ஹஜ் எனும் கடமை.
ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகள் போன்றே புனித குர்ஆன், ஹதீஸ் மற்றும் "இஜ்மாஃ" உம்மத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றால் ஹஜ் கடமை நிரூபிக்கப்பட்டுள்ளது;
எனவே, எவர் ஹஜ் கடமையை மறுக்கிறாரோ அவர் காஃபிராவார்.
وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97)
இந்த வசனம் ஹஜ் கடமையைப் பற்றி உறுதிப்படுத்துகிறது.
بُنِیَ الإِسْلاَمُ عَلَی خَمْسٍ: شَھَادَةِ أَنْ لاَ إِلَہَ إِلَّا اللہُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللہِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِیتَاء ِ الزَّکَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ“․(بخاری شریف، حدیث نمبر:۸)
அண்ணலம் பெருமானார்ﷺஅவர்கள் கூறினார்கள்;
ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது.
1,வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி ﷺஅவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள்என்று சாட்சி சொல்வது.
2,தொழுகையை நிலை நாட்டுவது.
3,ஜகாத் கொடுப்பது.
4 ,ஹஜ் செய்வது
5,ரமலானில் நோன்பு நோற்பது.
(நூல்;புகாரி)
ஒரு காதல் பயணம்.
ஒரு நபர் தனது தாயகம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், செல்வச்செழிப்பு இவற்றின் மீது அதிக பிரியமும், இவை அனைத்தும் எப்போதும் தனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பாகும்.
ஆனால் ஒரு மனிதன் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது; அதனால் சொந்த ஊர், மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களை விட்டுச் சென்று தம் செல்வத்தைச் செலவழிக்க வேண்டும். இவற்றை அல்லாஹுவின் உத்தரவு,இஸ்லாமிய ஷரிஆவின் கடமை என்பதால் செய்ய வேண்டும். இதனால்தான் இஸ்லாம், மக்களுக்கு ஹஜ் செய்ய அதிக ஆர்வத்தை ஊட்டுகிறது ,
புனித கஅபாவை தரிசிப்பதையும், பெருமானார்ﷺஅவர்கள் பிறந்த,வளர்ந்த,வாழ்ந்த,மறைந்த மண்ணை தரிசிக்க செல்லும் இப்புனித பயணத்தை இறை காதலின் வெளிப்பாடு என இஸ்லாம் வர்ணிக்கிறது.
இஸ்லாத்தில் மிகப்பெரும் கடமையாக உள்ள ஹஜ்ஜை பெரும் நன்மையை பெற்றுத் தரும் இறை காதல் பயணம் என்றும் அதன் அளப்பெரும் நன்மைகளையும் ஹதீஸ்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
سُئِلَ النَّبِیُّ - صَلَّی اللہُ عَلَیْہِ وَسَلَّمَ- أَیُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ”إِیمَانٌ بِاللہِ وَرَسُولِہِ“ قِیلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: ”جِھَادٌ فِی سَبِیلِ اللہِ“ قِیلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: حَجٌّ مَبْرُورٌ“․(بخاری شریف، حدیث نمبر:۹۱۵۱)
ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது நற்செயல்களில் சிறந்தது எது?"
அதற்குநபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின் மீதும் ஈமான் கொள்வதாகும்."
பிறகு எது என கேட்கப்பட்டது. அதற்குநபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும்."
பிறகு எது என கேட்கப்பட்டது... அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
ஹஜ்ஜே மப்ரூர் (ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்) ஆகும். (நூல்;புகாரி)
ஹஜ் மபரூர் حج مبرور என்றால் என்ன?
$ எந்த பாவமும் நிகழாத ஹஜ்.
$ அல்லாஹுவால் مقبول ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்.
$ தற்பெருமை இல்லாத, பிரபல்யமாகுதல் நோக்கமில்லாத,எந்த பாவமும்,குற்றமும் நிகழாத ஹஜ்.
$ திரும்பிய பிறகு பாவத்தை மீண்டும் செய்யாமல், நன்மை செய்யும் நாட்டத்தை அதிகரிக்கும் ஹஜ்.
$ ஹஜ்ஜுக்குப் பிறகு ஒருவர் உலகில் ஆர்வமற்று, மறுமையில் ஆர்வம் காட்டுகிறாரோ அதுவே ஹஜ் மப்ரூர்.
ஹஜ் மப்ரூரின் சிறப்பு.
”العُمْرَةُ إِلَی العُمْرَةِ کَفَّارَةٌ لِمَا بَیْنَھُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَیْسَ لَہُ جَزَاء ٌ إِلَّا الجَنَّةُ“․ (بخاری شریف، حدیث:۱۷۷۳، مسلم شریف، حدیث(۱۳۴۹)-۴۳۷)
ஹஜ் முந்தைய பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறது...
இப்னு ஷிமாஸா (ரஹ்)கூறுகிறார்கள்;ஹழ்ரத் அம்ர் பின் ஆஸ்(ரலி)அவர்களளின் மரணத் தருவாயில் நாங்கள் அவர்களின் பணிவிடையில் இருந்தோம்.
அன்னார் அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள், பின்னர் அவர் தனது முகத்தை சுவரின் பக்கம் திருப்பினார்கள். இது குறித்து அவரது மகனார் சில கேள்விகளை கேட்டார்கள். பின்னர் அன்னார் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவத்தை விவரித்தார்கள்) கூறினார்கள்: அல்லாஹ் என் இதயத்தை நம்பிக்கையின் ஒளியால் ஒளிரச் செய்ய விரும்பியபோது;
நான் அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களின் சமூகத்தில் பிரசன்னமாகி கூறினேன்: நபிﷺஅவர்களே நீங்கள் உங்கள் முபாரக்கான வலது கரத்தை நீட்டுங்கள்; நான் உங்களிடம் பைஅத் (சத்தியப் பிரமாணம்) செய்துக்கொள்கிறேன்.
நபிﷺஅவர்கள் தம் கரத்தை நீட்டினார்கள் நான் நபிﷺஅவர்களின் கரத்தை இழுத்தேன்.அதற்கு நபிﷺஅவர்கள்: அம்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள்
நான் சொன்னேன்: எனக்கு ஒரு நிபந்தனை (வேண்டுகோள்)இருக்கிறது.
நபிﷺஅவர்கள் கேட்டார்கள்;
உங்கள் நிபந்தனை என்ன?
நான் சொன்னேன்: எனக்கு பாவமன்னிப்பு கிடைக்க வேண்டும்.
”أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلَامَ یَھْدِمُ مَا کَانَ قَبْلَہُ؟ وَأَنَّ الْھِجْرَةَ تَھْدِمُ مَا کَانَ قَبْلَھَا؟ وَأَنَّ الْحَجَّ یَھْدِمُ مَا کَانَ قَبْلَہُ“؟ (مسلم شریف، حدیث: ۱۲۱- ۱۹۲)
அதற்கு நபிﷺஅவர்கள் கூறினார்கள்; உனக்கு தெரியுமா? இஸ்லாம் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும்.
ஹிஜ்ரத் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும்.
ஹஜ் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும்.
”مَنْ حَجَّ لِلہِ فَلَمْ یَرْفُثْ، وَلَمْ یَفْسُقْ، رَجَعَ کَیَوْمِ وَلَدَتْہُ أُمُّہ․“ (بخاری شریف، حدیث نمبر:۱۵۲۱)
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி)அவர்கள் ஒரு ஹதீஸில் கூறுகிறார்கள்:
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” (நூல்;புகாரி)
இங்கு رفَث"ரஃபஸ்" என்பது உடலுறவு என்று பொருளாகும், உடலுறவு மற்றும் உடலுறவின் போது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் போன்ற அனைத்தையும் குறிக்கும்.
அபு உபைதா (ரஹ்)கூறிகிறார்கள்: رفَث"ரஃபஸ்" என்றால் "வாய்மொழி அருவருப்பான பேச்சு,கெட்ட வார்த்தைகள்".
பின்னர் کنایة ஆக உடலுறவு மற்றும் உடலுறவின் போது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் போன்றவற்றிக்கு பயன்பப்படுத்துவது புழக்கத்தில் உள்ளது. (الموسوعہ الفقہیہ الکویتیہ۲۲/۲۷۵)
மஸ்அலா: சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, இஹ்ராம் நிலையில் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது.
குர்ஆனில் ...
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 2:197)
இஹ்ராம் நிலையில் யாராவது வேண்டுமென்றே உடலுறவில் ஈடுபட்டுவிட்டால்; அவரது ஹஜ் செல்லாது, களா செய்வதும்,کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரமும் அவசியமாகும்.
மறதியில் யாராவது உடலுறவு கொண்டால்;
எனவே, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி (ரஹிமஹுமுல்லாஹ்)ஆகியோரின் கூற்றுப்படி, இந்த நிலையிலும் கூட, ஹஜ் செல்லாது, களா செய்வதும், کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரமும் அவசியமாகும்; ஆனால் ஷாஃபிஈ (ரஹ்)அவர்களின் கூற்றுப்படி ஹஜ் முறியாது; மாறாக,, کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரம் அவசியமாகும்; (الموسوعہ الفقہیہ الکویتیہ:۲۲/۲۷۶-۲۷۷)
இங்கு ” فِسْق“ "ஃபிஸ்க்" என்பது பாவத்தைக் குறிக்கிறது.
மேலும்”کَیَوْمِ وَلَدَتْہُ أُمُّہُ“என்பதன் விளக்கம் அல்லாமா இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்)அவர்கள்கள் கூறுகிறார்கள்: "எந்த பாவம் என்று குறிப்பாக இல்லாமல் இருப்பாதால் அதன் ظاہریவெளிப்படையான பொருள் சிறிய,பெரிய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும். "(فتح الباری۳/۳۸۲-۳۸۳)
முதியவர்கள், பலவீனர்கள் மற்றும் பெண்களின் ஜிஹாத்.
”جِھَادُ الْکَبِیرِ وَالضَّعِیفِ وَالْمَرْأَةِ الْحَجُّ وَالْعُمْرَةُ“ (السنن الکبری للنسائی، حدیث:۳۵۹۲، مسند احمد، حدیث:۹۴۵۹، السنن الکبری للبیہقی، حدیث:۸۷۵۹)
ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பு,
நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்: " முதியவர்கள், பலவீனர்கள் மற்றும் பெண்களின் ஜிஹாத் ஹஜ்ஜி,உம்ரா ஆகும்.
”قُلْتُ یَا رَسُولَ اللہِ! أَلاَ نَغْزُو وَنُجَاھِدُ مَعَکُمْ؟ فَقَالَ: ”لَکِنَّ أَحْسَنَ الجِھَادِ وَأَجْمَلَہُ الحَجُّ، حَجٌّ مَبْرُورٌ“․فَقَالَتْ عَائِشَةُ ”فَلاَ أَدَعُ الحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ ھَذَا مِنْ رَسُولِ اللہِ صَلَّی اللہُ عَلَیْہِ وَسَلَّمَ“․(بخاری شریف، حدیث:۱۸۶۱)
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ﷺ.நாங்கள் உங்களோடு போரில்பங்கேற்கமுடியுமா?ஜிஹாத் செய்ய முடியுமா?
அதற்கு நபிﷺஅவர்கள் சொன்னார்கள்;என்றாலும் ஜிஹாதில் சிறந்தது,அழகானது ஹஜ் ஆகும் ஹஜ் மப்ரூர் ஆகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:ரஸுல்ﷺ.அவர்களிடம் இதனை கேட்டதற்கு பிறகு நான் ஹஜ்ஜை தவறவிட்டதே இல்லை.(நூல்;புகாரி)
ஹஜ் சிறந்த ஜிஹாத்.
”یَا رَسُولَ اللہِ! نَرَی الجِھَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاھِدُ؟ قَالَ: ”لاَ، لَکِنَّ أَفْضَلَ الجِھَادِ حَجٌّ مَبْرُورٌ“․ (بخاری شریف، حدیث:۱۵۲۰، السنن الکبری للبیہقی، حدیث:۱۷۸۰۵)
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரேﷺ!ஜிஹாதை சிறந்த அமலாக நாங்கள் கருதுகிறோம்.நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா? என்று நான் கேட்டேன்.
அதற்கு நபிﷺஅவர்கள் சொன்னார்கள்;இல்லை,என்றாலும் ஜிஹாதில் சிறந்தது ஹஜ் மப்ரூர் ஆகும்.(நூல்;புகாரி)
ஏழ்மையை விரட்டும், பாவங்களை போக்கும் ஹஜ்.
”أَدِیمُوا الْحَجَّ وَالْعُمْرَةَ، فَإِنَّھُمَا یَنْفِیَانِ الْفَقْرَ وَالذَّنُوبَ کَمَا یَنْفِی الْکِیرُ خَبَثَ الْحَدِیدِ“․ (المعجم الاوسط، حدیث:۳۸۱۴)
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கூறினார்கள்: " ஹஜ்ஜையும்,உம்ராவையும் நிறைவேற்றுங்கள், ஏனென்றால் அவை வறுமையையும்,பாவங்களையும் போக்கும் உலை இரும்பிலிருந்து துருவை போக்குவதை போல. "
”تَابِعُوا بَیْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّھُمَا یَنْفِیَانِ الفَقْرَ وَالذُّنُوبَ کَمَا یَنْفِی الکِیرُ خَبَثَ الحَدِیدِ، وَالذَّھَبِ، وَالفِضَّةِ، وَلَیْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ“․ (ترمذی شریف، حدیث نمبر: ۸۱۰)
அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஹஜ்ஜையும்,உம்ராவையும் தொடர்ந்து செய்யுங்கள் ஏனென்றால் அவை வறுமை மற்றும் பாவங்களை போக்குகின்றன, உலை தங்கம்,வெள்ளி,இரும்பு இவற்றின் துருவை நீக்குவதைப் போல." (நூல்;திர்மிதீ
ஹஜ்ஜுக்காக செலவு செய்தின் சிறப்பு.
”النَّفَقَةُ فِی الْحَجِّ کَالنَّفَقَةِ فِی سَبِیلِ اللہِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ“․ (مسند احمد، حدیث:۲۳۰۰۰، شعب الایمان، حدیث:۳۸۲۹)
அபூ ஜஹீர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்ﷺ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: “ஹஜ்ஜில் செலவு செய்வது அல்லாஹ்வின் பாதையில் எழுநூறு மடங்கு செலவு செய்வதை போன்றதாகும் . . " (முஸ்னத் அஹ்மத்,ஷுஅபுல் ஈமான்)
ஹாஜிகளின் துஆ.
”الْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللہِ تَعَالَی یُعْطِیھِمْ مَسْأَلَتَھُمْ، وَیَسْتَجِیبُ دُعَاء َھُمْ، وَیَقْبَلُ شَفَاعَتَھُمْ، وَیُضَاعِفُ لَھُمْ أَلْفَ أَلْفَ ضِعْفٍ“․ (اخبار مکة للفاکہی، حدیث:۹۰۲)
இப்னு உமர் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஹாஜியும்,உம்ரா செய்பவரும் அல்லாஹுவின் படையினர்.
அவர்கள் கேட்பது கொடுக்கப்படும்,அவர்களின் துஆ ஒப்புக்கொள்ளப்படும்,அவர்களுக்கு ஆயிரமாயிரம் மடங்கு நன்மை இரட்டிப்பாக்கப்படும்."
”الْغَازِی فِی سَبِیلِ اللہِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللہِ، دَعَاھُمْ، فَأَجَابُوہُ، وَسَأَلُوہُ، فَأَعْطَاھُمْ“․ (ابن ماجہ، حدیث:۲۸۹۳)
ஹழ்ரத் இப்னு உமர் (ரலி)அவர்களின் அறிவிப்பு:
நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள் "ஹாஜியும்,உம்ரா செய்பவரும் அல்லாஹுவின் படையினர்.
அவர்கள் துஆ செய்தால் அதற்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் கேட்டால் அதனை நான் கொடுக்கிறேன் " (இப்னு மாஜா)
ஹஜ்ஜை விரைந்து செய்தல்.
”تَعَجَّلُوا إِلَی الْحَجِّ - یَعْنِی: الْفَرِیضَةَ - فَإِنَّ أَحَدَکُمْ لَا یَدْرِی مَا یَعْرِضُ لَہُ“․ (مسنداحمد، حدیث:۲۸۶۷)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுவின் தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள், " ஹஜ்ஜுக்கு விரைந்து செல்லுங்கள் - அதாவது, கடமையான ஹஜ் - உங்களுக்கு என்ன வழங்கப்படும் என்பதை உங்களில் ஒருவரும் அறியமாட்டீர்கள் . " (முஸ்னத் அஹ்மத்)
ஹஜ் செய்யாதவர்களின் கவனத்திற்கு..
”مَنْ مَلَکَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُہُ إِلَی بَیْتِ اللہِ وَلَمْ یَحُجَّ فَلَا عَلَیْہِ أَنْ یَمُوتَ یَھُودِیًّا، أَوْ نَصْرَانِیًّا، وَذَلِکَ أَنَّ اللہَ یَقُولُ فِی کِتَابِہِ: ”وَلِلہِ عَلَی النَّاسِ حِجُّ البَیْتِ مَنْ اسْتَطَاعَ إِلَیْہِ سَبِیلًا“․ (آل عمران:۹۷) (ترمذی شریف، حدیث نمبر:۸۱۲)
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:
" எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளைஅல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜைநிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லதுகிருஸ்துவனாக மரணிக்கட்டும்.
”لَقَدْ ھَمَمْتُ أَنْ أَبْعَثَ رَجُلًا إِلَی ھَذِہِ الْأَمْصَارِ، فَلْیَنْظُرُوا إِلَی کُلِّ رَجُلٍ ذِی جَدَةٍ لَمْ یَحُجَّ، فَیَضْرِبُوا عَلَیْھِمُ الْجِزْیَةَ، مَا ھُمْ مُسْلِمِینَ، مَا ھُمْ مُسْلِمِینَ“․ (السنة لابی بکر بن الخلال۵/۴۴)
ஹழ்ரத் உமர் இப்னுல்-கத்தாப், (ரலி) கூறினார்கள்: "நான் இந்த ஊர்களுக்கு ஒரு மனிதனை அனுப்ப முடிவு செய்திருக்கிறேன், அவர் ஹஜ்ஜி செய்ய வசதிப்பெற்றும் ஹஜ் செய்யாத நபர்களை கணக்கெடுத்து,அவர்களின் மீது ஜிஸ்யா வரி விதிக்கட்டும்.(ஏனென்றால்)அவர்கள் முஸ்லிம்களே இல்லை,அவர்கள் முஸ்லிம்களே இல்லை.
ஹஜ்ஜின் நன்மைகள்,வெகுமதிகள் குறித்து சொல்லப்பட்டுள்ள பல்வேறு ஹதீஸ்கள்,எந்த ஒரு முஸ்லிமும் ஹஜ்,உம்ரா செய்ய ஆர்வம்க்கொள்வதற்கு போதுமனவையாகும்.
எவர் ஹஜ் செய்ய போதுமான பொருளாதாரமும்,உடல் திடகாத்திரமும் பெற்றிருக்கின்றாறோ அவர் ஹஜ்ஜின் வெகுமதிகளை அறிந்து அதனை இழக்க விரும்பமாட்டார்.
நம் அனைவருக்குமே நன்மைகளை சேர்ப்பதும்,பாவ மன்னிப்பும் மிக முக்கியத் தேவையாகும்.
இவ்வுலக வாழ்விற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது,வாழும் காலங்கள் அல்லாஹுவின் வெகுமதிகளாகும்,கழிந்தப் பொழுதுகள் திரும்பவருப்போவதில்லை.
பிறகு ஏன் ஹஜ் செய்ய தாமதிக்க வேண்டும்.
லப்பைக்...
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புனித கஃபாவை கட்டும் பணியை நிறை செய்த பிறகு அல்லாஹ் அதன் பால் மக்கள் வர அழைப்புக் கொடுக்க சொன்னான். அப்போது இப்ராஹீம் (அலை) எவ்வாறு என் சப்தம் எல்லோருக்கும் கேட்கும் என்றார்கள். உடனே அல்லாஹ் சப்தத்தை சேர்த்து வைப்பது என் வேலை என்று சொல்ல... இப்ராஹீம் (அலை) அழைப்பு கொடுத்தார்கள். அவர் சொன்னதை உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் கேட்டனர். இதையே அல்லாஹ் திருமறையில்....
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
ஹஜ்ஜூடைய பயணத்தின் போது நாம் சொல்லும் "லப்பைக்" என்ற வார்த்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் அழைத்த அழைப்புக்கு பதில் கொடுப்பது போல் அமைந்துள்ளது.
தக்வா எனும் இறையச்சம் அவசியம்.
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
ஹஜ் செய்வதால் கிடைக்கும் பாக்கியங்கள்...
1) அல்லாஹ்வை வணங்க ஏற்படுத்திய முதல் ஆலயமான கஃபாவை பார்க்கும் பாக்கியமும், அங்கே தொழுகும் பாக்கியமும், தவாஃப் செய்யும் பாக்கியமும் கிடைக்கிறது.
2) இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாகத்தை நினைத்து பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது.
3) பச்சிளம் குழந்தை அழுததால் ஸ்பா , மர்வா விற்கு மத்தியில் ஹாஜரா அம்மையார் ஒடிய தியாகத்தை "சயீ" எனும் அமல் நினைவுப்படுத்துகிறது.
4) பச்சிளம் குழந்தையின் காலின் பரக்கத்தால் கிடைத்த ஜம் ஜம் நீரை தினமும் அருந்தும் பாக்கியம் கிடைக்கிறது.
5) சுவர்க்கத்தின் கல்லான ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் பாக்கியம் கிடைக்கிறது.
6) இப்ராஹீம் (அலை) நின்று கட்டிய அவர்கள் காலடி சுவடுகள் பட்ட மகாமே இப்ராஹீம் என்ற இடத்தை பார்க்கும் பாக்கியமும், அங்கே தவாப் முடித்து தொழும் பாக்கியமும் கிடைக்கப்பெறுகிறது.
இன்னும் மக்காவிலும், மதீனாவிலும் எண்ணற்ற அடையாளச் சின்னங்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது.
பத்லீ ஹஜ்....
ஒருவருக்கு வசதி ஏற்ப்பட்டு அவரால் முதுமையினாலோ, உடல் நலக்குறைவினாலோ ஹஜ் செய்ய முடியாவிட்டால், அவருக்கு பகரமாக வேறொருவர் பத்லீ ஹஜ் செய்யலாம்.ஆனால் இது நோன்பிலோ, தொழுகையிலோ முடியாது.
இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள். ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள்: யா ரசூலல்லாஹ் என் தந்தை வயோதிகம் பெற்று விட்டதால் அவர் வாகனத்தில் கூட அமர முடியாது. எனவே அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றார்கள்.
ஹாஜி என்பது பட்டமா?
ஒருவர் அரபா மைதானத்தில் தன் கடமைகளை நிறை வேற்றும் போது அவரின் ஹஜ் பூர்த்தியாகிறது..
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் என்றால் என்ன? என்று கேட்கும் போது அரபா தான் ஹஜ் என்றார்கள். ஹஜ் முடித்தவர் அன்று பிறந்த பாலகனை போல் எந்த பாவமும் செய்யாதவர் போல் மாறி விடுகிறார்.
ஹஜ் என்பது மற்ற ஏனைய கடமைகளை போல் ஒரு கடமை. ஆனால் ஹஜ்ஜை இன்று ஒரு பிக்னிக் கைப் போல் மாற்றி விட்டார்கள். ஹஜ்ஜுக்காக புறப்படும் போதும், திரும்பி வரும்போதும் எத்தனை தடல் புடலான ஆடம்பர செலவுகள்,இஸ்ராஃப் வீண் விரயம் செய்கிறார்கள்.
போகும் போது நமக்காக மற்றவர்கள் துஆச் செய்வதும், அங்கே சென்று மற்றவர்களுக்காக நாம் துஆச் செய்வது தான் வரைமுறை. வீட்டிற்கு செல்லும் முன் கேட்கப்படும் துஆ ஏற்கப்படுகிறது.
தன் பெயருக்கு பின்னாலோ, முன்னாலோ,, "ஹாஜி " எனப் போடாவிட்டால் கோபித்துக் கொள்கிறார்கள்.. தொழ வருபவர்களுக்கு " தொழுகையாளி" என்ற வார்த்தை யை உடன் சேர்த்து சொன்னால் எவ்வளவு கேலி கூத்தாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.ஆனால் இதை ஒரு கவுரவ பட்டமாக பலரும் நினைத்துள்ளார்கள். அல்லாஹ் நம் சமுதாயத்தை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்விற்காக மட்டும் ஹஜ் செய்யும் எண்ணத்தை நம் அனைவருக்கும் தர வேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைருக்கும் துரிதமாக ஹஜ் செய்யும் வாய்ப்பையும்,நம் ஹஜ்ஜை ஹஜ் மப்ரூராகவும்,அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களை தரிசிக்கும் பாக்கியத்தையும் நல்கிடுவானாக!ஆமீன்...
வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment