தலைப்பு:
இறைநேசர்களின் கராமத் எனும் அற்புதங்கள்...
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 10:62)
அல்லாஹுத்தஆலா தனது வல்லமையையும்,நுபுவத்தையும் மெய்ப்பிப்பதற்காக வேண்டி தனது நபிமார்களின் வழியாக.
"خرقاً للعادة يعني خلاف العادة"
வழமைக்கு முரணான,மனித அறிவிற்கும் புலப்படாத சில அற்புதங்களை நிகழ்த்துவதுண்டு அதற்குப் பெயர் "ஒரு அதிசயம்" முஃஜிஸா எனப்படும்.
அதுவே நபிமார்கள் அல்லாத,அல்லாஹ்விற்கு நெருக்கமான இறைநேசர்களின் மூலமாகவும் அற்புதங்கள் வெளிப்படும்.அதற்குப் பெயர் "கண்ணியங்கள்"கரமத், கராமாத் என்றும் சொல்லப்படும்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களாகிய உலக முஸ்லிம்களின் (அகீதா)கொள்கை:
كرامات الأولياء حق بإجماع أمة الإسلام من أهل السنة والجماعة الذين قالوا بجواز ظهور أمر خارق للعادة على يد مؤمن ظاهر الصلاح إكراما من الله له
இறைநேசர்களின் (கராமாத்)அற்புதங்கள் உண்மையாகும்.அல்லாஹ் சாலிஹான முஃமினான தன் நேசரை சங்கைப்படுத்த அவரின் கரங்களில் வழமைக்கு மாற்றமான சில கராமத்துகளை வெளிப்பத்தலாம் என்பது இஸ்லாமிய சமூகத்தின் ஏகோபித்தமுடிவாகும்.
சிலவழிக்கெட்ட (அன்று முஃதஸிலாவினர் இன்று போலித் தவ்ஹீத்வாதிகள்) கூட்டத்தினர், அவ்லியாக்களின் கராமத்துகளை மறுக்கின்றனர்.
அவர்களின் வாதம்:நபிஅல்லாதவரிடமும் அற்புதம் வெளிப்பட்டால் நபிக்கும்,மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.எனவே நபிமார்களிடம் மட்டுமே அற்புதம் வெளிப்படும்.
மறுப்பு;நபியாக இருப்பதற்கு அற்புதங்கள் மட்டுமே ஷரது கிடையாது.நபிக்கு பல ஷரதுகள் உண்டு.எனவே அவ்லியாக்களிடம் (வழமைக்கு முரணான)கராமத் வெளிப்படலாம்.
அற்புங்களை காட்டி நுபுவத்தை தஃவா செய்தால் அவர் இறைநேசராக இருக்கமுடியாது. (எ.க;முஸைலம துப்னு கத்தாப்)
நபியாக இருப்பதற்கு அற்புதங்கள் மட்டுமே அளவுகோள் கிடையாது. சாதரண மனிதர்களும் (மெஜிஷியன்கள்,)பாவிகளும் கூட அற்புதங்களை காட்டலாம்.(எ.க:தஜ்ஜால்,சூனியக்காரர்கள்)
எனவே நபியாக இருப்பதற்கு அற்புதங்களை மட்டுமே அளவுகோளகக் கொள்வது ஏற்புடையதல்ல.
ஆனால் முஃஜிஸா,கராமத் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
முஃஜிஸா என்பது இறைக்கட்டளை அதனை வெளிப்படுத்திக்காட்டுவது நபிக்கு கடமையாகும்.மேலும் ஒரு நபி தனது நுபுவத்தை மெய்ப்பிப்பதற்காகவும்,தன்னை (معصوم )பெரும்பாவங்களை விட்டும் பரிசுத்தமானவர் என்பதனை நிரூபிப்பதற்காகவும் முஃஜிஸாவை வெளிப்படுத்துவார்.(எ.க:நம் கண்மணி நாயகம்(ஸல்) சந்திரனை பிளந்தது,நபி மூஸா (அலை)அவர்கள் கடலை பிளந்தது.....)
கராமத் என்பது இறைநேசரை சங்கைப்படுத்த அல்லாஹ் வழங்கும் ஓர் அன்பளிப்பாகும்.அது அவருக்கு தெரிந்தும்,தெரியாமலும்,இஷ்டத்தோடும்,இஷ்டமில்லாமலும் வெளிப்படலாம். ஆனால் நுபுவத்திற்கு முஃஜிஸா கடமை.விலாயத்திற்கு கராமத் கடமையல்ல.கராமத் இல்லாமலும் இறைநேசர் இருக்கலாம்.
அவ்லியாக்களின் கராமத்தை மறுக்கும் வழிகேடர்கள் கராமத்தை மட்டுமல்ல இறைநேசர்களையே மறுப்பவர்கள்.
அவ்லியாக்கள் என்றாலே ஒரு சாரார் உட்சபட்ச மரியாதை செலுத்துவதையும்,மற்றொரு சாரார் தரம் தாழ்த்தி பேசுவதையும் காணமுடிகிறது.
இறைநேசர் என்பவர் யார்,அவர் எப்படி வாழ்ந்தார்,அவரின் வாழ்வை படிப்பினையாக எடுத்துக்கொள்வதென்றால் எப்படி எடுத்துக்கொள்வது என்பனப் போன்ற எந்த புரிதலும் இல்லாமல்,வலிமார்கள் என்றாலே கராமத்துகள் நினைவுக்கு வருவதும்.
முஸ்லிம்கள், கராமத்துகளை நிகழ்த்தினால் தான் அவர் வலி என்ற பொதுபுத்தியை ஒதுக்கிவைத்து விட்டு குர்ஆன்,ஹதீஸ் வலிக்கு சொல்லும் இலக்கணங்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
@@@@@@@
திருக்குர்ஆன் வலிமார்களை அறிமுகம் செய்யும் மிகப்பிரபல்யமான வசனம்.
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)
الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.(அல்குர்ஆன் : 10:63)
لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன் : 10:64)
இவ்வசனம் இறைநேசர்களுக்கு 4 (நான்கு) இலக்கணங்களைக்கூறுகிறது
1)பயமற்றவர்கள் 2)அச்சமற்றவர்கள் 3)ஈமான்,இறையச்சமுள்ளவர்கள் 4)இம்மை,மறுமை ஈருலகிலும் சுபச்சோபனம் பெற்றவர்கள்.
குர்ஆன் கூறும் இறைநேசரின் அடையாளம்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ۖ ۚ
உண்மையான முஃமின்கள் wahid என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். 8:2.
و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. 8:34
@@@@@@@
ஹதீஸ்களில் வலிமார்களை குறித்து...
وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبي ، عن ابن عباس قال:قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله".ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا.
யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.
حديث إبن ماجه 4109 والإمام أحمد 27601 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ
உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்)கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல் சொன்னார்கள் என்பதாக அஸ்மா (ரலி)அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109
ஹதீஸ் கூறும் இறைநேசர்களின் அடையாளம்.
إنَّ مِن عبادِ الله مَن لو أقسَم على اللهِ لَأبَرَّه .
صحيح ابن حبان ٦٤٩٠.
அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்’
١- [عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم:] إنَّ من أمَّتي مَن لو جاء أحدُكم يسأَلُه دينارًا لم يُعْطِه ولو سأَله درهمًا لم يُعْطِه ولو سأَله فِلْسًا لم يُعْطِه ولو سأَل اللهَ الجنَّةَ أعطاه إيّاها ذي طِمْرينِ لا يُؤْبَهُ له لو أقسَم على اللهِ لأبرَّه
الهيثمي (ت ٨٠٧)، مجمع الزوائد ١٠/٢٦٧ • رجاله رجال الصحيح
என் உம்மத்தில் சிலர் இருக்கின்றனர், அவர்களிலிருந்து யாரேனும் ஒருவர் உங்களில் ஒருவரிடம் வந்து ஒரு தங்க நாணயம் யாசித்தால் அவருக்குக் கொடுக்கமாட்டார், ஒரு வெள்ளி நாணயம் கேட்டால் அதையும் கொடுக்கமாட்டார், ஒரு பைசா கேட்டால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டார். (ஆயினும் அல்லாஹுதஆலாவிடம் அவரது தகுதியாவது) அவர் அல்லாஹுதஆலாவிடம் சொர்க்கத்தை வேண்டினால் அல்லாஹுதஆலா அவருக்கு சொர்க்கத்தைக் கொடுத்துவிடுவான். (அம்மனிதரின் மேனியில் வெறும்) இரு பழைய போர்வைகள் இருக்கும், அவரை யாரும் சிறிதும் பொருட்படுத்தமாட்டார்கள். (ஆயினும்) அவர் அல்லாஹுதஆலா(வின் மீது தன் காரியங்களை ஒப்படைக்கும் மனவலிமையுடன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அல்லாஹுதஆலா நிச்சயமாக அவரது சத்தியத்தை நிறை வேற்றி வைப்பான்”
@@@@@@@
இறை நேசர்களின் அந்தஸ்து.........
[رواه البخاري] 6021 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
ஸஹீஹ் புகாரி:6502 .எவர் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்.எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டே இருப்பான்.இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.அவ்வாறு அவனை நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக,அவன் பற்றுகின்ற கையாக,அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை.அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் [மரணத்தின் மூலம்] அவருக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
மேற்சொன்ன இந்த ஹதீஸில் அல்லாஹுத்தஆலா தனது வலி கேட்பதையெல்லாம் தருவேன் என்றும்,அவரின் பார்வையாக,செவியாக,கரங்களாக,பாதங்களாக இப்படி எல்லாமுமாகவே மாறிவிவேன் என்றும் கூறுவதால் இறைநேசரின் வழியாக அல்லாஹ் கராமத்துகளை வெளியாக்குவதென்பது பாரதூரமான ஒன்றல்லவே.
@@@@@@@
இறைநேசர்களின் கராமத்.
குர்ஆனிலும்,ஆதாரப்பூர்வாமான அறிவிப்புகளிலும் வலிமார்களின் கராமாத்கள் உண்மை என்பதற்கு ஆதரங்கள் உள்ளன.
அல்லாஹ் நேரடியாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் குத்ரத். அல்லாஹ் நபிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் முஃஜிஸாத். அல்லாஹ் வலிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் கராமத்.
ஒரு ஆபித் மார்க்க அறிஞரின் கராமத்.
قال علامہ تفتازانی علیہ الرحمۃ : ’’کأتیان صاحب سلیمان علیہ السلام وھو اٰصف بن برخیا علی الاشھر بعرش بلقیس قبل ارتداد الطرف مع بعد المساف
குர்ஆனில் ஸுலைமான் (அலை)அவர்களின் அவையில் இருந்த இல்மை கற்றறிந்த ஆசிஃப் என்ற இறைநேசர்,பல மைல்களுக்கு அப்பால் இருந்த பல்கீஸ் அம்மையாரின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுவந்தது அவரின் கராமத்தாகும் என அல்லாமா தஃப்தாஸானி (ரஹ்)அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.(அல்குர்ஆன் : 27:38)
قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”(அல்குர்ஆன் : 27:39)
قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். (அல்குர்ஆன் : 27:40)
அன்னை மர்யம் அலை அவர்களுக்கு ஏற்பட்ட கராமத்.
ذكر البيضاوي حول تفسير قوله تعالى وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا (الآية 37 من سورة آل عمران) بأن الآية دليل على جواز الكرامة للأولياء.
وعلق الشيخ زادة على تفسير البيضاوي بأن حصول الرزق عند مريم على الوجه المذكور لا شك أنه أمر خارق للعادة ظهر على يد من لا يدعي النبوة وليس معجزة للنبي الذي كان في ذلك الزمن زكريا عليه السلام، فتعين أنه كرامة لمريم عليها السلام
நபி ஜகரிய்யா (அலை)அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த மர்யம் (அலை)அவர்களுக்கு மஸ்ஜிதில் பூட்டப்பட்ட தனிஅறையில் பழங்களும்,உணவும் கிடைத்தது.மர்யம் (அலை)அவர்களின் கராமத் என பைளாவி (ரஹ்)அவர்களின் தஃப்ஸீர் விளக்கம் கூறுவார்கள்.
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.(அல்குர்ஆன் : 3:37)
குகைவாசிகளின் கராமத்.
குர்ஆனில் சூரா கஹ்ஃபில் குகைவாசிகள் 300 வருடங்கள் உறங்கியதும்,உயிர்த்தெழுந்ததும்.
கிளுர் (அலை)அவர்கள் சிறுவனை கொன்றுவிட்டு அதற்கான காரணமாக பின்நாட்களில் அவன் இப்படி இருப்பான் என்று கூறுவதும் கராமத்துகளாகும்...
நபிமொழி அறிவிப்புகளில் வரும்,முன்வாழ்ந்த சமூகத்தவர்களில் உள்ள வலிமார்களின் கராமத்துகள்....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முற்காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை 'ஜுரைஜ்' என்று அழைத்தார்! 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் 'ஜுரைஜ்' என்று அப்பெண் அழைத்தபோது. 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் அன்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் 'ஜுரைஜ்' என்று அழைத்தபோது 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் 'இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் மரணிக்கக் கூடாது' என்று பிரார்த்தித்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது 'ஜுரைஜுக்குதான்; அவர் தம் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்' என்று அவள் கூறினாள். 'தன்னுடைய குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி 'சிறுவனே! உன் தந்தை யார்?' எனக் கேட்டதற்கு அக்குழந்தை 'ஆடுமேய்க்கும் இன்னார்' என விடையளித்தது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி (1206)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 2291)
அமீருல் முஃமினீன் உமர் (ரலி)அவர்களின் கராமத்...
: كرامة عمر بن الخطاب - رضي الله عنه -: عن ابن عمر - رضي الله عنهما -: أن عمر بعث جيشًا، وأَمَّرَ عليهم رجلًا يدعى سارية، فبينما عمر يخطب، فجعل يصيح: يا ساريةُ الجبلَ! فقدِم رسول من الجيش، فقال: يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا، فإذا بصائح يصيح: يا ساريةُ الجبلَ، فأسندنا ظهورنا إلى الجبل، فهزمهم الله تعالى. (رواه البيهقي
உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே‘‘يَا سَارِيَةُ! الْجَبَلَ’’ சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது.
காலித் இப்னு வலீத் (ரலி)அவர்களின் கராமத்....
விஷம் அருந்தியும் அன்னவர்களுக்கு ஒன்றுமாகவில்லை
عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: " شَهِدْتُ خَالِدَ بْنَ الْوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْحِيرَةِ أُتِيَ بِسُمٍّ ، فَقَالَ : مَا هَذَا ؟ قَالُوا : سُمُّ سَاعَةٍ قَالَ : " بِسْمِ اللَّهِ " ثُمَّ ازْدَرَدَهُ – يعني ابتلعه ولم يصبه سوء – " .
"شرح أصول اعتقاد أهل السنة والجماعة" (6/498) ، "البداية والنهاية" (6 /382) .
ஸஃபீனா (ரலி-அன்ஹா)அவர்களின் கராமத்...
وسفينة مولى رسول الله صلى الله عليه وسلم أخبرَ الأسدَ أنه رسولُ رسولِ الله صلى الله عليه وسلم فمشى معه الأسد حتى أوصله إلى مقصده.
ரோம் தேசத்தை நோக்கிய இஸ்லாமிய படையில் கிளம்பிச்சென்ற ஸஃபீனா (ரலி)அவர்கள் பயணக்கூட்டதைவிட்டும் வழிதவறி காடுவழியே சென்ற போது,தீடீரென எதிரே ஒரு சிங்கம். அம்மையார் அந்த சிங்கத்திடம், நான் நபி முஹம்மது (ஸல்)அவர்களின் அடிமை,எனக்கு வழிவிடு என்ற சொன்னதும்,அந்த சிங்கம் அவர்களுக்கு வழிகாட்டி சென்று அவர்களின் படையில் கொண்டுப்போய் சேர்த்தது.
இரு ஸஹாபிகளின் இறைநேச வாழ்க்கையில் நிகழ்ந்த கராமத்......
3639» حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذٌ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ، يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ.
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது. அவ்விருவரும் அவரவர் வீடு போய் சேரும் வரை அந்த வெளிச்சம் இருந்தது. ( புஹாரி 3639)
இறைநேசர்களின் உடலை மண் தீண்டாது.
1351» حَدَّثَنَا مُسَدَّدٌ أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا. فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ.
ஜாபிர்(ரலி) அறிவித்தார். உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, `நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்" என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில்விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.உடனே புதிய கப்ரில் அவரை தனியாக அடக்கம் செய்தேன் .(புஹாரி:1351)
வலிகள் கோமான் கௌதுல் அஃளம் (ரஹ்)அன்னவர்களின் கராமத்...
ஹழ்ரத் ஷைக் அப்துல் ஹக் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹுத்தஆலா கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களுக்கு (பயானை) சொற்பொழிவை கராமத்தாக வழங்கியிருந்தான்.
ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள்.( நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.)
இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததாக இருந்தது. அன்னாரின் பேச்சைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.
அன்னவர்களின் சொற்பொழிவு கடும் பாறை போன்ற உள்ளத்தையும் கரைத்துவிடும்.
அவர்களின் சொற்பொழிவால் பல ஆயிரக்காணக்கான இல்லங்களும்,இலட்சக்கணக்கான உள்ளங்களும் நேர்வழிப் பெற்றன.(நூல்:அக்பாருள் அக்யார்)
@@@@@@@
உலகில் கியாம நாள் வரை இறைநேசர்களின் வரவு இருந்து கொண்டே இருக்கும்.கியாமத் நாள் வரை அப்புனிதர்களின் கராமாத்துகளும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
அல்லாஹுத்தஆலா இறைநேசர்களின் கராமத்துகளின் பொருட்டால் நம் பிழைகளைப் பொறுத்து,நமக்கு ஈடேற்றம் தந்தருள்புரிவானாக!ஆமீன்....
வெளியீடு :செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
4 comments:
மாஷா அல்லாஹ் வலிமார்களின் கராமத் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் கோர்வை செய்துள்ளீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்,
ஜஸாக்கல்லாஹ் ஹழ்ரத்.
மாஷா அல்லாஹ் 👌அருமையான ஆக்கம்.ஜஸாகல்லாஹூ கைரா..💐
அல்ஹம்துலில்லாஹ்.... ஹழ்ரத்
Post a Comment