Wednesday, 11 May 2022

ஜும்ஆ பயான் 13/05/2022.

தலைப்பு :

மார்க்க கல்வியின் அவசியம்.

கல்வி மனிதனை ஏனைய படைப்பினங்களை காட்டிலும் சிறப்பானவனாக ஆக்குகின்றது.

அல்லாஹுதஆலா மனிதனை படைத்தபோது,அவனுக்கு எல்லாவற்றையும் கற்பித்ததாக அருள்மறையாம் குர்ஆன் கூறுகிறது.

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.           (அல்குர்ஆன் : 2:31)


கல்வி என்றாலே இறைகல்வியாகிய மார்க்க கல்விக்கு தான் சொல்லப்படும்.உலகில் கல்வி என்கிற பெயரில் உள்ள இலக்கணம்,இலக்கியம்,மருத்துவம்,வரலாறு,அறிவியல்,விஞ்சானம்,உயிரியல்,வேதியல்,இயற்பியல்,பொறியியல் இதுப்போன்றவை அனைத்துமே கல்வியல்ல கலைகளாகும்.

மனிதப்படைப்பின் நோக்கத்தை உணர்த்தி,அறியாமை இருளின் விளிம்பு நிலையில் உள்ள மனிதனுக்கு அறிவொளி எனும் நேர்வழிச் சுடரை காட்டி அவனை இறைநெருக்கம் பெற்றவானாக மாற்றக்கூடிய கல்வியே மார்க்க கல்வியாகும்.

العلم نور والجهل ظلمة

கல்வி,ஒளியாகும்.அறியாமை இருளாகும்.

கல்வி எனும் செல்வத்தை எவரும் திருடவோ,அபகரிக்கவோ,தீயில் கரிக்கவோ இயலாத பொக்கிஷமாகும்.

 قال حضرت علی رضی اللہ عنہ : العلم باق لا یزال

ஹழ்ரத் அலி (ரலி)அவர்கள் சொன்னார்கள்:"கல்வி நிலையான செல்வமாகும்,அதற்கு அழிவென்பதே இல்லை".

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் செய்த அரும் பணிகளில் முதன்மையானது,மக்களுக்கு இறைகல்வியை போதிப்பதாகும்.

அதனால் தான் மார்க்க கல்வி கற்போர் நபிமார்களின் வாரிசு எனும் சிறப்பை பெறுகின்றனர்

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:إنَّ العلماءَ ورثةُ الأنبياءِ، وإنَّ الأنبياءَ، لم يُوَرِّثوا دينارًا، ولا درهمًا، إنما وَرّثوا العلمَ، فمن أخذه أخذ بحظٍّ وافرٍ (رواه أبو داود (3641)، والترمذي (268

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்:

"உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்கள்.நபிமார்கள் திர்ஹமயோ,தீனாரையோ அனந்தர சொத்தாக்கிக்கொள்ளவில்லை.அவர்கள் கல்வியையே சொத்தாக்கிக்கொண்டார்கள்.எவர்  அதனை தனதாக்கி கொண்டாரோ, அவர் நிறப்பமான ஓர் பங்கை தனதாக்கிக்கொண்டார்"

மார்க்க கல்வி கற்பதன் அவசியத்தை குர்ஆன்,ஹதீஸ்களின் வாயிலாக வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:

طلبُ العلمِ فريضةٌ على كلِّ مسلمٍ.

{مشكوة المصابيح،کتاب العلم}

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்:"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக்கடமையாகும்"

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:

الكلمةُ الحِكْمَةُ ضالَّةُ المؤمنِ، فحيثُ وجَدَها فهو أَحَقُّ بها. {سنن الترمذي،حدیث نمبر :2687}

"கல்வி ஞானம் என்பது முஃமினின் தொலைந்துப் போன பொருளாகும்.அதனை எங்கு கண்டாலும் எடுத்துக்கொள்வதற்கு அவன் தகுதியானவனாவான்"

மார்க்க கல்வி,இறைசிந்தனையையும், இறைநெருக்கத்தையும் பெற்றுத்தரும் மனிதனை ஒழுக்கத்தில் சிறந்த நன்நெறியாளனாக மாற்றும்.உயர்ந்த கலாச்சாரத்தையும் சிறந்த வாழ்கை முறையையும் கற்பிக்கும்.

இஸ்லாம் வளர்வதற்கும், நிலைத்திருப்பதற்கும் மார்க்க கல்வி அவசியமாகும்.


இன்றைய மத்ரஸாக்களின் நிலை?

மக்களை நன்நெறிபடுத்தி மார்க்க அறிஞர்களாக ஆக்கும் மத்ரஸாக்களில் கல்வி கற்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது அறிஞப்பெருமக்களுக்கும்,மார்க்க பற்றாளர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

இன்நிலை தொடருமானால் நாளைய இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்தி நன்நெறிப்படுத்திட ஆலிம்கள் இல்லாமல் பெரும் அழிவையும்,அபாயத்தையும் இஸ்லாமிய சமூகம் சந்திக்க நேரிடும்.

இன்றைய இஸ்லாமியர்கள் உலக கல்விக்கு தரும் முக்கியத்துவத்தில் சிறிதளவுக்கூட மார்க்க கல்விக்கு தருவதில்லை.

தன் குழந்தைகளின் எதிர்க்காலத்தை கருதி சிறுபிராயத்திலிருந்து இளமைபருவம் வரை சிலப்பல இலட்சங்களை  உலகக்கல்விகாக செலவிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் அடிப்படை மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்கு அவகாசம் அளிப்பது கிடையாது.

விளைவு இன்றைய வளரும் இளம்தலைமுறையினருக்கு குர்ஆனில் உள்ள சிறிய சூராக்கள்,துஆக்கள் மனனமாக தெரிவதில்லை.

மார்க்கத்தின் சில அடிப்படை சட்டங்கள் தெரிவதில்லை.குறைந்த பட்சம் குர்ஆனை பார்த்து ஓத தெரிவதில்லை.இவ்வளவு ஏன் இஸ்லாத்தின் அடிப்படை கலிமா கூட சொல்லத் தெரிவதில்லை.

மார்க்க கல்வி இல்லையேல் இஸ்லாம் அழிந்துப்போகும் என்பதனை பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.

عَنْ عَبْدِ اللَّہِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّہِ صَلَّی اللَّہُ عَلَیْہِ وَسَلَّمَ: إِنَّ اللَّہَ لَا یَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا یَنْتَزِعُہُ مِنَ الْعِبَادِ وَلَکِنْ یَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاء ِ حَتَّی إِذَا لَمْ یُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُء ُوسًا جُہَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَیْرِ عِلْمٍ فضلوا وأضلوا".(متفق علیہ، مشکوٰة المصابیح:33)

 நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்:"அல்லாஹுதஆலா அடியார்களிடமிருந்து ஒரே அடியாக கல்வியை கைப்பற்றி கொள்ளமாட்டான்.உலமாக்களை கைப்பற்றுவதன் வழியாக இல்மை கைப்பற்றுவான்.

கடைசியில் ஒரு ஆலிம் கூட இருக்கமாட்டார்.

மக்கள் முட்டாள்களை தலைவர்களாக்கிக்கொள்வார்கள்.(அவனிடம் மார்க்க சட்டங்களை)கேட்ப்பார்கள்.அவன் கல்வியறிவன்றி ஃபத்வா கொடுப்பான்.எனவே அவர்கள் வழிகெட்டுப்போவார்கள்.இன்னும் வழிகெடுப்பார்கள்"

மார்க்க கல்வி மனிதனை நாளை மறுமையில் வெற்றியாளானாக ஆக்கும்.இவ்வுலக வாழ்வை சிறந்ததாக்கும்.

மார்க்க கல்வியும்,மார்க்கத்தை கற்ற ஆலிம்களும் இருப்பது இன்றியமையாததாகும்,இல்லையெனில் இஸ்லாமிய சமூகம்  பெரும் அழிவை சந்திக்க நேரிடும்.

சென்னை காஷிஃபுல் ஹுதா மத்ரஸாவின் முன்னாள் முதல்வர் இறைநேசச்செல்வர் ஹழ்ரத் கிப்லா முஹம்மது யஃகூப் ஸாஹிப் (நவ்வரல்ஹு மர்கதஹு)அவர்கள் தங்கள் பயானில் இப்படி சொல்வார்கள்;"மத்ரஸாக்கள் இஸ்லாமிய தீனை பாதுகாக்கும் கோட்டைகள்.மத்ரஸாக்களில் இந்த தீனை பாதுகாப்பதற்காக (Soldiers) ராணுவவீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள்."

உண்மையிலே ஆலிம்கள் தீனைபாதுகாக்கும் ராணுவவீரர்களாவார்கள்.

பின் வரும் இறைவசனம் மார்க்கத்தை கற்கும் ஒரு பிரிவினர் இருப்பது அவசியம் என்கிறது.

وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً‌  فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ‏

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

(அல்குர்ஆன் : 9:122)


ஒரு ஆலிமின் இழப்பு, பேரழிவு.

 فقد روى الطبراني والبزار وأبو يعلى وابن عساكر عن أبي الدَّرداءِ رَضِيَ اللهُ عنهُ قال: قال صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «وَمَوْتُ الْعَالِمِ مُصِيبَةٌ لَا تُجْبَرُ، وَثُلْمَةٌ لَا تُسَدُّ، وَهُوَ نَجْمٌ طُمِسَ، مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِمٍ».

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்:"ஒரு ஆலிமின் மரணம் நிவர்த்தி செய்ய இயலாத பேரழிவாகும். இன்னும் அது ஓர் அடைக்கப்படாத துவாரமாகும். இன்னும் அது அழிக்கப்படும் ஒர் நட்சத்திரமாகும், மேலும் ஒரு ஆலிமின் மரணத்தை விட ஒரு கோத்திரத்தவரின் மரணம் எனக்கு எளிதானது"

கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ، فَإِنِّي خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ الْعُلَمَاءِ، وَلاَ تَقْبَلْ إِلاَّ حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْتُفْشُوا الْعِلْمَ، وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لاَ يَعْلَمُ، فَإِنَّ الْعِلْمَ لاَ يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا. حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ بِذَلِكَ، يَعْنِي حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ إِلَى قَوْلِهِ ذَهَابَ الْعُلَمَاءِ.

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அதனை எழுதி(த் தொகுத்து) வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும்போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுசெய்ய) ஏற்கக்கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும்வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசியமாக இருக்கும்போதே அழிகிறது.


மார்க்க கல்வியின் சிறப்புகள்.

حديث أبي الدرداء المشهور: “فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب”.

ஒரு ஆபிதை விட ஆலிமின் சிறப்பு,பௌவுர்ணமி இரவின் சந்திரன் மற்ற நட்சத்திரங்களை விடவும் சிறப்பாக இருப்பாதை போன்றதாகும்

وكذلك جاء في حديث معاذ بن جبل.

وفي حديث أبي أمامة: “فضل العالم على العابد كفضلي على أدناكم”.

ஒரு ஆபிதை விட ஆலிமின் சிறப்பு,உங்களில் தாழ்ந்த நபரை விடவும் எனது சிறப்பை போன்றதாகும்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال «ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا به إلى الجنة» (رواه مسلم).

எவர கல்வித் தேடி ஒரு பாதையில் செல்வாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்குவான்’ (முஸ்லீம்) 

قال رسول الله صلى الله عليه وسلم «إن الله وملائكته وأهل السموات والأرض حتى النملة في حجرها وحتى الحوت ليصلون على معلمي الناس الخير» (رواه الترمذي).

அல்லாஹுதஆலாவும்,அவன் மலக்குமார்களும்,வானம் பூமியில் உள்ளோரும்,புற்றில் இருக்கும் எறும்பும் கூட கல்வி கற்போருக்கு துஆ செய்கின்றனர்.கடலில் உள்ள மீனும் கல்வி கற்போரின் நலனுக்கு துஆ செய்கின்றது.

عن انس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع " , 

எவர் இல்மை கற்க வெளிக்கிளம்பி செல்வாரோ அவர் திரும்ப வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

قال رسول الله صلى الله: (أَفْضَلُ الصَّدَقَةِ أَنْ يَتَعَلَّمَ الْمَرْءُ الْمُسْلِمُ عِلْمًا ثُمَّ يُعَلِّمَهُ أَخَاهُ الْمُسْلِمَ) رواه ابن ماجه رقم/243،

தர்மங்களில் மிகச்சிறந்தது,முஸ்லிமான நபர் ஒருவர்,கல்வியைக் கற்று,அதனை முஸ்லிமான தன் சகோதரனுக்கு கற்றுக்கொடுப்பதாகும்.

உலமாக்களின் கண்ணியம்.

மூன்றுநபர்கள் கியாமத் நாளில் சிபாரிசு செய்வார்கள்.
عن أبيه عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «يشفع يوم القيامة ثلاثة: الأنبياء، ثم العلماء، ثم الشهداء»

நபிமார்கள் அடுத்து உலமாக்கள் அடுத்து ஷஹீதுகள்.

وَرُوِيَ عَن أبي مُوسَى قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبْعَث الله الْعباد يَوْم الْقِيَامَة ثمَّ يُمَيّز الْعلمَاء فَيَقُول يَا معشر الْعلمَاء إِنِّي لم أَضَع علمي فِيكُم لأعذبكم اذْهَبُوا فقد غفرت لكم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير

அல்லாஹுதஆலா கியாமத் நாளில் அடியார்களை எழுப்புவான் பின்பு உலமாக்களை தனியாக பிரிப்பான்.எனவே அல்லாஹ் கூறுவான்: உலமாக்களே!உங்களை வேதனைப்படுத்துவதற்காக உங்களுக்கு எனது கல்வியை கொடுக்கவில்லை,செல்லுங்கள் உங்ளை நான் மன்னித்து விட்டேன்.

ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮﺓ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: ” اﻏﺪ ﻋﺎﻟﻤﺎ ﺃﻭ ﻣﺘﻌﻠﻤﺎ، ﺃﻭ ﻣﺤﺒﺎ، ﺃﻭ ﻣﺴﺘﻤﻌﺎ، ﻭﻻ ﺗﻜﻦ اﻟﺨﺎﻣﺲ، ﻓﺘﻬﻠﻚ "

ஆலிமாக இரு அல்லது மாணவனாக இரு அல்லது (ஆலிமை)நேசிப்பவனாக இரு அல்லது (இல்மை) கேட்ப்பவனாக இரு,ஐந்தாம் நபராக ஆகாதே நீ நாசமடைவாய். 

மார்க்க கல்வியின் முக்கியாத்துவத்தையும்,சிறப்புகளையும் விளங்கி அமல் செய்யும் நல்லோர்களாக அல்லாஹுதஆலா நம்மை ஆக்கி அருள்புரிவானாக!ஆமீன்...


வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...