தலைப்பு:
தற்கால பிரச்சனைகளும்,இஸ்லாமிய சட்டங்களும்.
----------------------------
நவம்பர் - 26 தேசிய சட்ட தினம்
(National Law Day)
----------------------------
பாபர் மஸ்ஜிதின் விஷயத்தில் வரலாற்று பிழை செய்த அலகாபாத் நீதிமன்றம், மீண்டும் 24/11/2021 அன்று குழந்தையின் வாயில் ஆண் உறுப்பை வைத்து புணர்வது கடுமையான குற்றமல்ல என்ற ஒர் அருவருக்கத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
----------------------------
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا (அல்குர்ஆன் 33-36)
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பை தவிர ஒரு அதிகாரப்பூர்வ இந்திமொழி பெயர்ப்பையும் கொண்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமே சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது.
ஆனால் இன்று பெயருக்குத்தான் சுதந்திர நாடே தவிர எல்லா சட்டங்களும் கானல் நீரகிவிட்டது.
குற்றம் செய்தவனெல்லாம் வெளியே சுற்றிக்கொண்டும் பாதிக்கப்பட்டவர்கள் அநீதி இழைக்கப்பட்டவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள்.
ஆரம்பகாலங்களில் ஐரோப்பியர்களை ஆண்ட மன்னர்களிடம் இறைத்தன்மையை வழங்கியே மக்கள் வாழ்ந்தனர், மன்னனுக்கே முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டது, அவன் எதை சட்டமாகப் பிறப்பித்தானோ அது சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மக்கள் எந்த அதிகாரமும் அற்ற நடைபிணங்களாக இருந்தனர். இதன் மூலம் மக்கள் பல அவஸ்தைக்குள்ளானார்கள், கலகங்கள் தோன்றின, கலவரங்கள் வெடித்தன, அந்த சர்வதிகார மன்னர்களை அகற்றிட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள் இதனால் பல கோட்பாடுகள் தோற்றம் பெற்றன, அவற்றில்: “தலைமை அதிகாரம் மக்களுக்குரியது. மக்கள்தாம் அதிகாரங்களின் மூலாதாரமாகும்' அதாவது சட்டங்களை மக்களே இயற்றுவர் என்ற கோட்பாடு மிக முக்கியமானதாகக் கொள்ளப்பட்டது. பிறகு தான் தெரிந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த சட்டமும் எல்லா காலத்திற்கும் பொருந்துவதில்லை என்று.
53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன.
ஒரு நாட்டின் சமூகஅமைப்பும்,நிர்வாக கட்டமைப்பும் சீர்குழையமல் சீராக இயங்க சட்டமும்,நீதித்துறையும் அவசியமாகும்.
ஆனால் கேள்வி, நாட்டின் சட்டமும்,நீதித்துறையும், தனிமனித பாதுகாப்பையும்,சமூக அமைதியையும்,தன்னை ஆளும் அரசின் மீது நம்பிக்கையையும் ஊட்டியிருக்கின்றனவா?
நாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு, பாலியல் வல்லூறு, சொத்துக்களை சூறை யாடுவது போன்ற குற்றச்செயல்கள்,
சட்டம்,நீதித்துறைகளின் மீது அச்சமின்மையையும்,நம்பிக்கையின்மையும் காட்டுக்கின்றன.
ஏப்ரல் 1, 2014 நிலவரப்படி நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி 34,144 வழக்குகள், விசாரணையிலுள்ள வழக்குகள் 30,186 இணைந்து 64,330 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் சேர்த்து 16.5 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை கிளையில் 1.09 லட்சம் வழக்குகளும், இந்தியா முழுவதும் 3 கோடிக்கு மேலவழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவைகளை நடத்தி முடிக்க 100 ஆண்டுகள் போதாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்றங்கள், குறைவான நாட்களே வேலை செய்வது பற்றி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறுகையில், ''நாடுமுன்னேற வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும், உற்பத்தியை பெருக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் போது, நீதிமன்றங்களும் ஏன் அதே போல் நினைத்து செயல் படக்கூடாது,'' என கேள்வி எழுப்பினார்.
ஆண்டில் 365 நாட்களில் 210 நாட்கள் மட்டுமே வழக்குகள் நடக்கின்றன. வாய்தா, நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற காரணங்களால் நீதி பரிபாலன நாட்கள் குறைந்து விடுகின்றன.
காசோலை வழக்கு மூன்று ஆண்டுகள், அடிதடி வழக்குகள் ஏழு ஆண்டுகள், விபத்து ஊர்தி வழக்குகள் 10 ஆண்டுகள், விவாகரத்து வழக்குகள் 15 ஆண்டுகள், பாகப்பிரிவினை வழக்குகள் 22 ஆண்டுகள் என வழக்குகள் தாமதமாகி கட்டுகள் நிறம் மாறுவதைப் பார்த்துப் பார்த்து வழக்கு நடத்துபவர்களின் மனமும் மாறிவிடுகிறது. பழமை வாய்ந்த சட்டங்களை முற்றிலும் ஒழித்து நவீன காலத்திற்கு ஏற்ப வரையறைகளுடன் கூடிய, தொழில் நுட்பம் சார்ந்த எளிய, விரைவான நீதியே மக்கள் கேட்கின்றனர்.(நன்றி:தினமலர் நாளிதழ்)
தாமதிக்கப்படும் நீதி,மறுக்கப்படும் நீதி என்று கூறப்பட்டாலும் விசாரணை என்றப் பெயரில் வழக்கு நீட்டிக்கப்படுவது குற்றவாளி மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதற்கும்,பாதிக்கப்பட்டவர் வழக்காட இயலாத கையறுநிலையால் சமரசம் செய்துக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
வலியோர்க்குத் தான் நீதி; எளியோர்க்கு அல்ல என்ற நிலை எப்போது தான் மாறுமோ. வானம் வீழினும் நீதி வாழ வேண்டுமே என்கிற மனக்குமுறல்களை கேட்கமுடிகிறது.
சில்லரைகளில் திருடுபவன் அடித்து நொறுக்கப்படுகிறான்.பெரும் குற்றம் புரிபவன் V.I.P சிறையில் சொகுசாக மரியாதையோடு நடத்தப்படுகிறான்.
சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் குற்றவாளி திருந்திவரவேண்டும் ஆனால் வெளிவருபன் இன்னும் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான்.
சிறுவர் சீர்திருத்த பள்ளிகள்,சிறார்களை நன்நெறிப்படுத்தாமல் பெரும் குற்றச்செயல்களை புரிபவர்களாக மாற்றி அனுப்புகின்றன.
கடந்த வார செய்தி:
திருச்சி அருகில் ஆட்டை திருடிய 8பேர் கொண்ட கும்பலை துரத்திப்பிடித்த காவலர் பூமிநாதன் என்பரை அந்த கும்பலில் 18 வயது மதிக்க தக்க ஒருவன் பின்னாலிருந்து வெட்டிக்கொள்கிறான்.அதில் இரண்டு சிறுவர்கள், ஒருவனுக்கு வயது 10,இன்னொருவனுக்கு வயது 14,கூடுதல் தகவல் இவர்கள் போதைக்கு அடிமையனவர்கள்.போதைப் பொருள்,மது வாங்குவதற்காக திருடியதாக அவர்களே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
எனவே சட்ட அமைப்புக்களை சரியாக்காத வரை குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது.
இன்றும் பத்திரிக்கைகளில்....
ஒரு நாள் கூட பாலியல் அத்துமீறல் குற்றங்கள் இல்லாத நாளில்லை என்று சொல்லும் அளவு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது, இன்னமும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். உலகிலேயே மிகவும் மோசமான ஒரு குற்றம் என்றால் அது பாலியல் வன்புணர்வு என்னும் கற்பழிப்பு குற்றமாகத் தான் இருக்க முடியும். இந்தியாவில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்றைய சமூகத்தில் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
பெண்களில் கிழவிகளையும்,ஏன் சிறிய குழந்தைகளையும் விட்டு வைக்காமல் சில காம கொடூரர்கள் மோசமாக நடந்து கொள்வதோடு, சமூகத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். இம்மாதிரியான குற்றவாளிகள் இந்தியாவில் மட்டுமே சுதந்திரமாக எந்தவொரு பயமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நிர்பயா..
தலைநகர் புதுதில்லியில் நிர்பயா என்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.சட்டம் கடுமையாக்கப்படும் என்றனர்.நடைமுறையில் இல்லை.கடுயான சட்டம் வந்தும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.
ஆசிபா...
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் .
பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களை மட்டும் இல்லை, ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ள காஷ்மீரில் ஆசிஃபாவிற்கு நடந்த துயரம். குதிரை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று, கோயில் கருவறையில் மூன்று நாட்கள் கட்டி வைத்துள்ளன. அதன் பின்பு ஆசிஃபாவின் வாயில் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை திணித்து 3 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வலி தாங்காமல் கத்திய சிறுமியின் வாயை துணியால் அடைத்து மரண வேதனையை அளித்துள்ளனர். கடைசியில் சிறுமி இறந்த பின்பு அவளை தூக்கி வந்து காட்டு பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை படிப்பவர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி என்ன நடக்கிறது இந்த நாட்டில்??? என்பது தான்.
ஜனவரி 10 ஆம் தேதி காணமால் போன ஆசிஃபா, 5 நாட்கள் கழித்து பிணமாக கிடைத்துள்ளார். முதலில் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி, தீபக் கஜூரியா பின்பு இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒரு அதிர்ச்சி.
பின்பு, கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தினர். அதில் சில பாஜக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.கைதான குற்றவாளிக்காக தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்றது அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சி ராம்,சஞ்சி ராம் மகன் விஷால் ஜங்கோதரா, சஞ்சி ராமின் 17 வயது உறவினர், போலீஸ் அதிகாரி தீபக் காஜுரியா சுரேந்தர் வர்மா, பர்வத குமார் ஆகிய 6 பேரும், அவர்கள் செய்த கொலையை மறைத்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அளித்துள்ள பதில்கள், காஷ்மீரில் வாழும் நாடோடி சமூகத்தினரின் பரிதாப நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது. ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம் நாடோடி சமூகத்தின் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்புணர்வே ஆகும். குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு அவர்களை வெளியேற வைக்கவேண்டும் என்றே இப்படி செய்துள்ளனர். இந்த கொலையை மறைக்க போலீஸாருக்கு ரூ1.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.
பல போராட்டங்களை கடந்து தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிந்தது,குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. (நன்றி:onetamil news)
பள்ளிக்கூடங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல்கள்.
1) கோவை உக்கடம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த நவம்பர் 2021. 11-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவி இறப்பதற்கு முன்பு `யாரையும் சும்மா விடக் கூடாது' என்று ஒருசில பெயர்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகாரை அடுத்து, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திமீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும், அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
2)சிவசங்கர் பாபா, சென்னை அருகிலுள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபாமீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைதுசெய்யப்பட்டார். மேலும், இவருக்கு உதவியதாக அந்தப் பள்ளியின் நடன ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிவசங்கர் பாபாமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
3)சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சோஷத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். இவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அநாகரிகமாகவும், இரட்டை அர்த்தத்திலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, ராஜகோபாலன்மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்து்ம் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
சமீபகாலங்களாக, சில பள்ளி ஆசிரியர்களால் மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இப்படி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காரணம் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.
நம் நாட்டில் கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை என்ன?
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 தான் கற்பழிப்பு என்பதை குற்றம் என்று கூறி அதற்கு தண்டனையும் அளிக்கிறது.இதன் அடிப்படையில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை கொடிய காவல் தண்டனையை கொடுக்கலாம்.. ஆனால் சில முக்கிய அல்லது மிக கொடுமையான சம்பவத்துக்கு மரண தண்டனை' கிடைக்கும்.
சிறு குழந்தைகளை கற்பழிப்பு செய்த குற்றவாளிக்கு POCSO Act படி மரண தண்டனை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
போக்சோ, பாலியல் புகார்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், நடந்த பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இரண்டு வகையில் இதை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 2019 – 20 வரை பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து 36 வழக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் போக்சோ சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, எத்தனை வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று பார்த்தால் 14 சதவிகிதம் கூட இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து ஆறு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை போக்சோ வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இதன் மூலம் போக்சோ சட்டம் பாய்ந்தது என்று சொல்வது எல்லாம் பொய். அது பாயவும் இல்லை பதுங்கவும் இல்லை. பொம்மை போல ஒரே இடத்தில்தான் கிடக்கிறது.(நன்றி:விகடன்)
நம் நாட்டின் அவல நிலை:
இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமான செயலாக கருதப்படாது.அரசுஅனுமதியோடு விபச்சாரம் புரியலாம்.
இந்தியாவில் 28இலட்சம் தொழில் முறை விபச்சாரிகள் என்றும்,52 சதவிகிதம் சிறார்கள் பாலியல் ரீதியில் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பாரளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு நிலைமை மேசமாகியிருக்கிறது.
தனிமனித ஒழுக்கம்,பண்பாடு ரீதியில் சமூகம் முன்னேற வேண்டும்.குடும்ப சூழல் மற்றும் ஆரம்ப பாடசாலைகளிலிருந்து ஒழுக்கமும்,நன்நெறியும் போதிக்கப்படவேண்டும். ஆனால் ஒழுக்க வாழ்வின் ஆரம்ப பாட சாலைகளில் இருந்தே வீழ்ச்சிகள் துவங்குகின்றன. பெற்றோரும், குடும்பமும், கல்வி கலாச்சாலைளும் ஒழுக்க வீழ்ச்சியின் துவக்க மையமாக விளங்கும் சமூக சூழலில் இத்தகைய பாலியல் அக்கிரமங்கள் தீவிரமடைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அரசியல், மத, சமூக மையங்கள் ஒழுக்க வாழ்விற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆனால், அங்கெல்லாம் வெட்கித் தலைகுனியவைக்கும் சம்பவங்கள் தாம் நடக்கின்றன.
கலை, இலக்கிய, விளையாட்டு, கலாச்சார துறைகளில் எல்லாம் பெண்களின் உடல் அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
விளம்பரங்ளில் பெண்களை காட்சிப்பொருளாகவும் போகப்பொருளாகவும் சித்தரித்துக்காட்டபடுகிறது.
வளர்ந்துவிட்ட கண்டுப்பிடிப்புகளும்,தகவல் தொழில் நுட்பங்களும் ஆபாசம் நிறைந்ததாகவும்,இளைய சமூகத்தை வக்கிரபுத்தியுள்ளவர்களாக மாற்றியிக்கின்றன.
இவ்வாறு சமூக சூழல் பாலியல் வக்கிரமங்களால் மலிந்து காணப்படும்பொழுது பெண்களைக் குறித்த மனோபாவம் ஆண்களிடம் மாறுபடுகிறது. பெண்கள் எப்பொழுதுமே ஒரு அனுபவிக்க கூடிய போகப்பொருளே என்ற சிந்தனையே ஆண்களிடம் மேலிடுகிறது. விளைவு பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள்.
ஆபாசங்கள் மலிந்துப் போன சமூகத்தில் பள்ளிக்கூடத்தில் 4வயது குழந்தைக்கு "Good touch"எது "bad touch"எது என்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டுமென்றால் மனித குலம் எவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.
ஒழுக்கம்,பண்பாடு ரீதியில் மேம்படாத சமூகம் நவீன வளர்ச்சியில் எவ்வளவு முன்னேறினாலும் உருப்படாது.
இஸ்லாம்,மதுவை குற்றங்களின் தலைவாசல் என்கிறது.ஒருவன் குடித்தால் எதையும் செய்வான்.குடிகாரர்கள் நிறம்புயுள்ள தேசத்தில் விபச்சாரம் நடக்காமல் வேறென்ன நடக்கும்.இந்த நாட்டில் குடிகாரர்களின் சராசரி வயது 13,புத்தகம் இருக்க வேண்டிய கையில் மது பாட்டில்கள்...
எல்லா ஆபாச படங்களும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் மொபைலில் உள்ளது.
இந்தியாவில் ஒரு வினாடிக்கு 28,250பேர் ஆபாச படங்களை பார்கிறார்கள்.
இறை சட்டமே நிறை சட்டம்.
உலகளவில் பின்பற்றபடும் சட்டங்கள் பெரும்பாலும் மனிதனால் இயற்றப்பட்டவைகளே.அவற்றால் பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வை காணமுடிவதில்லை.
ஆனால் இஸ்லாம் முழுமைப் பெற்ற சட்டத்திட்டங்களுடைய சன்மார்க்கமாகும்.
இஸ்லாத்தில் கொள்கை,கோட்ப்பாடு,சட்ட திட்டங்கள்,வாழ்வியல் வழிமுறை எல்லம் நேர்த்தியானவையும்.சட்டமாற்றம்,மறுபரிசீலணைக்கும் அப்பாற்பட்டதும் ஆகும்.
அதனால் தான் அல்லாஹுவும்,அவன் தூதரும் ஒன்றை சட்டமாக்கிவிட்டால் அதனை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்கிறது திருக்குர்ஆன்...
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36)
وَّلَا يُشْرِكُ فِىْ حُكْمِهٖۤ اَحَدًا
அவன் தன்னுடைய தீர்ப்பில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்.( 18:26)
اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ
சட்டம் இயற்றும் அதிகாரம் அவனுக்கே உண்டு.
(அல்குர்ஆன் : 6:57. )
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக குர்ஆன் பேசும்.
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
(அல்குர்ஆன் : 5:45)
அவதூறு கூறினால்...
وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.(அல்குர்ஆன் : 24:4)
விபச்சாரம் செய்தால்....
اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍوَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.(அல்குர்ஆன் : 24:2)
ஜூஹைனா குலத்தை சார்ந்த ஒரு பெண்மணி
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
திருடினால்.......
இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும்....
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். மக்ஸுமிய்யா குலத்தை (குரைஷி குலம்) சார்ந்த ஒர் பெண்மணி திருடிவிட்டார். இது குரைஷி குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நபிகள் நாயகத்திடம் அவர்களின் அன்புக்கு பாத்திரமான உஸாமாவால் மட்டுமே என்று பேசிக் கொண்டனர்.இது குறித்து உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் மனிதர்களே உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன் எனக் கூறினார்கள்.
நூல்: புஹாரி 6787
திருடனின் கரம் மணிக்கட்டுவரை துண்டிக்கப்படுவது, கொலைக்குப் பதிலாக கொலையாளி கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டங்கள் இரக்கமற்ற, காட்டுமிராண்டித்தனமான சட்டம் என விமர்சனம் செய்யும் பலர் தமது வீடுகளின் திருடிய திருடனை முர்க்கத்தனமாக தாக்கி சிலவேளை அவனைக் கொலையும் செய்தும் விடுகின்றனர். கொலை காரனை இவர்கள் என்ன செய்யவார்கள் என்று நினைத்துப்பார்க்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
நபியின் சட்டத்தினால் மண்டியிட்ட மன்னர்.
சீசர் மன்னன் அபூ சுப்பயான் (ரழி) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுஅவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகின்றார் எனக்கோட்டார். அதற்கு அபூ சுஃப்யான், தொழுகை, தர்மம், போதும் என்ற பண்பாடு, உறவுகளுடன் சேர்ந்து வாழ்தல், மூதாதையர் சொல்வதைப் புறக்கணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டு கட்டளையிடுகின்றார் எனப்பதில் அளித்தார். அதற்கு மன்னன், நீ சொல்வது உண்மையானால் அவர் எனது இந்த சிம்மாசனத்தையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவருவார், எனக்கு முடியுமானால் அவரை நான் சந்தித்து, அவரது பாதத்தையும் கழுவிடவும் தயார் என்றார். புகாரி (2941)
நபி (ஸல்) அவர்களின்...............
எந்தவொரு பெண்ணும் பூரண பாதுகாப்புடனும் அச்சமின்றியும் எங்கேயும், எப்பொழுதும் பயணிக்கும் விதம் மக்கள் ஒழுக்கரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உயர்வான நிலையை அடையவேண்டும் என்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
மீண்டும் தவறு செய்யாமலிருக்க...
1. குற்றம்செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும். அதை இஸ்லாம் தான் தருகிறது.
அல்லாஹ் நம்மையும் நம் சந்ததியினரையும் இஸ்லாமிய இறை சட்டத்தை பின்பற்றி வாழவும், இறைவனுக்கு அஞ்சி வாழவும் தவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்....
வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment