Thursday, 16 March 2023

ஜும்ஆ பயான் 17/03/2023

நோன்பின் சிறப்புக்கள்.

அல்லாஹுத்தஆலா, மனிதனை அவனது அனைத்து படைப்புகளிலும் சிறந்தவனாக ஆக்கியுள்ளான், மனிதன் அவனது இயல்பிலே நன்மை- தீமை,நற்பண்பு-தீயபண்பு, அடிபணிதல்-கீழ்ப்படியாமை,சிறந்த-சீர்கெட்ட இப்படி நேர்முரணான இருகுணங்களை பெற்ற படைப்பாக உள்ளான். 

விளைவு:நன்மையும் தீமையும் எந்த மனிதனிடமிருந்தும் வெளிப்படலாம்.  ஒரே மனிதனில் நல்ல, கெட்ட இருவேறுசெயல்கள்  வெளிப்படுவது சாத்தியமே, ஆனால் ஒருவன் கெட்ட செயல்களையும் பாவங்களையும் தவிர்த்து, தனது வாழ்க்கையையும் தனது பொன்னான தருணங்களையும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் அலங்கரித்தால், இவை அனைத்தும் வெற்றிகரமானவையாகவும், உன்னதமானவையாகவும். படைத்த ரப்பிடம் நெருக்கத்தையும், கண்ணியத்தை பெற்றுத்தரும் சிறந்த அடையாளமாகும்,இதனையே تقویٰ இறையச்சம் எனப்படும்.நோன்பின் நோக்கமும்,அடிப்படையும்تقویٰ இறையச்சம் என்கிறது திருமறை...

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.(அல்குர்ஆன் : 2:183)

இறையச்சம் "تقویٰ"என்பதன் பொருள்: ஒருவன் தன்னைத் தீமையிலிருந்து தற்காத்துக்கொள்வதாகும், இதன் முக்கிய வழிகளில் ஒன்று  நோன்பு ஆகும். நபித்தோழர்களில் ஒருவர் அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களிடம்“அல்லாஹ்வின் தூதரேﷺ!அல்லாஹுத்தஆலா எனக்கு நன்மையளிக்கும் ஓர் அமலை காட்டித்தாருங்கள்"என்று கேட்டார்.

அதற்கு நபி ﷺஅவர்கள் பதில் சொன்னார்கள்:

’’علیک بالصوم، فإنہٗ لامثل لہٗ‘‘ (سنن نسائی، ج:۱، ص:۱۴۰) 

"நோன்பை கடைப்பிடி!காரணம் அதற்கு நிகர் வேறில்லை."

அருள் மழைப்பொழியும் ரமலான்.

இதோ! புனித ரமலான் மாதம் நம்மை எதிர்நோக்கி வர காத்திருக்கின்றது.இது நற்காரியங்கள்,வணக்க வழிபாடுகளின் பருவ காலமாகும்.

இதனால்தான் ரமலான் மாதம் இஸ்லாமிய வருடத்தின் அனைத்து மாதங்களை விடவும் அதிகமான மகத்துவங்களும்,சிறப்புகளும்,பரக்கத்துகளும் வாய்ந்த மாதமாக உள்ளது. 

இம்மாதத்தில் அல்லாஹுத்தஆலா தன் முஃமினான அடியானுக்கு தன் பொருத்தத்தையும்,அன்பையும்,ஆத்ம ஒளியையும் பரிசாக வழங்குகிறான்.

இம்மாதத்தில் ஒவ்வொரு வணக்கத்திற்கும் நன்மைகள் அளிக்கப்படுவதுடனே  பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» ( مُتَّفَقٌ عَلَيْهِ

ஈமானோடு (நம்பிக்கை கொண்டு) (நற் கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி)

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قام رمضان إيمانا واحتسابا ، غفر له ما تقدم من ذنبه "([21])

இறைத்தூதர்ﷺஅவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்.

"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"

عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ اللَّهُ : ( كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ

. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.(புஹாரி: 1904 அபூஹுரைரா (ரலி).)

سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ ) البخاري ( 1763 ) ومسلم ( 1947 ) .

708. ”சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!”என நபி  ﷺஅவர்கள் கூறினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الصِّيَامُ جُنَّةٌ فَلا يَرْفُثْ وَلا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ. وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ..يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَ. رواه البخاري (1894)، ومسلم (1151)

”நோன்பு நரகத்தி­ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­) நூல்: புகாரீ (1894)

قال رسول الله -صلى الله عليه وسلم-: (لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ، وَلَخُلُوفُ فيه أَطْيَبُ عِنْدَ اللهِ مِن رِيحِ المِسْكِ)..

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம்  ﷺஅவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: (அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரீ (1904)

 أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:   " كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي "(رواية لمسلم)

”ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூ­லி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ­லி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறுகிறார்கள்.அறிவிப்பவர் (அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்­லிம் (2119)

நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்திற்கு வழங்கிய முக்கியத்துவமும்,உம்மத்திற்கு வழிகாட்டுதலும் ஆர்வமூட்டுதலும்.

1)நபி ﷺஅவர்கள் ஷஃபான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல வேறந்த மாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

2)ஷஃபான் பிறை

قال الرسول صلى الله عليه وسلم : “أحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ

நபிﷺஅவர்கள் கூறினார்கள்:ரமலானிற்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்.  

அபூஹுரைரா(ரலி):  திர்மிதி.

3)  ஸஹர்

قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم :(( تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً )) [2]، 

ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி ﷺஅவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم

(فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ، أَكْلَةُ السَّحَرِ)

நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபிﷺ  அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

நபி  ﷺஅவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபிﷺ  அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

4)  இஃப்தார்

1/1233- عَنْ سَهْلِ بنِ سَعْدٍ ، أَنَّ رسُولَ اللَّهِ ﷺ قَالَ: لاَ يَزالُ النَّاسُ بخَيْرٍ مَا عَجلوا الفِطْرَ متفقٌ عَلَيْهِ.

நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபிﷺ  அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்பு திறக்கும் துஆ

நபி ﷺஅவர்கள் நோன்பு திறக்கும் போது “ذَہَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَائَதஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்). அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).

இன்னொறு அறிவிப்பில்...

اَللّٰہُمَّ لَکَ صُمْتُ وَعَلٰی رِزْقِکَ أَفْطَرْتُ۔‘‘

"யா அல்லாஹ்!உனக்காகவே நோன்பு நோற்றேன்.உன் ரிஸ்கை வைத்தை நோன்பு திறக்கிறேன்"என்று நபி  ﷺகூறுவார்கள்.

إن للصائم عنده فطره دعوة لا ترد ) أخرجه أحمد

 ”நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ அங்கீகரிக்கப் படும். ”

قال  صلى الله عليه وسلم  : ] إنَّ لله تعالى عتقاء في كل يوم و ليلة – يعني  في رمضان – وإنَّ لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة [[ رواه الإمام أحمد وصححه الألباني (2169) في صحيح الجامع ]

அல்லாஹுத்தஆலா ரமலானில் ஒவ்வொரு இரவும் பகலும் நரக விடுதலை அளிக்கிறான்.ஒவ்வொரு நாளும் ஒரு துஆவை அங்கீகரிக்கிறான்.

5)  இறுதி பத்து

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ

நாயகம்ﷺஅவர்கள் ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள். 

(அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2024.)


6)  லைலதுல் கத்ர்

عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسولَ الله صلى الله عليه وسلم قال: «تَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ»

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி ﷺஅவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புகாரி)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ بِمَ أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

ﻣﺴﻨﺪ ﺃﺣﻤ25168

“அல்லாஹ்வின் தூதரேﷺ! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி ﷺஅவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபுஅன்னீ ”(இறைவா! நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!) என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.

7)  நோன்பை விடுவது

தக்க காரணம் இன்றி நோன்பை விடுவது,காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.

அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபிﷺ கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். நான் மலையில் எறியதும் கடுமையான சத்தத்தை கேட்டு இது என்ன சத்தம் என்று அவர்களிடம் வினவினேன். இது நரக வாசிகள் ஊலையிடும் சத்தம் என்று கூறிவிட்டு என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போது தலை கீழாக தொங்கவிடப்பட்டு தமது வாய்கள் அறுக்கப்பட்டு வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்து யார் இவர்கள் என்று அந்த இருவரிடமும் கேட்டேன்.

அப்போது இவர்கள் தான் நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பைத் திறந்து கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டது.

(நூல்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 1609. இமாம் ஹாகிம் , இமாம் தஹபி ஆகியோர் ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளனர்.)

நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பை திறப்பதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோம்பேறித்தனமாக நோன்பை விட்டு விடுபவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்ல முடியும்?

8)  ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான காரியங்கள்.

அவற்றில் இரண்டு காரியங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுத் தரும் 1)’’لاإلٰہ إلا اللّٰہ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் 2)استغفارபாவ மன்னிப்பு 

மற்ற இரண்டு காரியங்கள் அடியானுக்கு அவசியமானவையாகும்1)சுவனத்தை வேண்டுவது 2)நரக விடுதலை கேட்பது.

9) இஃதிகாப்

‘இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி  ﷺஅவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)

எவர் ரமலானின் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பாரோ அவருக்கு இரண்டு ஹஜ்,இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்(நபிமொழி)

10)  குர்ஆன் ஓதுதல்:

குர்ஆன் இறக்கியருளப்பட்டதே இம்மாதம் சிறப்பு பெற காரணம் என 2:185 ஆம் வசனம் கூறுகிறது.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:

(( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ ))                        [ متفق عليه ]

நபி ﷺஅவர்கள் மக்களில் அதிகம் கொடைக் கொடுப்பவராக இருந்தார்கள் .ரமலான் மாதத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்திக்கும் சமயத்தில் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். அவர்(ஜிப்ரயீல்) ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் நபியை சந்தித்து குர்ஆன் ஓதிக்காட்டுவார்.(அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள்.              அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் :புகாரி, முஸ்லிம் )

நபி  ﷺஅவர்கள்  மரணித்தை தழுவிய  அவ்வாண்டு ஜிப்ரயீல் (அலை )அவர்கள் ரமலானில் இரண்டு தடவைகள் குர்ஆன் ஓதிக் காட்டினார்கள் என பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு ரிவாயத் உள்ளது.

இந்த மாதம் குர்ஆன் ஓதுவதும், குர்ஆன் ஓதுவதை கேட்பதும், இரண்டுமே சிறப்புக்குரிய அமல்கள் ஆகும். 

 11) நோன்பில் பாவத்தை தவிர்த்தல்.

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம்  ﷺஅவர்கள் கூறினார்கள்.                       (நூல்: புகாரீ 1903)

12)ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது.

நம் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக சிறந்த மாதமாகும்.

ரமலானின் மூலச்சொல் رمض ரமல் என்றால் கரிக்குதல் என்று பொருள்.எப்படி நெருப்பு விறகை எரித்து சாம்பலாக்கி விடுகிறதோ,அதுபோல் ரமலான்  பாவத்தை எரித்து இல்லாமலாக்கிவிடுக்கிறது. 

இம்மாததில் அல்லாஹுத்தஆலா தன் கிருபையால் நோன்பின் பரக்கத்தால் முஃமீன்களின் பாவங்களை எறித்து சம்பலாக்கிவிடுகிறான்.

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :

إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِين.

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),    (நூல்: புகாரி-1899 )

காழி இயாள்(ரஹ்)அவர்கள் இந்த ஹதீஸுக்கு கூறும் விளக்கம்;

இந்த ஹதீஸுக்கு வெளிப்படையான விளக்கம் என்றால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுவதும்,நரக வாயில்கள் அடைக்கப்படுவதும்,நோன்பாளிக்கு இடையூறு செய்யாமல் இருக்க ஷைத்தான்கள் விலங்கிடப்படுவது

இவை அனைத்துமே ஓர் முக்கிய நிகழ்வுக்காக அரசாங்கம் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை கைது செய்வதைப் போன்றதாகும்.

இந்த ஹதீஸிற்கு உள்ரங்கமான விளக்கம் என்றால்:ஷைத்தான் விலங்கிடப்படுவதன் பொருள் மற்ற காலங்களை போல ரமலானில் அடியார்களை ஷைதானால் வழிகெடுக்கமுடிவதில்லை.ஷைத்தானின் சூழ்ச்சிகள் இம்மாதத்தில் குறைகிறது.

சுவனவாயில் திறக்கப்படுவதன் பொருள்;அல்லாஹுத்தஆலா இம்மாதத்தில் அடியார்களுக்கு நல்லறங்களை செய்யும் வாயில்களை திறந்துவிடுகிறான்.இதனால் ரமலானில் நோன்புநோற்பபது,இறைவணக்கத்தில் அதிகம் ஈடுப்படுவது போன்ற பல அமல்களை இலகுவாக செய்யமுடிகிறது.

(نووی شرحِ مسلم، از برکاتِ رمضان ، ص:۴۴)

ரமலான் மிகச்சிறந்த மாதமாகும்.ரமலானின் மகத்துவத்தை அடியார்கள் விளங்கிவிட்டால்,காலம் முழுக்க ரமலானாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.  


ரமலானுக்குள்ள தனித்துவமான சிறப்புகளில் சில...

1)திருமறை குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம்...

 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; 

(அல்குர்ஆன் : 2:185)

2)இம்மாதத்தில்தான் லைலத்துல் கத்ர் இரவில்  "لوحِ محفوظ"லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முழு குர்ஆன் பூமிக்கு இறக்கி அருளப்பட்டது

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ  ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.              (அல்குர்ஆன் : 97:1)

அதனால் தான் இம்மாததிலும்,தராவீஹ் தொழுகையிலும் குர்ஆன் ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

3)ரமலானில் ஒவ்வொரு இரவிலும் அழைப்பாளர் ஒருவர் இவ்விதம் அழைப்பு விடுக்கிறார்

: ’’یا باغي الخیر! أقبل ویا باغي الشر! اقصر۔‘‘ (مشکوٰۃ، ص:۱۷۳)

"நன்மையை நாடுபவரே!நன்மையில் முன்னேறுங்கள்,தீமை செய்வோரே!தீமையை குறைத்துக் கொள்ளுங்கள்."(நூல்:மிஷ்காத்)

ரமலான் மாதத்தில் பொதுவாகவே முஃமின்களுக்கு நல்ல அமல்கள்,நல்லறங்கள் செய்வதற்கு ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது.

حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ، ثنا سَلَمَةُ بْنُ وَرْدَانَ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، يَقُولُ : ارْتَقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ ، فَقَالَ : " آمِينَ " ، ثُمَّ ارْتَقَى ثَانِيَةً ، فَقَالَ : " آمِينَ " ، ثُمَّ اسْتَوَى عَلَيْهِ فَقَالَ : " آمِينَ " ، فَقَالَ أَصْحَابُهُ : عَلَى مَا أَمَّنْتَ يَا رَسُولَ اللَّهِ ؟ ! . فَقَالَ : " أَتَانِي جِبْرِيلُ فَقَالَ : يَا مُحَمَّدُ ! رَغِمَ أَنْفُ امْرِئٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ ، فَقُلْتُ : آمِينَ ، ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ امْرِئٍ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يُدْخِلاهُ الْجَنَّةَ ، فَقُلْتُ : آمِينَ ، ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ امْرِئٍ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ ، فَقُلْتُ : آمِينَ " 

நபிﷺ  அவர்கள் மிம்பரில் ஏறி, ”ஆமீன், ஆமீன், ஆமீன்” என்று கூறினார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதரேﷺ! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபிﷺ  அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ”எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி))

எனவே ரமலான் மாதத்தில் ஒருவர் முயற்சித்து, நல்லறங்களில் ஈடுபட்டு இறைவனிடம்  பாவமன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான்.

காரணம் ரமலான் நோன்பின் பலனே பாவமன்னிப்பு என நபி ﷺஅவர்கள் கூறியுள்ளார்கள்.

أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قام رمضان إيمانا واحتسابا ، غفر له ما تقدم من ذنبه "([21])

"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"

4)இஸ்லாத்தில் ஒரு நல்அமல் இன்னொரு அமலை செய்ய தூண்டும்.ஒரு வணக்கம் இன்னொரு வணக்கம் புரிய சக்தி அளிக்கும்.

ரமலான் மாதம் நோன்பு, ஏனைய 11 மாதங்களில் தொழுகை போன்ற அமல்களில் ஈடுபட  ஆர்வத்தையும்,ஆற்றலையும் வழங்கி விடும்.

ரமலான் மாதத்தில் நல்ல முறையில் அமல் செய்தவர்களின் வாழ்வில் அது ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

5)ரமலான் நோன்பு,அடியானுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது.

 ரமலானில் நோன்பு இருப்பதோடு தராவீஹ்,தஹஜ்ஜுத்,அவ்வாபீன்,இஷ்ராக்,தஹ்பீஹ் தொழுகை, குர்ஆன் திலாவத்,திக்ர்,தான தர்மங்கள்,இஃதிகாப்,லைலதுல்கத்ரு போன்ற எண்ணற்ற அமல்கள் புரிந்து அல்லாஹ்வின் நெருக்கம் பெற ரமலான் நோன்பு காரணமாக அமைகிறது. 

எனவே புனித ரமலான் மாதத்தின் மகத்துவத்தை விளங்கி அதனை அமல்களால் அலங்கரிக்க நாம் தயாராக வேண்டும்,ரமலான் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்,அதனை நாம் சுமையாக கருதாமல், அருளாக கருதி அமல் செய்ய முயற்சிக்க வேண்டும்.

உலமாக்கள் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்;யூதன் ஒருவர் ரமலான் மாதத்தில் தன் மகன் பகல் நேரத்தில் பகிரங்கமாக உணவு உண்ணுவதை தடுத்து அவனை அடித்து கண்டித்தார்.மேலும் இம்மாதத்தின் மகத்துவத்தை அவனுக்கு எடுத்துரைத்தார்.

அதே வாரத்தில் அந்த யூதன் மரணத்தை தழுவுகிறார்.அவ்வூரிலுள்ள ஒரு ஆலிம் கனவிலே அந்த யூதன் சுவனத்தில் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டார் அதற்கு அவர் நான் ரமலான் மாதத்தை சங்கைப்படுத்தியதால் அல்லாஹ் எனக்கு மரண தருவாயில் கலிமா சொல்லும் பாக்கியத்தை தந்தான்.الحمد للہ               எனது முடிவை ஈமானோடு ஆக்கிவிட்டான் என்று நடந்த சம்பவத்தை கூறினார்.   (نزہۃ المجالس ، مترجم: ۳۲۵۱)

அல்லாஹுத்தஆலா நமக்கு ரமலானை சங்கை செய்யும் வாய்ப்பை அளித்து,நம் எல்லா நல்லறங்களையும் அங்கீகரித்து,கியாம நாளில் அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களின் ஷஃபாஅத்தை  பெற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸை அடைய கிருபை செய்வானாக!ஆமீன்...


வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 2 March 2023

ஜும்ஆ பயான் 03/03/2023

தர்மம் தலை காக்கும்..


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

தர்மம் என்றால் இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டும்  நாடி இருப்பவர் இல்லாதோருக்கு கொடுத்து உதவுவதாகும். ஆனால் இன்றைய காலத்தில் தர்மம் என்ற போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு அள்ளி கொடுத்து தங்கள் காசு பணங்களை மனிதன் வீண் விரயம் செய்கின்றான்.
தர்மம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நேரமும் தன் வயிற்றில் ஏற்படும் பசியை போக்க ஏங்கி தவிக்கும் ஏழைகளுக்கும், தாய் தந்தையிழந்து பரிதவிக்கும் அநாதைகளுக்கும், தேவையிருந்தும் பத்தின தனமாக வாழ்பவர்களுக்கும் தேடி சென்று தான தர்மம் செய்வது தனவந்தர்களின் கடமை என்று வான் மறை குர்ஆன் கூறுகின்றது.
அதேப்போல் நமக்கு பிடித்தமான ஒன்றையே தர்மம் செய்ய வேண்டும் என மேற்கூறிய வசனம் கூறுகிறது. ஆனால் இன்று தான் விரும்பாத ஒன்றை, தனக்கு பிடிக்காத ஒன்றை கொடுத்து விட்டு தன்னை பெரிய தர்மவான் என சிலர் நினைத்துக் கொள்கின்றனர்.

தர்மம் எவ்வாறு வழங்க வேண்டும்?

தான தர்மங்கள் முடிந்தளவு யாருக்கும் தெரியாமல் செய்வது தான் சிறப்பு. பிறர் தெரிய செய்யும்போது சில நேரங்களில் அதில் முகஸ்துதி ஏற்பட்டு விடுகிறது. ஆகையால் தான் நம் மார்க்கம் வெளிப்படையாக தர்மம் செய்ய அனுமதி தந்திருந்தாலும் மறைமுகமாக செய்யும் தர்மமே சிறந்த தர்மம் என கூறுகிறது.

ஒரு ஹதீஸில்... வரும் செய்தி....

இறைவன் பூமியை படைத்த போது அது ஆடி நடுங்கியது... அதன் மீது மலையை அல்லாஹ் நாட்டினான். மலையை நட்டியவுடன் அது ஆடாமல் நிலை பெற்றது.மலைகளின் உறுதியை கண்ட வானவர்கள் வியந்து, எங்கள் இறைவா மலையை விட உறுதியான படைப்பை நீ படைத்திருக்கிறாயா? என்று கேட்டனர்.
ஆம் இரும்பை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (இரும்பு மலையை உடைத்துவிடும் .)
இரும்பை விட உறுதியான படைப்பை படைத்திருக்கிறாயா? என மலக்குகள் கேட்க... ஆம் நெருப்பை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (நெருப்பு இரும்பை உருக்கிவிடும்.)
நெருப்பை விட உறுதியான படைப்பை படைத்திருக்கிறாயா? என மலக்குகள் கேட்க.... ஆம் நீரை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (நீர் நெருப்பை அனைத்துவிடும்.)
அப்படியென்றால்  நீரை விட சிறந்த படைப்பு இருக்கிறதா? என மலக்குகள் கேட்க... ஆம் காற்றை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (பலமான காற்று மழை வராமல் தடுத்துவிடும்.) அப்படியென்றால் காற்றை விட சிறந்த படைப்பு இல்லையா? என மலக்குகள் கேட்க... இறைவன் கூறினான்..ஆதமுடைய சந்ததிகளான மனிதர்களை படைத்துள்ளேன். ஆனால் அவன் தன் வலது கரத்தில் கொடுக்கும் தர்மத்தை இடது கைக்கு தெரியாமல் கொடுக்கும் போது மேற்கூறிய அனைத்தை காட்டிலும் சிறந்த படைப்பாக மாறுகிறான் என அல்லாஹ் கூறினான்.
இந்த ஹதீஸ் எவ்வாறு தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஆனால் இன்றைய தான தர்மங்கள் லைட் போட்டு வெளிச்சம் போட்டு செய்யப்படுகிறது. இதை அல்லாஹ் விரும்புவதில்லை.

கஞ்சத்தனம் செய்யாதீர்கள்.

السخي حبيب الله ولو كان فا سقا والبخيل عدو الله ولو كان عابدا
தர்மம் செய்கிறவன் அல்லாஹ்வின் தோழனாவான்.. அவன் பாவியாக இருப்பினும் சரியே!
கஞ்சன் அல்லாஹ்வின் விரோதியாவான்.. அவன் வணக்க சாலியாக இருப்பினும் சரியே!

இந்த ஹதீஸ் கஞ்சத்தனம் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது என எச்சரிக்கை செய்கிறது.
இதையே அல்லாஹ் திருமறையில்....

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ  
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; 
(அல்குர்ஆன் 17/29) என்ற வசனத்தில் கூறுகிறான். 

தர்மம் வளரும்.

இன்று நம்மில் அநேகர் தர்மம் செய்தால் தம் பொருள் குறைந்து விடும் என அஞ்சுகின்றனர். ஆனால் இறை மறை நீ தான தர்மங்கள் செய்தால் உன் பொருளில் அபிவிருத்தி ஏற்படும் என்று கூறுகிறது.
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் 2 /276)

தர்மம் ஒர் கேடயம்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இவ்வாறு எதைப்பற்றியும் யோசிக்காது நாம் செய்யும் உதவியானது நமது தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் காக்கும் என்பதால் தர்மம் தலைகாக்கும் என்றும் சிலர் கருத்து கூறுகின்றனர்.

ஒரு ஹதீஸில்...

الصدقة رد البلاء والقضاء

நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு வரும் ஆபத்துக்கள், மூசிபத்துக்களிலிருந்து பாதுகாப்பு தரும் ஒர் யமாகும்.
நாம் எங்காவது வெளியே செல்லும் போது ஏதேனும் தான தர்மங்கள் செய்து விட்டு நம் பயணங்களை மேற்கொண்டால், அந்த பயணம் பாதுகாப்பான பயணமாக அமைய அந்த தர்மம் ஒர் கேடயமாக இருக்கும்.
தொடந்து நாம் தான தர்மங்கள் செய்யும்போது வருங்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துகள் , நோய் நொடிகள், மோசமான விபத்துக்கள் போன்ற ஆபத்திலிருந்து பாதுகாப்பு தந்து நீண்ட ஆயுளையும் அல்லாஹ் தருவான்.

அல்லாஹ் சில இடங்களில் அன்பாக தர்மம் செய்ய சொல்கிறான்.

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 2:271)

சில இடங்களில் மிரட்டி சொல்கிறான்.

மரணம் வருவதற்கு முன். 

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 

நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”(அல்குர்ஆன் : 63:10)

நல்லவர்களுக்கும் செல்வம் கொடுக்கப்படுகிறது.

கெட்டவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுவது போலவே நல்லவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளதையும் கூறுகிறது.

சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வச் செழிப்பைப் பின்வருமாறு திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது.

இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "இது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவள் கூறினாள். "நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். சுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.          (திருக்குர்ஆன் - 27:44)

கெட்டவர்களுக்கும் செல்வம் கொடுக்கப்படுகிறது.

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தில் காரூன் என்ற கெட்டவனுக்குச் செல்வத்தைக் கொடுத்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். (திருக்குர்ஆன் 28:76)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.  (திருக்குர்ஆன் 28:79)

பொக்கிஷங்களைப் பூட்டிவைக்கும் அறைகளின் சாவிகளைச் சுமப்பதற்கு பெருங்கூட்டம் தேவை; அது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதும் காரூனின் செல்வம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நம் கண் முன்னால் நிறுத்துகிறது.

لكلِّ أمَّةٍ فتنةٌ وإنّ فتنةَ أمَّتي المالُ.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : அஹ்மத்)

முத்தகீன்களின் அடையாளம்.

வறுமையிலும், செழிப்பிலும் எல்லா நிலையிலும் தர்மம் செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.(திருக்குர்ஆன்:3:134)

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார்.

இரண்டு விஷயங்களில் பொறாமைப்படு.

எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களைப் பார்த்துப் பொறமை கொள்வதோ, பேராசைப் படுவதோ கூடாது. இவ்வாறு போதுமென்ற தன்மையோடு வாழச் சொல்லும் மார்க்கம், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குகிறது. அதிலொன்று தர்மம் எனும் போது அதன் சிறப்பை அறிய முடிகிறது.

عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி-73)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி 660)

துறவியின் கதை.

ஒரு விறகுவெட்டி தலையில்விறகுச் சுமையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தான். வரும்வழியில் எதிரில் ஒருதுறவிம்வருவதைப் பார்த்தான்.அவருக்கு வழி விடுவதற்காகபாதையின் ஓரத்தில் ஒதுங்கிநின்றான். ஆனால் அவரோதிடீரென, ''விறகு சுமையை உடனேகீழே எறி'' என்றார். அவனுக்குஒன்றுமே புரியவில்லை.காலையிலிருந்து கஷ்டப்பட்டுவெட்டிக்கொண்டு வந்த விறகுகள்அவை. அவற்றை விற்றால்தான்அன்று அவனுக்கு உணவு. அந்தகட்டை எறியச் சொல்லுகிறாரே?

இருந்தாலும் அவர் மீதுள்ளமரியாதைக்காக விறகுக்கட்டைகீழே போட்டான். போட்ட வேகத்தில்கயிறு அறுந்து விறகுகள் சிதறின.அதற்குள்ளே இருந்து ஒரு கருநாகம்நெளிந்து ஓடியது. விறகுவெட்டிவியப்பாலும் அச்சத்தாலும்உறைந்து நின்றுவிட்டான். உடனேசுதாரித்துக்கொண்டு ''அய்யா.நீங்கள் எனது உயிரைக்காப்பாற்றினீர்கள்'' என்றான். ''உன்னைக் காப்பாற்றியது நான்அல்ல; நீ செய்த தர்மம். இன்றுஏதாவது தர்மம் செய்தாயா?'' என்றுகேட்டார் துறவி. ''நான் பரம ஏழை.விறகுவெட்டிப் பிழைப்பவன். தர்மம்செய்யும் சக்தி எனக்கு ஏது?என்றான்.

''நன்றாக யோசித்துப் பார்''. அவன்சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான்.அவனுக்கு நினைவுக்குவந்துவிட்டது ''ஆமாம் அய்யா!இன்று பகல் விறகு வெட்டிக்களைத்துப் போய் ஒரு மரத்தடியில்அமர்ந்தேன். கடுமையான பசி.கேழ்வரகு கூழ் கொஞ்சம் கொண்டுவந்திருந்தேன் அதை அருந்தநினைக்கும்போது அங்கே ஒருபயணி வந்தார். ''நான் இரண்டுநாளாக பட்டினி. எனக்கு ஏதாவதுசாப்பிடக் கொடுங்கள்'' என்றார்.நான் என் கூழில் பாதியைஅவருக்கு கொடுத்தேன். இதுதான்நான் செய்தது. இது என்னைமரணத்திலிருந்து காப்பாற்றுகிறஅளவுக்கு பெரிய தர்மமா?ஆச்சரியமாக இருக்கிறதே''என்றான்.

துறவி, '' இன்று நீ பாம்பு கடித்துஇறந்து போகக்கூடியவன். நீ செய்ததர்மம் உன்னைக்காப்பாற்றியது'' என்றார்.

உண்மை வரலாறு.

ரோமார்களை எதிர்த்து போர் செய்வதற்கு சென்ற ஹாலித் (ரலி) அவர்கள் அங்கிருந்து சில எதிரிகளை கைதிகளாக நாயகம் (ஸல்) அவர்கள் இடம் கொண்டு வந்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொன்னார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்கள். எனவே நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அந்த கைதிகளின் பல்வேறு குற்றங்கள் முன் வைத்து அவர்கள் அனைவரையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அவர்கள் அனைவருக் கொல்லப்பட்டார்கள். அந்த கைதிகளிடம் கடைசி நபரை ஹாலித் அவர்கள் கொல்வதற்காக முற்பட்டபோது நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதரை விட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது ஹாலித் நாயகம் (ஸல்) அவர்கள் இடம் நாயகமே அந்த கூட்டத்தில் மிகவும் கொடியவர் இவர்தான் என்று கூறியபோது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவரை பற்றி இப்போது தான் ஜிப்ரீல் (அலை) எனக்கு தகவல் தந்தார்கள். இவர் அந்த கூட்டத்தில் மிகப்பெரிய கொடை வல்லாளாக இருகின்றார் எனவே இவரை விட்டு விடுங்கள் என்று சொன்னார். இந்த தகவலை கேட்டவுடன் ஹாலித் (ரலி) அவரை விட்டு விட்டார்கள். உடனே அந்த ரோம் நாட்டு கைதி முஸ்லிமாகி விட்டார் .(நூல்: (துர்ருல் மன்சூர்)

அல்லாஹ் இல்லாதோருக்கு கொடுத்து உதவும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக! ஆமின்..

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 23 February 2023

ஜும்ஆ பயான்.24/02/2023

ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும், சிறப்புகளும்.

ஷஃபான் இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமாகும்.சிறப்புகள் பொருந்திய இம் மாதத்தை கண்மணி நாயகம் ﷺஅவர்கள்  தம் மாதம் எனக் கூறி   இம்மாதத்தை சிறப்பித்துள்ளார்கள்.

شَعْبَانُ شَھْرِیْ وَ رَمَضَانُ شَھْرُ اللّٰہِ ஷஃபான்,என்னுடைய மாதம்.ரமலான் அல்லாஹ்வின் மாதமாகும்.

இம்மாதங்களில் சிறப்புகளை உம்மத்திற்கு உணர்த்துவதற்காக கண்மணி நாயகம் ﷺஅவர்கள், ரஜப் பிறை பார்த்ததிலிருந்து துஆ செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

 اَللّٰھُمَّ بَارِکْ لَنَا فِیْ رَجَبٍ وَ شَعْبَانَ وَبَلِّغْنَارَمَضَانَ۔

(مشکوۃ المصابیح:رقم الحدیث 1396)

கஃபா கிப்லாவாக மாற்றப்பட்ட மாதம்..

#இம்மாதத்தில்தான் நாயகம் ﷺஅவர்களிள் புனித கஃபாவை நோக்கி மீண்டும் தொழ வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையும்,கோரிக்கையும்  நிறைவேறியது. 

அல்லாஹ் பகரா சூராவில்...

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.(அல்குர்ஆன் : 2:144)

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கஃபாவை நோக்கி தொழவேண்டும் என்ற இந்த ஆயத்தை அல்லாஹ் இம்மாதத்தில் தான் இறக்கிவைத்தான் .

#தயம்மம் சம்பந்தமான சட்டங்கள் கடமையானதும்...

#இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் போர்களில் ஒன்றான بنو المصطلق பனு முஸ்தலிக் போர் நிகழ்ந்ததும்.

#கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அன்னை ஹஃப்ஸா,அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா)இருவரையும் நிகாஹ் செய்து கொண்டதும்.

மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தும் ஷஃபான் மாதத்தில் தான் நடைபெற்றிருக்கின்றன.  

இஸ்லாமிய வருடத்தின் எட்டாவது மாதமான ஷஃபான்,رحمتஅருள் வளங்களையும்,برکتபரகத்களையும்,سعادتபாக்கியங்களையும் பொதிந்துள்ள சிறப்பு வாய்ந்த மாதமாகும்.இதனை  ரமலான் மாதத்தின்  முன்னோடி என்றும்,வரவேற்பு என்றும்,தயாரிப்பு என்றும் சொல்லலாம்.

ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும் சிறப்பும்.

இம்மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.இதனை ரமலான் மாதத்தின் தயாரிப்பு என ஆர்வமூட்டியுள்ளார்கள். 

ஹழ்ரத் ஸல்மான் பார்ஸி(ரலி)அவர்களின் அறிவிப்பு; 

خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: يا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ مُبَارَكٌ (صحیح ابن خزیمہ)

நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான் மாத இறுதி நாளில் எங்களுக்கு  பிரசங்கம் செய்தார்கள் "மக்களே!உங்களை நோக்கி மகத்துவமிக்க பரக்கத் பொருந்திய ஒரு மாதம் (ரமலான்)  வரவிருக்கின்றது"என்று கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

ஷஃபான் மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் அதிகம் நோன்பு நோற்பார்கள்.

:اَحَبُّ الشَّھْرِ اِلٰی رَسُوْلِ اللّٰہ ۖ اَن یَّصُوْمُ شَعْبَانَ یَصِلُہ بِرَمَضَانَ

(کنزالعمال رقم الحدیث ٢٦٥٨٦)

அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதம் ஷாபான், ரமலான் வரை தொடர்ந்து நோன்பு இருப்பார்கள்.

مَارَاَیْتُ رَسُوْلَ اللّٰہِ ۖ یَصُوْمُ شَھْرَیْنِ مُتَتَابِعَیْنِ اِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ

(ترمذی شریف۱/۱۵۵)

அன்னை உம்மு ஸலமா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான்,ரமலான் இரு மாதங்கள் தவிர தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை. 

அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

(ஸஹீஹ் புகாரி:1969 அத்தியாயம் : 30. நோன்பு)

அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

(ஸஹீஹ் புகாரி:1970 அத்தியாயம் : 30. நோன்பு)

ஷஃபான் மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஷபே பராஅத் இரவு.

இந்த மாதத்தின் 15ஆம் நாள் இரவை ஷபே பராஅத் இரவு என்று சொல்லப்படும்,இவ்விரவில் அல்லாஹ்வின்   مغفرت பாவ மன்னிப்பும், ரஹ்மத்தும் இறங்குகின்றது  என்று சஹாபாக்கள்,தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஷாபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கான மூன்று காரணங்கள்.

1)ரமலானை கண்ணியப்படுத்துவது, ரமலானுக்கான முன் தயாரிப்பு.

இம்மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்துவதற்காகவும்,ரமலானின் முன் தயாரிப்பிற்காகவும் அதிகம் நோன்பு நோற்றார்கள்.

ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கம்,ரமலானின் பிரத்யேக انوارஆத்மஒளியும்,برکاتபரகாத்துகளும் கிடைக்கப்பெறும்.அவற்றை அதிகம் பெற்றுக்கொள்ள ஷஃபானிலே அதிகம் நஃபிலான நோன்புகளை நோற்கக்கட்டளையிட்டார்கள்.

ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்னால் நஃபிலான தொழுகைகளை தொழுவதைப் போல ரமலானுக்கு முன் ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்க சொன்னார்கள்.

 اَیُّ الصَّوْمِ افضَلُ بَعْدَ رَمَضَانَ قالَ شعبانُ لِتَعْظِیْمِ رمضَانَ"  (ترمذی شریف ١/١٤٤)

ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது"ரமலானுக்கு பின் எந்த நோன்பு மிகச்சிறப்பானது?"

அதற்கவர்கள்"ரமலானை சங்கை செய்வதன் காரணமாக ஷஃபான்"எனறு கூறினார்கள். 


2)ஷஃபான் மாதத்தில்அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

شَعْبَانُ بَیْنَ رَجَبٍ وَ شَھْرِ رَمَضَانَ یَغْفُلُ النَّاسُ عَنْہُ یُرْفَعُ فِیْہِ اَعْمَال فَاُحِبُّ اَنْ لَّا یُ"شعبان(شعب الایمان،رقم الحدیث ۳۸۲۰)

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;ரஜப்,ரமலான் மாதத்தின் மத்தியிலுள்ள ஷாபான் மாதம்,அது பற்றி மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள்.அதில் தான் அமல்களை (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகிறது.அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் நான் அதிகம் நோன்பாளியாக இருப்பதற்கு பிரியப்படுகிறேன். 

حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ ‏.‏ قَالَ ‏ “‏ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‏”‏ ‏.‏

سنن النسائي – الصيام (2357). مسند أحمد – مسند الأنصار رضي الله عنهم (5/201)

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.

(அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

(நூல் : நஸாஈ 2357, முஸ்னத் அஹ்மத் (5/201)

3)மலகுல் மவ்திடம் மரணிப்போரின் பட்டியலை ஒப்படைக்கப்படுகிறது.

اِنَّ اللّٰہَ یَکْتُبُ فِیْہِ مَیْتَةً تَہْلِکُ السَّنَةَ وَاُحِبُّ اَنْ یَّأْتِیَنِیْ اَجَلِیْ وَاَنَا صَائِم ۔ (مسند ابو یعلی، رقم الحدیث ٤٩١١)

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹ் இவ்வருடம் மரணிப்போரின் பட்டியலை இதிலே எழுதுகிறான்.

எனதுப்பெயர் மரணிப்போரின் பட்டியலில் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நான் நோன்பாளியாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்.

அல்லாஹுத்தஆலா ஷஃபான் மாத நன்மைகளையும்,பரகத்துகளையும் நமக்கு வழங்கி,ரமலான் மாத நோன்பை முழுமையாக நோற்கும் பாக்கியத்தை வாழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...