தலைப்பு:
காக்கப்பட வேண்டிய வக்ஃபு சொத்துக்கள்.
"வக்ஃப்"என்றால் என்ன?
"வக்ஃப்"وقف இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் ஒரு முக்கிய பகுதியாகும்,
இஸ்லாமிய வளரும் தலைமுறையினர்,வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஈடேற்றத்திற்கு வக்ஃப் பிரகாசமான பக்கமாக அமைகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள், சமுதாயத்தின் நல்ல பல நோக்கங்களுக்காக வக்ஃப் எனும் தானத்தை வழங்கியுள்ளனர்.
"வக்ஃப்"وقف என்பது ஏழை, எளியவர்களுக்கு மட்டுமல்ல, public works ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் பொதுப்பனி என்பதே இதன் நோக்கமாகும்.
வக்ஃப் என்பதன் பொருள்: வக்ஃப் என்பதன் வரையறை, சொத்தின் லாபத்தை அனைவருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு உரிமையைத் தடுத்துவைத்துக்கொள்வதாகும்.அதை விற்கவோ மாற்றவோ முடியாது.
வக்ஃப் وقف என்பது وقف یقف ،وقفاََ وقوفاََ என்கிற அரபி மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.இதன் அசல் பொருள்:الحبس والمنع அதாவது நிறுத்துதல், பிணைத்தல், எவராவது மூன்றாம் நபருக்குச் சொந்தமாவதைத் தடுப்பது.
வக்ஃபின் சட்டம்:
வக்ஃப் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், وقف تام(அதாவது முழுமையான) வக்ஃப் அவசியமாகும் . அதனால் அதை விற்பது, பரிசளிப்பது போன்றவை ஹராமும்,ஷரிஆ சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்.
ففي الصحيحين أن عمر رضي الله عنه قال: يا رسول الله ! إني أصبت مالاً بخيبر لم أصب قط مالاً أنفس عندي منه؛ فما تأمرني فيه ؟ قال: (إن شئت حبست أصلها وتصدقت بها, غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث)
உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி)
இஸ்லாத்தின் முதல் வக்ஃப் நபி முஹம்மது ﷺ அவர்களால் செய்யப்பட்டது.நபி ﷺ ஏழு தோட்டங்களை வக்ஃப் செய்தார், இது இஸ்லாத்தின் முதல் வக்ஃப் ஆகும். இந்த ஏழு தோட்டங்களும் உஹத் போரில் முஸ்லிம்களால் போரிட்டு கொல்லப்பட்ட "முகைரிக்" என்ற ஒரு யூதருக்கு சொந்தமானதாகும். அவன் "நான் இறந்தால் எனது செல்வம் (சொத்து) ஹஸ்ரத் முஹம்மத்ﷺஅவர்களுக்கு சொந்தமாகட்டும்.அதனை .அல்லாஹ்வின் விருப்பப்படி செலவு செய்யட்டும்."என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.
இஸ்லாத்தில் இரண்டாவது வக்ஃப் ஹஸ்ரத் உமர் பாரூக் (ரலி)அவர்களால் செய்யப்பட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பல வக்புகளை அளித்தனர்.
வக்ஃபின் நோக்கம்:
இஸ்லாத்தின் நிதிஅமைப்பில் பொருளாதார ஸ்தரத்தன்மைக்கு வக்ஃப் ஒரு அடிப்படை இடத்தைப் பெற்றுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏழை, எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவும், முஸ்லிம்களை அறிவியல் மற்றும் கலை,கல்வி முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
நோயுற்றோர் மற்றும் துன்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்,
கல்விமான்களுக்கு உதவவும், அறிவு ஜீவீகளின் நிதி ஆதரத்திற்கும் இஸ்லாமிய வக்ஃப் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
வக்ஃபு சொத்தின் நிபந்தனைகள்.
ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, அதை வாரிஸ்தாரர்களோ அல்லது தனிநபரோ அல்லது ஆட்சியாளர்களோ உரிமைக் கொண்டாடமுடியாது.
ஒருவேளை ஆட்சியாளர்கள் வக்ஃபு சொத்துக்களை தனி உரிமை கொண்டாடினால் அவர்களை எதிர்த்து போராடுவது முஸ்லிம்கள் மீது அவசியம்.
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»
ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள். (நூல் : நஸாயீ- (4138)
அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
வக்ஃப் வாரியம் என்றால் என்ன?
வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.
தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது.
இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம்,
முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது.
வக்ஃப் வாரியம் கடந்து வந்த பாதை.
இந்திய முஸ்லீம்களின் எழுச்சி,தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அன்றைய காங்கிரஸ் அரசு 1954 வக்ஃப் சட்டம் என்று ஒரு நொண்டி வக்ஃப் சட்டத்தை உருவாக்கியது, இது முதன்முதலில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதில் ஏராளமான ஓட்டைகளும்,குறுக்கு வழிகளும் இருந்தன.
இந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் தலைமையிலிருந்து எதிர்ப்பு குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அரசு, வக்ஃப் சட்டம் 1959தை இயற்றியது.முந்தைய சட்டத்தை போன்று பல குறைபாடுகள் இதிலும் இருந்தன.
அவற்றை நீக்க 1964ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
அதன் பிறகு இறுதி திருத்தம் செய்து 1969ல் இயற்றப்பட்ட சட்டம் தொடர்ந்து 26 ஆண்டுகளாக நாட்டில் செயல்பாட்டில் இருந்தது.
மொத்த வக்ஃப் சொத்துக்கள்.
இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை. ஆனால் இன்று அவை அனைத்தும் கானல் நீராய் மாரிப்போய் விட்டது.
وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் : 2:188)
فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 2453.)
அடுத்தவர்களின் பொருளின் மீது அஞ்சி நடந்த நம் முன்னோர்கள்.
முஹத்திஸ்களின் அமீர் என்று போற்றப்பட்ட தபவுத்தாபியீன்களின் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள்.
சிரியா தேசம் சென்று அங்கிருக்கின்ற முஹத்திஸ்கள் இடத்தில் பாடம் படித்துவிட்டு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய சிறிய குச்சி ஒன்று இருக்கிறது.
அப்போதுதான் ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய குச்சி உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டு ஈராக்கிலிருந்து சிரியா தேசம் சென்றார்கள். அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்தக் குச்சியை யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குச்சியை கொடுத்துவிட்டு திரும்ப அவர்கள் ஈராக் வருகிறார்கள்.
இந்திய இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்தும்,வக்ஃப் சட்டம்1995ஐ திரும்ப பெறும் மசோதவும்.
நம் இந்தியத்தாய் திருநாட்டில் 35 வக்பு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.கர்நாடக வக்பு வாரியம் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய சிறந்த வக்ஃப் வாரியமாகும்.
நாட்டின் பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒப்பபீட்டளவில் மகாராஷ்டிரா வக்ஃப் வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது,
அதிகளவில் சட்டவிரோத வக்ஃப் ஆக்கிரமிப்புகள் மகாராஷ்டிராவிலேயே நடந்துள்ளன.சில அரசியல் புள்ளிகள், மற்றும் வாரிய அதிகாரிகளின் துணையோடு
நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன.
தற்போதைய நாட்டின் வக்ஃப் சொத்தின் மதிப்பு 1.20 லட்சம் கோடி அதாவது 12000 பில்லியன் டாலர் மதிப்புக்கு நிகர் ஆகும்.
இவற்றில் ஒரு பத்துசதவிகிதமாவது 10% அதாவது 12000 கோடியையாவது முஸ்லிம்களின் கல்வி, மருத்துவம் போன்ற சமூக மேம்பாடுகளுக்கு முறையாக செலவிடப்பட்டால் அரசின் எந்த உதவியோ,ஒதுக்கீடோ இல்லாமலே தன்னிறைவான வளர்ச்சி அடைந்த சமூகமாக இஸ்லாமியர்கள் இருந்திருப்பார்கள்.(فکر وخبر۔آن لائن اخبار)
இந்தியாவில் வக்ஃபின் நிலை:
நமது மாபெரும் இந்திய திருநாட்டில் வக்ஃப் விஷயத்தில் அரசு தீவிரம் காட்டியிருந்தால், அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லாமல் போயிருக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது முஸ்லிம்களிடம் எதுவும் இல்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முடிவில்லாத கலவரங்களால் இஸ்லாமிய சமூகம் நிலைகுலைந்து போய் இருந்தது.
முஸ்லிம்களின் உயிரும், உடைமையும் ஈவு இரக்கமின்றி சூறையாடப்பட்டு, பெரும் நில உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்களை ஏலம் விடப்பட்டன, எண்ணற்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள், தர்காக்கள், (கப்ருகள்)கல்லறைகள், மடங்கள், ஆஷுரா கானாகள், மதரஸாக்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டன.முஸ்லிம்கள் சுதாரித்துக் கொள்வதற்குள்ளாக நிலைமை மிக மோசமாக கை மீறி விட்டிருந்தது.
முஸ்லீம் மன்னர்கள், ஆட்சியாளர்கள், நவாப்கள் மற்றும் செல்வந்தர்கள் முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்த வக்ஃப் நிலத்தை, அரசு பல இடங்களில் பெரிய கட்டிடங்கள் கட்டி, பல ஏக்கர் நிலங்களுக்கு வேலி அமைத்து,மூடிவிட்டன.
வக்ஃப் நிலங்கள் மிகக் குறைந்த வாடகையில் ஆக்கிரமிக்கப்பட்டன.
இன்றும், அரசு தனது அலுவலகங்களை எண்ணற்ற வக்ஃப் சொத்துக்களில் ஆண்டு வாடகைக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை நடத்தி வருகிறது.
இறுதியாக வக்ஃப் சட்டம் 1995 ஐ அரசு, உருவாக்கியது.ஆனால் வழக்கம் போல் இந்த சட்டத்தில் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
1995 சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்க துவங்கியதால் மற்றொரு சட்டத்தை அமைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. வக்ஃப் சட்டம் 2010 என்று பெயரிடப்பட்ட குழு அமைக்கப்பட்டது.
நிலத்தின் தற்போதைய சந்தைமதிப்பு, கடந்த கால நிலவரத்தை நாம் மதிப்பாய்வு செய்தால், கடந்த சில தசாப்தங்களில், நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும் முதலீடும் நிலத்தின் விலையை விண்ணுக்கு உயர்த்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
கார்ப்பரேட் கம்பெனி முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடம் கிடைப்பது கடினமாக இருந்த வேலையில். அரசு, சில சமயங்களில் வக்பு வாரியத்தின் அறங்காவலர்களிடமும், சில சமயங்களில் மத்திய வாரியம் முதல் மாநில வக்பு வாரியம் வரையிலான உயர் அதிகாரிகள் உட்பட அதிகாரிகளிடமும் வக்பு நிலங்களை கேட்டு பெற்றன.
இதனால் ஏற்பட்ட மிக மோசமான விளைவு;
நாட்டின் பாரம்பரிய வக்பு சொத்தை அரசும்,பன்னாட்டுநிறுவனங்களும்,தொழிற்சாலைகளும் நாசமாக்கின,
இதனை விடவும் மிகப் பெரிய இழப்பு. கோடிக்கணக்கான, ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்களை முஸ்லிம்களே விற்று நாசமாக்கினர் என்பது மிகவும் வருந்ததக்க செய்தியாகும்.
பல்வேறு குழுக்களை நிறுவுதல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள்.
வக்ஃப் சொத்துக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு குழுக்களை அமைத்தது. இதனுடன், பல கமிஷன்களும் வக்ஃப் விதிமுறைகளுக்கான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கின. இதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிட்டி, தேர்வுக்குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு போன்றவை அடங்கும்.
இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டால், முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடத்தக்க அளவில் அடைய முடியும், அவர்களிலுள்ள வறுமையை அகற்றி ஓரங்கட்டப்பட்டு முடிவுக்கு கொண்டுவரமுடியும்.
ஆனால் இது சாத்தியமாகுமா?அரசு மனது வைத்தால் சத்தியமாகும். இந்திய முஸ்லிம்களின் வளர்ச்சியும் செழுமையும்,இந்தியாவின் செழுமையும், வளர்ச்சியும் வளமும் அல்லவா?
20 கோடி முஸ்லிம்கள் அப்படியே தனித்து விடப்பட்டு, அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், அது நாட்டுக்கு பெருமையா?
வாகனத்தின் ஒரு சக்கரம் நன்றாகவும், மற்றொன்று பலவீனமாகவும் இருந்தால், உடலின் ஒரு உறுப்பு வலுவாகவும், மற்ற உறுப்பு செயலிழந்தும் பலவீனமாகவும் இருந்தால் அதனை என்னவென்று சொல்வது?
இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையும்,விரும்பமும் என்னவென்றால் நவாப்கள், மன்னர்கள், உன்னதமான தனவந்தர்கள், அர்ப்பணித்த வக்ஃப் சொத்துக்களுக்கு குறைந்தபட்சம் சட்ட உரிமையாவது கொடுக்கப்படவேண்டும், பல ஆண்டுகளாக அவற்றை அரசு வைத்திருக்கிறது, முஸ்லிம்களுக்கு நிலமோ,நிலம் சார்ந்த எந்த உரிமையும் இல்லை,
குறைந்தபட்சம் தற்போதைய சந்தை நிலவர படி வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். வக்ஃப் சொத்துக்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை வைத்திருப்பவர்களை அகற்ற வேண்டும். பட்ஜெட்டில் வக்ஃபிற்கு நிதிஒதுக்கப்படுகிறதா?தற்போது நாட்டில், இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக, அதிக பட்ச சொத்துக்கள்,நிலங்கள், வக்ஃப் வாரியத்திடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
1996ல், ராஜ்யசபா தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 2006ல் ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது.2008ல் பாராளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து கமிட்டிகளும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன.
சச்சார் கமிட்டி பரிந்துரைகள்:(வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்திட சச்சார் கமிட்டி முன்வைத்த பரிந்துரைகள்.)
1)நாட்டில் பரவலாக உள்ள ஐந்து லட்சம் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கும் முறையை மேம்படுத்த வேண்டும்,
பொதுப்பணித்துறை, நீதி,நிர்வாக துறை அளவுக்கு வக்ஃப் வாரியத்தை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக ஆக்கப்படவேண்டும்.அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (2) சமூக நலன் தேசிய வக்ஃப் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட வேண்டும்.
(3) ஐந்து லட்சம் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வரையறுக்கப்பட்ட வாடகை போன்ற சட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
(4) வக்பு வாரியத்துக்கு சட்டப்பூர்வ அமைப்பு என்கிற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்
(5)ஓராண்டுக்குள் அரசால் பயன்படுத்தப்படாத வக்பு நிலத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், எண்ணற்ற அரசு நிறுவனங்கள் வக்ஃப் சொத்துக்களை கைவசம் வைத்திருப்பதாகவும், இன்னும் சில சதுர அடி கட்டிடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு மீதமுள்ள நிலம் காலியாக இருப்பதும் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது.
6)அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள (காணி)சொத்துக்கள், அங்கு அரச கட்டிடம் இல்லாத அல்லது காலியாகக் கிடக்கும் காணிகள் முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கும் பொது சுகாதார நிலையங்களுக்கும் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
(7) அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை, 6(ஆறு)மாதத்திற்குள் காலி செய்து, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகையை மாற்றி, தற்போதைய சந்தை நிலவரப்படி வாடகை வழங்க வேண்டும்.
(8)வக்ஃப் வாரியத்தின் அனைத்து முடிவுகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் முஸ்லிம் தனிவாரிய சட்ட அமைப்பு மற்றும் இஸ்லாமிய சட்டங்களின்படி எடுக்கப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் ஜமாஅத்துகளின் பிரதிநிதித்துவம் அவசியம் ஆகும்.
(9)எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அல்லது உறுப்பினரும் வக்பு வாரியத்தின் தலைவராக இருக்கக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
10) ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
(11) வக்ஃப் வாரியத்தின் குத்தகை 11 மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்றும் வக்பு வாரியத்தின் அறிவிப்பின் பேரில் உடைமைகளை காலி செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
ஜே.பி.சி.யின் பரிந்துரைகள்:
1)அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைச்சர்களின் தலையீட்டைத் தடுக்க, குத்தகை அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
(2) வக்ஃப் சர்வே கமிஷன் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
(3)வக்ஃப் சொத்துக்கள் கணக்கெடுப்பில் ஆகஸ்ட் 15, 1947ல் உள்ள படி அனைத்து வக்ஃப் நிலங்களும் சேர்க்கப்பட வேண்டும்.
(4)மத்திய வக்ஃப் கவுன்சிலின் தலைவர் பதவியை எந்த அமைச்சருக்கும் வழங்கப்படக்கூடாது , ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.
5) மத்திய வக்ஃப் கவுன்சில் செயலாளருக்கு இந்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் அரசு அதிகாரிகளின் தலையீடுகளை தடுக்க முடியும்.
(6) சர்வீஸ் கார்டு தயாரிக்கும் போது, .
வகஃப் சட்டம் 1954ன் படி, உயர்கல்வி பணியாளர்கள் முஸ்லீம்களாக மட்டுமே இருக்க வேண்டிய சட்டத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமே C.E.O. ஆக்கப்பட வேண்டும்.
(7) வகஃபின் மதிப்புமிக்க நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டாளருக்கும் வழங்கப்படக்கூடாது, பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும். (8) குத்தகை நிலமாக வக்ஃபு சொத்தை, எந்த ஒரு தொழிலதிபர் அல்லது தனிநபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்படக்கூடாது.
அது மருத்துவமனை அல்லது வணிகத் திட்டத்திற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்டாலும் சரியே.
(9)வக்ஃப் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற சி.இ.ஓ.வுக்கு அதிகாரம் இருந்தும்,
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக C.E.Oமீது அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
வக்ஃப் சொத்துகளில் ஊழல்.
வக்ஃப் சொத்துகளில் ஊழல் தற்போது, நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கதையாக ஆகிவிட்டது.
அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
உத்தரபிரதேசத்தில் வக்பு வாரியத்தின் 3000 ஆயிரம் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் தற்போதைய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும், வக்ஃப் சொத்துகளின் எண்ணிக்கை 1977 என்றும், அதில் 600 அரசு கட்டிடங்கள் மற்றும் நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்துள்ளன என்றும் ஆச்சரியமான தகவல் வெளிவருகிறது.
DDA தனது கட்டிடங்களை 138 நிலங்களில் கட்டியுள்ளது.மத்திய கட்டுமானத் துறை மதிப்புமிக்க 108 நிலங்களில் கட்டிடங்களைக் கட்டியுள்ளது. 53 தொல்லியல் துறையின் வசம் உள்ளது. டெல்லியின் மையப்பகுதியில் 20 பெரிய ஏக்கர் நிலம் உள்ளது, அதில் பெர்க்ஸ்டுடி 20 வயர்லெஸ் துறையை கொண்டுள்ளது 10. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் டெல்லி நகர் நிகாம், மின்சாரத் துறை, என்டிஎம்சி உள்ளிட்ட டெல்லி அரசின் பல்வேறு அலுவலகங்கள் வசம் உள்ள 05, சதுர அடிக்கு ரூ.07 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான தற்போதைய விலையில் சுமார் 18 மதிப்புமிக்க புவியியல் தளங்களை ஆக்கிரமித்துள்ளன. என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
200 இடங்களை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து, அதில் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆடம்பரமான மற்றும் பல மல்டிபிளக்ஸ் மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், கார்ப்பரேட் துறையின் பல நிறுவனங்கள் இந்த வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளன,
இவையனைத்தும் வக்ஃப் வாரியத்திற்கு மிகக் குறைந்த வாடகையை செலுத்துகின்றன, ஆனால் பலர் வாடகை கூட செலுத்துவதில்லை.
கடந்த அரசு இயற்றிய வக்ஃப் சட்டம்:
2010ல், வக்ஃப் சட்டத்தின் மசோதா திருத்தப்பட்ட வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒரேயடியாக ஒப்புதல் அளித்தது. சல்மான் குர்ஷித் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த நொண்டி மசோதாவை பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் மத மற்றும் சமூக அமைப்புகளிலும் நிறைவேற்ற விரும்பினார். வக்ஃபின் நோக்கத்தையே தோற்கடிக்கும் வகையில் இந்த மசோதாவில் பல திருத்தங்கள் இருந்தன. இதற்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பல அமைப்புகள் தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளன.
இந்த மசோதாவில் வக்புவின் அசல் நோக்கத்தை அழிக்கும் வகையில் பல விதிகள் உள்ளன.முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பல அமைப்புகள் தங்கள் ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளன.
இதில், கவனிக்க தக்க ஒன்று என்னவென்றால்,ஒரு காலத்தில் 'வக்ஃப்'க்கு என்று ஒரு வரையறை இருந்தது, யாருடைய பெயரிலிருந்து வக்ஃப் செய்யப்படுகிறது என்பது முக்கியம்.
எனவே ஒரு முஸ்லீம் மட்டுமே 'வக்ஃப்' செய்ய முடியும். என்றிருந்தது.
அதனை வக்ஃப் வாரியம் தளர்த்தியது. அது கூறியது, 'எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் வக்ஃப் செய்ய முடியும் மற்றும் இந்தியாவில் பல நன்கொடைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே, வக்ஃப் என்பதன் வரையறையானது, வக்ஃப் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், நிறுவப்பட்ட அனைத்து வக்ஃப்களும் அப்படியே இருக்கும்.
வக்ஃப்பின் திருத்தப்பட்ட வரைவை தயாரிக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டது, அதன் தலைவர் சைபுதீன் சுஸ், ஆறு வாரங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தாக இருந்தது.ஒரு வருடம் கழித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது, ஆனால் அது குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை, பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வக்ஃப் சட்டத்தின் இந்த திருத்தப்பட்ட வரைவு பல திருத்தங்களுக்குப் பிறகு 05 செப்டம்பர் 2013 அன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.(فکر وخبر۔آن لائن اخبار)
முந்தைய 1995வக்ஃப் சட்டம் மற்றும் தற்போதைய வக்ஃப் சட்டம் 2013 ஆகியவற்றின் மதிப்பாய்வு மற்றும் ஒப்பீட்டை அறிவது அவசியமாகும். இது முந்தைய வக்ஃப் சட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை வெளிப்படுத்தும்.மேலும் புதிய சட்டத்தின் சாதக,பாதகங்களை அறிய பேருதவியாய் அமையும்.
( 1) வக்ஃப் என்பது இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, எந்த மதத்தைப் பின்பற்றுபவர் வக்ஃப் செய்தாலும் அது அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக வக்ஃப் என்று கருதப்படும்.
(2)இந்த சட்டம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் "Vacating Law"("வெளியேற்றம் சட்டத்துடன்") இணைந்து படிக்க வேண்டும்.
3) வக்ஃப் கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டியது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும், இதனால் எந்த வக்ஃப் சொத்தும் பதிவு செய்யப்படாமல் இருக்க முடியும்.
4)மிகவும் சர்ச்சைக்குரிய பிரிவு 86 ரத்து செய்யப்பட்டது, இதன் விளைவாக பதிவு செய்யப்படாத உதவித்தொகைகள் மீது வழக்குத் தொடரும் உரிமை நிறுத்தப்பட்டது. மேலும் மேலும் எஞ்சியிருக்கும் பல சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.
(5) பிரிவு 108/A நீட்டிக்கப்பட்டது, இதன் விளைவாக எந்த சட்டமும் வக்ஃப் சொத்துக்களை பாதிக்காது மற்றும் வக்ஃப் சொத்து அப்படியே இருக்கும்.
6) புதிய சட்டம் மத்திய வக்ஃப் கவுன்சிலை பலப்படுத்தியுள்ளது. அது தனது அதிகாரங்களை விரிவுபடுத்தி, மாநில வக்பு வாரியங்களை மத்திய வக்ஃப் சபைக்கு ஓரளவு பொறுப்புக்கூறச் செய்ய முயற்சித்துள்ளது.
(7)வகஃப் பட்டியலைக் கருத்தில் கொண்டு நிலப் பதிவேடுகளை (landrickard) இறுதி செய்து, அதற்கேற்ப இணைப்பை மேற்கொள்ள வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.
(8)பிரிவு 06 இல், “இந்த வக்ஃப்பில் ஆர்வமுள்ள ஒருவர்” என்ற வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “பாதிக்கப்பட்ட ஒருவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வக்ஃபு சொத்துக்களில் வேறுபாடும்,விளைவுகளும் ஏற்படும்.
9)பிரிவு 32 வக்ஃப் வாரியத்தின் அசையாச் சொத்தை விற்கவோ, அன்பளிப்பாகவோ, அடமானம் வைக்கவோ அல்லது மாற்றவோ செய்யும் அதிகாரத்தை நீக்குகிறது.
(10)பிரிவு 51 இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வக்ஃப் சொத்துக்களின் விற்பனை, பரிசு, பரிமாற்றம் மற்றும் அடமானம் ஆகியவை கொள்கையளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால் மாநில வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட மற்றும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
(11)வக்ஃப் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கான காலம் 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வக்ஃப் சொத்துக்கள் வளர்ச்சியடையும்.
12) வக்ஃப் தீர்ப்பாயம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, நீதிபதியைத் தவிர, நிர்வாகத்தின் பிரதிநிதி மற்றும் ஒரு இஸ்லாமிய அறிஞர் இருப்பார், மேலும் தீர்ப்பாயத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. (مولانا ولی رحمانی کے مضمون سے اقتباس )
வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ நீக்க துடிக்கும் ஆளும் பாசிச அரசு.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1954 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வக்பு வாரியம்,
75 ஆண்டுகளை கடந்த சுதந்திர இந்தியாவில் வக்ஃப் வாரியத்தை பலப்படுத்துவதற்காக பல கமிட்டிகள் சமர்பித்த பரிந்துரைகள்,
முஸ்லிம் தனி வாரிய சட்ட அமைப்பு,இஸ்லாமிய அமைப்புகள் இவற்றின் ஆலோசனைகளை முன்வைத்து 5 தடவைகளுக்கு மேல் சட்டங்கள் இயற்றப்பட்டு வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டது.
இந்தியாவில் இராணுவம்,இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக சொத்துகளை அதிகம் வைத்திருக்ககூடிய வக்பு வாரியம்,
இரயில்வே துறைக்கு நிகராக செயல்படுவதற்கு அதிகாரம் படைத்த வாரியம்,பஞ்சாயத்து அலுவலகத்தை விடவும் மோசமாக செயல்படுவது வேதனையான ஒன்றாகும்.
இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பல சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
வக்பு வாரியமும்,இந்திய இஸ்லாமிய சமூகமும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன.
ஆளும் பாசிச அரசோ, வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ ரத்த செய்ய துடிக்கிறது. இந்த சட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டால் வக்ஃபு வாரியம்,வெற்று வாரியமாக மாற்றப்படும்.
காரணம் இந்த வக்ஃபு நிலங்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வக்ஃபு சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சட்டம் வக்ஃபு வாரியங்களுக்கு வானுயர்ந்த அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த வக்ஃபு சட்டம் 1995 திரும்பத் பெறப்பட்டால் வக்ஃபு சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.
வக்ஃப் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்படும்.
அல்லாஹு தஆலா வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் தூண்களாக நம்மை ஆக்குவானாக! ஆமின்.
No comments:
Post a Comment