இலஞ்சம் தவிர்ப்பீர்...
இன்றைய விஞ்ஞான யுகத்தில் உலகம் நவீன கண்டுபிடுப்புகளில் அசுர வளர்ச்சி கண்டுவரும், அதே வேலையில் குற்றச்செயல்களும்,மனிதஉரிமை மீறல்களும்,பொருளாதர மோசடிகள்,கொள்ளை,வட்டி, ஊழல், லஞ்ச லாவண்யங்களும் பெருகி மனித இனம் அழிவை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்கின்றது.
பொருளாதார குற்ற செயல்களில் மிக மோசமான குற்றம் இலஞ்சம் ஆகும். லஞ்சம், ஊழல்... எங்கு, யாரால், எப்போது தொடங்கியது என்பவை விடைதேட முடியாத கேள்விகள்தான். ஆனால், அவை புற்றுநோயைப்போல பரவி, இன்றைக்கு சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. சாமான்யன் தொடங்கி நாடு வரை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக மாறிவிட்டன. ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கிறது
லஞ்ச ஊழல் என்பது இந்தியாவில் மட்டுமன்றி அனைத்து உலக நாடுகளிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. லஞ்சம்,ஊழல் காரணமாக அனைத்து நாடுகளினதும் ஜனநாயகம் பாதிப்படைகின்றது. இதனால் பாரிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது.
இத்தகைய ஊழலானது தீராத நோயாகவே சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது.
"முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம் வரை ஊடுருவியுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் லஞ்சம்:
மஜ்மஉல்-பிஹார் என்ற நூலில் , அல்லாமா ஃபித்னி (ரஹ்)அவர்கள் "இலஞ்சம்"குறித்த விளக்கத்தில்: "லஞ்சத்தின் அர்த்தம், அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு ஒருவர் தனது நியாயமற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக(அ)தவறான நோக்கத்தோடு ஏதாவது ஒன்றை வழங்குவதாகும்."எனக் குறிப்பிடுகிறார்கள் ۔(مجمع البحاربحوالہ علامہ سیدسلیمان ندوی)
லஞ்சம் வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் தடை.
وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.(அல்குர்ஆன் : 5:62)
இஸ்லாத்தில் லஞ்சம் வாங்குவது அறவே தடுக்கப்பட்டுள்ளது. யாரிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்படுகிறது. அவர்கள் எந்தப் பணியைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தப் பணியைச் செய்து கொடுக்க மக்களிடம் பெறப்படும் கையூட்டுதான் லஞ்சம் எனப்படும்.
குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசியங்களுக்குக்கூட லஞ்சம் வாங்குகிறார்கள். தொழில்களுக்கும் கட்டடங்கள் கட்டவும் அனுமதி அளிக்க லஞ்சம் வாங்குவது சர்வசாதாரணமாகி விட்டது. முஸ்லிம்கள் இது போன்ற பொறுப்புகளில் இருந்தால் அவர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் லஞ்சத்தின் தீங்குகள், லஞ்சம் வாங்குபவர்கள், லஞ்சம் கொடுப்பவர்களைக் குறித்து கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: "لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي" [رواه الترمذي]،
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ﷺஅவர்கள் கூறினார்கள் " லஞ்சம் வாங்குபவர்,லஞ்சம் கொடுப்பவர் இருவரையும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (நூல்;இப்னு மாஜா )
فقد قال صلى الله عليه وسلم:الراشي والمرتشي في النار. رواه الطبراني بسند جيد من حديث بن عمر.
மற்றொரு ஹதீஸில், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள், "லஞ்சம் வாங்குபவர் மற்றும் கொடுப்பவர் இருவரும் நரகத்தில் நுழைவார்கள். (தப்ரானி)
குர்ஆனில் லஞ்சத்தின் தீமைகள் பற்றி...
திருக்குர்ஆனில் "லஞ்சம் தடை" என தெளிவாகக் குறிப்பிடும் வசனம்.
وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் : 2:188)
அல்லாமா இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள், இந்த வசனத்தின் விளக்கத்தில் எழுதுகிறார்கள்; ஒருவருக்கு உரிமையுள்ள பொருளோ,சொத்தோ அது அவருக்குரியது என்பது உறுதியாக தெரிந்து, உரிமையாளரிடம் அதற்கான ஆதாரம் இல்லாமல் இருப்பதால், அவரின் இந்த பலவீனத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நீதிபதிக்கோ, அல்லது அதிகாரிக்கோ லஞ்சம் கொடுத்து,மற்றவர்களின் உரிமைகளை அபகரித்தல், இது அநியாயமும் மற்றும் ஹராமும் ஆகும்,இதனை நீதிமன்றத்தால் அநியாயம் என்றோ,ஹராம் என்றோ சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தவும் முடியாது, இந்த அடக்குமுறையாளர், அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளியாக இருப்பார்.(ابن کثیر)
தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆனின் ஆசிரியர், முஃப்தி முஹம்மது ஷஃபி (ரஹ்)அவர்கள், மேலே குறிப்பிட்ட வசனத்தின் விளக்கத்தில் ஹலால் மற்றும் ஹராம் காரணங்களை விளக்கி எழுதுகிறார்கள்: இஸ்லாத்தில் எதனை குற்றம் என்றோ,தீயவை என்றோ,பாவம் என்றோ கூறப்பட்டுள்ளதோ,அவை அனைத்துமே ஏதோ ஓர் விதத்தில் அடுத்தவருக்கு இடையூறாக அமையும், சில நேரங்களில் அடுத்தவரை ஏமாற்றுவதாக இருக்கும், சில சமயங்களில் இன்னொருவரின் உரிமையை பறிக்கலாம், சில சமயங்களில் ஒருவருக்கு தீங்கு செய்து லாபம் பெறப்படலாம், சில சமயம் பொது உரிமைகளை சட்டவிரோதமாக தனதாக்கிக்கொள்ளலாம்.
வட்டி,லஞ்சம் இதுப்போன்ற ஹராம்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் வளர்கிறார்கள். முழு தேசமும் திவாலாகி விடுகின்றது, ஆட்சியாளர்களின் சம்மதத்துடன் இதுபோன்ற விஷயங்கள் நடந்தாலும் ஹலாலாக ஆகாது, ஏனெனில் இது முழு உம்மத்துக்கும் எதிரான குற்றமாகும், மேற்கண்ட வசனத்தில் இந்த சட்டவிரோத சூழ்நிலைகள் அனைத்தும் விளக்கப்படுகிறது. (معارف القرآن:۱/۴۵۹)
இந்த வசனத்தின் படி லஞ்சம் தடை என்பது தெளிவாக விளங்குகிறது, ஏனெனில் லஞ்சம் என்பது பொது உரிமைகளை நேரடியாக பாதிக்கும் ஒரு செயலாகும், இதன் காரணமாக, உரிமையாளரின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.
லஞ்சம் பெற வழிகாட்டுபவனும், உதவுபவனும் சபிக்கப்பட்டவர்களே!
இஸ்லாத்தின் பார்வையில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் எப்படி சபிக்கப்பட்டதோ, நரகத்திற்குரியதோ, அதேபோல், லஞ்சதிற்கு துணைபோகக்கூடியவரும் ஹதீஸின் வெளிச்சத்தில் சபிக்கப்பட்டவர்.
روى الإمام أحمد عن ثوبان قال: لعن رسول الله الراشي والمرتشي والرائش.
ஹஸ்ரத் தவ்பான் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அறிவிக்கப்பட்டுள்ளது. "அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் " லஞ்சம் வாங்குபவன், கொடுப்பவன், லஞ்சதிற்கு வழிகாட்டுபவன் அனைவரையும்" சபித்தார்கள். (நூல்:அஹ்மத்,தப்ரானி)
ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி, எவரிடமாவது அவருக்கு ஆதரவாக முடிவெடுக்க லஞ்சம் வாங்குவது குஃப்ருக்கு (அவநம்பிக்கைக்கு) சமம் என்றும், சாமானியர்கள் ஒருவருக்கொருவர் லஞ்சம் வாங்குவது "சுஹுத்" என்றும், அதாவது ஹராம் (தடைசெய்யப்பட்டது) மற்றும் தூய்மையற்ற சம்பாதியமாகும்.(தபராணி)
இஸ்லாமிய உம்மத்தின் ஏகோபித்த கருத்து "லஞ்சம் ஹராமாகும்".
அகராதியில், "லஞ்சம்" என்பதன் பொருள்: ஒருவருக்கு தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படும் கையூட்டு , அந்த நோக்கம் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி,அனுமதிக்கப்படாததாக இருந்தாலும் சரி;
அதனால்தான் இமாம் அபு சுலைமான் அல்-கத்தாபி(ரஹ்)அவர்கள் மேற்கூறிய ஹதீஸிற்கு இப்படி விளக்கம் எழுதுகிறார்கள்: "லஞ்சம் வாங்குபவர், கொடுப்பவர் இருவரும் பாவம் மற்றும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்,
காரணம் இரண்டு செயல்களின் நோக்கமும் பொய்யான மற்றும் அநீதிக்கு ஆதரவளிப்பதாகும், ஒருவருக்கு அநீதம் இழைப்பது அல்லது ஒருவரின் உரிமையை மீறுவது.
(எ.க,) ஒரு நபர் ஷரிஅத் சட்டப்படி எந்த உரிமையும் இல்லாத ஒரு பொருளை லஞ்சம் கொடுத்து தனதாக்கிக்கொள்ள முடியும் , அல்லது அடுத்தவரின் சொத்தையோ,அடுத்தவருக்கு சொந்தமான பொருளையோ அவரிடம் தகுந்த சான்றுகள் இருந்தாலும் அதனை லஞ்சம் கொடுத்து அநியாயமாக அபகரித்துக் கொள்ள முடியும். , இதனால் அதன் உண்மையான உரிமையாளர் உரிமை இழக்க நேரிடும்.
மேற்கண்ட ஹதீஸின்படி, இந்த லஞ்சம் சந்தேகத்திற்கு இடமின்றி சாபத்திற்கு காரணம்.என்பது தெளிவாகிறது.
அதே போல், லஞ்சம் வாங்குபவர் எச்சரிக்கப்படுவதற்கு காரணம்; ஷரீஅத்தின்படி(கடமையை செய்ய) கடமையான உரிமைக்கோ, செயலுக்கோ லஞ்சம் வாங்கும்போது, அல்லது ஆகுமாகாததை செய்யும் போது, அதனால் இன்னொருவருக்கு தீங்கு ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குபவருக்கு பாதிப்பு ஏற்படாத வரை , அவர் தனது தவறான செயலைக் கைவிடத் தயாராகுவதில்லை.
எனவே மேற்கண்ட ஹதீஸின் படி, லஞ்சம் வாங்குபவர் சபிக்கப்பட காரணமாகிறார்.
ஆனால், ஒருவன் தனக்குக் கிடைக்கக்வேண்டிய நியாயமான உரிமையை கூட , லஞ்சம் கொடுக்காமல் பெற முடியாது , அல்லது தனக்கான உரிமை தாமதிக்கப்பட்டு அதனால் அசாதாரணமான கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும், அல்லது அநியாயக்காரனின் அநீதத்திலிருந்து தப்பிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுப்பது நிர்பந்தமாக அனுமதிக்கப்படும். ஆனால் தம் கடமைகளில் நேர்மையாக இருப்பதென்பது அவசியமாகும்.
அதேபோல், ஒருவர் தன் தேவைக்காக அதிகாரியையோ அல்லது ஆட்சியாளரையோ சந்திக்க வேறொரு நபர் உதவிபுரிகிறார் அத்தகைய நபர் மூலம் ஆட்சியாளரை அணுகினால் இந்தப் பணிக்கு எந்தப் பொறுப்பும் இல்லாத ஒருவர் சேவைக்கான உரிமையாக ஏதாவது ஒன்றைப் பெற்றால், அது கூடும். ஏனென்றால் அது தவறான செயலுக்கு ஆதரவாகவோ, யாருக்கும் அநீதியாகவோ இல்லை.மேலும் ஷரிஅத் சட்டப்படி இந்த வேலையைச் செய்வது அவருக்குக் கடமையாக இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் எந்த வெகுமதியும் பெறாமல் இருப்பதே நன்மையை பெற்றுத்தரும் காரியமாகும்.
அல்லாஹ்வின் தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்:சிபாரிசு செய்யுங்கள், உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். அனுபவப்பூர்வமான உண்மை, லஞ்சம் கொடுக்க வேண்டிய விரும்பத்தகாத சூழ்நிலைகளில், கொடுப்பவர் நிர்பந்திக்கப்படுத்தப்படுகிறார், ஆனால் பெறுபவர் நிர்பந்திக்கப்படுத்தப்படுவதில்லை.
லஞ்சமும்,யூதர்களின் பழக்கமும்.
நபிகள் நாயகம் ﷺஅவர்கள் பாதிரியாரின் ஹல்வானை குறிப்பாக தடை செய்தார்கள்.
(ترمذی،باب ماجاء فی کراہیة مہرالبغی)
அதே போல அரபகத்தில் யூதர்களின் வழக்குகள் அவர்களின் பாதிரிகளாலும், தலைவர்களாலும் தீர்ப்பளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சட்டம்,நீதிக்கு புறம்பாக தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, பணக்காரர்களும், செல்வாக்குள்ளவர்களும் வெளிப்படையாக லஞ்சம் கொடுப்பார்கள், அவர்களின் பாதிரியார்களும் நீதிபதிகளும் இந்த லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கினர்.அது மட்டுமல்லாமல், அவர்கள் "தோரா" தவராத்தின் சட்டங்களுக்கு மாற்றம் செய்து கொண்டிருந்தனர்.(صحیح بخاری)
ஏனெனில் அவர்களிடம் "லஞ்சம்" என்பது தோராவின் சட்டங்களில் திரிபுபடுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.இதனையே திருக்குர்ஆன் வசனம் இப்படி மேற்கோள் காட்டுகிறது :
اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.(அல்குர்ஆன் : 2:174)
"வயிற்றில் நெருப்பை நிரப்புவது" என்பது, ஹராமான சம்பாத்தியமான லஞ்சம் என்று பொருள்படும்.
- وَحَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) كَانَ يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ إِلَى خَيْبَرَ، فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَ يَهُودِ خَيْبَرَ، قَالَ : فَجَمَعُوا لَهُ حَلْياً مِنْ حَلْي نِسَائِهِمْ فَقَالُوا : هَذَا لَكَ وَخَفِّفْ عَنَّا وَتَجَاوَزْ فِي الْقَسْمِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ : يَا مَعْشَرَ الْيَهُودِ، وَاللَّهِ إِنَّكُمْ لَمِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَيَّ، وَمَا ذَاكَ بِحَامِلِي عَلَى أَنْ أَحِيفَ عَلَيْكُمْ، فَأَمَّا مَا عَرَضْتُمْ مِنَ الرُّشْوَةِ فَإِنَّهَا سُحْتٌ، وَإِنَّا لاَ نَأْكُلُهَا. فَقَالُوا : بِهَذَا قَامَتِ السَّمَوَاتُ وَالأَرْضُ(159).
நபிகள் நாயகம்ﷺஅவர்கள் காலத்தில் கைபர் யூதர்களுடன் சமரசம் ஏற்பட்டு பாதி நிலத்தை பிரித்து தருவதென முடிவானது. நிலத்தை பிரிக்கும் நேரம் வந்ததும் ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி)அவர்களை நபிﷺஅவர்கள் கைபர் யூதர்களிடம் அனுப்பினார்கள்.
அப்துல்லாஹ் ஹிப்னு ரவாஹா(ரலி)அவர்கள் இடத்தை இரண்டு பங்குகளாக பிரித்து அதில் விருப்பமான பகுதியை எடுத்துக் கொள்ளுமாறு யூதர்களிடம் கூறினார்கள். அவர்களோ தங்களின் பழக்கத்தின்படி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பி, அவர்களுக்கிடையே நன்கொடையாகப் பெண்களின் நகைகளில் சிலவற்றைச் சேகரித்து, அதை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள், அதற்கு ஈடாக விநியோகத்தில் தமது பங்கை அதிகரிக்கக்கேட்டுக்கொண்டார்கள்.
இதனைக் கேட்ட அப்துல்லாஹ் ஹிப்னு ரவாஹா( ரலி)அவர்கள்; "யூதர்களே!இறைவனின் மீது ஆணையாக , இறைவனின் அனைத்து படைப்பினங்களிலும் நீங்கள் எனக்கு மிகவும் வெறுக்கப்பட்டவர்கள், ஆனால் இது உங்களை ஒடுக்குவதற்கு என்னை(ஒருபோதும்)தூண்டாது, மேலும் நீங்கள் லஞ்சமாக வழங்கியது (ஹராம்)தடைசெய்யப்பட்டுள்ளது, நாங்கள் (முஸ்லிம்கள்) அதை சாப்பிட மாட்டோம்,என்று சொன்னார்கள்.
யூதர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு விட்டுச் சொன்னார்கள் . , "இதுவே நீதி (நியாயம்)." இவர் போன்றவர்களாலே வானங்களும் பூமியும் நிலைத்திருக்கின்றன." (موطاامام مالک،کتاب المساقاة)
தற்காலத்தில் எங்கும் லஞ்சம்,எதிலும் லஞ்சம்...
எங்கும் லஞ்சம்,எதிலும் நெஞ்சம் என்று கூறும் அளவுக்கு, சமூகத்தை பிடித்திருக்கக் கூடிய கொள்ளை நோயாக லஞ்சம் வியாபித்து இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் லஞ்சத்தைத் தவிர்த்து கொள்ள என்ன செய்வது என்ற ஒரு கேள்வி இங்கு எழுகிறது, இதற்கு நேர்மையான,எளிதான பதில் என்னவென்றால், மேற்கூறிய ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்களின் வெளிச்சத்தில், வட்டி,லஞ்சம் போன்ற ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஷரியாவுக்கு எதிரானது, மேலும் யாரோ ஒருவர் கொலை செய்வதற்கும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் எது கொடுக்கப்பட்டாலும் அது லஞ்சத்தின் கீழ் வரும்.
லஞ்சம் கொடுப்பது எப்போது ஆகுமாக்கப்படும்?
இதற்கு மார்க்கவிர்ப்பன்னர்கள், ஒரு சட்டத்தை வரையறுத்துள்ளார்கள்:
லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், உயிரிழப்பு அல்லது பண இழப்பு ஏற்படும் என்கிற அச்சமிருப்பின் கூடும்.
அதுபோல் நியாயமற்ற அதிகாரி அவருக்கு லஞ்சம் கொடுக்காமல் தனக்கான உரிமையை கூடப்பெறமுடியாது,தன் உரிமையை இழக்க நேரிடும் என்று இருந்தால் கொடுக்கலாம்.
كتب علامہ ابن نجیم رحمه الله : ”اَلرِّشْوَةُ لِخَوْفٍ عَلیٰ نَفْسِہ أوْ مَالِہ أوْ لِیُسَوِّيَ أمْرَہ عِنْدَ السُّلْطَانِ أوْ أمِیْرٍ“ (ردالمحتار:۴/۳۴۰ بحوالہ جدیدفقھی مسائل:۱/۳۰۰)
அல்லாமா இப்னு நஜிம(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்:
"லஞ்சம்"உயிர் மீதுள்ள,செல்வத்தின் மீதுள்ள பயத்திற்காக அல்லது அரசர்,ஆட்சியாளரின் தவறான தீர்ப்பை சரிசெய்வதற்காக (கூடும்)" (ரத்துல்முக்தார்: 4/340)
உயிர்,பொருள் பற்றிய பயம் காரணமாகவும், சுல்தான் அல்லது அமீருக்கு லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தமிருந்தால் தம்மிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்வதற்காக லஞ்சம் கொடுக்க விலக்கு அளிக்கப்படுகிறது.
உயிர்,உடமை காக்க லஞ்சம்:
தற்கால ஃபிக்ஹ்கலை வல்லுநர் (ஃபகீஹுல் அஸ்ர்)அல்லாமா மௌலானா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானி ஹழ்ரத் அவர்கள்; லஞ்சம் கொடுப்பது,வாங்குவது ஹராம் ஆகும் காரணிகளையும்,இக்கட்டான சூழ்நிலையில் லஞ்சம் அனுமதிக்கப்படுமா?என்பதனை இப்னு நஜிம் (ரஹ்)அவர்கள் எழுதிய தொகுப்பை மேற்க்கோள் காட்டி எழுதுகிறார்கள்:
"லஞ்சம் வாங்குவது எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே போல, கொள்கையளவில் லஞ்சம் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, சட்ட வல்லுநர்களின் ஒருமித்த கருத்துயாதெனில், "எதனை வாங்குவது கூடாதோ அதனை கொடுப்பதும் கூடாது."”مَاحَرُمَ أخْذُہٗ حَرُمَ اعْطَائُہٗ“ என்பது பொதுச்சட்டம் ஆகும்.
லஞ்சம் வாங்குவது ஒரு போதும் நிர்ப்பந்தமாக முடியாது என்பதாலும், சில சமயங்களில் லஞ்சம் கொடுப்பது நிர்ப்பந்தமாகிவிடுவதாலும், தேவை மற்றும் நிர்ப்பந்தம் போன்ற சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுக்க சட்ட வல்லுநர்கள் அனுமதித்துள்ளனர்.
இதற்கு நபிகள் நாயகம் ﷺஅவர்களின் ஓர் நடவடிக்கை எடுத்துக்காட்டாக உள்ளது. நபிﷺ அவர்கள் சில சமயங்களில் தீய கவிஞர்களுக்கு ஏதாவது கொடுப்பார்கள், அதனால் அவர்கள் முட்டாள்தனமான கவிதைகளை பாடுவதை தடுப்பதற்காகவும், என்று கூறப்படுகிறது. முஸ்லிம்களை இழிவுபடுத்தி கவிப்பாடுவதை தடுக்கவும்.இவ்விதம் செய்வார்கள்.
ஜகாதை வசூலிப்பவர் பரிசு அல்லது அன்பளிப்பை ஏற்றுக்கொள்வது.
நபிகள் நாயகம்ﷺ அவர்கள் ஜக்காத்தை வசூலிப்பவர் அன்பளிப்பையோ, பரிசையோ பெறுவதை தடை செய்தார்கள்.
عن أبي حُمَيد عبد الرحمن بن سعد السَّاعِدِي قال: استعمل النبي ـ صلى الله عليه وسلم ـ رجلاً من الأزْد يُقال له ” ابن اللُّتْبيَّة ” على الصَّدقة، فلمَّا قَدِم قال هذا لكم وهذا أُهدي إليَّ، فقام رسول الله ـ صلى الله عليه وسلم ـ على المِنْبر فحمِد الله وأثنى عليه ثم قال ” أما بعد، فإني أستَعْمل الرَّجل منكم على العمل مما ولَّاني الله فيأتي ويقول: هذا لكم وهذا هدية أهديت إلىَّ، أفلا جلس في بيت أبيه وأمه حتى تأتيَه هديَّته إن كان صادقًا، والله لا يأخذ أحد منكم شيئًا بغير حقِّه إلا لقيَ الله تعالى يحمله يوم القيامة، فلا أعرفنَّ واحدًا منكم لقي الله يحمل بعيرًا له رُغاء أو بقرة لها خُوار، أو شاة تَيْعَر “، ثم رفع يديْه حتى رؤى بياض إبطيه فقال ” اللهم هل بلَّغت ” (رواه البخاري ومسلم.)
ஒரு தடவை ஜக்காத்தை வசூலிப்பவர் ஒருவர் இது ஜக்காத்துடைய பொருள்,இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது என்று கூறுவதை கேட்ட நபிகள் நாயகம் ﷺஅவர்கள் மிம்பரில் ஏறி,ஹம்து ஸலவாத்து கூறிய பின் இவ்விதம் உரை நிகழ்த்தினார்கள்;
“நாம் அனுப்பும் வசூலிப்பவர் நிலை என்ன, அவர் வந்து, இது உன்னுடையது, இது என்னுடையது என்று சொல்கிறார்,
அவர் நேர்மையாளராக இருந்தால் பரிசை பெரும் வரை தம் தாய்,தந்தையர் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பரிசை பெற முடியுமா என பார்க்கலாம்.
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ,தனக்கு உரிமையில்லாமல் அவர் எதைப் பெற்றாரோ அதை அவர் மறுமை நாளில் கழுத்தில் சுமந்து வருவார். உங்களில் எவரும் அறியமாட்டீர்கள் அவர் ஒட்டகத்தையோ, மாட்டையோ, ஆட்டையோ,சுமப்பார்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி மூன்று முறை கூறினார்: "இறைவா! நான் உன்னிடம் எத்தி வைத்து விட்டேன்." (صحیح بخاری،باب ہدایاالعمال)
ஊழலில் ஊறிப்போனவர்கள்.
பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், இலஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. மக்களின் உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாவலர்களாக விளங்கும் காவல் துறையினர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இதன் உச்சகட்டம் என்னவெனில் இலஞ்ச ஒழிப்பு துறையினரே இலஞ்சம் வாங்கும் அவலநிலை.
இதற்காகப் போர்க்கொடி தூக்கினால், ‘யார் தான் ஊழல் செய்யவில்லை. ஊழலில்லாத அரசியலா? ஊழலில்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வதற்கு நன்றாக இருக்கும்; ஆனால் செயல்படுத்த இயலாது’ என்று இன்றைய அரசியல்வாதிகள் வசனம் பேசுகின்றனர்.
இந்த இடத்தில் அமர்ந்து பாருங்கள் என்றும், ஊழலில்லாத அரசியல்வாதி ஒருவரைக் காட்டுங்கள் என்றும் கூறி, தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு குற்றம் புரியும் தலைவர்களின் பட்டியலை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஊழலற்ற அரசியலுக்கு முன்னோடியாக எந்த அரசியல்வாதியையும் தற்போது காணமுடிவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்களின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுமளவிற்கு ஊழலில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்குதல்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا . فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى : مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ ، أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا ، فَأَتَيْتُهُ فَقُلْتُ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا ، فَحَثَى لِي حَثْيَةً ، فَعَدَدْتُهَا ، فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ ، وَقَالَ : خُذْ مِثْلَيْهَا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!’’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.
நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்! என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக! என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி-2296)
வறுமையிலும் வாரி வழங்கிய மாமனிதர்.
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்தும் மக்கள் வரிப்பணமாகிய அரசு கருவூலத்திலிருந்து கோடி கோடியாக அரசியல்வாதிகளுக்கு செலவழிக்கப்படுகின்றது. இது தவிர இலஞ்சம் மற்றும் ஊழலின் மூலமும் அவர்கள் சொத்துக்களை சேர்த்துக் கொண்டனர்.
மக்களின் நலன் காக்கத் தவறி தன்னலனையும், தன் குடும்பத்தினரின் நலனையும் மட்டுமே கவனத்தில் கொண்டு மக்களிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும் மறந்த சுயநலவாதிகளாகவும், பச்சோந்திகளாகவுமே இன்றுள்ள அரசியல்வாதிகள் உள்ளனர். விதை விதைக்காமல் அவர்கள் அறுவடையை மட்டுமே செய்கின்றனர். இதில் படிக்காத முட்டாள்களும், படித்த பட்டதாரி அரசியல்வாதிகளும் அடங்குவர். இப்படிப்பட்ட அரசியல் தலைமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. அவர்கள் போடும் சட்ட திட்டங்களெல்லாம் சாமானிய மக்களின் மீது அடக்குமுறையாகவும், அவர்களின் அடிவயிற்றில் அடிக்கக் கூடியவையாகவுமே உள்ளன.
மக்களால் நான் மக்களுக்காகவே நான், ஊழலை ஒழிக்கவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறுவதற்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளில் எவருக்கும் அருகதை கிடையாது. அனைவருமே பசுத்தோல் போர்த்திய புலிகளாகவும், மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைப் பூச்சிகளாகவுமே உள்ளனர்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகளிலிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை.
கேட்டவருக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காகவோ தமது குடும்பத்திற்காகவோ அதிலிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ وَهُوَ ابْنُ زِيَادٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ
أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ، ارْمِ بِهَا، أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ؟»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றார்கள். (நூல்.முஸ்லிம்-(1939)
சுயமரியாதையோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சுமப்பவருக்கு அல்லாஹ் மேலும் சகிப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (6470)
உழைத்து வாழ்வோம்.
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘‘ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’’ எனக் கூறினேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: புகாரி-1472 )
அல்லாஹுத்தஆலா, இந்த சமூக தீமையிலிருந்து நம்மையும்,நம் சமூகத்தையும் பாதுகாப்பானாக! (ஆமீன்)
No comments:
Post a Comment