பெருமானார்ﷺ ஏற்படுத்திய மாற்றங்கள்
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; (அல்குர்ஆன் : 3:164)
அல்லாஹுத்தஆலா கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பை, முழு மனித சமுதாயத்திற்கு பெரும் அருளாக ஆக்கினான்.நபியின் வருகைக்கு முன்பு அறியாமை எனும் இருள் உலகெங்கிலும் வியாபித்திருந்தது.அரபகம் என்றில்லாமல் உலக முழுக்கவே அறியாமை எனும் தீ பற்றி எறிந்துக்கொண்டிருந்தது.
தீயக்கொள்ளை,கோட்பாடுகள்,இணைவைப்பு,இறைநிராகரிப்பு,அசிங்கமான அருவருப்பான பழக்கவழக்கள்,அநீதம் அட்டூழியம்,சத்தியத்தை மீறுவது,நீதியை கடப்பது,வட்டி,மது,விரோதம்,கோபம்,பிடிவாதம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் வாழ்வின் விழும்பில் தத்தளித்துக்கொண்டிருந்தது அரபுலகம்.
இரு கோத்திரத்தவர்களிடம் சிறு கருத்துமுரண்பாடு ஏற்பட்டால் கூட, பல தலைமுறைக்கும் அவ்விரு கோத்திரம் விரோதம்பாராட்டுவார்கள்.சிறு பிரச்சனை பல தலைமுறைகளை கடந்தும் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்வதற்கும்,விரோதம் பாராட்டுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
இரு குடும்பங்களுக்கிடையில் தொடங்கிய சிறு தகராறு வளர்ந்து, பல கோத்திரங்கள் பல யுகங்கள் போர்புரிய காரணமாக ஆகிவிடுவதும் உண்டு.
اوسஅவ்ஸ்"" وخزرجகஸ்ரஜ்"
இந்த இரு கோத்திரத்தவர்களின் சிறு தகராறு சண்டையாகி ,போராகி 120ஆண்டுகள் போர்செய்துக்கொண்டிருந்தனர் என்கிறது வரலாறு.மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லாத அறவே மனிதம் மரித்திருந்த காலம்.இறைநிராகரிப்பு மேலோங்கியிருந்த காலம்,கர்வம்,பகட்டு,பெருமையை அந்தஸ்தாக மக்கள் கருதிய இக்கட்டான காலகட்டத்தில் அல்லாஹ் அறியாமை இருளை அகற்றி அறிவொழி ஏற்றிட கண்மணி நாயகம் ﷺஅவர்களை அகிலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பினான்.
அல்லாஹுத்தஆலா, கண்மணி நாயகம் ﷺஅவர்களை குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்கோ,கோத்திரத்திற்கோ நபியாக அனுப்புவில்லை.மாறாக அகிலாத்தார் அனைவருக்கமானவராக அனுப்பப்பட்டார்கள்.
تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(அல்குர்ஆன் : 25:1)கண்மணி நாயகம் ﷺஅவர்களின் வருகை மனித சமுதாயத்தில் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
அதுவரை அறியாமையில் திளைத்துக்கொண்டிருந்த அரேபியர்கள் அறியாமை விட்டும் நீங்கி மனித இனத்திற்கே வழிகாட்டும் புனிதர்களாக மாறிப்போனார்கள்.
நாயகம் ﷺஅவர்கள் பல தெய்வக்கொள்கையுடைய அம்மக்களை ஓரிறை கொள்கையாளராக மாற்றினார்கள்.காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை மனிதநேயமிக்கவர்களாக மற்றினார்கள்.வரியவர்,பலகீனமானவர்,அடிமைகளிடம் கனிவாக நடக்குமாறும்,பெண்களிடம் கண்ணியமாக நடக்குமாறும்,விரோதம்பாராட்டியவர்களை சகோதரவாஞ்சையோடு அன்போடு பழகுபவர்களாக மாற்றினார்கள்.
இதனையே அல்லாஹ் சூரா ஆலுஇம்ரானில்...
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(அல்குர்ஆன் : 3:103)
நாயகம் ﷺஅவர்களின் நுபுவத்திற்கு முந்தய 40 ஆண்டுகள் தூயவாழ்வு,உயர்பண்புகளால் மக்களின் நேசத்தையும் நம்பிக்கையையும் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.அவர்களின் நேர்மையை மெச்சும் விதமாக மக்காவாசிகள் صادق "வாய்மையாளர்"وامین"நேர்மையாளர்"என்றே அழைத்தனர்கள்.
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; (அல்குர்ஆன் : 3:164)
கருணையே வடிவான காரூன்ய நபி.
நாயகம் ﷺஅவர்கள் தம் நாற்பதாவது வயதில் நபித்துவத்தை மக்களிடம் எடுத்துரைததில் தொடங்கி அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் வரையிலும்,ஹிஜ்ரத்திற்கு பின் நபியோடு பல போர்கள் செய்து ஹுதைபிய்யா உடன் படிக்கை வரையிலும் நபிக்கும்,நபி தோழர்களுக்கும்,மக்கா காஃபிர்கள் சொல்லொண்ணா துன்பங்களை தந்தார்கள்.நபியின் உயிருக்கு ஊறு விளைக்க சந்தர்பங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர்.
மக்கா வெற்றியின் போது தங்களை கருவறுக்க காத்திருந்த மக்கா காஃபிர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய காரூண்ய நபி கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ;
قَالَ لَا تَثْرِيبَ عَلَيْکُمُ الْيَوْمَ .. اذْهَبُوا فَاَنْتُمْ الطُّلَقَاء ُ ۔
"இன்றைய நாள் உங்களின் மீது பழிவாங்குதல் இல்லை.. என்ற யூசுஃப் சூராவின் வசனத்தை ஓதிகாட்டி,செல்லுங்கள்!நீங்கள் சுதந்திரமானவர்கள்" என்று சொன்னார்கள்.
(سبل الہدی والرشاد،ج5ص242 )
اَلْيَوْمْ يَوْمُ الْمَرْحَمَةْ۔
இன்றைய நாள் அன்பு,இரக்கம் காட்டும் நாளாகும். என பொதுஅறிவிப்பு செய்தார்கள்.
(جامع الأحادیث، مسند عبد اللہ بن عباس رضی اللہ عنہما. حدیث نمبر38481)
ஒரு நாட்டை வெற்றிக்கொள்ளப்பட்டு கைபற்றும்போது வெற்றிகலிப்பில் அந்நாட்டினரை கொள்ளுவது,வளங்களை சூரையாடுவது,ராணுவ அத்துமீறல்கள் செய்து அட்டூழியம் புரிவது இவைதான் அன்று முதல் இன்று வரை பின்பற்றபடும் எழுதப்படாத விதியாகும்.
தாத்தாரியர்கள் தங்களின் முழு ராணுவபலத்தோடு பக்தாத் நகரை கைபற்றிய போது அங்குள்ள வளங்களை சூரையாடி,அடையாள சின்னங்களை அழித்து,அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து பக்தாத் நகரில் இரத்த ஆறை ஓட்டினர்கள்.
சிலுவை போராட்டக்காரர் (ஷாம்)சிரியவை கைப்பற்றிய போது ஆயிரக்கான இஸ்லாமியர்களை கொன்றுகுவித்தார்கள்.பலஸ்தீனில் பைத்துல் முகத்தஸ் அருகில் குதிரைகளைகட்டும் இடத்தின் அவற்றின் குளம்புகள் வரை இரத்த வெள்ளமாக காட்சியளித்தாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.
தொடர் சிலுவைப்போர்களில் மனித உரிமை அத்துமீறல்கள் பல நடந்தேரியுள்ளன.உலகில் பிற நாட்டை வெற்றிக்கொள்பவர்களுக்கிடையில் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் மக்கா காஃபிர்களிடம் நடந்துக்கொண்டவிதம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தருணமாகும்.
அறியாமைக்கால அரபுலகம் உலகமோகம்,மனோஇச்சை போன்றவைகளால் மனம்போனப்போக்கில் வாழ்ந்துக்கொண்டு அறியாமைஇருளில் தத்தளித்துக்கொண்டிருந்தனர் அவர்களின் வாழ்வை ஒளியாக்க அல்லாஹ்,கண்மணி நாயகம் ﷺஅவர்களை அனுப்பினான்.
الۤرٰ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِـتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).(அல்குர்ஆன் : 14:1)
இஸ்லாமிய சட்டங்களை இலகுவாக்கிய நபிகளார்
முந்தைய உம்மத்களில் உள்ள கடினமான சட்டங்களை நாயகம் ﷺஅவர்கள் இந்த உம்மத்திற்கு இலகுவாக்கி தந்தார்கள்.
(எ.க)யூதர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமை ஒரு நாள் புனிதநாளாகும்.அன்றைய தினத்தில் உலகஅலுவல்களில் ஈடுப்படுவது,வியாபாரம்,உத்யோகம் தடைச்செய்யப்பட்டிருந்தது.அதுப்போல் ஆடைகளில் அசுத்தம் பட்டுவிட்டால் அந்த பகுதியை துண்டித்து எடுக்கவேண்டும்.
ஆனால் உம்மதே முஹம்மதிய்யாவில் வெள்ளிக்கிழமை வியாபரம் தடைச்செய்யப்படவில்லை.ஆடையில் நஜிஸ் பட்ட இடத்தை கழுவினால் சுத்தமாகிவிடும்.முந்தைய உம்மத்களில் கனீமத் பொருள் ஹராமாக இருந்தது.அது இந்த உம்மத்திற்கு ஹலாலாகும்.முந்தைய உம்மத்தினர் தொழுவதற்கென்று குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அனுமதி. நம் உம்மத்தினர் பூமியில் நினைத்த இடங்களில் தொழலாம்.முந்தைய உம்மத்தினர் சுத்தம் செய்ய தண்ணீரை தவிர வேறு வழியில்லை.நம் உம்மத்தினர் தண்ணீர்கிடைக்காத போது மண்ணைக்கொண்டு சுத்தம் செய்யலாம்.
இப்படி பல சிரமமான சட்டங்களை அல்லாஹ் "ரஹ்மதுல்லில் ஆலமீன்"நாயகம் ﷺஅவர்களின் உம்மத்திற்கு இலகுவாக்கி தந்திருக்கிறான்.
وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ
அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; (அல்குர்ஆன் : 7:157)
அடிமை முறையை ஒழித்த அண்ணல் நபிﷺஅவர்கள்.
அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ﷺஅவர்களின் அவர்களின் வருகையால் சிரமங்களை இலேசாகவும்,கஷ்டங்களை இலகுவாகவும் மாற்றினான்.கருணை நபி ﷺஅவர்கள் அடிமை முறையை அறவே ஒழித்தார்கள்.போரில் பிடிக்கப்பட்ட கைதிகளையும் விடுதலை செய்துவிடுவார்கள்.
நபி ﷺஅவர்களின் வருகையால் அடிமையாக இருந்த ஸுவைபா(ரலி)அவர்களுக்கு விடுதலைகிடைத்தது.
(صحیح البخاری، ج2ص،764، عمدۃ القاری، کتاب النکاح،باب من مال لارضاع بعد حولین ، ج4ص،45)
அனீதம் இழைக்கப்படலாகாது
எந்த மனிதனுக்கும் அனீதம் இழைக்கக்கூடாது.அனீதம் இழைக்கப்பட்டவனுக்காக மறுமையில் நான் வாதாடுவேன் என்றார்கள் நபி ﷺஅவர்கள்.
اَلاَ مَنْ ظَلَمَ مُعَاهَدًا أَوِ انْتَقَصَه اوْ کَلَّفَه فَوْقَ طَاقَتِه اَوْ اَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَاَنَا حَجِيجُه يَوْمَ الْقِيَامَةِ -
யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும் திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)
(سنن ابی داود،کتاب الخراج ،باب فی تعشیر أہل الذمۃ إذا اختلفوا بالتجارات. حدیث نمبر3054)
நீதத்தை நிலைநாட்டிய நபிﷺஅவர்கள்
அறியாமைக்கால மக்கள் அடுத்தவரின் உரிமையை மதிக்காமல் வாழ்ந்தனர்.நபிﷺ அவர்கள் நீதிதவறாமையையும்,அடுத்தவரின் உரிமையை பேணுமாறும் வலியுறுத்தினர்கள்.நீதியும்,நேர்மையும் நபி ﷺஅவர்களின் பிறவி குணமாக இருந்தது.
நாயகம் ﷺஅவர்களின் பால்குடித்தாயார் ஹலீமா ஸஃதிய்யா (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்;குழந்தைப்பருவத்தில் நபி ﷺஅவர்கள் என் வலது மார்பகத்தில் பால் அருந்துபவர்களாக இருந்தார்கள்,என்றாவது ஒரு நாள் நான் இடது மார்பகத்தில் பாலூட்டினால் குடிக்கமாட்டார்கள்.அது தன் பால்குடி சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் பங்கு என்பதால் குடிப்பதில்லை என நான் விளங்கிக்கொள்வேன்
(المواہب اللدنیۃ مع حاشیۃ الزرقانی ، ج1،ص269)
واعطيته ثديی الايمن ،فاقبل عليه بما شاء من لبن ،فحولته الی الايسر فابي،وکانت تلک حاله بعد۔ قال اهل العلم :الهمه الله تعالي ان له شريکا فالهمه العدل۔قالت فروي وروي اخوه۔
உண்மையின் மறுஉருவம்.
நாயகம் நபிﷺ அவர்கள் ஒப்பற்ற வாழ்விற்கு சொந்தக்காரர்.தம் வாழ்நாளில் பொய்பேசியதாக,நீதிதவறியாத ஒரு பொழுதையும் காணமுடியாது.
நாயகம் நபிﷺ அவர்களை "வாய்மையாளர்""நேர்மையாளர்"என்று தான் மக்கள் அழைப்பார்கள்.
நாயகம் ﷺஅவர்களின் நேர்மைக்கு ஓர் எடுத்துகாட்டாக அபுஜஹல் நபியை பார்த்து சொன்னதை அலி(ரலீ)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
قَدْ نَعْلَمُ يَا مُحَمَّدُ انَّکَ تَصِلُ الرَّحِمَ ، وَتَصْدُقُ الْحَدِيْثَ ۔
"முஹம்மதே!நீர் உறவை சேர்ந்து வாழ்கிறீர்கள்,பேச்சில் வாய்மையாளர் என்பதை நாம் அறிவோம்"
(المستدرک علی الصحیحین للحاکم ، کتاب التفسیر، تفسیر سورۃ الأنعام، حدیث نمبر3187)
நாயகம்ﷺ அவர்களின் நேர்மையை மக்கா காஃபிர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
நாயகம் ﷺஅவர்கள் தம் முதல் அழைப்பு பணிக்காக ஸஃபா குன்றில் மக்காவாசிகளை ஒன்றுதிரட்டி கேட்டார்கள்.
اَرَاَيْتَکُمْ لَوْ اَخْبَرْتُکُمْ اَنَّ خَيْلاً بِالْوَادِي تُرِيدُ اَنْ تُغِيرَ عَلَيْکُم اَکُنْتُمْ مُصَدِّقِيَّ.قَالُوا نَعَمْ ، مَا جَرَّبْنَا عَلَيْکَ إِلاَّ صِدْقًا .
"இந்த மலைக்கு பின்னால் ஓர் படை உங்களின் மீது தாக்குதல் தொடுக்க காத்திருக்கிறார்கள் என்று நான் சொன்னால் ஏற்பீர்களா?"
அதற்கு அம்மக்கள்!"ஆம்,உங்களை எப்போம்உண்மையாளராகவே நாங்கள் காணுகிறோம்" என்றார்கள்
(صحیح البخاری ،کتاب التفسیر،باب وانذر عشیرتک الاقربین ، حدیث نمبر4770)
புகழுக்குறிய குணம் படைத்தவர்.
நாயகம்ﷺ அவர்களின் மீது முதல் முறை வஹி இறங்கிய போது,நபியவர்கள் நடுக்கத்திற்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள்.
அப்போது அன்னை கதீஜா(ரலி)அவர்கள் அன்னவர்களை உயர்பண்புகளைக்கூறி ஆறுதல்படுத்தினார்கள்.
کَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيکَ اللَّهُ اَبَدًا ، إِنَّکَ لَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْکَلَّ ، وَتَکْسِبُ الْمَعْدُومَ ، وَتَقْرِي الضَّيْفَ ، وَتُعِينُ عَلَي نَوَائِبِ الْحَقِّ .
அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள். (صحیح البخاری ،باب بدء الوحی ، حدیث نمبر3)
உதவும் மாண்பாளர்களை உருவாக்கிய மாநபி.
அறியாமைக்கால மக்களின் பண்புகள் அதலபாதளத்தில் இருந்தது.சகமனிதனின் சிரமத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்களாக இருந்தனர்.நாயகம் ﷺஅவர்கள் சகமனிதனின் சிரமத்தில் பங்கெப்பதன் அவசியத்தை உணர்த்தினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஓர் நபிமொழி;
عَنْ اَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ۔ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّم : مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ کُرْبَةً مِنْ کُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ کُرْبَةً مِنْ کُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَی مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِی الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِی الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا کَانَ الْعَبْدُ فِی عَوْنِ اَخِيهِ۔
எவர் முஃனினான ஒருவரின் துன்பத்தை நீக்குவாரோ,அல்லாஹ் கியாம நாளில் அவரின் துன்பத்தை நீக்குவான்.எவர் சிரமத்தில் சிக்கியவரின் சிரமத்தை இலேசாக்குவாரோ,அல்லாஹ் அவரின் இம்மை,மறுமையிலே (சிரமத்தை)இலேசாக்குவான்.எவர் ஓர் முஸ்லிமான ஒருவரின் குறையை மறைத்தாரோ,அல்லாஹ் இம்மை,மறுமையில் அவரின் குறையை மறைப்பான்.
அடியான் ஒருவன், தனது சகோதரருக்கு உதவுவதிலே இருக்கும் காலமெல்லாம் அவர் அல்லாஹ்வின் உதவியிலே இருப்பார்.
(صحیح مسلم ، کتاب الذکر والدعاء والتوبۃ، باب فضل الاجتماع علی تلاوۃ القرآن وعلی الذکر ،حدیث نمبر7028)
நாயகம்ﷺ அவர்கள், கணவனை இழந்த கைம்பெண்கள்(விதவைகள்) ஏழைஎளியோருக்கு உதவிஒத்தாசைப்புரியுமாறு ஆர்வமூட்டினார்கள்.
عَنْ اَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّم قَالَ: السَّاعِي عَلَي الاَرْمَلَةِ وَالْمِسْکِينِ کَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ ۔ وَاَحْسِبُهُ قَالَ ۔وَکَالْقَائِمِ لاَ يَفْتُرُ وَکَالصَّائِمِ لاَ يُفْطِر
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவர் `இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.`
அப்துல்லாஹ் அல்கஅனபீ(ரஹ்) கூறினார். அல்லது `சோர்ந்துவிடாமல் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் முழுவதும் விடாது நோன்பு நோற்பவர் போன்றவராவார்` என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) மாலிக்(ரஹ்) அறிவித்தார் என்றே கருதுகிறேன்.31
அன்பும்,இரக்கமும் உள்ளவர்களாக...
அறியாமைக்கால அரபுகள்,அரக்கர்களாக அன்பு,இரக்கமற்றவர்களாக வாழ்ந்தார்கள். அவர்களை நாயகம்ﷺ அவர்கள் அன்புள்ளம் படைத்தவர்களாக,பிறர்நலம் பேணுபவர்களாக மாற்றினார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّمْ: الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمٰنُ ارْحَمُوا مَنْ فِی الاَرْضِ يَرْحَمُکُمْ مَنْ فِي السَّمَاءِ
மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)
( جامع الترمذی ، ابواب البر والصلۃ ،باب ما جاء فی رحمۃ المسلمین، حدیث نمبر2049 ۔سنن ابو داود، کتاب الادب ، باب فی الرحمۃ ، حدیث نمبر 4943)
நாயகம்ﷺ அவர்கள், 23வருட நபித்துவ வாழ்வில் மனிதநேயம்,சமத்துவம்,சகோதரத்தும்,மனிதஉரிமை,தொழிலாளர்உரிமை,குடிமக்கள்உரிமை,பெண்ணுரிமை என தொடர்ந்து ஏற்ப்படுத்திய சமூகமாற்றங்கள்,புரட்சிகள் ஏராளம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் ஆன்மீக வாதியாக இருந்த அதேநேரம், தன்னைச் சாதாரண ஒரு மனிதனாகவே அறிமுகப் படுத்தினார்கள்.
‘நானும் உங்களைப் போன்ற மனிதன்தான்’ என்று கூறியது மட்டுமன்றி தனது காலில் பிறர் விழவோ, தனக்காக குருவணக்கம் செய்யவோ அவர் இடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருகைக்காகப் பிறர் எழுந்திருப்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள்.
குலப் பெருமை பாரட்டி பேசுவதை ஒழித்தார்கள்.
அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது.
கர்வம் கொண்டவரால் உயிர் போகும் நிலையிலும் கூட தன் சுய கவுரவத்தை விட்டு கொடுக்க இயலாது. இதற்கு ஒரு சரித்திர சம்பவம் உதாரணமாய் இருக்கிறது.
பத்ர் யுத்த களத்தில் ஆக்ரோஷமான போர் நடக்கிறது. தளபதி அபு ஜஹில் கால்கள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக போர்க்களத்திலே வீழ்த்தப்பட்டு கிடக்கின்றான்.அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்கள் தங்கள் வாளால் அவனது தலையை கொய்ய வருகிறார்கள். இன்னும் சில நிமிடங்கள் அவன் கதை முடிந்து போகும்.
அந்த கடைசி நேர சந்தர்ப்பத்திலும் கூட, அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்களை அபு ஜஹில் தடுத்து நிறுத்தி, ‘என் தலையை கொய்ய நீதானா கிடைத்தாய்? குரைசியர் குலத்தின் தலைவன் என்ற கிரீடத்தை சுமந்த என் தலை உன் துருப்பிடித்த உடைந்த கத்தியாலா வெட்டப்படவேண்டும்? திரும்பி செல்! நல்ல ஒரு வீரனை அனுப்பு. நல்ல உடைவாளால் என் தலை சீவப்படுவதை நான் விரும்புகிறேன். அதன் மூலம் என் குலத்தின் பெருமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் என் பேரவா’ என்றான்.
உயிர் மூச்சு நிற்கும் அந்த இறுதி நிலையிலும் தன் குலப் பெருமையும் கர்வத்தையும் விட்டு கொடுக்க மறுத்தவன் அபு ஜஹில்.
குலப் பெருமை. தலைக்கனம், ஆணவம் என்பது ஒருவனை எந்த அளவிற்கு வழி கேட்டில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு அபுஜஹில் வரலாறு ஒரு உதாரணம்.
இப்படியிருந்த மனிதர்களை ஒரு வசனத்தின் மூலமாக திருத்தினார்கள்.
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)
மது வெறியர்கள் மதுவை வெறுப்பவர்களாக மாறினர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே இருப்பவர்கள். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் கூட மதுவை ஒழிக்க முடியவில்லை ஆனால். ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த மது பிரியர்களை மதுவை வெறுப்பவர்களாக மாற்றினார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
அனஸ்(ரலி) அறிவித்தார் :(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.
அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது:
அனஸ்(ரலி) கூறினார்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), 'வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)' எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), 'இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்' என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,'நீ போய், இதைக் கொட்டிவிடு!' என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரிச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், '(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!' என்று கூறினார். அப்போதுதான் 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.' எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.(ஸஹீஹ் புகாரி (4620)
அடிமை எஜமானன் இருவரும் சமமே.
'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்' என அபூதர் கூறினார்' என மஃரூர் கூறினார். (ஸஹீஹ் புகாரி (30)
பிறரிடம் கேட்பதை கைவிட்டவர்.
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது' எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (ஸஹீஹ் புகாரி (1472)
அரக்கனாக இருந்த அரசனை மனிதராக மாற்றினார்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதிக்குக் குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரும் "பனூ ஹனீஃபா" குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள்; (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப்போட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அவர், "நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றைய தினம் அவரை (அந்நிலையிலேயே) விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். மறுநாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமா, (உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "உங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் (என்னைக்) கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள்; நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். மூன்றாவது நாள் வந்தபோது, "ஸுமாமா! என்ன கருதுகிறீர்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் (ஏற்கெனவே) உங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன். நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டும் ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். அதில் நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே, ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு வந்தார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்" என்று கூறி (முஸ்லிம் ஆ)னார்.
பிறகு "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்றெல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்கள் ஊரே மற்றெல்லா ஊர்களையும் விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்து(வந்து)விட்டனர். நான் "உம்ரா"ச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, "உம்ரா"ச் செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது அவரிடம் ஒருவர், "நீர் மதமாறிவிட்டீரா?" என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை) அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை (எனது பகுதியான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது" என்று சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் (3622)
ஆகவே அன்பானர்வகளே உலகம் நபிவழியில் பயணித்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டி,நபிவழியில் நடக்கச்செய்வானாக!
آمين بجاه سيدنا طه ويس صلي الله تعالي وبارک وسلم علي خير خلقه سيدنا محمد وعلي آله وصحبه اجمعين والحمد لله رب العالمين-