ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும், சிறப்புகளும்.
ஷஃபான் இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமாகும்.சிறப்புகள் பொருந்திய இம் மாதத்தை கண்மணி நாயகம் ﷺஅவர்கள் தம் மாதம் எனக் கூறி இம்மாதத்தை சிறப்பித்துள்ளார்கள்.
شَعْبَانُ شَھْرِیْ وَ رَمَضَانُ شَھْرُ اللّٰہِ ஷஃபான்,என்னுடைய மாதம்.ரமலான் அல்லாஹ்வின் மாதமாகும்.
இம்மாதங்களில் சிறப்புகளை உம்மத்திற்கு உணர்த்துவதற்காக கண்மணி நாயகம் ﷺஅவர்கள், ரஜப் பிறை பார்த்ததிலிருந்து துஆ செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
اَللّٰھُمَّ بَارِکْ لَنَا فِیْ رَجَبٍ وَ شَعْبَانَ وَبَلِّغْنَارَمَضَانَ۔
(مشکوۃ المصابیح:رقم الحدیث 1396)
கஃபா கிப்லாவாக மாற்றப்பட்ட மாதம்..
#இம்மாதத்தில்தான் நாயகம் ﷺஅவர்களிள் புனித கஃபாவை நோக்கி மீண்டும் தொழ வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையும்,கோரிக்கையும் நிறைவேறியது.
அல்லாஹ் பகரா சூராவில்...
قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.(அல்குர்ஆன் : 2:144)
கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கஃபாவை நோக்கி தொழவேண்டும் என்ற இந்த ஆயத்தை அல்லாஹ் இம்மாதத்தில் தான் இறக்கிவைத்தான் .
#தயம்மம் சம்பந்தமான சட்டங்கள் கடமையானதும்...
#இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் போர்களில் ஒன்றான بنو المصطلق பனு முஸ்தலிக் போர் நிகழ்ந்ததும்.
#கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அன்னை ஹஃப்ஸா,அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா)இருவரையும் நிகாஹ் செய்து கொண்டதும்.
மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தும் ஷஃபான் மாதத்தில் தான் நடைபெற்றிருக்கின்றன.
இஸ்லாமிய வருடத்தின் எட்டாவது மாதமான ஷஃபான்,رحمتஅருள் வளங்களையும்,برکتபரகத்களையும்,سعادتபாக்கியங்களையும் பொதிந்துள்ள சிறப்பு வாய்ந்த மாதமாகும்.இதனை ரமலான் மாதத்தின் முன்னோடி என்றும்,வரவேற்பு என்றும்,தயாரிப்பு என்றும் சொல்லலாம்.
ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும் சிறப்பும்.
இம்மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.இதனை ரமலான் மாதத்தின் தயாரிப்பு என ஆர்வமூட்டியுள்ளார்கள்.
ஹழ்ரத் ஸல்மான் பார்ஸி(ரலி)அவர்களின் அறிவிப்பு;
خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: يا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ مُبَارَكٌ (صحیح ابن خزیمہ)
நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான் மாத இறுதி நாளில் எங்களுக்கு பிரசங்கம் செய்தார்கள் "மக்களே!உங்களை நோக்கி மகத்துவமிக்க பரக்கத் பொருந்திய ஒரு மாதம் (ரமலான்) வரவிருக்கின்றது"என்று கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு குஸைமா)
ஷஃபான் மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் அதிகம் நோன்பு நோற்பார்கள்.
:اَحَبُّ الشَّھْرِ اِلٰی رَسُوْلِ اللّٰہ ۖ اَن یَّصُوْمُ شَعْبَانَ یَصِلُہ بِرَمَضَانَ
(کنزالعمال رقم الحدیث ٢٦٥٨٦)
அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதம் ஷாபான், ரமலான் வரை தொடர்ந்து நோன்பு இருப்பார்கள்.
مَارَاَیْتُ رَسُوْلَ اللّٰہِ ۖ یَصُوْمُ شَھْرَیْنِ مُتَتَابِعَیْنِ اِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ
(ترمذی شریف۱/۱۵۵)
அன்னை உம்மு ஸலமா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான்,ரமலான் இரு மாதங்கள் தவிர தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை.
அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’
(ஸஹீஹ் புகாரி:1969 அத்தியாயம் : 30. நோன்பு)
அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(ஸஹீஹ் புகாரி:1970 அத்தியாயம் : 30. நோன்பு)
ஷஃபான் மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஷபே பராஅத் இரவு.
இந்த மாதத்தின் 15ஆம் நாள் இரவை ஷபே பராஅத் இரவு என்று சொல்லப்படும்,இவ்விரவில் அல்லாஹ்வின் مغفرت பாவ மன்னிப்பும், ரஹ்மத்தும் இறங்குகின்றது என்று சஹாபாக்கள்,தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கான மூன்று காரணங்கள்.
1)ரமலானை கண்ணியப்படுத்துவது, ரமலானுக்கான முன் தயாரிப்பு.
இம்மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்துவதற்காகவும்,ரமலானின் முன் தயாரிப்பிற்காகவும் அதிகம் நோன்பு நோற்றார்கள்.
ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கம்,ரமலானின் பிரத்யேக انوارஆத்மஒளியும்,برکاتபரகாத்துகளும் கிடைக்கப்பெறும்.அவற்றை அதிகம் பெற்றுக்கொள்ள ஷஃபானிலே அதிகம் நஃபிலான நோன்புகளை நோற்கக்கட்டளையிட்டார்கள்.
ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்னால் நஃபிலான தொழுகைகளை தொழுவதைப் போல ரமலானுக்கு முன் ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்க சொன்னார்கள்.
اَیُّ الصَّوْمِ افضَلُ بَعْدَ رَمَضَانَ قالَ شعبانُ لِتَعْظِیْمِ رمضَانَ" (ترمذی شریف ١/١٤٤)
ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது"ரமலானுக்கு பின் எந்த நோன்பு மிகச்சிறப்பானது?"
அதற்கவர்கள்"ரமலானை சங்கை செய்வதன் காரணமாக ஷஃபான்"எனறு கூறினார்கள்.
2)ஷஃபான் மாதத்தில்அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
شَعْبَانُ بَیْنَ رَجَبٍ وَ شَھْرِ رَمَضَانَ یَغْفُلُ النَّاسُ عَنْہُ یُرْفَعُ فِیْہِ اَعْمَال فَاُحِبُّ اَنْ لَّا یُ"شعبان(شعب الایمان،رقم الحدیث ۳۸۲۰)
நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;ரஜப்,ரமலான் மாதத்தின் மத்தியிலுள்ள ஷாபான் மாதம்,அது பற்றி மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள்.அதில் தான் அமல்களை (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகிறது.அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் நான் அதிகம் நோன்பாளியாக இருப்பதற்கு பிரியப்படுகிறேன்.
حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ . قَالَ “ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ” .
سنن النسائي – الصيام (2357). مسند أحمد – مسند الأنصار رضي الله عنهم (5/201)
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.
இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
(நூல் : நஸாஈ 2357, முஸ்னத் அஹ்மத் (5/201)
3)மலகுல் மவ்திடம் மரணிப்போரின் பட்டியலை ஒப்படைக்கப்படுகிறது.
اِنَّ اللّٰہَ یَکْتُبُ فِیْہِ مَیْتَةً تَہْلِکُ السَّنَةَ وَاُحِبُّ اَنْ یَّأْتِیَنِیْ اَجَلِیْ وَاَنَا صَائِم ۔ (مسند ابو یعلی، رقم الحدیث ٤٩١١)
நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹ் இவ்வருடம் மரணிப்போரின் பட்டியலை இதிலே எழுதுகிறான்.
எனதுப்பெயர் மரணிப்போரின் பட்டியலில் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நான் நோன்பாளியாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்.
அல்லாஹுத்தஆலா ஷஃபான் மாத நன்மைகளையும்,பரகத்துகளையும் நமக்கு வழங்கி,ரமலான் மாத நோன்பை முழுமையாக நோற்கும் பாக்கியத்தை வாழங்கிடுவானாக!ஆமீன்...
1 comment:
Post a Comment