Thursday, 12 January 2023

ஜும்ஆ பயான்.13/01/2023

தேச ஒற்றுமை மாநாடு... 

ஜனவரி 15,16 2023

தேசஒற்றுமை.


 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.   

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ 

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;


நம் இந்திய திருநாடு சமூக நல்லிணக்கத்திற்கான நிலம்.உலகத்திற்கே எடுத்துக் காட்டாய் திகழும் பூமி. இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக பந்த பாச உணர்வுகளோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் நமது அரசியலமைப்பு சட்டம் .யாரோ சிலரின் அதிகார கணவுகளுக்காக அதன் மாண்புகளை சிதைப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடியுரிமை சட்டம், பொதுச் சிவில் சட்டம் என அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, ஒற்றை கலாச்சாரம் என அடுத்தடுத்து பிரச்சினைகள் தொடர்கின்றன. நம் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த இந்தியாவை விட்டு செல்லும் தார்மீக கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

எனவே இஸ்லாமிய சமூகம் அந்த முழுமையான வெற்றியை அடைய அடிப்படை தேவைகள் இரண்டு. 

1) இறையச்சம் 2)ஒற்றுமை

இறையச்சம்.

இறையச்சம்,  ஒரு முஸ்லிமின் வாழ்வில் எல்லா பகுதியிலும் இருக்க வேண்டும். வெளிப்படையான தவறாக இருந்தாலும், மறைமுகமான தவறாக இருந்தாலும் அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சத்தோடு அந்த தவறுகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஆகையால் தான் மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி வாழுங்கள் என கட்டளையிடுகின்றான். நம் தொழுகை, தொழில், அன்றாட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை அத்தனையிலும் ஒரு முஸ்லிம் இறையச்சத்தோடு செயல்பட வேண்டும். அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்தால் இந்த உலகம் நம்மை பார்த்து அஞ்சும்.

ஒற்றுமை.

பல தரப்பு மக்கள், பல்வேறு சிந்தனையுடைய மக்கள், பல மொழி, பல சமயங்கள், பல இன, சாதி, மதங்கள், பல நாடுகளை சார்ந்து வாழக்கூடிய மக்களுக்கு மத்தியில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனாலும் அந்த நேரங்களிலும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஏற்படும் போது அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்  என இறைவன் கட்டளையிடுகிறான். நம்மில் பல அமைப்புகள், பல பிரிவுகள் இருந்தாலும், பல கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாத்தின் நலனை கருத்தில் கொண்டு நாம் ஒரணியில் நிற்க வேண்டும். அப்படி ஒட்டுமொத்தமாக நம் உரிமை பிரச்சினைக்காக CAA, NRC, NPR போன்ற நேரங்களில் ஒன்று சேர்ந்ததால் தான் அதை நம்மால் நிறுத்தி வைக்க முடிந்துள்ளது.  வருங்கால அரசியல் நகர்வுகள் மீண்டும் அதை மெய்படுத்திவிடக் கூடாது என்பதற்கு நாம் அனைவரும் இஸ்லாம் என்ற கருத்தியலில் ஒன்று சேர வேண்டும். இதை வலியுறுத்தி அல்லாஹ் திருமறையில்....

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 19/96)

பல்வேறு கிளைகளாக இருப்பினும் முஸ்லிம், முஃமின் என்ற பண்பில் நாம் அனைவரும் ஒன்றுபடும்போது அதில் அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக இருக்கும்.

ஒரே இறைவன், ஒரே மறை , ஒரே நபி ஒரே மார்க்கம் என்று இருக்கும் நாம் தான் இன்று பல பிரிவுகளாக, பல கட்சிகளாக பிரிந்துக் கிடக்கின்றோம். ஆனால் பல கடவுள் கொள்கை, பல வேதம் உடையவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆபத்து வரும் போது ஒரணியில் நின்று ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள், இதை இஸ்லாமிய சமூகம் எப்போது உணரப் போகிறோம்  என்பதை யோசிக்க வேண்டும்.

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் (6/153)

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.(அல்குர்ஆன்  6/159)

ஒற்றுமையோடு வாழவேண்டும். உங்களுக்கு மத்தியில் பிரிவினை வந்துவிடக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள்  ஒரு ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விஷயத்தை பிரியப்படுகின்றான். மூன்று விஷயத்தை வெறுக்கின்றான்.

அல்லாஹ் பிரியப்படும் மூன்று விஷயங்கள்.

1) வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும். அதில் யாரையும் இணையாக்கிவிடக் கூடாது.

 2) அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடித்துக்காள்ளவேண்டும். ஒற்றுமையோடு இருக்க வேண்டும். 

3)  ஆட்சியாளர்கள், மற்றும் தங்களின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அல்லாஹ் பிரியப்படாத மூன்று விஷயங்கள்..

1 ) தேவையில்லாத விஷயங்களை விவாதம் செய்வது. 

2) அவசியமின்றி பிறரிடம் தேவையாகுதல். 

3) பொருளாதாரத்தை வீணடிப்பது.

வேற்றுமையில் ஒற்றுமை.

நம் இந்திய திரு நாடு பன்முக கலாச்சாரத்தை கொண்டது. நிறத்தால், இனத்தால், ஜாதியால், மதத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்தியன் என்ற அடிப்பைடயில் நாம் ஒன்றுப்பட்டுள்ளோம். இந்த இந்தியா மதச்சார்பற்ற நாடு என நம் அரசியலமைப்பு சட்டமே கூறுகிறது. இதை மாற்றத்தான் இன்று பாசிச அரசாங்கம் முயற்சித்துக் கொண்டுள்ளது. நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த நமக்குள்ளே சில உட்பூசலை உண்டுபன்ன பல இஸ்லாமியர்களையும் விலை பேசி வாங்கி வருகின்றனர். இந்த பாசிச சிந்தனைக்கு நாம் ஆட்பட்டு விடக் கூடாது.

கருத்து வேற்றுமைகள் நமக்குள் நிறைய இருக்கலாம் .ஆனால் அது இஸ்லாத்திற்கு பாதகமாக ஆகிவிடக் கூடாது. மார்க்க விஷயத்தில் உலமாக்கள், ஃபிக்ஹ் கலை வல்லுஞர்கள் கருத்து வேற்றுமைக் கொள்வது ரஹ்மத்தாகும். ஆனால் தனக்கு தெரியாத ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமை கொள்வது பிரிவினையை ஏற்படுத்திவிடும். அதுதான் இன்று நமக்கு மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய நம்மால் முடியும். ஏனெனில் இதை  விட அதிகமான கருத்து வேற்றுமை அரபுகளிடம் இருந்தது. இரவு பகலாக, சண்டை, கலவரம், இரத்தம், வாள், போர் என வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் உதித்த பெருமானார் (ஸல்) அவர்கள்  ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். இதை அல்லாஹ் திருமறையில்....

وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 3 / 103)

நமது நாயகம் (ஸல்) அவர்களின் வருகையின் பரக்கத்தால் இதுவரை விரோதிகளாக இருந்தவர்கள் சகோதரர்களாக மாறினார்கள். எதிரிகளே அச்சப்படும் அளவு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். உலகத்தில் எந்த தலைவராலும் செய்ய முடியாத சாதனையை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

53 வருடங்கள் தான் வாழ்ந்த , பிறந்த சொந்த பூமியான மக்காவில் ஹிஜ்ரி 8ல் மக்கா வெற்றிப் பெற்ற பிறகு இந்த ஒற்றுமையை, சமாதானத்தை அனைவருக்கும் பொது மன்னிப்பை கொடுத்து சாத்தியப்படுத்தினார்கள்.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய ஒற்றுமையினால் ஏற்பட்ட மாற்றங்கள் ....

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புனித மதீனா சென்ற பின் மூன்று விதமான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். இந்த உடன்படிக்கைகள் தான் இன்றளவும் நம் இஸ்லாம் உலகத்தின் மூளை முடுக்குகளுக்கெல்லாம்  பரவிக் கொண்டிருப்பதற்கு அடித்தளமாகும். 

1) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து சென்ற முஹாஜிர்களுக்கும், மதீனாவின் மைந்தர்களான அன்சாரி தோழர்களுக்கும் மத்தியில் ஒர் நட்புறவை ஏற்படுத்தினார்கள். கொடுக்கல், வாங்கல் முதல் திருமண பந்தம் வரை அனைத்தையும் இருவர்களுக்கும்  மத்தியில் கட்டமைத்தார்கள். முஹாஜிர், அன்சாரி என்ற பாகுபாடு இருவர்களுக்கும் மத்தியில் எந்த நேத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர்களுக்கு மத்தியில் சகோதர பாசத்தை உருவாக்கினார்கள்.

2) மதீனாவில் காலம் காலமாக தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு பெரும் கூட்டமான அவ்ஸ் ,கஜ்ரஜ் கோத்திரத்தார்களை அழைத்து அவர்களுக்கு மத்தியில் சமாதான உடன்படிக்கை செய்து அவர்களை சீர்படுத்தினார்கள். காலம் காலமாக இருந்த பகைமை நீங்கி இஸ்லாத்திற்கு சாதகமானவர்களாக மாறினார்கள்.

3) மதீனாவாசிகளான அன்சாரி நபித் தோழர்களுக்கும், மதீனாவை சுற்றி வாழ்ந்த பனூ கைனுகா, பனூ குரைலா, பனூ நுலைர் போன்ற யூத சமுதாயத்திற்கும் மத்தியில் அமைதியை நிலை நாட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மற்றும் உடன் படிக்கைகளை செய்தார்கள். 

அதில் மிக முக்கியமான உடன் படிக்கை....

1) முஸ்லிம்களும் , யூதர்களும் ஒரே நாட்டினராக கருதப்படுவர். யூதர்கள் அவர்கள் மத சம்பிரதாயங்களை செய்ய எந்த தடையும் இல்லை. யூதர்களையும், முஸ்லிம்களையும்  எதிர்த்து அந்நிய நாட்டில் இருந்து யாராவது போர் செய்ய முனைந்தால் ஒருவொருக்கொருவர் உதவி செய்திட வேண்டும். ஒன்று சேர்ந்து இருவரும் யுத்தம் செய்ய வேண்டும்.யூதர்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களை யூதர்களும் பாதுகாக்க வேண்டும்.

2) குற்றம் செய்தவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் , யூதராக இருந்தாலும் சமமான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் நீதி வழங்குவதில் இருக்ககூடாது.

என்பன போன்ற பல அரசியல் நுட்பங்களையும் அரசியல் நகர்வுகளையும் பெருமான் (ஸல்) அவர்கள் கன கச்சிதமாக செய்து முடித்தார்கள். இதன் பின் சில நயவஞ்சக வேலைகள் நடந்தாலும் , ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய இந்த ஒற்றுமை நிகழ்வுகள் பிற்கால இஸ்லாமிய வளர்ச்சிக்கு அச்சாரமாக இருந்தது.

இதை பின்பற்றியே பின்னால் வந்த நான்கு பெரும் கலீபாக்களும், அதன் பின் வந்த அத்துனை ஆட்சியாளர்களும் கடைபிடித்தார்கள். நம் இந்தியாவில்  800 வருடம் ஆட்சி செய்த முகலாய மன்னர்களும் இதை அடிப்படையாக வைத்துதான் பல்வேறு குழுக்களாக பிரிந்து இருந்த இந்த பிளவுப்பட்ட இந்தியாவை ஒருங்கினைந்த இந்திய திருநாடாக மாற்றினார்கள்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டில் வாழும் அனைத்து சமய மக்களும் ஒற்றுமையோடு இருந்தால் தான்  முடியும். அதை முன்னெடுக்கும் வகையில் தான் இந்த தேச ஒற்றுமை மாநாடு ஒருங்கிணைக்பட்டுள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என பாட புத்தகத்தில் படித்திருப்போம். அது ஏட்டில் மட்டும் இல்லாமல், நம் வாழ்விலும் செய்ய உறுதியேற்போம்.

இளைஞனே! எழுந்துவா...

இளமையின் அருமை.

உலகில் வாழும் மனித சமூகம் பல்வேறு வளங்களைப் பெற்றிருக்கின்றன. இயற்கை வளம், எண்ணெய் வளம், கனிமவளம், நீர் வளம் இவ்வாறு பல்வேறு வளங்களை ஒரு நாடு, ஒரு சமூகம் பெற்றிருக்கின்றது. இந்த வளங்கள் அனைத்தையும் விட அது பெற்றிருக்கின்ற மனித வளம் (Human Resource) மகத்தானது. அந்தவகையில் ஒரு சமூகம் பெற்றிருக்கின்ற சிறந்த வளமாக இளைஞர் சமூகம் உள்ளது.

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்விற்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு நபிமொழி ஒன்று கூறுகின்றது.

‘உன்னிடம் ஐந்து விடயங்கள் வருவதற்கு முன் ஐந்து விடயங்களை பயன்படுத்திக்கொள்.

01. மரணம் வருமுன் வாழ்க்கையையும்

02. நோய் வருமுன் ஆரோக்கியத்தையும்

03. வேலைப்பளு வருமுன் ஓய்வு நேரத்தையும்

04. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்

05. வறுமை வருமுன் செல்வ நிலையையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

குர்ஆன் கூறும் முன் மாதிரி இளைஞர்கள் (யூசுஃப்)அலை.

قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ‏ 

(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”(அல்குர்ஆன் : 12:55)

وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ‌ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ‌  نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ‌ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏ 

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.(அல்குர்ஆன் : 12:56)

குகை வாசிகள் இளைஞர்கள்.

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى‌‏ 

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.(அல்குர்ஆன் : 18:13)

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۫ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا‌ لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا‏ 

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.(அல்குர்ஆன் : 18:14)

هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً‌  لَوْ لَا يَاْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍ بَيِّنٍ‌  فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ‏ 

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).(அல்குர்ஆன் : 18:15)

وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا‏ 

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).            (அல்குர்ஆன் : 18:16)

அபூஜகலை கொலைசெய்த சிறுவர்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்:நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். 

அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், 'என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்' என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். 

அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.(ஸஹீஹ் புகாரி (3988)

அர்ஷின் நிழலில் இளைஞன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' புகாரி (660)

வாருங்கள்! ஒன்றிணைந்து தேசம் காப்போம்!

மிக மோசமான ஒரு காலகட்டத்தை நோக்கி இந்த தேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக கழிக்க வேண்டிய நிலை; எதிர்காலத்தில் இங்கு தங்களால் வாழ முடியாது என்கிற ஒரு மோசமான நிலையைதான் இன்று தலித்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், முஸ்லிம்களும் சந்திக்கக் கூடிய ஒரு அவலமான நிலையில் இந்த தேசம் சென்று கொண்டிருக்கிறது.

இச்சூழலில் இந்திய முஸ்லிம்களையும் இந்திய மக்களையும் ஒரு தன்னம்பிக்கை நிலைக்கு நகர்த்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் இருக்கக்கூடிய பயத்தை துடைத்தெறிய வேண்டும். இந்த தேசம் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். இந்த தேசத்தினுடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு சொந்தமான ஒரு சமூகம் இன்று மனோரீதியாக ஏதோ ஒரு தடுமாற்றதில் இருக்கிறதா? மனோரீதியாக பீதிவயப்பட்டு இருக்கிறதா?

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. காரணம், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏதுவாக இஸ்லாமிய வழிகாட்டுதலை அல்லாஹ்வின் வசனங்கள் கொடுக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் நீங்கள் சர்வாதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை. அதைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதைக்கண்டு தடுமாற வேண்டிய அவசியமில்லை என்கிற அடிப்படையிலான அற்புதமான வரலாறுகளை அடுக்கடுக்காகக் கொண்டு, இறை வசனங்களையும், அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை வழிகாட்டுதலாகக் கொண்டு இந்த சமூகத்தை அவ்வப்போது பயிற்றுவிக்க கூடிய அற்புதமான கொள்கையை, சித்தாந்தத்தை, பாரம்பரியத்தைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்..

அல்லாமா இக்பால் அவர்கள் எழுதிய தேசியகீதம் ....

سارے جہاں سے اچھا ہندوستاں ہمارا 

ہم بلبلیں ہیں اس کی یہ گلستاں ہمارا 

غربت میں ہوں اگر ہم رہتا ہے دل وطن میں 

سمجھو وہیں ہمیں بھی دل ہو جہاں ہمارا 

پربت وہ سب سے اونچا ہم سایہ آسماں کا 

وہ سنتری ہمارا وہ پاسباں ہمارا 

گودی میں کھیلتی ہیں اس کی ہزاروں ندیاں 

گلشن ہے جن کے دم سے رشک جناں ہمارا 

اے آب رود گنگا وہ دن ہے یاد تجھ کو 

اترا ترے کنارے جب کارواں ہمارا 

مذہب نہیں سکھاتا آپس میں بیر رکھنا 

ہندی ہیں ہم وطن ہے ہندوستاں ہمارا 

یونان و مصر و روما سب مٹ گئے جہاں سے 

اب تک مگر ہے باقی نام و نشاں ہمارا 

کچھ بات ہے کہ ہستی مٹتی نہیں ہماری 

صدیوں رہا ہے دشمن دور زماں ہمارا 

اقبالؔ کوئی محرم اپنا نہیں جہاں میں 

معلوم کیا کسی کو درد نہاں ہمارا

பொருள்:

ஒட்டுமொத்த உலகை விட அழகானது என் இந்தியா

எங்கள் அது,அதன் கானக்குயில்கள் நாங்கள்

அந்நிய பூமியில் இருக்க நேர்ந்தாலும் எங்கள் மனம் அன்னை தேசத்திலேயே அமர்ந்திருக்கும்

மனமுள்ள இடத்திலே தான் மனிதர்களாகிய நாங்களும் இருப்போம் ?

வானுக்கு அண்டைவீட்டுக்காரனான உயர்ந்த அந்த மலை

அதுவே எங்களின் காவலாளி,அதுவே எங்கள் வாசல் பாதுகாவலன்.

அவள் மடியில் பல்லாயிரம் வருடங்களாகப் பாய்ந்து விளையாடுகின்றன நதிகள்

சொர்க்கம் பொறாமை கொள்ளும் தோட்டம் எங்களுடைய தேசம்

நீரோடும் கங்கை நதியே ! நினைவில் இருக்கின்றவனவா அந்நாட்கள் ?

உன் கரையில் எங்கள் மூடிய வண்டிகள் இறங்கிய அந்நாட்கள் ?

மதங்கள் எங்களுக்குள் பகையைப் போதிக்கவில்லை

நாங்கள் இந்தியர்கள்,இது இந்தியா

கிரேக்கம்,எகிப்து,பைஜான்டியம் உலகைவிட்டு அழிந்து போயின

எங்கள் பெயரும்,அடையாளமும் இன்னமும் உயிர்த்திருக்கிறது

காலச் சுழற்சி மட்டுமே எங்களுக்கான காலன்

இக்பால் ! நமக்கான உற்ற நண்பன் உலகிலில்லை

யாருக்கேனும் மறைந்திருக்கும் நம் வலி தெரியுமா ?

காரிருள் கவ்விடாமல் இந்தியாவை காப்போம்.! தேச ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.!

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 4 January 2023

ஜும்ஆ பயான் 06/12/2022

இலஞ்சம் தவிர்ப்பீர்...

இன்றைய  விஞ்ஞான யுகத்தில் உலகம் நவீன கண்டுபிடுப்புகளில் அசுர வளர்ச்சி கண்டுவரும், அதே வேலையில் குற்றச்செயல்களும்,மனிதஉரிமை மீறல்களும்,பொருளாதர மோசடிகள்,கொள்ளை,வட்டி, ஊழல், லஞ்ச லாவண்யங்களும் பெருகி மனித இனம் அழிவை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்கின்றது.  ​​

பொருளாதார குற்ற செயல்களில் மிக மோசமான குற்றம் இலஞ்சம் ஆகும். லஞ்சம், ஊழல்... எங்கு, யாரால், எப்போது தொடங்கியது என்பவை விடைதேட முடியாத கேள்விகள்தான். ஆனால், அவை புற்றுநோயைப்போல பரவி, இன்றைக்கு சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. சாமான்யன் தொடங்கி நாடு வரை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக மாறிவிட்டன. ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கிறது

லஞ்ச ஊழல் என்பது இந்தியாவில் மட்டுமன்றி அனைத்து உலக நாடுகளிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. லஞ்சம்,ஊழல் காரணமாக அனைத்து நாடுகளினதும் ஜனநாயகம் பாதிப்படைகின்றது. இதனால் பாரிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது.

இத்தகைய ஊழலானது தீராத நோயாகவே சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது.

"முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம் வரை ஊடுருவியுள்ளது.   

இஸ்லாத்தின் பார்வையில் லஞ்சம்:

மஜ்மஉல்-பிஹார் என்ற நூலில் , அல்லாமா ஃபித்னி (ரஹ்)அவர்கள் "இலஞ்சம்"குறித்த விளக்கத்தில்: "லஞ்சத்தின் அர்த்தம், அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு ஒருவர் தனது நியாயமற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக(அ)தவறான நோக்கத்தோடு  ஏதாவது ஒன்றை வழங்குவதாகும்."எனக் குறிப்பிடுகிறார்கள் ۔(مجمع البحاربحوالہ علامہ سیدسلیمان ندوی)

லஞ்சம் வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் தடை.

وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ‌  لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 

அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.(அல்குர்ஆன் : 5:62)

இஸ்லாத்தில் லஞ்சம் வாங்குவது அறவே தடுக்கப்பட்டுள்ளது. யாரிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்படுகிறது. அவர்கள் எந்தப் பணியைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தப் பணியைச் செய்து கொடுக்க மக்களிடம் பெறப்படும் கையூட்டுதான் லஞ்சம் எனப்படும்.   

குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசியங்களுக்குக்கூட லஞ்சம் வாங்குகிறார்கள். தொழில்களுக்கும் கட்டடங்கள் கட்டவும் அனுமதி அளிக்க லஞ்சம் வாங்குவது சர்வசாதாரணமாகி விட்டது. முஸ்லிம்கள் இது போன்ற பொறுப்புகளில் இருந்தால் அவர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் லஞ்சத்தின் தீங்குகள், லஞ்சம் வாங்குபவர்கள், லஞ்சம் கொடுப்பவர்களைக் குறித்து கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: "لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي" [رواه الترمذي]، 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி  ﷺஅவர்கள் கூறினார்கள் " லஞ்சம் வாங்குபவர்,லஞ்சம் கொடுப்பவர் இருவரையும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (நூல்;இப்னு மாஜா )

فقد قال صلى الله عليه وسلم:الراشي والمرتشي في النار. رواه الطبراني بسند جيد من حديث بن عمر.

 மற்றொரு ஹதீஸில், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதர்  ﷺஅவர்கள் கூறினார்கள், "லஞ்சம் வாங்குபவர் மற்றும் கொடுப்பவர் இருவரும் நரகத்தில் நுழைவார்கள். (தப்ரானி)

குர்ஆனில் லஞ்சத்தின் தீமைகள் பற்றி...

திருக்குர்ஆனில்   "லஞ்சம் தடை" என  தெளிவாகக் குறிப்பிடும் வசனம்.

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.    (அல்குர்ஆன் : 2:188)

அல்லாமா இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள், இந்த வசனத்தின் விளக்கத்தில் எழுதுகிறார்கள்; ஒருவருக்கு உரிமையுள்ள பொருளோ,சொத்தோ அது அவருக்குரியது என்பது உறுதியாக தெரிந்து, உரிமையாளரிடம் அதற்கான ஆதாரம் இல்லாமல் இருப்பதால், அவரின் இந்த பலவீனத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நீதிபதிக்கோ, அல்லது அதிகாரிக்கோ லஞ்சம் கொடுத்து,மற்றவர்களின் உரிமைகளை அபகரித்தல், இது அநியாயமும்  மற்றும் ஹராமும் ஆகும்,இதனை நீதிமன்றத்தால் அநியாயம் என்றோ,ஹராம் என்றோ சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தவும்  முடியாது, இந்த அடக்குமுறையாளர், அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளியாக இருப்பார்.(ابن کثیر)

 தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆனின் ஆசிரியர், முஃப்தி முஹம்மது ஷஃபி (ரஹ்)அவர்கள், மேலே குறிப்பிட்ட வசனத்தின் விளக்கத்தில் ஹலால் மற்றும் ஹராம் காரணங்களை விளக்கி எழுதுகிறார்கள்: இஸ்லாத்தில் எதனை குற்றம் என்றோ,தீயவை என்றோ,பாவம் என்றோ கூறப்பட்டுள்ளதோ,அவை அனைத்துமே ஏதோ ஓர் விதத்தில் அடுத்தவருக்கு இடையூறாக அமையும், சில நேரங்களில் அடுத்தவரை ஏமாற்றுவதாக இருக்கும்,  சில சமயங்களில் இன்னொருவரின் உரிமையை பறிக்கலாம், சில சமயங்களில் ஒருவருக்கு தீங்கு செய்து லாபம் பெறப்படலாம், சில சமயம் பொது உரிமைகளை சட்டவிரோதமாக தனதாக்கிக்கொள்ளலாம். 

வட்டி,லஞ்சம் இதுப்போன்ற ஹராம்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் வளர்கிறார்கள். முழு தேசமும் திவாலாகி விடுகின்றது, ஆட்சியாளர்களின் சம்மதத்துடன்  இதுபோன்ற விஷயங்கள் நடந்தாலும் ஹலாலாக ஆகாது, ஏனெனில் இது முழு உம்மத்துக்கும் எதிரான குற்றமாகும், மேற்கண்ட வசனத்தில் இந்த சட்டவிரோத சூழ்நிலைகள் அனைத்தும் விளக்கப்படுகிறது. (معارف القرآن:۱/۴۵۹)

இந்த வசனத்தின் படி லஞ்சம் தடை என்பது தெளிவாக விளங்குகிறது, ஏனெனில் லஞ்சம் என்பது பொது உரிமைகளை நேரடியாக பாதிக்கும் ஒரு செயலாகும், இதன் காரணமாக, உரிமையாளரின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.

லஞ்சம் பெற வழிகாட்டுபவனும்,  உதவுபவனும் சபிக்கப்பட்டவர்களே!

இஸ்லாத்தின் பார்வையில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் எப்படி சபிக்கப்பட்டதோ, நரகத்திற்குரியதோ, அதேபோல், லஞ்சதிற்கு துணைபோகக்கூடியவரும் ஹதீஸின் வெளிச்சத்தில் சபிக்கப்பட்டவர். 

روى الإمام أحمد عن ثوبان قال: لعن رسول الله الراشي والمرتشي والرائش.

ஹஸ்ரத் தவ்பான் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அறிவிக்கப்பட்டுள்ளது. "அல்லாஹ்வின் தூதர்  ﷺஅவர்கள் " லஞ்சம் வாங்குபவன், கொடுப்பவன், லஞ்சதிற்கு வழிகாட்டுபவன் அனைவரையும்" சபித்தார்கள். (நூல்:அஹ்மத்,தப்ரானி)

ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி,  எவரிடமாவது அவருக்கு ஆதரவாக முடிவெடுக்க  லஞ்சம் வாங்குவது குஃப்ருக்கு  (அவநம்பிக்கைக்கு) சமம் என்றும், சாமானியர்கள் ஒருவருக்கொருவர் லஞ்சம் வாங்குவது "சுஹுத்" என்றும், அதாவது ஹராம் (தடைசெய்யப்பட்டது) மற்றும் தூய்மையற்ற  சம்பாதியமாகும்.(தபராணி) 

இஸ்லாமிய உம்மத்தின் ஏகோபித்த கருத்து "லஞ்சம் ஹராமாகும்". 

அகராதியில், "லஞ்சம்" என்பதன் பொருள்: ஒருவருக்கு தமது  நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படும் கையூட்டு , அந்த நோக்கம் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி,அனுமதிக்கப்படாததாக இருந்தாலும் சரி; 

அதனால்தான் இமாம் அபு சுலைமான் அல்-கத்தாபி(ரஹ்)அவர்கள் மேற்கூறிய ஹதீஸிற்கு  இப்படி விளக்கம் எழுதுகிறார்கள்: "லஞ்சம் வாங்குபவர், கொடுப்பவர் இருவரும் பாவம் மற்றும் தண்டனைக்கு ஆளாக நேரிடும், 

காரணம் இரண்டு செயல்களின் நோக்கமும் பொய்யான மற்றும் அநீதிக்கு ஆதரவளிப்பதாகும், ஒருவருக்கு அநீதம் இழைப்பது அல்லது ஒருவரின் உரிமையை   மீறுவது. 

(எ.க,) ஒரு நபர் ஷரிஅத் சட்டப்படி எந்த உரிமையும் இல்லாத ஒரு பொருளை லஞ்சம் கொடுத்து தனதாக்கிக்கொள்ள முடியும்  , அல்லது அடுத்தவரின் சொத்தையோ,அடுத்தவருக்கு சொந்தமான பொருளையோ அவரிடம் தகுந்த சான்றுகள் இருந்தாலும் அதனை  லஞ்சம் கொடுத்து அநியாயமாக அபகரித்துக் கொள்ள முடியும். , இதனால் அதன் உண்மையான உரிமையாளர் உரிமை இழக்க நேரிடும்.

மேற்கண்ட ஹதீஸின்படி, இந்த லஞ்சம் சந்தேகத்திற்கு இடமின்றி சாபத்திற்கு காரணம்.என்பது தெளிவாகிறது.

அதே போல், லஞ்சம் வாங்குபவர் எச்சரிக்கப்படுவதற்கு காரணம்; ஷரீஅத்தின்படி(கடமையை செய்ய) கடமையான  உரிமைக்கோ, செயலுக்கோ லஞ்சம் வாங்கும்போது, ​​அல்லது ஆகுமாகாததை  செய்யும் போது, ​​அதனால் இன்னொருவருக்கு தீங்கு ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குபவருக்கு பாதிப்பு ஏற்படாத வரை , அவர் தனது தவறான செயலைக் கைவிடத் தயாராகுவதில்லை.

எனவே மேற்கண்ட ஹதீஸின் படி, லஞ்சம் வாங்குபவர் சபிக்கப்பட காரணமாகிறார்.

ஆனால், ஒருவன் தனக்குக் கிடைக்கக்வேண்டிய நியாயமான உரிமையை கூட , லஞ்சம் கொடுக்காமல் பெற முடியாது , அல்லது தனக்கான உரிமை தாமதிக்கப்பட்டு அதனால் அசாதாரணமான கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும், அல்லது அநியாயக்காரனின் அநீதத்திலிருந்து தப்பிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுப்பது நிர்பந்தமாக அனுமதிக்கப்படும். ஆனால் தம் கடமைகளில்  நேர்மையாக இருப்பதென்பது அவசியமாகும்.

அதேபோல்,  ஒருவர் தன் தேவைக்காக அதிகாரியையோ அல்லது ஆட்சியாளரையோ சந்திக்க வேறொரு நபர் உதவிபுரிகிறார் அத்தகைய நபர் மூலம் ஆட்சியாளரை அணுகினால் இந்தப் பணிக்கு எந்தப் பொறுப்பும் இல்லாத ஒருவர் சேவைக்கான உரிமையாக ஏதாவது ஒன்றைப் பெற்றால், அது கூடும்.   ஏனென்றால் அது தவறான செயலுக்கு  ஆதரவாகவோ, யாருக்கும் அநீதியாகவோ இல்லை.மேலும்  ஷரிஅத் சட்டப்படி இந்த வேலையைச் செய்வது அவருக்குக் கடமையாக இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால்  எந்த வெகுமதியும் பெறாமல் இருப்பதே   நன்மையை பெற்றுத்தரும் காரியமாகும்.

அல்லாஹ்வின் தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்:சிபாரிசு செய்யுங்கள், உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். அனுபவப்பூர்வமான உண்மை, லஞ்சம் கொடுக்க வேண்டிய விரும்பத்தகாத சூழ்நிலைகளில், கொடுப்பவர் நிர்பந்திக்கப்படுத்தப்படுகிறார், ஆனால் பெறுபவர் நிர்பந்திக்கப்படுத்தப்படுவதில்லை.

லஞ்சமும்,யூதர்களின் பழக்கமும்.           

அல்லாமா செய்யத் சுலைமான் நத்வி(ரஹ்)அவர்கள் இஸ்லாம் வருவதற்கு  முன்பு "ஜாஹிலிய்யா" அறியாமை காலத்தில் லஞ்சம் வாங்கும் நடைமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டி எழுதுகிறார்கள் , அரேபிய யூத பாதிரிகள் சில சமயங்களில் அமானுஷ்ய சக்தியின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள், இதன் நோக்கம் மக்கள் அவர்களுக்கு உடல்  உழைப்பு அல்லது லஞ்சமாக சில காணிக்கைகளை வழங்கவேண்டும்  என்றும் , அவர்கள் அதை "ஹல்வான்"(இனிப்பு) என்று அழைத்தனர், இஸ்லாம் வந்ததற்குப் பின் இந்த மாயைகள்  ஒழிந்தன.

நபிகள் நாயகம் ﷺஅவர்கள் பாதிரியாரின் ஹல்வானை குறிப்பாக தடை செய்தார்கள்.

(ترمذی،باب ماجاء فی کراہیة مہرالبغی)                       

அதே போல அரபகத்தில் யூதர்களின் வழக்குகள் அவர்களின் பாதிரிகளாலும், தலைவர்களாலும் தீர்ப்பளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சட்டம்,நீதிக்கு புறம்பாக தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, பணக்காரர்களும், செல்வாக்குள்ளவர்களும் வெளிப்படையாக லஞ்சம் கொடுப்பார்கள், அவர்களின் பாதிரியார்களும் நீதிபதிகளும் இந்த லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கினர்.அது மட்டுமல்லாமல், அவர்கள்  "தோரா" தவராத்தின் சட்டங்களுக்கு மாற்றம் செய்து கொண்டிருந்தனர்.(صحیح بخاری)  

ஏனெனில் அவர்களிடம்  "லஞ்சம்" என்பது தோராவின் சட்டங்களில் திரிபுபடுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.இதனையே திருக்குர்ஆன் வசனம் இப்படி மேற்கோள் காட்டுகிறது :

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ  وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.(அல்குர்ஆன் : 2:174)

"வயிற்றில் நெருப்பை நிரப்புவது" என்பது, ஹராமான சம்பாத்தியமான லஞ்சம் என்று பொருள்படும்.

 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) كَانَ يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ إِلَى خَيْبَرَ، فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَ يَهُودِ خَيْبَرَ، قَالَ : فَجَمَعُوا لَهُ حَلْياً مِنْ حَلْي نِسَائِهِمْ فَقَالُوا : هَذَا لَكَ وَخَفِّفْ عَنَّا وَتَجَاوَزْ فِي الْقَسْمِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ : يَا مَعْشَرَ الْيَهُودِ، وَاللَّهِ إِنَّكُمْ لَمِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَيَّ، وَمَا ذَاكَ بِحَامِلِي عَلَى أَنْ أَحِيفَ عَلَيْكُمْ، فَأَمَّا مَا عَرَضْتُمْ مِنَ الرُّشْوَةِ فَإِنَّهَا سُحْتٌ، وَإِنَّا لاَ نَأْكُلُهَا. فَقَالُوا : بِهَذَا قَامَتِ السَّمَوَاتُ وَالأَرْضُ(159).

 நபிகள் நாயகம்ﷺஅவர்கள்  காலத்தில் கைபர் யூதர்களுடன் சமரசம் ஏற்பட்டு பாதி நிலத்தை பிரித்து தருவதென முடிவானது. நிலத்தை  பிரிக்கும் நேரம் வந்ததும்   ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி)அவர்களை  நபிﷺஅவர்கள் கைபர் யூதர்களிடம் அனுப்பினார்கள். 

அப்துல்லாஹ் ஹிப்னு ரவாஹா(ரலி)அவர்கள் இடத்தை இரண்டு பங்குகளாக பிரித்து அதில் விருப்பமான பகுதியை எடுத்துக் கொள்ளுமாறு யூதர்களிடம் கூறினார்கள். அவர்களோ தங்களின்  பழக்கத்தின்படி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பி, அவர்களுக்கிடையே நன்கொடையாகப் பெண்களின் நகைகளில் சிலவற்றைச் சேகரித்து, அதை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள், அதற்கு ஈடாக விநியோகத்தில் தமது பங்கை அதிகரிக்கக்கேட்டுக்கொண்டார்கள்.

இதனைக் கேட்ட அப்துல்லாஹ் ஹிப்னு ரவாஹா( ரலி)அவர்கள்;   "யூதர்களே!இறைவனின் மீது ஆணையாக , இறைவனின் அனைத்து படைப்பினங்களிலும் நீங்கள்  எனக்கு மிகவும் வெறுக்கப்பட்டவர்கள், ஆனால் இது உங்களை ஒடுக்குவதற்கு என்னை(ஒருபோதும்)தூண்டாது, மேலும் நீங்கள் லஞ்சமாக வழங்கியது (ஹராம்)தடைசெய்யப்பட்டுள்ளது, நாங்கள் (முஸ்லிம்கள்) அதை சாப்பிட மாட்டோம்,என்று சொன்னார்கள்.

யூதர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு விட்டுச் சொன்னார்கள் . , "இதுவே நீதி (நியாயம்)." இவர் போன்றவர்களாலே  வானங்களும் பூமியும் நிலைத்திருக்கின்றன."                          (موطاامام مالک،کتاب المساقاة)

தற்காலத்தில் எங்கும் லஞ்சம்,எதிலும் லஞ்சம்...

எங்கும் லஞ்சம்,எதிலும் நெஞ்சம்  என்று கூறும் அளவுக்கு,  சமூகத்தை பிடித்திருக்கக் கூடிய கொள்ளை நோயாக லஞ்சம் வியாபித்து இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் லஞ்சத்தைத் தவிர்த்து கொள்ள  என்ன செய்வது  என்ற  ஒரு கேள்வி இங்கு எழுகிறது, இதற்கு நேர்மையான,எளிதான பதில் என்னவென்றால், மேற்கூறிய ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்களின் வெளிச்சத்தில், வட்டி,லஞ்சம் போன்ற ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஷரியாவுக்கு எதிரானது, மேலும் யாரோ ஒருவர் கொலை செய்வதற்கும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும்  எது கொடுக்கப்பட்டாலும் அது லஞ்சத்தின் கீழ் வரும்.

லஞ்சம் கொடுப்பது  எப்போது ஆகுமாக்கப்படும்?

இதற்கு மார்க்கவிர்ப்பன்னர்கள், ஒரு சட்டத்தை வரையறுத்துள்ளார்கள்:

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், உயிரிழப்பு அல்லது பண இழப்பு ஏற்படும் என்கிற  அச்சமிருப்பின் கூடும்.

அதுபோல் நியாயமற்ற அதிகாரி அவருக்கு லஞ்சம் கொடுக்காமல் தனக்கான உரிமையை கூடப்பெறமுடியாது,தன் உரிமையை இழக்க நேரிடும் என்று இருந்தால் கொடுக்கலாம்.

 كتب علامہ ابن نجیم رحمه الله :       ”اَلرِّشْوَةُ لِخَوْفٍ عَلیٰ نَفْسِہ أوْ مَالِہ أوْ لِیُسَوِّيَ أمْرَہ عِنْدَ السُّلْطَانِ أوْ أمِیْرٍ“ (ردالمحتار:۴/۳۴۰ بحوالہ جدیدفقھی مسائل:۱/۳۰۰)

அல்லாமா இப்னு நஜிம(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்:

"லஞ்சம்"உயிர் மீதுள்ள,செல்வத்தின் மீதுள்ள பயத்திற்காக  அல்லது அரசர்,ஆட்சியாளரின் தவறான  தீர்ப்பை சரிசெய்வதற்காக (கூடும்)" (ரத்துல்முக்தார்: 4/340)

உயிர்,பொருள் பற்றிய பயம் காரணமாகவும், சுல்தான் அல்லது அமீருக்கு  லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தமிருந்தால் தம்மிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்வதற்காக லஞ்சம் கொடுக்க விலக்கு அளிக்கப்படுகிறது.

உயிர்,உடமை காக்க லஞ்சம்:

தற்கால ஃபிக்ஹ்கலை வல்லுநர் (ஃபகீஹுல் அஸ்ர்)அல்லாமா  மௌலானா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானி  ஹழ்ரத் அவர்கள்; லஞ்சம் கொடுப்பது,வாங்குவது ஹராம் ஆகும் காரணிகளையும்,இக்கட்டான சூழ்நிலையில் லஞ்சம் அனுமதிக்கப்படுமா?என்பதனை  இப்னு நஜிம் (ரஹ்)அவர்கள் எழுதிய தொகுப்பை மேற்க்கோள் காட்டி எழுதுகிறார்கள்: 

 "லஞ்சம் வாங்குவது எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே போல, கொள்கையளவில் லஞ்சம் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, சட்ட வல்லுநர்களின் ஒருமித்த கருத்துயாதெனில், "எதனை வாங்குவது கூடாதோ அதனை கொடுப்பதும் கூடாது."”مَاحَرُمَ أخْذُہٗ حَرُمَ اعْطَائُہٗ“ என்பது பொதுச்சட்டம் ஆகும்.

லஞ்சம் வாங்குவது ஒரு போதும் நிர்ப்பந்தமாக முடியாது என்பதாலும், சில சமயங்களில் லஞ்சம் கொடுப்பது நிர்ப்பந்தமாகிவிடுவதாலும், தேவை மற்றும் நிர்ப்பந்தம் போன்ற சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுக்க சட்ட வல்லுநர்கள் அனுமதித்துள்ளனர்.

இதற்கு நபிகள் நாயகம் ﷺஅவர்களின் ஓர் நடவடிக்கை எடுத்துக்காட்டாக உள்ளது. நபிﷺ அவர்கள் சில சமயங்களில் தீய கவிஞர்களுக்கு ஏதாவது கொடுப்பார்கள், அதனால் அவர்கள் முட்டாள்தனமான கவிதைகளை பாடுவதை தடுப்பதற்காகவும், என்று கூறப்படுகிறது. முஸ்லிம்களை இழிவுபடுத்தி கவிப்பாடுவதை தடுக்கவும்.இவ்விதம் செய்வார்கள்.

ஜகாதை வசூலிப்பவர் பரிசு  அல்லது அன்பளிப்பை  ஏற்றுக்கொள்வது.

 நபிகள் நாயகம்ﷺ அவர்கள் ஜக்காத்தை வசூலிப்பவர் அன்பளிப்பையோ, பரிசையோ பெறுவதை தடை செய்தார்கள்.

عن أبي حُمَيد عبد الرحمن بن سعد السَّاعِدِي قال: استعمل النبي ـ صلى الله عليه وسلم ـ رجلاً من الأزْد يُقال له ” ابن اللُّتْبيَّة ” على الصَّدقة، فلمَّا قَدِم قال هذا لكم وهذا أُهدي إليَّ، فقام رسول الله ـ صلى الله عليه وسلم ـ على المِنْبر فحمِد الله وأثنى عليه ثم قال ” أما بعد، فإني أستَعْمل الرَّجل منكم على العمل مما ولَّاني الله فيأتي ويقول: هذا لكم وهذا هدية أهديت إلىَّ، أفلا جلس في بيت أبيه وأمه حتى تأتيَه هديَّته إن كان صادقًا، والله لا يأخذ أحد منكم شيئًا بغير حقِّه إلا لقيَ الله تعالى يحمله يوم القيامة، فلا أعرفنَّ واحدًا منكم لقي الله يحمل بعيرًا له رُغاء أو بقرة لها خُوار، أو شاة تَيْعَر “، ثم رفع يديْه حتى رؤى بياض إبطيه فقال ” اللهم هل بلَّغت ” (رواه البخاري ومسلم.) 

ஒரு தடவை ஜக்காத்தை வசூலிப்பவர் ஒருவர் இது ஜக்காத்துடைய பொருள்,இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது என்று கூறுவதை கேட்ட நபிகள் நாயகம் ﷺஅவர்கள் மிம்பரில் ஏறி,ஹம்து ஸலவாத்து கூறிய பின் இவ்விதம் உரை நிகழ்த்தினார்கள்;

  “நாம் அனுப்பும் வசூலிப்பவர் நிலை என்ன, அவர் வந்து, இது உன்னுடையது, இது என்னுடையது என்று சொல்கிறார்,

அவர் நேர்மையாளராக இருந்தால்  பரிசை பெரும் வரை தம்  தாய்,தந்தையர்  வீட்டில் அமர்ந்துக் கொண்டு பரிசை பெற முடியுமா என பார்க்கலாம்.

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ,தனக்கு உரிமையில்லாமல் அவர்  எதைப் பெற்றாரோ அதை அவர் மறுமை நாளில் கழுத்தில் சுமந்து வருவார். உங்களில் எவரும் அறியமாட்டீர்கள் அவர் ஒட்டகத்தையோ, மாட்டையோ, ஆட்டையோ,சுமப்பார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி மூன்று முறை கூறினார்: "இறைவா! நான் உன்னிடம் எத்தி வைத்து விட்டேன்."                              (صحیح بخاری،باب ہدایاالعمال)

ஊழலில் ஊறிப்போனவர்கள்.

பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், இலஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. மக்களின் உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாவலர்களாக விளங்கும் காவல் துறையினர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இதன் உச்சகட்டம் என்னவெனில் இலஞ்ச ஒழிப்பு துறையினரே இலஞ்சம் வாங்கும் அவலநிலை.

இதற்காகப் போர்க்கொடி தூக்கினால், ‘யார் தான் ஊழல் செய்யவில்லை. ஊழலில்லாத அரசியலா? ஊழலில்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வதற்கு நன்றாக இருக்கும்; ஆனால் செயல்படுத்த இயலாது’ என்று இன்றைய அரசியல்வாதிகள் வசனம் பேசுகின்றனர்.

இந்த இடத்தில் அமர்ந்து பாருங்கள் என்றும், ஊழலில்லாத அரசியல்வாதி ஒருவரைக் காட்டுங்கள் என்றும் கூறி, தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு குற்றம் புரியும் தலைவர்களின் பட்டியலை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஊழலற்ற அரசியலுக்கு முன்னோடியாக எந்த அரசியல்வாதியையும் தற்போது காணமுடிவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்களின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுமளவிற்கு ஊழலில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்குதல்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا . فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى : مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ ، أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا ، فَأَتَيْتُهُ فَقُلْتُ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا ، فَحَثَى لِي حَثْيَةً ، فَعَدَدْتُهَا ، فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ ، وَقَالَ : خُذْ مِثْلَيْهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!’’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்! என்றேன்.  அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக! என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.                 (நூல்: புகாரி-2296)

வறுமையிலும் வாரி வழங்கிய மாமனிதர்.

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்தும் மக்கள் வரிப்பணமாகிய அரசு கருவூலத்திலிருந்து கோடி கோடியாக அரசியல்வாதிகளுக்கு செலவழிக்கப்படுகின்றது. இது தவிர இலஞ்சம் மற்றும் ஊழலின் மூலமும் அவர்கள் சொத்துக்களை சேர்த்துக் கொண்டனர்.

மக்களின் நலன் காக்கத் தவறி தன்னலனையும், தன் குடும்பத்தினரின் நலனையும் மட்டுமே கவனத்தில் கொண்டு மக்களிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும் மறந்த சுயநலவாதிகளாகவும், பச்சோந்திகளாகவுமே இன்றுள்ள அரசியல்வாதிகள் உள்ளனர். விதை விதைக்காமல் அவர்கள் அறுவடையை மட்டுமே செய்கின்றனர். இதில் படிக்காத முட்டாள்களும், படித்த பட்டதாரி அரசியல்வாதிகளும் அடங்குவர். இப்படிப்பட்ட அரசியல் தலைமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. அவர்கள் போடும் சட்ட திட்டங்களெல்லாம் சாமானிய மக்களின் மீது அடக்குமுறையாகவும், அவர்களின் அடிவயிற்றில் அடிக்கக் கூடியவையாகவுமே உள்ளன.

மக்களால் நான் மக்களுக்காகவே நான், ஊழலை ஒழிக்கவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறுவதற்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளில் எவருக்கும் அருகதை கிடையாது. அனைவருமே பசுத்தோல் போர்த்திய புலிகளாகவும், மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைப் பூச்சிகளாகவுமே உள்ளனர்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகளிலிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை.

கேட்டவருக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காகவோ தமது குடும்பத்திற்காகவோ அதிலிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ زِيَادٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ

أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ،   فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ، ارْمِ بِهَا، أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ؟»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றார்கள்.    (நூல்.முஸ்லிம்-(1939)

சுயமரியாதையோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சுமப்பவருக்கு அல்லாஹ் மேலும் சகிப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (6470)

உழைத்து வாழ்வோம்.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு,  ‘‘ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’’ எனக் கூறினேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(நூல்: புகாரி-1472 )

அல்லாஹுத்தஆலா, இந்த சமூக தீமையிலிருந்து நம்மையும்,நம் சமூகத்தையும்  பாதுகாப்பானாக! (ஆமீன்) 

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 28 December 2022

ஜும்ஆ பயான் 30/12/2022.

புத்தாண்டு 2023.

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (٢٣/٣அல்குர்ஆன்)

உலக வாழ்வென்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடை. உயர்ந்த பொக்கிஷம்.மனிதன் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், சீரானதாகவும் அமைத்துக் கொள்வானே யானால் ஈருலகிலும் வெற்றியடைவான்.தன் வாழ்வை வீணாக்குபவன்,மனம் போன போக்கில் வாழ்பவன் தன்னை தானே அழிவில் போட்டுக் கொள்கிறான்.

உலகின் அனைத்து மதங்களும், நாடுகளும் பல்வேறு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களைக் கொண்டாடுகின்றன.அவற்றில் ஒவ்வொன்றுமே வரலாற்றில்  சிலப்பல  பின்னணிகள் கொண்டவைகளாக உள்ளன.ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஓர் விதத்தில்  நல்ல செயல்களை ஊக்குவிப்பதும், கெட்ட செயல்களை அகற்ற அழைப்பு விடுப்பதையும் அறியலாம்.

ஆனால் காலப்போக்கில் மக்களிடையே வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பாவமிகுதியினால், அப்பண்டிகைகளின் அசல் நோக்கம் மாற்றப்பட்டு புதுமைகளும்,கட்டுக்கதைகளும்  சேர்க்கப்பட்டன. உலகம் முன்னேறி நாகரீகமாக மாற, மக்கள் கலாச்சாரம் மற்றும் கலை என்கிற பெயரில் புதிய கொண்டாட்டங்களையும், அர்த்தமற்ற கேளிக்கைகளையும்,பண்டிகைகளையும் உருவாக்கினர்.

(எ.க 1-ஸ்பெயின் நாட்டின் தக்காளித்திருவிழா.

(எ.க.2-அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹாலோவீன் திருவிழா பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.) அவற்றில் ஒன்று தான் புத்தாண்டு கொண்டாட்டம்.


புத்தாண்டு கொண்டாட்டங்கள்...

உண்மையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மதப்பண்டிகை. புத்தாண்டைக் கொண்டாடும் பாரம்பரியம் பண்டைய காலங்களிலிருந்து கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது, இதற்கு ஒரு காரணம், அவர்களின் மதநம்பிக்கையின்படி, டிசம்பர் 25 அன்று, (ஹஸ்ரத் ஈஸா (அலை)அவர்கள்)ஜீஸஸ் பிறந்ததினமாக கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக  உலகம் முழுவதும் கிருஸ்துவர்களால் கொண்டாடப்படுகின்றது.அதன் நீட்சியே புத்தாண்டு கொண்டாட்டமாகும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில், நாடு முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, டிசம்பர் 31 இரவு, மக்கள் 12 மணி வரை காத்திருந்து, 12 மணிக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி, கேக் வெட்டி,Happy New Year எனக்கூச்சலிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பல்வேறு இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் வயதுவித்தியாசமின்றி ஆண்,பெண் இரு பாலரும் குடி,கூத்து,கும்மாளமுமாக அன்றைய ஓர் இரவில் மட்டும் அனைத்து அனாச்சாரங்களும், காமகளியாட்டங்களும் அரங்கேற்றப்படுகின்றன.


புத்தாண்டு கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள்.

இன்று, இந்த கிறிஸ்தவ புத்தாண்டை பொது கொண்டாட்டமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. பல இஸ்லாமிய நாடுகளும்,முஸ்லிம்களும் கூட புத்தாண்டை எதிர்பார்த்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள், இந்த முஸ்லிம்கள் தங்களின் உயர்ந்த மார்க்கநெறிகளையும், பாரம்பரியங்களையும் விட்டுவிட்டு தாழ்ந்த, இழிவான கலாச்சாரத்தை பின்பற்றி  புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். 

இது கிறிஸ்தவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண்டை கணக்கிடும் வரலாற்று முறையாகும்.

இஸ்லாமியர்களுக்கென  தங்களின்  ஆண்டைக்கணக்கிட உயந்த,உன்னதமான தத்துவங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஹிஜ்ரா (சந்திர) நாட்காட்டி முறை உள்ளது, இது நபிகள் நாயகம்ﷺஅவர்களின் ஹிஜ்ரத் செய்த ஆண்டை வைத்து கணக்கிடப்படும் முறையாகும். துவக்க மாதம் முஹர்ரம் ஆகும். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி; ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய வருடமோ,மாதங்களின் பெயர்களோ தெரியாது.

இஸ்லாமியர்களுக்கு பிறையின் நினைவு வருடத்தில்  ரமலான்,ஈது பெருநாளுக்கு மட்டுமே வரும்.இஸ்லாமிய ஆண்டுகணக்கெல்லாம் பெயருக்கு நிக்காஹ்(திருமண)அழைப்பிதலில்  போடுவதற்கு மாத்திரமே தேவைப்படுகின்றது.

புத்தாண்டு கொண்டாடலாமா?

இன்று முஸ்லிம்கள் ஆங்கில புத்தாண்டை  கொண்டாடுகிறார்கள், ஆனால் உண்மையிலே புத்தாண்டு கொண்டாடுவதற்குறிய தினமா?ஒவ்வொரு ஆண்டு கழியும் போதும் நம் வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து,மரணத்திற்கு ஒரு வருடம் நெருக்கமாகின்றோம். வாழ்க்கை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் பாக்கியம். அப்பாக்கியம் குறையும் போது கொண்டாடப்படக்கூடாது ; மாறாக வருத்தம் கொள்ளவேண்டும்.

கடந்த ஆண்டு கசப்பான அனுபவங்கள், உணர்வுகள், நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சோகமான விபத்துக்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை படிப்பினையாக  கொடுத்து, மனிதனிடமிருந்து விடைபெறுகிறது. மேலும் மனிதன் தனது வாழ்க்கையின் நிலையான காலத்தை(மறுமையை) நோக்கி நகர்கிறான். 

இதனையே  கவிஞர் ஒருவர் இப்படி கூறுகிறார்:

غافل تجھے گھڑیال یہ دیتا ہے مناد

گِردوں نے گھڑی عمر کی ایک اور گھٹادی

கவனக்குறைவாக இருக்கும் உங்களுக்கு, கடிகாரம்  அறிவிப்புச்செய்கிறது..

கடிகாரத்தின் முட்கள்,வாழ்வின் பொழுதுகளை துண்டிக்கின்றன.

(கழிவது நேரங்களல்ல நம் வாழ்வின் உயர்ந்த பொழுதுகள்)

قال ابن مسعود:( ما ندمت على شيء، ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزد فيه عملي! )قیمة الزمن عند العلماء، ص: ۲۷)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: நான் எதைக்குறித்தும் கைசேதப்படுவதில்லை,சூரியன் மறையும் ஓர் நாளில் எனது பட்டோலையில் எந்த நல்அமல்களும் அதிகமாகாமல் கழியும் அந்நாளே  எனக்கு கைசேதமாகும். 

قال الحسن البصري:(يا ابن آدم إنما أنت أيام!، فإذا ذهب يوم ذهب بعضك)

ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் சொன்னார்கள்:

"ஆதமின் மகனே!நாள்களின் ஒட்டுமொத்த தொகுப்பு நீ,

விளங்கிக்கொள்!ஒரு நாள் கழியும் போது நீ உன் சிலதை இழக்கிறாய்"

இவ்வாழ்வு நமக்கு நிரந்தர மறுமை வாழ்வின் தயாரிப்பிற்காக தரப்பட்டுள்ளது.நாம் நம் வாழ்வை எவ்வளவு பயனுள்ள வழியில் கழிப்பதென சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஹஸ்ரத் அலி(ரலி)அவர்கள் கூறினார்கள்:இந்த நாட்கள் உங்கள் ஆயுளின் வேதச்சுவடுகளாகும், நல்லறங்களால் அவற்றை நிறந்தரமானதாக, நீடிக்ககூடியதாக்குங்கள். 

பெயரளவில் (நினைவு) தினங்கள்...

உலகளவில்  யூத,கிறிஸ்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகைகள் அனைத்துமே, சக மனிதனின் கடமைகள்,உரிமைகளை இலட்சியம் செய்யாமல் வெறுமனே வருடாவருடம் (நினைவு)தினங்களாக...

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் ஆசிரியர் தினம் என்பன போன்ற தினங்களை கொண்டாடிவிட்டால் போதும்,; ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் குடும்ப அமைப்புகள் சிதைந்து போய் விட்டன.

பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளும்,வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்களும்,இப்படி எந்த உறவும் பேணப்படாமல் குடும்ப அமைப்புகளை சிதைத்து விட்டு, பெயருக்கு வருடத்தில் ஒரு முறை இது போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றனர்.ஆனால் இங்கு அப்படியல்ல, இஸ்லாம் அனைவருக்குமான  உரிமைகள்,கடமைகளை நிர்ணயித்து,குடும்ப அமைப்பு சிதையாமல் பாதுகாக்கின்றது. 

எனவே, இஸ்லாமியர்கள் இதுப்போன்ற வித்தியாசமான தினங்களை கொண்டாடுவது  அவசியமற்றதாகும்; மாறாக, முஸ்லிம்கள் அவற்றை தவிர்க்க வேண்டும்; மற்றவர்களின் கலாச்சாரங்களை  பின்பற்றுவதை விட்டும் இஸ்லாத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளது. 

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் புத்தாண்டு.

 சரி ஓர் ஆண்டு கழிந்து புதிய ஆண்டை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?என்பதனை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில் அறியலாம்.

புத்தாண்டு தொடர்பான ஏதேனும் நடைமுறையை இஸ்லாத்தின் முதல் தலைமுறையினர்களான ஸஹாபாப்பெருமக்கள் கடைப்பிடித்திருகின்றார்களா , என்றால் அப்படி எந்த நடைமுறையையும் காண முடியவில்லை; இருப்பினும், சில ஹதீஸ் கிதாபுகளில், , புதிய மாதமோ அல்லது புத்தாண்டின் முதல் மாதமோ தொடங்கும் போது, ​​நபிகள் நாயகம் ﷺஅவர்களின் தோழர்கள் இந்த துஆவை ஓதுவார்கள்,அதனை அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள் என வருகின்றது. : ”اللّٰھُمَّ أدْخِلْہُ عَلَیْنَا بِالأمْنِ وَ الإیْمَانِ، وَالسَّلَامَةِ وَالإسْلَامِ، وَرِضْوَانٍ مِّنَ الرَّحْمٰنِ وَجِوَازٍمِّنَ الشَّیْطَانِ“ (المعجم الاوسط للطبرانی ۶/۲۲۱ حدیث: ۶۲۴۱ دارالحرمین قاہرہ)

யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானுடைய, அருள் உடைய பிறையாகவும், ஈடேற்றமும், இஸ்லாமும் உடைய பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக!

இந்த துஆவை புத்தாண்டின் துவக்கத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் பிறை காணும் போது ஓத  வேண்டும்; மேலும்,புத்தாண்டில், முஸ்லிம்கள் குறிப்பாக இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்.

வேறுவிதமாகக் கூறினால், புத்தாண்டு குறிப்பாக இரண்டு படிப்பினைகளை பாடமாக நமக்கு விட்டுச் செல்கிறது:        (1) கடந்த காலம் குறித்த சுயவிசாரனை (2) எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.

கடந்த காலம் குறித்த சுயவிசாரனை..

புத்தாண்டு நம் இம்மை,மறுமை ஈருலக வாழ்வின் நிலை குறித்து நம்மை நாமே  சுயவிசாரனை செய்துக் கொள்ளும் உணர்வை தருகிறது. நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை நாம் இழந்ததிருகின்றோம்.அதில் நாம் செய்த செயல்களில் நன்மை,தீமைகளை என்னென்ன என்பதனை ஆராயவேண்டும்.

நம் வணக்க வழிபாடுகளில்,கொடுக்கல் வாங்கலில் ஹலால்,ஹராமை பேணி நடந்தோமா?,அடுத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றினோமா? அடுத்தவர்களின் குறைகளை ஆராய்வதற்கு முன்னால் நம் குறைகளை ஆராய்ந்தோமா?என சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் 

ஒரு நபர் தனது தவறுகளையும் குறைபாடுகளையும் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க முடியும்; ஆனால் சுயத்தின்(மனசாட்சி) கண்களில் இருந்து தப்ப முடியாது; அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”حَاسِبُوْا أنْفُسَکُمْ قَبْلَ أنْ تُحَاسَبُوْا“۔ (ترمذی ۴/ ۲۴۷ ابواب الزہد، بیروت)

உங்களை கேள்வி கணக்கு கேட்கப்படுவதற்கு முன்பு நீங்களே உங்களை விசாரணை செய்து கொள்ளுங்கள் (நூல்;திர்மிதி)

எனவே, நாம் அனைவரும் நேர்மையாக குற்றம் சாட்டி, நம்மை நாமே எடைப் போட்டு, கிடைத்த அவகாசத்தைப் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த காலக்கெடு முடிவதற்குள்.

இதனையே அல்லாஹுத்தஆலா குர்ஆனில்...

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(அல்குர்ஆன் : 63:10)

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 63:11)


எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.

கடந்த காலம் குறித்த சுயவிசாரனைக்கு பின்பு எதிர்வரும் ஆண்டில் நம் வாழ்வை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில், நல்லறங்களில் கழிப்பதை குறித்து சிந்தித்து செயல்பட ஓர் திட்டமிடலும்.

கடந்த கால அனுபவப்பாடங்களிலிருந்து நம் பலம் எது, பலகீனம் எது என சிந்தித்து, நம் பலத்தை சாதகமாக பயன்படுத்தவும், பலகீனத்தை கைவிடவும் உறுதிக்கொள்ள வேண்டும் 

மனிதன் தவறுகளுக்கு மேல் தவறு செய்வதை விடவும் கொடியது, மோசமானது, அத்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் அதைத் தொடர்ந்து செய்வதுதான்.

இந்த திட்டமிடல் ஹதீஸ் மூலம் அறியப்பட்ட மார்க்க மற்றும் உலக விஷயங்களில் இருக்க வேண்டும்.

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள் ;

اغتنِمْ خمسًا قبل خمسٍ: شبابَك قبل هِرَمِك، وصِحَّتَك قبل سِقَمِك، وغناك قبل فقرِك، وفراغَك قبل شُغلِك، وحياتَك قبل موتِك

ஐந்துக்கு முன் ஐந்தை (வாய்ப்பாக)கனீமத்தாக கருதுங்கள்:

வயோதிகற்கு முன் வாலிபத்தையும்,

நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

அலுவல்களுக்கு முன் ஓய்வையும்,

மரணத்திற்கு முன் வாழ்வையும்,

(வாய்ப்பாக கருதுங்கள்).

மறுமை வாழ்வின் வெற்றியும் தோல்வியும் இவ்வுலக வாழ்வின் செயல்களைப் பொறுத்தே அமையும்.

இறைவன் தனது திருமறையில்...

 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.(அல்குர்ஆன் : 53:39)

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)

ثُمَّ يُجْزٰٮهُ الْجَزَآءَ الْاَوْفٰىۙ‏

பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.(அல்குர்ஆன் : 53:41)

உண்மையில், ஒவ்வொரு புத்தாண்டும் மனிதனுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக கவலையைத்தர வேண்டும் ; ஏனென்றால் தன் வயது படிப்படியாக குறைந்து பனிக்கட்டி போல் உருகுவதை  உணர்ந்தவன். எப்படி  மகிழ்ச்சியடைய இயலும் ? மாறாக வாழ்வின் ஒவ்வொரு நாளும் சூரியன்  மறைவதற்குள் ஏதாவது நல்லறம்  செய்ய வேண்டும் என்ற ஆசை  அவனை ஆட்கொள்ளச்  வேண்டுமல்லவா.

நம்மைப் பொறுத்தவரை, புத்தாண்டு என்பது தற்காலிக இன்பத்துக்கான,மகிழ்ச்சிக்கான நேரம் அல்ல, மாறாக, நம்மை விட்டும் கடந்த காலத்தின் மதிப்பை உணர்வதற்கும், இனி வரவிருக்கும் தருணங்களைச் சிறப்பாக கையாள்வதற்கும் , நமது இலட்சியங்களையும் மன உறுதியையும் புதுப்பிப்பதற்கும் ஓர் உன்னத  வாய்ப்பாகும்.

ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடு முறை,VS ஆங்கிலசூரியக் கணக்கீடு முறை.

அதே சமயம், முஸ்லிம்களின் புத்தாண்டு ஹிஜ்ரி ஆண்டாகும்.அது முஹர்ரம் மாதத்திலிருந்து துவங்குகிறது.  ஜனவரி மாதத்தில்  ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல ...

முஸ்லிம்கள் தங்களின் சுக,துக்க அனைத்து காரியங்களுக்கும் ஹிஜ்ரி ஆண்டையே கணக்கிட வேண்டும்.

ரமலான்,ஹஜ், ஜகாத்து என இஸ்லாத்தின் அனைத்து அமல்களையும் இஸ்லாமிய மாத, ஆண்டு கணக்குப்படி நிறைவேற்றினால் தான் நிறைவேறும், ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய ஆண்டோ,மாதங்களின் பெயர்களோ தெரிவதில்லை.

ஹிஜ்ரா ஆண்டு முறை என்பது நம் வரலாறு, அதனை தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தலையாய கடமையாகும்.

இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய விதிகள் அனைத்தும் ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடுகளின் அடிப்படையிலானவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; எனவே, இந்த ஹிஜ்ரா கணக்கைக் கடைப்பிடிப்பது உம்மத்தின் கடமையாகும். மற்ற சூரியக் கணக்கீடுகள், முதலியன, தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் ; ஆனால் சந்திர கணக்கீட்டை முற்றிலுமாக புறக்கணிப்பது பெரும் பாவமாகும், இதன் காரணமாக ஒருவருக்கு ரமலான் எப்போது வரும், துல்-ஹஜ்  மற்றும் முஹர்ரம் எப்போது வரும் என்று கூட தெரியாமல் போய்விடும். (மஆரிஃபுல் குர்ஆன் 3/402, 403)

ஹழ்ரத் அஷ்ரஃப் அலி தானவி(ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்: ஷரியத்தின் விதிகள் ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டவை ; எனவே, முழு உம்மாவும் சந்திர கணக்கீட்டை அழிக்கும் இரண்டாவது காலத்தை தங்கள் நெறிமுறையாக மாற்றினால், அனைவரும் பாவிகளாக கருதப்படுவார்கள் , அது பாதுகாப்பாக இருந்தால், மற்ற கணக்கீட்டை பயன்படுத்த  அனுமதி உண்டு; ஆனால்  ஸலஃபுஸ் ஸாலிஹீன்களான நல்லோர்களிடம்,

ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டு முறை "فرض عین " என்ற அடிப்படையில் கட்டாயக்கடமையாகும்.நம்மிடம் சந்திர கணக்கீட்டைப் பயன்படுத்துவது "فرضِ کفایہ" என்ற அடிப்படையில் சிறந்ததாகும். ( بیان القرآن ص: ۵۸ ، ادارئہ تالیفات اشرفیہ پاکستان) 

எனவே, நம்முடைய இந்த ஹிஜ்ரா  சந்திர வரலாற்றை நாம் முற்றிலும் மறந்துவிடக் கூடாது.

அமலை விரைவு படுத்துங்கள்.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) கூறினார்கள்: "நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடிணமானது.ஏனென்றால் நேரத்தை வீணடிப்பது உங்களை அல்லாஹ்விடமிருந்தும்  மறுமையிலிருந்தும் துண்டிக்கிறது.

மரணமோ உங்களை இந்த உலகத்திலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் துண்டிக்கிறது". (கிதாபுல் ஃபவாயிது - பக்கம்:31).

உழைப்பதற்கு நடந்து செல்லுங்கள்.

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ وَاِلَيْهِ النُّشُوْرُ‏ 

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.(அல்குர்ஆன் : 67:15)

ஜும்ஆவிற்கு கொஞ்சம் வேகமாக நடந்து செல்லுங்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் : 62:9)

பாவமன்னிப்பு கேட்க விரைந்து சொல்லுங்கள்.

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ 

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன் : 3:133)

அல்லாஹ்வின் பால் விரண்டு வாருங்கள்.

فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌‏ 

ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).              (அல்குர்ஆன் : 51:50)

‏قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :

من كـــان الله يحبه

استعمله فيما يحبه.

இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை அவனுக்கு விருப்பமான காரியங்களில் செயற்படவைப்பான்.

நயவஞ்சகனின் அடையாளம்.

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُوْهُمْ‌  وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏ 

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அல்குர்ஆன் : 4:142)

சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாத நடிகன். நரகத்திற்கு வழிகாட்டும் நடிகனின் திரைப்படம் வெளிவர இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே படத்தைப் பார்க்க போட்டிப் போடும் மனிதன்....சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வர மனம் வருவதில்லை

இமாம் அஹ்மத் இப்னு ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : ஐம்பது வருடங்களாக அல்லாஹ்வை வணங்கினேன் மூன்று விஷயங்களை விடும் வரை இபாதத்தில் இன்பம் காண முடியவில்லை.

1. மக்களின் திருப்தியை பெறுவதை விட்டேன். சத்தியத்தை (துணிந்து) சொல்லும் ஆற்றலை பெற்றேன். 

2. தீயவர்களின் தோழமையை விட்டேன்  நல்லவர்களின் தோழமையை பெற்றுக்கொண்டேன்.

3. உலக இன்பங்களை விட்டேன் மறுமையின்  இன்பத்தை பெற்றுக் கொண்டேன்.  

(நூல்: ஸியறு அஃலாமுந் நுபலா  11/34)

நேரம் பொன் போன்றது.

காலம் பொன் போன்றது என்று தமிழிலும் TIME IS GOLD என்று ஆங்கிலத்திலும்,    الوقت أثمن من الذهب என்று அரபியிலும் சொல்கிறோம். ஆனால் பொன்னை விடவும் உயர்ந்தது தான் காலம்.

உருதுவில்: گیا وقت پہر آتا نہی சென்ற நேரம் திரும்ப வராது என்பார்கள். உண்மையில் காலம் இழந்தால் பெற முடியாத ஒர் பொக்கிஷம். ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். நொடியை மதிக்காதவன் நிமிடத்தை மதிக்க மாட்டான் என்பார்கள். நிமிடங்களை கவனித்துக் கொண்டால் மணி " (Money) தானாக நம் வாழ்க்கையில் கிடைத்து விடும். காலத்தை தவிர நமக்கு எதுவும் சொந்தமில்லை. தனக்கு எதுவும் இல்லாமல் இருப்பவனுக்கு கூட காலம் தான் சொந்தமாகும். உலகில் என்ன விலையும் கொடுத்து வாங்க முடியாத மிக உயர்ந்த பொருள் நேரமே! கடனாக தரவோ, பெறவோ முடியாதது காலம் தான்.அரசன் முதல் ஆண்டி வரை அனைவரிடமும் சமமாக பரவி இருப்பது நேரமே!

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே என்று ஒரு தத்துவஞானி கூறியுள்ளார். நேரம் என்பது எவரையும் பொருட்படுத்துவதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை.நேரத்தை வீணாக்குவது கொலையல்ல, தற்கொலையாகும். சென்ற நேரம் திரும்ப வராது. இன்றைய வேலையை நாளை தள்ளி போடுவது  மடமைத்தனமாகும்.

آج کا کام کل پر نٹال என உருதுவில் சொல்வது பிரபல்யமானதாகும்.

மரணம்....

மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது , ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வரும். ஒரு மனிதனின் மரண நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவும் செய்யாது. பிந்தவும் செய்யாது.
ஆகையால் தான் மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இறைவன் எப்பொழுது அழைத்தாலும் சந்தோஷமாக செல்லும் நிலையில் நம் அமல்கள் இருக்க வேண்டும்.

முற்காலத்தில் வாழ்ந்த ஒருவன் மரணம் தனக்கு வரக்கூடாது என்பதற்காக இப்படி துஆ செய்தானாம்... 

யா அல்லாஹ்! எனக்கு இரவிலும் பகலிலும் மரணம் வரக்கூடாது. அதேப்போல் நான் வீட்டிலும், வெளியிலும் மரணம் ஆகக் கூடாது என துஆ செய்தான். அவன் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்.
அவனை அல்லாஹ் இரவிலும் பகலிலும் கட்டுப்படாத மஃரிப் பாங்கு சொன்ன பிறகு உள்ள 20 நிமிடத்தில் வரும் செம்மேகம் உள்ள நேரத்தில் மவ்த் ஆக்கினான். அதேப்போல் ஒரு காலை வீட்டிலும், ஒரு காலை வெளியில் வைத்த நிலையில் மரணமாக்கினான் என்பார்கள்.

எனவே ஒருவன் பிறந்து விட்டால் அவனுக்கு இறப்பு என்பது நிச்சயம். அதை யாராலும் மறுக்க முடியாது. மரணம் வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க கூடியதே என அல்லாஹ் திருமறையில் பேசுகிறான்.

ஒரு தடவை முல்லா நஸ்ருத்தீன் மக்களிடம் சென்று உங்களுக்கு மரணம் வராமல் இருக்க ஒரு மருந்தை நான் சொல்லட்டுமா? எனக் கேட்டார். மக்களெல்லாம் அது என்ன மருந்து என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக கூடினார்கள். முல்லா என்ன சொல்ல போகிறார் என கேட்க கூட்டம் கூட்டமாக வந்தனர். கடைசியில் முல்லா சொன்னார் உனக்கு மரணம் வராமலிருக்க நீ பிறக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த இறப்புக்குள் நாம் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஸஹாபாக்கள் ஒரு தடவை கூடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் எனக்கு தெரிந்த இரண்டு விஷயம் உங்களுக்கும் தெரிந்தால் இப்படி சிரிக்க மாட்டீர்கள்.
1)- வருங்கால வாழ்க்கை.
2)- மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை.
இதை அறிந்தால் நீங்கள் இவ்வாறு சிரித்துக் கொண்டு இருக்க மாட்டீர்கள் என்று மரணத்தின் அகோரத்தை நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்.

மரணத்தை மறந்த மனிதன்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். .    (அல்குர்ஆன் 62 : 8)

நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தைப்பற்றி அதற்காக நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? என்னுடைய கப்ருக்காக நான் என்ன தேடி இருக்கிறேன்? என்னுடைய கப்ரு விசாலமாவதற்கு, என்னுடைய கப்ரு ஒளி நிறைந்ததாக சொர்க்கத்தின் இன்பங்கள் நிறைந்ததாக ஆவதற்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்?

இந்த மரணத்தை நாம் மறந்தாலும் இந்த மரணம் நம்மை மறக்காது. நாம் மறந்துவிடுவோம். நம்முடைய தந்தையை அடக்கம் செய்த அதே நேரத்தில் மரணத்தை மறந்து விடுகின்றோம். தாயை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். மனைவியை அடக்கம் செய்து விட்டு மறந்து விடுகின்றோம். பிள்ளைகளை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். இப்படியாக நம்முடைய உறவுகளை நம்முடைய நண்பர்களை அடக்கம் செய்கிறோம். 

ஆனால் அடக்கம் செய்த அதே இடத்திலேயே நம்மில் பலருக்கு மரணத்தின் மறதி வந்து விடுகிறது. ஏதோ அவருக்கு தான் மரணம் அவர் மரணித்து விட்டார் தனக்கு மரணம் இல்லை என்பதை போன்ற ஒரு மனநிலையில் நாம் அந்த இடத்தில் இருந்து திரும்பி வருகின்ற நிலைமை இன்று நம்மில் பலருக்கு உள்ளது.

மறுமையில்...

مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْ‏ 

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! (அல்குர்ஆன் : 69:28)

هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌‏ 

“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).(அல்குர்ஆன் : 69:29)

சிறுதுளி பெருவெள்ளம்.

ஒரு நாள் ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 

அதற்கு பிலால்(ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் இரண்டு ரக்ஆத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல் என்று விடையளித்தார்கள்

பிலால் ரலியல்லாஹு அன்ஹு சுவர்க்கத்திற்கு செல்வதற்கு பெரிய அமல் ஒன்றும் காரணமாக இல்லை. தொடர்ச்சியாக செய்து வந்த ஒளுவுடைய அமல்தான் அவர்களை சுவர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்த்தது.

இன்று நாம் ஒரே நாளில் எல்லா வணக்கங்களையும் செய்துவிட்டு மறுநாள் ஒட்டுமொத்தமாக விட்டு விடுகின்றோம் இதற்குப் பெயர் இபாதத் அல்ல. மாறாக சிறிய அமலாக இருந்தாலும் நிரந்தரமாக செய்வதிலே தான் அதிக நன்மைகள் உண்டு.

எனவே எல்லா வணக்கங்களையும் தொடர்ந்து செய்வதற்கு நமக்கு  அல்லாஹ் அருள் புரிவானாக.. மேலும் எல்லாம்  வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் மற்றவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கி, நம் முஹம்மது நபிﷺஅவர்களின் வழிமுறையை  பின்பற்றுவதற்கான நல் வாய்ப்பை வழங்கி ஈருலகிலும் ஈடேற்றத்தை நல்கிடுவானாக!ஆமீன்..

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...