குர்பானியின் முக்கியத்துவம்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (அல்குர்ஆன் : 108:2)
ஹஜ்ஜுடைய மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹஜ் பயணத்திற்கான தயாரிப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபக்கம் ஏனைய முஸ்லிம்கள் குர்பானி மற்றும் கூட்டுக் குர்பானி அமலை நிறைவேற்றுவதற்கான ஆர்வத்திலும்,ஆயத்தப் பணிகளிலும் இருந்து வருகிறார்கள்.
குர்பானி, பொருள் சார்ந்த வணக்கங்களில் முக்கியமானதும்,இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.
குர்பானி கொடுக்கும் பாரம்பரியம், ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகின்றது.
குர்ஆனில் மரியம் சூராவில் ஹஸ்ரத் ஆதம் (அலைஹி) அவர்களின் இரு மகன்களான ஹாபில் மற்றும் காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.
ஹாபில் ஒரு ஆட்டையும்,காபில் சில விளைச்சல் பொருட்களையும் குர்பானியாக முன்வைக்கின்றனர்.
ஹாபிலின் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டு,காபிலின் குர்பானி மறுக்கப்படுகிறது.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)
அக்காலத்தில் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பு வந்து குர்பானியை கரித்து செல்லும்.
اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.(அல்குர்ஆன் : 3:183)
குர்பானி என்கிற வணக்கம் எல்லா உம்மத்திலும் கடமையாக இருத்திருக்கின்றது.
குர்ஆனில்....
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:34)
முற்காலத்தில் குர்பானி என்பது தங்களின் அமல் கபூலானாதா? என்பதனை சோதித்துப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் நம் உம்மத்திற்கு உயர்ந்த, உன்னத தியாக வரலாற்றை நினைவு கூறும் ஓர் வணக்கமாக ஆக்கப்பட்டது.
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தங்களின் பாசத்திற்குரிய மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்களை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட தயாரானபோது, அல்லாஹ் சுவனத்தில் இருந்து ஓர் செம்மறிஆட்டை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து,கியாம நாள் வரை அவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு திருநாளாக இந்த உம்மத்திற்கு குர்பானியை ஒர் வணக்கமாக ஆக்கிவிட்டான்.
இதனையே குர்ஆனில்...
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(அல்குர்ஆன் : 37:102)
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; (அல்குர்ஆன் : 37:103)
وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.(அல்குர்ஆன் : 37:104)
قَدْ صَدَّقْتَ الرُّءْيَا اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 37:105)
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”(அல்குர்ஆன் : 37:106)
وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.(அல்குர்ஆன் : 37:107)
وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:(அல்குர்ஆன் : 37:108)
குர்பானியின் நோக்கம்.
لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)
குர்பானியை மனமுவந்து நிறைவேற்ற வேண்டும். மாறாக பிறர் புகழவேண்டும் என்பதற்காகவோ, அல்லது ஏதோ கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்திலோ, அல்லது மிக மெலிந்த பிராணியை குறைந்த விலைக்கு வாங்கியோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர் குர்பானி கொடுக்கிறார் எனவே நாமும் கொடுப்போம் என்று குர்பானி கொடுத்தாலோ, குர்பானி நிறைவேறாது எந்த நன்மையும் கிடைக்காது. எனவே மனமுவந்து இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும் . குர்பானி குர்பானியாக இருக்க வேண்டுமே தவிர குர்பானி பிர்யாணிக்காக இருக்கக் கூடாது.
இஸ்மாயீல் (அலை)அவர்களுக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கியதற்கும்,தங்களின் உயிருக்கு பகரமாக குர்பானியை ஆக்கியதற்கு நன்றிசெலுத்துவதே குர்பானியின் நோக்கமாகும்.
ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்?
உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் குர்பானி கொடுப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. அப்போது, இறைவனின் உத்தரவுக்கு இணங்க, நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது அருமை புதல்வரை ‘மினா’ எனும் இடத்தில் அறுத்துப் பலியிட முன் வந்தார்.
அவரின் இந்த மாசற்ற தியாகத்தை இறைவன் மெச்சும் வண்ணம் உருவானது தான் குர்பானி கொடுக்கும் வழக்கம். உலக முடிவு நாள் வரைக்கும் மக்கள் இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், முதன்முதலாக ஆட்டை அறுத்துப் பலியிட்ட அவரின் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் விதமாகவும் இந்த தியாகத்திருநாள் அமைந்திருக்கிறது.
ஒருமுறை நபிகளாரிடம் அவரது தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, இந்த தியாகப் பிராணிகளின் கலாசாரம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘இது உங்களின் தந்தை இப்ராகீம் (அலை) அவர்களின் கலாசார வழிமுறை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்.
ஈத் பெருநாளின் முக்கிய அமல்.
பராஉ(ரலி) கூறினார் :
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5560)
குர்பானி இஸ்லாத்தின் அடையாளச்சின்னம்.
ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய அடையாள சின்னங்கள் உண்டு. அவற்றை பாதுகாப்பதும்,மரியாதை செலுத்துவதும் அந்நாட்டினரின் கடமையாகும்.அதுபோல் இஸ்லாமும் சில அடையாளச் சின்னங்களை குர்ஆனில் கூறுகிறது.அவற்றில் குர்பானியும் ஒன்றாகும்.
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)
குர்பானி இறைவனுக்காக...
குர்பானி கொடுப்பது இறைவனின் கட்டளையாகும்.அறியாமைக் காலத்திலும் குர்பானி கொடுப்பதை வணக்கமாகக் கருதி வந்தார்கள். ஆனால் அவர்கள் பிராணிகளை சிலைகளுக்காக வதம் செய்வதை குர்பானியாக கருதி வந்தார்கள்.
இன்றும் கூட ஹிந்துக்களும்,இன்னும் பல்வேறு மதத்தவர்களும், அவர்களின் கடவுளர்களின் பெயரால் பிராணிகளை அறுத்து பலியிடுவதை வணக்கமாகக் கருதுகிறார்கள்.கிருத்துவர்களும் ஜீசஸ் பெயரால் அறுத்து பலியிடுவதை இன்றும் காணலாம்.
இஸ்லாம் தொழுகையும், குர்பானியையும் இறைவனுக்காக மாத்திரம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம்,திருத்தமாக வலியுறுத்துகிறது.
சூரா கவ்ஸரில்...
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
இதே கருத்துப்பட சூரா அன்ஆமிலும்..
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.(அல்குர்ஆன் : 6:162)
நாயகம் (ஸல்)அவர்களின் குர்பானி.
عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி,தக்பீர் (அல்லாஹ{ அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.(புஹாரி,முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸின் அடிப்படையில்....
1589- عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي.قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ.
நம்முடைய நபியவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள். ( திர்மிதி)
இந்த நபிமொழி யின் மூலம் நபியவர்கள் எந்த ஆண்டும் குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை எனக்கூறுகிறது. இவ்வாறு தொடர்ந்து வழமையாக நபி( ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்திருப்பது குர்பானியின் முக்கியத்துவத்தையும்,சிறப்பையும் உணர்த்துகிறது.
குர்பானி கொடுப்பவர், தம் கரங்களால் குர்பானிப் பிராணியை அறுப்பதே சிறப்பாகும்.
ஒரு ஹதீஸில் வருகிறது.
நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் கடைசி (ஹஜ்ஜத்துல் விதாஃ) ஹஜ்ஜின் போது நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள்.அவற்றில் எண்பது ஒட்டகங்களை தம் கரங்களால் அறுத்து பலியிட்டார்கள்.மீதமுள்ளவற்றை ஸய்யதுனா அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள்.
குர்பானி கொடுக்கவில்லை யானால்...
ما رواه أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).
மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில் (சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத் )
ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].
قال السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் “உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என்று கூறுகின்றார்கள்.
குர்பானி நாட்களில் சிறப்பான அமல்.
ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا ))
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஆதமுடைய மகன் நஹ்ருடைய நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும். (அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم
قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة ))
”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.
يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإن لك بكل قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك قالت يا رسول الله ألنا خاصة آل البيت أو لنا و للمسلمين قال بل لنا و للمسلمين )) حديث منكر .
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உள்ஹிய்யா தினத்தன்று அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை மகளாரிடம்
ஃபாத்திமாவே! எழுவீராக! உம்முடைய பிராணியிடத்தில் ஆஜராகுவீராக!
மேலும், நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்கு கீழ்ப்படிவோரில் முதன்மையானவன்” என்று நீர் கூறுவீராக!
ஏனெனில் குர்பானிப் பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.
மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் உரியதா? அல்லது எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள்.
அப்போது நபி {ஸல்} அவர்கள் ”இது முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்” என பதிலளித்தார்கள்.
يا أيها الناس ضحوا و احتسبوا بدمائها فإن الدم و إن وقع في الأرض فإنه يقع في حرز الله ))
“மக்களே! நன்மையை எதிர்பார்த்து உள்ஹிய்யா கொடுங்கள். ஏனெனில், உள்ஹிய்யா பிராணியின் உதிரம் இப்பூமியில் விழுமுன் அல்லாஹ்வின் சந்நிதானத்தின் முன் விழுந்துவிடுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم
”குர்பானிப் பிராணிகளில் மிகச் சிறப்பானதைக் கொடுங்கள். ஏனெனில் அது தான் மறுமையில் உங்களின் வாகனம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உயிருக்கு பகரமாகும் குர்பானி.
உலகில் எல்லா உம்மத்தினரும் அல்லாஹுவின் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ள குர்பானி கொடுத்துவந்தனர்.
ஜகாத் பொருளுக்கு பகரமாக தரப்படுவதை போல குர்பானி உயிருக்கு பகரமாகும்.
ஆதம்(அலை)அவர்களின் காலத்திலிருந்தே குர்பானி நடைமுறையில் இருந்தாலும்,
இப்ராஹீம்(அலை)அவர்கள் தம் மகனார் இஸ்மாயீல்(அலை)அவர்களை பலியிடத் தயாரன போது, அல்லாஹ் அவருக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கி வைத்ததிலிருந்தே இந்த அமல் உயிருக்கு பகரமாக ஆனது.
قال ابن عباس: هو الكبش الذي تقرب به هابيل، وكان في الجنة يرعى حتى فدى الله به
إسماعيل.
وعنه أيضا: أنه كبش أرسله الله من الجنة كان قد رعى في الجنة أربعين خريفا.
அல்லாஹ் ஹாபிலுடைய ஆட்டை ஏற்றுக் கொண்டான் அதை சொர்க்கத்தில் 40 வருடங்கள் பாதுகாத்தான் அந்த ஆட்டைத்தான் இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு பகரமாக பலியிட்டார்கள் - நூல் : (தப்ஸீர் - இப்னு கஸீர் ).
குர்பானியின் சட்டம்
குர்பானியாக ஆடு,மாடு,ஒட்கை இம்முன்றில் ஒன்றை தரவேண்டும்.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ
குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.(அல்குர்ஆன் : 22:34)
இவ்வசனத்தில் இடம் பெறும்”அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும்.
மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.
குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். அது குர்பானியாக ஏற்படாது.
நூல் : ஆலம்கீரி, குலாஸாபக்கம் – 332
குர்பானி நம் உயிருக்கு பகரமாக தரப்படுவதால் உயர்வான சிறந்த பிராணியை தரவேண்டும்.
குர்பானி பிராணி குறைகள் அற்றதாகவும்,வயது பூர்த்தியானதாகவும் இருக்கவேண்டும்.
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)நூல் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ
குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.
(நூல் : துர்ருல்முக்தார் , ஆலம்கீரி, பக்கம் – 330)
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.
பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் (திர்மிதீ 1532,)
குர்பானி உயர்ந்த நோக்கத்திற்காக தரப்படுவதால்,உளத்தூய்மை மிக அவசியமாகும்.
لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)
அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்கியும்,நம் குர்பானியை சிறந்ததாகவும் ஆக்கி வைப்பானாக!ஆமீன்...
No comments:
Post a Comment