்படும்

15)சோர்வு நீங்கி,உற்சாகம் பிறக்கும்

16)உள்ளத்தில் நிம்மதி உண்டாகும்

17)ஈமானில் உத்வேகம்

18)மரணவேளையில் இறையுதவி

19)உடல் சார்ந்த நோய்களை விட்டும் நிவாரணம்

20)ஆத்மார்த்தமான நோய்களுக்கான மருந்து

21)சிபாரிசுشفاعت செய்வதன் உரிமை

22)நல்வாழ்வு

23)கலிமாவோடு மரணம்

24)வேதனையை விட்டும் பாதுகாப்பு

25)நன்மையின் எட்டை (அஃமால் நாமாவை)கணக்கச் செய்யும்

26)அச்சநாளில் நிம்மதி

27)கண்களின் குளிர்ச்சி

28)அச்சம்,கவலையை நீக்கும்

29)மஹ்ஷர் வெளியில் நிழல்

30)இம்மை,மறுமையின் தேவைகளை நிவர்த்திச்செய்யும்

31)வேதனையை இலகுவாக்கும்

32)அல்லாஹ்வின் பிரத்யேக உதவியை பெற்றுத்தரும்

33)தடுமாறும் நாளில் நேர்வழிக்காட்டும்

34)பயணத்தில் இறையுதவியை பெற்றுத்தரும்

35)ஜின்னின் தீங்கு மற்றும் கண்ணேறை விட்டும் பாதுகாக்கும்

36)வீட்டில் அபிவிருத்தி கிடைக்கும்

37)இறை சிந்தனையை உண்டாக்கும்

38)இறைவனின் திருப்பொருத்தை பெற்றுத்தரும்.


அல்லாஹுதஆலா அருள்மறையாம் திருமறை குர்ஆனை அனுதினமும் ஓதும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக!

எதிர்வரும் ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதும் வாய்ப்பை நல்கிடுவானாக!ஆமீன்..


வெளியீடு :

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Friday, 18 March 2022

பராஅத் பயான் 18/03/2022.

 தலைப்பு:

பாக்கியம் நிறைந்த பராஅத் இரவு 2022.

 புனிதம் மிக்க ஷஃபான் மாதத்தின் பாக்கியங்கள் நிறைந்த இரவே "ஷபே பராஅத்"  ஆகும்.

   ஷப் شب என்றால் ஃபார்ஸி மொழியில் இரவு என்றுப் பொருள்.

பராஅத் برأتஎன்றால் "விடுதலைப் பெறுவது""விடுதலை தருவது"என்று பொருளாகும்.

இப்புனித இரவிலே அல்லாஹுதஆலா ஏராளமான முஸ்லிம்களுக்கு நரகவிடுதலை அளிக்கின்றான் என்பதாலும், இன்னும் இவ்விரவிலே தவ்பா செய்யக்கூடடிய முஸ்லீம்களுக்கு பாவமீட்சி வழங்கப்படுவதாலும் இந்த இரவுக்கு برأت பராஅத் என்று பெயராகும்.இன்னும் لیلتہ المبارکہ பரகத் பொருந்திய இரவு என்றும், விதி நிர்ணையிக்கப்படுவதால்    لیلتہ الصکஎன்றும்,அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குவதால் لیلتہ الرحمتہ என்றும் பெயர்கள் உள்ளன.

ஷஃபான் மாதத்தை பற்றி  ஷைகுனா அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்)

இம் மாதத்தில் ஒரு மனிதன் தன் பாவத்தை நினைத்து வருந்தி நல் அமல்கள் செய்தால் இந்த 10 தன்மை அந்த மனிதனிடம் ஏற்படும்.

1) رقة மன இலகள்.

மனிதனின் உள்ளம் கடினமானதாக இருக்கக் கூடாது. மாறாக ஒரு முஃமினின் உள்ளம் இலகியதாகவும், பாசமுள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டும் அது இந்த மாதத்திலே கிடைக்க பெறுகிறது.

2) اللين فى الخلق குணத்தில் மென்மை

குணத்திலே மென்மையான தன்மை ஏற்படுவதற்கும் இம்மாதத்தின் அமல்கள் காரணமாக உள்ளன.

3) القوة في الطاعة  வழிபாட்டில் உறுதி.

வழிப்படுவதிலே, வணக்கங்கள் செய்வதிலே சக்திகள் பிறக்கின்றது.

4) الصاخة في النفس ஆன்மாவில் மென்மை.

நப்ஸ் என்று சொல்லப்படும் ஆன்மாவிலே ஒரு மெல்லிய தான தன்மை மிருதுவான தன்னம மனிதனுக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அந்த நஃப்ஸ் நல்ல அமல்கள்  செய்வதற்கு ஊக்க முடையதாக ஆகிறது.

5) السقاوة في العمل 

அமலிலே தெளிவான நிலை ஏற்படுகிறது.

6)الحركة في الخير

 நன்மையான செயல்களிலே ஈடுபடுதல். ஆர்வமாக அந்த காரியங்களை செய்தல் ஏற்படும்.

7)الركوبة في العمل

 தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தி கண்ணீர் வடிக்கும் நிலை.கண்களிலே ஈரம் கசிந்திருப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

கண்களில் கண்ணீர் கசியும் தன்னம அல்லாஹ்வின் மீது இவனுக்கு பயம் உள்ளது என்பதற்கு அடையாளமாகும்.

அல்லாஹ்வின் பயம், ஆகிரத்தின் பயம், கப்ரின் பயம், மவ்த்தின் பயம், தன் பாவங்களை பற்றியுள்ள பயம் ஒரு மனிதனுக்கு இருந்தால் எப்போதுமே அவனின் கண்கள் கசிந்து கொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் அதிகம் கவலைப் படுவர்களாக இருந்தார்கள்.கவலை என்றால் சோகமான முகமுடையவர்களாக இருந்தார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக மனக்கவலை அவர்களுக்கு அதிகமாக இருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் நேர்வழி பெற வேண்டும் என கவலைப்பட்டார்கள்.கண்ணீர்விட்டார்கள்.

ஒரே ஒரு சொட்டு கண்ணீர் நரக நெருப்பை அனைத்து விடும். இந்த உலகத்தில் உள்ள கடல் நீரை கொட்டினாலும் அனையாத நரக நெருப்பு ஒரு சொட்டு கண்ணீரால் அணைந்து விடும்./

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்விற்கு பிடித்தமான கண்கள் இரண்டு. 1) அல்லாஹ்வின் பாதையிலே விழித்திருந்த கண்.

2) தன் பாவத்தை நினைத்து நினைத்து அழுகின்ற கண்.

இந்த இரண்டு கண்களும் அல்லாஹ்விற்கு விருப்பமான கண்கள் என நபி (ஸல்) குறிப்பிடுகின்றார்கள். இந்த அழும் தன்மை இம்மாதத்தின் பரக்கத்தினால் ஏற்படுகிறது.

8) البرودة في المعاصي

பாவத்தை நினைத்து நடுங்கும் தன்மை இந்த மாதத்தின் பரக்கத்தினால் ஏற்பட்டு விடும்.

9) التواضع في الخلق

மக்களிடத்திலே பணிவோடு வாழ்வதும், பணிவோடு உறவாடுவதும் இந்த மாத பரக்கத்தினால் ஏற்படும்.

10)الحياة عند السماع الحق

 உண்மையை சத்தியத்தை கேட்கக் கூடிய நேரத்திலே அந்த சத்தியத்தை தன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் தன்னம இந்த மாதத்திலே ஏற்படுகிறது.

ஆக இந்த ஷஃபான் மாதம் சிறப்பான மாதமாகும். அதிலே குறிப்பாக இந்த 15-வது நாள் இரவிலே பல அமல்களை, பல சிறப்புக்களை சொல்லியுள்ளார்கள்.

பராஅத் இரவுப் பற்றி....

ஷைகுனா ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்)அவர்கள் தங்களின் "குன்யதுத் தாலிபீன்" எனும் கிதாபில் இந்த இரவின் சிறப்பை எழுதுகிறார்கள்;

இந்த இரவு இரண்டு விதங்களில் பராஅத் எனப்படுகிறது.

ஒன்று அல்லாஹ் துர்பாக்கியவான்களுக்கு  தன்னிடமிருந்து விலக்கு அளிக்கிறான்.

மற்றொன்று அல்லாஹுதஆலா தன் நேசர்களுக்கு சிரமம்,கவலை,இழிவு போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறான்.

பூமியில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு இரண்டு ஈதுப் பெருநாட்களைப் போலவே,

வானிலுள்ள மலாயிகத்துமார்களுக்கு ஷபே பராஅத்,லைலதுல் கத்ரு ஆகிய இரவுகள் ஈதுபெருநாட்களாகும்.

முஸ்லிம்கள், பகலில் ஈது கொண்டாடுவார்கள் இரவில் உறங்குவார்கள்.

மலக்குமார்கள் தூங்குவது கிடையாது அவர்களுக்கு இரவுகளும் ஈதுகளாகும்.


 பராஅத் மன்னிப்பு வழங்கும் இரவு.

حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم  ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.

அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்: "ஒருநாள் இரவு வேளையில் நபி   ﷺ  அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான்." (நூல் :திர்மிதீ)

عن عائشة عن النبي -صلى الله عليه وسلم- قال: ((هل تدرين ما هذه الليل؟ " يعني ليلة النصف من شعبان قالت: ما فيها يا رسول الله فقال: " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم، 

நபி ﷺஅன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம்ﷺஅன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா                          ரலியல்லாஹு அன்ஹா.(நூல் மிஷ்காத் )


பராஅத் இரவின் தனிச்சிறப்புகள்.

பராஅத் இரவில் அல்லாஹ்வின் ஏராளமான ரஹ்மத்களும், நாயகம்ﷺஅவர்களின் துஆ பரகத்தும் கிடைக்கப்பெறுவதால் இவ்விரவு ஏனைய இரவுகளை காட்டிலும் மகத்துவமும்,சிறப்பும் பெறுகிறது.என்பதில் சந்தேகம் இல்லை.

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் அறிஞப்பெருமக்கள் பராஅத் இரவுக்கு பிரத்யேகமாக இரு சிறப்புகளை கூறுகிறார்கள்.

1)இந்த இரவில் அல்லாஹுதஆலாقضاء وقدر களா கத்ரில் நிர்ணையித்தவற்றை மலக்குமார்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுக்கும் பூர்வாங்கப் பணிகள் நடைபெகின்றது.

சுருக்கமாக ஒருவருடத்திற்கான பட்ஜெட் எனலாம்.

ஒருவருட பிறப்பு,இறப்பு,ரிஸ்க்,மழை, நோய்,ஆரோக்கியம் என அனைத்தும் பராஅத் இரவில் அந்தந்த மலக்குமார்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

2)இந்த இரவின் மஃரிபிலிருந்து சுப்ஹு வரை அல்லாஹ்வின் மக்ஃபிரதும்,பிரத்யேக ரஹ்மத்துகளும் இறங்குகின்றன.

قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை  கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான். 

   (அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)

அல்லாஹுதஆலா தன் அடியார்களின் மீது கருணையும்,கிருபையும் உள்ளவன். இதுப்போன்ற இரவுகளில் அடியார்களுக்கு மக்ஃபிரத்தையும்,ரஹ்மத்தையும் வாரிவழங்கிவிடுகிறான்.

அல்லாமா அப்துல் வஹ்ஹாப் ஸகஃபீ (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:

நான் ஒரு ஜனாஸாவை மூன்று ஆண்களும்,ஒரு பெண்ணும் சுமந்து செல்லக் கண்டேன்.உடனே சென்று அந்த பெண்ணிடமிருந்து நான் வாங்கி சுமந்து சென்று அடக்கம் செய்தோம். அப்பெண்ணிடம்; "இது யாருடைய ஜனாஸா எனக்கேட்டேன்.

அப்பெண் "இது என் மகனின் ஜனாஸா,அவன் பார்ப்பதற்கு அருவருப்பானத்தோற்றத்திலும்,அவனின் நடத்தை பிடிக்காததாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் யாரும் அவனின் ஜனாஸாவிற்கு வரவில்லை.ஜனாஸாவை தூக்க ஆளில்லாததால் என் உறவினர்களோடு சேர்ந்து நானும் சுமந்துவந்தேன்."என கண்ணீர் மல்கக் கூறினாள்.

அன்றிரவு நான் கனவொன்று கண்டேன். வெண்ணிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்,அவரின் முகம் பொவுர்ணமி இரவின் சந்திரனைப் போல பிரகாசமாக இருந்தது.அவர் என்னிடம் வந்து சொன்னார்"என்னை நீங்கள் அடக்கம் செய்தீர்கள் அதற்கு மிக்க நன்றி!

மக்களெல்லாம் என்னை இழிவாக கருதிய காரணத்தினால் கருணையாளன் அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உயர்ந்த அந்தஸ்தை வாழங்கிவிட்டான்" 


ஒரு ஹதிஸில்....

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:  لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي  رواه البخاري (7453)، ومسلم (2751).

நபிﷺஅவர்கள் சொன்னார்கள்:அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது, தன்னிடமுள்ள அர்ஷுக்கு மேல் எழுதினான். "நிச்சயமாக என் ரஹ்மத் (எனும் கருணை) எனது கோபத்தை முந்திவிட்டது"        (அறிவிப்பவர் :அபூஹுரைரா )               நூல் :(புகாரி,முஸ்லிம்.

قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ‌  وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌  فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ‌‏

அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால்  என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.(அல்குர்ஆன் : 7:156)

அல்லாஹ்வின் கருணையினால் தான் உலகம் இயங்குகிறது.இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளிக்கின்றான்.பாவிகளின் பிழைகளை மன்னித்தருள்கிறான்.


பராஅத் நோன்பும்,இரவு வணக்கமும்.

பராஅத் இரவில் வணக்கவழிப்பாடுகளில் கழிப்பதும்,பகல் நோன்பு நோற்பதும் முஸ்தஹப்பான அமல்களாகும்.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் ایامِ بیض எனப்படும் பிறை 13,14,15ஆகிய மூன்று தினங்கள் நோற்கக்கூடிய சுன்னத்தான மூன்று நோன்புகளை ஷஃபானில் நோற்பது மிகச்சிறப்பானதாகும்.

பராஅத் அன்று மக்ரிப் முதல் பஜ்ரு வரை மஸ்ஜிதில் இஃதிகாஃப் நிய்யதில் தங்கி அமல்கள் செய்யலாம்.தனியாக தஸ்பீஹ் தொழுகை,வாழ்நாளில் தவறிப்போன களாத்தொழுகைகளை தொழலாம்,திக்ரு,திலாவதே குர்ஆன்,அதிகமாக துஆ,மக்ஃபிரத்,தஹஜ்ஜுத் என பயனுள்ளதாக அவ்விரவை கழிக்க முயற்சிக்கலாம்.

அல்லாஹுதஆலா அவனின் அளப்பெரும் கிருபையால் நம் பிழைகளைப் பொருத்து,நல் அமல்களை செய்யும் பாக்கியத்தை தருவானாக!ஆமீன்...

Wednesday, 9 March 2022

ஜும்ஆ பயான் 11/03/2022

தலைப்பு :


பொறாமை வேண்டாம்.

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)

மனித வாழ்வில் உடல் சார்ந்த நோய்கள் சோதனைகளாக வருவதைப் போன்றே, சில உள்ளம் சார்ந்த நோய்களும் அவனை சோதனைக்குள்ளாக்கும்.பொய்,புறம், குரோதம்,பொறாமை என்பன போன்றவை உள்ளம் சார்ந்த வியாதிகளாகும்.

இவற்றில் பொறாமை எனும் வியாதி மிக கொடிய மன நோயாகும்.இது மனித உள்ளத்தை மாத்திரம் அல்ல அவனின் உடலுக்கும் கேடுவிளைவித்துவிடும்.


பொறாமை என்றால் என்ன?

அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியிருக்கக்கூடிய கல்வி,செல்வம்,அழகு,பதவி, புகழ்,சொத்து சுகங்கள் ஆகிய நிஃமத்துகளை (வளங்கள்)பார்க்கும் போது  நிகழும்" ஒரு வித வெறுப்புணர்ச்சியே பொறாமையாகும்.

செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.

இன்ன நபர் போன்று நானும் ஆக வேண்டும் என்று எண்ணினால் அது பொறாமையாக ஆகாது. இவனெல்லாம் இப்படி இருக்கிறானே? இவனுக்கு மட்டும் இப்படி பொருளாதாரம் கிடைக்கிறதே என்று வேதனை அடைவதுதான் பொறாமை. 

நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும்.

நம்மிடம் இல்லாத  ஒன்று...

நமக்கு கிடைக்காத ஒன்று...

நாம் அடைய விரும்பும் ஒன்று...

இன்னொருவரிடம் இருந்தால்...

ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும்.

அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும்.

அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும்.

பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும்.

முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்கும்.

இவை எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.

அல்லாஹ் இறை மறையில் கூறுகிறான்....

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.  திருக்குர்ஆன் (4.32)

அறிஞப்பெருமக்கள்; 

பொறாமையை நான்காக வகைப்படுத்துகிறார்கள்.

முதலாவது:

அந்த நிஃமத் பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது.அது தனக்கு கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் சரியே!

இரண்டாவது:

அந்த நிஃமத்  பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது,அது தனக்கு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.(எ.க அழகியப் பெண்,அழகான இல்லம்)  இவ்விரண்டு வகைகளும் பெரும் பாவங்களாகும்.ஹராம் ஆகும்.

மூன்றாவது:

தான் விரும்பிய ஒன்று கிடைக்காத விரக்தியில், அடுத்தவருக்குள்ள ஒரு நிஃமத் அவரிடம் இருக்கக்கூடாது என ஆசைப்படுவது.இதுவும் ஹராமாகும்

நான்காவது:

அடுத்தவருக்குள்ள நிஃமத்தை போன்றதொரு நிஃமத் தனக்க கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.அது அவரிடம் இருக்கக்கூடாது என்ற தப்பெண்ணம் இருக்காது.

இவ்வகை உலகக்காரியங்களில் மன்னிக்கப்படும்.மறுமைக்கான காரியங்களில் வரவேற்கக்கப்படும்.

பொறாமையின் துவக்கம்..

வானில் நடந்த முதல் தவறு பொறாமையினால்...

 قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
நான் உனக்கு கட்டளையிட்டிருக்க (ஆதமுக்கு) நீ பணியாமல் இருக்க உன்னை தடுத்தது எது?என்று (இறைவன்) கேட்டான். அதற்கவன் நான் அவரை விட சிறந்தவன் நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (பொறாமைப் பட்டவனாக) சொன்னான்.
(அல் குர்ஆன் 7:12)

அல்லாஹ் ஆதம்(அலை)அவர்களை படைத்த போது,மலக்குமார்களை ஆதம்(அலை)அவர்களுக்கு ஸஜ்தா செய்ய கட்டளையிட்டான்.

அப்போது இப்லீஸோ,நெருப்பால் படைக்கப்பட்ட படைப்பாகிய தனக்கு கிடைக்காத மரியாதை,மண்ணிணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு கிடைப்பாதா என ஆதம் (அலை)அவர்களின் மீது பொறாமைக்கொண்டு,அல்லாஹ்விடமே தர்கித்து,நிறந்தர சாபத்திற்கு ஆளானான்.

ஆக பொறாமை ஒருவனின் நல்ல அமல்களை அழித்து, அவனது நற்பெயர்களை கெடுத்து, இவ்வுலகிலும், மறு உலகிலும் ஈடேற்றம் பெறமுடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதனை இப்லீஸின் வரலாறு நமக்கு  காட்டுகிறத

பூமியில் பொறாமையினால் நிகழ்ந்த முதல் குற்றம் கொலை.

ஆதம் நபிக்கு ஹாபீல்-காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவர்களுக்கும் உடன் பிறந்த இரு சகோதரிகள், ஹாபிழுடன் பிறந்த சகோதரியை காபில் திருமணம் செய்ய வேண்டும். காபிலுடன் பிறந்த சகோதரியை ஹாபிழ் திருமணம் செய்ய வேண்டும். இது தான் கட்டளை, காபிழுடன் பிறந்த சகோதரி அழகாக இருந்ததால் அதை காபில் ஹாபிலுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இருவருக்கும் பகை நீண்டது, எந்த அளவுக்கு என்றால் கொலை காபில் ஆபிலை கொலை செய்யும் அளவுக்கு சென்றது. ஹாபிலை காபில் ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்து விட்டான். ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்யும் சம்பவம் தான் உலகில் முதன் முதலில் நடந்த கொலை.  ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே இந்த திருமண பிரச்சினை  பிரச்சினையாக  எழுந்தது. இதில் இறைவன் புறத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்க இருவரும்  குர்பான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது.

இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏ 

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)

فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ‌ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ‌ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ‌ ۙ‏‏‏ 

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.(அல்குர்ஆன் : 5:31)

காபில் தனது சகோதரர் ஹாபில் மீது கொண்ட பொறாமையினால்,அவரை கொலை செய்தான். இதுவே உலகில் நிகழ்ந்த முதல் கொலை குற்றம் என்கிறது திருமறை...

முதலில் கொலையை அறிமுகப்படுத்தியதின் காரணமாக இவ்வுலகில் யார் கொலை செய்தாலும் அதில் ஒரு பங்கு அவரை (காபிலை) சேரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பொறாமையின் காரணமாக யூசுஃப் நபியை கொலைசெய்ய திட்டம்.

إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُّبِينٍ

12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் – நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),

اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ

12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,

قَالَ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِن كُنتُمْ فَاعِلِينَ

12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் – அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்

பொறாமைக்காரனை அல்லாஹ் எச்சரிக்கிறான்...

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)

பொறாமை எனும் தீ

பொறாமை ஷைதானின் குணம் என்பதால் அது ஒரு விதமான உஷ்ணத்தை மனிதனில் உண்டாக்கும்.

மனிதன் கோபம் கொள்ளும் போது கூட உஷ்ணத்தை உணருகிறான்,இந்த குணங்கள் மனிதனின் உடலையும் பாதிக்கின்றன.

அதனால் தான் நபிﷺஅவர்கள் "கோபம் வந்தால் தண்ணீர் அருந்துங்கள்,அது கோபத்தை தணிக்கும்" என்றார்கள் தமிழில் பொறாமையை வயிற்றேரிச்சல் என்பார்கள்.

இதே கருத்துப்பட நபிﷺஅவர்கள் பொறாமையை நெருப்புக்கு ஒப்பாக்கி உவமை கூறியுள்ளார்கள்.

- عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: பொறாமை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்.நிச்சயமாக பொறாமை ,நெருப்பு விறகைத் தின்பதைப் போல நன்மைகளைத் தின்றுவிடும்-அல்லது காய்ந்த புல்லை நெருப்புத் தின்பது போல நன்மைகளைத் தின்றுவிடும்.(அபூ தாவூது)

 எனவே பொறாமை எனும் தீய குணம் பொறாமைக்காரனை பலகீனப்படுத்தோவதோடல்லாமல்,அல்லாஹ் ரஸுலின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்நோய்யை குணமாக்கும் மருத்துவம் நல்லெண்ணமும்,இறைநம்பிக்கையும், நல்லோர்களின் சகவாசமும் ஆகும்.                             

صحبتِ صالح ترا صالح کند 

அல்லாமா ஷைகு ஸஃதி (ரஹ்)அவர்களின் அமுத மொழி;

"நல்லோர்களின் சகவாசம் உனை நல்லவானாக்கும்"

சிறந்த மனிதன் யார்?

[عن عبدالله بن عمرو:] قيل لرسولِ اللهِ ﷺ أيُّ الناسِ أفضلُ قال كلُّ مخمومِ القلبِ صدوقِ اللسانِ قالوا صدوقُ اللسانِ نعرفُه فما مخمومُ القلبِ قال هو التقيُّ النقيُّ لا إثمَ فيه ولا بغيَ ولا غِلَّ ولا حسدَ صحيح ابن ماجه ٣٤١٦ 

நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.

யார் மீது பொறாமைப்பட வேண்டும்......(غبطة )

 عَنِ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ

لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்)      (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி-5025)

இந்த பொறாமைக்கு அரபியில் (غبطة கிப்தா) எனப்படும். கிப்தா என்றால் பிறரிடம் இருப்பது தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைக் கொள்வது. இது ஷரீஅத்தில் தடுக்கப்பட்டது அல்ல.

சுவர்க்கம் செல்ல வேண்டுமா? 

இதோ சுவர்க்க வாசியான ஒர் சஹாபியின் அற்புத நிகழ்வு....

٢- [عن أنس بن مالك:] كنّا جُلوسًا مع رسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ فقال: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهلِ الجَنَّةِ، فطَلَعَ رَجُلٌ من الأنصارِ، تَنطِفُ لحيَتُهُ من وَضوئِهِ، قد تَعَلَّقَ نَعْلَيهِ في يَدِه الشِّمالِ، فلمّا كان الغدُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ ذلك، فطَلَعَ ذلك الرَّجُلُ مثلَ المرةِ الأولى. فلمّا كان اليومُ الثالثُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ مَقالَتِهِ أيضًا، فطَلَعَ ذلك الرَّجُلُ على مِثْلِ حالِه الأولى، فلمّا قام النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ تَبِعَهُ عبدُ اللهِ بنُ عَمْرِو بنِ العاصِ فقال: إنِّي لاحَيتُ أبي فأقسَمْتُ ألّا أدخُلَ عليه ثلاثًا، فإنْ رَأيْتَ أنْ تُؤويَني إليكَ حتى تَمضيَ فَعَلتَ؟ قال: نَعَمْ. قال أنَسٌ: وكان عبدُ اللهِ يُحَدِّثُ أنَّه باتَ معه تلك اللَّياليَ الثَّلاثَ، فلم يَرَهُ يقومُ من الليلِ شيئًا، غيرَ أنَّه إذا تَعارَّ وتَقَلَّبَ على فِراشِهِ ذَكَرَ اللهَ عزَّ وجَلَّ وكبَّرَ، حتى يقومَ لصلاةِ الفجرِ. قال عبدُ اللهِ: غيرَ أني لم أَسمَعْهُ يقولُ إلّا خَيْرًا، فلمّا مَضَتِ الثلاثُ ليالٍ وكِدْتُ أنْ أحقِرَ عمَلَهُ، قلتُ: يا عبدَ اللهِ، إنِّي لم يكن بَيْني وبينَ أبي غَضَبٌ ولا هَجْرٌ ثَمَّ، ولكِنْ سَمِعتُ رسولَ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ يقولُ لكَ ثلاثَ مِرارٍ: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهْلِ الجَنَّةِ فطَلَعتَ أنتَ الثلاثَ مِرارٍ، فأرَدْتُ أنْ آويَ إليكَ لِأنظُرَ ما عَمَلُكَ، فأقتَديَ به، فلم أرَكَ تَعمَلُ كثيرَ عَمَلٍ، فما الذي بَلَغَ بكَ ما قال رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ، فقال: ما هو إلّا ما رَأيتَ. قال: فلمّا وَلَّيتُ دَعاني، فقال: ما هو إلّا ما رَأيتَ، غيرَ أنِّي لا أجِدُ في نَفْسي لِأحَدٍ من المسلمينَ غِشًّا، ولا أحسُدُ أحَدًا على خَيْرٍ أعطاهُ اللهُ إيّاهُ. فقال عبدُ اللهِ: هذه التي بَلَغَتْ بكَ، وهي التي لا نُطيقُ. وأحمد (١٢٦٩٧) 

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: 

நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை என்று கூறிவிட்டு அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார். நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் என் உள்ளத்தில் இருந்ததில்லை. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான் பொறாமை கொள்ள மாட்டேன். என்று கூறினார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.

பிறர் மீது பொறாமைப்படாமல் இருப்பதை நாம் பழகிக் கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.

பொறாமையின் விளைவுகள்.

பொறாமையினால் உள்ளத்தில் அடுத்தவர் மீது வெறுப்பு,கோபம்,குரோதம் போன்ற பாவங்கள் உண்டாகும்.

பொறாமையினால் பொறாமைக்கொள்ளப்படுபவரின் மகிழ்ச்சி துக்கத்தையும்,அவரின் துன்பம் மகிழ்ச்சியையும் தரும்.

இப்படி அடுத்தவரை கவனிப்பதால் அல்லது தன்னோடு ஒப்பிட்டு பார்ப்பாதால் வாழ்வில் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் பொறாமைக்காரான் இழந்து தவிக்க நேரிடும்.

பொறாமை மனிதனை அவதூறு பரப்புதல்,உரிமையை பறித்தல்,கொலைப் போன்ற பெரும் பாவங்களில் சேர்த்துவிடும்.

எனவே பொறாமையை தவிர்த்து இறைவனின் அன்பை பெற்று வாழும் பாக்கியத்தை இறைவனிடம் இறைஞ்சுவோமாக! ஆமின்...


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

 

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...