Wednesday, 3 March 2021

ஜூம்ஆ பயான் 05/03/2021

தலைப்பு:

நன்மையின் பக்கம் விரையுங்கள்

முன்னுரை :

قال النبي صلى الله عليه وسلم   "التاني من الله والعجلة "من الشيطان  

"மிதவேகம் மிகநன்று" என்கிற பலகையை சாலையோர பயணங்களில் பார்த்திருப்போம்.அப்பலகை சாலைப்பயணங்களில் "மிதவேகம் மிகநன்று" என்று அறிவிப்பதோடு வாழ்க்கைப்பயணத்திலும் "மிதவேகம் மிகநன்று" என்று அறிவிக்கிறது. நம் நபி(ஸல்) அவர்களும் "நிதானம் அல்லாஹ்வுடையது"."அவசரம் ஷைத்தானுடையது"என்கிறார்கள்.

இருப்பினும்..................

இஸ்லாம் சில காரியங்களில் வேகத்தை கடைப்பிடிக்க சொல்கிறது.குர்ஆனிய  வசனங்கள் பலதோ "ஸாரிஊ, ஸாபிகூ, ஃபஸ்தபிகூ, ஃபஃபிர்ரூ “ விரைந்து செயல் படுங்கள்! வேகமாக முன்னேறுங்கள்! விரண்டோடி வாருங்கள்!” என்று மனித சமூகத்தை நோக்கி அறை கூவல் விடுக்கிறது.

அல்லாஹ் தன் திருமறையில்................

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ  

உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் : 3:133) என்று கூறுகிறான்.

மேற்கூறிய வசனம் ஒன்று நாம் செய்த பாவங்களுக்கான மன்னிப்பைத் தேடி விரைந்து செல்லுங்கள் என்றும் பாவங்கள் அகன்று பரிசுத்தமானவர்களாகிய நீங்கள் சொர்க்கத்தின் பக்கமும் விரைந்துசெல்லுங்கள் என்றும் அறிவிக்கிறது.

"சொர்க்கத்தின் பக்கம் விரைந்துசெல்லுங்கள்"என்ற வசனத்திற்கு விளக்கமாகத்தான் பின்வரும் வசனம் விளங்குகிறது.

 ‌  فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا  اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

(நம்பிக்கையாளர்களே!) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 2:148)

நாம் சொர்க்கத்தை அடைய வேண்டுமென்றால் நன்மையின் பக்கம் விரைந்து செல்லுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி(ஸல்)அவர்களின் வேகம்

«5363» عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي الْبَيْتِ قَالَتْ: كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் 

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 17 

ஸஹீஹ் புகாரி : 5363. 

நபி(ஸல்)அவர்கள் வேலைப்பளு எவ்வளவு இருப்பினும் இபாதத் நேரம்,நாட்கள் நெருங்கிவிட்டால்  தன்னை வேகப்படுத்தி கொள்வார்கள்.

இபாதத்கள் விஷயத்தில் தன் சமுதாயமும் ஆர்வத்துடனும்,வேகத்துடனும் இருக்கவேண்டும் என்பது நபிகளார்(ஸல்) அவா.அதன் காரணமாகவே....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி 721

ஆனால் இன்று மக்கள் ரேஷன் கடையிலும்.மது கடையிலும். சினிமா தியேட்டர்களிலும். அரசியல் வாதிகளின் கூட்டத்திற்கும் தான் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஸஹாபாக்கள் காலத்தில் வசதிகள் குறைவு இரவுகளில் தெரு விளக்குகள் கிடையாது.  சிரமப்பட்டு பள்ளிக்கு செல்வார்கள். குர்ஆன் பிரதிகள் அதிகம் கிடையாது தெரிந்த ஸஹாபாக்களிடம் ஓதி காட்டுவார்கள். பள்ளியில் மின்விசிறி கிடையாது . அழகான வாகனங்கள் கிடையாது. ஆனால் இன்று எல்லா வசதிகளும் உண்டு அமல் செய்ய ஆள் இல்லை. அன்று வசதிகள் குறைவு நன்மைகள் அதிகம் செய்தார்கள். இன்று வசதிகள் அதிகம் நன்மைகள் குறைவு.

எதில் வேகம்

1.தானதர்மம் செய்வதில்....... 

وعندما أرادَ النبيُّ - صلى الله عليه وسلم - الخروجَ لقِتالِ الرُّوم في غزوةِ تبُوك، دعَا النبيُّ - صلى الله عليه وسلم - النَّاسَ إلى تجهيزِ الجَيشِ، وحضَّ على الإنفاقِ والبَذل، ولاسيَّما أهلُ الطَّول واليَسار، وقد كان لهذه الغَزة ظُروفُها مِن بُعد المسافَة، والحرِّ الشديد، والعدُوِّ الكثير، والمُنافِقِين والخالِفين والقاعِدِين.

فسارَعَ عُمرُ - رضي الله عنه - وقال في نفسِه: "اليوم أسبِقُ أبا بكرٍ إن سبَقتُه يومًا" فجاءَ بنَصفِ مالِه، فقال رسولُ الله - صلى الله عليه وسلم -: «ما أبقَيتَ لأهلِك؟»، فقال: "مِثلَه يا رسول الله"، وأتَى أبو بكرٍ بكلِّ ما عِندَه مِن مالٍ، فقال رسولُ الله - صلى الله عليه وسلم -: «ما أبقَيتَ لأهلِك؟»، فقال: "أبقَيتُ لهمُ اللهَ ورسولَه"، فقال عُمر: "لا أُسابِقُك إلى شيءٍ أبدًا"

ரோமுக்கு எதிரான தபூக் யூத்ததின் போது நீண்ட தூரபயணம் ,கடுமையான வெயில் காலம் ,எதிரியின் படைபலம், நயவஞ்சகர்கள் ,எதிர்ப்பாளர்கள் என அத்தனைநெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு நபி (ஸல்)அவர்கள் இஸ்லாமிய படைக்கு தாராளமாக உதவிட அறைகூவல்விடுத்தார்கள்.

வீட்டிற்கு சென்ற உமர் (ரலி)அவர்கள் தனது சொத்தில் பகுதியை கொண்டுவரும்போதே "இன்று நன்மையில் அபுபக்ர்(ரலி)அவர்களை முந்திவிடலாம்"என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள்  உமரே!உமது வீட்டினருக்கு என்ன வைத்துவிட்டு வந்தீர் என்று கேட்டார்கள்.அதற்கு உமர்(ரலி)அவர்கள் எனது சொத்தில் பாதி என்றார்கள்.

அபுபக்ரே!உமது வீட்டினருக்கு என்ன வைத்து விட்டு வந்தீர் என நபி(ஸல்)அவர்கள் கேட்க அபுபக்ர் (ரலி)அவர்கள்"அல்லாஹ்வையும் அவனது துதரையும் தவிர அனைத்தையும் கொண்டுவந்துவிட்டேன்" எனக் கூறியதும்

உமர் (ரலி)அவர்கள் நல்லறங்களில் நான் அபுபக்ரை முந்தவே முடியாது என்றார்கள்.

மறுமைசெல்வத்தைத்தேடி சென்ற அவ்விருஸஹாபிகள்  வேகம் சிறந்ததா?உலகசெல்வத்தைத்தேடி செல்கிற நம் வேகம் சிறந்ததா?

حتى قال بعضُ السلَف: "لو كانت الدُّنيا من ذهبٍ يَفنَى، والآخرةُ مِن خَزَفٍ يَبقَى، لكان المُتعيِّنُ على العاقِل أن يُؤثِرَ الخَزَفَ الذي يَبقَى على الذَّهَب الذي يَفنَى، فكيف والآخرةُ هي الذَّهبُ الذي يَبقَى، وهي خيرٌ وأَبقَى".

நல்லோர்கள் "உலகம் தங்கத்திலானலும் அழியக்கூடியதே!

மறுமை பளிங்குகல்லிலானாலும் நிரந்தரமானது!

அறிவாளி அழியும் தங்கத்தை(உலகை) விட அழிவில்லா பளிங்குகல்லை (மறுமையை) தான் தேர்ந்தெடுப்பான்.

உண்மை என்னதெரியுமா? மறுமை அது "தங்கத்திலாலானது". அது "சிறந்தது". அது "அழிவில்லாதது"" என்று உபதேசம் செய்வார்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே!

தர்மம் செய்வதில் விரைந்து செயல்படுங்கள்.விரைந்துசெயல்படவில்லையென்றால்.......

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான்.

(அல்குர்ஆன் : 63:10)

என்று அல்லாஹ் கூறுகிறான்.

2.ஹராமை விட்டும் விலகுவதில்.....

 «851»  عَنْ عُقْبَةَ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ: ((ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ)).

உக்பா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். 'என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 851. 

தொழுகையை முடித்ததும் ஏன் இவ்வளவு வேகம்?"தனக்கல்லாத ஒரு பொருள் தம்மிடம் இருக்கலாகாது"என்பதை இச்சமூகத்துக்கு உணர்த்துகிறார்கள் உன்னத நபி(ஸல்)அவர்கள்.ஆனால் இச்சமூகம் ஹராமைவிட்டும் தன்னை தடுத்துக்கொள்வதை முற்றிலும் மறந்து போய்விட்டது.

தாமதம் வேண்டாம்

1.நல்அமல்கள் செய்வதில் தாமதம் வேண்டாம்.ஏனென்றால்....

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ كَلَّا‌  اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.

நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே  (யன்றி  வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள்.

(அல்குர்ஆன் : 23:99,100)

என்று அல்லாஹ்  கூறுகின்றான்.

2.தவ்பா செய்வதிலும் தாமதம் வேண்டாம்.ஏனென்றால்....

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ‌  حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ‌ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا‏

எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது " நான் இப்போது (என்) பாவங்களுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்" என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து  விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர்  களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

(அல்குர்ஆன் : 4:18)என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஒரு ஸஹாபியின் வாழ்வில்.............

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بعَث زَيدَ بنَ حارِثَةَ وجعفَرَ وعبدَ اللهِ بنَ رَواحَةَ رضي اللهُ عنهم فتخَلَّف عبدُ اللهِ بنُ رَواحَةَ فقال له النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ما خَلَّفَك عن أصحابِك ؟ قال: أحبَبتُ أن أشهَدَ معَك الجمُعَةَ ثم أَلحَقُهم ، قال: لو أنفَقتَ ما في الأرضِ جميعًا ما أدرَكتَ غَدوتَهم ، وكانوا خرَجوا يومَ جمُعَةٍ

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

ஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார்! அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தளபதிகளை நியமிக்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.ஆகையால், ”எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம்” என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.

ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி {ஸல்} அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.தொழுகை முடிந்து வெளியே செல்லும்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் பார்த்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களை அழைத்து யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே! ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர்? உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது?” என்று வினவினார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே! யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன்” என்று பதில் கூறினார்கள்.அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட,  முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.(அஹ்மது,பைஹகி)

ஒரு சிறு தாமதம் பல நன்மைகளை இழப்பதற்கு காரணமாகிவிட்டது.

முடிவுரை

قال النبي صلى الله عليه وسلم : «بادِرُوا بالأعمالِ فِتنًا كقِطَع الليلِ المُظلِم، يُصبِحُ الرجُلُ مُؤمنًا ويُمسِي كافِرًا، ويُمسِي مُؤمنًا ويُصبِحُ كافِرًا، يَبِيعُ أحدُهم دينَه بعَرَضٍ مِن الدنيا» (أخرجه مسلم).

நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்:அமல்களை துரிதமாக செய்துக்கொள்ளுங்கள். இருள் சூழ்ந்த இரவு அடுத்தடுத்து வருவதை போல குழப்பங்கள் வரும்

காலையில் முஃமீனாக உள்ளவன் மாலையில் காஃபிராகிவிடுவான் மாலையில் முஃமீனாக உள்ளவன் காலையில் காஃபிராகி விடுவான் அவர்களில் ஒருவன் தனது தீனை உலகிற்கு பகரமாக விற்றுவிடுவான்(நூல்:முஸ்லிம்)

இந்த ஹதீஸில் வரும் الفتن குழப்பங்கள் என்பது "எவை நன்மை செய்வதை விட்டும் தடுக்குமோ ","எவை பாவங்கள் செய்யத்தூண்டுமோ அவையனைத்தும்"என்று ஹதிஸ் வல்லுநர்கள் விளக்கம்தருகிறார்கள்.

எனவே நன்மைகளின் பக்கம் விரைவோம்.அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்‌.இன்ஷாஅல்லாஹ்.......

வெளியீடு: செங்கற்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

9 comments:

Unknown said...

Masha allah

SHAMSUL HUDA said...

அல்ஹம்துில்லாஹ்

Vellimedai chengai said...

الحمد لله

Vellimedai chengai said...

الحمد لله جزاك الله

Vellimedai chengai said...

جزاكم الله خيرا اخي

Unknown said...

Masha Allah Jazakallah khair

Unknown said...

Alhamdulillah

Vellimedai chengai said...

Alhamdulillah

Vellimedai chengai said...

Jazakallah

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...