பேரிழப்புகள் தரும் படிப்பினைகள்(சிர்யா,துருக்கி பூகம்பம்-2023)
முன்னுரை :
இஸ்லாமிய கிலாபத்தின் அடையாளமாய் இருந்த துருக்கி.
உஸ்மான் என்பவரின் தலைமையில் பைசாந்தியரை வீழ்த்தி 13ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் துருக்கியை மையமாக வைத்து தொடங்கிய உஸ்மானியர்களின் ஆட்சி 1924 வரை தொடர்ந்திருந்தது. இக்காலப் பகுதியில் 38 உஸ்மானிய சுல்தான்கள் ஆட்சியாளர்களாக விளங்கியுள்ளனர். இவர்களில் மிகவும் முக்கியமான ஆட்சியாளர்தான் கி.பி. 1451 இல் அரியாசனமேறிய இரண்டாம் முஹம்மத். இவர்தான் கி.பி. 1453 இல் (ஹிஜ்ரி 857) உரோமர்களுடன் போரிட்டு கொன்ஸ்தாந்து நோபிளை வெற்றி கொண்டார்.
இதனால்தான் இவர் வரலாற்றில் “பாதிஹ் முஹம்மத்” என அழைக்கப்படுகின்றார். நபி (ஸல்) அவர்களிடம் சில தோழர்கள் இஸ்லாமிய கொன்ஸ்தாந்து நோபிளையா அல்லது ரோமையா முதலில் வெற்றி கொள்ளும் என வினவிய போது, நபி (ஸல்) அவர்கள் கொன்ஸ்தாந்து நோபிளே முதலில் வெற்றி கொள்ளப்படும் என சுபசோபனம் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி கிடைத்த இம்மகத்தான வெற்றியை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் வெகுவிமர்சையாகக் கொண்டாடின.
பின்னர் இந்நகரையே சுல்தான் முஹம்மத் தலை நகராக்கி இஸ்தான்புல் (இஸ்லாமிய நகரம்) என பெயரை மாற்றி அமைத்தார். இவ்வெற்றிக்குப் பின் இஸ்லாம் எட்டுத்திக்குகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. உஸ்மானியர்கள் துருக்கியைத் தளமாகக் கொண்டே ஆட்சியை விஸ்தரித்தனர். இதன் விளைவாக, உஸ்மானிய சுல்தான் முதலாம் ஸலீம் கி.பி. 1517 இல் மம்லூக்கியரை வெற்றிகொண்டு எகிப்து, சிரியா என்பவற்றைக் கைப்பற்றி துருக்கியப் பேரரசுடன் இணைத்துக்கொண்டார். கி.பி. 16ம் நூற்றாண்டளவில் உஸ்மானிய ஆட்சியானது வட ஆபிரிக்கா வரை வியாபித்திருந்தது. மேலும் அரபுத்தீபகற்பத்தின் ஹிஜாஸ¤ம், யமனும் உஸ்மானியர் வசமானதோடு, குறிப்பாக போல்கன் பிரதேசங்கள் இவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டன.
உண்மையிலேயே உலக வரலாற்றில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஏக காலத்தில் ஆட்சி செய்த பெருமை துருக்கிய உஸ்மானியர்களையே சாரும். துருக்கிய சுல்தான் அன்று பேரரசின் சக்கரவர்த்தியாக மாத்திரமன்றி முஸ்லிம் உலகின் ஆன்மீகத் தலைவராகவும் விளங்கினார். உஸ்மானிய கலீபாக்களில் சுல்தான் சுலைமானின் ஆட்சிக்காலம் உஸ்மானிய கிலாபத்தின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஏனெனில் இவர் உஸ்மானியர்களின் கீழிருந்த பல நாட்டவர்கள், இனத்தவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய ஒரு சட்ட யாப்பை வகுத்தார். உஸ்மானிய கிலாபத்தின் மற்றுமொரு சிறந்த ஆட்சியாளரான சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் (கி.பி. 1876 - கி.பி. 1909) கிலாபத்தை வீழ்த்துவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்த்தவ, யூத சதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்தார். இவரது இத்தகைய செயலானது இஸ்லாத்தின் எதிரிகளை இன்றும் கோப மேற்றியது. எவ்வாறாயினும் கிலாபத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற தூண்டுதலை வழங்கியது.
இதன் பின்னணியில் கலீபாவை சிறைப்பிடித்த யூத சக்திகள் அவரை கொலையும் செய்தனர். இவ்வாறு இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த சமயம்தான் 1923 இல் இரண்டாம் அப்துல் மஜீத் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இச்சமயத்தில் துருக்கியில் ஜனநாயகக் கோஷம் மேலோங்கிக் காணப்பட்டதால் தேசிய மகா சபையானது கலீபாவை 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கட்டளையிட்டு 1923 துருக்கியை குடியரசாக அறிவித்தது. அதன் முதலாவது ஜனாதிபதியாக அதே வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக சோஷலிசக் கட்சியின் தலைவர் முஸ்தபா கமாலை நியமித்தது. நபி (ஸல்) அவர்கள் மரணித்து அவர்களது தோழர்களால் நிறுவப்பட்டு, இறுதியாக துருக்கியர்களால் சுமக்கப்பட்ட இந்த இஸ்லாமிய கிலாபத்தை தங்களது கைகளாலேயே அழித்துக் கொண்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
இயற்கை பேரழிவு...
உலக வரலாறென்பது இயற்கை சீற்றங்கள்,போர்கள் மற்றும் பேரழிவுகளால் நிரம்பியுள்ளது,சில இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரழிவுகள் மனித மக்கள்தொகையில் பெரும் பகுதியை கண் இமைக்கும் நேரத்தில் அழித்துவிட்டிருக்கின்றன.
மக்களின் வாழ்க்கையில் நிலநடுக்கங்களின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை, நீங்கா துன்பங்களை தரவல்லவை.
மற்ற பேரழிவுகளுடன் ஒப்பிடும்போது பூகம்பங்களினால் ஏற்படும் விளைவுகள்,போர்கள் மற்றும் தொற்றுநோய்களை விட கொடியவை,
மனோதத்துவ நிபுணர்களின் கூற்று; பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தவன்,மனதளவில் பயம்,துக்கத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் நிம்மதியான தூக்கம் இன்றி தவிக்கிறான்.
உலகப் புகழ் பெற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் கூற்றுப்படி:இதுவரை உலகில் ஏற்பட்ட பூகம்பங்களால் தோராயமாக மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார இழப்புகள் ஏராளம்.கணக்கிற்கு அப்பாற்பட்டது.
உண்மையில், இந்த பூகம்பங்கள், அல்லாஹ்வின் அத்தாட்சி ஆகும்.கியாம நாளில் அடையாளங்களில் உள்ளவை ஆகும்.
பூகம்பம் குறித்து இஸ்லாம்.
குர்ஆன்,ஹதீஸ்,வரலாறுகள் மற்றும் தம்மை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டு, முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்வது முஸ்லிமுக்கு அழகல்ல.அது ஈமானில் உள்ள குறைபாட்டின் அடையாளமாகும்.
குறிப்பாக பேரழிவுகளின் போது, முஸ்லிம்களாகிய நமக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன, ஒன்று நாம் நமது ஈமானையும்,நமது இஸ்லாமிய சகோதரர்களின் ஈமானில் ஏற்படும் தடுமாற்றங்களை விட்டும் பாதுகாப்பது.
இரண்டாவது இது போன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன என்பதனை நாட்டின் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு தெரியப்படுத்துவது நமது இரண்டாவது பொறுப்பாகும்.
எனவே, குர்ஆன், ஹதீஸ் மற்றும் வரலாறு ஒளியில் பூகம்பங்கள் தொடர்பாக இஸ்லாமிய வழங்கும் தீர்வை காணலாம்.
திருக்குர்ஆனில் ஷுஐப்(அலை) அவர்களின் கூட்டத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையையும்,அதன் காரணத்தையும் படிப்பினையாக கூறப்பட்டுள்ளது.
ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் அளவை,நிறுவையில் மோசடி செய்தனர்.இந்த பழக்கம் அவர்களிடம் அதிகரித்துக் கொண்டே சென்றது.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அநியாயமாக பேரம் பேசி அடித்து வாங்குவது,விற்கும்போதுஅளவை,நிறுவையில் மோசடி செய்வதும் அவர்களின் இயல்பாகவே மாறிவிட்டது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் எழுதுகிறார்கள்;பொருளாதாரத்தில் மட்டுமல்ல உரிமைகளிலும் பெரும்போது அதிகமாக பெறுவதும் திரும்ப வழங்கும்போது குறைத்து தருவதும் ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் தீய பண்பாகவே மாறிவிட்டது.
ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் அளவை,நிறுவையில் மோசடி செய்த காரணத்தால் பூகம்பத்தினால் வேதனை செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ ۛۙ
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.(அல்குர்ஆன் : 7:91)
இவ்விதமே மூஸா நபியின் கூட்டத்தவர்கள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டனர்.
وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 7:155)
செல்வங்களை பதிக்க வைக்கும் செல்வந்தர்களுக்கு காரூனின் அழிவை அல்லாஹ் படிப்பினை ஆக்கினான்.
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.(அல்குர்ஆன் : 28:81)
ஹதீஸில் பூகம்பங்கள் பற்றி...
صحيح البخاري
1036 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ - وَهُوَ القَتْلُ القَتْلُ - حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»
அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவு பறிக்கப்படும் வரை, பூகம்பங்கள் அதிகரிக்கும் வரை ,நேரங்கள் சுருங்கும் வரை, குழப்பங்கள் தோன்றும் வரை , கொலைகள் அதிகரித்து, மற்றும் செல்வம் உங்களிடையே அதிகரித்து அது நிரம்பி வழியும் வரை கியாம நாள் வராது என்றார்கள்.
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)
மூன்று பூகம்பங்கள்
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவர்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் மிகவும் பிரமாண்டமானவையாக அமைந்திருக்கும்.
அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை.
وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا
(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.(அல்குர்ஆன் 17/59)
அல்லாஹ் இந்த பூமியை படைத்து அதை நமக்கு இளைப்பாறும் இடமாகவும், தொட்டிலாகவும், படுக்கையாகவும், விரிப்பாகவும் ஆக்கியுள்ளான்.
இறைவனின் இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் நிகழும் நிகழ்வுகளையம் நாம் சிந்தித்துப் பார்த்தால், இதைப் படைத்தவனின் மகத்துவம் நமக்கு புரிய வரும். அவன் வீணாக எதையும் படைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது. (அல்குர்ஆன் (67/15)
நிலநடுக்கம் ஏன்?
நில நடுக்கம், பூகம்பங்கள் பூமியின் தட்ப வெட்ப மாற்றத்தினால் ஏற்படுகின்றது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்களை இவ்வுலகில் நிகழ்த்துவது அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் இவை மட்டும் காரணமல்ல. மாறாக மனிதன் தன்னை படைத்த ரப்பை மறந்து தன் மனம் போன போக்கில் வாழும் போதும், அநியாயங்கள், அழிச்சாட்டியங்கள், அக்கிரமங்கள் போன்ற பாவங்களை செய்யும் போதும் இதுப் போன்ற வேதனைகளை அல்லாஹ் பூமியில் ஏற்படுத்துகிறான். சில சமயம் பசி, பட்டினி, பஞ்சம் பயம், பொருளாதார இழப்பு, உயிர் இழப்பு, போன்ற சோதனைகளையும் ஏற்படுத்துகிறான். இதையே அல்லாஹ் திருமறையில்...
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30/41)
நில நடுக்கம் என்பது இறைவனின் கோபமா? அல்லது இது ஒரு பேரழிவா ?
பூகம்பங்கள் என்பது அல்லாஹ்வின் பேராற்றலில் கட்டுப்பட்டதாகும். அதை இவ்வுலகில் அவ்வப்போது ஏற்படுத்துவது மனிதன் தன்னை படைத்த ரப்பை நினைத்து பயந்து வாழ்வதற்காகும்.
சில சமயம் காஃபிர்களுக்கு எதிரான கோபமாகவும் பழிவாங்கலாகவும் இருக்கலாம். சில சமயம் முஸ்லிம்களுக்கு படிப்பினையூட்ட இவ்வுலகில் வேதனையாகவும், மறுமையில் அதனால் நிறைய நன்மைகளை தருவதற்காகவும் இருக்கலாம்.
ஒரு தடவை பூமி உள்வாங்கிய போது இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்..
قال ابن مسعود أيها الناس إن ربكم يستعتبكم فاعتبوه ) .
ஒ மனிதர்களே! அல்லாஹ் உங்களிடம் நீங்கள் பாவம் செய்வதிலிருந்து மீள்வதையும் அவன் திருப்பொருத்தத்தை பெறுவைதையும் எதிர்பார்கிறான் என்றார்கள். மேலும் கடுமையான சூராவளி காற்று ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்களின் முகத்தில் அதை உணர்ந்தேன் என்றார்கள் .(நூல் புகாரி)
ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்:
பெரும்பாலும் நிலநடுக்கங்கள் கியாமத் நாளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே நில நடுக்கம், கடுமையான காற்று, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது இறைவனின் அச்சம் ஏற்பட்டு அவன் பக்கம் வேண்டும்.
சில சமயம் பூகம்பங்கள் காஃபிர்களுக்கு எதிரான கோபமாகவும் பழிவாங்கலாகவும் இருக்கலாம். இதற்கு முன்பாக பல சமுதாயம் இறை நிராகரிப்பின் காரணமாக அழிக்கப்பட்டுள்ளது.
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ ۖ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன் 29/ 40)
தண்டனையாக...
فعن أي موسى قال : قال رسول الله أمتي هذه أمة رحومة ليس بها عذاب في الآخرة وعذابها في الدنيا الفتن والزلازل والقتل ) رواه أبو داوود وأحمد بسند صحيح .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத் ரஹ்மத் செய்யப்பட்ட உம்மத்தாகும். மறுமையில் எந்த வேதனையும் பெற மாட்டார்கள். மாறாக உலகத்திலே குழப்பங்கள், கொலை, பூகம்பம் போன்ற வேதனையை அடைவார்கள்.
இந்த நிலநடுக்கங்கள் நாளை கியாமத் நாளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கங்களின் அபாயத்தை முன் கூட்டியே நமக்கு காட்டுகின்றன.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும் (அல்குர்ஆன் 22/01 -02 )
பேரிழப்புகள் தரும் படிப்பினைகள்.
قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿9:51﴾
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
சோதனை இரண்டு வகை.
இவ்வாறு ஏற்படும் அழிவுகளை “இயற்கை அனர்த்தம்” என வர்ணிக்கிறார்கள் இறை நம்பிக்கையற்றவர்கள். இந்த அனர்த்தங்களை தடுத்து நிறுத்த நவீன தொழில் நுட்பங்களால் முடியவில்லை. சுனாமி முன் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட கருவியால் எந்தப் பலனம் நடக்க வில்லை. பல் வேறுபட்ட தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அழிவுகளை தடுத்து நிறத்த முடியவில்லை.
அல்லாஹ்வை நம்பி வாழும் முஸ்லிம்கள் இந்த அழிவுகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தம் என்றா அல்லது அல்லாஹ்வின் சோதனைகள் என்றா? நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகள் என்றே இறை விசுவாசிகள் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வின் சோதனைகள் இரு வகைப்படும் என்பதை அல்குர்ஆனினூடாக அறிகிறோம்.
முதலாவது, மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் அக்கிரமங்களிலும் மூழ்கும் போது அல்லாஹ் சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனை பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்துவதற்கும் மக்களுக்கு படிப்பினைக்குரியதுமாக ஆக்கு கிறான்.
இரண்டாவது, மக்களின் ஈமானை பரீட்சிப் பதற்கும் பலப்படுத்துவதற்குமுரிய சோதனை யாக ஆக்குகிறான். சுவனத்திற்குரிய கூலி யாகவும் ஆக்குகின்றான். மேலும் உலக வாழ்வை சோதனைக்குரிய வாழ்வாகவே அமைத்தும் இருக்கின்றான்.
திடீர் மரணங்கள் தண்டனையல்ல.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்துவிட்டன என அம்ர் கூறுகிறார். எனவே, அவர் இறந்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள்; அவருக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்' எனக் கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 1268)
உம்மு ஹராம்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் 'மன்னர்களாக' அல்லது 'மன்னர்களைப் போன்று' இருந்தார்கள்' என்று கூறினார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். அப்போது எனக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், 'ஏன் சிரிக்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் புனிதப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்' என்று முன்புபோன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.(ஸஹீஹ் புகாரி 7002 )
தொழுது,இறைவனிடம் மன்றாடுவதே தீர்வாகும் .
அல்லாமா கசானி(ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்;திடுக்கமான,இக்கட்டான சந்தர்ப்பங்களில் அதிகம் தொழ வேண்டும்.குறிப்பாக பூகம்பம் ஏற்படும் போது முஸ்லிம்கள் நபிலான தொழுகைகளையும்.பயபக்தியோடு துஆவிலும் ஈடுபட வேண்டும்.இதற்கென குறிப்பாக இந்த தொழுகையும் இல்லாததால் பொதுவாக இரண்டு ரகஅத் நஃபிலாக தொழலாம்.
பஸராவில் நிலநடுக்கத்தின் போது தாம் தொழுததாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (بدائع الصنائع ۱/۲۸۲)
கீழ் வரும் துஆக்களையும் ஓதலாம்
ஹஸ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் பூகம்பத்தின் போது மக்களை பின்வரும் துஆக்களை ஓதிவர வலியுறுத்தினார்கள்.
இந்த மூன்றும் குர்ஆனில் வரும் நபிமார்கள் ஓதிய துஆக்களாகும்.
1- ஹழ்ரத் ஆதம்(அலை)அவர்கள் கேட்ட துஆ;
رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் : 7:23)
2- நூஹ் நபி(அலை)அவர்கள் கேட்ட துஆ;
قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 11:47)
3- ஹஜ்ரத் யூனுஸ்(அலை)அவர்கள் கேட்ட துஆ;
اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 21:87)
(الجواب الکافی،ص:۴۷)
இச்சந்தர்பத்தில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்.
முஃப்தி முஹம்மது தகி உஸ்மானி ஹழ்ரத் அவர்கள் எழுதுகிறார்கள்;
பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, உண்மையான முஃமின் இந்த நிகழ்வினால் ஏற்படும் நன்மை தீமைகளை நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அவனே பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்க கூடியவன். அவனின் நாட்டமின்றி ஒர் அணுவும் அசையாது.அவன் சூட்சுமங்கள் புரிகிறதோ, இல்லையோ அதில் கருத்துக்கள் கூற உரிமையில்லை என்று விளங்குவான்.(اصلاحی خطبات۱۶/۱۳۸)
இடிபாடுகளில் சிக்கி மரணிப்பவர் ஷஹீத் அந்தஸ்தை பெற்றவராவார்.
عنْ أبي هُرَيْرةَ، ، قالَ: قالَ رَسُولُ اللَّه ﷺ: الشُّهَدَاءُ خَمسَةٌ: المَطعُونُ، وَالمبْطُونُ، والغَرِيقُ، وَصَاحبُ الهَدْم وَالشَّهيدُ في سبيل اللَّه متفقٌ عليهِ.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஐந்து நபர்கள் ஷஹீத் உடைய அந்தஸ்தை பெறுகின்றனர்.
1) காலரா நோயால் இறந்தவர்
2) வயிற்று வலியால் இறந்தவர்
3) நீரில் மூழ்கி இறந்தவர்
4) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்.
5) அல்லாஹ்வின் பாதையிலே இறந்தவர்.
முடிவுரை :
பாவங்களால் தான் பூமியிலே இதுப் போன்ற இயற்கை சீற்றங்கள் iநில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரக்கூடிய பாவங்களான வட்டி , விபச்சாரம், அளவையில் மோசடி , பிறரை ஏமாற்றுதல், பாட்டு பாடுதல், தொழுகையை விடுதல் போன்ற பாவங்களிலிருந்து தவிர்ந்திருப்போம்.
மேலும் திக்ரு, திலாவத், தொழுகை, அதிகமாக தான தர்மம் செய்தல், துஆ செய்தல், அதிகமாக இஸ்திஃபார் செய்தல், பாவமன்னிப்பு எனும் தவ்பாவை அதிகப்படுத்துதலை இதுப் போன்ற நேரங்களில் கடைபிடிப்போமாக! ஆமின்...
சிர்யா,துர்க்கி பூகம்பத்தில் உயிர்நீத்தவர்களின் பிழைகளை பொறுத்தருள்வானாக!பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் முதியவர்கள் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்து குணமடைய செய்வானாக!அல்லாஹ் இது போன்ற பேரிடர்களை விட்டும் நம்மையும்,நம்சந்ததினரையும் பாதுகாப்பான!ஆமீன்...