முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)
பிறப்பு..
கௌதுல் அஃழம், முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜைலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 470 ரமழான் மாதம் பிறை 1 திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் (கி. பி. 1078 - மார்ச் 19 ஆம் தேதி) ஈரான் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.
பிறப்பின் சிறப்பு.
முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்களின் 11 வது வழித்தோன்றலில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையின் பெயர் ஸைய்யது அபூஸாலிஹ் இப்னு மூஸா (ரழியல்லாஹு அன்ஹு). தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும்.
இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடையவராகவும் விளங்கினார்கள். இவர்கள் பிறக்கும் போது தாயாருக்கு வயது அறுபது.
முஹிய்யதீன் அப்துல் காதர் ஜீைானி (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் தந்தை வழியில் ஹஸனியாகவும் தாய் வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். அதாவது ஹஸனி என்றால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னாரின் திருப்பேரர் ஸைய்யதுனா ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வம்சாவழியிலும் ஹுஸைனி என்றால் மற்றோரு திருப்பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) அன்னாரின் வம்சாவழியில் பிறந்தவர்கள் என்பதாகும்.
இறையச்சம் உள்ள தந்தை.
தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி; ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார் ? என்றதற்கு அந்த பெண் விளக்கம் சொன்னார் இவர் நல்ல இறையச்சம் உடையவராக இருந்தார். என் தந்தை சொன்னது உன்மைதான்.
கல்வி.......
மாகபரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பச்சிளம் பருவத்திலேயே அன்னாரின் தந்தையார் இறையடி எய்தினார்கள். தாயின் அரவணைப்பில் வளர்ந்த குதுபு நாயகம் அவர்கள். குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஆரம்பத்தில் கல்வியை தனது சொந்த ஊரான ஜீலான் நகரத்தில் கற்றார்கள்.ஆறு வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர்கள் ஏனைய மாணவர்கள் மனனம் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை ஒரே நாளில் மரணம் செய்து விடுவார்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள்.
சிறுவயதிலேயே புரட்சி.
பதினெட்டாம் வயது அடைந்த போது உயர்கல்வி கற்பதற்காக பக்தாது செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். முதலில் தம் மகனை விட்டு பிரிய மனமின்றி அழுதார்கள். ஆனாலும் அன்னாரின் இந்த முடிவை கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள். அன்னாரின் தாயார் அவர்கள்.
தந்தையார் அபூஸாலிஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை அவர்களின் சட்டை பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.
இவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்தார்கள் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள்.
பேச்சில் ஒரு புரட்சி...
பக்தாதுக்கு வந்து அபூஸஈதில் மக்ரமீ உடைய மதரஸாவில் இணைந்தார். அவருடை ஷைகு ஜீலானி ரஹ் அவர்களின் சொல்லில் இருந்த வலிமையை அறிந்து மதரஸாவுக்கு முன்புறமாகவே ஒரு மேடை அமைத்துக் கொடுத்து அங்கிருந்து பயான் செய்யுமாறு கூறினார்.
ஆரம்பத்தில் அதை மறுத்த ஷைகு ஜீலானி ரஹ் அவர்கள் பின்னர் அவர்களுடைய கனவில் பெருமானார் (ஸல்) தோன்றி பயான் செய்யுமாறு கூறவே அங்கு பயான் செய்யத் தொடங்கினார்,ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை செவ்வாய்க் கிழமை என வாரத்திற்கு 3 நாள் பயான் செய்யத்த் தொடங்கினார். ஹிஜ்ரி 521 வது வருடம் பயான் தொடங்கியது, அந்த சொற்பொழிவுக்கு பெரும் மனிதரக்ள் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்தார்கள்.
இன்று பயான் செய்வதற்காக அறிஞர்கள் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள், அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சொற்பொழுவை கேட்பதற்காக உலகமே பக்தாதுக்கு திரண்டது.உணர்ச்சிமயமான அவரது சொற்பொழிவில் பலர் முஸ்லிம்களாயினர். ஏராளமானோ தம் தவற்றை உணர்ந்து திருந்தி நல்லவர்களானார்கள். ஒரு பெரிய மறுமலர்ச்சி மார்க்கப் புரட்சியும் ஏற்படலாயிற்று,மக்கள் அவரது சொற்பொழிவை மெய் மறந்து கேட்பார்கள்.
ஒரு நாள் தனது உரையில் அவர்கள் கூறினார்:
ﺃﻧﺖ ﻣﻌﺘﻤﺪ ﻋﻠﻴﻚ ، ﻭﻋﻠﻲ ﺍﻟﺨﻠﻖ ، ﻭﺩﻧﺎﻧﻴﺮﻙ
ﻭﺩﺭﺍﻫﻤﻚ ، ﻭﻋﻠﻲ ﺑﻴﻌﻚ ﻭﺷﺮﺋﻚ ، ﻭﻋﻠﻲ ﺳﻠﻜﺎﻥ
ﺑﻠﺪﻙ ، ﻛﻞ ﻣﻦ ﺇﻋﺘﻤﺪﺕ ﻋﻠﻴﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ ، ﻭﻛﻞ ﻣﻦ
ﺧﻔﺘﻪ ﻭﺭﺟﻮﺗﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ، ﻛﻞ ﻣﻦ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ ﺍﻟﻀﺮ
ﻭﺍﻟﻨﻔﻊ ، ﻭﻟﻢ ﺗﺮ ﺃﻥ ﺍﻟﺤﻖ ﻳﺠﺮﻱ ﺫﻟﻚ ﻋﻠﻲ ﻳﺪﻳﻪ ﻗﻬﻮ
ﺇﻟﻬﻚ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ - ﺍﻟﻤﺠﻠﺲ
நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.
இறைநேசர்களின் தலைவர்.
முஹ்யித்தீன்அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும் இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி.முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்கள். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டு நடப்பதில்முன்னோடி உலக ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடும் மக்கள் வாழ்வதற்காகவே காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பல்வேறு ஷைகுகளின் வழிகாட்டுதலின் படி உருவான பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா ,சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்கள். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்கள். கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிவுகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்கள் 50ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்கள். ஏராளமானஅற்புதங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.வழக்கம் போல அவரைப்பற்றி நமக்கு தெரியாது.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்ததால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து.
வலி என்றால் யார்?.
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)
الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.(அல்குர்ஆன் : 10:63)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். புகாரி:6502
6ஆம் நூற்றாண்டின் முஜத்தித்.
அல்லாஹுத்தஆலா மனு,ஜின் வர்கத்தார்களுக்கு நேர்வழிக்காட்டிட பல காலக்கட்டங்கள்,பல்வேறு பகுதிகளுக்கு 1,24 இலட்சம் நபிமார்களை அனுப்பிவைத்தான்.
இறுதியாக வந்த கண்மணி நாயகம் ﷺஅவர்கள் காலத்தில் தீன் முழுமைப் பெற்றதால் நாயகம் ﷺஅவர்களுக்கு பிறகு நபிமார்களின் தேவை இருக்க வில்லை என்பதினால் அன்னவர்களோடு நபித்தொடர் முற்றுப்பெற்றது.
ஆனால் இம்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும், புத்துயிரூட்டும் கடமையும் மார்க்கம் கற்ற சான்றோர்களுக்கு உண்டு.
அதிலும் குறிப்பாக மார்க்கத்தை புத்தியிரூட்ட அல்லாஹ் ஒவ்வோர் காலக்கட்டத்திலும் அக்காலக்கட்டதிற்கேற்றார்ப்போல தன்நேசர்களான அவ்லியாக்களை தேர்ந்தெடுத்து,மக்களை நன்நெறிப்படுத்த அனுப்பிக்கொண்டே இருக்கின்றான்.
இச்செய்தியை பல நபிமொழிகளின்யின் வாயிலாக அறியமுடியும்.
روى أبو داود عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يبعث لهذه الأمة على رأس كل مائة سنة من يجدد لها دينها.(مشکوٰۃشریف)
அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் துவக்கத்திலும் இம்மார்க்கத்தை புத்துயிரூட்டும் முஜத்திதை,இவ்வும்மத்திற்காக அனுப்புகின்றான்.(நூல்:மிஷ்காத்)
அல்லாஹ்வின் நல்லடியார்கள், தீனைபாதுகாக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.(நூல்:அபுதாவூத்)
மார்க்க அறிஞர்கள் (ஆலிம்கள்),நபித்துவ மழையின் ஈரநிலங்களாக இருக்கின்றனர்.(நூல்:அபுதாவூத்)
உலமாக்களின் வாழ்விற்காக மீன்கள் துஆ செய்கின்றன.(நூல்:மிஷ்காத்)
۱۸۳ - " الابدال يكونون بالشام ، وهم أربعون رجلا ، كلما مات رجل أبدل الله مكانه رجلا ، يسقى بهم الغيث ، وينتصر بهم على الأعداء ، ويصرف عن أهل الشام بهم العذاب "(مشکوۃشریف)
ஷாம் தேசத்தில் அப்தால்கள் தோன்றுவார்கள்,அவர்கள் நாற்பது நபர்களாவார்கள்.ஒருவர் மரணித்தால் அவரிடத்தில் அல்லாஹ், இன்னொருவரை மாற்றாக ஆக்குவான். அவர்களின் பொருட்டால் மழைபொழிவிக்கப்படும்.அவர்களின் பொருட்டால் எதிரிகளுக்கு பாதகமாக உதவிக்கிடைக்கும்.அவர்களின் பொருட்டால் ஷாம்வாசிகள் வேதனையை விட்டும் காக்கப்படுவர்.(நூல்:மிஷ்காத்)
عَنِ ابْنِ مَسْعُودٍ قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: «”إنَّ لِلَّهِ عَزَّ وجَلَّ في الخَلْقِ ثَلاثَمِائَةٍ، قُلُوبُهم عَلى قَلْبِ آدَمَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ أرْبَعُونَ، قُلُوبُهم عَلى قَلْبِ مُوسى عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ سَبْعَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ إبْراهِيمَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ خَمْسَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ جِبْرِيلَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ ثَلاثَةٌ قُلُوبُهم عَلى قَلْبِ مِيكائِيلَ عَلَيْهِ السَّلامُ، ولِلَّهِ في الخَلْقِ واحِدٌ قَلْبُهُ عَلى قَلْبِ إسْرافِيلَ عَلَيْهِ السَّلامُ، فَإذا ماتَ الواحِدُ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الثَّلاثَةِ، وإذا ماتَ مِنَ الثَّلاثَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الخَمْسَةِ، وإذا ماتَ مِنَ الخَمْسَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ السَّبْعَةِ، وإذا ماتَ مِنَ السَّبْعَةِ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الأرْبَعِينَ، وإذا ماتَ مِنَ الأرْبَعِينَ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ الثَّلاثِمِائَةٍ، وإذا ماتَ مِنَ الثَّلاثِمِائَةٍ أبْدَلَ اللَّهُ مَكانَهُ مِنَ العامَّةِ، فَبِهِمْ يُحْيِي ويُمِيتُ ؟ ويُمْطِرُ ويُنْبِتُ، ويَدْفَعُ البَلاءَ“» . قِيلَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: كَيْفَ بِهِمْ يُحْيِي ويُمِيتُ ؟ قالَ: لِأنَّهم يَسْألُونَ اللَّهَ إكْثارَ الأُمَمِ، فَيَكْثُرُونَ، ويَدْعُونَ عَلى الجَبابِرَةِ فَيُقْصَمُونَ، ويَسْتَسْقُونَ فَيُسْقَوْنَ، ويَسْألُونَ فَتُنْبِتُ لَهُمُ الأرْضُ، ويَدْعُونَ فَيُدْفَعُ بِهِمْ أنْواعُ البَلاءِ.(مرقاۃملاعلی قاری)
அல்லாஹ்விற்குறிய படைப்பில் முன்ணூறு பேர்கள்,அவர்களின் உள்ளங்கள் ஆதம் நபி(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் நாற்பது நபர்களின் உள்ளங்கள் மூஸா(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும். அவர்களில் ஏழு நபர்களின் உள்ளங்கள் இப்ராஹீம்(அலை) உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.ஐந்து நபர்களின் உள்ளங்கள் ஜிப்ரயீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் மூன்று நபர்களின் உள்ளங்கள் மீகாயீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.அவர்களில் ஒருவரின் உள்ளம் இஸ்ராஃபீல்(அலை)அவர்களின் உள்ளத்திற்கு ஒத்திருக்கும்.
ஒருவர் மரணித்தால் அவரின் இடத்தில் மூன்று நபர்களை மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.மூன்று நபர்கள் மரணிப்பார்களேயானால் ஐந்து நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.ஐந்து நபர்கள் மரணிப்பார்களேயானால் ஏழு நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.ஏழு நபர்கள் மரணிப்பார்களேயானால் நாற்பது நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.நாற்பது நபர்கள் மரணிப்பார்களேயானால் முன்ணூறு நபர்களை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.முன்ணூரு நபர்கள் மரணிப்பார்களேயானால் பெரும்கூட்டத்தை அவர்களின் இடங்களில் மாற்றாக அல்லாஹ் ஆக்குவான்.(நூல்:மிர்காத் முல்லா அலீ காரி (ரஹ்)அவர்கள்)
அறிஞப்பெருமக்களின் கூற்று:அல்லாஹுத்தஆலா அருள் மழைப்பொழிபவன்,நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அதனை பங்கிடுபவர்கள்.இறைநேசச்செல்வர்களும்,உலமாக்களும் அதனை அடைந்துக்கொள்ள உதவிப்புரிபவர்களாவார்கள்.
அல்லாஹ்வின் (மஃரிபத்தை) உள்ளமையை அறிந்தக்கொள்ளவதற்கு, உம்மதே முஹம்மதியாவில் மஷாயிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்களிப்பை இப்படி விவரிப்பார்கள்;
அல்லாஹ்வோடு அடியான் ஒன்றுவதற்கு நாயகம் ﷺஅவர்கள் உதவுவதைப்போலவே,நாயகம் ﷺஅவர்களின் வழிநடக்க இறைநேசச்செல்வர்கள் வழிக்கோலாக இருக்கின்றனர்.
வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள்.
இறைநேசர்களில் முதல் தலைமுறையினர் நாயகம் ﷺஅவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபப்பெருமக்கள்,அவர்களுக்கு அடுத்த அந்தஸ்தில் தாபியீன்களும்,தபவுத்தாபியீன்களும் வருவார்கள்.
ஷரிஅத்தை காக்க போராடிய இமாம்களும்,தஸவ்வுஃப்பில்(இறைஞானப்பாதையில்)கரைக்கண்ட சூஃபிகளும்,வலிமார்களும்( اولیا اللہ)இறைநேசர்களில் அடுங்குவர்.
இறைநேசர்கள் பலர் வாழ்ந்தார்கள், வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள், கியாம நாள் வரை வந்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் வலிமார்களில் கல்வி,சிறப்பு,அகப்பார்வை,கராமத்கள், முற்றும் துறந்த துறவரம், அற்பணிப்பு, சிறந்த வம்சத்தொடர் இப்படி பல தனித்துவமான சிறப்புகளை ஒருங்கேப் பெற்றவர் வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் தாம்.
அதனால் தான் அன்னவர்கள் வலிமார்களின் தலைவர் எனப் போற்றப்படுகின்றார்கள்.அன்னவர்கள் வாழ்ந்த காலத்தில் «قطب الأقطاب»،வலிமார்களின் தலைவர் என்கிற சிறப்பை பெற்றார்கள்.
இதற்கு சான்றாக பல வரலாற்றாசிரியர்கள் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார்கள்:
கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் ஒரு தடவை பெரும் கூட்டத்தவர்களிடத்தில் பயான் செய்துக்கொண்டிருந்தார்கள்.அக்கூட்டத்தில் அக்காலத்தில் வாழ்ந்த குத்புகளும்,அப்தால்களும்,நல்லோர்களும்,நாதாக்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.
கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் தங்களின் பயானின் இடையில் "அல்லாஹ் தம்மை வலிமர்களின் தலைராக ஆக்கியுள்ளான்" என்பதை இவ்வாறு கூறினார்கள்.
قدمی هذا علی رقبة کل ولی الله
"எனது இப்பாதம் அல்லாஹ்வின் வலிமார்கள் அனைவரின் சிரசுகளின் மீது உள்ளது"
அப்போது அக்கூட்டத்தில் இருந்த எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளை தாழ்த்தினார்கள்.அக்கூட்டத்தில் பங்கேற்காத உலகின் மூளைமுடுக்குகளில் உள்ள எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளைத் தாழ்த்தினார்கள்.
இந்தியாவின் வலி ஹழ்ரத் கவாஜா முஈனுத்தீன் சிஷ்தீ அஜ்மீரீ (ரஹ்)அவர்களும் அன்நேரம் தங்களின் சிரசைத் தாழ்த்தி"வலிகள் கோமனே தங்களின் பாதங்கள் என் தலையின் மீதும்,என் சிரசின் மீதும் உள்ளன"என்று கூறினார்கள்.
(اخبار الاخيار، شمائم امدادية، سفينة اوليا، قلائدالجواهرِ، نزهته الخاطر، فتاویٰ افريقه کرامات غوثية اعلی حضرت)
இறை ஞானப்பாதையில் (தஸவ்வுஃபில்)தம்மை அர்ப்பணித்தல்.
சையத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)அவர்கள் ஹிஜ்ரி 488 முதல் 496 வரை உயர்கல்வி அனைத்தையும் கற்று தேறினார்கள்.அதன் பிறகு 25 வருடங்கள் கடும் தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டார்கள். தங்களை முழுமையாக அல்லாஹ், ரஸுலுக்கு அர்பணித்து வணக்க வழிப்பாடுகளில் மூழ்கினார்கள்.26வயதில் உலக ஆசாபாசங்களை துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
ஷேக் அபு அப்துல்லா நஜ்ஜார் (ரஹ்)அவர்கள்கூறுகிறார்கள்:, ஷேக் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் ஒரு முறை என்னிடம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை விவரித்தார்கள்;
"நான் இறைவனை அடைய எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டேனென்றால் என் சிரமங்களை மலையின் மீது வைத்தால் மலை சுக்குநூறாகிவிடும்,சிரமங்களை சகித்துக்கொள்ள இயலாமல் போகும் போதெல்லாம் நான் தரையில் விழுந்து فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
(ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.)என்ற வசனத்தை ஓதுவேன்,அது என் உள்ளத்தை சாந்தப்படுத்தும்."(கலாயித் அல்-ஜவாஹிர் பக். 10)
அன்னவர்கள் இராக்கின் காடுகளையும், பாலைவனங்களையும் தங்களின் இருப்பிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள். மக்கள் தூக்கியெரியும் ரொட்டித்துண்டுகளை தங்களின் உணவாக்கிக்கொண்டார்கள். அதிகமதிகம் நோன்பு நோற்பார்கள்.
தங்களின் இளமைப்பருவத்திலே இறையாலயத்தை ஹஜ் செய்யும் பாக்கியம் பெற்றார்கள்,எந்நேரமும் (அங்கசுத்தி)ஒளுவோடும்,இறைவணக்கத்தில் அதீத ஈடுபாடும் கொண்டிருப்பார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தில் கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்ளின் புரட்சி மற்றும் சீர்திருத்தங்கள்.
சையத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)பாக்தாத்திற்கு வந்த நேரத்தில், இஸ்லாமியப் பேரரசு சரிந்து சிதைந்து கொண்டிருந்தது. முதல் சிலுவைப் போர் தொடங்கியிருந்து. முஸ்லிம்களிடம் அரசியல் சீரழிவுடன், ஒழுக்க சீர்கேடு அதிகரித்து வந்தது.
இஸ்லாமிய உலகின் நிலை மோசமாக இருந்தது. முஃதஸிலாக்கள் மற்றும் பித்அத்வாதிகளின் குழப்பங்கள் உச்சத்தில் இருந்தன.அவர்களின் வழிகெட்ட கொள்கைகளான خلق قرآن குர்ஆன் படைப்பு ,மற்றும் تقدیرவிதி போன்ற மஸ்அலாக்கள், மக்களின் ஈமானிய நம்பிக்கையை ஆட்டம்காணசெய்தன , தீய உலமாக்கள்,போலி சூஃபிசத்துவம் பேசுவோர் போன்றவர்களால் குழப்பங்கள் இன்னும் அதிகரித்தன. விபச்சாரம், துரோகம் மற்றும் منافقت பாசாங்குத்தனத்தின் சந்தை சூடாக இருந்தது.
இப்படிப்பட்ட இக்கட்டான காலக்கட்டத்தில் கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் களத்தில் இறங்கி சமய மறுமலர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி, சீர்திருத்தப் பணிகளையும், வழிகாட்டுதலையும் தொடங்கினார்கள். அன்னவர்கள் தங்களின் பிரசங்கங்கள் மற்றும் அறிவுரை, போதனைகளால் மக்களின் இதயங்களில் நம்பிக்கையின் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார்கள். பல தெய்வ வழிபாட்டிற்கு எதிரான அறைக்கூவல், இஸ்லாமிய உலகிற்கு புது உத்வேகத்தையும்,மறுமலர்ச்சியையும் தந்தது. சூஃபிகள் குறித்த தவறான புரிதலை அகற்றி,சரியான விளக்கத்தை மக்களுக்கு வழங்கினார்கள்.
அன்னவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக தங்களின் போதனைகள் மற்றும் ஃபத்வாக்களை மக்களுக்கு வழங்கினார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியையே முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்கள்.
இதனாலேயே, அன்னவர்கள் "முஹ்யித்தீன்" என்ற பட்டத்தைப் பெற்றார்கள். ஆறாம் நூற்றாண்டின் "முஜத்தித்" என்று போற்றப்பட்டார்கள்.
"குதுஸ்" மீட்புப் போராட்டத்தில் கௌதுல் அஃளம் அவர்களின் சீடர்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட 88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த "பைத்துல் முகத்தஸ்" கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் காலத்தில் மீட்கப்பட்டது.
அப்புனிதப் போரில் கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் சீடர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.
மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள் என்ற ஒரு ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தனது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தனது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது.
இந்த வெற்றியைத் தக்கவைக்க வக்கில்லாத, குத்ஸ் பற்றி அக்கறையில்லாத யூதப் பரம்பரையில் வந்தவர்களான நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியை சீரழித்த ஃபாதிமிய்யா என்ற ஷீஆ குழுக்களின் ஆட்சி காலத்தில் பிரஞ்சு, மற்றும் தாத்தாதாரிய சிலுவை வணங்கிகளிடம் எழுபதாயிரம் முஸ்லிம்களின் உயிர்த்தியாகத்தோடு பைத்துல் மக்திஸ் 1099ல் பறிகொடுக்கப்பட்டு 88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த குத்ஸை மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் ஷீஆக் கயவர்களை ஒழித்துக் கட்டிய பின்னால் கி.பி. 1187ல் பாலஸ்தீனம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.
மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ் வெற்றி முன்னெடுப்புக்கள்...
ஷாம் தேச சிறு குழுக்களையும் நகரங்களையும் தனது ஆழுகையின் கீழ் கொண்டு வந்து -ஆலிம்- அறிஞர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் எனப் பலரோடு கலந்தாலோசனை செய்த பின்னர், சிலுவைப் போராளிகளிடம் இருந்து பாலஸ்தீன குத்ஸ் மண்ணை மீட்க தனது படைகளைத் குத்ஸ் நோக்கி நகர்த்தினார் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்கள்.
குத்ஸ் நோக்கிச் செல்லும் வழியில் சிலுவைப் போராளிகளின் கோட்டைகளாகக் காணப்பட்ட முக்கிய நகரங்களான உக்கா, யாஃபா, பைரூத் , (லெப்னான்), தபரிய்யா, ஸைதா, அஸ்கலான், லாதிகிய்யா போன்ற பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு அவற்றின் ஊடாக எதிரப்படை நகர்வுகளை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.பின்னர் ஹிஜ்ரி : 583-ல் கி.பி.1187 ல் நடைபெற்ற ஹத்தீன் நகர மாபெரும் போர் வெற்றியைத் தொடர்ந்து "குத்ஸ்" நகரின் வெற்றியும் உறுதியானது.இப்புனிதப் போரில் பங்கேற்பதற்காக கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்கள் பக்தாதிலிருந்து பல வீரர்களை அனுப்பிவைத்தார்கள்.
"குத்ஸ்"மீட்புப் போரட்டத்தில் சிலுவைப்போராட்டக்காரர்களுக்கு எதிராகப் போராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் படையில் இருந்த வீரர்களில் கிட்டதட்ட 300 க்கும் அதிகமானவர்கள் கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் சீடர்களாவார்கள்.
தீனில் புரட்சி ஏற்படுத்திய கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களின் சொற்ப்பொழிவு.
ஹழ்ரத் ஷைக் அப்துல் ஹக் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹுத்தஆலா கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களுக்கு (பயானை) சொற்பொழிவை கராமத்தாக வழங்கியிருந்தான்.
ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள்.( நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.)
இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததாக இருந்தது. அன்னாரின் பேச்சைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.அன்னவர்களின் சொற்பொழிவு கடும் பாறை போன்ற உள்ளத்தையும் கரைத்துவிடும்.அவர்களின் சொற்பொழிவால் பல ஆயிரக்காணக்கான இல்லங்களும்,இலட்சக்கணக்கான உள்ளங்களும் நேர்வழிப் பெற்றன.(நூல்:அக்பாருள் அக்யார்)
ஷரீஅத்தில் உறுதியாக இருப்பதே உண்மையான (தஸவ்வுஃப்)ஆன்மீகம்.
கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மற்றொரு மகத்தான பணி ஆன்மீகம் அன்னாரின் மற்றுமொரு சிறப்பு , ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறி நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்கள். இதனால் இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப்பட்டது.
அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஒரு நாள் தவத்தில் (முராகபாவில்)இருந்த போது சபிக்கப்பட்டவனே!அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்,லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ்... தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் ஒளியை ப்போல வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு,தாகமாக இருந்த என்னிடம் ஓர் தங்கப்பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டு "ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால்" என்றான். அவனை விரட்டினேன் ஒளியாக இருந்தவன் இருளாக மறைந்துப்போனான் என்றார்கள்.
அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டனர். ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்கள்.சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களிடம் "இதே போல நாற்பது பேரை ஏமாற்றியிருக்கிறேன் நீர் மார்க்கஞானம் பெற்றிருந்ததால் தப்பித்துவிட்டீர்"என்றான்.அப்பொழுதும் அன்னவர்கள் அவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளாமல் "சபிக்கப்பட்டவனே!இல்லை இப்பொழுதும் என் இறைவனின் கிருபையினால் தான் உன்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டேன்"என்றார்கள்.
· ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ : ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﻘﺎﺩﺭ
ﻣﺘﻤﺴﻜﺎً ﺑﻘﻮﺍﻧﻴﻦ ﺍﻟﺸﺮﻳﻌﺔ, ﻳﺪﻋﻮ ﺇﻟﻴﻬﺎ ﻭﻳﻨﻔﺮ ﻋﻦ ﻣﺨﺎﻟﻔﺘﻬﺎ
ﻭﻳﺸﻐﻞ ﺍﻟﻨﺎﺱ ﻓﻴﻬﺎ ﻣﻊ ﺗﻤﺴﻜﻪ ﺑﺎﻟﻌﺒﺎﺩﺓ ﻭﺍﻟﻤﺠﺎﻫﺪﺓ ﻭﻣﺰﺝ
ﺫﻟﻚ ﺑﻤﺨﺎﻟﻄﺔ ﺍﻟﺸﺎﻏﻞ ﻋﻨﻬﺎ ﻏﺎﻟﺒﺎ ﻛﺎﻷﺯﻭﺍﺝ ﻭﺍﻷﻭﻻﺩ , ﻭﻣﻦ
ﻛﺎﻥ ﻫﺬﺍ ﺳﺒﻴﻠﻪ ﻛﺎﻥ ﺃﻛﻤﻞ ﻣﻦ ﻏﻴﺮﻩ ﻷﻧﻬﺎ ﺻﻔﺔ ﺻﺎﺣﺐ
ﺍﻟﺸﺮﻳﻌﺔ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﺔ ﻭﺳﻠﻢ ( ﻗﻼﺋﺪ ﺍﻟﺠﻮﺍﻫﺮ، ﺹ23. )
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதற்கு காரணம் அன்னாரின் இறைபக்தியும், உளத்தூய்மையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.
அல்லாஹுத்தஆலா இறைநேசர்களின் பொருட்டால் நம் பிழைகளைப் பொறுத்து,நமக்கு ஈடேற்றம் தந்தருள்புரிவானாக!ஆமீன்....
No comments:
Post a Comment