நபிகளாரின் அங்க அவயங்கள்...(ஷமாயிலுன் நபவிய்யா ﷺ)
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(அல்குர்ஆன் : 33:21)
அல்லாஹுத்தஆலாவின் அளப்பெரும் நேசத்திற்கு சொந்தக்காரர்,உம்மதே முஹம்மதியாவின் உயிரினும் மேலானவர்,படைப்பினங்களில் மலக்குமார்கள் நபிமார்களில் ஆகச்சிறந்தவர், இந்த உம்மத்தின் மீது பேராவல் கொண்டவர் நம் கண்மணி நாயகம் முஹம்மது ﷺஅவர்கள் பிறந்த ரபிவுல் அவ்வல் மாதம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நபியை நன்றியோடு நினைவுக்கூறும் மாதமாகும்.
முஹம்மது(ﷺ)என்கிற பதத்தை இஸ்லாமிய உலகம் வெறுமனே நபியின் பெயராக மாத்திரம் பார்ப்பதில்லை.அது அவர்களின் உணர்வுகளோடும், உதிரத்தோடும்,உயிரோடும் கலந்துவிட்ட ஓர் உன்னத மந்திரச்சொல்லாகும்.
உலக சரித்திரத்தில், நாயகம் ﷺஅவர்களைப் போன்ற எந்த ஓர் தீர்க்கதரிசியையோ,மன்னரையோ,தலைவரையோ வரலாறு கண்டதில்லை.
நாயகம் ﷺஅவர்களின் வாழ்வின் எல்லா கோணங்களையும் ஆதாரத்தோடு பதிவுச்செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
இன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.தம் உயிரை விட மேலாக நபியை நேசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களின் அத்தனை நிகழ்வுகளிலும் நபியை பின்பற்றி நடக்கின்றனர்.
இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் நபியை போல பேசுவது,நடப்பது,சாப்பிடுவது. உட்காருவது,எழுவது என அனைத்திலும் நபியைப் போல வாழ முயற்சிக்கின்றனர்.
வரலாறு என்றால் அது நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் வரலாறு மட்டும் தான் என்றால் அது மிகையாகாது.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் நமக்கு தெரிந்ததை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.
பேரழகு உடையவர்.
ஒரு அரபு கவிஞர் எழுதுவார்...
" யூசுஃப் நபியின் அழகை பார்த்து விரல்களை வெட்டிக்கொண்ட பெண்கள். எங்கள் பெருமானாரின் அழகை பார்த்திருந்தால் தன் இதையத்தையே வெட்டியிருப்பார்கள்"
நபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள். வீடு திரும்பியதும் தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் விவரித்தது யாதெனில்:
பிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)
உடல் அமைப்பு.
இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகன்ற முன் பற்கள் உடையவர்கள் அவர்கள் பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து பிரகாசம் வெளியேறுவது போன்றிருக்கும் அவர்களது கழுத்து தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும் அவர்களது இமை முடி நீளமாக இருக்கும். தாடி அடர்த்தியாக, நெற்றி விசாலமாக இருக்கும் புருவம் அடர்ந்து வில் வடிவம் பெற்றிருக்கும் நீண்ட மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் புஜத்திலும் முடி இருக்கும். மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும், நீளமான மணிக்கட்டும், விசாலமான உள்ளங்கையும் உள்ளவர் நீளமான முன் கையும், கெண்டைக்காலும் உள்ளவர் உள்ளங்கால் நன்கு குவிந்தவர்கள் விரல்கள் நீளமாக இருக்கும் அவர்கள் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பார்கள். (குலாஸத்துஸ் ஸீரா, தாரமி, மிஷ்காத்)
கவிதை.
ஜுஹைர் என்ற கவிஞர் ஹரீம் இப்னு சினானுக்கு படித்த கவிதையை நபி (ஸல்) அவர்களுக்கு உமர் (ரழி) கூறுவார்கள்.
“நீ மனிதனல்லாத வேறு படைப்பாக இருந்திருந்தால்,
பவுர்ணமி இரவின் நிலவாக இருந்திருப்பாய்.”
இக்கவிதையைப் பாடிவிட்டு உண்மையில் நபி (ஸல்) அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறுவார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)
தெளிவான பேச்சு.
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக இலக்கிய நயத்துடன் மொழிபவர்களாக இருந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள். மக்களில் யாரும் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. நல்லியல்பு பெற்றவர்கள். அவர்களுடைய பேச்சு சரளமாகவும், சொல் தெளிவாகவும், கருத்து சரியானதாகவும் இருக்கும். ஆனால், அதற்காக சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது சொல்லாக்கம் முழுமை பெற்றதாக இருக்கும். நூதனமான நுட்பங்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். அரபிய மொழிகளின் பல வகைகளைத் தெரிந்திருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடம் அவரவர் பாணியில் அவரவர் தொனியில் உரையாற்றுவார்கள். நகரவாசிகளைப் போல் இலக்கியமாகவும், கிராமவாசிகளைப் போல் எளிய முறையிலும் அவரவர் நடைக்கேற்ப பேசுவார்கள். இது மட்டுமின்றி வஹியினால் இறை உதவியைப் பெற்றிருந்தார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார் :
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே' என்று அவர்கள் கூறுவார்கள். (ஸஹீஹ் புகாரி 3559)
தலைமுடி.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சாயம் பூசுகின்ற அளவுக்கு (நரை முடிகள்) அவர்களுக்கு இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.அவர்களிடம், "அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு, "ஆம்; மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)" என்று பதிலளித்தார்கள்.. (ஸஹீஹ் முஸ்லிம் 4673)
பார்பவர்களுக்கு அச்சம் கலந்த மரியாதையை ஏற்படுத்தும்.
அலீ இப்னு அபீதாலிப் (ரழி) நபி (ஸல்) அவர்களை வருணித்துக் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை யார் வருணித்தாலும் ‘அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை’ என்றே கூறுவர். (இப்னு ஹிஷாம்)
வெட்கம்.
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்' என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 3562)
ஸஹாபாக்களின் வர்ணனைகள்.
#அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
#அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே கொஞ்சம் முடி வெண்மையாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
#அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டு முடிகளில் சிறிது வெண்மை இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
#நபியின் இல்லத்தில் இருந்த கரண்டி,அடுப்பு,தட்டுமுட்டு சாமான்கள் அனைத்தின் பதிவும் உள்ளது.
#நபி எத்தனை இடங்களில் அழுதார்கள்,எத்தனை இடங்களில் தேம்பி அழுதார்கள் என்று வரலாறில் உள்ளது.
#நபியின் வரலாற்றை துல்லியமாக ஆராய்பவர்கள்.அவர்களின் 63 ஆண்டுகால வாழ்வில் எத்தனை குழந்தைகள் மடியில் அமர்ந்தார்கள் என்கிற எண்ணிக்கையும் பதிவு செய்வார்கள்.
#நபியின் முபாரக்கான மடியில் அமர்ந்த குழந்தைகள் 51 என பதிவு செய்கின்றனர்.அந்தக் குழந்தைகளில் நபியின் மடியில் சிறுநீர் கழித்த குழந்தைகளின் எண்ணிக்கையும் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.
#நபி பயன்படுத்திய வாகனங்கள்-தூண்டு-ஆடைரகங்கள் இன்னும் என்னவெல்லாம் எந்த தலைவரின் வரலாற்றிலும் பதிவுச்செய்யப்படவில்லையோ, கற்பனைக்கூட செய்யமுடியாத பல தருணங்களை வரலாற்றில் பதிவுச்செய்யப்பட்ட ஒரே தலைவர் நபி முஹம்மது ﷺஅவர்கள் மாத்திரம் தான்
நபி (ஸல்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை யார் வருணித்தாலும் ‘அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை’ என்றே கூறுவர். (இப்னு ஹிஷாம்)
#அலீ (ரழி) கூறுவதாக மற்றொரு அறிவிப்பில் வருகிறது: நபி (ஸல்) கனத்த தலையுள்ளவர் மொத்தமான மூட்டுகளைக் கொண்டவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கோடு போன்ற முடிகளைக் கொண்டவர் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போல் நடப்பார். (ஜாமிவுத் திர்மிதி)
#ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அகலமான வாய் உடையவர் அகல விழி கொண்டவர் சதை குறைந்த கெண்டைக்கால் பெற்றவர். (ஸஹீஹ் முஸ்லிம்)
#அபூ துஃபைல் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) வெண்மை நிறமுடையவர் அழகிய முகமுடையவர் நடுத்தர உடம்பும், உயரமும் கொண்டவர். (ஸஹீஹ் முஸ்லிம்)
#பராஃ (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) நடுத்தர உயரமுள்ளவர்கள். அகன்ற புஜம் உடையவர்கள். அவர்களது தலைமுடி காது சோனை வரை இருக்கும். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களைச் சிவப்பு ஆடையில் பார்த்தேன். அவர்களை விட அழகான எதையும் பார்க்கவில்லை. வேதமுடையவர்களை ஒத்திருக்க வேண்டும் என்ற பிரியத்தில் நபி (ஸல்) தங்களது முடியை வகிடு எடுக்காமல் நேராக சீவிக் கொண்டிருந்தார்கள். பின்பு தங்களது தலைக்கு வகிடு எடுத்து சீவினார்கள். நபி (ஸல்) மக்களில் மிக அழகிய முகமும் குணமும் கொண்டவர்கள். அவர்களிடம் “நபியின் முகம் கத்தியைப் போன்று இருந்ததா?” எனக் கேட்க “சந்திரனைப் போல், அதாவது சற்று வட்ட வடிவ முகம் உடையவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபியின் தோற்றத்திற்கு ஒப்பானவர் ஹஸன் (ரலி) அவர்கள்..
இணையற்ற புகழுக்கு சொந்தக்காரர், பூமான் நபி ﷺஅவர்கள்.
நாயகம்ﷺ அவர்கள் நபிமார்கள் அனைவரையும் விட சிறந்த நபி. அல்லாஹ் ஏனைய நபிமார்களுக்கு வழங்கியمعجزاتஅற்புதங்களை மொத்தமாக நம் நபிக்கு வழங்கியதை போலவே ஏனைய நபிமார்களின் சிறப்பான பண்புகளையும் நாயகம் ﷺஅவர்களுக்கு வழங்கியுள்ளான்.
இதனையே அல்லாமா இக்பால் (ரஹ்)அவர்கள் தனது கவியில் இப்படி எழுதியுள்ளார்கள்.
حسن یوسف، دم عیسیٰ، یدِ بیضا داری
آنچہ خوباں ہمہ دارند تو تنہا داری
"யூசுஃப்(அலை)அவர்களின் அழகும்,ஈஸா(அலை)அவர்களின் ஆன்மாவும்,மூஸா(அலை)அவர்களின் வெண்ணிற (பிரகாசிக்கும்)கரமும் இப்படி தனித்தனியாக வழங்கப்பட்டمعجزاتஅற்புதங்கள் அனைத்தும,நம் நபிக்கு (சேர்த்து) ஒன்றாக வழங்கப்பட்டுள்ளன."
நாயகம்ﷺ அவர்களின் வாழ்வில் அவர்களின் உயர்ந்த பண்புகளை,படைப்பினங்களில் ஆகச்சிறந்த நற்குணங்களை அல்லாஹ் தனது மறையில் عظیمமகத்தான நற்குணம் என்கிறான்.
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் : 68:4)
நாயகம் ﷺஅவர்களின் தன்னிகரில்லா கருணையும்,கிருபையும் அகிலாத்தார் அனைவருக்கும் சொந்தம் என்கிறது குர்ஆன்.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(அல்குர்ஆன் : 21:107)
நாயகம்ﷺ அவர்களின் நேசம்,படைப்பினங்களில் பொதுவானதாக இருந்தாலும் முஃமின்களை அளவுகடந்து நேசிப்பவராக இருந்தார்கள்கள்.
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.(அல்குர்ஆன் : 9:128)
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; (அல்குர்ஆன் : 3:164)
ஒரு மனிதரை நேசம் கொள்ள, அன்புவைக்க காரணமாக அமைவது ஒன்று அவன் வெளிரங்கத்தில் பார்ப்பதற்கு இலட்சனமாக அழகாக இருக்கவேண்டும்.அல்லது அவனின் அந்தரங்கம் சிறந்ததாகவும், நற்குணம்,நன்நடத்தை உள்ளவனாக இருக்கவேண்டும்.இவ்விரு சிறப்புகளை ஒருங்கே பெற்றவர்கள் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள்.
இந்த உம்மத்தின் கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி)அவர்கள் நபியின் அழகை வருணித்து பாடிய கவி...
واحسن منک لم ترقط عینی
واجمل منک لم تلد النساء
خلقت مبرا من کل عیب
کانک قد خلقت کما تشآء
ما إن مدحت محمدا بمقالتي
لكن مدحت مقالتي بمحمد
உங்களை விட அழகானவரை என் கண்கள் பார்த்ததே இல்லை.
எந்த தாயும் தங்களை விட அழகான குழந்தையைப் பெற்றதில்லை.
நீங்கள் குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள்.
நீங்கள் எப்படி படைக்கப்பட விரும்புவீர்களோ - அப்படியே.
என் கவிதைகள் முஹம்மதுக்கு புகழ் சேர்க்கவில்லை.
என் கவிதைகளுக்கு முஹம்மதால் புகழ் கிடைத்தது.
நாயகம் அவர்களின் புகழ்ப்பாடும் உலக பிரசித்தி பெற்ற கவிதை தொகுப்பு,அல்லாமா முஹம்மது ஷரஃபுத்தீன் பூஸிரி (ரஹ்)அவர்கள் இயற்றிய "புர்தா ஷரீஃபில்"வரும் இரு பதங்கள்...
مُنَزَّةٌ عَنۡ شَرِیۡكِ فِیۡ مَحَاسِنِهٖ ۔ فَجَوۡهَرُ الۡحُسۡنِ فِیۡهِ غَیۡرُ مُنۡقَسِمٖ
நல்லியல்புகளில் நந்நபிகளாருக்கு மற்ற எவரும் இணையாகுவதை விட்டும் பரிசுத்தமாக்கப் பட்டுவிட்டது...அப்பெருந்தகையில் அமைந்துள்ள அழகு பங்கிடப்பட முடியாத ரத்தினமாகும்...
(الشمائل النبوية)
"ஷமாயிலுன் நபவிய்யா" இதன் விளக்கம்.
ஷிமால் الشِّمالஇதன் பன்மைச்சொல் ஷமயில் ”الشمائل“۔ இதன் அர்த்தம் الخُلُق "நற்குணங்கள்"ஆகும்.
இதற்கு அரபியில் طبیعت இயற்கை குணம் عادت வழமை سیرت வரலாறு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. (المنجد اردو مکتبہ مصطفائیہ، دیوبند)
அல்லாமா முல்லா அலீ காரி (ரஹ்)அவர்கள் الشمائل ஷமாயிலுக்கு சொல்லும் விளக்கம்.
سُمِّيَ الکتابُ بِالشَمائِل بالیاء جمع شِمالٍ بالکسر بمعنی الطبیعةِ، لا جمعُ شمأل․
பொதுவாக الشمائل ஷமாயில் என்கிற பதம் வழமையில், நாயகம் அவர்களின் அங்க அவயங்கள்,பண்புகள்,பழக்கவழக்கங்கள் இவற்றை குறிக்கவும் அன்னவர்களின் நற்குணங்கள், வாழ்க்கைமுறை, சிறப்புகள்,அவர்களின் அன்றாட இரவு,பகல் நிகழ்வுகள் இவற்றிக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
நாயகம்ﷺ அவர்களின் شمائلஅங்கஅவயங்கள், فضائلசிறப்புகள், பண்புகளைக் கூறும் பல நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்கள் உள்ளன.அவற்றில் குறிப்பாக திர்மிதீ(ரஹ்)அவர்களின்.ஷமாயில் திர்மிதீ உலக பிரசித்தி பெற்ற கிதாபாகும்.
அதுபோல் நாயகம் ﷺஅவர்களின் شمائلஅங்க அவயங்கள்,فضائلசிறப்புகள்,பண்புகளைக் கூறும் வசனங்கள் திருமறை குர்ஆனில் ஏராளம் உள்ளன.
திருமறை வருணிக்கும் நாயகம்ﷺ அவர்களின் பரகத் பொருந்திய (நூரானிய்யத்)ஒளியும்,அழகுப் பொருந்திய வதனமும் அன்னவர்களின் மீது உள்ள பிரியத்தையும்,காதலையும் இன்னும் அதிகரிக்கச்செய்யும்.
நாயகம்ﷺஅவர்களின் நூரானிய்யத் பிரகாசம் பற்றி அருள் மறையில்...
நாயகம்ﷺ அவர்களின் வருகையை نور ஒளி,பிரகாசம் என்கிறது இவ்வசனம்.
قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (அல்குர்ஆன் :المائدة، 5: 15)
திருக்குர்ஆன் முஃப்பஸிர்களின் ஏகோபித்த கருத்து;இவ்வசனத்தில்نور ஒளி என்கிற பதம் நாயகம் அவர்களையே குறிக்கிறது. நாயகம் அவர்களின் அழகை திருமறை سِرَاجًا مُّنِيْرًا பிரகாசிக்கும் விளக்கு என்கிறது.
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.(அல்குர்ஆன் : 33:45)
وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا
இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)(அல்குர்ஆன் : 33:46)
நாயகம் ﷺஅவர்களின் அழகை இவ்வசனத்தில் سِرَاجًا مُّنِيْرًا எனக்குறிப்பிடப்படுகின்றது.
سِرَاجًا என்பது சூரியஒளி மற்றும் ஒளிவீசும் விளக்கிற்கு சொல்லப்படும்.
مُّنِيْرًا என்பது தன் ஒளியால் அடுத்தவருக்கு பயன் தரும் ஒன்றிற்கு சொல்லப்படும்.
இதன் படி நாயகம் ﷺஅவர்கள் ஒளியாக இருப்பதுடனே அடுத்தவரின் வாழ்விலும் ஒளிவீசச்செய்கிறார்கள் என்ற கருத்தை இந்த வசனம் கூறுகிறது.
மகத்தானவைகளின் மீது திருமறையில் சத்தியம் செய்யும் இறைவன் நாயகம்ﷺ அவர்களின் வாழ்வின் மீது சத்தியமிட்டு அதன் மகத்துவதை உணர்த்துகின்றான்.
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.(அல்குர்ஆன் : 15:72)
குர்ஆனில் வேறந்த நபிமார்களின் வாழ்க்கையின் மீது சத்தியமிடவில்லை.இது நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியம்.
நாயகம் ﷺஅவர்களின் முகத்தின் பிரகாசத்தை வருணிக்கும் வசனம்...
மனித உடலில் மிக உயர்ந்த பாகம் முகம்.நாயகம் அவர்களின் முகத்தின் தனித்துவத்தை விளக்கும் வசனம்.
وَالضُّحٰىۙ
முற்பகல் மீது சத்தியமாக- (அல்குர்ஆன் : 93:1)
وَالَّيْلِ اِذَا سَجٰىۙ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-(அல்குர்ஆன் : 93:2)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.(அல்குர்ஆன் : 93:3)
இங்கு அல்லாஹ் والضحیٰ என்பது நபியின் முகம் பிராகசிக்கும் முற்பகலை போன்றதாகும்.واللیلஎன்பது அவர்களின் கவலை முகத்தை இரவின் இருள் போல மாற்றிவிடுகின்றது என்று நபியின் முகம் வருணிக்கப்படுகின்றது.
நாயகம்ﷺஅவர்களின் முபாரக்கான பார்வை...
நாயகம் ﷺஅவர்களின் முபாரக்கான இருவிளிகளின் பார்வை பற்றியும் குர்ஆன் பேசுகிறது.
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى
(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.(அல்குர்ஆன் : 53:17)
மனிதப்பார்வைக்கு புலப்படாத அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் காணும் பரிபூரணப் பார்வை நபிக்கு வழங்கப்பட்டுள்ளது.
لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.(அல்குர்ஆன் : 53:18)
நாயகம்ﷺ அவர்களின் முபாரக்கான இதயம்...
اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (அல்குர்ஆன் : 94:1)
அல்லாஹுத்தஆலா வஹியை தாங்கும் நாயகம் ﷺஅவர்களின் இதயத்தை விரித்து மிருதுவானதாகவும், இரக்கமுள்ளதாகவும் ஆக்கினான்.
நாயகம்ﷺஅவர்களின் வார்த்தை,சொல்...
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍ ۙ
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.(அல்குர்ஆன் : 69:40)
அல்லாஹுத்தஆலா நாயகம் அவர்களின் சொல் என்று கூறி தன் மறையின் சிறப்பை எடுத்துக்கூறுகிறான்.காரணம் நபியின் வார்த்தைகள் அனைத்துமே அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் போடும் வஹியாகும் இதனை அல்லாஹ் இன்னொரு இடத்தில் தெளிவுப்படுத்துகிறான்.
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.(அல்குர்ஆன் : 53:3)
اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.(அல்குர்ஆன் : 53:4)
நாயகம்ﷺஅவர்களின் செயல்...
நாயகம்ﷺஅவர்களின் சொல் வஹியாக இருப்பதை போலவே அவர்களின் செயலும் அல்லாஹ்வின் செயல் என்கிறது குர்ஆன்.
اِنَّ الَّذِيْنَ يُبَايِعُوْنَكَ اِنَّمَا يُبَايِعُوْنَ اللّٰهَ يَدُ اللّٰهِ فَوْقَ اَيْدِيْهِمْ
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; (அல்குர்ஆன் : 48:10 )
நாயகம்ﷺஅவர்களின் ஒளிப்பொருந்திய இதயம்...
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.(அல்குர்ஆன் : 53:11)
நாயகம்ﷺஅவர்களின் கரங்களின் கூற்று..
یَدُ اللهِ فَوْقَ اَیْدِیْھِمْ.
அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது;
நாயகம்ﷺஅவர்களின் இதயத்தை விசாலமாக ஆக்கியிருப்பதை பற்றி...
اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (அல்குர்ஆன் : 94:1)
நபி மூஸா (அலை)அவர்களின் அல்லாஹ்விடம் தன் இதயத்தை விசாலமாக ஆக்குமாறு துஆ செய்ததாக குர்ஆனில் வருகிறது.
قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ
(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!(அல்குர்ஆன் : 20:25)
ஆனால் அல்லாஹ் தன் நேசத்திற்குறிய நபியின் இதயத்தை வானங்கள்,பூமி அளவு விசாலமாக்கி, அதில் அனைத்து சூட்சுமங்கள்,ரகசியங்களையும் வெளிப்படுத்தினான்.
நாயகம்ﷺஅவர்களின் அருள் முகம் அது இறைவனை நோக்கி இருப்பதை வருணிக்கும் வசனம்...
قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.(அல்குர்ஆன் : 2:144)
வேறு சில வசனங்களில் அல்லாஹ்வின் பார்வையும் நபியை நோக்கி இருக்கின்றது என அல்லாஹ் கூறுகிறான்.
الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ
அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.(அல்குர்ஆன் : 26:218)
وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ
இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)(அல்குர்ஆன் : 26:219)
நாயகம் ﷺஅவர்களின் வாழ்வின் ஒவ்வொர் பகுதியுமே இறைசிந்தனையில் கழித்தார்கள் என்பதனை அல்லாஹ் உணர்த்துகிறான்.
நாயகம்ﷺஅவர்களின் குரளின்(சப்தம்) கூற்றும் குர்ஆனில் உள்ளது:
உங்களின் சப்தத்தை நபியின் சப்தத்திற்கு மேல் உயர்த்துவது ஒழுக்கத்திற் முரணானதாகும்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; (அல்குர்ஆன் : 49:2)
நாயகம்ﷺஅவர்களோடு பேசுதல்...
நாயகம் அவர்களிடம் சப்தமாக பேசுவது ஒழுக்கக் கேடு
وَلَا تَجْهَرُوْا لَہٗ بِالْقَوْلِ کَجَهْرِ بَعْضِکُمْ لِبَعْضٍ.
மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.(الحجرات، 49: 2)
அல்லாஹ் தன் அருள்மறையில் நாயகம் ﷺஅவர்களின் வருணனைகள்,அங்க அவயங்கள்,பண்புகளை எடுத்துரைப்பது அவர்களை இந்த உம்மத் நேசிக்க வேண்டும்,அவர்களின் வழிநடக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஆகும்.
நாயகம் ﷺஅவர்களின் அங்க அவயங்களை கூறும் அமுத மொழிகள்
”حَدَّثَنِي عَنْ مالکِ بْنِ عَنْ ربیعةَ بِن أبِي عبدِ الرحمٰنِ عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ أنَّہ سَمِعَہ یَقُوْلُ کَانَ رَسُولُ اللہِ صلی اللہ علیہ وسلم لَیْسَ بِالطَّوِیْلِ البَائِنِ وَلاَ بِالْقَصِیْرِ وَلاَ بِالأبیضِ الأمْھَقِ وَلاَ بِالأدمِ وَلاَ بِالْجعْدِ القَطَطِ وَلاَ بِالسِبْطِ بَعَثَہ اللّٰہُ تعالٰی عَلٰی رأسِ أربعینَ سنةً فَأقَامَ بِمَکةَ عَشَرَ سِنِیْنَ وَبِالمَدِیْنَةِ عَشَرَ سِنِیْنَ فَتَوفَّاہُ اللّٰہُ تعالٰی علی رأسِ سِتّیْنَ سَنَةً وَلَیْسَ فِيْ رَأسِہ وَلِحْیَتِہ عِشْرُوْنَ شَعْرَةً بَیْضَاءَ صلی اللہ علیہ وسلم“ (۱۵)
அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம)
நபி (ஸல்) அவர்களின் முடி பற்றி…
۲- حدَّثنا قتادةُ لِأنسِ بْنِ مالکٍ کیفَ کان شَعرُ رسولِ اللہ صلی اللہ علیہ وسلم قال کان شَعراً رجلاً لیس بالجَعْدِ ولا السَبْطِ بَینَ اُذنیہ وعاتِقِہ․(۱
”عَنْ قتادةَ قال قلتُ لِأنَسٍ کیفَ کان شَعْرُ رسولِ اللہ صلی اللہ علیہ وسلم قال لَمْ یکنْ بِالجَعْدِ ولاَ بِالسبطِ کان یَبْلُغُ شعرُہ شَحمةَ أذنَیْہ․ (۱۹)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். (புஹாரி :5905 அனஸ் (ரலி).
1509. நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. (புஹாரி : 5904 அனஸ் (ரலி).
நபி (ஸல்) அவர்களின் நபித்துவ முத்திரை...
باب حدثنا عبد الرحمن بن يونس قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعا لي بالبركة ثم توضأ فشربت من وضوئه ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة
190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சிறிய தாயார் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக் கொடுத்து எனது பரக்கத் வேண்டி பிரார்த்தித்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது. (நூல் : புகாரி 190)
நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கு மத்தியில் புறாவின் முட்டையைப் போல் மேனி நிறத்திலேயே நபித்துவ முத்திரை இருந்தது. அது இடது புஜத்திற்கு மேல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)
நபிவழியில் நடப்பது, சுவாசம் என்றால் நபியை நேசிப்பது உயிராகும்.நபியை நேசிப்போம்!நபிவழி நடப்போம்!