Thursday, 11 January 2024

ஜும்ஆ பயான் 12/01/2024

இஸ்லாம் கூறும் கனவின் தாத்பரியம்.

அல்லாஹுத்தஆலா இப்பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா உயிரினங்களை படைத்து.பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைப்பில் اشرفُ المخلوقات சிறந்தவனாகவும், பூமியில் தன்خلافت பிரதிநிதித்துவத்தின்  உரிமையாளனாகவும் ஆக்கினான்.

எந்த படைப்பிற்கும் கிடைக்காத பல பாக்கியங்களை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

இந்த அருட்கொடைகளில்  ஒன்று தான் கனவு.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை;கனவுக்கென்று ஒரு حقیقة தாத்பரியம்,உள்ளமை உண்டு.

ஆனால் நபிமார்களின் கனவைப் போல மற்றவர்களின் கனவு حجت شرعی ஷரிஅத்தின் ஆதாரமாகாது.அதனை நபித்துவத்தின் பரக்கத் என்றோ அல்லது வஹியின் நற்செய்தி என்றோ கூறலாம்.۔

முஃமினுக்கு கனவு  என்பது ஒரு நல்ல செய்தி,சுபச்சோபனமாகும். இதுக்குறித்து நபிமொழிகளில்...

1746 وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَنْ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلَّا الْمُبَشِّرَاتُ ، فَقَالُوا : وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் (முபஷ்ஷிராத்) தவிர நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன? என்று வினவினர்.

நபி  ﷺஅவர்கள் நல்ல மனிதர் காணும் நல்ல(உண்மையான) கனவு அல்லது அவருக்கு காட்டப்படும்,கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" என்று விடையளித்தார்கள்"(அறிவிப்பவர் : அதாஃ இப்னு யஸார்  (ரலி)அவர்கள்.)

சில நேரங்களில் கனவு எதிர்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வைப் பற்றி தெரிவிக்கலாம்.

திருமறையில் சூரா யூசுஃபில்,ஹழ்ரத் யூசுஃப்(அலை)அவர்கள் காணும் கனவைப்போல...

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.(அல்குர்ஆன் : 12:4)

அறிஞப்பெருமக்களின் கருத்து;

கனவு உறுதியாக நம்பத்தகுந்ததல்ல.காரணம் கனவு என்பதே انها تخمینیة அனுமானமானது.

நமது எண்ணங்கள், கவலைகள், சூழ்நிலைகள், போக்குகள் காரணமாக பல கனவுகள் நமக்குத் தோன்றுகின்றன.அவற்றில் பலவற்றில் அர்த்தமே இருக்காது.

1)கனவை கண்டவர் பொய் சொல்லலாம்

2)கனவு தெளிவில்லாமல் மூடலாக இருக்கலாம்.

3)கனவுக்கு விளக்கம் கேட்கப்படுபவர்,தகுதியில்லாதவராக இருக்கலாம்.

4)கனவுக்கு விளக்கம் தருபவர் தகுதியானவராக இருந்தாலும்,அவரும் சமயங்களில் தவறான விளக்கம் தரவாய்ப்புள்ளது.قد یصیب و قد یخطأ

கனவுக்கு விளக்கம் தருபவரின் தகுதி என்ன?

கல்விமானாகவும்,உண்மையாளராகவும்,கனவின் விளக்கம் அறிந்தவராகவும் இருப்பதாகும்.

இறை விசுவாசிகளுக்கு  சிலநேரங்களில் இடையூறு விளைவிக்க சில கனவுகளும் ஷைத்தான்களால் ஏற்படுகின்றன.

கனவின் வகைகள்.

அறிஞப்பெருமக்களின் கூற்று படி: 

நான்கு வகையான கனவுகள் உள்ளன:

1-மேலோங்கும் எண்ணம்-حديث النفس

وھی ما يُحدّث به المرء نفسه، ويشغل تفكيره في يومه، فيرى ما يتعلّق به في نومه

ஒருவன் அதிகமாக ஈடுபடும்  அலுவல்களும்,சூழல்களும்  அவன் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி, அவன்  உறங்கும் போது புலன்கள் அனைத்தும் ஓய்வுக்கொள்ளும் போது இதயத்தில் மேலோங்கிய எண்ணங்களும்,  நினைவுகளின் கற்பனை வடிவமாகவும். மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடும். 

இதற்கு حديث النفس-மேலோங்கும் எண்ணம் எனப்படும்.

2-ஷைத்தானின் தூண்டுதலால் உண்டாகும் கனவு-حدیث الشیطان 

وھی الرأیا الباطلةوھی من تحزین الشیطان ۔

 மனிதகுல விரோதியான ஷைத்தான்,மனிதனை பயமுறுத்த ,கனவில் அவனுடன் விளையாடுவான், இத்தீய கனவுகள் மனிதனுக்கு  தீங்கு விளைவிக்காது ஆனால் ஒரே நிபந்தனை அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது நபிﷺஅவர்களின் கட்டளை. அத்தகைய தீய கனவை நீங்கள் கண்டால்,அதற்கான தீர்வு ஹதீஸில் உள்ளது.

وعن أَبي سعيد الخدريِّ  أنَّه سمِع النَّبيَّ ﷺ يقول: إِذَا رَأى أَحدُكُم رُؤْيَا يُحبُّهَا فَإنَّما هِيَ مِنَ اللهِ تَعَالَى فَليَحْمَدِ اللهَ عَلَيهَا وَلْيُحُدِّثْ بِها وفي رواية: "فَلا يُحَدِّثْ بَها إِلاَّ مَنْ يُحِبُّ، وَإذا رَأَى غَيَر ذَلك مِمَّا يَكرَهُ فإنَّما هِيَ منَ الشَّيْطانِ فَليَسْتَعِذْ منْ شَرِّهَا وَلا يَذكْرها لأَحَدٍ فَإنَّهَا لا تضُّره" متفقٌ عَلَيْهِ.

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து) அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்க விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாக தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால் அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து) அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில் அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"

3-நல்ல கனவு-حدیث الملکہ  

وھی الرؤیا الصادقةوھی بشری من اللہ لعبد ہ 

இது அல்லாஹ்வின் புறத்திலிந்து அடியானுக்கு கிடைக்கும் ஒரு நற்செய்தியாகும்.

இது கடந்த கால, நிகழ்கால,எதிர்கால இவற்றில் மறைவானதை காட்டுகிறது, ஆனால் இதற்கான விளக்கம் விளங்குவதற்கு எளிதாகவோ  அல்லது சிரமமாகவோ  இருக்கலாம்.எனவே கனவின் விளக்கம் சொல்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்ததாகும்.

4-அல்லாஹுத்தஆலா  நேரடியாகவே கனவில் ஒன்றை வெளிப்படுத்தி காட்டிவிடுவதாகும்.

இது தெளிவானதாகவும், விளக்கத்தின் தேவையற்றதாகவும் இருக்கும். 

இறைதூதுவர்களான நபிமார்களின் கனவுகள் இவ்வகையை சார்ந்ததே ஆகும்.நபிமார்களுக்கும்,சாதாரண மக்களுக்கும் உள்ள கனவுகளுக்கு இடையிலான வேறுபாடு உண்டு.

நபிமார்களின் கனவும் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட وحی தூதுச்செய்தியே ஆகும். அதிலிருந்து பெறப்படும் செய்தி,சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியானதாகும்.

நபிமார்களின் கனவும்  வஹியின் ஒரு வகையே...

قالت عائشة رضي الله عنها : ( أول ما بدئ به رسول الله - صلى الله عليه وسلم - من الوحي الرؤيا الصالحة في النوم ، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ) متفق عليه .

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இறைத்தூதர்(ﷺ)அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வஹீ)இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது.

அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது.

ஒரு சாதாரண மனிதனின் கனவில் இருந்து பெறப்பட்ட செய்தி நிச்சயமானது என உறுதியாக கூறமுடியாது.

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏

 (நபியே! நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

நபி இப்ராஹிம் (அலை)

 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(அல்குர்ஆன் : 37:102)

நபியையும் தோழர்களையும் உம்ரா செய்ய விடாமல் தடுத்தபோது பெருமானார் கண்ட கனவு(மக்கா வெற்றியின் அடையாளம்)

لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌  لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ

கனவை யாரிடமாவது கூறலாமா?கனவின் விளக்கத்தை எவரிடமாவது கேட்கலாமா?

கனவின் விளக்கம் கூற தகுதியானவர்;முதலில் அவர் குர்ஆன்,ஹதீஸை நன்கு பயின்ற ஆலிமாக இருந்து,கனவின் விளக்கும் குறித்த கலையில் தேர்ச்சிப்பெற்றவராக இருக்கவேணடும்.

அல்லாமா முஹம்மதுப்னு ஸீரீன்(ரஹ்)அவர்கள் கனவிற்கென்று تفسير الأحلام தப்ஸீருல் அஹ்லாம் என்ற தனி கிதாபையே எழுதியுள்ளார்கள்.

அதில் இமாம் அவர்களின் கூற்று:நல்ல கனவை கூட பொதுவாக யாரிடமும் சொல்லாமல் இருப்பதே சிறந்தது.

கெட்ட கனவை அறவே யாரிடமும் கூறக்கூடாது ஹதீஸில் வருவதைப்போல "அவூது" ஓதி இடது புறம் மூன்று முறை துப்பிக்கொண்டலே அக்கனவு எந்த தீங்கும் விளைவிக்காது.

ஆனால் நல்ல,கெட்ட எந்த கனவாக இருந்தாலும் அதனை பிறரிடம் தெரிவித்து அதற்கு அவர் நல்ல,கெட்ட எந்த பலனை  கூறினாலும் அது பலிக்கவாய்ப்புண்டு எனவே எந்த கனவாக இருப்பினும் அதனை எவரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.

وہی علی رجل طائر مالم یحدث بہا فاذا حدث بہا وقعت

(مشکوٰة: ۳۹۶) ”

குர்ஆனில் யூசுஃப் நபியிடம் விளக்கம் கேட்கும் இருநபர்களில் ஒருவர் அதற்கு விளக்கம் நீ கழுவேற்றப்படுவாய்  உன் சிரசை பினம்தின்னி பறவைகள் கொத்தி திண்ணும் என்று கூறிய பின்னர் அப்படி ஒரு கனவை நான் காணவில்லை என்று அவர் கூறுவார்.அதற்கு யூசுஃப் நபி உண்மையோ,பொய்யோ உன் கனவிற்கு நான் கூறிய பலன் கண்டிப்பாக நடக்கும் என்பார்கள்.

يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِ‏

“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).(அல்குர்ஆன் : 12:41)

கெட்ட கனவை யாரிடமும் கூறவேண்டாம்.

جاءَ رَجُلٌ إلى النَّبيِّ ﷺ فَقالَ: يا رَسولَ اللهِ، رَأَيْتُ في المَنامِ كَأنَّ رَأْسِي قُطِعَ، قالَ: فَضَحِكَ النَّبيُّ ﷺ، وَقالَ: إذا لَعِبَ الشَّيْطانُ بأَحَدِكُمْ في مَنامِهِ، فلا يُحَدِّثْ به النّاسَ. وفي رِوايَةٍ: إذا لُعِبَ بأَحَدِكُمْ، وَلَمْ يَذْكُرِ الشَّيْطانَ.

الراوي: جابر بن عبدالله • مسلم، 

ஒரு மனிதர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என் தலை துண்டிக்கப்படுவதைப் போன்று கனவு பார்த்தேன் அப்போது பெருமானார் சிரித்தார்கள். உங்களில் யாரிடமாவது கனவில் சைத்தான் விளையாடினால் அதை மக்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டாம்.

கனவின் ஒழுக்கங்கள்.

அல்லாமா இப்னு ஹஜர்(ரஹ்)அவர்கள் நல்ல,கெட்ட கனவுகளின் ஒழுக்கங்களை கூறியுள்ளார்கள்

قال ابن حجر : فحاصل ما ذكر من أدب الرؤيا الصالحة ثلاثة أشياء :

நல்ல கனவு கண்டால் பேணவேண்டி ஒழுக்கங்கள் மூன்று

 . أن يحمد الله عليها .

1)நல்ல கனவிற்காக அல்லாஹுவை புகழ்வது

 . وأن يستبشر بها .

2)அதனால் நல்ல பலன் கிடைக்க அல்லாஹுவிடம் துஆ செய்தல்

وأن يتحدث بها لكن لمن يحب دون من يكره .

3)நம் நலம் விரும்புபவரிடம் கனவை சொல்வது,நம்மை வெறுப்பவரிடம் கனவை சொல்லாமல் இருப்பது

தீய கனவு கண்டால்...

  وحاصل ما ذكر من أدب الرؤيا المكروهة أربعة أشياء :

1)அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுவது

 . أن يتعوذ بالله من شرها .

2)ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுவது

 . ومن شر الشيطان .

3)தீய கனவு கண்டு தூக்கத்திலிருந்து விழித்தால்  இடது புறம் மூன்று முறை துப்பிக்கொள்வது.

 . وأن يتفل حين يهب من نومه عن يساره ثلاثا .

4)கெட்ட கனவை அறவே யாரிடமும் சொல்வதை தவிர்ப்பது.

 . ولا يذكرها لأحد أصلاً .

5)இரண்டு ரகஅத் தொழுவது.

இமாம் புகாரி(ரஹ்)அவர்களின் அபுஹுரைரா(ரலி)அவர்களின் அறிவிப்பில்;"தீய கனவு கண்டால் அதனை யாரிடமும் சொல்லவேண்டாம் அவர் எழுந்து இரண்டு ரகஅத் தொழுதுக்கொள்ளட்டும்"என நாயகம்ﷺஅவர்கள் கூறியுள்ளார்கள்.

هـ. ووقع ( في البخاري ) في باب القيد في المنام عن أبي هريرة خامسة وهي الصلاة ولفظه فمن رأى شيئا يكرهه فلا يقصّه على أحد وليقم فليصلّ ووصله الإمام مسلم في صحيحه .

6)தீய கனவு கண்டவர் ஒருக்களித்து படுத்திருந்தால் நிமிர்ந்து நேராக படுத்துக்கொள்ளவும்

و. وزاد مسلم سادسة وهي : التحول من جنبه الذي كان عليه .....

وفي الجملة فتكمل الآداب ستة ، الأربعة الماضية ، وصلاة ركعتين مثلا والتحوّل عن جنبه إلى النوم على ظهره مثلا .

انظر : " فتح الباري " ( 12 / 370 ) .

(நூல்:ஃபத்ஹுல் பாரி)

அல்லாமா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி(ரஹ்)அவர்கள்: நல்ல,சிறந்த கனவுகளாக ஒன்பது கனவுகளை கூறியுள்ளார்.

1)நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ﷺஅவர்களை கனவில் காண்பது.

2)சுவனம் அல்லது நரகத்தை கனவில் காண்பது.

3)நல்லோர்களை,நபிமார்களை கனவில் காண்பது.

4)பரகத் பொருந்திய புனித இடங்களை காண்பது.காபதுல்லாஹ்வை கனவில் காணுவதைப் போல

5)வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வை கனவில் காண்பது.

 எ.கா ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டு,பின் நாட்களில் அப்பெண் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதை போல 

6)கடந்த கால நிகழ்வுகளை கனவில் நிஜமாகப் பார்ப்பது.

 எ.கா ஒருவர் இறந்து விட்டதை போல கனவு கண்டு பின்னர் உண்மையிலேயே அவர் இறப்பு செய்தி வருவது.

7)நம் குறைபாட்டை தெரிவிக்கும் ஒன்றை கனவில் காண்பது.

எ.கா ஒரு நாய் ஒருவரைக் கடிப்பதை அவர் கனவு கண்டார். என்றால் அவர் கோபமாக இருக்கிறார், அவர் கோபத்தை குறைக்க வேண்டும் என்பது அதன் விளக்கம்.

8)ஒளி(வெளிச்சம்) மற்றும் ஆரோக்கியமான உணவுகளான பால், தேன் மற்றும் நெய் போன்றவற்றைக் கனவு காண்பது.

9)மலக்குமார்களை கனவில் காண்பது.

(حجة اللہ البالغہ:۲/۲۵۳)


உஹத் போர் பற்றி.

عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ أُرَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ فِي رُؤْيَاىَ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ بِهِ اللَّهُ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ "".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுதுப போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய அந்தஸ்து (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.            (ஸஹீஹ் புகாரி : 4081

ஸஹர் நேரம்.

- عن أبي سعيد، عن النبي صلى الله عليه وسلم، قال: «أصدق الرؤيا بالأسحار (أخرجه الترمذي

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:ஸஹர் வேலையில் காணும் கனவு உண்மையானதாகும்.

(அறிவிப்பவர்:அபுஸஈதுல் குத்ரீ(ரலி)அவர்கள் )

ஸஹர் நேரம் என்பது பெரும்பாலும் அந்த நேரத்தில் எண்ணங்கள் ஒருமுகப்பட்டு, சிந்தனைகள் சிதறாமல் அமைதியாக இருக்கும் வேலை, மேலும் தொழுகைக்காக மலக்குமார்கள் இறங்கும் வேலை,துஆக்கள் கபூலாகும் நேரம் என்பதால் சஹர் நேரக்கனவு நல்ல உண்மையான கனவாகும்.

இருப்பினும், ஒரு கனவை உண்மையானது,அதன் நிகழ்வு நிச்சயமானது என்று ஒரு கனவைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது.

ஏனெனில் ஒரு நல்ல கனவு என்பது அல்லாஹ்வின் வழிகாட்டுதலே தவிர ஷரிஅத்தின் ஆதாரம் அல்ல.

கனவில் கண்ட விஷயம் நிகழ்வில் நடக்கும்போது, ​​அந்த கனவு உண்மையானது என்பது உறுதியாகும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களை யாராவது கனவில் கண்டால், அந்த கனவு உறுதியாக உண்மையாகவும் சரியாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அது பொய்யோ  அல்லது ஏமாற்றமோ  என்கிற சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

கனவில் நபியை பார்ப்பது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ""مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي"".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி : 6997.)

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من رأني في المنام فسيراني في اليقظة، ولا يتمثل الشيطان 

கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். என்று இறைத்தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:’நபிﷺஅவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபிﷺஅவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)’ என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹுத்தஆலா கண்மணி நாயகம்ﷺஅவர்களை கனவில் தரிசிக்கும் பாக்கியத்தையும்,அன்னவர்களின் ரவ்ளாவை ஜியாரத் செய்யும் வாய்ப்பையும் நமக்கு தந்தருள்ப்புரிவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


  

Thursday, 4 January 2024

ஜும்ஆ பயான் 05/01/2023

தலைப்பு :

குடும்பத்திற்காக செலவு செய்தல்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)

இன்றைய அதிவேகமான தொழிநுட்ப வளர்ச்சி,  மனித வாழ்வை மிகவும் சீர்க்குழைத்துக்கொண்டிருக்கின்றது.

நன்மையை காட்டிலும் தீமை மிகைத்து காணப்படுகிறது.

நம் வாழ்வின் தீமைகளில் மிக முக்கியமானது சக மனிதனின் உரிமை பறிக்கப்படுவதும்,உரிமைமீறுதலுமே ஆகும்.

இதற்கு  அனுதினமும் கண்முன்னே நாம் காணும் உதாரணங்களே சான்றுகளாகும்.

#நாள்முழுக்க பாடுப்படும் கூலித்தொழிலியின் கூலியை குறைத்து கொடுக்கப்படுகிறது.

#ஆசிரியர்,இமாம்,நியாயமாக வேலை செய்பவர்களின் வருமானத்தை விடவும் அரசியல்வாதிகள்,கூத்தாடிகள்,சமூகவிரோதிகளிடம் பணபுழக்கம் அளவுக்கு மீறி உள்ளன.

உரிமைமீறல்களில் மிக மோசமானது குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்கள்,மனைவி மக்கள் உடன் பிறந்தோரின் உரிமைகளை மீறுதலே ஆகும்.

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌  

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:34)

எத்தனையோ இஸ்லாமிய குடும்பங்களின் இன்றைய பரிதாப நிலை;

கணவன்மார்கள் தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமே என வாழ்ந்து வருகின்றனர். வீட்டுச் செலவுக்கு பணம் தருவதில்லை.

இதனால் இஸ்லாமிய குடும்ப பெண்மணிகள் குடும்ப கஷ்டத்திற்காக குறைந்தஊதியத்திற்கு கூலிவேலைக்கோ அல்லது கம்பெனிக்கோ வேலைக்கு சென்று, வீட்டுச் செலவுகள் அனைத்தையும் ஏற்று, சிரமத்தோடு குடும்பத்தை  நடத்தி  வருகின்றனர். 

குடிகார கணவன்மார்களால், வருமானத்திற்கு நாதியில்லாமல் எத்தனையோ குடும்பங்களில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் அவலமும் தொடர்கதையாக உள்ளது.

சிலர் நல்ல வேலையில் இருந்தும், பணம் சம்பாதிக்கும் வெறியில், குதிரை ரேசுக்கு போவதும், சூதாடுவதுமாக குடும்பத்தை தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

குடும்ப செலவினங்கள் குடும்ப தலைவரின் பொறுப்பே ஆகும் என்பதை மேலுள்ள இறைமறை வசனம் வலியுறுத்துகின்றது.

ஆனால் இனறு தம் தாய்,தந்தையரின் கடமையை மறந்து நண்பர்களோடு செலவுசெய்வதை பெருமையாக கருதுபவர்களுக்கும்.

மனைவி,மக்களை கவனிக்காமல் ஊதாரித்தனமாக மனம் போனப்போக்கில் வாழ்பவர்களுக்கும் பின்வரும் நபிமொழி நல்லதோர் பாடமாகும்.

قَالَ اَلنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ : خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَ أَنَا خَيْرُكُمْ لِأَهْلِي.

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே ஆவார், நான் என் குடும்பத்திற்கு சிறந்தவனாக இருக்கின்றேன்.

وقال صلى الله عليه وسلم: كفى بالمرء إثما أن يضيع من يقوت. رواه أحمد وأبو داود وغيرهما.

''தான் உணவளிக்க வேண்டியவருக்கு உணவளிக்காமல் இருப்பது ஒன்றே, மனிதனுக்கு பாவம் (செய்தவன்) என்பதற்கு போதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி)  அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 294)

குடும்ப தலைவனின் பொருளாதாரத்தில் முழுஉரிமை பெற்றவர்கள் மனைவி,மக்கள்,பெற்றோர்களே ஆவார்கள்.இவர்களின் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வது குடும்பதலைவரின் மீது கடமையாகும்.

குர்ஆனில்...

  وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ 

 (ஷரீஅத்தின்) முறைப்படி அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; (அல்குர்ஆன் : 2:233)

ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

عن عائشة ـ رضي الله عنها: أن هند بنت عتبة قالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم، فقال: خذي ما يكفيك وولدك بالمعروف. متفق عليه.

 ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ : الْمُسْلِمُ إِذَا أَنْفَقَ نَفَقَةً عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا فَهِيَ لَهُ صَدَقَةٌ". (مسند الدارمي، باب في النفقة علی العیال: ۳/۱۷۴۳، ط:دارالمغنی)

 ‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி) 

ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ 

வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. 

"விட்டாரில் நீ செலவளிப்பதே கூலியால்  மிக உயந்தது"(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும் என்கிறது அருள்மறை...

لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏

தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.(அல்குர்ஆன் : 65:7)

وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله تعالى عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذُو مَالٍ، وَلَا يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِثُلُثِهِ؟ قَالَ: الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ. مُتَّفَقٌ عَلَيْهِ

உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. என்கிறது நபிமோழி.

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:" إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ"

இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

குடும்பத்திற்குச்செலவு செய்வதன் சிறப்பை அறிந்து கொள்ள அபூதல்ஹா (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துச் சொல்கிற சம்பவம் நல்ல சிறந்த உதாரணம்.

عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك يقول : كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا من نخل ، وكان أحب أمواله إليه بيرحاء ، وكانت مستقبلة المسجد ، وكان رسول الله - صلى الله عليه وسلم - يدخلها ، ويشرب من ماء فيها طيب ، قال أنس : فلما نزلت لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة ، فقال : يا رسول الله إن الله يقول : لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب أموالي بيرحاء ، وإنها صدقة لله أرجو برها وذخرها عند الله ، فضعها يا رسول الله حيث شئت ، قال : فقال رسول الله - صلى الله عليه وسلم - : بخ ذلك مال رابح ، ذلك مال رابح ، وقد سمعت ما قلت ، وإني أرى أن تجعله في الأقربين ، فقال أبو طلحة : أفعل يا رسول الله ، فقسمها أبو طلحة بين أقاربه وبني عمه .

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டார்.

குடும்பத்திற்காக செலவு செய்தலின் அவசியம்

ஒவ்வொரு முஸ்லிமும் தமது அன்றாட வாழ்வியல் செயல்முறைக்கு திருக்குர்ஆன் வழிகாட்டலையே பின்பற்ற வேண்டும். அதில் முக்கிய பங்கு வகிப்பது, வாழ்வாதாரத்துக்கு உணவு, உடை, உறைவிடம் என மனிதனின் முக்கியத் தேவை பொருளாதாரமாகும்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)


سَمِعَ أَبَا مَسْعُودٍ الْبَدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ "".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தன் குடும்பத்தினருக்காகச் செய்யவும் செலவும் தர்மமே ஆகும். 

இதை பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.     (ஸஹீஹ் புகாரி : 4006. )

மனைவி மக்களைக் கவனிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமை. கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். கூடுதலாக தர்மம் செய்த நன்மையையும் இறைவன் தருகிறான் என்பதைத்தான் நபியவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நமது குடும்பத்தைச் சாராத நபர்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அதற்கு தர்மத்தின் நன்மை மட்டும்தான் கிடைக்கும். ஆனால் குடும்பத்திற்குச் செலவளித்தால் இரட்டை நன்மைகள் கிடைக்கிறது.

எனவே கணவன்மார்கள் செலவு செய்யும் போது அடிக்கடி தாங்கள் செலவு செய்வதைக் குத்திக்காட்டி, எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாது. ஏனெனில் அப்படி நமது செலவைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் நாம் இறைவன் சொன்னதற்காகச் செய்யவில்லை என்றாகிவிடும். மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்பத் தலைவர்கள் செலவு செய்திட வேண்டும்.

தன்னிறைவு பெற்ற நிலையில் குடும்பத்தை விட்டுச்செல்லுதல்

عَنْ سَعْد ٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ بِمَكَّةَ، فَقُلْتُ لِي مَالٌ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ فَالثُّلُثُ قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً، يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَمَهْمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امْرَأَتِكَ، وَلَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ، يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيُضَرُّ بِكَ آخَرُونَ "".

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.        (ஸஹீஹ் புகாரி : 5354. )

சேமிப்பின் அவசியம்

ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது அவசியம்.

சேமிப்பு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் பணமாக, தங்கமாக, நிலமாக என்று எது சரிப்பட்டு வருகிறதோ லாபம் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் உங்கள் சேமிப்பை தொடரலாம்.

சில நேரங்களில் சேமிப்பிற்காகப் பணம் ஒதுக்குவது கடுப்பாகவே இருக்கும், அதுவும் பணப் பற்றாக்குறையான சமயங்களில்

இதுக்கு வேற மாசாமாசம் கொடுக்க வேண்டியதாக இருக்குதே! என்று எரிச்சலாக இருக்கும்.

நமக்கு இந்தப்பணம் மொத்தமாகக் கிடைக்கும் போது தான், இதனுடைய அருமை புரியும்.

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًا‌ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ‏

பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக யூசுப் (அலை) அவர்களின் திட்டமும் இதனையே சுட்டிநிற்கிறது. அவர் தொடராகப் பயிரிட்டார். வளமான ஏழு வருடங்களின் அறுவடையை சேமித்தார். சிக்கனமாகவே பயன்படுத்தினார். 'நீங்கள் ஏழு வருடங்களுக்குத் தொடராக விவசாயம் செய்வீர்கள். உண்பதற்காக பயன்படுத்தும் சிறிய பகுதியைத் தவிர பெரிய பகுதியை அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுங்கள்' (12.47)

அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுதல் என்பது சேமிப்பதற்கும், பஞ்சமான காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்வதற்குமான உத்தியாகும்.

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا  فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا   رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌  وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌  ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ‏( 18:82) 

சூறா கஹ்பில் மூஸா (அலை) அவர்களும் அறிவுள்ள ஒரு நல்ல மனிதரும் சென்ற பயணத்தின் போது ஒரு சிறந்த பெற்றார் தனது பிள்ளைகளின் நலன் நாடி மறைத்து சேமித்து வைத்திருந்த புதையலை பற்றிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கைபரில் கிடைத்தவை மூலம் ஒரு வருடத்துக்கு குடும்பத்துக்கு தேவையானவைகளை சேமித்து வைத்திருந்தார்கள்.

அன்னார் பனூ நழீர் கோத்திரத்தின் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வார்கள். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமிப்பார்கள்.

எனவே சேமிக்கப் பழகுங்கள்.

சேமிப்பது சிரமமா?

சேமிப்பது கடினம் என்று நினைக்கிறார்கள், இல்லவே இல்லை.

சேமிக்க ஆரம்பித்தால் நமக்கே தெரியாமல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது.இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணையலாம்.

முதலில் பணம் கட்ட சிரமமாக இருக்கும், பின்னர் அது அப்படியே நமக்கு ஒரு பழக்கமாகி, சிரமமில்லாத ஒன்றாகி விடும்.

ஒரு நாள் பார்த்தால், அட! இவ்வளவு சேமித்து விட்டோமா! என்ற வியப்பாக இருக்கும்.பின்னர் ஏற்படும் பெரிய செலவிற்கு இந்தச் சேமிப்பு மிக உதவியாக இருக்கும்.

திட்டமிடுதல்.

وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

 சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:159)

திட்டமிடுதல் ரொம்ப முக்கியம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் எதுவுமே சரியாக வராது.

எனவே, நமது மாத பட்ஜெட் என்ன? அதில் எப்படி  செலவுகளைப் பிரிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும்.

இதற்காகத் திட்டமிடும் போதே, நமது அனைத்து செலவிற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும், அப்போது தான் இறுதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

சம்பளம் வந்த முதல் இரண்டு வாரம் மகிழ்ச்சியாகவும் கடைசி இரண்டு வாரம் நெருக்கடியாகவும் ஆவதற்கு திட்டமிடுதல் இல்லாமையே காரணம்.

புதுச் செலவை என்ன செய்வது?

திட்டமிட்டுத் தான் செய்கிறோம் ஆனால், சில நேரங்களில் திட்டமிடுதலில் இல்லாத செலவுகளும் திடீர் என்று வந்து விடுகின்றன, அப்போது என்ன செய்வது?

என்ன தான் திட்டமிட்டாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி புதிய அத்தியாவசிய செலவுகள் [நண்பர்கள் திருமணம், மருத்துவம், பரிசுப்பொருள்] வந்து விடும்.

இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாகப் பெற வேண்டியது இருக்கும்.

இது போல் என்ன செலவானாலும் அடுத்த மாதத்தில் குறைக்கக்கூடிய செலவுகளில் கையை வைத்துத் தான் ஆக வேண்டும், அப்போது தான் சமாளிக்க முடியும், இல்லை என்றால் கடன் என்பது தொடர் கதையாகி விடும்.

நம்மால் திரும்பக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே கடன் வாங்குவது  நல்லது.

ஆசைப்படலாமா?

என்றுமே வரவுக்கு மீறிச் செலவு செய்யவே கூடாது, இவ்வாறு செய்யப்படும் செலவுகளே நம்மைச் சிக்கலில் மாட்டி விடும்.

ஆசைப்படலாம்! ஆனால், அதற்குண்டான நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள்.

காலம் முழுவதும் ஒரே நிலையிலிருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள்.

எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?

முதலில் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், கடுமையா உழைக்கணும்.

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)

எனவே, எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம்.

வீண் விரயம் வேண்டாம்.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

ஆகவே, “நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவே இருக்கின்றனர் என்று ஊதாரித்தனமாக செலவு செய்பவர், ஷைத்தானின் சகோதர ராவார்” என ஊதாரியை ஷைத்தானோடு இணைத்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது.(நூல்: புகாரி)

அல்லாஹ் நம் குடும்பத்திற்காக நிரந்தரமாக செலவு செய்யும் பாக்கியத்தையும் செல்வத்தையும் தந்தருள்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 20 December 2023

ஜும்ஆ பயான் 22/12/2023

தலைப்பு: 

காக்கப்பட வேண்டிய வக்ஃபு சொத்துக்கள்.


"வக்ஃப்"என்றால் என்ன?

"வக்ஃப்"وقف இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் ஒரு முக்கிய பகுதியாகும், 

இஸ்லாமிய வளரும் தலைமுறையினர்,வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஈடேற்றத்திற்கு  வக்ஃப் பிரகாசமான பக்கமாக அமைகிறது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள், சமுதாயத்தின் நல்ல பல நோக்கங்களுக்காக வக்ஃப் எனும் தானத்தை வழங்கியுள்ளனர்.

"வக்ஃப்"وقف என்பது ஏழை, எளியவர்களுக்கு மட்டுமல்ல,  public works ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல்  அனைவருக்கும் பயனளிக்கும் பொதுப்பனி என்பதே  இதன் நோக்கமாகும்.

வக்ஃப் என்பதன் பொருள்: வக்ஃப் என்பதன் வரையறை, சொத்தின் லாபத்தை அனைவருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு உரிமையைத் தடுத்துவைத்துக்கொள்வதாகும்.அதை விற்கவோ மாற்றவோ முடியாது.

வக்ஃப் وقف என்பது وقف یقف ،وقفاََ وقوفاََ  என்கிற அரபி மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.இதன் அசல் பொருள்:الحبس والمنع அதாவது நிறுத்துதல், பிணைத்தல், எவராவது மூன்றாம் நபருக்குச் சொந்தமாவதைத் தடுப்பது. 

வக்ஃபின் சட்டம்:

வக்ஃப் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம்,  وقف تام(அதாவது முழுமையான) வக்ஃப் அவசியமாகும் . அதனால் அதை விற்பது, பரிசளிப்பது போன்றவை ஹராமும்,ஷரிஆ சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்.

ففي الصحيحين أن عمر رضي الله عنه قال: يا رسول الله ! إني أصبت مالاً بخيبر لم أصب قط مالاً أنفس عندي منه؛ فما تأمرني فيه ؟ قال: (إن شئت حبست أصلها وتصدقت بها, غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث)

உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி) 

இஸ்லாத்தின் முதல் வக்ஃப் நபி முஹம்மது ﷺ அவர்களால் செய்யப்பட்டது.நபி ﷺ ஏழு தோட்டங்களை வக்ஃப் செய்தார், இது இஸ்லாத்தின் முதல்  வக்ஃப் ஆகும். இந்த ஏழு தோட்டங்களும் உஹத் போரில் முஸ்லிம்களால் போரிட்டு கொல்லப்பட்ட "முகைரிக்" என்ற ஒரு  யூதருக்கு சொந்தமானதாகும். அவன் "நான் இறந்தால் எனது செல்வம் (சொத்து) ஹஸ்ரத் முஹம்மத்ﷺஅவர்களுக்கு சொந்தமாகட்டும்.அதனை .அல்லாஹ்வின் விருப்பப்படி செலவு செய்யட்டும்."என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.

இஸ்லாத்தில் இரண்டாவது வக்ஃப் ஹஸ்ரத் உமர் பாரூக் (ரலி)அவர்களால் செய்யப்பட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பல வக்புகளை அளித்தனர்.

வக்ஃபின் நோக்கம்:

இஸ்லாத்தின் நிதிஅமைப்பில் பொருளாதார ஸ்தரத்தன்மைக்கு வக்ஃப் ஒரு அடிப்படை இடத்தைப் பெற்றுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏழை, எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவும், முஸ்லிம்களை அறிவியல் மற்றும் கலை,கல்வி முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது. 

நோயுற்றோர் மற்றும் துன்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், 

கல்விமான்களுக்கு உதவவும், அறிவு ஜீவீகளின்  நிதி ஆதரத்திற்கும் இஸ்லாமிய வக்ஃப் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

வக்ஃபு சொத்தின் நிபந்தனைகள்.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, அதை வாரிஸ்தாரர்களோ அல்லது தனிநபரோ அல்லது ஆட்சியாளர்களோ உரிமைக் கொண்டாடமுடியாது.

ஒருவேளை ஆட்சியாளர்கள் வக்ஃபு  சொத்துக்களை தனி உரிமை கொண்டாடினால் அவர்களை எதிர்த்து போராடுவது முஸ்லிம்கள் மீது அவசியம்.

أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள். (நூல் : நஸாயீ- (4138)

அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

வக்ஃப் வாரியம் என்றால் என்ன?

வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.

தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது.

இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், 

முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது.

வக்ஃப் வாரியம் கடந்து வந்த பாதை.

இந்திய முஸ்லீம்களின் எழுச்சி,தொடர் போராட்டங்களின் எதிரொலியாக  அன்றைய காங்கிரஸ் அரசு 1954 வக்ஃப் சட்டம் என்று ஒரு நொண்டி வக்ஃப் சட்டத்தை உருவாக்கியது, இது முதன்முதலில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதில் ஏராளமான ஓட்டைகளும்,குறுக்கு வழிகளும்  இருந்தன. 

இந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் தலைமையிலிருந்து எதிர்ப்பு குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அரசு, வக்ஃப் சட்டம் 1959தை இயற்றியது.முந்தைய சட்டத்தை போன்று பல குறைபாடுகள் இதிலும் இருந்தன.

அவற்றை நீக்க 1964ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அதன் பிறகு இறுதி திருத்தம் செய்து 1969ல் இயற்றப்பட்ட சட்டம் தொடர்ந்து 26 ஆண்டுகளாக நாட்டில் செயல்பாட்டில் இருந்தது.

மொத்த வக்ஃப் சொத்துக்கள்.

இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை. ஆனால் இன்று அவை அனைத்தும் கானல் நீராய் மாரிப்போய் விட்டது. 

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.    (அல்குர்ஆன் : 2:188)

فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".

 நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள்.   (ஸஹீஹ் புகாரி : 2453.)

அடுத்தவர்களின் பொருளின் மீது அஞ்சி நடந்த நம் முன்னோர்கள்.

முஹத்திஸ்களின் அமீர் என்று போற்றப்பட்ட தபவுத்தாபியீன்களின் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள்.

சிரியா தேசம் சென்று அங்கிருக்கின்ற முஹத்திஸ்கள் இடத்தில் பாடம் படித்துவிட்டு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய சிறிய குச்சி ஒன்று இருக்கிறது.

அப்போதுதான் ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய குச்சி உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டு ஈராக்கிலிருந்து சிரியா தேசம் சென்றார்கள். அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்தக் குச்சியை யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குச்சியை கொடுத்துவிட்டு திரும்ப அவர்கள் ஈராக் வருகிறார்கள்.

இந்திய இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்தும்,வக்ஃப் சட்டம்1995ஐ திரும்ப பெறும் மசோதவும்.

நம் இந்தியத்தாய் திருநாட்டில் 35 வக்பு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.கர்நாடக வக்பு வாரியம் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய சிறந்த வக்ஃப் வாரியமாகும்.

நாட்டின் பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒப்பபீட்டளவில் மகாராஷ்டிரா வக்ஃப் வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது, 

அதிகளவில் சட்டவிரோத வக்ஃப் ஆக்கிரமிப்புகள் மகாராஷ்டிராவிலேயே நடந்துள்ளன.சில அரசியல் புள்ளிகள், மற்றும் வாரிய அதிகாரிகளின் துணையோடு

நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன.

தற்போதைய நாட்டின் வக்ஃப்  சொத்தின் மதிப்பு 1.20 லட்சம் கோடி அதாவது 12000 பில்லியன் டாலர் மதிப்புக்கு நிகர் ஆகும்.

இவற்றில் ஒரு பத்துசதவிகிதமாவது 10% அதாவது 12000 கோடியையாவது முஸ்லிம்களின் கல்வி, மருத்துவம் போன்ற சமூக மேம்பாடுகளுக்கு  முறையாக செலவிடப்பட்டால் அரசின் எந்த உதவியோ,ஒதுக்கீடோ இல்லாமலே தன்னிறைவான வளர்ச்சி அடைந்த சமூகமாக இஸ்லாமியர்கள் இருந்திருப்பார்கள்.(فکر وخبر۔آن لائن اخبار)

இந்தியாவில் வக்ஃபின் நிலை:

 நமது மாபெரும் இந்திய திருநாட்டில் வக்ஃப் விஷயத்தில் அரசு  தீவிரம் காட்டியிருந்தால், அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லாமல் போயிருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது முஸ்லிம்களிடம் எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முடிவில்லாத கலவரங்களால் இஸ்லாமிய சமூகம் நிலைகுலைந்து போய் இருந்தது.

முஸ்லிம்களின் உயிரும், உடைமையும் ஈவு இரக்கமின்றி சூறையாடப்பட்டு, பெரும் நில உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்களை ஏலம் விடப்பட்டன, எண்ணற்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள், தர்காக்கள், (கப்ருகள்)கல்லறைகள், மடங்கள், ஆஷுரா கானாகள், மதரஸாக்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டன.முஸ்லிம்கள் சுதாரித்துக் கொள்வதற்குள்ளாக நிலைமை மிக மோசமாக கை மீறி விட்டிருந்தது.

முஸ்லீம் மன்னர்கள், ஆட்சியாளர்கள், நவாப்கள் மற்றும் செல்வந்தர்கள் முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்த வக்ஃப் நிலத்தை, அரசு பல இடங்களில் பெரிய கட்டிடங்கள் கட்டி, பல ஏக்கர் நிலங்களுக்கு வேலி அமைத்து,மூடிவிட்டன. 

வக்ஃப் நிலங்கள் மிகக் குறைந்த வாடகையில் ஆக்கிரமிக்கப்பட்டன.

இன்றும், அரசு தனது அலுவலகங்களை எண்ணற்ற வக்ஃப் சொத்துக்களில் ஆண்டு வாடகைக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை நடத்தி வருகிறது.

இறுதியாக வக்ஃப் சட்டம் 1995 ஐ அரசு, உருவாக்கியது.ஆனால் வழக்கம் போல் இந்த சட்டத்தில் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

1995 சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்க துவங்கியதால் மற்றொரு சட்டத்தை அமைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. வக்ஃப் சட்டம் 2010 என்று பெயரிடப்பட்ட குழு அமைக்கப்பட்டது.

நிலத்தின் தற்போதைய சந்தைமதிப்பு, கடந்த கால நிலவரத்தை நாம் மதிப்பாய்வு செய்தால், கடந்த சில தசாப்தங்களில், நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும் முதலீடும் நிலத்தின் விலையை விண்ணுக்கு உயர்த்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 கார்ப்பரேட் கம்பெனி முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடம் கிடைப்பது கடினமாக இருந்த வேலையில். அரசு, சில சமயங்களில் வக்பு வாரியத்தின் அறங்காவலர்களிடமும், சில சமயங்களில் மத்திய வாரியம் முதல் மாநில வக்பு வாரியம் வரையிலான உயர் அதிகாரிகள் உட்பட அதிகாரிகளிடமும் வக்பு நிலங்களை  கேட்டு பெற்றன.

இதனால் ஏற்பட்ட மிக மோசமான விளைவு;

நாட்டின் பாரம்பரிய வக்பு சொத்தை  அரசும்,பன்னாட்டுநிறுவனங்களும்,தொழிற்சாலைகளும் நாசமாக்கின,

இதனை விடவும் மிகப் பெரிய இழப்பு. கோடிக்கணக்கான, ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்களை முஸ்லிம்களே விற்று நாசமாக்கினர் என்பது மிகவும் வருந்ததக்க செய்தியாகும்.

பல்வேறு குழுக்களை நிறுவுதல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள்.

வக்ஃப் சொத்துக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு குழுக்களை அமைத்தது. இதனுடன், பல கமிஷன்களும் வக்ஃப் விதிமுறைகளுக்கான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கின. இதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிட்டி, தேர்வுக்குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு போன்றவை அடங்கும்.

இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டால், முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடத்தக்க அளவில் அடைய முடியும், அவர்களிலுள்ள  வறுமையை அகற்றி ஓரங்கட்டப்பட்டு முடிவுக்கு கொண்டுவரமுடியும். 

ஆனால் இது சாத்தியமாகுமா?அரசு மனது வைத்தால் சத்தியமாகும். இந்திய முஸ்லிம்களின்  வளர்ச்சியும் செழுமையும்,இந்தியாவின் செழுமையும், வளர்ச்சியும் வளமும் அல்லவா?

20 கோடி முஸ்லிம்கள் அப்படியே தனித்து விடப்பட்டு, அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், அது நாட்டுக்கு பெருமையா?

வாகனத்தின் ஒரு சக்கரம் நன்றாகவும், மற்றொன்று பலவீனமாகவும் இருந்தால், உடலின் ஒரு உறுப்பு வலுவாகவும், மற்ற உறுப்பு செயலிழந்தும் பலவீனமாகவும் இருந்தால் அதனை என்னவென்று சொல்வது?

இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையும்,விரும்பமும் என்னவென்றால் நவாப்கள், மன்னர்கள், உன்னதமான தனவந்தர்கள்,  அர்ப்பணித்த வக்ஃப் சொத்துக்களுக்கு குறைந்தபட்சம் சட்ட உரிமையாவது கொடுக்கப்படவேண்டும், பல ஆண்டுகளாக அவற்றை அரசு வைத்திருக்கிறது, முஸ்லிம்களுக்கு நிலமோ,நிலம் சார்ந்த எந்த உரிமையும் இல்லை, 

குறைந்தபட்சம் தற்போதைய சந்தை நிலவர படி வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். வக்ஃப் சொத்துக்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை வைத்திருப்பவர்களை அகற்ற வேண்டும். பட்ஜெட்டில்  வக்ஃபிற்கு நிதிஒதுக்கப்படுகிறதா?தற்போது நாட்டில்,  இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக, அதிக பட்ச சொத்துக்கள்,நிலங்கள்,  வக்ஃப் வாரியத்திடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

1996ல், ராஜ்யசபா தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 2006ல் ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது.2008ல் பாராளுமன்ற  கூட்டுக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து கமிட்டிகளும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன.

சச்சார் கமிட்டி பரிந்துரைகள்:(வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்திட சச்சார் கமிட்டி முன்வைத்த பரிந்துரைகள்.)

1)நாட்டில் பரவலாக உள்ள  ஐந்து லட்சம் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கும் முறையை மேம்படுத்த வேண்டும், 

பொதுப்பணித்துறை, நீதி,நிர்வாக துறை அளவுக்கு வக்ஃப் வாரியத்தை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக ஆக்கப்படவேண்டும்.அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (2) சமூக நலன் தேசிய வக்ஃப் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட வேண்டும்.

 (3) ஐந்து லட்சம் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வரையறுக்கப்பட்ட வாடகை போன்ற சட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். 

(4) வக்பு வாரியத்துக்கு சட்டப்பூர்வ அமைப்பு என்கிற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்

(5)ஓராண்டுக்குள் அரசால் பயன்படுத்தப்படாத வக்பு நிலத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், எண்ணற்ற அரசு நிறுவனங்கள் வக்ஃப் சொத்துக்களை கைவசம் வைத்திருப்பதாகவும், இன்னும் சில சதுர அடி கட்டிடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு மீதமுள்ள நிலம் காலியாக இருப்பதும் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. 

6)அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள (காணி)சொத்துக்கள், அங்கு அரச கட்டிடம் இல்லாத அல்லது காலியாகக் கிடக்கும் காணிகள் முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கும் பொது சுகாதார நிலையங்களுக்கும் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.

 (7) அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை, 6(ஆறு)மாதத்திற்குள் காலி செய்து, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகையை மாற்றி, தற்போதைய சந்தை நிலவரப்படி வாடகை வழங்க வேண்டும்.

(8)வக்ஃப் வாரியத்தின் அனைத்து முடிவுகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் முஸ்லிம் தனிவாரிய சட்ட அமைப்பு மற்றும் இஸ்லாமிய சட்டங்களின்படி எடுக்கப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் ஜமாஅத்துகளின் பிரதிநிதித்துவம் அவசியம் ஆகும்.

(9)எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அல்லது உறுப்பினரும் வக்பு வாரியத்தின் தலைவராக இருக்கக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

10) ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

 (11) வக்ஃப் வாரியத்தின் குத்தகை 11 மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்றும் வக்பு வாரியத்தின் அறிவிப்பின் பேரில் உடைமைகளை காலி செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

ஜே.பி.சி.யின் பரிந்துரைகள்:

1)அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைச்சர்களின் தலையீட்டைத் தடுக்க, குத்தகை அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

 (2) வக்ஃப் சர்வே கமிஷன் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். 

(3)வக்ஃப் சொத்துக்கள் கணக்கெடுப்பில் ஆகஸ்ட் 15, 1947ல்  உள்ள படி அனைத்து வக்ஃப் நிலங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

 (4)மத்திய வக்ஃப் கவுன்சிலின் தலைவர் பதவியை எந்த அமைச்சருக்கும் வழங்கப்படக்கூடாது , ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். 

5) மத்திய வக்ஃப் கவுன்சில் செயலாளருக்கு இந்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் அரசு அதிகாரிகளின் தலையீடுகளை தடுக்க முடியும்.

 (6) சர்வீஸ் கார்டு தயாரிக்கும் போது, ​​.

வகஃப் சட்டம் 1954ன் படி, உயர்கல்வி பணியாளர்கள் முஸ்லீம்களாக மட்டுமே இருக்க வேண்டிய சட்டத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமே C.E.O. ஆக்கப்பட வேண்டும். 

(7) வகஃபின் மதிப்புமிக்க நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டாளருக்கும் வழங்கப்படக்கூடாது,  பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும். (8) குத்தகை நிலமாக வக்ஃபு சொத்தை, எந்த ஒரு தொழிலதிபர் அல்லது  தனிநபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்படக்கூடாது.

அது மருத்துவமனை அல்லது வணிகத் திட்டத்திற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்டாலும் சரியே.

 (9)வக்ஃப் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற சி.இ.ஓ.வுக்கு அதிகாரம் இருந்தும்,

 சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக C.E.Oமீது அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

வக்ஃப் சொத்துகளில் ஊழல்.

வக்ஃப் சொத்துகளில் ஊழல் தற்போது, ​​நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கதையாக ஆகிவிட்டது.

அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

உத்தரபிரதேசத்தில் வக்பு வாரியத்தின்  3000 ஆயிரம் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் தற்போதைய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும். 

நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும்,  வக்ஃப் சொத்துகளின் எண்ணிக்கை 1977 என்றும், அதில் 600 அரசு கட்டிடங்கள் மற்றும் நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்துள்ளன என்றும்  ஆச்சரியமான  தகவல் வெளிவருகிறது.

DDA தனது கட்டிடங்களை 138 நிலங்களில் கட்டியுள்ளது.மத்திய கட்டுமானத் துறை மதிப்புமிக்க 108 நிலங்களில் கட்டிடங்களைக் கட்டியுள்ளது. 53 தொல்லியல் துறையின் வசம் உள்ளது. டெல்லியின் மையப்பகுதியில் 20 பெரிய ஏக்கர் நிலம் உள்ளது, அதில் பெர்க்ஸ்டுடி 20 வயர்லெஸ் துறையை கொண்டுள்ளது 10. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் டெல்லி நகர் நிகாம், மின்சாரத் துறை, என்டிஎம்சி உள்ளிட்ட டெல்லி அரசின் பல்வேறு அலுவலகங்கள் வசம் உள்ள 05, சதுர அடிக்கு ரூ.07 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான தற்போதைய விலையில் சுமார் 18 மதிப்புமிக்க புவியியல் தளங்களை ஆக்கிரமித்துள்ளன. என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

200 இடங்களை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து, அதில் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆடம்பரமான மற்றும் பல மல்டிபிளக்ஸ் மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், கார்ப்பரேட் துறையின் பல நிறுவனங்கள் இந்த வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளன,

 இவையனைத்தும் வக்ஃப் வாரியத்திற்கு மிகக் குறைந்த வாடகையை செலுத்துகின்றன, ஆனால் பலர் வாடகை கூட செலுத்துவதில்லை. 

கடந்த அரசு இயற்றிய வக்ஃப் சட்டம்:

2010ல், வக்ஃப் சட்டத்தின் மசோதா திருத்தப்பட்ட வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒரேயடியாக ஒப்புதல் அளித்தது. சல்மான் குர்ஷித் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த நொண்டி மசோதாவை பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் மத மற்றும் சமூக அமைப்புகளிலும் நிறைவேற்ற விரும்பினார். வக்ஃபின் நோக்கத்தையே தோற்கடிக்கும் வகையில் இந்த மசோதாவில் பல திருத்தங்கள் இருந்தன. இதற்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  மற்றும் பல அமைப்புகள் தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளன.

இந்த மசோதாவில் வக்புவின் அசல் நோக்கத்தை அழிக்கும் வகையில் பல விதிகள் உள்ளன.முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பல அமைப்புகள் தங்கள் ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளன. 

இதில், கவனிக்க தக்க ஒன்று என்னவென்றால்,ஒரு காலத்தில் 'வக்ஃப்'க்கு என்று ஒரு வரையறை இருந்தது, யாருடைய பெயரிலிருந்து  வக்ஃப் செய்யப்படுகிறது என்பது முக்கியம்.

எனவே ஒரு முஸ்லீம் மட்டுமே 'வக்ஃப்' செய்ய முடியும். என்றிருந்தது.

அதனை வக்ஃப் வாரியம் தளர்த்தியது. அது கூறியது, 'எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் வக்ஃப் செய்ய முடியும் மற்றும் இந்தியாவில் பல நன்கொடைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன.

எனவே, வக்ஃப் என்பதன் வரையறையானது, வக்ஃப் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், நிறுவப்பட்ட அனைத்து வக்ஃப்களும் அப்படியே இருக்கும்.

வக்ஃப்பின் திருத்தப்பட்ட வரைவை தயாரிக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டது, அதன் தலைவர் சைபுதீன் சுஸ், ஆறு வாரங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தாக இருந்தது.ஒரு வருடம் கழித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது, ஆனால் அது குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை, பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வக்ஃப் சட்டத்தின் இந்த திருத்தப்பட்ட வரைவு பல திருத்தங்களுக்குப் பிறகு 05 செப்டம்பர் 2013 அன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.(فکر وخبر۔آن لائن اخبار)

முந்தைய 1995வக்ஃப் சட்டம் மற்றும் தற்போதைய வக்ஃப் சட்டம் 2013 ஆகியவற்றின் மதிப்பாய்வு மற்றும் ஒப்பீட்டை அறிவது அவசியமாகும். இது முந்தைய வக்ஃப் சட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை வெளிப்படுத்தும்.மேலும் புதிய சட்டத்தின் சாதக,பாதகங்களை அறிய பேருதவியாய் அமையும். 

( 1) வக்ஃப் என்பது இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, எந்த மதத்தைப் பின்பற்றுபவர்  வக்ஃப் செய்தாலும் அது அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக வக்ஃப் என்று கருதப்படும். 

(2)இந்த சட்டம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் "Vacating Law"("வெளியேற்றம் சட்டத்துடன்") இணைந்து படிக்க வேண்டும்.

3) வக்ஃப் கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டியது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும், இதனால் எந்த வக்ஃப் சொத்தும் பதிவு செய்யப்படாமல் இருக்க முடியும்.

 4)மிகவும் சர்ச்சைக்குரிய பிரிவு 86 ரத்து செய்யப்பட்டது, இதன் விளைவாக பதிவு செய்யப்படாத உதவித்தொகைகள் மீது வழக்குத் தொடரும் உரிமை நிறுத்தப்பட்டது. மேலும் மேலும் எஞ்சியிருக்கும் பல சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.

(5) பிரிவு 108/A நீட்டிக்கப்பட்டது, இதன் விளைவாக எந்த சட்டமும் வக்ஃப் சொத்துக்களை பாதிக்காது மற்றும் வக்ஃப் சொத்து அப்படியே இருக்கும்.

6) புதிய சட்டம் மத்திய வக்ஃப் கவுன்சிலை பலப்படுத்தியுள்ளது. அது தனது அதிகாரங்களை விரிவுபடுத்தி, மாநில வக்பு வாரியங்களை மத்திய வக்ஃப் சபைக்கு ஓரளவு பொறுப்புக்கூறச் செய்ய முயற்சித்துள்ளது.

 (7)வகஃப் பட்டியலைக் கருத்தில் கொண்டு நிலப் பதிவேடுகளை (landrickard) இறுதி செய்து, அதற்கேற்ப இணைப்பை மேற்கொள்ள வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும். 

 (8)பிரிவு 06 இல், “இந்த வக்ஃப்பில் ஆர்வமுள்ள ஒருவர்” என்ற வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “பாதிக்கப்பட்ட ஒருவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வக்ஃபு சொத்துக்களில் வேறுபாடும்,விளைவுகளும் ஏற்படும்.

9)பிரிவு 32 வக்ஃப் வாரியத்தின் அசையாச் சொத்தை விற்கவோ, அன்பளிப்பாகவோ, அடமானம் வைக்கவோ அல்லது மாற்றவோ செய்யும் அதிகாரத்தை நீக்குகிறது. 

 (10)பிரிவு 51 இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வக்ஃப் சொத்துக்களின் விற்பனை, பரிசு, பரிமாற்றம் மற்றும் அடமானம் ஆகியவை கொள்கையளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால் மாநில வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட மற்றும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 (11)வக்ஃப் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கான காலம் 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் வக்ஃப் சொத்துக்கள் வளர்ச்சியடையும்.

12) வக்ஃப் தீர்ப்பாயம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, நீதிபதியைத் தவிர, நிர்வாகத்தின் பிரதிநிதி மற்றும் ஒரு இஸ்லாமிய அறிஞர் இருப்பார், மேலும் தீர்ப்பாயத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.                        (مولانا ولی رحمانی کے مضمون سے اقتباس )

வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ நீக்க துடிக்கும் ஆளும் பாசிச அரசு.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்  1954 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வக்பு வாரியம்,

75 ஆண்டுகளை கடந்த சுதந்திர இந்தியாவில் வக்ஃப் வாரியத்தை பலப்படுத்துவதற்காக பல கமிட்டிகள் சமர்பித்த பரிந்துரைகள்,

முஸ்லிம் தனி வாரிய சட்ட அமைப்பு,இஸ்லாமிய அமைப்புகள் இவற்றின் ஆலோசனைகளை முன்வைத்து 5 தடவைகளுக்கு மேல் சட்டங்கள் இயற்றப்பட்டு வக்ஃப் வாரியத்திற்கு  வானளாவிய அதிகாரம் தரப்பட்டது.

இந்தியாவில் இராணுவம்,இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக சொத்துகளை அதிகம் வைத்திருக்ககூடிய வக்பு வாரியம்,

இரயில்வே துறைக்கு நிகராக செயல்படுவதற்கு அதிகாரம் படைத்த வாரியம்,பஞ்சாயத்து அலுவலகத்தை விடவும் மோசமாக செயல்படுவது வேதனையான ஒன்றாகும்.

இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பல  சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

வக்பு வாரியமும்,இந்திய இஸ்லாமிய சமூகமும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன. 

ஆளும் பாசிச அரசோ, வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ ரத்த செய்ய துடிக்கிறது. இந்த சட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டால் வக்ஃபு வாரியம்,வெற்று வாரியமாக மாற்றப்படும். 

காரணம் இந்த வக்ஃபு நிலங்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வக்ஃபு சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சட்டம் வக்ஃபு வாரியங்களுக்கு வானுயர்ந்த அதிகாரத்தை வழங்குகிறது.

ஒரு நிலம் வக்ஃபு நிலமா ?இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வக்ஃபு வாரியத்திற்கு இந்த சட்டம் வழங்குகிறது.

இந்த வக்ஃபு சட்டம் 1995 திரும்பத் பெறப்பட்டால் வக்ஃபு சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.

வக்ஃப் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்படும்.

அல்லாஹு தஆலா  வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் தூண்களாக நம்மை ஆக்குவானாக! ஆமின்.

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...