Monday, 18 September 2023

ஜும்ஆ பயான் 22/09/2023

நபி  ﷺஅவர்களின் பிறப்பு முதல் 40 வரை.

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ 

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(அல்குர்ஆன் : 33:21)

அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு தஆலா தம் பிரித்திற்குறிய தூதர் முஹம்மதுﷺஅவர்களின்  சங்கைப்பொருந்திய نور ஒளியை ஆதம்(அலை)அவர்களைப் படைப்பதற்கு ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் படைத்தான்.

அண்ணல் முஹம்மதுﷺஅவர்களின்  சங்கைப்பொருந்திய نور ஒளி,மனித உருவாக்கத்திற்கு பின்பு ஆதிபிதா ஆதம்(அலை)அவர்களின் வழியாக சங்கைக்குறிய பரிசுத்த ஆண்களின் முதுகந்தண்டின் வழியாகவும்,தூயப் பெண்களின் கருவறையின் வழியாகவும் பயணித்து அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் முதுகந்தண்டிலிருந்து அன்னை ஆமினா அவர்களின் கருவில் மனித வடிவம் பெற்று புனித மக்க மா நகரில் உலக அருளாக பிறக்கின்றது.

قال رسول الله صلى الله عليه وسلم " أنا أنفسكم نسباً وصهراً وحسباً، ليس فيَّ ولا في آبائي من لدن آدم سفاح كلها نكاح " ".(الحاكم عن ابن عباس )

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் நவிலுகிறார்கள;"நான் குலத்தால்,கோத்திரத்தால்,வம்சத்தால் சிறந்தவன்.ஆதம் (அலை)அவர்களிலிருந்து என் (மூதாதையர்கள்)தந்தைமார்களில் எவரும் தவறான வழியில் வந்தவர்கள் அல்லர்.அனைவரும் நிகாஹ்வின் வழியாகவே வந்தார்கள்"

உலகம் அறியாமையிலும், பாவத்திலும் மூழ்கிக் கொண்டிருந்த வேலையில் இன்றிலிருந்து சற்றேறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் உலகை மீட்பராக,கருணையே வடிவான நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அரேபிய தீபகற்பத்தில் மக்க மா நகரில் ஷைபு பனு ஹாஷிம் என்னுமிடத்தில் ரபிவுல் அவ்வல் பிறை 12 ஆம் நாள் (கி.பி571 ஏப்ரல்)ஹழ்ரத் இப்ராஹிம் (அலை)அவர்களின் அருமை மகனார்இஸ்மாயில் (அலை)அவர்களின் வழித்தோன்றலில் பிறக்கின்றார்கள்.

முஹம்மதுﷺஅவர்களின் வம்ச வழித்தொடர்:

نسب  محمد ﷺ

هو محمدﷺ بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر بن مالك بن النضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان من ذرية إسماعيل بن إبراهيم.

1-முஹம்மதுﷺஅவர்கள்

2-அப்துல்லாஹ்

3-அப்துல் முத்தலிப் 

4-ஹாஷிம்

5-அப்து மனாஃப்

6-குஸய்

7-கிலாப்

8-முர்ரத்

9-கஅப்

10-லுஐ

11-காலிப்

12-ஃபிஹ்ர்

13-மாலிக்

14-நளர்

15-கினானஹ்

16-குஸைமஹ்

17-முத்ரகஹ்

18-இல்யாஸ்

19-முளர்

20-நிஸார்

21-மஅத்

22-அத்னான்

அத்னான் இவர்கள் ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல்(அலை)அவர்களின் வம்ச வழித்தோன்றலில் உள்ளவர்.

நபி (ஸல்) அவர்களின் வம்ச வழி  தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.

முதலாவது: 

அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.

இரண்டாவது:

 இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் வமிசத் தொடர் மற்றும் எண்ணிக்கையில் முரண்படுகிறார்கள். அவர்களது முரண்பாடான கருத்துகள் முப்பதையும் தாண்டியுள்ளது. எனினும் அத்னான், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

மூன்றாவது: 

இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் வரையிலானது. இதில் வேதக்காரர்களின் கருத்தையே ஏற்க வேண்டி வருகிறது. அதில் பல கருத்துகள் பொய்யானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சில கருத்துகள் குறித்து மௌனம் காப்பதே சிறந்ததாகும்.

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் தந்தை.

 தந்தை அப்துல்லாஹ் அவர்கள் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் இறை அழைப்பை ஏற்று இறப்பெய்துகிறார்கள்.

ஷாம் (சிரியா)தேசத்திற்கு வியாபாரம் நிமித்தமாக சென்று திரும்ப வரும் வழியில் யஸ்ரிப்(மதினா) எனும் இடத்தில் தங்களின் பாட்டனாரின் இல்லத்தில் தங்குகிறார்கள்.அங்கு நோய்வாய் ஏற்பட்டு மரணத்தை தழுவுகிறார்கள்.அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.இதனால் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பிறக்கும்போதே அனாதையாக பிறக்கிறார்கள்.

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பு.

தாயார் ஆமினா அம்மையார் அவர்கள் கருவுற்றிருந்தபோது, ​​​​அன்னையின் உடலின் கீழ் பகுதியில் இருந்து ஒரு ஒளி வெளிப்பட்டு, ஷாம்(சிரியா)வின் அரண்மனைகளை ஒளிரச் செய்வதாக கனவு கண்டார்கள். 

அன்னை அவர்கள் நபியை பிரசவித்தபோது, ​​அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் தாயார் ஷிஃபா பின்த் அம்ர் மருத்துவச்சியாகச் செயல்பட்டார். 

நபியின் பாட்டனார் அப்துல் முத்தலிப் தமக்கு  பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு, பிறந்த குழந்தையை கஅபாவிற்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். தம் அருமைப்பேரர் உலக மாந்தர்களால் போற்றிப்புகழப்படுவார் என்று நம்பிய அப்துல் முத்தலிப் குழந்தைக்கு அதுவரை உலகில் யாரும் யாருக்குமே சூட்டிடாத முஹம்மது محمد (புகழப்பெற்றவர்) எனும் பெயரை சூட்டி அகமகிழ்ந்தார்.

அரபுகளின்  மரபுகளுக்கு இணங்க, அவர் குழந்தையின் தலையை மொட்டையடித்து, பின்னர்  மக்காவாசிகளை அழைத்து ஓர் ஆட்டை  அறுத்து (அகீகா)விருந்தளித்தார்.

அபுல் ஃபிதா(ரஹ்)அவர்களின் ஓர் அறிவிப்பின் படி;மக்கள், அப்துல் முத்தலிப்பிடம் "ஏன் உங்களின்  பேரருக்கு  முஹம்மது (ஸல்) என்று பெயர் வைத்தீர்கள்,

உங்களின் மூதாதையர்களில் ஒருவரின் பெயரை வைத்திருக்கலாமே?" என்று கேட்டார்கள்,அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் சொன்னார்கள் :  ​​​​"என் பேரர் புகழப்படுவதையும்,உலகம் முழுக்க அவர் புகழ் பரவுவதையும் நான் விரும்புகிறேன்"

அல்லாஹ்வின் தூதர்ﷺ  அவர்களின் வளர்ப்பு.

முஹம்மது நபி ﷺஅவர்கள் முதலில் தாயாராலும் பின்னர் அவர்களின்  தாயின் அடிமை உம்மு அய்மானாலும் வளர்க்கப்பட்டார்கள். உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அபிசீனியா  (எத்தியோப்பியா) நாட்டைச் சேர்ந்த அடிமை ஆவார்கள்.

அவர்களின் இயற்பெயர் " பர்கா", பின்னாளில் அவர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள் , அங்கு அவர் நபிகள் நாயகம் ﷺஅவர்கள் மரணத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு இறந்தார்கள். இதன் மூலம், அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மிக நீண்ட காலம் அறிந்தவர் என்ற பெருமையை பர்கா(ரலி) அவர்கள் பெற்றார்கள்.

முஹம்மது நபி ﷺஅவர்கள் (நபியின்சச்சா) அபூலஹப் அவர்களின் அடிமை  ஸுவைபா அவர்களின் பராமரிப்பில் இருந்தார்கள்.

அந்நேரத்தில் ஸுவைபா அவர்களின் குழந்தை மஸ்ரூஹ்,மற்றும் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்,அபு ஸலமா பின் அப்துல் மக்ஸூமி ஆகியோருக்கும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனவே, அவர்கள் ஒரே மார்பில் பாலூட்டப்பட்டதால் அவர்கள் வளர்ப்பு சகோதரர்கள் ஆனார்கள்.ஸுவைபா அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களுக்கு ஏழு நாட்கள் பாலூட்டினார்கள்,

எட்டாவது நாளில் நபி ﷺஅவர்களை  பாலைவன கிராமத்தில் வளர்க்க(பேச்சுத்திறன், மொழி புலமைக்காக)  பனு சஃத் பழங்குடியினரின் ஹலிமா(ரலி)அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டார்கள்.

பிறக்கும் போது நிகழ்ந்த அதிசய நிகழ்வுகள்.

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் பிறந்த நேரத்தில் சில அற்புத நிகழ்வுகள் நடந்தன. ரோமப்பேரரசின் கிஸ்ரா அரண்மனையின் சில தூண்கள்  இடிந்து விழுந்தன, 

கைசர் என்கிற பாரசீக பேரரசின் கோவிலில் 1000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அவர்களின் புனித பாரம்பரிய நெருப்பு அணைந்தது. 

ஈராக்கின் சாவா ஏரியில் சில தேவாலயங்கள் இடிந்து மூழ்கின.

  يا ,رسولَ اللهِ أخْبِرْنا عن نفسِكَ ، قال : دعوةُ أبي إبراهيمَ وبُشرَى عيسَى ، ورأت أُمِّي حينَ حَمَلَتْ بي كأنَّهُ خرجَ منها نورٌ أضاءَتْ لهُ قصورُ بُصرَى مِن أرضِ الشَّامِ[الحاکم]

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களே!உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று சஹாபாக்கள் கேட்டார்கள்.

அதற்கு கண்மணி நாயகம் ﷺஅவர்கள்;"நான் எனது தந்தை இப்ராஹீம்(அலை)அவர்களின் துஆவின் வெளிப்பாடும்.ஈஸா(அலை)அவர்களின் சுபச்செய்தியும் ஆவேன். எனது தாய் என்னை கருவுற்றிருந்த சமயம்,அவளிலிருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு ஷாம் (சிரியா)தேசத்தில் அரண்மனைகள் இலங்குவதாகக் கண்டாள்"என்று பதில் கூறினார்கள்.  (நூல்;ஹாகிம்)

மீலாதுன் நபி.

கி.பி 571 ஏப்ரல் 19அல்லது 20 நபியின் பிறப்பை கூறும் அறிஞர்களின் கருத்து;ரபிவுல் அவ்வல் பிறை 8 அல்லது 9 என்பதாம் பிறை.

பெரும்பான்மையான உலமாக்கள் மற்றும் முஸ்லிம் உம்மாவின் ஏகோபித்த கருத்து;கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பு ஒரு திங்கட்கிழமை ரபிவுல் அவ்வல் பிறை 12ஆம் நாள் عامَ الفیل யானை ஆண்டில் நிகழ்ந்தது.

  مشہورموٴرخ امام محمد بن اسحاق  قال: وُلِدَ رسولُ الله  صلی اللہ علیہ وسلم یومَ الاثنین لاثنتی عشرة (۱۲) لیلةً خَلَتْ مِنْ شَھْرِ ربیعِ الأول عامَ الفیل․(السیرة النبویة لابن ہشام۱/۲۸۴،تاریخ الطبری۲/۱۵۶، مستدرک حاکم۴۱۸۲، شعب الایمان للبیہقی ۱۳۲۴، الکامل فی التاریخ لابن الاثیر۱/۲۱۶)

திங்கட்கிழமை பரகத் பொருந்திய தினமாகும்,காரணம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்களின் ஒரு அறிவிப்பு;

أن رسول اﷲ صلي الله عليه وآله وسلم سُئل عن صوم يوم الإثنين؟ قال : ذاک يوم ولدت فيه ويوم بعثت أو أنزل عليّ في(مسلم،

بيهقي، السنن الکبري)

திங்கட்கிழமை நோன்பு பற்றி கண்மணி நாயகம்ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது,அப்போது நாயகம் ﷺஅவர்கள் சொன்னார்கள்;அந்த தினத்திலே தான் நான் பிறந்தேன்,நபியாக ஆக்கப்பட்டேன்,அந்த தினத்தில் தான் என் மீது முதன் முதலில் வஹி இறக்கி அருளப்பட்டது.

வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்:கண்மணி நாயகம் ﷺஅவர்கள் குழந்தை பருவத்திலே நினைவாற்றல்,மொழித்திறன் மிக்கவர்களாக திகழ்ந்தார்கள்.

மூன்றுமாத குழந்தையாக இருக்கும் போது நிற்கவும்,ஏழு மாதத்தில் நாடக்கவும்,எட்டாவது மாதத்தில் பேசவும் துவங்கிவிட்டார்கள்.

ஒன்பதாவது மாதத்தில் அழகிய தொனியில்,இலக்கிய நயத்தோடு நாயகம் ﷺஅவர்கள் பேசுவதை காணும் மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.

ஆறு வயதில் தாயின் இழப்பு.

நாயகம் ﷺஅவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது சங்கைக்குறிய தாயார் ஆமினா பின்து வஹப் அவர்கள் நபியின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின்  கப்ரை ஸியாரத் செய்ய யஸ்ரிப்(மதீனா)க்கு நபியை அழைத்து சென்றார்கள்.அங்கே ஒரு மாத காலம் தங்கிய பின்பு ஊருக்கு திரும்பும் வழியில் மதினாவிற்கு அருகில் (22மைல்)அப்வா எனும் இடத்தில் ஆமினா அம்மா மரணத்தை தழுவுகிறார்கள்.அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.அடிமைப்பெண் உம்மு அய்மன் (ரலி)அவர்களோடு நாயகம் ﷺஅவர்கள் மக்கா வந்தடைகிறார்கள்.(روضة الاحباب۱ص۶۷)۔

நாயகம் ﷺஅவர்களின் எட்டாம் வயதில் அருமை பாட்டனார் அப்துல் முத்தலிப் 120வயதில் மரணத்தை தழுவுகிறார்கள்.

அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்கு பின்பு நாயகம் ﷺஅவர்கள் தம் தந்தையின் பெரிய சகோதரர் அபுதாலிப் அவர்களின் அன்பிலும்,அரவணைப்பிலும் வளர்கிறார்கள்.

கூடவே தந்தை அப்துல் முத்தலிபின் கஃபதுல்லாஹ்வின் பாதுகாப்பு மற்றும் நிர்வகிக்கும் முதவல்லி பொறுப்பையும்,குறைஷிகளின் தலைவர் பொறுப்பையும் ஏற்று திறம்படசெயல் படுகிறார்கள்.(الیعقوبی ج۲ص۱۱)۔

அப்துல் முத்தலிப் அவர்களின் மரணசாசனமும், வழிகாட்டுதலும்.

அப்துல் முத்தலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில் நாயகம் ﷺஅவர்களை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,தங்களின் மகன் அபுதாலிபிடம் "அபுதாலிபே!இது உன் உடன்பிறந்த (தம்பி)சகோதரனின் குழந்தையாகும்.இதனை நல்லமுறையில் கண்ணும்கருத்துமாக வளர்ப்பது உன் பொறுப்பாகும்.

இதனை இழக்கவோ,கைவிட்டுவிடவோ கூடாது.இதன் தலை முதல் பாதம் வரை,உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் பாதுப்பதும்,உதவுவதும் உன் பொறுப்பாகும்.என்று கூறினார்கள்(روضة الاحباب)

நபித்துவத்திற்கு முன்.

நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதில்லை. சிலைகளுக்குப் பலியிடப்பட்டதை உண்டதில்லை. சிலைகளுக்கான விழாக்களில் கலந்து கொண்டதில்லை. சிலைகளை முற்றிலுமாக வெறுத்தார்கள். லாத், உஜ்ஜாவைக் கொண்டு சத்தியம் செய்வதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

இறைவனின் பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்திருந்தது. உலக இன்பங்களின் மீது ஆசை தோன்றும்போதும் தவறான அறியாமைக்கால பழக்க வழக்கங்களின்மீது ஆவல் ஏற்படும்போதும் அவற்றிலிருந்து அல்லாஹ்வின் அருளால் தடுக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறியாமைக்கால செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே விரும்பினேன். அந்த இருமுறையும் அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான். பிறகு அல்லாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும் வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை. ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன் என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினார்கள். நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து தூங்கச் செய்துவிட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதேயில்லை.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிப்பதாவது: கஅபாவை புதுப்பிக்கும் பணியின்போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸும் கல்லை எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். அப்போது அப்பாஸ் நபி (ஸல்) அவர்களிடம் உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக் கொண்டால் கற்கள் அழுத்தாமலிருக்கும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தனது ஆடையைக் கழற்றி (புஜத்தில் வைத்தவுடன்) கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து விட்டார்கள். பிறகு அவர்கள் தெளிவடைந்து எனது கீழாடை! எனது கீழாடை! என்று கூற, நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் ஆடையை உடுத்தி விட்டார்கள். அதற்குப்பின் அவர்களது மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி

துறவி பஹீரா.

நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?” என வினவினர். அவர் “நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி,

உழைக்கும் காலம்.

நபி (ஸல்) அவர்கள் வாலிபத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொழில் எதையும் செய்து வரவில்லை. எனினும், ஸஅது கிளையாரின் ஆட்டு மந்தையை மேய்த்ததாக பல அறிவிப்பு களிலிருந்து தெரிய வருகிறது. அவ்வாறே மக்காவாசிகளின் ஆடுகளையும் மேய்த்து கூலியாக தானியங்களைப் பெற்று வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!” எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள். (ஸுனன் அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது)

நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து “எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

கதீஜாவை மணம் புரிதல்.

நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள். கதீஜா தங்களது பொருளில் இதற்குமுன் கண்டிராத பெரும் வளர்ச்சியைக் கண்டார். மேலும் மய்ஸராவும், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார். கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து வந்த கதீஜா தனக்கு ஏற்ற கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என முடிவெடுத்தார். தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின் தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள். ஷாமிலிருந்து திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஹாஷிம் கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள். அப்போது கதீஜா (ரழி) அவர்களுக்கு வயது 40, நபி (ஸல்) அவர்களின் வயதோ 25! அவர் அறிவாலும் செல்வத்தாலும் குடும்பத்தாலும் மிகச்சிறந்த பெண்மணியாக விளங்கினார். நபி (ஸல்) அவர்களுக்கு இவரே முதல் மனைவி. இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.

கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்.

நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து “அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்” என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர்.

இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது. பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்” இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.

ஹிரா குகையில்.

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)

ஜிப்ரீல் வருகை.

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.

அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

தொடரும்.....

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Thursday, 7 September 2023

ஜும்ஆ பயான் 08/09/2023

குர்ஆன் கூறும் அறிவியல்.

اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏

(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.      (அல்குர்ஆன் : 54:1)

அல்லாஹுத்தஆலா பிரபஞ்சத்தையும் கோடான கோடி படைப்பினங்களையும் படைத்த, பேராற்றல்களும், அற்புதங்களும் நிறைந்த இப்பிரபஞ்சத்தை ஆய்வு செய்து படைத்த இறைவனை அறிந்து கொள்ளுமாறு இஸ்லாம் போதிக்கிறது.

குர்ஆனில் மனித சிந்தனையை தூண்டும் ஏராளமான வசனங்கள் உள்ளன.     தப்ஸீர் மஆரிபுஃல் குர்ஆனின் ஆசிரியர் மௌலானா முஃப்தி முஹம்மது ஷஃபீ ஸாஹிப்(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்;குர்ஆனில் சுமார்  700 வசனங்கள் வானம்,பூமி,வானத்தின் ஓட்டம்,பூமியின் ஓட்டம், சயின்ஸ் அறிவியல் பற்றி பேசுகிறது.

இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார். அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன.

 நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்கான காரணிகள் என்ன என்பனவற்றை இங்கு நோக்குவோம்.

முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:

கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகு அறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.

கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை.  என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து  கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

ஒரு விஞ்ஞானியும் கண்டுபிடிப்பு அவர்களின் மத நூலான பைபிளுக்கு சற்று முரணாக இருந்தாலும் கூட கடுமையாக தண்டிக்கப்படுவார்.

வாடிக்கன் திருச்சபையில் மதக் குற்றங்களைச் செய்பவர்களுக்கென்று தனி கோர்டும்,சிறைச்சாலையும் இருந்தது.அந்த சிறைச்சாலையில் குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டவர்கள் அனைவரும் (சயின்டிஸ்ட்கள்)விஞ்ஞானிகளாக இருந்தனர்.

பைபிளில் "ஒரு தாய் வலியுடன் குழந்தையை பெற்றெடுக்கிறாள்"என்ற வசனத்திற்கு முரணாக இருப்பாதாகக் கூறி வெகு நாட்கள் Anesthesia மயக்க மருந்துக்கு தடைவிதித்திருந்தனர்.

மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H.G.Wells தனது நூலில், ‘முதல் முதலில் கிரேக்கரே தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம் முறையைத் தொடர்ந்தனர். அரிஸ்டோடில் விதைத்த தத்துவம், அலெக்ஸாந்திரியாவில் புகழ்பெற்ற நூதனசாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின என்று குறிப்பிடுகின்றார்.

அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.

வானவியல்:

முஸ்லிம்கள் பிரகாசித்த அறிவியல்துறைகளில் வானவியலும் ஒன்றாகும். இந்திய, கிரேக்க வானவியல் நூல்களை மொழிபெயர்த்து கற்றதோடு தமது ஆய்வுமுயற்சிகளையும் முஸ்லிம்கள் முடுக்கிவிட்டனர். மிகக்குறுகிய காலத்திலேயே முஸ்லிம் உலகில் பல வானியல் ஆய்வாளர்கள் உருவாகினர். அவர்கள் வானவியல்துறையில் அதுவரைகாலம் நிலவி வந்த தவறான கருத்துக்களை விமர்சிக்கவும் தயங்கவில்லை. கலீபாக்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் வானவியல் ஆய்வு நிலையங்களும் நிறுவப்பட்டன.

முஹம்மத் அல் பஸாரி, யாகூப் இப்னு தாரிக், அல் குவாறிஸ்மி (780-850), அலி இப்னு ஈஸா, அல் பர்கானி, அல் மஹானி, பனூ மூஸா, அபூ மஃ’ர் போன்ற பல அறிஞர்கள் இத்துறையில் பல நூல்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளனர்.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' என்று ஆங்கிலத்தில் அவர் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.

தொடர்ந்து பேசிய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகன் குமார், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் பதிவு செய்தார்.

நன்றி;இந்து தமிழ் திசை


இஸ்லாமும்,  விண்வெளிப்பயணமும்.

சந்திரனில் முதன் முதலில் தரையிறங்கிய மனிதர் அமெரிக்காவைச் சார்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது உலகறிங்க செய்தி ஆகும்.

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?

உண்மையில் சந்திரனை முதன் முதலில்  தொட்டவரும்,ஏன் முதன் முதலில் விண்வெளிப் பயணம் (மிஃராஜ்)மேற்கொண்டவர்களும் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் தான் என்பதனை திருமறை குர்ஆன் ஆணித்தரமாக நிறுவுகிறது.அதற்கான சான்றுகளும் உள்ளன.

சந்திரன் பிளந்தது உண்மையா?

اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏

(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.    (அல்குர்ஆன் : 54:1) இவ்வசனத்தில் சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரீ 3636, 4864, 4865)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையில் இறைவனின் தூதர்தானா என்பதை உண்மைப்படுத்திட ஓர்  சான்றைக்  காட்டும்படி மக்காவாசிகள் கேட்டனர். அதன் உண்மைச் சான்றாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து சந்திரனை இரண்டு துண்டுகளாக்கி அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டது என்பது இந்நிகழ்வின் வரலாற்றுப் பின்னணியாகும். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்குமுன் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்தான அறிவிப்புகள் கூறுவதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாளர்களாக இருங்கள்” என்று கூறினார்கள். (அதன்) இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது. அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (நூல்கள் – புகாரி 3636, 3869, 3871, 4864, 4865 முஸ்லிம் 5396, திர்மிதீ, அஹ்மத்)

அறிவிப்பாளர் மஸ்ரூக்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் “மக்காவில் (சந்திரன்) பிளந்தது” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

இந்நிகழ்ச்சியைத் தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் துணைக் கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.

ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும் போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.

நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும் போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: குறிப்பு 222)

அது போல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.

சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ, அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.

நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.

இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.

இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய போது வெளிவந்தது.

சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சந்திரனில் பிளவு ஏதும் இல்லை என்று தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறுவதாகச் சிலர் இதை மறுக்கின்றனர். இப்போது நிலவில் பிளவு தென்படவில்லை என்பதால் அப்பல்லோ விண்கலம் மூலம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போது எடுத்த புகைப்படங்களும், அதில் காணப்பட்ட பிளவும், அரபியன் பிளவு என்று அதற்கு பெயரிட்டதும், அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டதும் பொய்யாகாது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்று நாசா மறுக்கவில்லை.

சந்திரன் பிளந்த நிகழ்வை கண்ணால் கண்ட சாட்சி.

இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

#நிலவை #பிரிக்கும் #அதிசயம் :

மக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்குபயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

#இஸ்லாத்தை #ஏற்றல் :

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகளாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயேஇஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்களை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

 சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

குர்ஆன் கூறும் அறிவியல்.

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1445 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?          (அல்குர்ஆன் : 47:24)

 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?(அல்குர்ஆன் : 78:6)

وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ‏

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?(அல்குர்ஆன் : 78:7)

“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 21:31)

நாம் வாழுகின்ற இந்த பூமியின் மேற்பகுதி கடினமாக அமைந்துள்ளது. இதில்தான் உயிரினங்கள் வாழ முடியும். ஆனால் பூமியில் ஆழத்தின் உள்ளே உள்ள கீழடுக்குகளோ, மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், திரவ நிலையிலும் உள்ளது. எனவேதான் பூமியின் கீழ் பகுதியில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆதலால் தான் அல்லாஹ் பூமியை உருண்டை வடிவில் படைத்த போதிலும், உயிரினங்கள் வாழும் பகுதியை குறிப்பிடும் வகையில்தான் இப் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? என்று வினா எழுப்பியுள்ளான்.

பூமியில் வாழும் உயிரினங்கள் ஆடி சாயாமலிருக்கவே மலைகளை உருவாக்கி அவற்றின் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவி நிற்பதாகவும் அல்குர்ஆன் கூறியதை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஃபிராங் பிரஸ்லின் என்பவர் தனது நூலில் அல்குர் ஆனின் கூற்றை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.

“இந்த பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக மலைகளை உண்டாக்கிய வனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு நாயன் இருக்கின்றானா? இல்லை எனினும் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

“கடல்களை பற்றி அல்லாஹ் கூறுகையில் 

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ‏

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.(அல்குர்ஆன் : 55:19)

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيٰنِ‌‏

(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.(அல்குர்ஆன் : 55:20)

“மேலும், ஒன்று மிக்க இனிமையும், சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும், கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பை மீற முடியாத ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் 25:53)

அல்குர்ஆனின் கடலியல் வசனங்களை ஆராய்ச்சி செய்த கடலியல் நிபுணர் டாக்டர் ஜான்கூஸ்தோ எனும் அறிஞர் அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அது எந்தப் பகுதியில் உள்ள கடல் என்ற விபரங்களைச் சேகரித்து எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா வின் கொலரடோ பல்கலை கழகத்தில் மண்ணியல் துறை பேராசிரியராக உள்ள டாக்டர் வில்லியம் ஹை என்ற அறிஞரும் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி இந்த விந்தைமிகு நிகழ்வு மத்திய தரைக் கடலுக்கும் ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பு உட்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த கடல் நீரில் ஒரு பகுதி சுவையாகவும் ஒரு பகுதி உப்பு நீராகவும் இருக்கும். ஆனால் கடல் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆனால் அல்லாஹ் அதனை சாய்வான அமைப்பில் கண் புலன்களுக்கு புலப்படாத வகையில் தடுப்புக் களை ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்கு செல்கிறது என்பதனை தெளிவாக விளக்கி உள்ளார். ஆதாரம்: Principles of Oceonography Davis P.92

சிந்திக்க தூண்டும் வேதம்.

தான் சார்ந்திருக்கும் மதம் கூறும் கோட்பாடுகள் சரியா?. அறிவுப்பூர்வமானவையா? ஏன ஆய்வு செய்தார் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி. அவருடைய அறிவியல் ஆய்வின் தீர்வு உலகம் உருண்ட வடிவத்தில் இருப்பதாகவும் அது சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி வருகிறது எனக் கூறினார். அவர்தான் கலீலியோ. கிறிஸ்தவ மதச்சித்தாந்தமோ உலகம் தட்டையானது எனக்கூறியது. மதச்சித்தாந்தத்துக்கு மாற்றமாக ஆய்வின் தீர்வை அறிவித்த கலீலியோ மதகுருமார்களால் பாதிரிகளால் கண்டிக்கப்பட்டார். இறுதியில் கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்குள்ளாகி உயிர் நீத்தார்.

இந்து மதத்தார் போற்றும் பேணும் சட்ட நூல்களில் ஒன்றாகிய மனுஸ்மிருதி மார்க்க ஞானம் (வேதத்தைப் பற்றிய கல்வி) ஒருசாரார்க்கு மட்டுமே சொந்தம். அவர்களைத் தவிர வேறு சாரார் எவரும் கற்ககூடாது எனத்தடை விதிப்பதுடன் பிறப்பால் தாழ்ந்த பிரிவினர் வேத வசனங்களை காதுகொடுத்துக் கேட்கவும் கூடாது என்று பிரகடனம் செய்கிறது. மீறி கேட்பார்களேயானால் அவர்களின் காதுகளில் ஈயத்தைப் பழுக்க காய்ச்சி ஊற்ற வேண்டுமென்ற தண்டனையை நிறைவேற்ற உத்திரவிடுகிறது. இப்படி கல்வியறிவைப்பெற கற்றபடி செயல்பட சிந்திக்க செயலாற்ற என எல்லா நிலைகளின் வாசல்களையும் அடைத்து ஒருசாரார் கூறும் கருத்துக்களே உன்னதமானவை. மறுக்கமுடியாதவை. பின்பற்றத்தக்கவை என பிதற்றும் பித்தலாட்டங்களைப் பார்க்கிறோம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அருள்மறை சிந்திக்கக்கூறி உலகோரை அழைக்கும் வசனங்கள் ஏராளம். ஏராளம். ஓரிரு சான்றுகளைக் காண்போம்.

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?            (அல்குர்ஆன் : 47:24)

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?(அல்குர்ஆன் : 54:17)

உண்ணும் உணவைச் சிந்திப்பார்களா?

மனிதர்களாகிய நாம் அன்றாடம் ஏராளமான உணவுப் பொருட்களை உண்ணுகின்றோம். அவ்வாறு உண்ணுகின்ற காரணத்தினால் தான் நம்மால் இந்த உலகத்தில் உயிரோடும், திடகாத்திரமான உடலோடும் வாழ முடிகின்றது. நம்முடைய வாழ்க்கைக்கு அவசியத் தேவையான உணவை நாம் எங்கிருந்து பெறுகிறோம்? அது எப்படி உருவாக்கப்படுகின்றது? அதை பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவது யார்? என்பது போன்ற ஏராளமான விஷயங்களை நாம் சிந்திக்க ஆரம்பித்தால் அதிகமான படிப்பினைகளை நம்மால் பெற முடியும்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்க்கின்ற ஒவ்வொருவருடைய சிந்தனை உணர்வுகளையும் மிக இலகுவான முறையில் திருக்குர்ஆன் தூண்டி விடுகின்றது.

قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ‏

மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்? (அல்குர்ஆன் 80:17)

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏

اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏

ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ‏

فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ‏

وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ‏

وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏

وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ‏

وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏

مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!

நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.

பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.(அல்குர்ஆன்:80:24-32)

இந்த வசனங்களை நன்றாகப் படித்துப் பாருங்கள்! இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற, அற்புதமான பேரருட்கொடையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

பூமியின் இயற்கைப் பண்பு என்னவென்றால், பூமிக்குள் எந்தப் பொருட்களை வைத்துப் புதைத்தாலும், அந்தப் பொருட்களை தனக்கே உரிய பாணியில் மிச்சம் வைக்காது இல்லாமல் ஆக்கிவிடும். உதாரணமாக ஒரு மரக்கட்டையை புதைத்து வைத்தாலோ, ஒரு இரும்பை புதைத்து வைத்தாலோ, ஒரு மனிதனைப் புதைத்து வைத்தாலோ, மக்கும் பொருட்கள், மக்காத பொருட்கள் இதுபோன்ற எந்தப் பொருட்களைப் புதைத்து வைத்தாலும் சரிதான்! சிறிது காலகட்டத்திற்குப் பிறகு தன்னிடத்தில் தங்கிய பொருட்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும்.

ஆனால், மற்ற பொருட்களைப் பூமியில் வைத்து புதைப்பதைப் போன்று மனிதன் உண்ணுகின்ற உணவுப் பொருட்களின் வித்துக்கள் புதைக்கப்படுகின்றன. பூமிக்குள் வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் முளைகளாக, இலைகளாக, கிளைகளாக, மரமாக, காய்களாக, கனிகளாக மனிதனுடைய கரங்களுக்கு அள்ளி இறைக்கின்றது. ஏன்? கல், கட்டை, இரும்பு, மனிதன் இதுபோன்ற அனைத்துப் பொருட்களையும் சாப்பிடத் தெரிந்த மண்ணுக்கு, கைவிரல்களால் நசுக்கினால் இல்லாமல் போகக்கூடிய சின்னஞ்சிறிய விதையைச் சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? சிந்தித்தோமா?

குர்ஆன் அறிவியலுக்கு மட்டும் வழிகாட்ட வில்லை ஆன்மீகத்திற்கும் வழிகாட்டுகிறது .  சிந்திக்கிறன்ற மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும்.

முஸ்லிம்_ராஷ்ட்ரம்  சந்திரன்.                                       

சந்திரனில் முதன் முதலில் இறங்கிய நீல்_ஆம்ஸ்ட்ராங் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

அந்த புகைப்படங்களில் ஒன்றில் ஒரு ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.

அந்த கோட்டிற்கு அரேபியன்_பிளவு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் பெயரிட்டார்கள். 

குர்ஆனில் சந்திரன் பிளந்ததை கூறிய இறைவன் அதற்கான சான்றையும்  சந்திரனிலேயே பதிவு செய்திருக்கிறான்  என்பதையே அமெரிக்க விஞ்ஞானிகளின்  அறிவிப்பும் உறுதி படுத்துகிறது.

இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன்_ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன்  வெளிவந்தது.

" ஆகஸ்ட்-19,2023 அன்று இந்திய வானியல் ஆய்வு மையம் (ISRO) சந்திராயன் 3.0 கலம் வெளியிட்ட நிலவின் படங்களைக் கூர்ந்து கவனித்தபோது, IBN YOUNUS என்ற இடம் குறிக்கப்பட்டிருந்தது!

கி.பி 950-1009 இல் வாழ்ந்த எகிப்து வானியல் ஆய்வாளர் அபு அல்-ஹசன் அலி இப்னு அல்-ஹசன் இப்னு யூனுஸ் என்ற விஞ்ஞானி கண்டறிந்த பள்ளத்தாக்கு என்பது பலருக்கும் தெரியாத தகவல். "என்று அருமையான ஒரு செய்தியை துபாலிருந்துத் தருகிறார் அருமை நண்பர் எழிலன் ஜமாலுதீன்                      

ஆக ....சந்திரன்_முஸ்லிம்களின்_ராஷ்ட்ரம் என்பதை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதாரபூர்வமாக நிரூபித்தவர் இப்னு_யூனுஸ் என்ற அறிவியல் அறிஞர்.அவர் பெயரை சந்திரனில் ஒரு பகுதிக்கு ஏற்கனவே அமெரிக்கா வைத்து விட்டது .

ஆனாலும் முஸ்லிம்கள் யாரும்  சந்திரன் முஸ்லிம் ராஷ்ட்ரம் என்று லூசுத்தனமாக சொல்லிக் கொள்வதில்லை.அது உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்கிறார்கள்.

இதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டால் சில உளறுவாயர்களின் பேச்சுகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

(நன்றி;அபு ஹாஷிமா)

அறிவியல் வளர,இஸ்லாம் வளரும்.விஞ்ஞானம் மெய்ப்பட அல்லாஹுத்தஆலாவின் அத்தாட்சி வெளிப்படும்.

எனவே அல்லாஹுத்தஆலா அவனின் ஆற்றலை அறிந்து வழிபடும் நல்லோர்களின் கூட்டத்தில் நம்மை சேர்த்து வைப்பானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Tuesday, 22 August 2023

ஜும்ஆ பயான்25/08/2023

ஸஃபரும் தவறானப் புரிதலும்.

وَالْعَصْرِۙ‏

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏

காலத்தின் மீது சத்தியமாக.

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 103:1,2)

சஃபர் மாதம்.

சஃபர் அல் முஸஃப்பர் மாதம் இஸ்லாமிய ஹிஜ்ரா நாட்காட்டியில் இரண்டாவது மாதமாகும்.இது முஹர்ரம் மாதத்தை அடுத்து  ரபிவுல் அவ்வலுக்கு முன்னால் வரும் மாதமாகும்.இதனை ஓர் வழமையான மாதம் எனலாம்.காரணம் இம்மாதத்தில் ஏனைய மாதங்களைப்போல சுன்னதான அல்லது முஸ்தஹப்பான அமல்கள் குறிப்பிடப்படவில்லை.அதனால் இம்மாதம் துற்சகுனம்,ஆபத்தானது என எண்ணுவது தவறாகும். அறியாமைக்கால அரபுகள் இம்மாதத்தை துற்சகுனமாக கருதி பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பார்கள்.

ஸஃபர் பீடை மாதமா?

நாயகம்ﷺ அவர்கள் ஸபஃர் மாதம் குறித்த மூடநம்பிக்கைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்துவிட்டார்கள்.

قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ‏”‏‏.‏

”தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு..  [புகாரி 5707]

துற்சகுனம்,கெட்டநேரம்,பீடைத்தனம் காலத்திலோ நேரத்திலோ பொருளிலோ அல்ல மாறாக மனிதன் செய்யும் செயல்கள் தான் நல்லது கெட்டதை நிர்ணயிக்கின்றது.

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வாழ்வை நல்ல முறையிலே இறைப் பொருத்தத்தை நாடி கழிக்கும்போது அது அவனுக்கு நல்ல பொழுதுகளாகும்.பாவங்களிலும் தீய பழக்கவழக்கங்களிலும் இறை கோபத்தை உண்டாக்கும் வழிகளில் காலத்தை கழிப்பது கெட்ட பொழுதுகளாக அமையும்.

உதாரணமாக சில மக்கள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகிறார்கள்.இன்னும் சிலர் ஃபஜ்ர் தொழாமல்  தூங்கி விடுகின்றனர்.

அனைவருக்கும் ஒரே மாதிரி விடிந்த காலைப்பொழுது பஜ்ரு தொழுதவருக்கு சிறந்ததாகவும்.தொழாதவருக்கு அபசகுனமாகவும் அமைந்து விடுகின்றது.எனவே கால நேரத்தில் நல்லது கெட்டது கிடையாது.நன்மை தீமையை தீர்மானிப்பது நம் செயல்களே ஆகும்.

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: ” قَالَ اللَّهُ تَعَالَى: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ” مُتَّفَقٌ عَلَيْهِ) رواه البخاري ومسلم

அல்லாஹு தஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆதமின் மகன் என்னை நோவினைபடுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான்.ஆனால் நான்தான் காலமாக (காலத்தை உருவாக்குபவனாக) இருக்கிறேன். நான்தான் இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். (மிஷ்காத்)

மக்களில் சிலர் பேரிடர்களும், ஆபத்துகளும்,கொள்ளை நோய்களும் ஏற்பட்ட கால நேரங்களை கெட்ட நேரம் என்று ஏசுகின்றனர்.ஆனால் அந்தந்த காலங்களில் நிகழும் நிகழ்வுகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் கட்டளை படியும் நிகழ்கின்றன.

   تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். (அல்குர்ஆன் 3:27. )

இரவு பகல் மாறி மாறி வருவது காலத்தின் சுழற்சிக்குக் காரணமாகும். இவ்வாறு  மாறி மாறி வரச் செய்பவன் அல்லாஹு தஆலாவாக இருப்பதால் காலத்தை ஏசுவதை தன்னையே ஏசுவதாக,தன்னையே நோவினை செய்வதாகக் குறிப்பிடுகின்றான்.

உண்மையில் பீடை என்பதும் துர்சகுனம் என்பதும் இறைவன் படைத்த காலத்தில் இல்லை. மாறாக நமது செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளின் காரணத்தால் காலம் நமக்கு பீடையாக, துன்பம் தரக்கூடியதாக காட்சி தருகிறது. ஆனால் மார்க்கம் காட்டும் வழியில் நமது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் என்னாளும் நன்னாளே என்பதை உணரலாம்.

அறியாமைக்கால இப்பழக்கம் இன்றைய நவீன யுக சில இஸ்லாமியர்கள் வரை ஸஃபர் பீடை மாதமாக கருத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய சில இஸ்லாமியர்கள்,ஸஃபர் மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியம் செய்யவதில்லை.திருமணமான பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புவதில்லை,பயணம் செய்வதில்லை.இம்மாததில் தொழில் துவங்குவதையும்,கொடுக்கல் வாங்கலையும் அபசகுனமாக கருதி தள்ளிப்போடுகின்றனர். 

"மக்கள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதுகிறார்கள், அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அவர்கள் பெண்களை அனுப்ப மாட்டார்கள்,பயணத்தைத் தவிர்க்கிறார்கள்." குறிப்பாக சஃபர் மாதத்தின் முதல் பதிமூன்று தினங்கள் மிகவும்  துற்சகுனமாக கருதப்படுகின்றன, அவை பதின்மூன்று நோன்புகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஷாஹ் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி(ரஹ்)அவர்களின்

"இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்", எனும் நூலில்  எழுதப்பட்டுள்ளது,          இது ( சஃபர் மாதம்) பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் பேரழிவுகளின் மாதமாக மக்கள் கருதுகின்றனர், இந்த நம்பிக்கை தவறானது மற்றும் அதில் உண்மை இல்லை.                                      (اسلامی مهینوں کے فضائل، ص: 44)

மூட நம்பிக்கை இல்லாத  மார்க்கம்.

இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது.

காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச் செல்லுதல் போன்ற காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.

உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன் நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக் குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.m

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (நூல்: முஸ்லிம் 4521)

ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரமாக இருக்கிறது.

குறிபிட்ட பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை.

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ "".

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். 

'என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                        (ஸஹீஹ் புகாரி : 846)

இஸ்லாமிய பார்வையில் சகுனம்.

'சகுனம்’

என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.

இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.

இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:

பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.

இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்:

சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.

சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.

ஷவ்வால் மாதம் பீடை அல்ல.

நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும் நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.

அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும் செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும் நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால் மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்?                   (நூல் : முஸ்லிம் 2782)

ஜோதிடர்கள்.

யாராவது குறி சொல்பனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குஆனை) நிராகரித்தவர் ஆவார்”- அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி).  (நூல் :அபூதாவுத்)

ஜோதிடக்காரன் கூறவதை உண்மை என்று நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவனாவான் என்று நபி (ஸல்) அவாகள் எச்சரித்திருக்கிறாகள். 

நபி இப்ராஹிம் (அலை) 

 عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الآلِهَةُ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَاتَلَهُمُ اللَّهُ أَمَا وَاللَّهِ قَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ "". فَدَخَلَ الْبَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.                         (ஸஹீஹ் புகாரி : 1601.)

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ  اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”(அல்குர்ஆன் : 29:62)

மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபி மொழிக்கு மாற்றமாக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் ஜோதிடர்கள் கூறுவது போல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக் கற்களை மோதிரங்களில் அணிந்துக் கொண்டால் அந்தக் கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களை பெற்றுத் தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்). அல்லாஹ் இறக்கியருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது.

நவீனயுக அனாச்சாரங்கள்.

கைசேதம்!அறியாமைக்கால அரபுகளின் தவறான பழக்க வழக்கங்களின் நீட்சியை இன்றும் இஸ்லாமியர்கள் சிலரிடம் காணமுடிகிறது.குறிப்பாக இன்றைய சமூகஊடகங்களில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் பகிரும்,பரப்பும் செய்திகளை கூறலாம்.

சமூகவளைதளங்களின் பயன்கள் அதிகமாக இருப்பதைப்போல அதன் பாதிப்புக்களும் அதிகம்.அதன் பயனர்கள் ஒரு செய்தியை முழுமையாக படிக்காமலும்,அதன் நம்பகத்தன்மையை உறுதிச்செய்யாமலும் அடுத்தவருக்கு பகிர்வதை கடமையை போல் செய்கின்றனர்.

இஸ்லாமிய சகோதர்களும் கூட இஸ்லாமிய செய்திகளை ஷேர் செய்வதை நன்மையாக கருதுகின்றனர்.

உண்மையிலே அது இஸ்லாமிய செய்தியா?குர்ஆன் வசனமா?ஹதீஸா என்கிற எந்த அறிவும் இல்லாமல் பரப்புகின்றனர்.

நபிமொழி அல்லாததை நபிமொழி என்றோ அல்லது குர்ஆன் வசனம் அல்லாத ஒன்றை குர்ஆன் வசனம் என்றோ கூறுவது கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار».  

[صحيح] - [متفق عليه]

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்: ‘என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4)

இந்த நபிமொழி மாறுப்பட்ட வார்த்தைகளில் பல ஹதீஸ் கிரதங்களில் காணக்கிடக்கின்றது.

நாயகம் ﷺஅவர்கள் பல சந்தர்ப்பங்களில் தாம் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டுவதை கடுமையான தண்டனைக்குறிய குற்றம் என எச்சரித்துள்ளார்கள்.எனவே ஒரு மெஸேஜை பகிர்வதற்கு முன்னால் அது உண்மையிலே ஹதீஸா இல்லை குர்ஆன் ஆயத்தா என ஆராய்ந்து அனுப்பவேண்டும்.தமக்கு வருவதையெல்லாம் Forward பகிர்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

இதுப்போன்று தனக்கு வரும் செய்திகளையெல்லாம் பரப்புபவனை நாயகம் ﷺஅவர்கள் பொய்யன் என்றார்கள்:

كَفَى بالمرءِ كذِبًا أن يحدِّثَ بِكُلِّ ما سمِعَ

الراوي :أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (5)، وأبو داود (4992)، وابن حبان (30) من حديث أبي هريرة

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (அறிவிப்பவர்;அபூஹுரைரா (ரலி) அவர்கள்.) (நூல்: முஸ்லிம் 6)

حَدِيْثُ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (( إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ ))

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'

(அறிவிப்பவர் : முகீரா(ரலி) நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5)

சமூகவலை தளங்களில் உலாவரும் பித்அத்கள்.

சஃபர் மாதம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் உலா வருகின்றன.

அதன் உண்மை தன்மையை ஆராயாமல் தனக்கு வரும் குறுஞ்செய்தியை அப்படியே பல group குழுக்களுக்கு forward பகிர்ந்து விடுகின்றனர்.

அது உண்மையிலே நன்மையான காரியமாக இருந்தால் பரவாயில்லை.ஆனால் தவறான தகவலாக இருந்தால் அதன் தீமை அதனை பகிர்ந்தவரையே சேரும்.

உதாரணமாக சமூக வலைதளங்களில் இஸ்லாம் என்ற பெயரில் வரும் சில செய்திகள்

#அல்லாஹுத்தஆலாவின் ஐந்து திருநாமத்தை  11 பேருக்கு forwardஅனுப்பினால் உங்களின் பெரும் பிரச்சனை முடிவுக்கு வரும்.

இதனை ஷேர் செய்யவில்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

#அதேபோல சில மெசேஜ்கள் இப்படியும் வரும் இந்த தகவலை இத்தனை குரூப்புகளுக்கு ஷேர் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்.

#சில மெசேஜ்களில் அல்லாஹ் ரசூலின் மீது உண்மையான பிரியம் இல்லாதவர்கள் இந்த மெசேஜை ஷேர் செய்ய மாட்டார்கள்.

#சில மெசேஜ்கள் பிற மதத்தவரின் வெறுப்பை தூண்டும் விதமாகவும் வருகின்றன.

ஒரு பக்கம் கஃபத்துல்லாஹ்வின் படத்தையும்,இன்னொரு பக்கத்தில் வேறு மதத்தவரின் கடவுளின் படத்தை போட்டுவிட்டு A,B இந்த இரண்டில் எந்த கடவுளை உங்களுக்குப் பிடிக்கும் like, comment, share செய்யுங்கள்.

இதுபோன்று இஸ்லாத்திற்கு அறவே சம்பந்தமில்லாத பல பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் சிலர் நன்மையான காரியமாக கருதி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.இது முற்றிலும் தவறான இஸ்லாத்திற்கு எதிரான தண்டனைக்குரிய குற்றமாகும். 

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் கற்பது,கற்பிப்பது,நல்ல பல செய்திகளை அறிந்து கொள்வது போன்ற பல காரியங்கள் எளிதாக அமைகிறது.இதனை சரியாக உபயோகித்தால்  அல்லாஹ்வின் அருட்கொடையாக அமையும். 

அப்படி இல்லாமல் வரும் செய்திகளை அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பலருக்கு அதனை அனுப்பும்போது அதன் தீமை அனுப்பியவரையே வந்து சேரும்.

மனிதன் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும்.எழுதக்கூடிய ஒவ்வொரு எழுத்தும்.பகிரக் கூடிய ஒவ்வொன்றும் அவன் செயலேட்டில் பதிவு செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன என்பதனை மனிதன் நினைவில் கொள்ள வேண்டும்.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.(அல்குர்ஆன் : 50:18)

வரலாற்று பிழைகள்.

இஸ்லாமிய வரலாற்றில் தவறான செய்தியை பரப்பியதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பல பின்னடைவுகளும் பாதிப்புகளும் இன்று வரை வரலாற்றில் சாட்சிகளாக உள்ளன.

உஹத் யுத்ததில் நாயகம் ﷺஅவர்கள் கொல்லப்பட்டார்கள் என பரவிய தவறான வதந்தியால் இஸ்லாமிய படை சிதறுண்டு போய் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

பனு முஸ்தலிக் யுத்தத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அபாண்டமான பழியை சுமத்தினர்.அது காட்டு தீயாய் பரவி நாயகம்ﷺ அவர்களை காயப்படுத்தியது. சில இஸ்லமியர்களும் உண்மைதன்மை ஆராயமல் அதனை செய்தனர்.

இறுதியில் அல்லாஹுத்தஆலா திருமறை குர்ஆனில் அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் பத்தினித்தனம் பரிசுத்ததன்மையை கூறி,இட்டுட்டியவர்கள்,வதந்தி பரப்பியவர்களை கடினமான வார்த்தைகளால் கண்டித்தான்.

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌  لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌  بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌  لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌  وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.(அல்குர்ஆன் : 24:11)

அதேபோன்று இன்றும் சில இணையத்தளங்கள் இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பொதுவாக்கெடுப்புகளை நடத்துகின்றன. இந்த வாக்கெடுப்புகளில், நமது சகோதரர்கள் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற அனைத்து இணையதளங்களும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன, அவைகளை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு கையாள வேண்டும். இதனையே அல்லாஹுத்தஆலா இப்படி கூறியுள்ளான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.(அல்குர்ஆன் : 49:6)

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

(அல்குர்ஆன் : 24:19)

சமூக ஊடகங்களை நம்முடைய கல்வி,அரசியல்,வணிக நோக்கங்களுக்காக அதிகம் பயன்படுத்துகிறோம்.

அதைவிடவும் அதிகமாக தீனுல் இஸ்லாத்தை பரப்புவதற்கும்,நபித்துவ கல்வியை மாற்று மத சகோதரர்களுக்கு சரியான முறையில் எடுத்துரைப்பதற்கு சமூக ஊடகம் எளிதான மற்றும் விரைவில் மக்களை சென்றடையும் தளமாக உள்ளது.

இன்றைய காட்சி,அச்சு ஊடகங்கள்,சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் ஆதிக்கத்தில் உள்ளது.அவற்றை இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பரப்புவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே இஸ்லாமியர்கள்  தம்மால் முடிந்த அளவு சமூக வலைதளங்களை இஸ்லாமிய போதனைகளை பரப்புவதற்கு நலமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தமக்கு இஸ்லாத்தின் பெயரில் வரும் செய்திகளை அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அடுத்தவருக்கு பகிர்வதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.இதனையே இஸ்லாம் தடுக்கின்றது.ஸஃபர் மாதத்தை போல அனேக அனாச்சாரங்கள் இப்படித்தான் துவங்கியது.

எனவே அனாச்சாரங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை இஸ்லாமியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா அதற்கு நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...