தலைப்பு:
மிஃராஜின் பரிசு தொழுகை
அல்லாஹுத்தஆலா தனது நேசத்திற்குரிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களை கௌரவப்படுத்த அழைத்த விண்ணுலகப் பயணமே மிஃராஜ் என்பதாகும்.
இரண்டு பயணங்கள்
1.இஸ்ரா:மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து பைத்துல் முகத்தஸ் வரை உள்ள பயணத்தை குர்ஆன் இஸ்ரா என்கிறது.
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
2.மிஃராஜ்:பைத்துல் முகத்தஸிலிருந்து ஸித்ரதுல் முன்தஹா வரையுள்ள பயணமே மிஃராஜ் ஆகும்.
மிஃராஜ் ஏன்? எதற்கு?
மிஃராஜ் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஹிஜ்ரத்திற்கு 17 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.
மிஃராஜ் நிகழ்வுக்கு சொல்லப்படும் காரணங்கள் இரண்டு.
1)மிஃராஜ் நபி (ஸல்)அவர்களின் காலத்தில் வாழ்ந்த, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற,இனி வரப்போகிற அனைவருக்குமான அசைக்கமுடியாத அத்தாட்சிக்காக நிகழ்ந்தது.
2,மக்காவாசிகள் நபி(ஸல்)அவர்களின் 46 ஆவது வயதில் நபியையும், நபியின் குடும்பத்தையும்,இஸ்லாமியர்களையும் ஊர் விலக்கு செய்தது நபியை கவலையடையச்செய்தது.
மேலும் நபியின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நபியின் மனைவி கதீஜா (ரலி)அவர்கள் இருவரின் தொடர் மரணங்களால் மாநபி மிகவும் கவலைக்குள்ளானார்கள்.
மேலும் தாயிஃப் பயணத்தில் பட்ட அவமானங்களால், ஒட்டு மொத்த சக்தியையும் இழந்துவிட்டதாக நபி (ஸல்)அவர்கள் எண்ணினார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நபிக்கு யாருமே ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் அல்லாஹ்வே நேரடியாக ஆறுதல் சொல்ல அழைத்த விண்ணுலகப் பயணமே மிஃராஜ் என்பதாகும்.
மிஃராஜ் பயணத்தின் சுருக்கம்.
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் இரவு கஅபாவுக்கு அருகில் ஹதீம் என்ற பகுதியில் சகோதரி உம்மு ஹானி(ரலி) அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஜிப்ரயீல்(அலை)அவர்கள் (அசல் தோற்றத்தில்) நபியை அழைத்தார்கள். இரண்டு மலக்குகள் நபியின் நெஞ்சைப் பிளந்து அவர்களின் இதயத்தை ஜம்ஜம் நீரால் கழுவி ஈமான் என்ற நம்பிக்கையை கொண்டும்,ஹிக்மத் என்ற நுண்ணறிவை கொண்டும் நிரப்பி ஆன்மீக அறுவை சிகிச்சை செய்தார்கள்.பின்பு புராக்(குதிரை விட சிறிய கோவேரி கழுதை விட பெரிய) என்ற வாகனத்தில் ஜிப்ரயீல் (அலை)அவர்களுடன் பைத்துல் முகத்தஸ் நோக்கி பயணமானார்கள்.அங்கு நபி (ஸல்)அவர்கள், நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்தார்கள்.பின்பு பைத்துல் முகத்தஸிலிருந்து ஏழு வானங்களை கடந்து பயணம் செய்தார்கள்.
முதல் வானத்தில் நபி ஆதம்(அலை) அவர்களையும்,
இரண்டாவது வானத்தில் நபி ஈசா(அலை)அவர்கள், நபி யஹ்யா (அலை)அவர்கள் ஆகிய இருவரையும்,
மூன்றாவது வானத்தில் நபி யூஸூஃப் (அலை)அவர்களையும்,
நான்காவது வானத்தில் நபி இத்ரீஸ்(அலை) அவர்களையும்,
ஐந்தாவது வானத்தில் நபி ஹாரூன் (அலை)அவர்களையும்,
ஆறாவது வானத்தில் நபி மூஸா(அலை) அவர்களையும்,
ஏழாவது வானத்தில் நபி இப்ராஹீம்(அலை)அவர்களையும் சந்தித்து உரையாடினார்கள்.
பின்பு பைத்துல் மஃமூரும்,பின்பு ஸித்ரத்துல் முன்தஹாவை அடைந்தார்கள். அதன் பின்பு எல்லையே கிடையாது,இதனையே திருக்குர்ஆன் காப கவ்ஸைன்قاب قوسين எல்லையே இல்லாத ஓர் எல்லை, என வர்ணிக்கிறது.அங்குதான் நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் தனது நாயன் அல்லாஹுவை சந்தித்து உரையாடுகிறார்கள்.
ஏழு வானங்களை கடந்து சென்றதும். சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்ததும். அல்லாஹ்விடம் பேசியதும் இதுவெல்லாம் மாபெரும் அத்தாட்சியாகும்.
மிஃராஜின் பரிசு
அல்லாஹுத்தஆலா தனது நேசத்திற்குரிய நபிக்கும்,இந்த உம்மத்திற்கும் மாபெரும் பரிசாக ஐம்பது நேரத் தொழுகைகளை கடமை ஆக்குகிறான்.
ففرض عليَّ خمسين صلاةً في كلِّ يومٍ وليلةٍ . فنزلتُ إلى موسى ، فقال : مافرض ربُّك على أُمَّتِك ؟ قلتُ : خمسين صلاةً ، قال : ارْجِعْ إلى ربِّك فسَلْه التَّخفيفَ ، فإنَّ أُمَّتَك لا تُطيقُ ذلك ، فإني قد بلَوْتُ بني إسرائيلَ وخبَرتُهم ، فرجعتُ إلى ربي ، فقلتُ : يا ربِّ خَفِّفْ عن أُمَّتي ، فحطَّ عني خمسًا . فرجعتُ إلى موسى ، فقلتُ : حطَّ عني خمسًا ، قال : إنَّ أُمَّتَك لا يُطيقون ذلك ، فارجِعْ إلى ربِّك فسَلْه التَّخفيفَ . فلم أزلْ أرجعُ بين ربي وبين موسى حتى قال : يا محمدُ إنهنَّ خمسُ صلواتٍ كلَّ يومٍ وليلةٍ لكلِّ صلاةٍ عشرٌ ، فذلك خمسون صلاةً ، ومن همَّ بحسنةٍ فلم يعملْها كُتِبَتْ له حسنةٌ ، فإن عملَها كُتِبَتْ له عشرًا من همَ بسيئةٍ فلم يعملْها لم تكتبْ شيئًا ، فإن عملها كُتِبَتْ سيئةً واحدةً . فنزلت حتى انتهيتُ إلى موسى ، فأخبرتُه ، فقال : ارجِعْ إلى ربِّك فسَلْه التَّخفيفَ ، فقلتُ : قد رجعتُ إلى ربي حتى استحْيَيْتُ منه
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 127 | خلاصة حكم المحدث : صحيح
التخريج : أخرجه مسلم (162)، وأحمد (12527) باختلاف يسير.
ففرض علي امتي خمسين صلاه في كل يوم.....
நபி(ஸல்)திரும்ப வரும் வழியில் மூஸா(அலை)அவர்கள் "அல்லாஹ் என்ன கடமையாக்கினான்"எனக் கேட்க,நபி(ஸல்)அவர்கள் "ஐம்பது நேரத் தொழுகைகள்"என பதிலளித்தார்கள்.
அதற்கு நபி மூஸா (அலை)அவர்கள் உமது உம்மத்தினர் ஐம்பது நேரத் தொழுகைகளை தொழ மாட்டார்கள் குறைத்துவிட்டு வாருங்கள் " என்றார்கள்.
நபி (ஸல்)அல்லாஹ்விடம் சென்று பத்து நேரத் தொழுகைகளை குறைத்துவிட்டு வந்தார்கள்.
மீண்டும் நபி மூஸா (அலை) அவர்கள் "குறைத்துவிட்டு வரும்படி" சொன்னார்கள்.
இப்படியாக நபி ஐந்து நேரத் தொழுகைகள் வரை குறைத்து வாங்கினார்கள் ......(நூல்:முஸ்லிம் 162)
அந்த ஐந்து நேரத் தொழுகைகள் தான் மிஃராஜின் மாபெரும் பரிசாகும்.தொ
தொழுகையின் முக்கியத்துவம்
ஏனைய எல்லா வணக்கங்களை விடவும் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் மற்ற வணக்கங்களை அல்லாஹ் வஹியின் மூலம் கடமையாக்கினான், தொழுகையை மட்டும் தான் நேரடியாக நபியை அழைத்து எந்தத் திரையும் இல்லாமல் அல்லாஹ்வே வழங்கினான்.
ஒரு மனிதன்
لا اله الا الله محمد الرسول الله
என்ற கலிமாவை மனதால் உறுதி கொண்டு நாவால் மொழிந்த பின் முஸ்லிமாகிறான். அம்முஸ்லிம் இஸ்லாத்திற்கு அடுத்து நம்பிக்கை கொள்பவைகளை ஈமான் கொண்டு முஃமினாகிறான்.
அம்முஃமின் வெற்றியடைய அல்லாஹ் தன் திருமறையில்,
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ
அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)என்று கூறுகிறான்.
மனிதன் குழந்தையிலிருந்து வளர ஆரம்பிக்கிற போது இஸ்லாம் தொழு ஏவுகிறது. மீறினால் கண்டிக்கவும் சொல்கிறது.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ : ” مُرُوا أَبْنَاءَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ ،وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرِ سِنِينَ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ” . هَذَا حَدِيثٌ حَسَنٌ ، أَخْرَجَهُ أَبُو دَاوُدَ ، .
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்த(தும்தொழாமலிருந்தால்) அதற்காக அவர்களைஅடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தொழுகையின் முக்கியத்துவம் புரிய வேண்டுமென்றால்,"வாருங்கள் வள்ளல் நபியின் இறுதி நேரத்திற்கு"
قال علي بن أبي طالبٍ رضي الله تعَالى عنه: (كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم: الصلاة الصلاة، اتقوا الله فيما ملكت أيمانكم) (صححه أحمد شاكر في مسند الإمام أحمد 2/ 29).
அலீ (ரலி)அவர்கள் "நபி (ஸல்) (மரணசமயத்தில்) அவர்களின்இறுதி வாக்கியங்கள் தொழுகை! தொழுகை! என்றும் ,அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று இருந்தன"என கூறுகிறார்கள்.
தொழாவிட்டால்....
தொழுகையின் மகத்துவத்தை விளங்காதவர்கள் பின்வரும் விஷயங்களை பாடமாக அமைத்துக்கொள்ளட்டும்.
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر"
ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையே உள்ள வித்தியாசம் தொழுகை அதை விடுபவன் காபிர் என்றார்கள். (இப்னு மாஜா 1088)
இன்று இஸ்லாமிய சமூகம் இந்த ஹதிஸையும்,தொழுகையையும் மறந்து விட்டது.
நபி(ஸல்) அவர்கள்
من ترك الصلاةفقد كفر
தொழுகையை யார் விட்டாரோ அவர் காபிராகி விட்டார்கள் என்றார்கள்.
وقد قال عمر بن الخطاب رضي الله عنه:" لا حظّ في الإسلام لمن ترك الصّلاة "
உமர்(ரலி) அவர்கள் தொழுகையை விடுபவனுக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை என்றார்கள்.
ஆனால் இன்று நம் வாழ்க்கையின் அடிப்படை அங்கமாக தொழுகை இல்லாததால் ஆயுளிலும் , பொருளாதாரத்திலும் பரக்கத் இழந்து, எதிரிகளால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, துஆ செய்யலாம் என்றால் அதுவும் ஏற்கப்படாமல் பரிதாபத்தில் நிற்கிறோம்.
தொழாத மக்களுக்கான எச்சரிக்கை இதோ.....
நபி(ஸல்)அவர்கள் மிஃராஜின் போது "ஒரு கூட்டத்தினரை கடந்து செல்கிறார்கள் அவர்களின் தலைகள் வெட்டப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றன.இவர்கள் யார்?" என ஜிப்ரயீல் (அலை)அவர்களிடம் கேட்க "இவர்கள் கடமையான தொழுகைகளை நிறை வேற்றாதவர்கள் "என பதில் கூறினார்கள் (நூல்: தப்ரானி)
தொழுகையே முஃமின்களுக்கு மிஃராஜ்
மிஃராஜ் பயணத்தில் மாநபி (ஸல்) அல்லாஹ்வை சந்தித்து பேசினார்கள்.யான் பெற்ற இன்பம் என் சமுதாயமும் பெற வேண்டும் என்பதற்காகவே....
قال صلى الله عليه وسلم: (حُبِّبَ إليَّ من دُنْياكمُ النِّساءُ والطِّيبُ وجُعِلَت قُرَّةُ عَيني في الصَّلاةِ) (ابن الملقن في البدر المنير 1/ 501 وقال: إسناده صحيحٌ عن أنس بن مالك رضي الله تعالى عنه).
நபி (ஸல்) அவர்கள் , எனக்கு உங்களின் இந்த உலகத்தில் பெண்களும் நறுமணப் பொருட்களும் பிரியத்திற்குரியதாக ஆக்கப்பட்டுள்ளன. என் கண்குளிர்ச்சி தொழுகையிலே உள்ளது என்றார்கள். எனவே தான்"தொழுகை முஃமீன்களின் மிஃராஜ்"என பெரியார்கள் கூறினார்கள்.மேற்கூறிய ஹதிஸிலிருந்து தொழுகையில் நபி அனுபவித்த கண் குளிர்ச்சியை நாமும் அனுபவிக்கலாம் என்றே தெரிகிறது.அதனால் தான் தொழுகையில் நாம் الحمد لله رب العالمين என்று ஓதினால் அல்லாஹ் حمدني عبدي என் அடியான் என்னை புகழ்ந்து விட்டான் என்கிறான்.எனவே உள்ளச்சத்தோடு தொழுதோம் என்றால் அத்தொழுகை மிஃராஜாக மாறிப்போகும்.
தொழுகையின் மகத்துவம் புரிந்தவர்கள் தன்னுயிர் நீங்கினாலும்,தொழுகையிலிருந்து நீங்க மாட்டார்கள்.ஏனென்றால் அத்தொழுகை அவர்களுக்கு மிஃராஜ்.
உங்களுக்காக ஷோபனமிக்க ஒரு நிகழ்வு..............
«198» حدثنا أبو توبة الربيع بن نافع حدثنا ابن المبارك عن محمد بن إسحاق حدثني صدقة بن يسار عن عقيل بن جابر عن جابر قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم- يعني في غزوة ذات الرقاع- فأصاب رجل امرأة رجل من المشركين فحلف أن لا أنتهي حتى أهريق دما في أصحاب محمد فخرج يتبع أثر النبي صلى الله عليه وسلم فنزل النبي صلى الله عليه وسلم منزلا فقال من رجل يكلؤنا فانتدب رجل من المهاجرين(عمار ابن يسر) ورجل من الأنصار(عباد ابن بشر) فقال: ((كونا بفم الشعب)). قال فلما خرج الرجلان إلى فم الشعب اضطجع المهاجري وقام الأنصاري يصلي وأتى الرجل فلما رأى شخصه عرف أنه ربيئة للقوم فرماه بسهم فوضعه فيه فنزعه حتى رماه بثلاثة أسهم ثم ركع وسجد ثم انتبه صاحبه فلما عرف أنهم قد نذروا به هرب ولما رأى المهاجري ما بالأنصاري من الدم قال سبحان الله ألا أنبهتني أول ما رمى قال كنت في سورة أقرأها فلم أحب أن أقطعها
நபி(ஸல்)அவர்கள் தாதுர் ரிகா என்ற போருக்குப் போய் விட்டுத் திரும்புகிற வேளையில் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. இன்றிரவு நம் படைக்கு காவலாளி யார்? என்று கேட்க அதற்கு முஹாஜிரின்களைச் சேர்ந்த அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும்,அன்ஸாரிகளைச் சேர்ந்த உப்பாதுப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் நாங்கள் காவல் புரிகிறோம் என்றார்கள். அன்ஸாரி ஸஹாபியான உப்பாது இப்னு பஷிர்(ரலி) முஹாஜிரான அம்மார் இப்னு யாசிர்(ரலி)அவர்களிடம் "இரவு முழுவதும் இருவரும் விழித்துருந்தால் தூக்கம் மேலிட்டு இருவருமே கண்ணயர்ந்து விடக்கூடும். ஆகையால் இரவை இரு பாகங்களாக்கி முதற்பகுதியில் நீங்கள் தூங்குங்கள். நான் விழித்திருக்கிறேன் . இரண்டாம் பகுதியில் நீங்கள் விழித்திருங்கள். நான் தூங்குகிறேன். ஏதேனும் ஆபத்து ஏற்படுகிறதென்று விழித்திருப்பவருக்கு தெரிந்தால் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிக் கொள்ளலாம்"என்று கூறினார். அதன்படி முதற்பகுதியில் உப்பாது இப்னு பஷிர்(ரலி)விழித்திருப்பதென முடிவு செய்யப்பட்டது. அம்மார் இப்னு யாசிர்(ரலி)தூங்கி விட்டார். காவலுக்கு இருந்த அன்ஸாரி ஸஹாபி உப்பாது இப்னு பஷிர்(ரலி)தொழுவதற்கு தக்பீர் கட்டி நின்று கொண்டார். அந்த நேரத்தில் எதிரிகளிலிருந்து ஒரு மனிதர் ஸஹாபியைப் பார்த்து மூன்று அம்புகளை எறிந்தான். ஆனால் அவர் அனைத்தையும் தாங்கி கொண்டு இரத்தம் வழிந்தோடிய நிலையிலேயே தொழுகை முடித்தார். அம்மார் இப்னு யாசிர்(ரலி) திடிரென எழுந்து பார்க்க உப்பாதுப்னு பிஷ்ரோ (ரலி) இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து سبحان الله என்னை முன்னதாகவே எழுப்பியிருக்கக் கூடாதா? என்று கேட்டார். அதற்கு உப்பாது இப்னு பிஷ்ர்(ரலி) நான் தொழுகையில் ஸூரத்துல் கஹ்பை ஆரம்பித்து ஓதிக் கொண்டிருந்தேன். அதனை முடிப்பதற்கு முன் தொழுகையை முடிக்க விரும்ப வில்லை. இறுதியில் அவர் ஷஹிதாஹியும் விட்டார். (அபுதாவுது:198)
இறுதியாக!அல்லாஹ்வின் நல்லடியார்களே!
"மறுமையில் அடியானிடம் கேட்கப்படும் கேள்விகளில் முதல் கேள்வி தொழுகை அப்போது அல்லாஹ் அடியானின் தொழுகையை பார்ப்பான் அவன் தொழுகை சரியாக இருந்தால் அனைத்து அமல்களும் சரியாகிவிடும் அது சீர்கெட்டு இருந்தால் அனைத்து அமல்களும் சீர்கெட்டு விடும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால்கடைசிவரை நம்மவர்கள் பலருக்கு தொழும் பாக்கியம் கிடைப்பதில்லை (நவூதுபில்லாஹ்)கடைசியில் அவரின் ஜனாஸா தான் பள்ளிக்கு வருகிறது.
அல்லாஹ் நமக்கு எல்லா கடமைகளையும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் கொடுத்தான். ஆனால் தொழுகையை மட்டும் நபியை அழைத்து நேரடியாக கொடுத்தான்.
நமது வீட்டுக்கு தேவையான பொருட்கள் முட்டை, தக்காளி, கருவேப்பிலை வாங்க சிறுவர்களை அனுப்புவோம். அதுவே தங்கம் வாங்குவதாக இருந்தால் நாமே நேரடியாக செல்வோம். காரணம் விலையுயர்ந்த பொருள் என்பதால், அதுபோல மிஃராஜில் இந்த உம்மத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு தொழுகையாகும்.
No comments:
Post a Comment