ஈமானை பாதுகாப்போம்.
உலகெங்கிலும் குழப்பங்களும் சூழ்ச்சி வலைப்பின்னல்களும் நிறைந்த இக்காட்டான ஓர் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.-
عن أنس بن مالك، عن رسول الله صلى الله عليه وسلم قال: «تكون بين يدي الساعة فتن كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع أقوام دينهم بعرض من الدنيا» أخرجه الترمذي (2197)
"கியாமத் நாள் சமீபத்தில் இருள் சூழ்ந்த இரவின் பகுதியைப் போல் பல குழப்பங்கள் ஏற்படும். அப்போது காலையில் முஃமினாக இருந்தவர் மாலையில் காஃபிராகிவிடுவான்.மாலையில் முஃமினானாக இருந்தவர் காலையில் காஃபிர் ஆகிவிடுவான்" என்று நபி ﷺஅவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்;அனஸ் இப்னு மாலிக்(ரலி)அவர்கள். (நூல் ;திர்மிதீ)
இஸ்லாத்திற்கெதிரான யூத, நஸராக்களின் சூழ்ச்சிக்களில் ஒன்று, இஸ்லாத்திற்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு விஷமபிரச்சாரங்களை செய்து இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டாக்குவதும்,இஸ்லாமிய நாடுகளில் போர்தொடுத்து இஸ்லாமியர்களை அழிக்கும் வேலையை செய்வதுமாகும்.
மற்றொன்று, இஸ்லாத்திற்கு உள்ளே ஈமானை பறிக்கும் குழப்பங்களில் இஸ்லாமியர்களை சிக்கவைப்பதற்காக புதிய பிரிவுகளையும்,வழிகெட்ட கொள்கைகளையும் தோற்றுவிப்பது இன்று நேற்றல்ல நாயகம் ﷺஅவர்களின் காலந்தொட்டே தொடர்கின்றன.
நபி ﷺஅவர்களின் காலத்தில் இறுதிநபித்துவத்திற்கெதிராக முஸைலம துப்னு கத்தாப் போன்றவர்கள் தம்மை நபி என வாத்திட்டனர்,நபிﷺ காலத்திற்கு பின்னால் முதலாவதாக ஹவாரிஜ்கள், அதன் பின்னர் ராபிழாக்கள் எனப்படும் ஷீஆக்கள், பின்னர் அலி (ரழி) அவர்களைக் குறைகாணும் ‘நவாஸிப்கள்’, அதன் பின்னர் ‘கத்ரிய்யா’, ஜப்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, ஆகிய பிரிவுகள், குறிப்பிடதக்கவைகளாகும்.
இன்று உலக அளவில் முஸ்லிம்களின் ஈமானை பறிப்பதற்காக இஸ்லாமிய எதிரிகள் உற்பத்தி செய்து முஸ்லீம்களுக்கிடையில் நடமாட விட்டிருக்கும் மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்கும் காதியானிகள்,
ரஷாத் கலிஃபா என்பவனை இறைதூதராக ஏற்று திருக்குர்ஆனில் இரண்டு வசனங்களை மறுத்து புனித ஹதீஸ்களை சாத்தானின் கூற்றுகள் என இழிவு படுத்தும் சப்மிட்டர்ஸ் எனும் 19 குரூப்பினர்,
ஷகீல் பின் ஹனிஃப் என்பவனை ஈஸாவாக,மஹ்தியாக ஏற்கும் ஷகீலிகள்,இஸ்லாமியர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவருகின்றனர்.
இம்மூன்று பிரிவினரும் இஸ்லாமை விட்டு நீங்கியவர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி,மக்கா முகர்ரமாவில் "அர் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி"உட்பட அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெளிவாக அறிவித்துவிட்டன.
யார் இவர்கள்...
காதியானிகள்...
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம் சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும்.இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். காதியானி என்பது ஒரு தனி மதமாகும்.
ஆனால் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு.
காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலகம் ஒன்று இஸ்ரேலில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இறுதி நபியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட முஹம்மது ﷺ அவர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகிய அஹ்மது என்ற பெயரைக் கொண்டு தங்களை ‘அஹ்மதிகள்’ என அழைப்பது மக்களை ஏமாற்ற ‘காதியானிகள்’ செய்யும் ஒரு தந்திரமாகும்.
காதியான் எனும் ஊரிலே பிறந்து, தான் நபி என்று பிதற்றிய மிர்ஸா குலாம் அஹ்மது எனும் தஜ்ஜால்களில் ஒருவனை பின்பற்றுபவர்களே காதியானிகள்.
மிர்ஸாவின் வழிகெட்ட கொள்கைகள்:
1. மிர்ஸா தன்னை நபி என்று வாதிட்டார்.
2. ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார், என்று தெளிவுபடுத்தும் குர்ஆனுடைய கூற்றை மறுக்கிறார்.
3. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் வானத்தின்பால் உயர்த்தப்பட்டதையும் உலக முடிவு நாளின் நெருக்கத்தில் உலகிற்கு வருவார்கள், என்பதையும் மறுக்கிறார்.
4. மர்யம் (அலை) அவர்களையும் ஈஸா (அலை) அவர்களையும் விகாரமான தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்.
5. ஈஸா (அலை) அவர்களின் முஃஜிஸா எனும் அற்புதங்களை மறுக்கிறார்.
6. நபி ﷺஅவர்களின் ஹதீஸ்களைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகிறார்.
7. ஜிஹாது கியாம நாள் வரை நடக்கும், الجهاد ماض الى يوم القيامةஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், மிர்ஸா, ஜிஹாதின் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. இனி ஜிஹாது என்பதே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாது செய்வது ஹராம் என்று குறிப்பிட்டார்.
8. தன்னை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை காஃபிர்கள் என்றும் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் என்றும் ஏசுகிறார்.
ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?
{وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ (6) وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (7)61
இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்த போது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். (திருக்குர்ஆன் 61:6,7)
இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.
நபிகள் நாயகத்தின் பெயர் "முஹம்மத்' தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் "முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.
3532 - حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ "
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல் : புகாரி 3352)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.
மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.
ஒருவனது பெயர் அப்துல்லாஹ் என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்ற சொல் உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்?
ஒரு வாதத்திற்கு....
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?
ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?
முதல்வரும் 18-வது வார்டு உறுப்பினரும் வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும், இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.
இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது.
"அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. "அவர் இனி மேல் வரும் போது சூனியம் எனக் கூறுவார்கள்'' என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். "அவர் வந்த போது'' என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது.
"அவர் வந்த போது'' "கூறினார்கள்'' என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் "அவர் வந்த போது'' எனக் கூறியிருக்க முடியும்.
இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் "அவர் வரும் போது'' "சூன்யம் எனக் கூறுவார்கள்'' என்று வசனம் அமைந்திருக்கும்.
"அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்'' என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.
இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) அல்ல.
பொய்யான ஆதாரம்...
இவ்வசனம் தன்னைத் தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?'' என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனத்தில் "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.
மிர்ஸாவின் மரணம்..
1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானார். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினார். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மே மாதம் 26ம்நாள் மரணமடைந்தார்.மிர்ஜா குலாம் கழிப்பறையில் காலமானார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட நபரை ஒரு கூட்டம் பின்பற்றுகின்றனர் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
அவருடைய மரணத்துடன் இந்த இயக்கம் முடிவுறவில்லை. அதன்பின்னும் இறுதி நபியும்.நபி ஈஸா (அலை) என்றும். மஹ்தி (அலை) என்றும் என்ற தொடரும் தொடர்ந்து கொண்டிருப்பதே இது பொய்யான கொள்கை என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.
இப்படிப் பட்ட கொள்கையுடைய ஒரு நபரும் அவரை ஏற்றுக்கொள்பவர்களும் தங்களை அஹ்மதிய்யா முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர், காஃபிர்கள், என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
சப்மிட்டர்ஸ் எனும் 19 குருப்பினர்.
பத்தொன்பதின் 19 -பின்னனி.
கொலையுண்ட ரஷாத் கலீஃபா..
கசப்பான உண்மை .
ரஷாத் கலீஃபாவின் (Final Testament) இறுதி ஏற்பாடு.
(நன்றி:ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் "ஹதீஸை மறுப்பவர்கள் காஃபிர்களே!யார் இந்த இந்த ரஷாத் கலீஃபா என்ற நூலிலிருந்து..)
ஷகீலிகள்...
ஷகீல் பின் ஹனிஃப் என்பவனை ஈஸாவாக,மஹ்தியாக ஏற்பவர்கள் ஷகீலிகள் ஆவார்கள்.ஷகீல் பின் ஹனிஃப் என்பவன் நவீனகால பெரும் குழப்பவாதியாவான்.
யார் இவன்.......
இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் உள்ள உஸ்மான் பூரைச் சேர்ந்த ஹனீஃப் என்பவரின் மகனாகிய ஷகில் என்பவன் சுமார் 12 வருடங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள இலட்சுமி நகரில் தாம் இமாம் மஹதி என்பதாகவும்,கியாமத்திற்கு நெருக்கத்தில் வரவிருக்கும் ஈஸா (அலைஹி)என்பதாகவும் வாதிட்டான்.
இவன் தன்னை மஹ்தியாகவும்,ஈஸா (அலைஹி)ஆகவும் நிறுவுவதற்கு சில குர்ஆன் ஆயத்துக்கள்,ஹதீஸ்களை மாற்றியும்,திரித்தும் உளறி வந்தான்.
துவக்கத்தில் இவன் டெல்லியில் கல்வி கற்ற இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்தான்.அவர்களிடம் இவனின் சித்து வேலைகள் பலிக்காததால் டெல்லியின் பாமர,எளிய ஏழை இஸ்லாமிய இளைஞர்களை ஏமாற்றி தன் ஆதரவாளர்களாக ஆக்கினான்.
ஆனால் சில நாட்களிலேயே இவனின் வழிகெட்ட கொள்கையை புரிந்து கொண்ட ரோஷமுள்ள இஸ்லாமியர்கள் இவனுக்கு நெருக்கடி கொடுத்து டெல்லியை விட்டே விரட்டி விட்டனர். அங்கிருந்து சென்றவன் மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியேறினான்.அங்கே அவன் கணிசமான மக்களை முர்தத்துகளாக மாற்றிவிட்டான்.
ஷகீலிகளின் வழிகெட்ட கொள்கைகள்:
1)தஜ்ஜால் வந்து விட்டான்,அவன் வேறு யாருமில்லை,அமெரிக்கா ஃபிரான்ஸ் இவ்விரு நாடுகள் தாம் தஜ்ஜால் ஆகும்.
அதற்கு இவர்களின் ஆதாரம் தஜ்ஜால் தலையில் "காபிர்" என்று எழுதப்பட்டிருக்கும்.
இந்த இரு நாடுகளின் பெயர்களையும் அரபி மொழியில் சேர்த்து எழுதினால் (امریکا فرانس)
அமெரிக்காவின் கடைசியில் வரும் காஃப்,அலிஃப் மற்றும் ஃபிரான்ஸின் ஆரம்பத்தில் வரும் ஃபா,ரா இவற்றை சேர்த்து படித்தால் காஃபிர் என்று வருகிறதல்லவா அதனால் அமெரிக்கா,ஃபிரான்ஸ் இருநாடுகளும் தான் தஜ்ஜால்.
"தஜ்ஜால் ஒற்றை கண் உடையவன்" என்ற ஹதீஸுக்கு இவர்களின் விளக்கம் "சாட்டிலைட்.." ,
ஒரு அறிவிப்பில் "தஜ்ஜாலுடன் ஒரு கழுதை இருக்கும்" என்பதன் விளக்கம் "போர் விமானம்" என்றும், இதைப் போன்ற வேறு சில விஷயங்களையும் இவர்கள் சொல்கிறார்கள்.
2)தஜ்ஜால் வந்துவிட்டதனால் மஹ்தியும்,ஈஸா(அலை)யும் வந்துவிட்டார்கள்,அவரே ஷகீல் இப்னு ஹனீஃப் ஆவார்.(ماہ نامہ دارالعلوم :مارچ2016)
ஷகீல் பின் ஹனீஃப் என்பவன் இமாம் மஹ்தியாக,ஈஸா(அலை)ஆக இருக்க தகுதியற்றவன் என்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் பின்வருமாறு...
ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள கியாமத்திற்கு நெருக்கத்தில் வரவிருக்கும் இமாம் மஹ்தி(ரலி)அவர்களின் அடையாளங்கள்.
1)இமாம் மஹ்தி (ரலி) அவர்களின் பெயர் "முஹம்மது"(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)
2)இமாம் மஹ்தி (ரலி)அவர்களின் தந்தையின் பெயர் "அப்துல்லாஹ்"(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)
3)இமாம் மஹ்தி(ரலி)நபி ஸல் அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி)அவர்களின் வம்சத்தை சார்ந்தவராக இருப்பார்கள். (அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)
4)மக்கள் தன்னை கலீஃபாவாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்று அஞ்சி இமாம் மஹ்தி(ரலி)மதினாவிலிருந்து மக்காவிற்கு விரைந்து சென்று விடுவார்கள்.(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி
5)மக்களின் வலியுறுத்ததினால் இமாம் மஹ்தி(ரலி)அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் மேலும் மகாமே இப்ராஹீமிற்கு நடுவில் இருந்து கொண்டு பைஅத் பெறுவார்கள்.(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)
பொய்யன் ஷகீல் பின் ஹனீஃப்.
1)இவன் பெயர் "ஷகீல்" ஆகும்.
2)இவனுடைய தந்தையின் பெயர் "ஹனீஃப்"ஆகும்.தந்தையின்றி அதிசயப்பிறவியாக பிறக்கவில்லை.
3)"இன்றைய காலகட்டத்தில் வம்சாவளிக்கான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது"
என்று இவன் கூறுவதின் மூலம் தன்னுடைய வம்சம் என்னவென்று தெரியவில்லை என்பதை ஒப்புக்கொண்டான்.
4)இவன் வானத்திலிருந்து திமிஷ்கில் உள்ள வெள்ளை மினாராவின் மீது இறங்கி வந்தவன் அல்லன்.மாறாக ஹனீஃப் என்பவனுக்கு மகனாக பிறந்தவன்.
5)இவன் மக்கா, மதினாவை இதுவரை கண்டதில்லை.
5)இவன் தன்னை மஹ்தி என்பதாக டெல்லியிலுள்ள லஷ்மி நகரில் இருந்து அறிவிப்பு செய்து பொய்யான பைஅத்தை செய்து கொண்டு இருந்தான்.
6)இவன் "Android Phone"னை தஜ்ஜால் என்பதாக கூறுகிறான்.அப்படி பார்த்தால் இவனின் கூற்றுப்படி இவர்களே"Android Phone"னை பயன்படுத்துவதின் மூலம் நாங்கள் தஜ்ஜாலுடைய அணியை சேர்ந்தவர்கள் என்பதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
மேலே ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இமாம் மஹ்தி(ரலி)அவர்களின் அடையாளங்களில் ஒரு அடையாளம் கூட இவனுக்கு பொருந்தவில்லை என்றால் இவன் எவ்வாறு இமாம் மஹ்தியாக இருக்க முடியும்?இவன் மஹ்தியாக தன்னை வாதிடுவதில் மகா பொய்யன் என்பது நிரூபணமாகிறது.
ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள கியாமத்திற்கு நெருக்கத்தில் வரவிருக்கும் ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் அடையாளங்கள்.
1)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் பெயர் "ஈஸா".(சூரா ஆல இம்ரான்-45/சூரா மர்யம்-34)
2)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் தந்தையின்றி (அற்புதமாக)பிறந்தார்கள்.(சூரா மர்யம்-16 To 34)
3)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் கியாமத்திற்கு நெருக்கத்தில் வானத்திலிருந்து இறங்கி திமிஷ்கில் உள்ள வெள்ளை மினாராவை வந்தடைவார்கள்.(சூரா நிஸா-159/அபெதாவூத் பாபு குரூஜித் தஜ்ஜால்)
4)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் மூச்சுக்காற்று காஃபிர்களின் மீது பட்டால் இறந்துவிடுவார்கள்.அவர்களின் மூச்சுக்காற்று கண் எட்டும் தூரம் வரை வீசும்.(முஸ்லிம் பாபு திக்ருத் தஜ்ஜால்)
5)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்த பிறகு "பாபுல் லுத்" என்ற இடத்தில் தஜ்ஜாலை கொலை செய்வார்கள்.(அபூதாவூத் பாபு குரூஜித் தஜ்ஜால்
மேலே குறிப்பிட்டுள்ள ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்களின் அடையாளங்களில் ஒரு அடையாளம் கூட இவனுக்கு பொருந்தவில்லை.பிறகு இவன் எவ்வாறு ஈஸா(அலை)ஆக இருக்க முடியும்?இவன் தன்னை ஈஸா(அலை)ஆக வாதிடுவதில் மகா பொய்யன் என்பது நிரூபணமாகிறது.
எனவே ஷகீல் பின் ஹனீஃப் என்பவனை இமாம் மஹ்தியாகவும், ஈஸா(அலை)ஆகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் நீங்கிய *"முர்தத்"* கள் ஆவார்கள்.
ஷகீலிகளின் குழப்பங்கள், ஓர் அதிர்ச்சி ஆய்வறிக்கை.
புதுடெல்லி மில்லத் டைம்ஸ் பத்திரிக்கையின் ஓர் ஆய்வறிக்கை: ஷகீலிகளின் குழப்பங்கள், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுவரை இந்தியாவில் சுமார்(10,000) பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இவர்களின் குழப்பத்தில் சிக்குண்டு இஸ்லாத்தை விட்டும் வெளியேறி மூர்தத்துகளாக மாறி இருக்கின்றனர்.அவர்களில் 80 சதவிகிதம் பேர் தஃவத் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகீலி சூழ்ச்சிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் . தீஷான் அஹ்மது (பிரதிநிதி, இறுதி நபித்துவ பாதுகாப்புப் பேரவை,பாட்னா) அவர்கள் இது குறித்து மில்லத் டைம்ஸுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியதாவது: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல் பின் ஹனிஃப் தன்னை இமாம் மஹ்தி என்றும்,ஈஸா (அலை) என்றும் கூறிக்கொள்ளும் இவன் சமீப காலங்களில் ஔரங்கபாத்தை தனது தலைமையகமாக மாற்றிக்கொண்டான், மேலும் அங்கு அவனைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிந்துக்கொண்டவன். பல நகரங்களில், ஷகீல் பின் ஹனிஃப் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலீஃபாக்களை உருவாக்கிக்கொண்டான்.
இதுகுறித்து தீஷான் அஹ்மது அவர்கள் மேலும் கூறியதாவது: பீகார், பாட்னா, சீமாஞ்சல், சம்பரான் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 4 ஆயிரம் பேர் இவனின் சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல குடும்பங்கள் இவனின் குழப்பங்களில் சிக்கி முற்றிலும் முர்தத்துகளாக மாறிவிட்டன.
மத்தியப் பிரதேசத்தின் தலை நகர் போபால் அங்கும் ஷகீலிகள் மிகவும் வலுவடைந்துவருகின்றனர், இதுவரை 2500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு முர்தத்துகளாக மாறிவிட்டனர் , மூன்றாவது இடத்தில் உள்ள உ.பி. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல மாகாணங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முர்தத்துகளாக மாறியுள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் நாட்டிலும் ஷகீலிகள் தங்களின் மத பிரச்சாரத்தை துவங்கி இருக்கின்றனர்.சென்னை பல்லாவரம்,குரோம்பேட்டையில் ஷகீலிமதத்தினர் இஸ்லாமியர்களிடம் தங்களின் விஷமபிரச்சாரத்தை செய்துவருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஊடுருவி விட்ட "காதியானிகள்,"மற்றும் "சப்மிட்டர்ஸ் எனும் 19 குருப்பினர்,"இப்பொழுது புதிதாக முளைத்துள்ள "ஷகீலிகள்"இதுபோன்ற வழிகேடர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் தங்களின் ஈமானை பாதுகாப்பது தலையாயக் கடமை என்பதனை நம் சமுதாயம் உணர்ந்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருந்துக்கொண்டிருக்கின்றோம்.
ஈமானின் அந்தஸ்தென்ன?
மனிதன் சில சமயங்களில் சிறிய பாவங்களையும், சில சமயங்களில் பெரிய பாவங்களையும் செய்துவிடுகின்றான். மனிதன் எத்தகைய பெரிய பாவங்கள் செய்தாலும் உடனே அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு விட்டால் மன்னிக்கும் ஆற்றல் உடையவன் அல்லாஹ்.ஆனால் ஒருவன் ஈமான் கொண்ட பிறகு அதிலிருந்து விலகிச் என்றால் அது அவனது இம்மை, மறுமை வாழ்க்கை இரண்டையும் அழித்து நாசமாக்கிவிடும்.
அத்தகைய ஈமானை பறிப்பதற்காகத்தான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்த புதிய குழப்பவாதிகள் குழப்பம் செய்து வருகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இறை தூதர் வருகை இல்லை என்ற ஹதீஸை துச்சமென கருதி தன்னையே நபியென வாதிட்டு தன் பக்கம் மக்களை ஈர்க்க செய்து அவர்களின் ஈமானையே கேள்விக்குறியாக்கியுள்ளனர். இச்சமயத்தில் நம் ஈமானையும், நம்மை சார்ந்துள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் ஈமானையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் ஈமானின் மதிப்பை திருக்குர்ஆன் ஹிஜ்ர் சூரா ஆரம்பத்தில்..
رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். என கூறுகிறான்.
அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் ஈமானின் அந்தஸ்தை நாளை மறுமையில் தான் விளங்க முடியும். மறுமையில் கெட்ட செயல்களை செய்த முஸ்லிம்களையும், இறைவனை மறுத்து வாழ்ந்த காபிர்களையும் நரகத்திற்கு அனுப்பும் போது , காபிர்கள், முஸ்லிம்களை பார்த்து கேட்பார்களாம்... நாங்கள் தான் கலிமாவை ஏற்காமல் நரகம் வந்துள்ளோம், ஆனால் நீங்கள் கலிமாவை ஏற்றும் நரகம் வந்துள்ளீர்களே? உங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனும் போது...
அல்லாஹ் மலக்குகளை அழைத்து யாருடைய உள்ளத்திலே கடுகளவு ஈமான் உள்ளதோ அவர்கள் அனைவரையும் சுவனத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்வான்.
இது குறித்து ஒரு ஹதீஸில்...
மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்திலும், நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள் என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் நஹ்ருல் ஹயாத் எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் அல்லது வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அந்த வித்து (விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள். (ஆதாரம் : புகாரி)
அப்போது காபிர்கள் கைசேதப்பட்டு நாமும் ஈமானை ஏற்றிருந்தால் இன்று விடுதலை ஆகியிருப்போமே, இப்போது நிரந்தர நரகத்தை தேடிவிட்டோமே! என கையை பிசைந்து கொள்வார்கள். ஆக ஈமானின் பெருமதி நாம் மரணித்துவிட்ட பிறகு கப்ரிலும், மறுமையிலும் தான் தெரியும். எனவே அந்த ஈமானை பாதுகாக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
வல்ல அல்லாஹ்,நம் ஈமானை பாதுகாத்து,வாழ்ந்து,ஈமானோடு மரணிக்கும் நல்வாய்ப்பையும்,நாயகம்ﷺ அன்னவர்களின் ஷஃபாஅத்தை பெற்ற நன்மக்களாகவும் ஆக்கி அருள்ப்புரிவானாக!ஆமீன்...
No comments:
Post a Comment