Chengaiulama.in

Thursday, 4 August 2022

ஜும்ஆ பயான் 05/08/2022

ஆஷூராவின்    சிறப்புகள்.

சிறந்த மாதம்.........

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

١- [عن أبي بكرة نفيع بن الحارث:] إنَّ الزَّمانَ قَدِ اسْتَدارَ كَهَيْئَتِهِ يَومَ خَلَقَ اللَّهُ السَّمَواتِ والأرْضَ، السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ، وذُو الحِجَّةِ، والمُحَرَّمُ، ورَجَبُ، مُضَرَ الذي بيْنَ جُمادى، وشَعْبانَ.

ஹஜ்ஜத்துல் வதாவில்' உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து 'ரஜப்' மாதம் ஆகும் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.                  (ஸஹீஹ் புகாரி) (4662)

அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1444 புதுவருடம் துவங்கி,புனித முஹர்ரம் மாதத்தின் சங்கைமிகு ஆஷுரா தினம் எதிர்வரவிருகின்றது.

அல்லாஹுதஆலா ஓர் ஆண்டிற்கு 12மாதங்களை நிர்ணையித்து,ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30நாட்களாக வரையறுத்தான்,அந்த மாதங்களில் சிலவற்றையும்,நாட்களில் சிலநாட்களையும் சங்கையாக்கிவைத்திருக்கின்றான்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். இதுவல்லாது பல சுன்னத்தான நோன்புகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளில் சிறந்ததாக ஆஷுரா நோன்பு அமைந்துள்ளது.

ஆஷூரா தினம்

புனித முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை ’’ عاشوراء ‘‘ஆஷுரா என்று சொல்லப்படுகின்றது.

அல்லாஹுதஆலா ஆஷூரா நாளில் தன் பிரத்யேகமான ரஹ்மத்தையும்,பரகத்தையும் அபரிமிதமாக அருளுகிறான்.

عن عائشة رضي الله عنها: (أنّ قريشاً كانت تصوم عاشوراء في الجاهليّة، ثمّ أمر رسول الله بصيامه، حتّى فرض رمضان، فقال رسول الله صلّى الله عليه وسلّم: من شاء فليصمه، ومن شاء فليفطره) رواه مسلم، وفي رواية للبخاري: (كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان، وكان يوماً تستر فيه الكعبة) أخرجه البخاري، ومسلم، وأبو داود، والترمذي.

ரமலான் மாத நோன்பு கடமையாகுவதற்கு முன்பு முஹர்ரம் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது ஃபர்ளாக இருந்தது.

ரமலான் மாத நோன்பு கடமையானதும், அண்ணலம் பெருமானார் ﷺ அவர்கள் ஆஷுரா நோன்பை சுன்னத் ஆக ஆக்கினார்கள்.

ஒரு ஹதீஸில்..

عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “صيام يـوم عاشوراء: أحتسب على الله أن يكفر السنـة التي قبله”رواه مسلم

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்:அபூகதாதா(ரலி)               நூல்: முஸ்லிம் 1977)

ஆஷூராவும், தவறானப்புரிதலும்.

சில முஸ்லிம்களின் தவறானப்புரிதல்,கண்மணி நாயகம் ﷺஅவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி)அவர்கள் கர்பலாவில் ஷஹீதாகக்கப்பட்ட நிகழ்வு,யதார்த்தமாக ஆஷூரா நாளில் நிகழ்ந்ததை வைத்து ஆஷூரா சிறப்புப்பெற காரணமே ஹுஸைன்(ரலி)அவர்களின் ஷஹாதத்தினால் தான் என தவறாக எண்ணுகின்றனர்.

நாயகம் ﷺஅவர்களின் காலத்திலிருந்தே ஆஷுராவை முஸ்லிம்கள் சங்கையாக கருதினர்.அந்நாளில் நோன்பு நோற்குமாறு நபிﷺஅவர்கள் கட்டளையிட்டுருக்கின்றார்கள்.

குர்ஆனிலும் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

ஹுஸைன் (ரலி)அவர்களின் ஷஹாதத்தோ நாயகம் ﷺஅவர்களின் வஃபாதிற்கு 50 ஆண்டுகளுக்கு பின் ஹிஜ்ரி 61ல் நிகழ்ந்தது.எனவே ஆஷூராவிற்கும்,ஹுஸைன் (ரலி)அவர்களின் ஷஹாதத்திற்கும் எந்த தொடர்புமில்லை.

ஆஷூரா நாளில் ஹுஸைன் (ரலி)அவர்கள் ஷஹீதாகி இருப்பது அன்னவர்ளின் சிறப்பை காட்டுகின்றதே ஒழிய அதனால் அன்நாளுக்கு சிறப்பு இல்லை.

ஆஷூரா சிறப்புப்பெற காரணம்.

ஆஷூரா ஏன் சிறப்பான நாள் என்ற உண்மைக்காரணத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஆனால் சில அறிஞப்பெருமக்களின் கூற்று:ஆஷூரா என்ற பெயரும் ,அந்நாளை அல்லாஹ் சிறப்பாக்கிய காரணமும்,

அல்லாஹ் அந்நாளில் பத்து நபிமார்களுக்கு தன் பிரத்யேகமான உதவிளால் சங்கைச்செய்தான்

1-ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்களின் தவ்பாவை வை ஏற்றுக்கொண்டது.

2-ஹழ்ரத் இத்ரீஸ்(அலை)அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியது.

3-ஹழ்ரத் நூஹ்(அலை)அவர்களின் கப்பல் ஜூதி மலையில் கரை ஒதுங்கியது.

4-ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் பிறந்ததும்,கலீலுல்லாஹ் خلیل ஆனதும்,நெருப்பு குண்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதும்.

5-ஹழ்ரத் தாவூத் (அலை)அவர்களின் தவ்பாவை வை ஏற்றுக்கொண்டது.

6-ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டது.

7-ஹழ்ரத் மூஸா(அலை)அவர்கள்

ஃபிர்அவ்ன் படையை விட்டும் பாதுகாக்க கடல் பிளந்தது.பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டது.

8-ஹழ்ரத் யூனுஸ்(அலை)அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியாக்கப்பட்டது.

9-ஹழ்ரத் சுலைமான்(அலை)அவர்களுக்கு ஆட்சி வழங்கப்பட்டது.

10-ஒரு அறிவிப்பின் படி,நபி ﷺஅவர்களின் பிறப்பு.

மேற்கூறிய அனைத்தும் ஆஷூரா தினத்தில் நிகழ்ந்தன.

இன்னொரு அறிவிப்பில்  உலகம் அழியும் கியாமத் தினம் ஆஷூராவில் நிகழும் என வந்துள்ளது.

இப்படி பல்வேறு நிகழ்வுகளை வைத்து இந்நாளை அல்லாஹ் சிறப்பாக்கிவைத்திருக்கின்றான் எனக் கூறப்பட்டாலும் உண்மை காரணத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஆஷூரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுரா நோன்பு எனப்படும்.

- حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى ، عَنِ ابْنِ عُيَيْنَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ :

مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ

ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.                          அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி-2006    

- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ

أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ.

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராக காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி), புகாரி-1960

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللهِ ، هُوَ ابْنُ الْمُبَارَكِ- قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ

كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து).  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புகாரி-1592

 – وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْحُلْوَانِىُّ حَدَّثَنَا ابْنُ أَبِى مَرْيَمَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ – رضى الله عنهما – يَقُولُ

حِينَ صَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ – إِنْ شَاءَ اللَّهُ – صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ ». قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّىَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம்-2088‌.

அல்லாஹ்வின் அருளையும்,பரக்கத்தையும் பெற்றுத்தரும் சிறப்புவாய்ந்த ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தான அமலாகும்.

عن ابن عباس رضي الله عنهما أنّه قال: (حين صام رسول ‏الله - صلّى الله عليه وسلّم - يوم عاشوراء، وأمر بصيامه،

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளையிட்டார்கள்’.                          (ஆதாரம்: புகாரி)

وعن أبي قتادة رضي اللَّه عنه ، أن النبي صلى الله عليه وسلم قال: " صيام يوم عاشوراء، أحتسب على اللَّه أن يكفر السنة التي قبله" .  أخرجه مسلم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும்’ எனக் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

யூதர்களுக்கு ஒப்பாகுவதை விட்டும் தடுத்தல்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا ؟ قَالُوا : هَذَا يَوْمٌ صَالِحٌ ، هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى، قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ "

நபிﷺஅவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். ‘இந்நாளின் சிறப்பென்ன?’ என்று யூதர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாங்கள் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

قال الرسول صلّى الله عليه وسلّم: (لئن بقِيتُ إلى قابلٍ لأصومَنَّ التاسعَ

மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம்  உயிரோடு  இருந்தால்  ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள்

அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி, முஸ்லிம்

 النبي ﷺ أنه قال: خالفوا اليهود صوموا يومًا قبله ويومًا بعده[1] وفي رواية أخرى: صوموا يومًا قبله أو يومًا بعده[2

இஸ்லாம் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட உன்னத சன்மார்க்கமாகும்,மனித குலம் வாழ்வில் வளம் பெறவும்,மறுமையில் ஈடேற்றம் பெறவும் இறைவனால் அருளப்பட்ட சிறந்த மார்க்கமாகும்.

அதனால் தான் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் இஸ்லாம் ஒரு சிறு காரியத்தில் கூட பிற மதத்திற்கு ஒப்பாகுவதை வெறுத்தார்கள்.

ஆஷூரா நாளில் நோன்புநோற்பதை சுன்னத் ஆக்கிய நபி ﷺஅவர்கள் யூதர்களுக்கு மாற்றமாக 9அல்லது 11 இரண்டில் ஒரு நாளை சேர்த்து இரண்டு நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

இஸ்லாத்தின் மிக முக்கிய கட்டளைகளில் ஒன்று, பிற மதத்திற்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:

من تشبه بقوم فهو منهم۔                                                  ابو داود، کتاب الباس، باب فی لبس الشهرة﴾

யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்-4031 (3512)

இஸ்லாமியர்களின் அடையாளமாக உள்ள தாடியும் கூட யூத,கிருத்துவர்களுக்கு மாறுசெய்வதற்காக சொல்லப்பட்ட கடமையே ஆகும்.

முஷ்ரிக்களுக்கு மாற்றாமாக மீசையை கத்தரிக்கும் படியும்,தாடியை அடர்த்தியாக வைக்கும் படியும் இஸ்லாம் ஏவுகின்றது.

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: "خَالِفُوا الْمُشْرِكِينَ، أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى"

முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்யுங்கள்.அதுப்போல் தலைப்பாகை அணியும் தொப்பியுடன் அணியுங்கள் காரணம் முஷ்ரிக்கள் தொப்பியின்றி தலைப்பாகை அணிவார்கள் என்கிறது இஸ்லாம்.

இப்படி சிறுசிறு காரியங்களில் கூட பிறமதத்தவருக்கு ஒப்பாகுவதை இஸ்லாம் வெறுக்கிறது.

நற்காரியங்களில் கூட அன்னியவர்களுக்கு ஒப்பாகுவதை இஸ்லாம் தடைசெய்திருக்க, இன்று இஸ்லாமியர்கள் ஃபேஷன் என்கிற பெயரில் நடை,உடை,பேச்சி,கலாச்சாரம் ஏன் சிகையலங்காரம் உட்பட அனைத்திலும் ஆங்கிலேயர்களையும்,சினமா பிரபலங்களையும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

(அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகாப்பானாக!ஆமீன்)

ஆஷூராவின் சிறப்பை கூறும் மற்றுமொரு நபிமொழி.

عن أبى هريرة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: «مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ» أخرجه البيهقى فى "شعب الإيمان

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தவர்களின் மீது விசாலமாக செலவிடுகின்றாரோ, அல்லாஹ் அவருக்கு வருடம் முழுவதும் செல்வத்தை விசாலமாக வழங்கி விடுகின்றான்.             அறிவிப்பவர் : அபூஹீரைரா                             நூல் : பைஹகி.

அல்லாஹ் தஆலா நம்மை ஆஷுரா தினத்தின் சிறப்பை பெற்றவர்களாக ஆக்கி வைப்பானாக! ஆமின்.


வெளியீடு : செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


No comments:

Post a Comment