Wednesday, 26 October 2022

ஜும்ஆ பயான் 28/10/2022

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ 

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)

பிறப்பு..

கௌதுல் அஃழம், முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜைலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 470 ரமழான் மாதம் பிறை 1 திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் (கி. பி. 1078 - மார்ச் 19 ஆம் தேதி) ஈரான் நாட்டின்  ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.

பிறப்பின் சிறப்பு.

முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்களின் 11 வது வழித்தோன்றலில்  பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையின் பெயர் ஸைய்யது அபூஸாலிஹ் இப்னு மூஸா (ரழியல்லாஹு அன்ஹு). தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும்.

இவர்களின்  தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடையவராகவும் விளங்கினார்கள். இவர்கள் பிறக்கும் போது தாயாருக்கு வயது அறுபது. 

முஹிய்யதீன் அப்துல் காதர் ஜீைானி (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் தந்தை வழியில் ஹஸனியாகவும் தாய் வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். அதாவது  ஹஸனி என்றால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னாரின் திருப்பேரர் ஸைய்யதுனா ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வம்சாவழியிலும் ஹுஸைனி என்றால் மற்றோரு திருப்பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) அன்னாரின் வம்சாவழியில் பிறந்தவர்கள் என்பதாகும்.

இறையச்சம் உள்ள தந்தை.

தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி; ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார் ?  என்றதற்கு அந்த பெண் விளக்கம் சொன்னார் இவர் நல்ல இறையச்சம் உடையவராக இருந்தார். என் தந்தை சொன்னது உன்மைதான்.

கல்வி.......

மாகபரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பச்சிளம் பருவத்திலேயே அன்னாரின் தந்தையார் இறையடி எய்தினார்கள். தாயின் அரவணைப்பில் வளர்ந்த குதுபு நாயகம் அவர்கள். குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஆரம்பத்தில் கல்வியை தனது சொந்த ஊரான ஜீலான் நகரத்தில் கற்றார்கள்.ஆறு வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர்கள் ஏனைய மாணவர்கள் மனனம் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை ஒரே நாளில் மரணம் செய்து விடுவார்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள்.

சிறுவயதிலேயே புரட்சி.

பதினெட்டாம் வயது அடைந்த போது உயர்கல்வி கற்பதற்காக பக்தாது செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். முதலில் தம் மகனை விட்டு பிரிய மனமின்றி அழுதார்கள். ஆனாலும் அன்னாரின் இந்த முடிவை கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள். அன்னாரின் தாயார் அவர்கள். 

தந்தையார்  அபூஸாலிஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை அவர்களின் சட்டை பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.

இவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்தார்கள் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள்.

பேச்சில் ஒரு புரட்சி...

பக்தாதுக்கு வந்து அபூஸஈதில் மக்ரமீ உடைய மதரஸாவில் இணைந்தார். அவருடை ஷைகு ஜீலானி ரஹ் அவர்களின் சொல்லில் இருந்த வலிமையை அறிந்து மதரஸாவுக்கு முன்புறமாகவே ஒரு மேடை அமைத்துக் கொடுத்து அங்கிருந்து பயான் செய்யுமாறு கூறினார். 

ஆரம்பத்தில் அதை மறுத்த ஷைகு ஜீலானி ரஹ் அவர்கள் பின்னர் அவர்களுடைய கனவில் பெருமானார் (ஸல்) தோன்றி பயான் செய்யுமாறு கூறவே அங்கு பயான் செய்யத் தொடங்கினார்,ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை செவ்வாய்க் கிழமை என வாரத்திற்கு 3 நாள் பயான் செய்யத்த் தொடங்கினார். ஹிஜ்ரி 521 வது வருடம் பயான் தொடங்கியது, அந்த சொற்பொழிவுக்கு பெரும் மனிதரக்ள் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்தார்கள்.

இன்று பயான் செய்வதற்காக அறிஞர்கள் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள், அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சொற்பொழுவை கேட்பதற்காக உலகமே பக்தாதுக்கு திரண்டது.உணர்ச்சிமயமான அவரது சொற்பொழிவில் பலர் முஸ்லிம்களாயினர். ஏராளமானோ தம் தவற்றை உணர்ந்து திருந்தி நல்லவர்களானார்கள். ஒரு பெரிய மறுமலர்ச்சி மார்க்கப் புரட்சியும் ஏற்படலாயிற்று,மக்கள் அவரது சொற்பொழிவை மெய் மறந்து கேட்பார்கள்.

ஒரு நாள் தனது உரையில் அவர்கள் கூறினார்:

ﺃﻧﺖ ﻣﻌﺘﻤﺪ ﻋﻠﻴﻚ ، ﻭﻋﻠﻲ ﺍﻟﺨﻠﻖ ، ﻭﺩﻧﺎﻧﻴﺮﻙ

ﻭﺩﺭﺍﻫﻤﻚ ، ﻭﻋﻠﻲ ﺑﻴﻌﻚ ﻭﺷﺮﺋﻚ ، ﻭﻋﻠﻲ ﺳﻠﻜﺎﻥ

ﺑﻠﺪﻙ ، ﻛﻞ ﻣﻦ ﺇﻋﺘﻤﺪﺕ ﻋﻠﻴﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ ، ﻭﻛﻞ ﻣﻦ

ﺧﻔﺘﻪ ﻭﺭﺟﻮﺗﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ، ﻛﻞ ﻣﻦ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ ﺍﻟﻀﺮ

ﻭﺍﻟﻨﻔﻊ ، ﻭﻟﻢ ﺗﺮ ﺃﻥ ﺍﻟﺤﻖ ﻳﺠﺮﻱ ﺫﻟﻚ ﻋﻠﻲ ﻳﺪﻳﻪ ﻗﻬﻮ

ﺇﻟﻬﻚ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ - ﺍﻟﻤﺠﻠﺲ

நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.

இறைநேசர்களின் தலைவர்.

முஹ்யித்தீன்அப்துல் காதிர்  ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்  இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி.முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்கள். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டு நடப்பதில்முன்னோடி  உலக ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடும் மக்கள் வாழ்வதற்காகவே காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பல்வேறு ஷைகுகளின்  வழிகாட்டுதலின் படி உருவான பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா ,சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்கள். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்கள்.  கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிவுகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்கள் 50ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்கள். ஏராளமானஅற்புதங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.வழக்கம் போல அவரைப்பற்றி நமக்கு தெரியாது.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்ததால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.

அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து. 

வலி என்றால் யார்?.

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ 

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)

الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏ 

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.(அல்குர்ஆன் : 10:63)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின்  உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். புகாரி:6502

6ஆம் நூற்றாண்டின் முஜத்தித்.

அல்லாஹுத்தஆலா மனு,ஜின் வர்கத்தார்களுக்கு நேர்வழிக்காட்டிட பல காலக்கட்டங்கள்,பல்வேறு பகுதிகளுக்கு 1,24 இலட்சம் நபிமார்களை அனுப்பிவைத்தான்.

இறுதியாக வந்த கண்மணி நாயகம் ﷺஅவர்கள் காலத்தில் தீன் முழுமைப் பெற்றதால் நாயகம் ﷺஅவர்களுக்கு பிறகு நபிமார்களின் தேவை இருக்க வில்லை என்பதினால் அன்னவர்களோடு நபித்தொடர் முற்றுப்பெற்றது.

ஆனால் இம்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும், புத்துயிரூட்டும் கடமையும் மார்க்கம் கற்ற சான்றோர்களுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக மார்க்கத்தை புத்தியிரூட்ட அல்லாஹ் ஒவ்வோர்  காலக்கட்டத்திலும் அக்காலக்கட்டதிற்கேற்றார்ப்போல தன்நேசர்களான அவ்லியாக்களை தேர்ந்தெடுத்து,மக்களை நன்நெறிப்படுத்த அனுப்பிக்கொண்டே இருக்கின்றான்.

இச்செய்தியை பல நபிமொழிகளின்யின் வாயிலாக அறியமுடியும்.

روى أبو داود عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل مائة سنة من يجدد لها دينها.(مشکوٰۃشریف)

அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் துவக்கத்திலும் இம்மார்க்கத்தை புத்துயிரூட்டும் முஜத்திதை,இவ்வும்மத்திற்காக அனுப்புகின்றான்.(நூல்:மிஷ்காத்)

அல்லாஹ்வின் நல்லடியார்கள், தீனைபாதுகாக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.(நூல்:அபுதாவூத்)

மார்க்க அறிஞர்கள் (ஆலிம்கள்),நபித்துவ மழையின் ஈரநிலங்களாக இருக்கின்றனர்.(நூல்:அபுதாவூத்)

உலமாக்களின் வாழ்விற்காக மீன்கள் துஆ செய்கின்றன.(நூல்:மிஷ்காத்)

۱۸۳ - " الابدال يكونون بالشام ، وهم أربعون رجلا ، كلما مات رجل أبدل الله مكانه رجلا ، يسقى بهم الغيث ، وينتصر بهم على الأعداء ، ويصرف عن أهل الشام بهم العذاب "(مشکوۃشریف)

ஷாம் தேசத்தில் அப்தால்கள் தோன்றுவார்கள்,அவர்கள் நாற்பது நபர்களாவார்கள்.ஒருவர் மரணித்தால் அவரிடத்தில் அல்லாஹ், இன்னொருவரை மாற்றாக ஆக்குவான். அவர்களின் பொருட்டால் மழைபொழிவிக்கப்படும்.அவர்களின் பொருட்டால் எதிரிகளுக்கு பாதகமாக உதவிக்கிடைக்கும்.அவர்களின் பொருட்டால் ஷாம்வாசிகள் வேதனையை விட்டும் காக்கப்படுவர்.(நூல்:மிஷ்காத்)

عَنِ ابْنِ مَسْعُودٍ قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: «”إنَّ لِلَّهِ عَزَّ وجَلَّ في الخَلْقِ ثَلاثَمِائَةٍ، قُلُوبُهم عَلى قَلْبِ آدَمَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ أرْبَعُونَ، قُلُوبُهم عَلى قَلْبِ مُوسى عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ سَبْعَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ إبْراهِيمَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ خَمْسَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ جِبْرِيلَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ ثَلاثَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ مِيكائِيلَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ واحِدٌ قَلْبُهُ عَلى قَلْبِ إسْرافِيلَ عَلَيْهِ السَّلامُ، فَإذا ماتَ الواحِدُ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الثَّلاثَةِ، وإذا ماتَ مِنَ الثَّلاثَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الخَمْسَةِ، وإذا ماتَ مِنَ الخَمْسَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ السَّبْعَةِ، وإذا ماتَ مِنَ السَّبْعَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الأرْبَعِينَ، وإذا ماتَ مِنَ الأرْبَعِينَ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الثَّلاثِمِائَةٍ، وإذا ماتَ مِنَ الثَّلاثِمِائَةٍ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ العامَّةِ، فَبِهِمْ يُحْيِي ويُمِيتُ ؟ ويُمْطِرُ ويُنْبِتُ، ويَدْفَعُ البَلاءَ“» . قِيلَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: كَيْفَ بِهِمْ يُحْيِي ويُمِيتُ ؟ قالَ: لِأنَّهم يَسْألُونَ اللَّهَ إكْثارَ الأُمَمِ، فَيَكْثُرُونَ، ويَدْعُونَ عَلى الجَبابِرَةِ فَيُقْصَمُونَ، ويَسْتَسْقُونَ فَيُسْقَوْنَ، ويَسْألُونَ فَتُنْبِتُ لَهُمُ الأرْضُ، ويَدْعُونَ فَيُدْفَعُ بِهِمْ أنْواعُ البَلاءِ.(مرقاۃملاعلی قاری)

அல்லாஹ்விற்குறிய படைப்பில் முன்ணூறு பேர்கள்,அவர்களின் உள்ளங்கள் ஆதம் நபி(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் நாற்பது நபர்களின் உள்ளங்கள் மூஸா(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும். அவர்களில் ஏழு நபர்களின் உள்ளங்கள் இப்ராஹீம்(அலை) உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.ஐந்து நபர்களின் உள்ளங்கள் ஜிப்ரயீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் மூன்று நபர்களின் உள்ளங்கள் மீகாயீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் ஒருவரின் உள்ளம் இஸ்ராஃபீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.

ஒருவர் மரணித்தால் அவரின் இடத்தில் மூன்று நபர்களை மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.மூன்று நபர்கள் மரணிப்பார்களேயானால் ஐந்து நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.ஐந்து நபர்கள் மரணிப்பார்களேயானால் ஏழு நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.ஏழு நபர்கள் மரணிப்பார்களேயானால் நாற்பது நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.நாற்பது நபர்கள் மரணிப்பார்களேயானால் முன்ணூறு நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.முன்ணூரு நபர்கள் மரணிப்பார்களேயானால் பெரும்கூட்டத்தை  அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.(நூல்:மிர்காத் முல்லா அலீ காரி (ரஹ்)அவர்கள்)

அறிஞப்பெருமக்களின் கூற்று:அல்லாஹுத்தஆலா அருள் மழைப்பொழிபவன்,நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அதனை பங்கிடுபவர்கள்.இறைநேசச்செல்வர்களும்,உலமாக்களும் அதனை அடைந்துக்கொள்ள உதவிப்புரிபவர்களாவார்கள்.

அல்லாஹ்வின் (மஃரிபத்தை) உள்ளமையை அறிந்தக்கொள்ளவதற்கு, உம்மதே முஹம்மதியாவில் மஷாயிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்களிப்பை இப்படி விவரிப்பார்கள்;

அல்லாஹ்வோடு அடியான் ஒன்றுவதற்கு நாயகம் ﷺஅவர்கள் உதவுவதைப்போலவே,நாயகம் ﷺஅவர்களின் வழிநடக்க இறைநேசச்செல்வர்கள் வழிக்கோலாக இருக்கின்றனர்.

வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள்.

இறைநேசர்களில் முதல் தலைமுறையினர் நாயகம் ﷺஅவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபப்பெருமக்கள்,அவர்களுக்கு அடுத்த அந்தஸ்தில் தாபியீன்களும்,தபவுத்தாபியீன்களும் வருவார்கள்.

ஷரிஅத்தை காக்க போராடிய இமாம்களும்,தஸவ்வுஃப்பில்(இறைஞானப்பாதையில்)கரைக்கண்ட சூஃபிகளும்,வலிமார்களும்( اولیا اللہ)இறைநேசர்களில் அடுங்குவர்.

இறைநேசர்கள் பலர் வாழ்ந்தார்கள், வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள், கியாம நாள் வரை வந்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் வலிமார்களில் கல்வி,சிறப்பு,அகப்பார்வை,கராமத்கள், முற்றும் துறந்த துறவரம், அற்பணிப்பு, சிறந்த வம்சத்தொடர் இப்படி பல தனித்துவமான சிறப்புகளை ஒருங்கேப் பெற்றவர் வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் தாம்.

அதனால் தான் அன்னவர்கள் வலிமார்களின் தலைவர் எனப் போற்றப்படுகின்றார்கள்.அன்னவர்கள் வாழ்ந்த காலத்தில் «قطب الأقطاب»،வலிமார்களின் தலைவர் என்கிற சிறப்பை பெற்றார்கள்.

இதற்கு சான்றாக பல வரலாற்றாசிரியர்கள்  ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார்கள்:

கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் ஒரு தடவை பெரும் கூட்டத்தவர்களிடத்தில் பயான் செய்துக்கொண்டிருந்தார்கள்.அக்கூட்டத்தில் அக்காலத்தில் வாழ்ந்த குத்புகளும்,அப்தால்களும்,நல்லோர்களும்,நாதாக்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். 

கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் தங்களின் பயானின் இடையில் "அல்லாஹ் தம்மை வலிமர்களின் தலைராக ஆக்கியுள்ளான்" என்பதை இவ்வாறு கூறினார்கள்.

قدمی هذا علی رقبة کل ولی الله

"எனது இப்பாதம் அல்லாஹ்வின் வலிமார்கள் அனைவரின் சிரசுகளின் மீது உள்ளது"

அப்போது அக்கூட்டத்தில் இருந்த எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளை தாழ்த்தினார்கள்.அக்கூட்டத்தில் பங்கேற்காத உலகின் மூளைமுடுக்குகளில் உள்ள எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளைத் தாழ்த்தினார்கள்.

இந்தியாவின் வலி ஹழ்ரத் கவாஜா முஈனுத்தீன் சிஷ்தீ அஜ்மீரீ (ரஹ்)அவர்களும் அன்நேரம் தங்களின் சிரசைத் தாழ்த்தி"வலிகள் கோமனே தங்களின் பாதங்கள் என் தலையின் மீதும்,என் சிரசின் மீதும் உள்ளன"என்று கூறினார்கள்.

(اخبار الاخيار، شمائم امدادية، سفينة اوليا، قلائدالجواهرِ، نزهته الخاطر، فتاویٰ افريقه کرامات غوثية اعلی حضرت)

இறை ஞானப்பாதையில் (தஸவ்வுஃபில்)தம்மை அர்ப்பணித்தல்.

சையத் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்)அவர்கள் ஹிஜ்ரி 488 முதல் 496 வரை உயர்கல்வி அனைத்தையும் கற்று தேறினார்கள்.அதன் பிறகு 25 வருடங்கள் கடும் தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டார்கள். தங்களை முழுமையாக அல்லாஹ், ரஸுலுக்கு அர்பணித்து வணக்க வழிப்பாடுகளில் மூழ்கினார்கள்.26வயதில் உலக ஆசாபாசங்களை துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஷேக் அபு அப்துல்லா நஜ்ஜார்  (ரஹ்)அவர்கள்கூறுகிறார்கள்:, ஷேக் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் ஒரு முறை என்னிடம் தங்களுக்கு  நடந்த சம்பவங்களை விவரித்தார்கள்;

"நான் இறைவனை அடைய எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டேனென்றால் என் சிரமங்களை மலையின் மீது வைத்தால் மலை சுக்குநூறாகிவிடும்,சிரமங்களை சகித்துக்கொள்ள இயலாமல் போகும் போதெல்லாம் நான் தரையில் விழுந்து      فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏

(ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.)என்ற வசனத்தை ஓதுவேன்,அது என் உள்ளத்தை சாந்தப்படுத்தும்."(கலாயித் அல்-ஜவாஹிர் பக். 10)

அன்னவர்கள் இராக்கின் காடுகளையும், பாலைவனங்களையும் தங்களின் இருப்பிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள். மக்கள் தூக்கியெரியும் ரொட்டித்துண்டுகளை தங்களின் உணவாக்கிக்கொண்டார்கள். அதிகமதிகம் நோன்பு நோற்பார்கள்.

தங்களின் இளமைப்பருவத்திலே இறையாலயத்தை ஹஜ் செய்யும் பாக்கியம் பெற்றார்கள்,எந்நேரமும் (அங்கசுத்தி)ஒளுவோடும்,இறைவணக்கத்தில் அதீத ஈடுபாடும் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில்  கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்ளின் புரட்சி மற்றும் சீர்திருத்தங்கள்.

சையத் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்)பாக்தாத்திற்கு வந்த நேரத்தில், இஸ்லாமியப் பேரரசு சரிந்து சிதைந்து கொண்டிருந்தது. முதல் சிலுவைப் போர் தொடங்கியிருந்து. முஸ்லிம்களிடம் அரசியல் சீரழிவுடன், ஒழுக்க சீர்கேடு அதிகரித்து வந்தது. 

இஸ்லாமிய உலகின் நிலை மோசமாக இருந்தது. முஃதஸிலாக்கள் மற்றும் பித்அத்வாதிகளின் குழப்பங்கள் உச்சத்தில் இருந்தன.அவர்களின் வழிகெட்ட கொள்கைகளான  خلق قرآن குர்ஆன் படைப்பு ,மற்றும் تقدیرவிதி போன்ற மஸ்அலாக்கள்,  மக்களின் ஈமானிய நம்பிக்கையை ஆட்டம்காணசெய்தன , தீய உலமாக்கள்,போலி சூஃபிசத்துவம் பேசுவோர் போன்றவர்களால் குழப்பங்கள் இன்னும் அதிகரித்தன.  விபச்சாரம், துரோகம் மற்றும் منافقت பாசாங்குத்தனத்தின் சந்தை சூடாக இருந்தது.

இப்படிப்பட்ட இக்கட்டான காலக்கட்டத்தில் கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் களத்தில் இறங்கி சமய மறுமலர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி, சீர்திருத்தப் பணிகளையும், வழிகாட்டுதலையும் தொடங்கினார்கள். அன்னவர்கள்  தங்களின் பிரசங்கங்கள் மற்றும் அறிவுரை, போதனைகளால் மக்களின் இதயங்களில் நம்பிக்கையின் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார்கள். பல தெய்வ வழிபாட்டிற்கு எதிரான அறைக்கூவல், இஸ்லாமிய உலகிற்கு புது உத்வேகத்தையும்,மறுமலர்ச்சியையும் தந்தது. சூஃபிகள் குறித்த தவறான புரிதலை அகற்றி,சரியான விளக்கத்தை மக்களுக்கு வழங்கினார்கள். 

அன்னவர்கள்  குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக தங்களின் போதனைகள் மற்றும் ஃபத்வாக்களை மக்களுக்கு வழங்கினார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியையே  முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்கள். 

இதனாலேயே, அன்னவர்கள் "முஹ்யித்தீன்" என்ற பட்டத்தைப் பெற்றார்கள். ஆறாம் நூற்றாண்டின் "முஜத்தித்" என்று போற்றப்பட்டார்கள்.

"குதுஸ்" மீட்புப் போராட்டத்தில் கௌதுல் அஃளம் அவர்களின் சீடர்கள்.

இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட 88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த "பைத்துல் முகத்தஸ்" கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் காலத்தில் மீட்கப்பட்டது.

அப்புனிதப் போரில் கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் சீடர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.

மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள்  என்ற ஒரு  ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தனது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தனது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது. 

இந்த வெற்றியைத் தக்கவைக்க வக்கில்லாத, குத்ஸ் பற்றி அக்கறையில்லாத யூதப் பரம்பரையில் வந்தவர்களான நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியை சீரழித்த ஃபாதிமிய்யா என்ற ஷீஆ குழுக்களின் ஆட்சி காலத்தில்  பிரஞ்சு, மற்றும் தாத்தாதாரிய சிலுவை வணங்கிகளிடம் எழுபதாயிரம் முஸ்லிம்களின் உயிர்த்தியாகத்தோடு பைத்துல் மக்திஸ் 1099ல் பறிகொடுக்கப்பட்டு  88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த குத்ஸை மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் ஷீஆக் கயவர்களை ஒழித்துக்  கட்டிய பின்னால் கி.பி. 1187ல் பாலஸ்தீனம்  மீண்டும் கைப்பற்றப்பட்டது. 

மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ்  வெற்றி முன்னெடுப்புக்கள்...

ஷாம் தேச சிறு குழுக்களையும் நகரங்களையும் தனது ஆழுகையின் கீழ் கொண்டு வந்து -ஆலிம்- அறிஞர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் எனப் பலரோடு கலந்தாலோசனை செய்த பின்னர், சிலுவைப் போராளிகளிடம் இருந்து பாலஸ்தீன குத்ஸ் மண்ணை மீட்க தனது படைகளைத் குத்ஸ் நோக்கி நகர்த்தினார் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்கள்.

குத்ஸ் நோக்கிச் செல்லும் வழியில் சிலுவைப் போராளிகளின் கோட்டைகளாகக் காணப்பட்ட முக்கிய நகரங்களான உக்கா, யாஃபா, பைரூத் , (லெப்னான்), தபரிய்யா, ஸைதா, அஸ்கலான், லாதிகிய்யா போன்ற  பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு  அவற்றின் ஊடாக எதிரப்படை நகர்வுகளை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.பின்னர் ஹிஜ்ரி : 583-ல் கி.பி.1187 ல் நடைபெற்ற  ஹத்தீன் நகர மாபெரும் போர் வெற்றியைத் தொடர்ந்து "குத்ஸ்" நகரின் வெற்றியும் உறுதியானது.இப்புனிதப் போரில் பங்கேற்பதற்காக கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்கள் பக்தாதிலிருந்து பல வீரர்களை அனுப்பிவைத்தார்கள்.

"குத்ஸ்"மீட்புப் போரட்டத்தில் சிலுவைப்போராட்டக்காரர்களுக்கு எதிராகப் போராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் படையில் இருந்த வீரர்களில் கிட்டதட்ட 300 க்கும் அதிகமானவர்கள் கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் சீடர்களாவார்கள்.

தீனில் புரட்சி ஏற்படுத்திய கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களின் சொற்ப்பொழிவு.

ஹழ்ரத் ஷைக் அப்துல் ஹக் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹுத்தஆலா கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களுக்கு (பயானை) சொற்பொழிவை கராமத்தாக வழங்கியிருந்தான். 

ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள்.( நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.)

இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததாக இருந்தது. அன்னாரின் பேச்சைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.அன்னவர்களின் சொற்பொழிவு கடும் பாறை போன்ற உள்ளத்தையும் கரைத்துவிடும்.அவர்களின் சொற்பொழிவால் பல ஆயிரக்காணக்கான இல்லங்களும்,இலட்சக்கணக்கான உள்ளங்களும் நேர்வழிப் பெற்றன.(நூல்:அக்பாருள் அக்யார்)

ஷரீஅத்தில் உறுதியாக இருப்பதே உண்மையான (தஸவ்வுஃப்)ஆன்மீகம்.

கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மற்றொரு மகத்தான பணி ஆன்மீகம் அன்னாரின் மற்றுமொரு சிறப்பு , ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறி நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்கள். இதனால் இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப்பட்டது.

அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஒரு நாள் தவத்தில் (முராகபாவில்)இருந்த போது சபிக்கப்பட்டவனே!அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்,லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ்... தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் ஒளியை ப்போல வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு,தாகமாக இருந்த என்னிடம் ஓர் தங்கப்பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டு "ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால்" என்றான். அவனை விரட்டினேன் ஒளியாக இருந்தவன் இருளாக மறைந்துப்போனான் என்றார்கள்.

அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டனர். ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்கள்.சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களிடம்  "இதே போல நாற்பது பேரை ஏமாற்றியிருக்கிறேன் நீர் மார்க்கஞானம் பெற்றிருந்ததால் தப்பித்துவிட்டீர்"என்றான்.அப்பொழுதும் அன்னவர்கள் அவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளாமல் "சபிக்கப்பட்டவனே!இல்லை இப்பொழுதும் என் இறைவனின் கிருபையினால் தான் உன்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டேன்"என்றார்கள்.

· ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ : ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﻘﺎﺩﺭ

ﻣﺘﻤﺴﻜﺎً ﺑﻘﻮﺍﻧﻴﻦ ﺍﻟﺸﺮﻳﻌﺔ, ﻳﺪﻋﻮ ﺇﻟﻴﻬﺎ ﻭﻳﻨﻔﺮ ﻋﻦ ﻣﺨﺎﻟﻔﺘﻬﺎ

ﻭﻳﺸﻐﻞ ﺍﻟﻨﺎﺱ ﻓﻴﻬﺎ ﻣﻊ ﺗﻤﺴﻜﻪ ﺑﺎﻟﻌﺒﺎﺩﺓ ﻭﺍﻟﻤﺠﺎﻫﺪﺓ ﻭﻣﺰﺝ

ﺫﻟﻚ ﺑﻤﺨﺎﻟﻄﺔ ﺍﻟﺸﺎﻏﻞ ﻋﻨﻬﺎ ﻏﺎﻟﺒﺎ ﻛﺎﻷﺯﻭﺍﺝ ﻭﺍﻷﻭﻻﺩ , ﻭﻣﻦ

ﻛﺎﻥ ﻫﺬﺍ ﺳﺒﻴﻠﻪ ﻛﺎﻥ ﺃﻛﻤﻞ ﻣﻦ ﻏﻴﺮﻩ ﻷﻧﻬﺎ ﺻﻔﺔ ﺻﺎﺣﺐ

ﺍﻟﺸﺮﻳﻌﺔ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﺔ ﻭﺳﻠﻢ ‏( ﻗﻼﺋﺪ ﺍﻟﺠﻮﺍﻫﺮ، ﺹ23. ‏)

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதற்கு காரணம் அன்னாரின் இறைபக்தியும், உளத்தூய்மையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.

அல்லாஹுத்தஆலா இறைநேசர்களின்  பொருட்டால் நம் பிழைகளைப் பொறுத்து,நமக்கு ஈடேற்றம் தந்தருள்புரிவானாக!ஆமீன்....

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Tuesday, 18 October 2022

ஜும்ஆ பயான் 21/10/2022

இறுதி நபியின் இறுதி நாட்கள்.


உலகமும்,உலக வாழ்வும் நிரந்தரமில்லை.உலக வாழ்வென்பது மிகக் குறுகிய பயணமாகும்.உலகில் வாழும் அனைத்து படைப்பும் ஒரு நாள் மரணித்தை சுவைத்தே  தீர வேண்டும்.மரணம்,மனித இனம் ஜின் இனம்,நபிமார்கள், நல்லோர்கள் எவரையும் உலகில் விட்டுவைத்ததில்லை.

நபிமார்களில் இறுதித்தூதர், இறைவனின் நேசத்திற்குறிய நபி கண்மணி நாயகம் ﷺஅவர்களைப் பார்த்து, அல்லாஹுத்தஆலா குர்ஆனில் 39:30 வசனத்தில்..

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ‏

நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே என கூறுகிறான்.

ஈருலகத் தலைவர் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் 23 வருட நபித்துவ வாழ்வின் தொடர் முயற்சி, அரப்பணிப்பினால் இஸ்லாம் உலகெங்கிலும் மிக வீரியமாக பல்கிப்பெருகியது.மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

நாயகம்ﷺ அவர்கள் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு இறைக்கட்டளைக்கேற்ப பெரும் திரளான மக்களோடு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அங்கே வைத்து  "الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ"

"தீன் சம்பூரணமாகிவிட்டது"என மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.சில தினங்களில்سورہ نصر நஸ்ரு சூரா இறங்குகின்றது.

முதன் முதலில் நாயகம் அவர்களின் உற்றத்தோழர் அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்கள் நபியின் பிரிவை உணருகிறார்கள்.காரணம் தீன் சம்பூரணமாகிவிட்டதால் நுபுவ்வத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.இனி நபியின் தேவை அவசியம் இல்லை.

அதனால் தான் நஸ்ரு சூராவின் இறுதியில் நபியின் இறுதிமுடிவை உணர்த்தும் முகமாக அல்லாஹுத்தஆலா நபியைப் பார்த்து تسبیح و استغفار தஸ்பீஹ், இஸ்திக்ஃபார் செய்துக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான்.நாயகம்ﷺ அவர்கள் தங்களின் ஹஜ்ஜை முடிப்பதற்குள்ளாகவே மக்கள் இந்த ஹஜ்ஜை حجتہ الوداع "ஹஜ்ஜதுல் விதாஃ" இறுதி ஹஜ் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

நபியின் இறப்பை பற்றி முன் அறிவிப்புகள்.

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ‏ 

நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.(அல்குர்ஆன் : 39:30)

ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ‏ 

பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு) வாது செய்வீர்கள்.  (அல்குர்ஆன் : 39:31)

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌  اَفَاٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ‏ 

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?(அல்குர்ஆன் : 21:34)

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌   وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏ 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.(அல்குர்ஆன் : 21:35)

நாயகம் ﷺஅவர்கள் தம் மரணத்தை உணர்த்திய  தருணங்கள்.

1)ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு நாயகம்ﷺஅவர்கள் ரமலானில் தொடர்ந்து 20 தினங்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. 

2)அவ்வருடம் ரமலானில் ஜிப்ரயீல்(அலை)அவர்கள் வழமைக்கு மாறாக நாயகம் ﷺஅவர்களுக்கு இரண்டு முறை குர்ஆனை ஓதிக்காட்டியது.

3)இறுதி ஹஜ்ஜில் நாயகம் ﷺஅவர்களின் முன்னறிவிப்பு.

’’إنیلا أدری لعلّی لا ألقاکم بعد عامی ھذا بھذا الموقف أبداً‘

"இதே இடத்தில் அடுத்த வருடம் உங்களை நான் சந்திப்பேனா என்பதை நான் அறியமாட்டேன்"

4)நபி ﷺஅவர்களே முன்னறிவிப்பு செய்தார்கள்.

«لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ»

உங்களின் ஹஜ் சட்டங்களை முழுமையைக் பி(-ப)டித்து கொள்ளுங்கள் . ஏனெனில் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா என்பது தெரியாது என நபி (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்  (ஸஹீஹ் முஸ்லிம்.அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள் -

5)சூரா நஸ்ரில் நாயகம் ﷺஅவர்களின் மரணம் குறித்த முன்னறிவிப்பு.

هل ‏‏‏‏‏‏عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، ‏‏‏‏‏‏عَنْ ابْنِ عَبَّاسٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يُدْنِي ابْنَ عَبَّاسٍ، ‏‏‏‏‏‏فَقَالَ لَهُ""عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ إِنَّ لَنَا أَبْنَاءً مِثْلَهُ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ إِنَّهُ مِنْ حَيْثُ تَعْلَمُ فَسَأَلَ عُمَرُ ابْنَ عَبَّاسٍ عَنْ هَذِهِ الْآيَةِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ سورة النصر آية 1 فَقَالَ:‏‏‏‏ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ إِيَّاهُ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ"".

(ஸஹீஹ் புகாரி 4294. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.)

உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ............. ……….உமர்(ரலி) “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும்போது……….என்னும் (110-வது “அந்நஸ்ர்“) அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். சிலர் மௌனம் .சிலர் பொருத்த மற்ற பதில்  ……………… “இப்னு அப்பாஸே!  நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். நான் “அது அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து“ என்பதில் உள்ள “வெற்றி“ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான் (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவேஇ நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்“ என்பதே இதன் கருத்தாகும்“ என்று சொன்னேன். உமர்(ரலி) “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்“ என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்)

6)நாயகம்ﷺஅவர்கள் உஹத் போரில் ஷஹீதானவர்களுக்கு துஆ செய்ததும், பின்னர் மிம்பரில் பிரசங்கம் செய்ததும்  சூசகமாக முன்னறிவிப்புச் செய்வதைப் போல் இருந்தது. 

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، ‏‏‏‏‏‏أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلَاتَهُ عَلَى الْمَيِّتِ، ‏‏‏‏‏‏ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ ""إِنِّي فَرَطُكُمْ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ إِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الْآنَ، ‏‏‏‏‏‏وَإِنِّي قَدْ أُعْطِيتُ خَزَائِنَ مَفَاتِيحِ الْأَرْضِ، ‏‏‏‏‏‏وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ بَعْدِي أَنْ تُشْرِكُوا وَلَكِنْ أَخَافُ أَنْ تَنَافَسُوا فِيهَا"". 

துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. ஸஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, ஸஃபர் மாத தொடக்கத்தில் நபி (ஸல்) உஹுதுக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி (ஸல்) அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி “நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின் நீங்கள் இணை வைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

7)நாயகம் ﷺஅவர்கள் ஸஃபர் 15 ஆம் நாள் ஜன்னதுல் பகீஃ சென்று தங்களின் மரணத்தை முன்னறிவிப்பு செய்தது.

ஒரு நாள் நடுநிசியில் ‘பகீஃ’ மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும் “மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தியதைவிட மோசமானதாக இருக்கும்” எனக் கூறிவிட்டு “நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்” என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள்.

மரண நோயின் துவக்கம்.

ஹிஜ்ரி 11, ஸஃபர் மாதம், திங்கட்கிழமை பிறை 28 அல்லது 29 ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி  ﷺஅவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை உடனிருப்போர் உணர்ந்தனர். இதுவே நோயின் துவக்கம்.

பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள்.

(நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

மரணிப்பதற்கு ஐந்து தினங்களுக்கு முன்பு...

யூத,நஸராக்களுக்கு சாபமும், முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையும்.

 ‏‏‏‏‏‏أَنَّ عَائِشَةَ، ‏‏‏‏‏‏وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، ‏‏‏‏‏‏قَالَا:‏‏‏‏ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، ‏‏‏‏‏‏فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ ""وَهُوَ كَذَلِكَ، ‏‏‏‏‏‏لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا"". 

4441. “நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்“ என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். “தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ“ என்று அவர்கள் அஞ்சினார்கள்“ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள் )

அன்சார் ஸஹாபாக்களுக்கான உபதேசம்.

‏‏‏‏‏‏عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، ‏‏‏‏‏‏يَقُولُ:‏‏‏‏ ""مَرَّ أَبُو بَكْرٍ،‏‏‏‏ وَالْعَبَّاسُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِمَجْلِسٍ مِنْ مَجَالِسِ الْأَنْصَارِ وَهُمْ يَبْكُونَ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ مَا يُبْكِيكُمْ، ‏‏‏‏‏‏قَالُوا:‏‏‏‏ ذَكَرْنَا مَجْلِسَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَّا،‏‏‏‏ فَدَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِذَلِكَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ عَصَبَ عَلَى رَأْسِهِ حَاشِيَةَ بُرْدٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ فَصَعِدَ الْمِنْبَرَ وَلَمْ يَصْعَدْهُ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ‏‏‏‏‏‏ثُمَّ قَالَ:‏‏‏‏ ""أُوصِيكُمْ بِالْأَنْصَارِ فَإِنَّهُمْ كَرِشِي وَعَيْبَتِي وَقَدْ قَضَوْا الَّذِي عَلَيْهِمْ وَبَقِيَ الَّذِي لَهُمْ،‏‏‏‏ فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ"". 

பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.” மற்றொரு அறிவிப்பில், “மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள். 

இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுவதாவது:நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்” என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள்! அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே?” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மரணிப்பதற்கு நான்கு  தினங்களுக்கு முன்பு...

மரணிப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன் புதன்கிழமை   நாயகம்ﷺஅவர்கள் மக்ரிப் தொழவைத்தார்கள்.அத்தொழுகையில் "والمرسلات عرفا‘‘சூரா முர்ஸலாத் ஓதினார்கள்.

இதுவே நாயகம்ﷺஅவர்கள் இமாமாக தொழுகை நடத்திய கடைசி தொழுகையாகும்.

ஏறத்தாழ 10 நாட்கள் வரை காய்ச்சலின் வேகம் நீடித்திருந்தது. மிகப் பலவீனமான நிலையிலும் பெருமானார் ﷺமெதுவாக நடந்து சென்று பள்ளியில் தொழுகை நடத்தி வந்தார்கள். வாழ்வின் இறுதிப் புதன் கிழமை மக்ரிபுத் தொழுகையைச் சிரமத்தோடு தொழ வைத்தார்கள். அத்தொழுகையில் திருமறையின் ‘வல்முர்ஸலாத்’ என்னும் 50ஆம் அத்தியாயத்தை ஓதிய நபி பெருமானர் இரண்டாம் ரக்அத் இறுதியில்,

وَبِاَيِّ حَدِيْثٍ بَعْدَهُ يُؤْمِنُوْنَ ۝

‘இதற்குப் பின்னால் அவர்கள் எவ்விஷயத்தைத் தான் விசுவாசிப்பார்கள்’ என்ற 77 ஆம் வசனத்தையே இறுதியாக ஓதினார்கள். தொழுகை முடிந்து வீடு திரும்பிய உடனேயே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மயக்கமுற்று விட்டார்கள். 

عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ دَخَلْتُ عَلَى عَائِشَةَ، ‏‏‏‏‏‏فَقُلْتُ:‏‏‏‏ أَلَا تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ بَلَى، ‏‏‏‏‏‏""ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ أَصَلَّى النَّاسُ، ‏‏‏‏‏‏قُلْنَا:‏‏‏‏ لَا، ‏‏‏‏‏‏هُمْ يَنْتَظِرُونَكَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ فَفَعَلْنَا، ‏‏‏‏‏‏فَاغْتَسَلَ فَذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ‏‏‏‏‏‏ثُمَّ أَفَاقَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:‏‏‏‏ أَصَلَّى النَّاسُ، ‏‏‏‏‏‏قُلْنَا:‏‏‏‏ لَا، ‏‏‏‏‏‏هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ فَقَعَدَ فَاغْتَسَلَ، ‏‏‏‏‏‏ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ‏‏‏‏‏‏ثُمَّ أَفَاقَ فَقَالَ:‏‏‏‏ أَصَلَّى النَّاسُ، ‏‏‏‏‏‏قُلْنَا:‏‏‏‏ لَا، ‏‏‏‏‏‏هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ، ‏‏‏‏‏‏فَقَعَدَ فَاغْتَسَلَ، ‏‏‏‏‏‏ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ‏‏‏‏‏‏ثُمَّ أَفَاقَ فَقَالَ:‏‏‏‏ أَصَلَّى النَّاسُ، ‏‏‏‏‏‏فَقُلْنَا:‏‏‏‏ لَا، ‏‏‏‏‏‏هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، ‏‏‏‏‏‏وَالنَّاسُ عُكُوفٌ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُونَ النَّبِيَّ عَلَيْهِ السَّلَام لِصَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ، ‏‏‏‏‏‏فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، ‏‏‏‏‏‏فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ:‏‏‏‏ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ، ‏‏‏‏‏‏فَقَالَ أَبُو بَكْرٍ:‏‏‏‏ وَكَانَ رَجُلًا رَقِيقًا، ‏‏‏‏‏‏يَا عُمَرُ صَلِّ بِالنَّاسِ، ‏‏‏‏‏‏فَقَالَ لَهُ عُمَرُ:‏‏‏‏ أَنْتَ أَحَقُّ بِذَلِكَ، ‏‏‏‏‏‏فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الْأَيَّامَ، ‏‏‏‏‏‏ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا الْعَبَّاسُ لِصَلَاةِ الظُّهْرِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ، ‏‏‏‏‏‏فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ لَا يَتَأَخَّرَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ، ‏‏‏‏‏‏فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ فَجَعَلَ أَبُو بَكْرٍ يُصَلِّي وَهُوَ يَأْتَمُّ بِصَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ بِصَلَاةِ أَبِي بَكْرٍ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ""، ‏‏‏‏‏‏قَالَ عُبَيْدُ اللَّهِ:‏‏‏‏ فَدَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَقُلْتُ لَهُ:‏‏‏‏ أَلَا أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي عَائِشَةُ عَنْ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ هَاتِ فَعَرَضْتُ عَلَيْهِ حَدِيثَهَا، ‏‏‏‏‏‏فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا، ‏‏‏‏‏‏غَيْرَ أَنَّهُ قَالَ:‏‏‏‏ أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ الْعَبَّاسِ، ‏‏‏‏‏‏قُلْتُ:‏‏‏‏ لَا، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ هُوَ عَلِيُّ. 

நபியவர்கள் நோயாளியாக இருந்தும் மக்களுக்கு எல்லாத் தொழுகைகளையும் தொழவைத்தார்கள். இஷா நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அளவுக்கு நோய் அதிகரித்து விட்டது. மக்கள் தொழுது விட்டார்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என நாங்கள் கூறினோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள் எனக்கூறினார்கள். நாங்கள் தண்ணீரை ஊற்றினோம், நபியவர்கள் குளித்தார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் மயக்கம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்கள். மயக்கம் தெளிந்த பின் மக்கள் தொழுது விட்டார்களா? எனக் கேட்டார்கள். ஆரம்பத்தில் நடந்தது போன்றே நடந்தது. மூன்றாவது முறையும் அப்படியே நடந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி நபியவர்கள் செய்தி அனுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மீதியான நாட்களில் (நபியவர்கள் மரணிக்கும் வரை உள்ள தொழுகைகளை); தொழவைத்தார்கள் (புகாரி, முஸ்லிம்). 

அதாவது, நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது பதினேழு நேர தொழுகைகளை அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழவைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் (புகாரி).

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நோய் குறைந்திருந்ததை நபியவர்கள் உணர்ந்து, இரண்டு மனிதர்களின் உதவியோடு அவ்விருவருக்கும் மத்தியில், ளுஹர் தொழுகைக்காக பள்ளிக்கு வெளியானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் வருவதைக்கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர ஆரம்பித்தார்கள். பின் வராமல் அங்கேயே நிற்கும்படி நபியவர்கள் அவர்களுக்கு சைகை செய்தார்கள். என்னை அவருக்கு அருகாமையில் உட்கார வையுங்கள் என அவ்விருவருக்கம் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் இடது புறத்தில் நபியவர்களை அவ்விருவரும் உட்கார வைத்தார்கள். நபியவர்களை பின்பற்றி அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுதார்கள். மக்களுக்கு நபியவர்களின் தக்பீரை கேட்கவைப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் (தக்பீரை) கூறினார்கள் (புகாரி).

நாயகம்ﷺஅவர்களின் பரிசுத்த வாழ்வில் விடைப்பெறும் இறுதி தினம்...

இஸ்லாமியர்களின் தொழுகையின் அணிவகுப்பை கண்டு மகிழ்தல்.

عَنْ ابْنِ شِهَابٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ أَخْبَرَنِي أَنَسٌ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ ""بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلَاةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ فَتَبَسَّمَ يَضْحَكُ، ‏‏‏‏‏‏". 

திங்கட்கிழமை சுபஹுதொழுகையை அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையிலிருந்து திரையை விலக்கிக்கொண்டு தொழுது கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்முறுவலாக சிரித்தார்கள். நபியவர்கள் தொழுவதற்காக வரப்போகிறார்கள் என நினைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர நினைத்தார்கள். நபியவர்களை பார்த்த சந்தோஷத்தில் மக்கள் தங்களின் தொழுகையில் குழம்பிக் கொள்ளும் அளவுக்கு ஆகிவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'நீங்கள் உங்களின் தொழுகையை பரிபூரணப்படுத்துங்கள்' எனக்கூறிவிட்டு நபியவர்கள் அறைக்குள் சென்று திரையை மூடிவிட்டார்கள். அதன் பின் நபியவர்களுக்கு வேறு எந்த தொழுகையும் தொழ வாய்ப்பு கிடைக்கவில்லை.

மெம்பரில் கடைசி உரை.

١- [عن أنس بن مالك:] مَرَّ أبو بَكْرٍ، والعَبّاسُ رَضِيَ اللَّهُ عنْهما، بمَجْلِسٍ مِن مَجالِسِ الأنْصارِ وهُمْ يَبْكُونَ، فَقالَ: ما يُبْكِيكُمْ؟ قالوا: ذَكَرْنا مَجْلِسَ النبيِّ ﷺ مِنّا، فَدَخَلَ على النبيِّ ﷺ فأخْبَرَهُ بذلكَ، قالَ: فَخَرَجَ النبيُّ ﷺ وقدْ عَصَبَ على رَأْسِهِ حاشِيَةَ بُرْدٍ، قالَ: فَصَعِدَ المِنْبَرَ، ولَمْ يَصْعَدْهُ بَعْدَ ذلكَ اليَومِ، فَحَمِدَ اللَّهَ وأَثْنى عليه، ثُمَّ قالَ: أُوصِيكُمْ بالأنْصارِ، فإنَّهُمْ كَرِشِي وعَيْبَتِي، وقدْ قَضَوُا الذي عليهم، وبَقِيَ الذي لهمْ، فاقْبَلُوا مِن مُحْسِنِهِمْ، وتَجاوَزُوا عن مُسِيئِهِمْ.

البخاري (ت ٢٥٦)، صحيح البخاري٣٧٩٩  

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்)' என்று பதிலளித்தார்கள். 

அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்' என்று கூறினார்கள்.

தனது அருமை மகளார் ஃபாத்திமா (ரலி)அவர்களை ஆறுதல் படுத்துதல்.

‏‏‏‏‏‏حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِيِنَ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهُ جَمِيعًا لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ، ‏‏‏‏‏‏فَأَقْبَلَتْ فَاطِمَةُ  رَضِيَ اللَّهُ عَنْهَا تَمْشِي لَا وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏فَلَمَّا رَآهَا رَحَّبَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ مَرْحَبًا بِابْنَتِي، ‏‏‏‏‏‏ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ، ‏‏‏‏‏‏ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا، ‏‏‏‏‏‏فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ، ‏‏‏‏‏‏فَإِذَا هِيَ تَضْحَكُ، ‏‏‏‏‏‏فَقُلْتُ لَهَا:‏‏‏‏ أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسِّرِّ مِنْ بَيْنِنَا، ‏‏‏‏‏‏ثُمَّ أَنْتِ تَبْكِينَ، ‏‏‏‏‏‏فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ مَا كُنْتُ لِأُفْشِيَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِرَّهُ، ‏‏‏‏‏‏فَلَمَّا تُوُفِّيَ قُلْتُ لَهَا:‏‏‏‏ عَزَمْتُ عَلَيْكِ بِمَا لِي عَلَيْكِ مِنَ الْحَقِّ، ‏‏‏‏‏‏لَمَّا أَخْبَرْتِنِي. قَالَتْ:‏‏‏‏ أَمَّا الْآنَ فَنَعَمْ، ‏‏‏‏‏‏فَأَخْبَرَتْنِي، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ أَمَّا حِينَ سَارَّنِي فِي الْأَمْرِ الْأَوَّلِ، ‏‏‏‏‏‏""فَإِنَّهُ أَخْبَرَنِي أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ بِالْقُرْآنِ كُلَّ سَنَةٍ مَرَّةً، ‏‏‏‏‏‏وَإِنَّهُ قَدْ عَارَضَنِي بِهِ الْعَامَ مَرَّتَيْنِ، ‏‏‏‏‏‏وَلَا أَرَى الْأَجَلَ إِلَّا قَدِ اقْتَرَبَ، ‏‏‏‏‏‏فَاتَّقِي اللَّهَ وَاصْبِرِي، ‏‏‏‏‏‏فَإِنِّي نِعْمَ السَّلَفُ أَنَا لَكِ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ فَبَكَيْتُ بُكَائِي الَّذِي رَأَيْتِ، ‏‏‏‏‏‏فَلَمَّا رَأَى جَزَعِي سَارَّنِي الثَّانِيَةَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ يَا فَاطِمَةُ، ‏‏‏‏‏‏أَلَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ، ‏‏‏‏‏‏أَوْ سَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الْأُمَّةِ"". 

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:நாயகம்ﷺ அவர்களின் மனைவியர்களாகிய நாங்கள் அனைவரும் அவர்களுக்கு அருகில் இருந்தோம்.

அப்போது ஃபாத்திமா(ரலி)அவர்கள் அங்கு வருகைப்புரிந்தார்கள்.அல்லாஹ் வின் மீதாணையாக!அவரின் எண்ணம், நாயகம்ﷺ அவர்களின் எண்ணத்திற்கு மாற்றமாக இருக்காது. அவர்களைக்காண்ட நாயகம்ﷺ அவர்கள் வரவேற்று தங்களின் வலப்புறத்தில் அமரவைத்துக்கொண்டார்கள்.

 தமது இறுதிநிலை எய்திவிட்டது என்பதை உணர்ந்த அண்ணலார் அழுது கொண்டிருந்த பாத்திமா(ரலி) நாயகி அவர்களை அருகே அழைத்தார்கள்.அவர்களின் செவிகளில் ஏதோ கூறினார்கள். அண்ணல் அவர்களின் செய்தி கேட்டு பாத்திமா(ரலி) நாயகி அவர்களின் விழிகள் கண்ணீரைச் சிந்தின. உடனே அவர்கள் மீண்டும் மகளார் செவியில் மறைவாய் ஏதோ சொன்னார்கள். அதனைக் காதுற்ற பாத்திமா (ரலி)நாயகி அவர்களின் வதனம் சிறிதே நிம்மதியடைந்தது.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷா(ரலி) பிராட்டியார் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.பிறகு இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முதலில் என்னிடம் தாம் மறையப் போகும் செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்டு நான் கண்ணீர் சிந்தினேன். மறுகணம் என்னிடம் நீர் தாம் முதலில் என்னை சுவர்க்கத்தில் சந்திப்பீர்’ என்றார்கள். அதைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்’ என்றார்கள்.

மீளாத்துயரில் ஆழ்த்திய அண்ணலாரின் பிரிவு.

‏‏‏‏ عَنْ أَنَسٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ يَتَغَشَّاهُ،‏‏‏‏ فَقَالَتْ فَاطِمَةُ  رَضِيَ اللَّهُ عَنْهَا:‏‏‏‏ ""وَاكَرْبَ أَبَاهُ""، ‏‏‏‏‏‏فَقَالَ لَهَا:‏‏‏‏ ""لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ""، ‏‏‏‏‏‏فَلَمَّا مَاتَ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ ""يَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ يَا أَبَتَاهْ مَنْ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهْ يَا أَبَتَاهْ إِلَى جِبْرِيلَ نَنْعَاهْ""، ‏‏‏‏‏‏فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا :‏‏‏‏ يَا أَنَسُ أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التُّرَابَ؟. 

சிறிது நேரத்தில் அண்ணலாரின் உயிர் பிரிந்தது.    ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அண்ணலாரை அடக்கம் செய்து விட்டு திரும்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு இறைவனின் திருத்தூதர் மீது மண்ணைத் தள்ள எவ்வாறு மனம் வந்தது?என்று வருத்தத்துடன் கேட்டார்கள். அவர்களின் துக்கத்தால் அவர்கள் வீரிட்டார்கள். இந்த சப்தம் கேட்டு மெய்சிலிர்த்த அனஸ் ரலி அவர்கள்  இறைவனின் விருப்பத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்று இதமாக ஆறுதல் கூறினார்கள்.

பலபேர்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்கள். அப்படியும் அவர்களின் துயரத்தை குறைக்க முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் அந்தளவு துக்கம் ஆழமாக படிந்து விட்டது. மனைவியாரின் கவலையை போக்க முயன்ற அலி நாயகம் அவர்களும் தம் முயற்சியில் தோற்றே விட்டார்கள் என்று சொல்லலாம்.

இறுதி நபியின் இறுதி மணித்துளிகள்.

(ஹிஜ்ரி 11,ரபிவுல்அவ்வல் பிறை12 ، 12 ر بیع الأول 11ھ)

அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் கவலை...

قَالَتْ:‏‏‏‏ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا""تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي وَفِي نَوْبَتِي وَبَيْن سَحْرِي وَنَحْرِي وَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بِسِوَاكٍ فَضَعُفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، ‏‏‏‏‏‏فَأَخَذْتُهُ فَمَضَغْتُهُ، ‏‏‏‏‏‏ثُمَّ سَنَنْتُهُ بِهِ"". 

 “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். )“லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன”( என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

وَكَانَتْ إِحْدَانَا تُعَوِّذُهُ بِدُعَاءٍ إِذَا مَرِضَ، ‏‏‏‏‏‏فَذَهَبْتُ أُعَوِّذُهُ، ‏‏‏‏‏‏فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، ‏‏‏‏‏‏وَقَالَ:‏‏‏‏ ""فِي الرَّفِيقِ الْأَعْلَى فِي الرَّفِيقِ الْأَعْلَى""، ‏‏‏‏‏‏وَمَرَّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ وَفِي يَدِهِ جَرِيدَةٌ رَطْبَةٌ، ‏‏‏‏‏‏فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏فَظَنَنْتُ أَنَّ لَهُ بِهَا حَاجَةً فَأَخَذْتُهَا، ‏‏‏‏‏‏فَمَضَغْتُ رَأْسَهَا وَنَفَضْتُهَا فَدَفَعْتُهَا إِلَيْهِ، ‏‏‏‏‏‏فَاسْتَنَّ بِهَا كَأَحْسَنِ مَا كَانَ مُسْتَنًّا، ‏‏‏‏‏‏ثُمَّ نَاوَلَنِيهَا فَسَقَطَتْ يَدُهُ أَوْ سَقَطَتْ مِنْ يَدِهِ، ‏‏‏‏‏‏فَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ فِي آخِرِ يَوْمٍ مِنَ الدُّنْيَا، ‏‏‏‏‏‏وَأَوَّلِ يَوْمٍ مِنَ الْآخِرَةِ.

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

இறுதி உபதேசம்

عَنْ عَلِيٍّ ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏   كَانَ آخِرُ كَلَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ الصَّلَاةَ اتَّقُوا اللَّهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ  .

அலீ (ரலி)அவர்கள்  "நபி (ஸல்)     (மரணசமயத்தில்) அவர்களின்இறுதி வாக்கியங்கள் தொழுகை! தொழுகை! என்றும் ,அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்றும் இருந்தன"என கூறுகிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : إِذَا خَرَجَتْ رُوحُ الْمُؤْمِنِ ؛ تَلَقَّاهَا مَلَكَانِ يُصْعِدَانِهَا. قَالَ حَمَّادٌ : فَذَكَرَ مِنْ طِيبِ رِيحِهَا، وَذَكَرَ الْمِسْكَ. قَالَ : وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ : رُوحٌ طَيِّبَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الْأَرْضِ، صَلَّى اللَّهُ عَلَيْكِ، وَعَلَى جَسَدٍ كُنْتِ تَعْمُرِينَهُ.

அபுஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:முஃமின் ஒருவரின் உயிர்ப்பிரியுமேயானால், அதனை இரு மலக்குகள் வானுலகிற்கு சுமந்துச்செல்வார்கள்.ஹம்மாத் (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.அதன் வாடை நறுமணமுள்ளதாகும்.கஸ்தூரி மணமாகும்.

வானிலுள்ளோர் சொல்வார்கள்"இது பூமியிலிருந்து வந்திருக்கக்கூடிய நல்ல உயிராகும்.உன் மீதும்,நீ வாழ்ந்த உடல் மீதும் அல்லாஹ் அருள்ப்புரிவானாக!"[ஸஹீஹ் முஸ்லிம் 2872]

நபிகளாரின் மறைவிற்குப் பின் ஸஹாபாக்களின் நிலை;

கவலையில் நபித்தோழர்கள்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:‏‏‏‏    لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ، ‏‏‏‏‏‏فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ، ‏‏‏‏‏‏وَلَمَّا نَفَضْنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَيْدِي وَإِنَّا لَفِي دَفْنِهِ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا   

நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

நபித்தோழர்கள் உலகமே இருண்டு தலையில் விழுந்ததை போல நிலைக்குலைந்துப்போனார்கள்

தோழர்களின் நிலைப்பாடு.

 ஆயிஷா(ரலி)கூறினார்கள்'  நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்' என்று கூறினார். (ஸஹீஹ் புகாரி( 1241)

ஒரு கூட்டம் இனி இஸ்லாம் இல்லை என்றும்‌, ஒரு கூட்டம் நபி இறக்கவில்லை என்றும் தட்டுதடுமாறிய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டும் நிதானத்தோடு சமுதாயத்தை நேர்வழி படுத்தினார்கள். ஒரு மனிதனின் சாதனை என்பது அவர் இல்லாத சமயத்திலும் அவர் கொண்டு வந்த கொள்கையின் வேலை  சரியாக நடைபெற வேண்டும். அதில் வெற்றி கண்டவர் நபி (ஸல்) அவர்கள்

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் ஒரு அறிவிப்பு:நாயகம் அவர்களின் இறுதி வார்த்தைகள்... 

اللھم اغفرلی وارحمنی واألحقنی بالرفیق الأعلی

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

உறுதியின் மறுப்பெயரான உமர்(ரலி)அவர்கள் உருக்குலைந்துப்போன  தருணம்.

فجاء عمر والمغيرة بن شعبة فاستأذنا فأذنت لهما ، وجذبت الحجاب فنظر عمر إليه فقال : واغشيتاه . ثم قاما ، فلما دنوا من الباب قال المغيرة : يا عمر مات . قال : كذبت ، بل أنت رجل تحوشك فتنة ، إن رسول الله - صلى الله عليه وسلم - لا يموت حتى يفني الله المنافقين .

உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

மக்களை கட்டுக்குள் கொண்டு வந்த ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் உணர்வுப்பூர்வமான உபதேசம்.

‏‏‏‏‏‏عَنْ عَائِشَةَ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏.... ‏‏‏‏‏‏فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ، ‏‏‏‏‏‏وَقَالَ:‏‏‏‏ أَنْتَ أَكْرَمُ عَلَى اللَّهِ مِنْ أَنْ يُمِيتَكَ مَرَّتَيْنِ قَدْ، ‏‏‏‏‏‏وَاللَّهِ مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعُمَرُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، ‏‏‏‏‏‏يَقُولُ:‏‏‏‏ وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏وَلَا يَمُوتُ حَتَّى يَقْطَعَ أَيْدِيَ أُنَاسٍ مِنَ الْمُنَافِقِينَ كَثِيرٍ، ‏‏‏‏‏‏وَأَرْجُلَهُمْ، ‏‏‏‏‏‏فَقَامَ أَبُو بَكْرٍ فَصَعِدَ الْمِنْبَرَ، ‏‏‏‏‏‏فَقَالَ:‏‏‏‏  مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، ‏‏‏‏‏‏فَإِنَّ اللَّهَ حَيٌّ لَمْ يَمُتْ، ‏‏‏‏‏‏وَمَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، ‏‏‏‏‏‏وَمَا مُحَمَّدٌ إِلا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ سورة آل عمران آية 144 ، ‏‏‏‏‏‏قَالَ عُمَرُ:‏‏‏‏ فَلَكَأَنِّي لَمْ أَقْرَأْهَا إِلَّا يَوْمَئِذٍ. سنن ابن ماجه1627

இப்னு அப்பாஸ்(ரலி): அறிவித்தார்(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் “உமரே! அமருங்கள்“ என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்தார்கள்.

அப்போது மக்கள் உமர்(ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு (மக்களே) அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும்.

உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் “அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்“ என்பதை அறிந்துகொள்ளட்டும்.

“அல்லாஹ் கூறினான்;

{وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ}  முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்“ (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.

உமர்(ரலி) கூறினார்:  அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.

(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்)

அடக்கம் செய்ய ஏற்பாடுகள்.

நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.

இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ‘கர்ஸ்’ என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அடக்கம் செய்வது.

நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.

முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.”

இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)

நாயகம்ﷺஅவர்கள் தம் இறுதி மரண சாசனமாகக் கூறிய நான்கு உபதேசங்கள்.

1)உலக சூழ்ச்சியிலிருந்து தற்காத்துக்கொள்வது.

2)கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாத்துக்கொள்வது.

3)தொழுகையில் கவனம்.

4)அடிமைகள் உரிமையில் கவனம்.

அல்லாஹுத்தஆலா நம் இறுதிமூச்சு உள்ள வரை அண்ணலம் பெருமானார்ﷺஅவர்களின் வழிநடக்க தவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்...


வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 6 October 2022

ஜும்ஆ பயான் 07/10/2022

பெருமானார்ﷺ ஏற்படுத்திய மாற்றங்கள்

 لقد مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا 

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; (அல்குர்ஆன் : 3:164)

அல்லாஹுத்தஆலா கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பை, முழு மனித சமுதாயத்திற்கு பெரும் அருளாக ஆக்கினான்.நபியின் வருகைக்கு முன்பு அறியாமை எனும் இருள் உலகெங்கிலும் வியாபித்திருந்தது.அரபகம் என்றில்லாமல் உலக முழுக்கவே அறியாமை எனும் தீ பற்றி எறிந்துக்கொண்டிருந்தது.

தீயக்கொள்ளை,கோட்பாடுகள்,இணைவைப்பு,இறைநிராகரிப்பு,அசிங்கமான அருவருப்பான பழக்கவழக்கள்,அநீதம் அட்டூழியம்,சத்தியத்தை மீறுவது,நீதியை கடப்பது,வட்டி,மது,விரோதம்,கோபம்,பிடிவாதம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் வாழ்வின் விழும்பில் தத்தளித்துக்கொண்டிருந்தது அரபுலகம்.

இரு கோத்திரத்தவர்களிடம் சிறு கருத்துமுரண்பாடு ஏற்பட்டால் கூட, பல தலைமுறைக்கும் அவ்விரு கோத்திரம் விரோதம்பாராட்டுவார்கள்.சிறு பிரச்சனை பல தலைமுறைகளை கடந்தும் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்வதற்கும்,விரோதம் பாராட்டுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

இரு குடும்பங்களுக்கிடையில் தொடங்கிய சிறு தகராறு வளர்ந்து, பல கோத்திரங்கள் பல யுகங்கள் போர்புரிய காரணமாக ஆகிவிடுவதும் உண்டு.

اوسஅவ்ஸ்"" وخزرجகஸ்ரஜ்"

இந்த இரு கோத்திரத்தவர்களின் சிறு தகராறு சண்டையாகி ,போராகி 120ஆண்டுகள் போர்செய்துக்கொண்டிருந்தனர் என்கிறது வரலாறு.மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லாத அறவே மனிதம் மரித்திருந்த காலம்.இறைநிராகரிப்பு மேலோங்கியிருந்த காலம்,கர்வம்,பகட்டு,பெருமையை அந்தஸ்தாக மக்கள் கருதிய இக்கட்டான காலகட்டத்தில் அல்லாஹ் அறியாமை இருளை அகற்றி அறிவொழி ஏற்றிட கண்மணி நாயகம் ﷺஅவர்களை அகிலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பினான்.

அல்லாஹுத்தஆலா,  கண்மணி நாயகம் ﷺஅவர்களை குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்கோ,கோத்திரத்திற்கோ நபியாக அனுப்புவில்லை.மாறாக அகிலாத்தார் அனைவருக்கமானவராக அனுப்பப்பட்டார்கள்.

تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ‏

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(அல்குர்ஆன் : 25:1)கண்மணி நாயகம் ﷺஅவர்களின் வருகை மனித சமுதாயத்தில் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

அதுவரை அறியாமையில் திளைத்துக்கொண்டிருந்த அரேபியர்கள்  அறியாமை விட்டும் நீங்கி மனித இனத்திற்கே வழிகாட்டும் புனிதர்களாக மாறிப்போனார்கள். 

நாயகம் ﷺஅவர்கள் பல தெய்வக்கொள்கையுடைய அம்மக்களை ஓரிறை கொள்கையாளராக மாற்றினார்கள்.காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை மனிதநேயமிக்கவர்களாக மற்றினார்கள்.வரியவர்,பலகீனமானவர்,அடிமைகளிடம்  கனிவாக நடக்குமாறும்,பெண்களிடம் கண்ணியமாக நடக்குமாறும்,விரோதம்பாராட்டியவர்களை சகோதரவாஞ்சையோடு அன்போடு பழகுபவர்களாக மாற்றினார்கள்.

இதனையே அல்லாஹ் சூரா ஆலுஇம்ரானில்...

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا  وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(அல்குர்ஆன் : 3:103)

நாயகம் ﷺஅவர்களின் நுபுவத்திற்கு முந்தய 40 ஆண்டுகள் தூயவாழ்வு,உயர்பண்புகளால் மக்களின் நேசத்தையும் நம்பிக்கையையும் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.அவர்களின் நேர்மையை மெச்சும் விதமாக மக்காவாசிகள்     صادق "வாய்மையாளர்"وامین"நேர்மையாளர்"என்றே அழைத்தனர்கள்.

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا 

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; (அல்குர்ஆன் : 3:164)

கருணையே வடிவான காரூன்ய நபி.

நாயகம் ﷺஅவர்கள்  தம் நாற்பதாவது வயதில் நபித்துவத்தை மக்களிடம் எடுத்துரைததில் தொடங்கி அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் வரையிலும்,ஹிஜ்ரத்திற்கு பின் நபியோடு பல போர்கள் செய்து ஹுதைபிய்யா உடன் படிக்கை வரையிலும் நபிக்கும்,நபி தோழர்களுக்கும்,மக்கா காஃபிர்கள் சொல்லொண்ணா துன்பங்களை  தந்தார்கள்.நபியின் உயிருக்கு ஊறு விளைக்க சந்தர்பங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

மக்கா வெற்றியின் போது தங்களை கருவறுக்க காத்திருந்த மக்கா காஃபிர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய காரூண்ய நபி கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ;

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْکُمُ الْيَوْمَ .. اذْهَبُوا فَاَنْتُمْ الطُّلَقَاء ُ ۔

"இன்றைய நாள் உங்களின் மீது பழிவாங்குதல் இல்லை.. என்ற யூசுஃப் சூராவின் வசனத்தை ஓதிகாட்டி,செல்லுங்கள்!நீங்கள் சுதந்திரமானவர்கள்" என்று சொன்னார்கள்.

  (سبل الہدی والرشاد،ج5ص242 )

  اَلْيَوْمْ يَوْمُ الْمَرْحَمَةْ۔

இன்றைய நாள் அன்பு,இரக்கம் காட்டும் நாளாகும். என பொதுஅறிவிப்பு செய்தார்கள்.

 (جامع الأحادیث، مسند عبد اللہ بن عباس رضی اللہ عنہما. حدیث نمبر38481)

ஒரு நாட்டை வெற்றிக்கொள்ளப்பட்டு கைபற்றும்போது வெற்றிகலிப்பில் அந்நாட்டினரை கொள்ளுவது,வளங்களை சூரையாடுவது,ராணுவ அத்துமீறல்கள் செய்து  அட்டூழியம் புரிவது இவைதான் அன்று முதல் இன்று வரை பின்பற்றபடும் எழுதப்படாத விதியாகும்.

தாத்தாரியர்கள் தங்களின் முழு ராணுவபலத்தோடு பக்தாத் நகரை கைபற்றிய போது அங்குள்ள வளங்களை சூரையாடி,அடையாள சின்னங்களை அழித்து,அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து பக்தாத் நகரில் இரத்த ஆறை ஓட்டினர்கள்.

சிலுவை போராட்டக்காரர் (ஷாம்)சிரியவை கைப்பற்றிய போது ஆயிரக்கான இஸ்லாமியர்களை கொன்றுகுவித்தார்கள்.பலஸ்தீனில் பைத்துல் முகத்தஸ் அருகில் குதிரைகளைகட்டும் இடத்தின் அவற்றின் குளம்புகள் வரை இரத்த வெள்ளமாக காட்சியளித்தாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.

தொடர் சிலுவைப்போர்களில் மனித உரிமை அத்துமீறல்கள் பல நடந்தேரியுள்ளன.உலகில் பிற நாட்டை வெற்றிக்கொள்பவர்களுக்கிடையில் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் மக்கா காஃபிர்களிடம் நடந்துக்கொண்டவிதம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தருணமாகும்.

அறியாமைக்கால அரபுலகம் உலகமோகம்,மனோஇச்சை போன்றவைகளால் மனம்போனப்போக்கில் வாழ்ந்துக்கொண்டு அறியாமைஇருளில் தத்தளித்துக்கொண்டிருந்தனர் அவர்களின் வாழ்வை ஒளியாக்க அல்லாஹ்,கண்மணி நாயகம் ﷺஅவர்களை அனுப்பினான்.

الۤرٰ‌ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِـتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  ۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).(அல்குர்ஆன் : 14:1)

இஸ்லாமிய சட்டங்களை இலகுவாக்கிய நபிகளார்

முந்தைய உம்மத்களில் உள்ள கடினமான சட்டங்களை நாயகம் ﷺஅவர்கள் இந்த உம்மத்திற்கு இலகுவாக்கி தந்தார்கள். 

(எ.க)யூதர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமை ஒரு நாள் புனிதநாளாகும்.அன்றைய தினத்தில் உலகஅலுவல்களில் ஈடுப்படுவது,வியாபாரம்,உத்யோகம் தடைச்செய்யப்பட்டிருந்தது.அதுப்போல் ஆடைகளில் அசுத்தம் பட்டுவிட்டால் அந்த பகுதியை துண்டித்து எடுக்கவேண்டும்.

ஆனால் உம்மதே முஹம்மதிய்யாவில் வெள்ளிக்கிழமை வியாபரம் தடைச்செய்யப்படவில்லை.ஆடையில் நஜிஸ் பட்ட இடத்தை கழுவினால் சுத்தமாகிவிடும்.முந்தைய உம்மத்களில் கனீமத் பொருள் ஹராமாக இருந்தது.அது இந்த உம்மத்திற்கு ஹலாலாகும்.முந்தைய உம்மத்தினர் தொழுவதற்கென்று குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அனுமதி. நம் உம்மத்தினர் பூமியில் நினைத்த இடங்களில் தொழலாம்.முந்தைய உம்மத்தினர் சுத்தம் செய்ய தண்ணீரை தவிர வேறு வழியில்லை.நம் உம்மத்தினர் தண்ணீர்கிடைக்காத போது மண்ணைக்கொண்டு சுத்தம் செய்யலாம்.

இப்படி பல சிரமமான சட்டங்களை அல்லாஹ் "ரஹ்மதுல்லில் ஆலமீன்"நாயகம் ﷺஅவர்களின் உம்மத்திற்கு இலகுவாக்கி தந்திருக்கிறான்.

 وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ‌  

 அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,  (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; (அல்குர்ஆன் : 7:157)

அடிமை முறையை ஒழித்த அண்ணல் நபிﷺஅவர்கள்.

அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ﷺஅவர்களின் அவர்களின் வருகையால் சிரமங்களை இலேசாகவும்,கஷ்டங்களை இலகுவாகவும் மாற்றினான்.கருணை நபி ﷺஅவர்கள் அடிமை முறையை அறவே ஒழித்தார்கள்.போரில் பிடிக்கப்பட்ட கைதிகளையும் விடுதலை செய்துவிடுவார்கள்.

நபி ﷺஅவர்களின் வருகையால்  அடிமையாக இருந்த ஸுவைபா(ரலி)அவர்களுக்கு விடுதலைகிடைத்தது.

(صحیح البخاری، ج2ص،764، عمدۃ القاری، کتاب النکاح،باب من مال لارضاع بعد حولین ، ج4ص،45)

        

அனீதம் இழைக்கப்படலாகாது

எந்த மனிதனுக்கும் அனீதம் இழைக்கக்கூடாது.அனீதம் இழைக்கப்பட்டவனுக்காக மறுமையில் நான் வாதாடுவேன் என்றார்கள் நபி ﷺஅவர்கள்.

 اَلاَ مَنْ ظَلَمَ مُعَاهَدًا أَوِ انْتَقَصَه اوْ کَلَّفَه فَوْقَ طَاقَتِه اَوْ اَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَاَنَا حَجِيجُه يَوْمَ الْقِيَامَةِ -

  யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும்  திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)

(سنن ابی داود،کتاب الخراج ،باب فی تعشیر أہل الذمۃ إذا اختلفوا بالتجارات. حدیث نمبر3054)

நீதத்தை நிலைநாட்டிய நபிﷺஅவர்கள்

அறியாமைக்கால மக்கள் அடுத்தவரின் உரிமையை மதிக்காமல் வாழ்ந்தனர்.நபிﷺ அவர்கள் நீதிதவறாமையையும்,அடுத்தவரின் உரிமையை பேணுமாறும் வலியுறுத்தினர்கள்.நீதியும்,நேர்மையும் நபி ﷺஅவர்களின் பிறவி குணமாக இருந்தது.

நாயகம் ﷺஅவர்களின் பால்குடித்தாயார் ஹலீமா ஸஃதிய்யா (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்;குழந்தைப்பருவத்தில் நபி ﷺஅவர்கள் என் வலது மார்பகத்தில் பால் அருந்துபவர்களாக இருந்தார்கள்,என்றாவது ஒரு நாள் நான் இடது மார்பகத்தில் பாலூட்டினால் குடிக்கமாட்டார்கள்.அது தன் பால்குடி சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் பங்கு என்பதால் குடிப்பதில்லை என நான் விளங்கிக்கொள்வேன்

 (المواہب اللدنیۃ مع حاشیۃ الزرقانی ، ج1،ص269)

واعطيته ثديی الايمن ،فاقبل عليه بما شاء من لبن ،فحولته الی الايسر فابي،وکانت تلک حاله بعد۔ قال اهل العلم :الهمه الله تعالي ان له شريکا فالهمه العدل۔قالت فروي وروي اخوه۔

உண்மையின் மறுஉருவம்.

நாயகம் நபிﷺ அவர்கள் ஒப்பற்ற வாழ்விற்கு சொந்தக்காரர்.தம் வாழ்நாளில் பொய்பேசியதாக,நீதிதவறியாத ஒரு பொழுதையும் காணமுடியாது.

நாயகம் நபிﷺ அவர்களை "வாய்மையாளர்""நேர்மையாளர்"என்று தான் மக்கள் அழைப்பார்கள். 

நாயகம் ﷺஅவர்களின் நேர்மைக்கு ஓர் எடுத்துகாட்டாக அபுஜஹல் நபியை பார்த்து சொன்னதை அலி(ரலீ)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

       قَدْ نَعْلَمُ يَا مُحَمَّدُ انَّکَ تَصِلُ الرَّحِمَ ، وَتَصْدُقُ الْحَدِيْثَ ۔

"முஹம்மதே!நீர் உறவை சேர்ந்து வாழ்கிறீர்கள்,பேச்சில் வாய்மையாளர் என்பதை நாம் அறிவோம்"

(المستدرک علی الصحیحین للحاکم ، کتاب التفسیر، تفسیر سورۃ الأنعام، حدیث نمبر3187)

 நாயகம்ﷺ அவர்களின் நேர்மையை மக்கா காஃபிர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

நாயகம் ﷺஅவர்கள் தம் முதல் அழைப்பு பணிக்காக ஸஃபா குன்றில் மக்காவாசிகளை ஒன்றுதிரட்டி கேட்டார்கள்.

اَرَاَيْتَکُمْ لَوْ اَخْبَرْتُکُمْ اَنَّ خَيْلاً بِالْوَادِي تُرِيدُ اَنْ تُغِيرَ عَلَيْکُم اَکُنْتُمْ مُصَدِّقِيَّ.قَالُوا نَعَمْ ، مَا جَرَّبْنَا عَلَيْکَ إِلاَّ صِدْقًا .

"இந்த மலைக்கு பின்னால் ஓர் படை உங்களின் மீது தாக்குதல் தொடுக்க காத்திருக்கிறார்கள் என்று நான் சொன்னால் ஏற்பீர்களா?"

அதற்கு அம்மக்கள்!"ஆம்,உங்களை எப்போம்உண்மையாளராகவே நாங்கள் காணுகிறோம்" என்றார்கள்

(صحیح البخاری ،کتاب التفسیر،باب وانذر عشیرتک الاقربین ، حدیث نمبر4770)

புகழுக்குறிய குணம் படைத்தவர்.

நாயகம்ﷺ அவர்களின் மீது முதல் முறை வஹி இறங்கிய போது,நபியவர்கள் நடுக்கத்திற்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள்.

அப்போது அன்னை கதீஜா(ரலி)அவர்கள் அன்னவர்களை உயர்பண்புகளைக்கூறி ஆறுதல்படுத்தினார்கள்.

    کَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيکَ اللَّهُ اَبَدًا ، إِنَّکَ لَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْکَلَّ ، وَتَکْسِبُ الْمَعْدُومَ ، وَتَقْرِي الضَّيْفَ ، وَتُعِينُ عَلَي نَوَائِبِ الْحَقِّ .

அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.   (صحیح البخاری ،باب بدء الوحی ، حدیث نمبر3)

உதவும்  மாண்பாளர்களை உருவாக்கிய மாநபி.

 அறியாமைக்கால மக்களின் பண்புகள் அதலபாதளத்தில் இருந்தது.சகமனிதனின் சிரமத்தை  ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்களாக இருந்தனர்.நாயகம் ﷺஅவர்கள் சகமனிதனின் சிரமத்தில் பங்கெப்பதன் அவசியத்தை உணர்த்தினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஓர் நபிமொழி;

  عَنْ اَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ۔ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّم : مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ کُرْبَةً مِنْ کُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ کُرْبَةً مِنْ کُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَی مُعْسِرٍ يَسَّرَ  اللَّهُ عَلَيْهِ فِی الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِی الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا کَانَ الْعَبْدُ فِی عَوْنِ اَخِيهِ۔

எவர்  முஃனினான ஒருவரின் துன்பத்தை நீக்குவாரோ,அல்லாஹ் கியாம நாளில் அவரின் துன்பத்தை நீக்குவான்.எவர் சிரமத்தில் சிக்கியவரின் சிரமத்தை இலேசாக்குவாரோ,அல்லாஹ் அவரின் இம்மை,மறுமையிலே (சிரமத்தை)இலேசாக்குவான்.எவர்  ஓர் முஸ்லிமான ஒருவரின் குறையை மறைத்தாரோ,அல்லாஹ் இம்மை,மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.

அடியான் ஒருவன், தனது சகோதரருக்கு உதவுவதிலே இருக்கும் காலமெல்லாம் அவர் அல்லாஹ்வின் உதவியிலே இருப்பார்.

(صحیح مسلم ، کتاب الذکر والدعاء والتوبۃ، باب فضل الاجتماع علی تلاوۃ القرآن وعلی الذکر ،حدیث نمبر7028) 

நாயகம்ﷺ அவர்கள், கணவனை இழந்த கைம்பெண்கள்(விதவைகள்) ஏழைஎளியோருக்கு உதவிஒத்தாசைப்புரியுமாறு ஆர்வமூட்டினார்கள்.

       عَنْ اَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّم قَالَ: السَّاعِي عَلَي الاَرْمَلَةِ وَالْمِسْکِينِ کَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ ۔ وَاَحْسِبُهُ قَالَ ۔وَکَالْقَائِمِ لاَ يَفْتُرُ وَکَالصَّائِمِ لاَ يُفْطِر

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` 

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவர் `இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.`

 அப்துல்லாஹ் அல்கஅனபீ(ரஹ்) கூறினார். அல்லது `சோர்ந்துவிடாமல் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் முழுவதும் விடாது நோன்பு நோற்பவர் போன்றவராவார்` என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) மாலிக்(ரஹ்) அறிவித்தார் என்றே கருதுகிறேன்.31

 (صحیح البخاری، باب الساعی علی المسکین، حدیث نمبر6007۔صحیح مسلم، باب الإحسان إلی الارملۃ والمسکین والیتیم، حدیث نمبر2982)

அன்பும்,இரக்கமும் உள்ளவர்களாக...

அறியாமைக்கால அரபுகள்,அரக்கர்களாக அன்பு,இரக்கமற்றவர்களாக வாழ்ந்தார்கள். அவர்களை நாயகம்ﷺ அவர்கள் அன்புள்ளம் படைத்தவர்களாக,பிறர்நலம் பேணுபவர்களாக மாற்றினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّمْ: الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمٰنُ ارْحَمُوا مَنْ فِی الاَرْضِ يَرْحَمُکُمْ مَنْ فِي السَّمَاءِ

மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி) 

( جامع الترمذی ، ابواب البر والصلۃ ،باب ما جاء فی رحمۃ المسلمین، حدیث نمبر2049 ۔سنن ابو داود، کتاب الادب ، باب فی الرحمۃ ، حدیث نمبر 4943)

நாயகம்ﷺ அவர்கள், 23வருட நபித்துவ வாழ்வில் மனிதநேயம்,சமத்துவம்,சகோதரத்தும்,மனிதஉரிமை,தொழிலாளர்உரிமை,குடிமக்கள்உரிமை,பெண்ணுரிமை என தொடர்ந்து ஏற்ப்படுத்திய சமூகமாற்றங்கள்,புரட்சிகள் ஏராளம்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் ஆன்மீக வாதியாக இருந்த அதேநேரம், தன்னைச் சாதாரண ஒரு மனிதனாகவே அறிமுகப் படுத்தினார்கள்.

‘நானும் உங்களைப் போன்ற மனிதன்தான்’ என்று கூறியது மட்டுமன்றி தனது காலில் பிறர் விழவோ, தனக்காக குருவணக்கம் செய்யவோ அவர் இடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருகைக்காகப் பிறர் எழுந்திருப்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். 

குலப் பெருமை பாரட்டி பேசுவதை ஒழித்தார்கள்.

அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது.

கர்வம் கொண்டவரால் உயிர் போகும் நிலையிலும் கூட தன் சுய கவுரவத்தை விட்டு கொடுக்க இயலாது. இதற்கு ஒரு சரித்திர சம்பவம் உதாரணமாய் இருக்கிறது.

பத்ர் யுத்த களத்தில் ஆக்ரோஷமான போர் நடக்கிறது. தளபதி அபு ஜஹில் கால்கள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக போர்க்களத்திலே வீழ்த்தப்பட்டு கிடக்கின்றான்.அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்கள் தங்கள் வாளால் அவனது தலையை கொய்ய வருகிறார்கள். இன்னும் சில நிமிடங்கள் அவன் கதை முடிந்து போகும்.

அந்த கடைசி நேர சந்தர்ப்பத்திலும் கூட, அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்களை அபு ஜஹில் தடுத்து நிறுத்தி, ‘என் தலையை கொய்ய நீதானா கிடைத்தாய்? குரைசியர் குலத்தின் தலைவன் என்ற கிரீடத்தை சுமந்த என் தலை உன் துருப்பிடித்த உடைந்த கத்தியாலா வெட்டப்படவேண்டும்? திரும்பி செல்! நல்ல ஒரு வீரனை அனுப்பு. நல்ல உடைவாளால் என் தலை சீவப்படுவதை நான் விரும்புகிறேன். அதன் மூலம் என் குலத்தின் பெருமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் என் பேரவா’ என்றான்.

உயிர் மூச்சு நிற்கும் அந்த இறுதி நிலையிலும் தன் குலப் பெருமையும் கர்வத்தையும் விட்டு கொடுக்க மறுத்தவன் அபு ஜஹில்.

குலப் பெருமை. தலைக்கனம், ஆணவம் என்பது ஒருவனை எந்த அளவிற்கு வழி கேட்டில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு அபுஜஹில் வரலாறு ஒரு உதாரணம்.

இப்படியிருந்த மனிதர்களை ஒரு வசனத்தின் மூலமாக திருத்தினார்கள்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏ 

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

மது வெறியர்கள் மதுவை வெறுப்பவர்களாக மாறினர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே இருப்பவர்கள். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் கூட மதுவை ஒழிக்க முடியவில்லை ஆனால். ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த மது பிரியர்களை மதுவை வெறுப்பவர்களாக மாற்றினார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

அனஸ்(ரலி) அறிவித்தார் :(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். 

அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது: 

அனஸ்(ரலி) கூறினார்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), 'வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)' எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), 'இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்' என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,'நீ போய், இதைக் கொட்டிவிடு!' என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரிச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், '(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!' என்று கூறினார். அப்போதுதான் 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.' எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.(ஸஹீஹ் புகாரி (4620)

அடிமை எஜமானன் இருவரும் சமமே.

 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்' என அபூதர் கூறினார்' என மஃரூர் கூறினார். (ஸஹீஹ் புகாரி (30)

பிறரிடம் கேட்பதை கைவிட்டவர்.

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது' எனக் கூறினார்கள். 

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன். 

அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (ஸஹீஹ் புகாரி (1472)


அரக்கனாக இருந்த அரசனை மனிதராக மாற்றினார்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதிக்குக் குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரும் "பனூ ஹனீஃபா" குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள்; (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப்போட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அவர், "நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.

அன்றைய தினம் அவரை (அந்நிலையிலேயே) விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். மறுநாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமா, (உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "உங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் (என்னைக்) கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள்; நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.

அன்றும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். மூன்றாவது நாள் வந்தபோது, "ஸுமாமா! என்ன கருதுகிறீர்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் (ஏற்கெனவே) உங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன். நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டும் ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். அதில் நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்று சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே, ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு வந்தார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்" என்று கூறி (முஸ்லிம் ஆ)னார்.

பிறகு "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்றெல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்கள் ஊரே மற்றெல்லா ஊர்களையும் விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்து(வந்து)விட்டனர். நான் "உம்ரா"ச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, "உம்ரா"ச் செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது அவரிடம் ஒருவர், "நீர் மதமாறிவிட்டீரா?" என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை) அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை (எனது பகுதியான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது" என்று சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் (3622)

ஆகவே அன்பானர்வகளே உலகம் நபிவழியில் பயணித்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டி,நபிவழியில்  நடக்கச்செய்வானாக! 

آمين بجاه سيدنا طه ويس صلي الله تعالي وبارک وسلم علي خير خلقه سيدنا محمد وعلي آله وصحبه اجمعين والحمد لله رب العالمين-

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...