Thursday, 1 April 2021

ஜும்ஆ பயான் 01/04/2021

    வாக்களிப்பீர்...

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌  وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌  وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا ‏

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்தும் அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:85)

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம். அள்ளி வீசப்படும் தேர்தல் வாக்குறுதிகள்.  மீடியாக்களின் தேர்தல் கணிப்புகள்  என தமிழ் நாட்டில் 16 வது சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது.இதில் மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட. இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமையாகும். ஓர் அந்நியனுக்கு அடிமையாக இருப்பதைவிட, நாம் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகப் பெற்றதே சுதந்திரம்.

இஸ்லாத்தின் பார்வையில்  வாக்களிப்பு

இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விரிவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8)

திருக்குர்ஆன் போதிக்கிற شهادة  (சாட்சியமளித்தல்) شفاعة (பரிந்துரைத்தல்) وكالة (ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது “இவர் இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர்” என்று சாட்சி (ஷஹாதத்) சொல்வதும். பரிந்துரைப்பதும் (ஷபாஅத்) ஆகும். அதுபோல் பொறுப்பை ஒப்படைப்பது (வகாலத்) துமாகும்.

எனவே தேசத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம். 

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً  

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறினான்(அல்குர்ஆன் : 2:30)

மனிதர்கள் ஒரு பத்துப்பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம்.

இஸ்லாம் வருவதற்கு முன்பு

உலகில்  "மன்னராட்சி" முறையே நடைமுறையில் இருந்து வந்தது.மன்னராட்சி முறை என்பது தனிமனிதனுக்கு (எதேச்சதிகாரம் )முழு அதிகாரத்தை வழங்கி, அவரின் ஆளுகைக்குட்பட்ட மக்கள் கிட்டத்தட்ட அவரின் அடிமைகளாக நடத்தப்படுவர்.

உலகில் சில மன்னர்கள் தங்களையே கடவுள் என்றும் தங்களையே வணங்கச் சொல்லியும் மக்களை நிர்பந்தப்படுத்தினர் என  வரலாறு கூறுகிறது.

இஸ்லாம் அறிமுகமானபோது தனிமனித வழிபாட்டு முறையை கலைந்து, ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பு விடுத்தது, அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதி செய்தது.

இதனையே நபி (ஸல்) அவர்கள் 

நஜ்ரான் வாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்கள். 

 فَانِّي أدْعُوْکُمْ الٰی عِبَادَةِ اللّٰہِ مِنْ عِبَادَةِ الْعِبَادِ وَأدْعُوْکُمْ الٰی وِلاَیَةِ اللّٰہِ مِنْ وِلاَیَةِ الْعِبَاد۔(البدایہ والنہایہ ۵/۶۴)

"அடியார்களை வழிபடுவதை விட்டும் அல்லாஹ்வை வணங்குவதை நோக்கியும், அடியானின் ஆட்சியை விட்டும் அல்லாஹ்வின் ஆட்சியை நோக்கியும் உங்களை நான் அழைக்கிறேன் "(பிதாயா வந்நிஹாயா)

இஸ்லாம், கிலாஃபத் ஆட்சி முறையை விரும்புகிறது.

இஸ்லாமிய கிலாஃபத் உண்மையான மக்களாட்சியாகவும் ,உலக ஆட்சியாளர்களில் கலீஃபாக்களே  நீதமான, நேர்மையான,நல்லாட்சியை வழங்கியவர்கள் என வரலாறு கூறுகிறது.

பல நூற்றாண்டுகள் இவ்வுலகில்  கிலாஃபத் எனும் இறையாட்சி மக்களுக்கு உணவு,மருத்துவம்,கல்வி, பொருளாதாரம்,மற்றும் பாதுகாப்பு போன்ற பல் துறைகளில் முன்மாதிரி ஆட்சியை வழங்கியது.நிகரில்லா ஆக சிறந்த ஆட்சி முறை கிலாஃபத், இன்று உலகில் உள்ள ஆட்சி முறைகள் அனைத்துமே ஏதோ ஒர் வகையில் கிலாஃபத் ஆட்சி முறையின் தழுவல்கள் தாம் என்று சொன்னால் அது மிகையாகாது குறிப்பாக ஜனநாயக ஆட்சி முறை.

சில தீய ஆட்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய விரோதிகளின் சூழ்ச்சியினால் கிலாஃபத் முடிவுக்கு வந்தது.

இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே நடைமுறையில் உள்ளன. ஏன் சில இஸ்லாமிய நாடுகளும் கூட மக்களாட்சி முறையையே பின்பற்றுகின்றன.         

மக்களாட்சியில் பல குறைகள் இருப்பதும் மறுப்பதற்கில்லை.மக்களாட்சி முறையில் மக்கள் வாக்களித்து ஆட்சியரை தேர்ந்தெடுப்பர்.அதுவும் நமது இந்திய நாட்டின் ஜனநாயக அடிப்படையில் நமக்கு மிஞ்சி இருக்கும் ஒரே ஆயுதம் "ஓட்டுரிமை". அந்த வாக்குரிமையை மிகக் கச்சிதமாக பயன்படுத்தவது ஏனைய சமூகத்தைப் போல முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும்.

ஓட்டு போடாமல் இருப்பது

நாம் நமது ஓட்டை சரியாக பயன்படுத்தவில்லையானால் அது பாசிச சக்திகளுக்கு சாதகமாக்கி விடும். அதன் மூலம் மிக மோசமான ஆட்சியாளர் வர வாய்ப்புண்டு. வாக்களிப்பது -شهادة"சாட்சி யளித்தல்" ஆக  இருப்பதால் இஸ்லாத்தில் சாட்சியாளித்தலில் உண்மையாக இருப்பது மிக அவசியமாகும்.இதனை குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ‌ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏ 

நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.(அல்குர்ஆன் : 2:283)

இந்த வசனத்திற்கு இமாம் குர்துபீ(ரஹ்)அவர்களின் விளக்கம்:சாட்சியத்தை மறைத்தல் தடை என்பதால் சாட்சியளித்தல் "வாஜிப்"கடமையாகும்.இதற்கு ஆதாரம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கூற்று :

حضرت عبد اللہ بن عباس قال : عَلٰی الشَّاہِدِ أنْ یَشْہَدَ حَیْثُمَا اسْتُشْہِدَ (الجامع لاحکام القرآن للقرطبی۳/۴۱۵)

"சாட்சியளித்தலை வேண்டப்படும் போது சாட்சி சொல்பவரின் மீது அது வாஜிபாகும் " (நூல்:ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன் அல் குர்துபீ) 

எனவே வாக்களிப்பது - شهادةசாட்சியளித்தல் என்ற அடிப்படையில் நல்லாட்சியாளரைதேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுப் போடுவது (வாஜிப்)கடமையாகும்.வாக்களிப்பது - شفاعة சிபாரிசு செய்தல் என்ற ரீதியிலும் நல்லாட்சியரை சிபாரிசு செய்வதற்காக ஓட்டுப் போடுவது என்ற ரீதியிலும் கடமையாகிறது.  

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌  وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌  وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:85)

எவர் தகுதியற்றவராக, அநீதி, அக்கிரமம் புரிபவராக உள்ளாரோ அவருக்கு பரிந்துரை செய்து மக்களின் பிரதிநிதியாக ஆக்குவது தீய பரிந்துரையாகும்.

நம் ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது கடமை என்பதால் அது நமக்கு அமானிதமாகும். அமானிதம் பேணுதல் முஃமினின் தலையாய பண்பு. ஆக  வாக்களிப்பது அமானிதமாகும்.தகுதியற்றவர்களுக்கு வாக்களிப்பது அமானிதத்தை பாழ்படுத்துவதாகும், என பின் வரும் நபி மொழி, தற்போதைய களச்சூழலை படம்பிடித்துக் காட்டுகிறது.

وعنه قال‏:‏ بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم، جاءه أعرابي فقال‏:‏ متى الساعة‏؟‏ فمضى رسول الله صلى الله عليه وسلم ، يحدث، فقال بعض القوم‏:‏ سمع ما قال‏:‏ فكره ما قال، وقال بعضهم‏:‏ بل لم يسمع، حتى إذا قضى حديثه قال‏:‏ ‏"‏أين السائل عن الساعة‏؟‏ ‏"‏قال‏:‏ ها أنا يا رسول الله ‏.‏ قال‏:‏ ‏"‏إذا ضيعت الأمانة ، فانتظر الساعة‏"‏ قال‏:‏ كيف إضاعتها‏؟‏ قالك ‏"‏إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة‏"‏  (رواه البخاري)

ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி  : 3) 

நாம் நமது ஓட்டை  சரியாக பயன்படுத்தவில்லையானால் அதை பிறர் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அதன் மூலம் மிக மோசமான நபர் மக்கள் பிரதிநிதியாக ஆக வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  எனவே நாம் நமது ஓட்டை பயன்படுத்த வேண்டும். இக்காலத்தில் அதிகமானோரிடத்தில் நம்பிக்கை நாணயம் பரிவு மற்றும் மக்களுக்கு உதவிச் செய்யும் ஆர்வம் சிறிதுமில்லை.எனவே இந்த வேட்பாளர்களில் நம்பிக்கை நாணயத்தில் மற்றவரை விட உயர்வானவருக்கு தீங்கை குறைத்தல் அநீதத்தை குறைத்தல் என்ற எண்ணத்துடன் ஓட்டு போடுவது விரும்பத்தக்கதும், ஆகுமானதும் ஆகும்.  (நூல் :ஜவாஹிருல் ஃபிக்ஹ்)

நான் சுயமாக உழைக்கிறேன், சுயமாகச் சம்பாதிக்கிறேன், சுயமாக என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டேன், அப்படி இருக்கையில், அரசின் உதவி எனக்கு எப்போதும் தேவையில்லை. அவ்வாறிருக்க நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சிலரது மனமும், இன்னொரு சாராரோ குறிப்பாக இளம் தலைமுறையினர் மாற்றம் வேண்டும் என்று முறையிடும் அதே வேளையில்,  தங்களது மீம்ஸ்களின் மூலம் மட்டுமே திருப்தி அடைந்து கொள்வதும், ஒரு புதிய ஜனநாயகப் பாதையை அமைப்பதற்கும், அதைச் செப்பனிடுவதற்கும் தவறி விடுகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் சட்டையில் இருந்து, சாப்ட்வேர் பொருள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு ஓர் இன்றியமையாததாக இருக்கிறது. ஆகவே, அவற்றைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்பதே, வாக்களிப்பதற்கான அவசியமாகின்றன.

நாட்டு நலன் கருதி நாம் வாக்­க­ளித்து என்ன பயன்? அங்கு ழுழுக்க முழுக்க ஊழலும் மோச­டியும் தானே நடை­பெ­று­கி­றது. இப்­படி இருக்கும் போது ஓட்டுப் போட்டால் என்ன போடா விட்டால் என்ன என்று சலிப்­புடன் ஒதுங்­கு­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். ஒரு­வேளை அவர்கள் எண்­ணு­வது போல் தேர்தல் ஊழல், மோசடி நிறைந்த நிலையில் அமையும் என்­றி­ருந்­தாலும் வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்­து­வது கடமை என்றே இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞர்கள் விளக்­கி­யுள்­ளார்கள். காரணம் அநி­யா­யங்­க­ளுக்கு முன்னால் எடுக்­க­வேண்­டிய நிலைப்­பாடு குறித்து ஸுன்­னாவின் வழி­காட்டல் கட­மையை நிறை­வேற்­று­மாறே பணிக்­கி­றது. ‘

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; (அல்குர்ஆன் : 3:110)

கவனக்குறைவு வேண்டாம்

எனக்கு எதற்கு அரசியல்? இதில் எனக்கு விருப்பமில்லை. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்படியே ஒரு விருப்பம் இருந்தாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பல சந்தர்ப்பங்களில் குழப்பமடைந்து விடுகிறோம்.வாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாமல் மௌனிப்பது நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்று பொருள் அல்லது சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அர்த்தம்.

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ» ،(صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3733. )

எனவே, எமது பொறுப்­பி­லுள்ள வாக்குப் பலத்தை பிர­யோ­கிப்­பது ஓர் அடிப்­படைக் கடமை. முதலில் அதனை நிறை­வேற்­றுவோம். பின்னர் அநி­யா­யத்­திற்கு எதி­ராக வல்ல அல்­லாஹ்­விடம் முறை­யி­டுவோம்..

ஓட்டு போடுவதற்கு பணம்

ஓட்டு போடுவது  பரிந்துரை மட்டுமே! அதற்குப் பணம் பெறுவது லஞ்சம் ஆகும். லஞ்சம் ஹராம் ஆகும். 

அபூ உமாமா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் :"ஒருவர் ஒருவருக்கு பரிந்துரை செய்து அதற்கவர் ஏதேனும் அன்பளிப்பு கொடுத்தால் அவர் வட்டியின் வாசல்களில் பெரும் வாசலிற்கு வந்துவிட்டார் "என (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் :அபூதாவுத் )

நல்ல ஆட்சி வேண்டி துஆ

ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا அல்லாஹ் நம் விசய்த்தில் இறைவனை பயந்து கொள்ளக்கூடிய நம் மீது அன்பு காட்டக் கூடிய ஆட்சியாளர்களை தந்தருளவானாக!


எனவே பாசிச,மதவாத சக்திகளிடமிருந்து தேசத்தை காக்கவும் நல்லாட்சி மலரவும் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிப்பீர்!

அல்லாஹுத்தஆலா மக்களுக்கு நிம்மதியை தரும் ஆட்சியாளர்களை தருவானாக!.. ஆமின்....



வெளியீடு: செங்கல்பட்டு& காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

8 comments:

முஹம்மது நிஜாமுத்தீன் kf said...

மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் 👌துணிச்சலான முயற்சி!
வாழ்த்துக்கள் 💐🤝

முஹம்மது நிஜாமுத்தீன் kf said...

மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் 👌துணிச்சலான முயற்சி!
வாழ்த்துக்கள் 💐🤝

Vellimedai chengai said...

ஜஸாக்கல்லாஹ்,

புரோஸ்கான் உஸ்மானி said...

மாஷா அல்லாஹ். காலத்திற்கேற்ற வழிகாட்டல்
பாரகல்லாஹ்!

Unknown said...

ماشاء الله الحمد لله 👍👍👍🌹

Unknown said...

ماشاء الله الحمد لله 👍👍👍🌹

Vellimedai chengai said...

Jazakallah Khair hazrath

Vellimedai chengai said...

Alhamdulillah

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...