தலைப்பு :
ரஜப் மாதம்
அல்லாஹ்தஆலா இவ்வுலகில் சிலவற்றை வேறு சிலவற்றை விடவும் சிறப்பாக்கிவைத்திருக்கிறான்.
உலகில் மக்கா, மதினா,பைத்துல்முகத்தஸ் போன்ற இடங்களையும்,
நபிமார்களில் اولوالعزم "உலுல்அஸ்ம்"என்று சொல்லப்படக்கூடிய சில நபிமார்களையும்,
வாரநாட்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளையும்,மாதங்களில் துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் ஆகிய நான்கு மாதங்களை சங்கையாக்கிவைத்துள்ளான்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري, ومسلم).
காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜமாதுஸ்ஸானி, ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ரஜப் மாதத்தின் பெயர்களும்,அதன் சிறப்புக்களும்.
சங்கையான மாதங்களில் ஒன்றான ரஜப் மாதம்,அறியாமைகால அரபுகளிடம் கூட சிறப்பான மாதமாக கருத்தப்பட்டு வந்திருக்கிறது.
அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் கண்ணியப் படுத்தியதனாலேயாகும்.
1)"ரஜபுல் முழர்" رجب المضر
மேலே குறிப்பிட்ட ஹதீஸில் நபியவர்கள் 'ரஜப் முழர்' என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விஷயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பதும் ஒரு காரணமாகும்.
2)ரஜபு என்றால் பொழிதல் என்ற பொருளும் உண்டு…!!
அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த மாதத்தில் தான் தொடர்ந்து பொழிகிறது….!!!
3)"ரஜபுத் தர்ஜீப்" رجب الترجيب
ரஜபு என்ற சொல் ‘தர்ஜீபு’ என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தர்ஜீபு என்றால் மதிப்புடையது. மாண்புடையது என்று பொருள் தரும்…!!
எனவே ரஜபு மாதம் மாண்புடைய மாதமாகும்.ரஜபு மாதம் என் உம்மத்திற்குரிய மாதம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்….!!!
4)"ரஜபுல் ஹராம்" رحب الحرام
அறியாமைக் கால அராபியர்களும் இம்மாதத்தை கண்ணியமாக கருதி உம்ரா செய்யவும், குர்பானி கொடுக்கவும் செய்தார்கள்…!!
இம் மாதத்தில் சண்டை போடுவதையும் பாவம் என்று எண்ணினார்கள். திருமறையில் கண்ணியமிக்க மாதங்கள் என்று குறிக்கப்படும் மாதங்களில் இதுவும் ஒன்று.
5)"ரஜபுல் அஸம்"رجب الأصم
இம்மாதத்தில் போர்ச் செய்யதடை,போர்த் தளவாடங்களின் சப்தங்கள் கேட்காதென்பாதால் "அஸம்" رجب الأصمஎன்றும் இம்மாதத்தை சொல்லப்படும்
ரஜபு மாத சிறப்பைக் குறிப்பிடும் போது...
إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'
புனித மாதங்களில் நோன்பு நோற்பது....
عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود, أحمد).
முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.
நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்' (அபூதாவுத், அஹ்மத்)
(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை'.
ரஜப் ரமலானுக்கான முன் தயாரிப்பு.
மனிதன் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதற்கேற்ற பருவ காலங்கள் ரஜப்,ஷஃபான்,ரமலான் ஆகிய புனித மாதங்களாகும்.
ரஜப் மாதத்தில் ஒரு முஃமின்,தன் உடலாலும் உள்ளத்தாலும் புனித ரமலானுக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது சுன்னத்தான அமலாகும்.
காரணம் நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள், ரஜப் பிறைத் தென்பட்டதுமே ரமலானுக்காக துஆ செய்யவும்,ஏனைய அமல்களில் ஆர்வமாக ஈடுபடவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
روى عبد الله بن الإمام أحمد في "زوائد المسند" (2346) والطبراني في "الأوسط" (3939) والبيهقي في "الشعب" (3534) وأبو نعيم في "الحلية" (6/269) من طريق زَائِدَة بْن أَبِي الرُّقَادِ قَالَ: نا زِيَادٌ النُّمَيْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: (اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ)
மேலும்......
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ ( أحمد )
ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துஆவை ஓதுவார்கள். ‘ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ’ (யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக) என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ)
அறிஞர் பெருமக்களின் கூற்று;
ரமலானுக்கு முன்பு நல் அமல்கள் செய்து மனிதன், தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கேற்ற மாதம், ரஜப் மாதமாகும்.
ஒரு வருடம் என்பது மரம் என்றால் அதில் இலை துளிர்விடும் பருவ காலம் ரஜப் மாதம்.
காய்க்காய்த்து பழமாகும் பருவ காலம் ஷஃபான் மாதம்.
பழங்களை அறுவடைச்செய்யும் காலம் ரமலான் மாதம்.
قيل: رجب لترك الجفاء، وشعبان للعمل والوفاء، ورمضان للصدق والصفاء
ரஜப் மாதம் பாவங்களை தவிர்த்துக்கொள்வது,
ஷஃபான் நல்லறங்களில் ஈடுப்படுவது,
ரமலான் பரிசுத்தவானாக தன்னை ஆக்கிக்கொள்வது என்றும்,
رجب شهر التوبة، شعبان شهر المحبة، رمضان شهر القربة.
ரஜப் தவ்பாவின் மாதம்,ஷஃபான் இறைகாதலின் மாதம்.ரமலான் இறைநெருக்கத்தின் மாதம் என்றும்.
رجب شهر العبادة، شعبان شهر الزهادة، رمضان شهر الزيادة.
ரஜப் இபாததின் மாதம்.ஷஃபான் உலக ஆசாபாசங்களை விட்டொழிக்கும் மாதம்.ரமலான் வணக்கவழிப்பாடுகளில் அதிகமாக்கிக்கொள்ளும் மாதம். என்றும் கூறப்படும்.
وقال ذو النون المصري - رحمه الله - : رجب لترك الآفات، وشعبان لاستعمال الطاعات، ورمضان لانتظار الكرامات، فمن لم يترك الآفات، ولم يستعمل الطاعات، ولم ينتظر الكرامات، فهو من أهل الترهات.
அல்லாமா துன்னூன் அல் மிஸிரீ(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:
ரஜப் தீயவற்றை தவிர்த்துக்கொள்வதற்கும்,
ஷஃபான் நல்லறங்களில் ஈடுப்படுவதற்கும், ரமலான் வெகுமதிகளை எதிப்பார்ப்பதற்கும் உள்ளனவாகும்.
எனவே எவர் தீயவற்றை தவிர்த்துக்கொள்ளவில்லையோ, நல்லறங்களில் ஈடுப்படவில்லையோ, வெகுமதிகளை எதிர்ப்பார்க்கவில்லையோ,அவர் வீணர்களிலுள்ளவராவார்.
رجب شهر الحرمة، شعبان شهر الخدمة، رمضان شهر النعمة.
ரஜப் புனித மாதம்,ஷஃபான் பணிவிடையின் மாதம்,ரமலான் அருள் மாதம்.
رجب شهر يضاعف الله فيه الحسنات، شعبان شهر تكفر فيه السيئات، رمضان شهر تنتظر فيه الكرامات.
ரஜபில் அல்லாஹ் நன்மைகளை இரட்டிப்பாக்கி தருகிறான்.ஷஃபானில் பாவங்களை மன்னிக்கிறான்.ரமலானில் வெகுமதிகளை எதிர்ப்பார்க்கப்படும்.
وقال أيضًا - رحمه الله -: رجب شهر الزرع، وشعبان شهر السقي، ورمضان شهر الحصاد، وكل يحصد ما زرع، ويُجزى ما صنع، ومن ضيع الزراعة ندم يوم حصاده، وأخلف ظنه مع سوء معاده.
ரஜப் விளைச்சலின் மாதம்,ஷஃபான் நீர்ப்பாய்ச்சும் மாதம்,ரமலான் அறுவடைச் செய்யும் மாதம்.
விவசாயம் செய்த விவசாயி, அறுவடைச் செய்யும் போது அதன் கூலியைப் பெற்றுக்கொள்கிறான்.
விவசாயம் செய்யாதவன் அறுவடைச் செய்யும் போது கைசோதமடைகிறான்.
وقال بعضهم: السنة مثل الشجرة ، وشهر رجب أيام توريقها ، وشعبان أيام تفريعها ، ورمضان أيام قطفها ، والمؤمنون قطافها .
وقال بعض الصالحين: السنة شجرة، رجب أيام إيراقها، وشعبان أيام إثمارها، ورمضان أيام قطافها"، انتهى من "الغنية" للجيلاني : (1/ 326).
ஒரு வருடம் என்பது மரமாகும்,ரஜப் தண்ணீர் பாய்ச்சும் நாள்கள்,ஷஃபான் பழங்கள் பழுக்கும் நாள்கள்.ரமலான் பழங்களை பறிக்கும் நாள்கள்.
قال "ابن رجب" في "لطائف المعارف" (121) : " شهر رجب مفتاح أشهر الخير والبركة .
ரஜப் மாதம் கைர்,பரகத்துகளின் திறவுகோல்.
قال أبو بكر الوراق البلخي: شهر رجب شهر للزرع ، وشعبان شهر السقي للزرع ، ورمضان شهر حصاد الزرع .
அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” (நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)
وعنه قال: مثل شهر رجب مثل الريح ، ومثل شعبان مثل الغيم ، ومثل رمضان مثل القطر .
ரஜப் மாதம் பருவக்காற்றை போன்றது.ஷஃபான் மேக மூட்டத்தைப் போன்றது. ரமலான் மழையைப் போன்றது.
எனவே ரஜப் மாதத்திலிருந்தே பாவங்களை விட்டும் நம்மை தற்காத்து தொழுகைகளிலும்,குர்ஆன் திலாவத்,திக்ரு போன்ற வணக்கவழிப்பாடுகளிலும், ஸதகா(தானதருமங்கள்)போன்ற நல்லறங்களிலும் நேரங்களை ஒதிக்கி ரமலானில் முழுமையான நன்மைகளைப் பெற்ற நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்ப் புரிவானாக!ஆமீன்...
No comments:
Post a Comment