Thursday, 27 January 2022

ஜும்ஆ பயான் 28/01/2022

தலைப்பு :

அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹுத்தஆலா அன்ஹா

  اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் : 33:33)

பிறப்பு.

கண்மணி நாயகம் ﷺ அவர்களின் தவப்புதல்வி,தீன் குல பெண்களின் முன்மாதிரி,சுவனபதியின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி-அன்ஹா)அவர்கள் பிறந்த மாதம், ஜமாதில் ஆகிர் பிறை 20 (கி.பி.604-ல்)ஜும்ஆ தினத்தில் மக்க மாநகரில் அண்ணலம் பெருமானார் ﷺ அவர்களுக்கும்,அன்னவர்களின் அன்பு மனைவி கதீஜா பின்து குவைலத் (ரலி-அன்ஹா)அவர்களுக்கும் நான்காவது மகளாக பிறக்கிறார்கள்.

இன்னொரு அறிவிப்பில் குறைஷிகள் கஃபாவை மீள் கட்டுமானம் செய்த சந்தர்பத்தில்,நாயகம் (ஸல்)அவர்களின் 35 வயதில் அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள் பிறந்தார்கள் என்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று ஆண் மக்கள்,நான்கு பெண் மக்கள் இருந்தனர். ஆண் குழந்தைகளில் காசிம்(ரலி), அப்துல்லா(ரலி), இப்ராஹீம் (ரலி) ஆகியோரும். பெண் குழந்தைகளில்  ஜைனப்(ரலி), உம்மு குல்தூம்(ரலி), ருகையா(லி) பாத்திமா(ரலி) ஆகியோரும் இருந்தார்கள்.

அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் கடைசி குழந்தை, அதுவும் பெண் குழந்தை என்பதால் நபியவர்கள் அன்னையவர்களின் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

அன்னையவர்களின் இயர்ப்பெயர் ஃபாத்திமா,

இதுவல்லாத சில சிறப்புப் பெயர்களும் உண்டு.

அவற்றில் அஸ்ஸஹ்ரா(ஒளிரும் எழில் நங்கை), ஸையிதத்துன்னிஸா (பெண் குலத்தின் பெருமகள்), அல்முபாரகா (அருட்கொடை), அல்சித்தீகா (வாய்மை நிறைந்தவர்) என்ற பெயர்களும் அவர்களுக்கு இருந்தன.

வளர்ப்பு

அன்னை ஃபாத்திமா அவர்கள் தனது தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்கள். எனவே சத்தியத்திற்காகப் போராடும் குணம் அவருக்கு இயல்பாகவே வளர்ந்து வந்தது. இன்னும் தன்னால் இயன்ற நேரத்திலெல்லாம் தனது தந்தையாருக்கு வந்த எதிர்ப்புகளை எதிர்த்து வீறு நடை போட்டு வந்த வீரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் திகழ்ந்தார். இன்னும் தனது வசந்த கால இளமைப் பருவத்தை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்த அபீதாலிப் பள்ளாத்தாக்கினிலும் அவர் கழித்திருக்கின்றார். இந்த அபீதாலிப் பள்ளத்தாக்கில் தான், முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடுந் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இதில் தனது தந்தை மற்றும் தாய், சகோதரிகள் மற்றுமுள்ள முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக துயரங்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உறுதியான மனநிலை கொண்டவராக அனுபவித்த சரித்திரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர்கள் இருந்தார்கள்.

அன்னையவர்களின் உயர்குணமும், நன் நடத்தையும்.


அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள்,கண்மணி நாயகம்ﷺஅவர்களைப் போலவே உயர்குணம் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் நடை,உடை,பாவனை ஆகியவற்றிலும் நபியவர்களுக்கு ஒப்பானவர்களாக இருந்தார்கள்.

فاقبلت فاطمہ تمشی۔ماتخطئی مشیۃالرسول صلی اللہ علیہ وسلم شیاَ۔

அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள் நடப்பது, ரஸுல் (ஸல்)அவர்களின் நடைக்கு ஒப்பாகஇருக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே பாத்திமா ரலி அவர்கள் (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை – இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.


ஈகை குணம்.

பாத்திமா நாயகியாரின் இரு 
மகனார்களும் கடும் நோயால் அவதிப்பட்டனர். எல்லாவித வைத்தியமும் செய்தும் குணமடையவில்லை. இதனால் பெற்றோர்கள் மனம் கலங்கினர். அவர்கள் இருவரும் இறைவனிடம் தங்கள் பிள்ளைகள் குணமடைந்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக வேண்டிக் கொண்டனர்.

அதன்பின் சில நாட்களுக்குள் புதல்வர்கள் இருவரும் நலம் பெற்று வந்தனர். உடனே பெற்றோர் இருவரும் நோன்பிருக்க தீர்மானித்தனர். சிறிதளவு உணவு உண்டு நோன்பு நோற்றனர். நோன்பு திறக்கும் நேரமும் வந்தது,நீர் அருந்தி நோன்பு திறந்தனர். பார்லி ரொட்டி முன் அமர்ந்து ரொட்டியை கைகள் தொட்டதும் வாயிலில் ஒரு குரல் கேட்டது: ‘ நான் பசித்தவன்.ஆண்டவனுக்காக என் பசியைத் தணியுங்கள். பசியால் இறந்து கொண்டிருக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று.

அடுத்தவர் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்ற அண்ணல் நபியின் வாக்கு அவர்கள் முன் தென்பட்டது. உடனே அந்த ரொட்டி முழுவதையும் அந்த ஏழைக்கே கொடுத்துவிட்டார்கள்.

அதேபோல் மற்ற இரண்டு நாட்களும் வாயிலில் உணவு வேண்டி குரல் கேட்கவே,  தங்களுக்கு இல்லாமலேயே இருந்த உணவுகளை கேட்ட அந்த எளியவர்களுக்கே அளித்து மனத்திருப்தி கொண்டனர்.

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
(அல்குர்ஆன் : 76:8)

அல்லாஹ்வும் வஹீ மூலம் அண்ணல் நபி அவர்களுக்கு அறிவித்தான்: ‘ இவர்கள் (தாங்கள் செய்து கொண்ட பிரமாணத்தை) நேர்ச்சையை,  நிறைவேற்றி வைத்தனர். நீண்ட தண்டனையுடைய நாளைப் பயந்து கொண்டிருந்தனர். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பால் ஏழைகளுக்கும்,அனாதைகளுக்கும் சிறைப்பட்டோருக்கும் உணவளித்து வந்தனர்.(தானம் பெறுவோரிடம்) நாம் உங்களுக்கு ஆகாரம் அளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்கேவாகும். உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் எங்களுக்கு) நன்றி கூறுவதையோ விரும்பவில்லை. மேலும் நிச்சயமாக நாம் எமது இறைவனின் ஒரு நாளை பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டிப் போய்விடும்.(என்றே கூறி வந்தனர்)’
(அல்குர்ஆன் 76:7,8,9,10)

ஹிஜ்ரத்.

நாயகம் (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற சமயத்தில்,ஃபாத்திமா (ரலி)உம்மு குல்தூம் ஆகிய இருவரும் மக்காவில் இருந்தனர்.

 அவ்விருவரையும் அழைத்து வரும் பொறுப்பு,ஜைத் இப்னு ராபிஆ மற்றும் அபூராஃபிஃ ஆகிய இரு தோழர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்கள் இரு ஒட்டகங்களையும்,இன்னும் ஐந்து திர்ஹம்களையும் அவர்களிடம் கொடுத்தனுப்பி,இருவரும் வந்து சேர்ந்தார்கள்.


திருமணம்.

பதினைந்து வயது பூர்த்தியாகியிருந்த பாத்திமா நாயகியை  முக்கிய நபர்களாகக் கருதப்பட்ட பலர் திருமணம் செய்ய  நபி (ஸல்) அவர்களிடம் அணுக ஆரம்பித்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள். அஸதுல்லாஹ் ( அல்லாஹ்வின் அரிமா) என்று நாயகத்தால் போற்றப்பட்ட அலீ(ரலி) அவர்களுக்கு மணம் முடிக்க அல்லாஹ்விடம் அனுமதி கிடைத்தது.

பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ஸபர் மாதத்தில் 15 வயது 5 மாதம் பூர்த்தியான போது, அலி (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது அலி (ரலி) அவர்களின் வயது 25 வருடமும் 5 மாதமும் ஆகும்.


நபி (ஸல்) தம் மகளுக்குக் கொடுத்த சீதனம்.

புதுமணத்தம்பதிகளாக புது வீட்டுக்கு குடிபோக விருக்கின்ற தம்பதிகளுக்கு சில அடிப்படையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு படுக்கை, காய்ந்த பேரீத்தம் மர மட்டைகளால் ஆன தலையணை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பை ஒன்று மற்றும் மாவு அரைக்கக் கூடிய திரிகை ஒன்று இவை தான் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கினிய மகள் ஃபாத்திமா (ரழி) அவர்களின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களின் பட்டியலாகும்.

مسند أحمد 715 - حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا (2) عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: " جَهَّزَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ " قَالَ أَبُو سَعِيدٍ: لِيفٌ (3)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்காக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றையும், தண்ணீர் தோல் பை ஒன்றையும், இத்கிர் புல்லால் அடைக்கப்பட்ட தலையணை ஒன்றையும் தயார் செய்தார்கள். (அறிவிப்பவர் : அலீ (ரலி)                   நூல்கள் : நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்)


பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பு.

 سیدۃنساء اھل الجنۃ

நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார் என்று சொன்னார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உலக மாதர்களில் உன்னதமானவர்கள் நால்வர். இம்றானின் மகள் மர்யம், குவைலிதின் மகள் கதீஜா, மஸாஹிமின் மகள் (பிர்அவ்னின் மனைவி) ஆஸியா மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா.” (39)

பூமான் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மகளாரின் மீது அதிக பிரியம் வைத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பாத்திமா (ரலி) அவர்களிடம் விடை பெற்றுதான் செல்வார்கள். நபி (ஸல்) அவர்கள் பிராயாணத்திலிருந்து திரும்பும் போது பாத்திமா (ரலி) அவர்களை கண்ட பின்னே மற்ற வேலைகளை செய்வார்கள். அலி(ரலி) அவர்கள் அபூஜஹ்லின் மகளை திருமணம் செய்ய விரும்பினார்கள். இதனையறிந்து பாத்திமா (ரலி) அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்கள் எனது தேகத்தின் (உடலின்) ஒரு பாகம் , யார் பாத்திமா (ரலி) அவர்களின் மனதை வேதனை படுத்துகிறாரோ அவர் என் மனதை வேதனை படுத்தியவர் ஆவார். இந்த செய்தியை கேள்விபட்ட அலி (ரலி) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்கள் உயிரோடு இருக்கும் வரை நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றார்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் மூலமே "மாநபியின் மேன்மைமிகு குடும்பம் இவ்வையகத்தில் தோன்றி கொண்டிருப்பது" அவர்களின் சிறப்புகளுக்கு சிறப்பை ஏற்படுத்துகிறது.       

ஒரு நாள் அதிகாலை சுப்ஹ் வேலையில்  அண்ணலம் மெருமானார்ﷺஅவர்கள் கம்பளிப் போர்வையை போர்த்திக்கொண்டு வெளியே வந்தார்கள்.அப்போது நபிகளாரின் அருமை பேரர் ஹசன் (ரலி)அவர்கள் வந்தார்கள்.அவர்களை நபிகளார் போர்வைக்குள் போர்த்திக்கொண்டார்கள்.பின்பு இன்னொரு பேரர் ஹுஸைன் (ரலி)அவர்கள் வர,அவர்களையும் போர்க்குள் போர்த்திக்கொள்ள,பின்னாலே தன் பாசமிகு மகளார் ஃபாத்திமா (ரலி)அவர்கள் வர,அவர்களையும் போர்வைக்குள் போர்த்திக்கொண்டார்கள்.இறுதியாக தங்களின் மருமகனார் அலீ(ரலி)அவர்கள் வந்துசேர,அவர்களையும் போர்வைக்குள் போர்த்திக்கொண்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்.

اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் : 33:33)


வீட்டு வேலைகளை  செய்தார்கள்.

அலீ(ரலி) அறிவித்தார். (என் துணைவியாரான) 'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி(ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.             (ஸஹீஹ் புகாரி (3113)


தந்தைக்கு உதவிடுதல்.

நபி(ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள். 

பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, 'யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி (240))

அன்னையவர்களின் குழந்தைச் செல்வங்கள்.


   ஆண் குழந்தைகள்

அலீ (ரழி) மற்றும் ஃபாத்திமா (ரழி) தம்பதிகளுக்கு ஹிஜ்ரி 3 ம் ஆண்டு ரமலான் மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. தனக்குப் பேரக் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தனது மகளையும், பேரனையும் காண விரைந்து சென்றார்கள். பேரனுக்கு ஹஸன் என்ற பெயரைச் சூட்டி, அதானும் கூறினார்கள். பிறந்ததிலிருந்து ஏழாவது நாளில் தலை முடியைச் சிரைத்து சுத்தமாக்கி, அந்தமுடியின் எடையின் அளவுக்கு வெள்ளியை நிறுத்து, அதனை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 4 ம் வருடம் ஷஃபான் மாதம் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹுஸைன் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். அந்தக் குழந்தையின் காதிலும் பாங்கு சொன்னார்கள். மூன்றாவது குழந்தையாக முஃஸின் என்பவர் பிறந்தார், அவர் குழந்தையாக இருந்தபொழுதே இறந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. தனது இரண்டு பேரக் குழந்தைகளையும் மிகவும் நேசித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். மேலும், அவர்களைக் குறித்து, ''இவர்கள் எனது வாச மலர்கள், இன்னும் சுவனத்தின் இளைஞர்களது தலைவர்கள்" என்று பெருமை படக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பெண் குழந்தைகள்

ஹிஜ்ரி 5 ம் ஆண்டு, ஃபாத்திமா (ரழி) அலீ (ரழி) தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸைனப் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். மீண்டும் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு உம்மு குல்தூம் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்

அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்களின் வணக்க வழிப்பாடுகள்.

செய்யதுனா ஹசன்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்;என் அன்னையவர்கள் வீட்டில் அலுவல்களை நல்லமுறையில் செய்வதுடனே காலை முதல் மாலை வரை இறைவணக்கத்திலும்,பயபக்தியோடு இறைவனைப் புகழ்ந்து பிரார்த்தனைப் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.

தனக்காக இல்லாமல் இந்த உம்மத்திலுள்ள முஸ்லிமான ஆண்,பெண் அனைவருக்கும் துஆ செய்வார்கள் .

மீளாத்துயரில் ஆழ்த்திய அண்ணலாரின் பிரிவு.

இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி வந்த அண்ணலார் நோயுற்றார்கள். அதையறிந்த மகளார் ஆறாத் துயரில் ஆழ்ந்தார்கள். அருகிலிருந்து பணிவிடைகள் செய்து வந்தார்கள். நோய் ஏற்பட்டு இருவாரங்கள் ஆகிவிட்டன. நோய் குறைந்தபாடில்லை.இறுதியில் தமது இறுதிநிலை எய்திவிட்டது என்பதை உணர்ந்த அண்ணலார் அழுது கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்களை அருகே அழைத்தார்கள்.அவர்களின் செவிகளில் ஏதோ கூறினார்கள். அண்ணல் அவர்களின் செய்தி கேட்டு பாத்திமா நாயகி அவர்களின் விழிகள் கண்ணீரைச் சிந்தின. உடனே அவர்கள் மீண்டும் மகளார் செவியில் மறைவாய் ஏதோ சொன்னார்கள். அதனைக் காதுற்ற பாத்திமா நாயகி அவர்களின் வதனம் சிறிதே நிம்மதியடைந்தது.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷா பிராட்டியார் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.பிறகு இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முதலில் என்னிடம் தாம் மறையப் போகும் செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்டு நான் கண்ணீர் சிந்தினேன். மறுகணம் என்னிடம் நீர் தாம் முதலில் என்னை சுவர்க்கத்தில் சந்திப்பீர்’ என்றார்கள். அதைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்’ என்றார்கள்.

சிறிது நேரத்தில் அண்ணலாரின் உயிர் பிரிந்தது. அண்ணலாரை அடக்கம் செய்து விட்டு திரும்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு இறைவனின் திருத்தூதர் மீது மண்ணைத் தள்ள எவ்வாறு மனம் வந்தது?என்று வருத்தத்துடன் கேட்டார்கள். அவர்களின் துக்கத்தால் அவர்கள் வீரிட்டார்கள். இந்த சப்தம் கேட்டு மெய்சிலிர்த்த அனஸ் ரலி அவர்கள்  இறைவனின் விருப்பத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்று இதமாக ஆறுதல் கூறினார்கள்.

பலபேர்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்கள். அப்படியும் அவர்களின் துயரத்தை குறைக்க முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் அந்தளவு துக்கம் ஆழமாக படிந்து விட்டது. மனைவியாரின் கவலையை போக்க முயன்ற அலி நாயகம் அவர்களும் தம் முயற்சியில் தோற்றே விட்டார்கள் என்று சொல்லலாம்.

அன்னையவர்களின் மரணம்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு வயது 29. அன்று ரமலான் மாதம் பிறை 3. தம் புதல்வர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தம் தந்தையாரின் ரவ்லாவிற்கு சென்றார்கள். அங்கு துஆ இறைஞ்சினார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். பிறகு குளித்து தூய உடை அணிந்தார்கள். ஜஃபர் அவர்களின் மனைவி அஸ்மா அவர்களிடம் எங்கும் சென்றிட வேண்டாம் என்று வேண்டியபின் படுக்கச் சென்றார்கள்.

சற்று நேரம் சென்றபின் அஸ்மா நாயகி அவர்கள் பாத்திமா நாயகியை வெளியிலிருந்தே அழைத்தார்கள். பதில் வராததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பதற வைத்ததது. ஆம். உலகை உய்விக்க வந்த உத்தம தூதரின் இதயக் கனி அன்னை பாத்திமா நாயகி அவர்கள் நீங்காத் துயில் கொண்டிருந்தனர்.

ஆறு மாதமே ஆவதற்குள் அடைந்த புண் ஆறுவதற்குள் விழுந்த துயரிலிருந்து மீளுவதற்குள் மற்றொரு பெரும் துயரம் நேர்ந்தது மக்களை நைத்தது.

அல்லாஹ்வின் தூதர் அவர்களின்  மறைவை நம்மிடையே பாத்திமா ரலி அவர்கள்  இருந்ததால் மறந்திருந்தோம். உம்முடைய முகத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் முகத்தை இனி நாங்கள் காண இயலுமா?’ என்று அலி ரலி அவர்கள் பெரும் துயரத்துடன் அரற்றினார்கள்.

அளவற்ற நாணம் கொண்டிருந்ததால் பாத்திமா நாயகி அவர்களின் திருவுடல் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க. அன்னாரின் விருப்பப்படி இரவில் மதீனா நகர் வழியே எடுத்துச் செல்லப்பட்டது. அலி ரலி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினர். இறுதியில் பாத்திமா நாயகி அவர்களில் திருவுடல் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அல்லாஹுத்தஆலா அன்னையவர்களின் வழிநடக்கும் மேன்மக்களாக நம்மையும்,நம் பெண்களையும் ஆக்கி அருள்ப் புரிவானாக!ஆமீன்.


வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 29 December 2021

ஜும்ஆ பயான் 31/12/2021

தலைப்பு:

புத்தாண்டு 2022.  

    

وَالْعَصْرِ  إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ    

காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.                      (அல்குர்ஆன் 103-1.103-2)


ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்ந்து தங்களுக்கிடையில்"Happy newyear""புத்தாண்டு வாழ்த்துக்கள்"சொல்லிக்கொள்வதை நவநாகரீகமாக, ஊடகங்கள்,சமூகவலைதலங்கள் வழியாக சித்தரித்துக்காட்டப்படுகிறது.

உண்மையிலே இது மதங்களை கடந்த பொதுப்பண்டிகை தானா என்றால்? இல்லை மாறாக  இது கிட்டத்தட்ட  கிருத்துவர்களின் மதப் பண்டிகை.

பிரிட்டன் என்ற நாடு  உலகில் தன் காலணி ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் தன் கலாச்சாரத்தை திணித்து சென்றது.

உலகில் பல நாடுகளை தன் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை தந்திருந்தாலும், ஆண்டு,ஆடை, மொழி, போன்ற  பழக்கவழக்கங்களில் அதன் கலாச்சார அடிமைகளாக்கி சென்றுவிட்டது.

இந்தியா,இலங்கை போன்ற நாடுகளும்,ஏன் அரபு நாடுகளும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றன.

டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை கண்விழித்திருந்து சரியாக இரவு 12 மணி ஆனதும் அனைவரும் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி Happy New year எனக் கூச்சிலிடுவதும்,வான வேடிக்கைகளும், கேக் வெட்டுவதும், மது,மாது,கிளப், கேலிக்கைககள் என எல்லா அனாச்சாரங்களும்,சமூக அவலங்களும் அன்றைய ஓர் இரவில் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த களியாட்டங்களில் இஸ்லாமியர்களும் பங்குகொண்டு கேக்வெட்டுவதும்,பட்டாசு வெடிப்பதும்,அன்றைய நாளில் மட்டும் சிலர் ஃபஜ்ரு தொழுவதையும் காணமுடிகிறது. இது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான செயலாகும்.

ஒரு ஹதீஸில்...

عَنْ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ) رواه أبو داود (اللباس / 3512) قال الألباني في صحيح أبي داود : حسن صحيح . برقم (3401)

"எவர் (ஏதோனுமொரு) கூட்டத்தவர்களுக்கு ஒப்பாகுவாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்"என நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

كان النبي عليه الصلاة والسلام يكره مشابهة أهل الكتابين

நாயகம் (ஸல்)அவர்கள் எந்த செயலிலும் யூத,நஸராக்களுக்கு ஒப்பாகுவதை வெறுத்தார்கள்.

وقال: ((لا رهبانية في الإسلام)) ، وأمر بالسحور ، ونهى عن المواصلة

அதனால் தான் நாயகம் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தில் துறவரத்தையும்,ஸஹர் இல்லாத நோன்பையும்,தொடர் நோன்பையும் தடைச்செய்தார்கள்.

யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காகவே முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பிற்கு முன்போ பின்போ ஒரு நோன்பை சேர்த்து நோற்க்கச்சொன்னார்கள்.

அது போலவே முஷ்ரிகீன்களுக்கு மாற்றாமாக...

عن ابن عمر رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((خالفوا المشركين: أحفوا الشوارب وأوفوا اللحى))  رواه البخاري و مسلم

"முஷ்ரிகுகளுக்கு மாற்றம் செய்யுங்கள்: மீசையை கத்தரியுங்கள்,தாடியை வளருங்கள்"என்றார்கள்.

கிருத்துவர்களின் நாள்காட்டியை பொதுவானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும்.இந்த சூழ்ச்சிவலையில் இஸ்லாமியர்களும் சிக்கிக்கொள்வதென்பது வேதனையான ஒன்றாகும்.

யூத, கிறித்தவத்தையே நீங்கள் பின்பற்றுவீர்கள்.

3456» حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)). [طرفه 7320، تحفة 4171]. 

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள் :             

உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்து)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 3456. )

யூத ,கிறித்தவ நடைமுறை அனைத்துக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதே நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. 

இணைவைப்பாளர்களுக்கு சாதாரண தலைமுடியில் கூட  மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஏந்தல் நபி (ஸல்)அவர்கள்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْدِلُ شَعَرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ فَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியை, (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை, (இரண்டு பக்கங்களிலும்) பிரித்துக் கொண்டார்கள்.                (ஸஹீஹ் புகாரி : 3558.)  

காலம் கரையுதே.....

புத்தாண்டு கொண்டாடும் அன்பர்களுக்கு!                         

புத்தாண்டு நமக்கு உணர்த்துவயாதெனில் நம் ஆயுளில் ஓர் ஆண்டு கழிந்து விட்டது,இவ்வாழ்வு இறைவன் நமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடையாகும்.அல்லாஹ்வின் அருட்கொடை நம்மைவிட்டும் செல்லும் போது கைசேதப்படவேண்டுமே ஒழிய அதை எப்படி கொண்டாட முடியும்.உண்மையில் கழிந்துவிட்ட ஆண்டில் நாம் செய்த நல்லறங்கள்,பாவச் செயல்கள் குறித்து சிந்தக்கவேண்டும்.

قال ابن مسعود:( ما ندمت على شيء، ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزد فيه عملي! )قیمة الزمن عند العلماء، ص: ۲۷)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்:

நான் எதைக்குறித்தும் கைசேதப்படுவதில்லை,சூரியன் மறையும் ஓர் நாளில் எனது பட்டோலையில் எந்த நல்அமல்களும் அதிகமாகாமல் கழியும் அந்நாளே  எனக்கு கைசேதமாகும். 

قال الحسن البصري:(يا ابن آدم إنما أنت أيام!، فإذا ذهب يوم ذهب بعضك)

ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் சொன்னார்கள்:

"ஆதமின் மகனே!நாள்களின் ஒட்டுமொத்த தொகுப்பு நீ,

விளங்கிக்கொள்!ஒரு நாள் கழியும் போது நீ உன் சிலதை இழக்கிறாய்"

இவ்வாழ்வு நமக்கு நிரந்தர மறுமை வாழ்வின் தயாரிப்பிற்காக தரப்பட்டுள்ளது.நாம் நம் வாழ்வை எவ்வளவு பயனுள்ள வழியில் கழிப்பதென சிந்தித்து செயல்பட வேண்டும். 

عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ. رواه الترمذي

ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

யூத,கிருத்துவர்களின் பல அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் "அன்னையர் தினம்" "தந்தையர் தினம்"" காதலர்தினம்"" ஆசிரியர் தினம்""குழந்தைகள் தினம்"என்கிற பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் குடும்பஅமைப்புகள் சிதைந்து போய் விட்டன.பெற்றோர்களை பராமரிக்காத பிளைகளும்,வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்களும்,இப்படி குடும்ப அமைப்புகளை சிதைத்து விட்டு, பெயருக்கு வருடத்தில் ஒரு முறை இது போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றனர்.இஸ்லாத்தில் உறவுமுறைகளை பேணிவாழ்வதை வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுப் போன்று பெயருக்கு கொண்டாடப்படும் அர்த்தமற்ற தினங்கள் இஸ்லாத்தில் கிடையாது.

காலம் ஒர் அமானிதம்.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு இவ்வுலக வாழ்வை அமானிதமாக வழங்கியுள்ளான்.

நாளை மறுமையில் மனிதனிடம்.....

عَنْ عُمُرِكَ فِيمَا أَفْنَيْتَ، وَعَنْ شَبَابِكَ فِيمَا أَبْلَيْتَ

"உன் வாழ்நாளை எவ்விதம் கழித்தாய்?"என்றும் "உன் இளமையை எவ்வழியில் பயன்படுத்தினாய்?"என்றும் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும் என்கிறது நபிமொழி.

எனவே உலகில் வாழும்போது மனிதன்,தன் மனம்போன போக்கில் வாழ்வை களியாட்டங்களில் வீணாக்குவதை விட்டுவிட்டு,அல்லாஹ்,ரஸுல் காட்டிய வழியில் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளும் போது அவன் இறைப்பொருத்தைப் பெற்றுக்கொள்கிறான்.

உலக வாழ்வு என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய பெரும் வாய்ப்பாகும்,வாழ்வில் ஒவ்வொரு பொழுதுமே விலைமதிப்பற்ற அருளாகும்.காலம் மக்கத்தான அருளாக இருப்பதால் தான் அல்லாஹ் தன் திருமறையில் காலத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு,அக்காலத்தை வீணாக கழிக்கும் மனிதனை நஷ்டவாளி என்கிறான்.

وَالْعَصْرِۙ‏                                              

காலத்தின் மீது சத்தியமாக.      

(அல்குர்ஆன் : 103:1)

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 103:2)

பிரிதோர் இடத்தில்...

وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا‏

இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.(அல்குர்ஆன் : 25:62)

காலத்தின் மதிப்பை உணர்த்தும் நபிமொழி...

اغتنِمْ خمسًا قبل خمسٍ: شبابَك قبل هِرَمِك، وصِحَّتَك قبل سِقَمِك، وغناك قبل فقرِك، وفراغَك قبل شُغلِك، وحياتَك قبل موتِك

ஐந்துக்கு முன் ஐந்தை (வாய்ப்பாக)கனீமத்தாக கருதுங்கள்:

வயோதிகற்கு முன் வாலிபத்தையும்,

நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

அலுவல்களுக்கு முன் ஓய்வையும்,

மரணத்திற்கு முன் வாழ்வையும்,

(வாய்ப்பாக கருதுங்கள்).

மனித வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் மறுமைக்காக நன்மைகளை விதைக்கும் பருவகாலம்,அதன் பலாபலனை நாளை மறுமையில் அறுவடைச்செய்யலாம்.

எனவே மனிதன் தன் வாழ்நாளை வீண்வேலைகள்,களியாட்டாங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் வீணடித்துவிடக்கூடாது.

உலக செல்வங்களை சம்பாதிப்பதிலே மூழ்கிவிடக்கூடாது.காரணம் பொருளை இன்றில்லையென்றாலும் ஒரு நாள் சம்பாதிக்க இயலும், ஆனால் நம்மை விட்டும் கழிந்த பொழுதுகளில் ஓர் நொடியைக் கூட நம்மால் திரும்பக்கொண்டுவர இயலாது.

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْ‌ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏

அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.(அல்குர்ஆன் : 10:45)

وقد كان عمر بن الخطاب - رضي الله عنه- يكره إضاعة الوقت، والبطالة، والتعطل، فيقول: (إني لأكره أن أرى أحدكم سبهللاً - فارغاً- لا في عمل دنيا ولا عمل آخرة)

உமர் (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்:உங்களில் எவரும் உலக அலுவலோ அல்லது மறுமையின் அமல்களோ செய்யாமல் ஓய்வாக இருப்பதையும்,நேரத்தை வீணடிப்பதையும் கண்டு நான் வெறுக்கிறேன்.

. قال يحيى بن هبيرة أستاذ الإمام ابن الجوزي -رحمه الله-: الوقتُ أنفَسُ ما عُنِيت بحفظِه وأراه أسهَل 

இஸ்லாத்தில் இரண்டு ஈது பெருநாள்கள் கூட  வெறுமனே அர்த்தமற்ற கொண்டாட்டங்கள்,களியாட்டாங்கள்,வீண்விரயங்கள் இல்லாத இறைவழிப்பாடகவும்,ஏழை எளியோருக்கு உதவும் மனப்பான்மையை உண்டாக்கும் நாள்களாக போற்றப்படுகிறது.இவை தவிர மற்ற கொண்டாட்டங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

காலம் சுருங்குவது கியாமத் நாளின் அடையாளம்.

٢٣- [عن أنس بن مالك:] لا تقومُ الساعةُ، حتى يتقاربَ الزمانُ، فتكون السنةُ كالشهرِ، والشهرُ كالجمعةِ، وتكون الجمعةُ كاليومِ، ويكون اليومُ كالساعةِ، وتكون الساعةُ كالضرمةِ بالنارِ

الألباني (ت ١٤٢٠)، تخريج مشكاة المصابيح ٥٣٧٦  •  له شاهد مرفوعاً به إسناده صحيح على شرط مسلم

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

கியாம நாள் காலங்கள் சுருங்கும் வரை ஏற்படாது. எனவே ஒரு வருடம் ஒரு மாதமாக, ஒரு மாதம் ஒரு வாரமாக, ஒரு வாரம் ஒரு நாளாக, ஒரு நாள் ஒரு மணி நேரமாக, ஒரு மணி நேரம் ஒரு செடி நெருப்பில் கறியும்  அளவு போல் காலத்தில் பரக்கத் பிடுங்கப்படும் வரை கியாம நாள் ஏற்படாது.

காலமாக நான் இருக்கிறேன்.

الحديث القدسي الذي يقول فيه النبيُّ (صل)                       لا تسبُّوا الدهر، فإنَّ الله هو الدهر

காலத்தை திட்டாதீர்கள் ஏனெனில் காலமாக அல்லாஹ் இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா 92 இடத்தில் சத்தியமிட்டு சொல்கிறான்.அதில் 18 இடங்களில் காலத்தின் மீது சத்தியமிட்டு பேசுகிறான்.

அதிகாலை நேரத்தின் மீது சத்தியமாக!

ழுஹா நேரத்தின் மீது சத்தியமாக!

அஸர் நேரத்தின் மீது சத்தியமாக!

பகலின் மீது சத்தியமாக! இரவின் மீது சத்தியமாக!  இப்படி காலத்தின் அத்துனை பகுதிகள் மீதும் அல்லாஹ் சத்தியமிட்டு கூறுவதில் பல அத்தாட்சிகள் அதிலே பொதிந்திருப்பதை நாம்  உணரலாம்.

அல்லாஹ் தான் படைத்த உயிரினம் அல்லாத படைப்புகளான  சூரியன்,சந்திரன், வேதம், ஞானம் ஆகியவற்றின் மீது ஏன் சத்தியம் செய்கிறான் என்றால் அவைகள் அனைத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது! என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியாகும். மேலும் இந்த படைப்புகள் அனைத்தும்  உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஏன்? அழிவு நாள் வரை அவன் கட்டளையின்றி அணுவளவும் அசையாது.    

எனவே தான் காலமாக நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

Time is gold காலம் பொன்போன்றது என்பார்கள்.

Time is money.காலம் பணத்தின் மதிப்புடையது என்பார்கள்.

ஆனால் இஸ்லாம் Time is life காலம் தான் வாழ்க்கை என்று சொல்கிறது.

நேரத்தின் பெறு­ம­தியை பின்­வரும் சந்­தர்ப்­பங்­களை சந்தித்தவர்களிடம் கேட்­கலாம்.

1) ஒரு வரு­டத்தின் பெறு­ம­தியை பரீட்­சையில் தோற்­ற மாணவனிடம் கேட்­கலாம்.

2) ஒரு மாதத்தின் பெறு­ம­தியை ஒரு கர்ப்­பிணிப் பெண்­ணிடம் கேட்கலாம்.

3) ஒரு நிமி­டத்தின் பெறு­ம­தியை பஸ்­வண்­டியைத் தவறவிட்டவனிடம் கேட்­கலாம்.

4) ஒரு செக்­கன்டின் பெறு­ம­தியை விபத்தில் தப்­பி­ய­வ­னிடம் கேட்கலாம்.

5) நுண்­ணொ­டியின் பெறு­ம­தியை ஒலிம்­பிக்கில் தங்­கப்­ப­தக்­கத்தை தவ­ற­விட்­ட­வ­னிடம் கேட்­கலாம்.

ஒரு வினாடியின் அருமை.

2012-இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் "ஜமைக்கா' நாட்டைச்சேர்ந்த உசேன் போல்ட் என்பவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.63 விநாடிகளில் வந்து தங்கப்பதக்கம் பெற்று உலகின் அதிவேக ஓட்டக்காரன் என்ற சாதனை படைத்ததும், அவரைத் தொடர்ந்து 9.75 விநாடிகளில் அதாவது சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் 2-ஆம் இடம் பெற்ற விளையாட்டு வீரருக்கும் காலம் எத்துணை உன்னதமானது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

மனிதன் எத்தனை திட்டங்கள் வைத்திருந்தாலும் அல்லாஹ்வின் ஒரு நொடி போதும் அவன் திட்டங்கள் அனைத்தும் அழிந்து விடும்.

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏ 

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 7:34)

மாற்றத்தின் நேரம் அதிகாலை.

உலகில் பெரும் பெரும் மாற்றங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் நடைபெறுகின்றன. உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆத் கூட்டத்தைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (திருக்குர்ஆன் 46:25)

சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகின்றான்: “திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (திருக்குர்ஆன் 7:91)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?” (திருக்குர்ஆன் 11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான்: “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்”. (திருக்குர்ஆன் 29:37). 

2004-ல் ஏற்பட்ட சுனாமி, துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம், 2009- ல் ஆப்பிரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

காலண்டரின் வரலாறு...

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் சில வரலாற்று நிகழ்வுகளை வைத்து காலங்கள் கணிக்கப்பட்டு வந்தன.

ஆதியில் வாழ்ந்தவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிறப்பை வைத்து காலத்தை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி இப்ராஹீம் (அலை) நெருப்பில் தூக்கி போடப்பட்ட வருடத்தை கணக்கிட்டு வந்தார்கள். பிறகு நபி யூசுப் (அலை) அவர்கள் எகிப்தில் ஆட்சியாளராக ஆன போது அதைக் கணக்கிட்டு வந்தார்கள்.

பிறகு பனு இஸ்ராயில்  ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளை வருடமாக கணக்கிட்டு வந்தார்கள்.பிறகு நபி ஈஸா (அலை) பிறந்தநாள் அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நாளை இன்று வரை வருடமாக கணித்து வருகிறர்கள். 

முஸ்லிம்கள் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து வருடங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இது தான் ஆண்டுகள் கணக்கிடப்பட்ட வரலாறு.

புத்தாண்டு தின வரலாறு.

முதலில் புத்தாண்டு தினமே‌ ஒரு குழப்பமான வரலாற்று பின்னணியை கொண்டது.ஆரம்பத்தில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. 

ரோமானிய காலண்டர்.

அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.

ஜூலியன் காலண்டர்.

புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர்

கிரிகோரியன் காலண்டர்.

குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று உலக மக்கள் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறார்கள்.

கிருத்துவர்களின் நாள்காட்டியை பொதுவானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும்.இந்த சூழ்ச்சிவலையில் இஸ்லாமியர்களும் சிக்கிக்கொள்வதென்பது வேதனையான ஒன்றாகும்.

ஹிஜ்ரா ஆண்டு...

நமக்கென நாயகம் (ஸல்)அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்ட,உயர்ந்த தத்துவங்களை  உள்ளடக்கிய  ஹிஜ்ரா நாள்காட்டி முறை இருக்கிறது.

நம்மில் பலருக்கு இஸ்லாமிய மாதங்களோ,வருடமோ தெரிவதில்லை. வருடத்தில் ஈதுக் கொண்டாடுவதற்கும்,திருமணத்தில் பெயருக்கு வருடம்,பிறை போடுவதற்கு மட்டுமே இஸ்லாமிய ஹிஜ்ரீ கணக்கு தேவைப்படுகிறது.

அர்த்தமில்லாத புத்தாண்டு...

புத்தாண்டு தினம் முதற்கொண்டு ஆங்கில மாதங்களின் பெயர்கள் வரை அனைத்தும் இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமானவையும், அர்த்தமில்லாதவையும் தான்.

ஜனவரி :

ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.

பிப்ரவரி :

 மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச் :

மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியதுதான் மார்ச் மாதம் ஆகும்.

ஏப்ரல் : 

ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே : 

இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும்.

ஜூன் : 

ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும்.

ஜூலை : 

மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார்.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது.

செப்டம்பர் : 

ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

அக்டோபர் :

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது.

நவம்பர் : 

நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர் :

டிசம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான டிசம் என்றால் பத்து என்று அர்த்தம். இதனால் டிசம்பர் என்று அழைக்கப்பட்டது. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், பன்னிரென்டாம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

புத்தாண்டு எனும் சமூகச் சீரழிவு.

அன்றிரவு வயது வித்தியாசமின்றி மது அருந்தப்படுகிறது.ஆண்,பெண் கலப்பு சர்வசாதாரணமாகவும்,ஆட்டம் பாட்டம்,காமகளியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

புத்தாண்டு அடுத்தவர்களின் கலாச்சாரம் இன்னொன்று இந்த கொண்டாட்டங்களில் எந்த நன்மைகளுமில்லாத,பாவச்செயல்களால் நிறைந்துகாணப்படுகின்றன.

عن ثابت بن الضحاك  قال: " نذر رجل أن ينحر إبلا ببوانة، فسأل النبي ﷺ فقال: هل كان فيها وثن من أوثان الجاهلية يُعبد؟ قالوا: لا. قال: فهل كان فيها عيد من أعيادهم؟ قالوا: لا. فقال رسول الله ﷺ: أوف بنذرك، فإنه لا وفاء لنذر في معصية الله، ولا فيما لا يملك ابن آدم" رواه أبو داود. وإسناده على شرطهما

ஒரு நபித்தோழர் "புவானா"எனும் ஓர் இடத்தில் ஒட்டகம் அறுக்க நேர்ச்சை செய்திருந்தார்.நாயகம் (ஸல்)அவர்களிடம் அனுமதிகோரிய போது,

நபியவர்கள் "அவ்வவிடத்தில் அறியாமைக்கால மக்கள் வணங்கிய சிலைக்களில் ஏதேனும் இருக்கின்றனவா?"என்றுக்கேட்டார்கள்.

அவர் "இல்லை" என்றார்.

மீண்டும் நபியர்கள் "அங்கு அவர்களின் விழாக்கள் ஏதும் கொண்டாடப்படுகின்றனவா"?என்று கேட்டார்கள்.

"இல்லை" என்றார் அவர்.

 அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)   -நூல்: அபூதாவூத் -

நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தில்  மற்றவர்களின் கலாச்சாரமோ,பழக்கவழக்கங்களோ, அனுஷ்டானங்களையோ அனுமதித்ததில்லை.

இறுதியாக....

 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُخَارِقٍ سَمِعْتُ طَارِقًا قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்: 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், 'உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 6098)

எனவே நாம் அந்நிய கலாச்சாரத்தின் நடைமுறைக்கு அடிமையாகமால், நடைமுறையில் சிறந்த நடைமுறையான நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை பின்பற்றி வாழ்வோமாக!ஆமின்...

வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 22 December 2021

ஜும்ஆ பயான் 24/12/2021

தலைப்பு:


இஸ்லாம் கூறும் ஈஸாஅலைஹிஸ்ஸலாம்.

 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே.(அல்குர்ஆன் : 3:59)

ஈஸா அலைஹி அவர்களின் பிறப்பு.

அல்லாஹுத்தஆலா மனிதப்படைப்பில் ஆண்,பெண் இணைசேர்வதன் மூலம் அவன் நாட்டப்படி குழந்தையை பெண்ணின் வழியாக பிறக்கச்செய்வதே பொதுவான வழமை.

இவ்வழமைக்கு முரணாக அல்லாஹ் தன்  (قدرت) ஆற்றலைப்பறைச்சாற்ற சில மனிதர்களைப்படைத்தான்.

ஆதி பிதா ஆதம்(அலை)அவர்களின் படைப்பு,  இந்த ஆண்,பெண் இணைச்சேருதல் இன்றி நிகழ்ந்தது.

அம்மையார் ஹவ்வா(அலைஹா) அவர்களின் படைப்பு பெண்ணின் துணையின்றி  ஓர் ஆணின் (ஆதம்(அலை)அவர்களின் விலா எலும்பில் படைக்கப்பட்டார்கள்.

இவ்விதமே அல்லாஹ் தன் (قدرت)ஆற்றலைப்பறைச்சாற்ற ஹழ்ரத் ஈசா(அலை)அவர்களை ஆண் துணையின்றி பெண்ணின்( மர்யம் பின்து இம்ரான் (அலை) அவர்களின்)வழியாக ஒர் அற்புதப் படைப்பாக ஃபலஸ்தீன் நாட்டில் பிரபல்யமான ’’بیت لحم‘‘பெத்தலஹேம் எனும் ஊரில் பிறக்கச்செய்தான்.

இதனையே அல்லாஹ் திருமறையில்...

اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே;  அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.(அல்குர்ஆன் : 3:59)

ஈசா(அலை)அவர்களின் பிறப்பும், டிசம்பர் 25 கிருஸ்துமஸும்.

ஹழ்ரத் ஈசா (அலை)அவர்களின் பிறந்ததினம் சம்பந்தமாக உறுதியான செய்தி எந்த மதத்தின் நம்பகமான வேதங்களிலோ அல்லது வரலாற்று பதிவுகளிலோ கணக்கிடைக்கவில்லை.

கிருத்துவர்களின் வேதமான பைபிளிலும் இயேசு  டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் என்று  எங்கும் கூறப்படவில்லை.

இன்று கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை டிசம்பர் 25 அன்று கொண்டாடினாலும், புதிய ஏற்பாடு இயேசு பிறந்த தேதியைப் பற்றி முற்றிலும் எதுவும் கூறவில்லை. நீங்கள் அனைத்து சுவிசேஷங்கள், அப்போஸ்தலர்களின் புத்தகம், அனைத்து நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகம் ஆகியவற்றைப் படித்தால், இயேசுவின் பிறந்த தேதியைப் பற்றிய ஒரு குறிப்பைக் கூட நீங்கள் காண முடியாது. டிசம்பர் 25 பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் கிருத்துவர்கள் எந்த அடிப்படை ஆதாரமுமின்றி டிசம்பர் 25 இயேசு  பிறந்ததினமாக கொண்டாடுகின்றார்கள்.

குர்ஆன்,ஹதீஸ் மற்றும் பைபிளில் வரும் கூற்றுகளின் அடிப்படையில்....

பைபிள் புதிய ஏற்பாடு லூக்கா நற்செய்தி (2:8)இயேசு பிறந்த இரவில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளுடன் வெளியில் இரவைக் கழிப்பதை விவரிப்பதால், ஆண்டின் வெப்பமான மாதங்களில் இயேசு பிறந்தார் என்று தெரிகிறது. பண்டைய யூதேயாவில், மேய்ப்பர்கள் பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் இரவுகளை வெளியில் கழிக்க மாட்டார்கள், ஏனெனில், பலஸ்தீனில் குளிர்காலத்தில் இரவில் கடும் பனியாக, மிகவும் குளிராக இருக்கும் மற்றும் பெரும்பாலும் மழை பெய்யும்.

குர்ஆனில் மர்யம் சூராவில்...

وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا‏

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.(அல்குர்ஆன் : 19:25)

பேரித்தம் பழம் குளிர்காலங்களில் விளையாது,வெயில் காலங்களில்  தான் விளையும் என்பது உலகறிந்த செய்தி.

இன்னும் பல ஆதாரங்களின் அடைப்படையில் குளிர்காலத்தில் அதாவது டிசம்பர் 25ல் இயேசு பிறந்திருக்க வாய்ப்பில்லை.வெயில் காலத்தில் பிறந்தார் என்பது தெளிவாகிறது.

பிறப்பு ஒரு அற்புதம் ;

١- [عن عبدالله بن عباس:] أنَّ رَهطًا من أهلِ نَجرانَ قدِموا على النبيِّ ﷺ وكان فيهمُ السيِّدُ والعاقِبُ فقالوا ما شأنُك تذكُرُ صاحبَنا قال مَن هو قالوا عيسى تَزعُمُ أنه عبدُ اللهِ قالوا فهلْ رأيتَ مِثلَ عيسى وأُنبِئتَ به ثم خرَجوا من عِندِه فجاء جِبريلُ فقال قلْ لهم إذا أتَوكَ {إِنَّ مَثَلَ عِيسى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ} إلى آخِرِ الآيةِ

الشوكاني (ت ١٢٥٥)، فتح القدير ١‏/٥١٧  •  قد رويت هذه القصة على وجوه

நஜ்ரானிலிருந்து ஒரு கூட்டம் நபியிடத்தில் வந்து எங்கள் ஆளைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களாமே என்று கேட்டார்கள். உங்க ஆள் யார் என்று நபி ﷺ அவர்கள் கேட்ட போது ஈஸாவாகும். அவர்களை நீங்கள் அல்லாஹ்வின் அடிமை என்று கூறுகிறீர்களா? இந்த கேட்டார்கள். நபி ﷺ அவர்கள் ஆம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார் தான் என்று கூறினார்கள். அதற்கவர்கள் ஈஸாவைப் போன்று நீங்கள் உலகத்திலே வேறு யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தந்தை உண்டு. ஆனால் ஈஸாவிற்கு எந்த தந்தையும் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். அப்போது தான் இந்த வசனம் அருளப்பட்டது.

மேலும் இறைவன் திருமறையில்....கூறுகிறான்.

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ‎

மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களி டம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்

அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47)

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِلْعَالَمِينَ‎

தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் எனும்) பெண்ணிடத்தில் நமது உயிரிலிருந்து (ரூஹிலிருந்து) ஊதி னோம். (அவள் கருத் தரித் தாள்) அவளையும் அவளது குமாரனையும் உலகத்தாருக்கு ஓர் அத் தாட்சியாக்கினோம். (21:91)

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:

فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا‎

(ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத் தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர்.ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை.உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக் காட்னார்.தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர்.(19:27.28.29.)

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாக ஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا‎

…(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. (19:30)

மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை உண்மைப் படுத்தியவர்.

وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ‎

தமக்கு முன்னுள்ள தவ்ராத்தில் இருப்பதை உண்மைப்படுத்து பவராக மர்யமின் மகன் ஈஸாவை (நபிமார்களான) அவர்களின் அடிச்சு வட்டில் நாம் தொடரச் செய்தோம். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அதிலே நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப் படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு நல்லுபதே சமாகவும் இருக்கிறது.(5:46, 3:48, 5:110, 57:27)

யூதர்களுக்கு மட்டும் தூதுவராக அனுப்பப்பட்டவர்:-

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ‎

இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் உங்க ளுக்கு அனுப் பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (61:6, 3:49, 61:14)

ஈஸா நபி போதித்த மார்க்கம், இஸ்லாம்:-

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ‎

நூஹுக்கு எதை அல்லாஹ் வலியுறுத் தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே உமக்கு நாம் வஹி யாக அறிவித்ததும் இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ, அது இணை கற்பிப்போருக்குப் பழுவாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடி யோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். (42:13)

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ‎

அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம்; தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி முரண் படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக் கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிர மானவன்.(3:19)

ஈஸா நபி போதித்த ஓரிறைக் கொள்கை:-

إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ‎

நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)

ஈஸா நபியின் சீடர்களும் முஸ்லிம்களே:-

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ‎

(யூதர்களாகிய) அவர்களிடம் இறை மறுப்பை ஈஸா நபி உணர்ந்த போது அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என்று கேட்டார். அதற்கு ஹவாரிய்யூன் (எனும் அவரது சீடர்கள்) நாங்கள் அல்லாஹ்வின் உதவி யாளர்கள். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் மேலும் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக இருப்பீராக என்று கூறினர். (3:52, 5:111)

ஈஸா நபி கடவுளல்ல:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ‎

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை) நிராகரித்து விட்டனர். மர்ய மின் மகன் மஸீஹையும் அவரது தாயாரை யும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. வானங் கள் பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப் பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்ற லுடையவன். (5:17)

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ‎

நிச்சயமாக மர்யமின் மகன் அல் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை நிராகரித்து விட்ட னர். இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும் உங்கள் இறை வனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சுவர்க் கத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை என்றே அல் மஸீஹ் கூறினார். (5:72)

ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ‎

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் என (ஈஸாவாகிய) அவர் கூறினார். (19:30)

لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا‎

(ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடி மையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)

ஈஸா நபி அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை)யின் குமாரர்):-

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ‎

உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறு கின்றனர். இது அவர்களது வாய் களால் கூறும் (வெற்று ) வார்த் தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். (9:30)

مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ‎

எந்தக் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.(19:35)

முக்கடவுள் கொள்கையை போதிக்கவில்லை:

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ‎

நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா சுதன் பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் ஒரே ஓரு இரட் சகனைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே இறைவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக் குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். (5:73)

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ‎

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங் கள் என்று நீர்தான் மக்க ளுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவான வற்றை நீயே அறிப வன் என்று அவர் கூறுவார்.

எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை.நான் அவர் களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.

அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார் களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞான மிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). (5:116-118)

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا‎

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதை யும்) கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவ்வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே அவர்! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசி யுங்கள். (கடவுள்கள்;) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்குச் சிறந்ததாகும். நிச்சயமாக (வணங்கப்படத்தகுதியானவன்) அல்லாஹ ஒவனே. அவனுக்குப் பிள்ளை (மகன்) இருப்பதை விட்டும் அவன் மிகத்தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பெறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன். (4:171)

முஹம்மத் நபி பற்றி ஈஸா நபியின் முன்னறிவிப்பு:

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ‎

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும் எனக்குப் பின் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுப வனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதராவேன் என்று மர்ய முடைய மகன் ஈஸா கூறியதை நபியே (முஹம்மதே) நினைவூ ட்டுவீராக! ஆவர் தெளிவான சான்றுகளுடன் வந்த போது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர்.(61:6)

ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை:

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا‎

அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப் பட்டனர்) அவர்கள் அவரை கொல்லவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவு மில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கபட்டான்.நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து முரண்பாடு கொண்டோர் அவர் பற்றிய சந்தேகத்தில் இருக் கின்றனர். வெறும் யூகத்தை பின் பற்றுவதை; த் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை; (4:156-157)

ஈஸா நபி அல்லாஹ்வின் பால் உயிரோடு உயர்த்தப் பட்டார்:-

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا‎

மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (4:158, 3:52-56)

ஈஸா நபியின் மீள் வருகை உலக அழிவின் ஓர் அடையாளம்:-

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا‎

வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து ) மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய)அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:159)

وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ‎

நிச்சயமாக் (ஈஸாவாகிய) அவர் இறுதிநாளின் அடையாளமா வார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்) (43:61)

சத்தியத்தை நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் விடுக்கும் சவால்:

الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ‎

இவ்வுண்மைஉமது இரட்சகனிடமிருந்து வந்ததாகும்.ஆகவே சந்தே கம் கொள்வோரில் நீர் ஆகிவிட வேண்டாம்.(நபியே) உம்மிடம் அறிவு வந்த பின்னரும் அவர் விடயத்தில் யாரும் உம்மிடம் தர்க்கித் தால் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளை களையும்எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்க ளையும் உங்களையும் நாம் அழைத்து பின்னர்நாம் அழிவு சத்தியம் செய்துஅல்லாஹ்வின் சாபத்தை பொய்யர்கள் மீதாக்குவோம் எனக் கூறுவீராக. நிச்சயமாக இது தான் உண்மையான சரித்திர மாகும்.(உண்மையில்)வணங்கப்படத்தகுதியானவன்அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிவான்.(3:61;62)

ஈஸா நபியின் மரணம்:

(உயிரோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி உலக அழிவுக்கு முன் மீண்டும் பூமிக்கு வருவார். முஹம்மது நபியின் இஸ்லாமிய போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்துவார். அவரை நிராகரித்த யூதர்கள் உட்பட மக்கள் அனைவரும் விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாவார்கள். பூமியிலே இயற்கை மரணம் எய்துவார். அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்வார்கள் என நபி முஹம்மத் (ஸல்) கூறினார்கள் என்பதை ஹதீஸில்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருத்துவ மதத்தின் வழிகேடான கடவுள் கொள்கைகள்.

ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களை (இயேசுவை)கடவுளின் குமாரர் (معاذ اللہ)என்கிறார்கள்.

இவர்களின் வழிகேடான இக்கொள்கையை அல்லாஹ் குர்ஆனில் வன்மையாக கண்டிக்கின்றான்.

وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ‏

இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.(அல்குர்ஆன் : 19:88)

لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ‏

“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.(அல்குர்ஆன் : 19:89)

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ‏

இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.(அல்குர்ஆன் : 19:90)

اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا‌ ‏

அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-(அல்குர்ஆன் : 19:91)

وَمَا يَنْبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ‏

ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.(அல்குர்ஆன் : 19:92)

இஸ்லாம்,மற்றும் கிருத்துவ மதத்திற்கிடையே உள்ள கடும் கருத்து முரண்பாடுகள்.

1)கிருத்துவர்களின் கொள்கை:இயேசு (ஈசா(அலை)அவர்கள்)கடவுளின் குமாரர்.

இஸ்லாத்தின் நம்பிக்கை:அல்லாஹ்விற்கு ஆண்,பெண்  என்று எந்த பிள்ளைகளும் கிடையாது.

இதை குர்ஆன் பல  இடங்களில் தெளிப்படுத்துகிறது.

சூரா இக்லாஸில்...

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.(அல்குர்ஆன் : 112:3)

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(அல்குர்ஆன் : 112:4)

கிருத்துவர்கள் ஆண்,பெண் துணையின்றி படைக்கப்பட்ட ஆதம் நபி(அலை)அவர்களையோ,பெண் துணையின்றி ஆணின் மூலம் படைக்கப்பட்ட ஹவ்வா (அலைஹா)அவர்களையோ, அல்லாஹ்வின் ஆண்,பெண் மக்கள் எனக் கூறுவது கிடையாது.ஆனால் ஆண் துணையின்றி பெண்ணின் வழியாக பிறந்த (இயேசு)ஈசா(அலை)அவர்களை மட்டும் கடவுளின் குமாரர் எனக் கூறுவது அறிவுக்கு முரணாக உள்ளது.

2)கிருத்துவர்களின் கொள்கை:இயேசு (ஈசா(அலை)அவர்கள்) அல்லாஹ்வை போலவே வணங்குவதற்கு தகுதியானவர்.

அவர்களின் நம்பிக்கையில் முக்கியமானது, "திரித்துவம்" அல்லது "திரியேகத்துவம்"(Trinity)

திரித்துவம் என்றால் ஒன்றில் மூன்று ,மூன்றும் ஓன்று (குழப்பமாக உள்ளதா?)இது தான் கிருத்துவர்களின் கடவுள் கொள்கை.

கிறித்தவ இறையியலின்படி கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள்.

அவர்கள் இறைவனை ஒருவன் என ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் அந்த ஒருவனில் மூன்றுப் பேர் உள்ளார்கள் என்பார்கள்.

பிதா,பிதாவின் குமாரர்,பரிசுத்த ஆவி இந்த மூன்றும் ஓன்று என்பது அவர்களின் நம்பிக்கை.

இஸ்லாம் இறைவனை தனித்தவன் என்றும் திரித்துவம் போன்ற வழிக்கேடான கொள்கைகளை வன்மையாக கண்டிக்கின்றது.

لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ‌ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ   وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.(அல்குர்ஆன் : 5:73)

3)கிருத்துவர்களின் கொள்கை:இயேசு யூதர்களால் சிலுவையில் அறைந்துக்கொள்ளப்பட்டார்.

இஸ்லாதின் உறுதியான நம்பிக்கை:     நபி ஈசா(அலை)அவர்கள் கொள்ளப்படவுமில்லை,சிலுவையில் அறையப்படவுமில்லை,அதற்கு முன்பே அவர் வானுலகிற்கு உயர்த்தப்பட்டார்.அவரைப் போன்றொருவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள்.

கியாம நாளின் சமீபத்தில் ஈசா(அலை)அவர்கள் பூமிக்கு இறக்கப்படுவார்.அப்போதவர் நபியாக இல்லாமல் உம்மதே முஹம்மதியாவில் ஓர் முஃமினாக உலகம் முழுக்க குர்ஆன்,ஹதீஸை நடைமுறைப்படுத்துவார்.

4)கிருத்துவர்களின் நபி (ஸல்) அலைஹி பற்றிய கொள்கை:

நபி இப்ராஹீம் (அலை)அவர்களின் இன்னொரு மகனார் நபி இஸ்மாயீல் (அலை)அவர்களின் வமிசத்தில் வந்த நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்களை நபியாகாவோ, ரஸுலாகவோ ஏற்பது கிடையாது.அப்படி முஹம்மது(ஸல்)அவர்களை நபியாக ஏற்பவர் கிருத்துவ மதத்தை விட்டும் வெளியேறிவிட்டார்.

இஸ்லாமியர்களின் கொள்கை:நபி முஹம்மது (ஸல்)அவர்களை இறுதி நபியாக ஏற்பதுடனே முன்னுள்ள நபி இப்ராஹீம்,நபி இஸ்ஹாக்,நபி இஸ்மாயீல்,நபி மூஸா,நபி ஈசா (அலைஹிம்)என அனைவரையும் ஈமான் கொள்ளவேண்டும். 

ஈஸா நபியும்… அற்புதங்களும்…

அல்லாஹ்வின் உத்தரவுப் படி ஈஸா நபி காட்டிய அற்புதங்கள்:-

1)இறந்தவர்களை உயிர்பித்தார்..

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ‎

நிச்சயமாக நான் உங்களுக்கு உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத் தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒருபறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி அதில் ஊதுவேன். உடனே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அது (உயிருள்ள) பறவையாகி விடும். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் இறந்தோரையும் உயிர்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் விசுவாசம் கொணடவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி உள்ளது (என்றார் ஈஸா நபி). (3:49, 5:110-114)

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் அற்புதங்களைச் செய்ய முடியும். இந்த வகையில் ஈஸா நபி நிறைய அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதி மூலம் நிகழ்த்தினார்.

அவர் சிறு வயதிலேயே சிறுவர்களுடன் விளையாடும் போது, சிறுவர்கள் வீட்டில் உண்ட உணவையும் கூறுவார்கள். அவர்களின் வீட்டில் சமைக்கப்படும் உணவு என்ன என்பதையும் கூறுவார்கள். இறைத்தூதர்களுக்கு அந்தந்த சமூகங்களின் நிலைக்கு ஏற்ப அற்புதங்கள் கொடுக்கப்பட்டன. மூஸா நபியின் காலத்தில் சூனியம் மிகைத்திருந்தது. எனவே சூனியத்தை மிகைக்கும் அற்புதம் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறே ஈஸா நபியின் காலத்தில் மருத்துவம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இவருக்கு மருத்துவத்தை மிகைக்கும் அற்புதம் வழங்கப்பட்டது. அவர் பிறவிக்குருடர்களின் கண்களைத் தடவுவார். அவர்கள் பார்வை பெற்றனர். இவ்வாறே குஷ்டரோகிகளைத் தடவுவார்கள். அவர்கள் நல்ல உடலைப் பெற்றனர். அவர் சில இறந்தவர்களைக் கூட உயிர்ப்பித்தார். ஒரு நாள் களிமண்ணைக் கொண்டு ஒருபறவையைச் செய்து அதில் அவர் ஊதினார். அதிசயமாக அது உயிர்ப்பெற்று பறந்தது. இந்த அற்புதங்களையெல்லாம் நான் என் இஷ்டத்துக்குச் செய்யவில்லை. என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின் அனுமதிப்படியே செய்கின்றேன் என்றும் கூறினார். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் என் விருப்பப்படி எதுவும் செய்யவும் முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர் செய்த அற்புதங்களை அறிந்த மக்கள் பின்னாட்களில் அவரையே கடவுளாக வழிபட ஆரம்பித்து விட்டனர். அவர் ஆரம்பத்திலேயே “என்னை இறைவன் என்று அழைப்பவர்கள் சுவனம் செல்ல முடியாது” எனக் கூறிவிட்டார். மறுமை நாளில் அல்லாஹ், ஈஸா நபியை எழுப்பி பின்வருமாறு கேட்பான்…

“ஈஸாவே உன்னையும் உன் தாயையும் இரண்டு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு நீர்தான் கூறினீரா?” இதுகேட்ட ஈஸா நபி, “நீ தூய்மையானவன்.

எனக்கு உரிமை இல்லாததை நான் கூற முடியாதே. நான் அப்படிக் கூறி இருந்தால் நீ அறிந்திருப்பாயே! உனது உள்ளத்தில் இருப்பதை நான் அறிய முடியாது! எனது உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய்! நீதான் மறைவானவற்றை அறிந்தவன்! நீ எனக்கு உத்தரவிட்ட அடிப்படையில் “என்னுடையவும் உங்களுடையவும் இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்றுதான் நான் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த போது அவர்களைக் கண்காணித்து வந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் என்ன நடந்தது என்பதை நான் அறியேன். நீ தான் அவர்களின் கண்காணிப்பாளன். நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகள். உன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். நீ அவர்களை மன்னித்தால் அது உன் நாட்டத்திற்கு உட்பட்டது” என்று கூறி ஒதுங்கி விடுவார்கள்.

ஈஸா நபி நிறைய அற்புதங்கள் செய்தாலும் “அவர் கடவுளும் அல்ல, கடவுளின் குமாரரும் அல்ல. அவர் அல்லாஹ்வின் அடிமையும் இறைத்தூதருமாவார்” என்று நம்புபவர்கள் தான் சுவனம் நுழைய முடியும்.

(நாம் குறிப்பிட்ட தகவல்கள் திருக்குர்ஆனில் 3:49&51, 5:116&118 ஆகிய வசனங்களில் இடம்பெற்றுள்ளன)

மேலும்... திருமறையில்....

வானிலிருந்து மாயிதா எனும் உணவு தட்டு இறங்கியது. 

اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ‌  قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 5:112)

قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ‏
அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 5:113)

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
(அல்குர்ஆன் : 5:114)

قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ‌ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ‏
அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 5:115)

மக்களில் சிலர் ஈஸாவே அல்லாஹ்விடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டுமெனில் எங்களுக்கு வானத்திலிருந்து உணவுத் தட்டை இறக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர்.
அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்குப் பிறகும் நீங்கள் சந்தேகப்படுவீர்களானால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். அதன்பின் அவர்கள் சொன்னபடி அவர்கள் 30நாட்கள் நோன்பிருந்து தொழுது துஆ செய்து வந்தார்கள்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்ன நாளும் வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. நபியவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி உணவுத் தட்டை இறக்க வேண்டினார்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதைத் திறந்தார்கள். அதில் பொரித்த மீன் ஒன்று இருந்தது. அதில் நெய் ஓடிக் கொண்டிருந்தது. தலை மீது உப்பும்,வால் மீது காடியும் இருந்தது. அதனைச் சுற்றி ஐந்து ரொட்டிகள் வைக்கபட்டிருந்தன. ஒன்றின் மீது ஜைத்தூண் எண்ணெய்யும், இன்னொன்றின் மீது தேனும்,இன்னொன்றின் மீது பன்னீரும் இன்னொன்றின் மீது நெய்யும் இன்னொன்றின் மீது பொரித்த இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது.
உணவுத் தட்டை விரும்பியவர்களிடம் நீங்கள் விரும்பியவாறு உணவுத்தட்டு இறங்கிவிட்டது. இதனை உண்டு அல்லாஹ்விற்கு மாறு செய்யாமலிருங்கள் என்று சொன்னார்கள்.
உணவுத்தட்டிலுள்ள பொரித்த மீனை உயிர்ப்பெற்று எழுமாறு அவர்கள் வேண்டினார்கள். அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்தஅது உயிர்ப்பெற்று எழுந்தது.
இம்மாதிரி உணவுத் தட்டு 40நாட்கள் இறங்கிக் கொண்டிருந்தது என்றும்,காலையில் விண்ணிலிருந்து இறங்கிய இந்தத் தட்டுகள், மாலையானதும் மேலேறி விண்ணுக்குச் சென்று விடும் என்றும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
விண்ணிலிருந்து இறங்கும் தட்டுகளிலுள்ள இந்த உணவை,ஏழைகள்,அனாதைகள்,நோயாளிகளைத் தவிர வேறு யாரும் உண்ணக் கூடாது என்று அல்லாஹ்விடமிருந்து உத்திரவு வந்தது. இது நல்ல ருசியாகவும்,மணமுள்ளதாகவும் இருந்ததால் வசதி படைத்த செல்வந்தர்களும் இதை உண்ண ஆரம்பித்தார்கள். மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் கொள்ளவில்லை. எனவே உணவுத் தட்டு இறங்குவது நின்று விட்டது. இதனால் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பொய்யர் என்றும், சூனியக்காரர் என்றும் நிந்தித்தனர். இதனால் மனம் வேதனையடைந்த நபியவர்கள் அல்லாஹ்விடம் அவர்களைத் தண்டிக்குமாறு வேண்டினர்.
அல்லாஹ் அவர்களை பன்றிகளாக உருமாற்றினான். ஒரு நாளில் மட்டும் 5000பேர் இவ்வாறு உருமாற்றப்பட்டனர். மூன்று நாட்கள் வரை அந்த விலங்கு போல வாழ்ந்து அதன்பிறகு இறந்துவிட்டார்கள். 

மேலும் குர்ஆனில்..

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا  وَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌  وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌  وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌  وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

(அல்குர்ஆன் : 5:110) |

இவ்வசனத்திலே

1) குழந்தையில் பேசியது,

2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் உத்தரவின் பேரில் உயிர் கொடுத்தல்,

3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல்,

4) வெண் குஷ்டரோகியைக் குணப்படுத்துதல்,

5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல்

6) பிறர் உண்பதை, வீட்டில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல். என ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அற்புதங்களை அல்லாஹ் பட்டியிலிடுகிறான்.

இறுதியாக....

ஆங்கில ஆண்டிண் துவக்கத்தில் "புத்தாண்டு வாழ்த்துக்கள்" "Happy Newyear"சொல்வது மற்றவர்களின் கலாச்சாரம்,அதனால் கூடாது மற்றபடி அது எந்த மதத்தோடும் சம்பந்தப்பட்டதல்ல என்பதால் ஹராமும்  அல்ல, இருந்தாலும் குர்ஆன்,ஹதீஸ் களில் நாயகம்(ஸல்)அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டு மற்றவர்களின் வழியைத்தேர்ந்தெடுப்பதை தவிர்த்துக்கொள்ளும் படி வலியுறுத்தப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது.

காரணம் நம் கண்மனி நாயகம் (ஸல்)அவர்கள்,ஸஹாப்பாக்கள்,திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள்,ஹதீஸ்கலைவல்லுனர்கள்,அறிஞப்பெருமக்கள் யாருமே ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதாக எந்த தரவுகளுமில்லை.அதனால் "புத்தாண்டு வாழ்த்துக்கள்"கூடாது.

ஆனால் டிசம்பர் 25 "கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்""Merry Christmas "சொல்வது.நூறு சதவிகிதம் மதச் சடங்காகும்.

அவர்களின் வழிக்கேடான கெள்கைகளான திரித்துவம், இறைவனின் குமாரர்  இயேசு பிறந்த தினம் என்று கிருஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.இது குர்ஆன்,ஹதிஸ் ஒளியில் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரடணானதாகும்.

ஆனால் இன்று சில இஸ்லாமியர்களே தங்களுக்கிடையில் "Merry Christmas""கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்"கூறிக்கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் ஒரு முஸ்லிம், அமெரிக்கப் போன்ற கிருத்துவ நாடுகளில் வாழ்ந்தாலோ,அல்லது கிருத்துவ நண்பர்கள் இருந்தாலோ அல்லது பணிநிமித்தமான நிர்பந்தமிருந்தாலோ அவர் கிருஸ்துமஸ் என்றுக் கூறாமல் நன்றி என்றோ வாழ்த்துக்கள் என்றோ அல்லது வேறு வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்வது தவறில்லை.

ஈசா(அலை)அவர்களின் பிறப்பு டிசம்பர் 25ல் என்று எந்த நம்பகமான வேதங்களிலோ,அவர்களால் பல 100 முறை மாற்றப்பட்ட பைபிளிலோ கூட எங்கும் கூறப்படவில்லை என்பது தான் உண்மை.

அல்லாஹு தஆலா விளங்கிடும் நற்பாக்கியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ததருவானாக!


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...