அவதூறுகளை பரப்பாதீர்கள்.
ـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا
(அல்குர்ஆன் 49:12)
மனித அங்க அவையங்களில் நாவு மிக ஆபத்தான உறுப்பாகும்.நாவின் விபரீதங்களை விட்டும் மனிதன் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக, அல்லாஹுத்தஆலா இயற்கையிலே இருஉதடு,பற்கள் என்கிற இரண்டு பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கின்றான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவற்றை மீறி நாவினால் உண்டாகும் தீங்கை விட்டும் மனிதனால் தன்னை தற்காத்துக்கொள்ள முடிவதில்லை.
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்டவைகளில் பார்வையைச் செலுத்துதல் இதுப்போன்ற தீய காரியங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு சாத்தியமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான ஒன்றாகும்!!
நாவின் தீங்குகளில் பொய்,புறம்,கோள், தீயவார்த்தைகள் இவற்றின் வரிசையில் "அவதூறு"பெரும் பாவச்செயலாகும்.
இஸ்லாத்தில் விபச்சாரம்,திருட்டு, கொலை,கொள்ளை,வட்டி போன்றைவை பெரும்பாவங்களாக,தண்டனைக்குறிய குற்றங்களாக இருப்பதைப் போன்றே "அவதூறு"பெரும் பாவமும் தண்டனைக்குறிய குற்றமுமாகும்.
வட்டியை விடவும் அவதூறு மோசமான பாவமாகும் .வட்டி சமூக தீமையாக இருந்தாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அதனோடு ஏதேனும் ஓர் விதத்தில் தொடர்பில் இருப்பார்கள்.ஆனால் அவதூறு, சம்பந்தமே இல்லாத ஒருவனின் வாழ்கையை நிர்மூலமாக்கிவிடுகின்றது.
அவதூறு தனிமனித மானத்தை பறிக்கும்.குடும்ப நிம்மதியை,வாழ்வை சீர்குழைக்கும்.சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
அவதூறின் துவக்கம் (சந்தேகம்) யூகம்.
யூகங்களை விட்டும் இஸ்லாம் தடுக்கின்றது,யூகங்களின் முடிவு பெரும்பாலும் தவறாகமுடிந்துவிடும். அப்பாவி மனிதன் ஒருவனின் மீது யூகமாக ஒன்றை சொல்வது பாவமாகும்.யூகம்,சந்தேகம் ஒருவரை துருவித்துருவி ஆராய்த்தூண்டும் சகமனிதனின் நன்மதிப்பை கெடுத்துவிடும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; (அல்குர்ஆன் : 49:12)
புண்படுத்தாதீர்! குறைகூறாதீர்!! (துருவித் துருவி) ஆராயாதீர்!!!
وعنْ أَبي هُريْرةَ -رَضِّيَّ اللهُ عَنْهُ- أنَّ رسُول اللَّه ﷺ قَالَ: «إيًاكُمْ والظَّنَّ، فَإنَّ الظَّنَّ أكذبُ الحدِيثَ، ولا تحَسَّسُوا، وَلاَ تَجسَّسُوا وَلاَ تنافَسُوا وَلاَ تحَاسَدُوا، وَلاَ تَباغَضُوا، وَلاَ تَدابَروُا، وكُونُوا عِباد اللَّهِ إخْوانًا كَما أمركُمْ. المُسْلِمُ أخُو المُسْلِمِ، لاَ يظلِمُهُ، وَلاَ يخذُلُهُ وَلاَ يحْقرُهُ، التَّقوى ههُنا، التَّقوَى ههُنا»
பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: புகாரி-5143)
நபி ﷺஅவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களைப் புண்படுத்தாதீர், அவர்களைக் குறைகூறாதீர்,அவர்களின் குறைகளை (துருவித் துருவி) ஆராயாதீர். யார் குறையை (துருவித் துருவி) ஆராய்கிறாரோ அவரது குறையை (ஒன்றுவிடாமல்) அல்லாஹ் ஆராய்வான். அவன் வீட்டுக்குள் (ஒளிந்து) இருந்தபோதும் அவனைக் கேவலப்படுத்திவிடுவான். (முஸ்னது அஹ்மது).
அவதூறு என்றால் என்ன?
أَنَّ رَسُوْلَ اللّٰہِﷺ قَالَ أَتَدْرُوْنَ مَا الْغِیْبَۃِ؟ قَالُوْا، اَللّٰہُ وَرَسُوْلُہ، أَعْلَمُ، قَالَ ذِکْرُکَ أَخَاکَ بِمَا یَکْرَہُ، قِیْلَ أَفَرَأَیْتَ اِنْ کَانَ فِيْ مَا اَقُوْلُ؟ قَالَ اِنْ کَانَ فِیْہِ مَا تَقَُوْلُ فَقَدِ اغْتَبْتَہ، وَاِنْ لَمْ یَکُنْ مَا تَقُوْلُ فَقَدْ بَھَتَّہ،۔ ﴿مسلم، کتاب البر، باب تحریم الغیبۃ، ترمذی،ا بواب البر والصلۃ، باب ما جائ فی الغیبۃ﴾
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்“ என்று பதிலளித்தார்கள்.
அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால் நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5048)
வதந்திகளை பரப்பும் சமூகவளைதளங்கள்.
சமூகவளைதளங்களான வாட்ஸ்அப் (WhatsApp),பேஸ்புக் (Facebook,) டுவிட்டர்(Twitter),இன்ஸ்டா (Instagram),யூடியூப் (YouTube) போன்வற்றில் பரப்பப்டும் செய்திகள் பெரும்பாலும் வந்ததிகளாவும், நம்பகத்தன்மையற்றவைகளாகவுமே உள்ளன.
மருத்துவகுறிப்பு,சமூகவிழிப்புணர்வு,மருத்துவஉதவி என பரப்பப்படும் எந்த செய்திகளும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளாகவே வலம் வருகின்றன.சமூகத்தில் பிரபல்யமான நபரை குறித்து தவறான தகவல்களும்,பல இறப்பு செய்திகளும் கூட பல வருடங்கள் கடந்து வதந்திகளாகளாகவே உலாவருகின்றன.
தனக்கு வரும் செய்திகளையெல்லாம் அது உண்மையா?பொய்யா? என்கிற எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே பல குரூப்களுக்கு Forward message மீள்பதிவுகளாக அனுப்புவதை கடமையைப்போல செய்பவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது.
இதற்கு சமீபத்திய ஓர் உதாரணம்.
கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பலரும் FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும் 50 GB இலவசம் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி பொய்யானது Fake.
இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்... என்று தமிழக கமிஷ்னரே தொலைகாட்சியில் தோன்றி எச்சரிக்கை விடுத்தார்.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை மேலும் இது மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதுபோல் வரும் இணைப்பை கிளிக் செய்தால் அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்றும் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.
மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற போலியான மெசேஜ்களை அனுப்பப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதுபோல் மெசஜ் வந்தால் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.
மேலும் நீங்கள் சிந்திக்க இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா....
ஹோண்டா பைக் இலவசம்
ரீசார்ஜ் இலவசம்
லேப்டாப் இலவசம்
லாக்டவுன் ரூ 5000 இலவசம்
10 ஜிபி இலவசம்
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்.
(நன்றி:அட்மின் மீடியா)
இதுப்போன்று தனக்கு வரும் செய்திகளையெல்லாம் பரப்புபவனை நாயகம் ﷺஅவர்கள் பொய்யன் என்றார்கள்:
كَفَى بالمرءِ كذِبًا أن يحدِّثَ بِكُلِّ ما سمِعَ
الراوي :أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (5)، وأبو داود (4992)، وابن حبان (30) من حديث أبي هريرة
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (அறிவிப்பவர்;அபூஹுரைரா (ரலி) அவர்கள்.) (நூல்: முஸ்லிம் 6)
அவதூறுகளை பரப்பி சேற்றைவாரி இரைக்கும் மீடியாக்கள்.
மீடியாக்கள்,சமூகவலைதளங்கள்,பத்திரிக்கைகளில் "இஸ்மிலாமிய அதீத மதப்பற்று" (Islamic Redicalism)، "இஸ்லாமிய தீவிரவாதம்"(Terrorism Islamic)، "இஸ்லாமிய அடிப்படைவாதம்"(Extremism Islamic)، "இஸ்லாமிய வன்முறை" (Violence Islamic)என்பனப் போன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும் பொய்ப் பரப்புரைகள் மக்களை சிந்திக்க தூண்டுகின்றன.
உலகில் வாழும் 150கோடிகளுக்கு அதிகமான ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீது கடந்த 20 வருடங்களாக தீவிரவாத முத்திரைக் குத்துவதற்கான பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தனிமனித தவற்றை அவன் சார்ந்த சமூகம் மற்றும் மதத்தோடு தொடர்புபடுத்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வன்மத்தை மீடியாக்கள் கனகச்சிதமாக செய்கின்றன.
குறிப்பாக இஸ்லாமியன் ஒருவன், குற்றச்செயலுக்காக சந்தேகத்தின் பேரில் கைதிசெய்யப்பட்டாலும் அவனை "இஸ்லாமிய தீவிரவாதி"என மீண்டும்,மீண்டும் முதன்மை செய்தியாக காட்டுவதும்,அவனை சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவனாக சித்தரித்து காட்டுவதையே மீடியாக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
THE KASMIR FILES.
திரைத்துறையும் தன் பங்குக்கு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சினமாக்களை தயாரிக்கின்றன. சமீபத்தில் வெளியான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்". என்ற திரைப்படம் காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவம் என விளம்பரம் செய்யப்பட்டு, முழுக்க இஸ்லாமிய வெறுப்பை உமிழும் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெளியானபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் படத்தை ஆதரித்துப் பேசியதும் அதை இழிவுபடுத்தும் சதி நடப்பதாகக் கூறியதையும் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது மட்டுமின்றி, பாஜக முதலமைச்சர்கள் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்". திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார். கோவா மாநிலம் பானாஜியில் நடைபெற்ற 53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான படம் என இஸ்ரேலிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான, தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விமர்சித்துள்ளார். மேலும், பிரச்சார தன்மை கொண்டதாகக் கூறிய அவர், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம்.
மிகவும் கெளரவமான இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது”என தன் அதிருப்தியை தெரிவித்தார்.அவரது இந்த பேச்சை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.(நன்றி:விகடன்,தினகரன்)
FIFA WORLD CUP.
இன்று இஸ்லாமிய அரபிய நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வரும் "2022 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை (2022 FIFA World Cup )"
தொடரை அந்நாடு மிகச்சிறப்பாக நடத்தினாலும்,அது இஸ்லாமிய நாடு என்கிற ஒரே காழ்ப்புணர்ச்சியினால் உலக மீடியாக்கள் எதிர்மறையான விமர்சனங்களை கக்கிவருகின்றன.
இஸ்லாத்தின் மீதும்,இஸ்லாமியர்களின் மீதும் சேற்றைவாரி இறைப்பதும்,அவதூறு அபாண்டமான பழிச்சுமத்துவதும் புதிதல்ல,வரலாற்றில் நல்லோர்களின் மீது அவதூறுக்கூறிய சான்றுகள் உள்ளன.
அருள்மறையாம் திருமறைக்குர்ஆனில் ஹழ்ரத் யூசுப்,ஹழ்ரத் மூஸா,அன்னை மர்யம் (அலைஹிம்),அன்னை ஆயிஷா(ரலி-அன்ஹா)ஆகிய நான்கு நல்லோர்களின் மீது கயவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளையும்,அதனை அல்லாஹ் பொய்யாக்கி அவர்களை அப்பழுக்கற்ற நல்லோர்கள் என்கிற வறலாற்றுச்செய்திகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.
அவதூறு பரப்ப பட்டால்...
ஒருவனைக்குறித்து அபாண்டமாக பழிச்சுமத்தி அவதூறு பரப்பினால் அல்லாஹுத்தஆலா பழிச்சுமத்தப்பட்டவனின் அந்தஸ்த்தை உயர்த்தி அவன் மனவேதனைக்கு பகரமாக பாவங்களை மன்னித்தும் விடுகின்றான்.எவன் அவதூறுப்பரப்பினானோ அவனை இவ்வுலகிலே இழிவுப்படுத்திவிடுகின்றான்.
மறுமையிலோ எவரை பற்றி அவதூறு பரப்பினானோ அவனின் பாவங்கள் இவன் தலை மீது சுமத்தப்படும்.
ஒரு ஹதீஸில்...
عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «أتدرون من المفلس؟» قالوا: المُفْلِس فينا من لا دِرهَمَ له ولا مَتَاع، فقال: «إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شَتَمَ هذا، وقذف هذا، وأكل مال هذا، وسَفَكَ دم هذا، وضرب هذا، فيعطى هذا من حسناته، وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يُقْضَى ما عليه، أخذ من خطاياهم فَطُرِحتْ عليه، ثم طُرِحَ في النار».
[صحيح] - [رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5037)
குர்ஆனில்...
اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.(அல்குர்ஆன் : 24:11)
அவதூறான செய்தியை செவியுற்றால்...
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 24:12)
يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (அல்குர்ஆன் : 24:17)
அவதூறு பரப்புவோருக்கு தண்டனை.
وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்குர்ஆன் : 24:4)
இதிலிருந்தே இஸ்லாம் அவதூறு பரப்புவதை எத்தகைய ஒழுக்கக்கேடான குற்றமாகப் பார்க்கிறது என்பதை எவரும் அறியலாம்.
தீமையை பரப்பாதீர்!
நன்மையானவற்றையே பரப்பவேண்டும்.ஒருவன் செய்த குற்றம் ஊர்ஜிதமாக தெரிந்தாலும் கூட அதனை ஊரெல்லாம் பரப்பிக்கொண்டு திரிவது முஃமினுக்கு அழகல்ல.
அசிங்கமான,அருவருப்பான செய்திகள் பரவுவதை அல்லாஹ் விரும்புவதில்லை வெறுக்கின்றான்,அதனை பரப்புபவர்களுக்கு வேதனை உண்டு என அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 24:19)
அல்லாஹுத்ஆலா,அவதூறு போன்ற பெரும் பாவங்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக!ஆமீன்...
No comments:
Post a Comment