ஹலால் ஹராம் பேணுவோம்.
இஸ்லாம் பூரணத்துவம் பெற்ற இயற்கை சன்மார்க்கமாகும்.இஸ்லாமிய வழியில் நடப்பதே மனிதகுலத்திற்கு நன்மையை விளைவிக்கும்.இஸ்லாமிய நெறிக்கு முரணாக நடப்பது,குழப்பத்திற்கும் அழிவிற்கும் காரணமாக அமையும்.
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு حلال நன்மையானவற்றை ஏவி,حرامதீயவற்றைவிட்டும் அவனை தடுக்கின்றான்.
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ
தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; (அல்குர்ஆன் : 7:157)
அசிங்கமான,அருவருப்பான,ஆபாசமான,தீங்குவிளைவிப்பவை அனைத்தும் ஹராமாகும்.பரிசுத்தமான,அழகான ஆரோக்கியமான,நன்மைபயக்கும் அனைத்துமே ஹலால் என மேற்கூறிய வசனம் கூறுகிறது.
குர்ஆன்,ஹதிஸ் இரண்டிலும் ஹலாலான உணவு,உடை,சம்பாத்தியம் இவற்றிற்கு மிகுந்த முக்கியத்தும் தரப்பட்டுள்ளது.
அறிஞப்பெருமக்களின் கூற்று இஸ்லாத்தில் ஹலால் ஹராம் பேணுவது,அடிப்படை கடமையாகும்.
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்;எவரேனும் ஒருவர் தொழவில்லை, ஸக்காத் கொடுக்க வில்லை,ஆனால் அவரை உண்மையாளராகவும்,அமானிதம் பேணுபவராகவும் நீங்கள் கண்டால் அவர் மரணிப்பதற்கு முன் பாவங்களை விட்டும் நீங்கி விடுவார்( البیہقی ،السنن الکبریٰ: 288/6)۔
தொழுகை,நோன்பு ஜக்காத் ஹஜ் இவை அனைத்தும் அல்லாஹ்வின் கடமைகளில் மிக முக்கிய கடமைகளாகும்.சிறப்பு வாய்ந்த வணக்கங்கள் ஆகும். என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் ஹலாலான சம்பாத்தியம்,உணவு உடை,சகமனிதனின் ஹக்கை பேணுவது. அடுத்தவரின் உரிமையில் குந்தகம் விளைவிக்காமல் இருப்பது இவையெல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.வாழ்வில் ஹராம் ஹலால் பேணுவது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை விடவும் மிக கடினமானதாகும்.
இஸ்லாமிய கடமைகளை சரிவர நிறைவேற்றும் முஸ்லிம்,ஹலாலான முறையில் ரிஸ்கை தேடுவதும்,ஹராமை அறவே விட்டொழிப்பதும் அவசியமாகும்.அவன் வயிற்றில் செல்லும் உணவுகளில் ஒரு கவள உணவு கூட ஹராமாக செல்லக்கூடாது.
இறைநெருக்கத்தைப்பெற்ற இறைநேசச்செல்வர்கள்,தங்களின் வாழ்வில் பல சோதனைகள்,அர்பணிப்புக்களை கடந்து இறைநெருக்கத்தையும்,உயர் அந்தஸ்த்தையும் பெற்றிருப்பார்கள்.
அந்த நல்லோர்களின் வாழ்வை நாம் உற்றுநோக்கினால் அவர்களின் வாழ்வை ஹலாலான முறையில் தூய்மையாக அமைத்துக்கொண்டிருப்பார்கள். மறந்தும் கூட ஹராமை நெருங்கியிருக்கமாட்டார்.ஹராம் அல்ல,சந்தேகத்திற்குறிய உணவு ஒரு கவளம் கூட அவர்களின் தொண்டைக்குழிக்கு கீழ் இறங்காது.
عَن عَائِشَة - قَالَت: كَانَ لأبي بكر الصّديق غلامٌ يخرج لَهُ الْخراج، وَكَانَ أَبُو بكر يَأْكُل من خراجه، فجَاء يَوْمًا بِشَيْء فَأكل مِنْهُ أَبُو بكر، فَقَالَ لَهُ الْغُلَام: أَتَدْرِي مَا هَذَا؟ فَقَالَ أَبُو بكر: وَمَا هُوَ؟ قَالَ: كنت تكهَّنت لإِنْسَانٍ فِي الْجَاهِلِيَّة، وَمَا أُحسِن الكهانة، إِلَّا أَنِّي خدعته، فلقيني فَأَعْطَانِي بذلك، فَهَذَا الَّذِي أكلت مِنْهُ. فَأدْخل أَبُو بكرٍ يَده، فقاء كل شَيْء فِي بَطْنه. رواه البخاري رحمه الله.
ஆயிஷா (ரலி-அன்ஹா)அறிவித்தார்கள்; ''அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான்.
அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு சிறிது உண்டார்கள்.
அப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டான். அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு, 'இது என்ன?' என்று கேட்டார்கள்.
அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னான்.
உடனே அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.'' (நூல்: புகாரி 3842)
عن زيد بن أسلم أنه قال شرب عمر بن الخطاب لبنا فأعجبه فسأل الذي سقاه من أين هذا اللبن فأخبره أنه ورد على ماء قد سماه فإذا نعم من نعم الصدقة وهم يسقون فحلبوا لي من ألبانها فجعلته في سقائي فهو هذا فأدخل عمر بن الخطاب يده فاستقاءه قال مالك الأمر عندنا أن كل من منع فريضة من فرائض الله عز وجل فلم يستطع المسلمون أخذها كان حقا عليهم جهاده حتى يأخذوها منه
ஜைது இப்னு அஸ்லம் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;உமர் (ரலி)அவர்கள் பாலை பருகினார்.நான் ஆச்சர்யப்பட்டு பால் கொடுத்தவரிடம் இப்பால் எங்கிருந்து வந்தது?எனக்கேட்டேன் அதற்கு அவர் என்னிடம் ஸதகா ஒட்டகை மேய்க்கும் ஒரு ஒட்டக கூட்டாத்தார் வந்தனர்.அவர்களுக்கு நான் தண்ணீர் குடிப்பாட்டினேன் அதற்கு அவர்கள் இந்த பாலை அன்பாளிப்பாக வழங்கினார்கள்.இதனை கேட்டதும் உமர்(ரலி)அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.
மேற்கூறிய சம்பவங்களில் இருபெரும் ஸஹாபிகளும் சந்தேகமான உணவு கூட உண்ணாக்கூடாது என அவற்றை வாந்தி எடுத்தார்கள் என்றால் ஹராமான உணவை பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
நற்சொற்களும், நல்அமல்ளும்
நம் வாழ்க்கையில் ஹலாலை பேணுவதும்,ஹராமை விட்டும் தவிர்த்தலும் முக்கிய வணக்கமாகும்.பொய்,புறம்,கோள்,தீயவார்க்தைகள் இவற்றை பேசுவது ஹராம்.விபச்சாரம்,வட்டி,மது,சூனியம்,கொலை,கொள்ளை போன்ற செயல்கள் ஹராம்கள் ஆகும்.வட்டி,எடை நிறுவவையில் மோசடி,ஹராமான தொழில்கள் இவையனைத்தையும் விட்டு நீங்கியிருக்கவேண்டும்.
நம் சொல்,செயல்,வியாபரம்,உணவு, குடிப்பு அனைத்திலும் ஹலாலை பேணுவது அவசியமாகும்.
اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ
தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்;
ஹம்து,ஸலவாத்து,திக்ரு,திலாவத் போன்ற நாவினால் மொழியப்படும் நற்சொற்களும்,தொழுகை,நோன்பு,ஜகாது,ஹஜ் போன்ற நல்அமல்களும் இவற்றோடு பொய்,புறம்,கோள் போன்ற தீய வார்த்தைகளும்,வட்டி,ஹராமான தொழில் ஹரமான பொருளாதாரம் சேரும் போது அல்லாஹ்த்தஆலாவிடம் (கபூலிய்யத்)அங்கீகரிக்கப்படமாட்டாது.
நாம் உண்ணும் உணவிலும்,நம் சம்பாத்தியத்திலும் எவ்விதத்திலும் ஹராம் கலக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.அப்படியில்லையெனில் அது நல் அமல்களை நாசமாக்கிவிடும்.
நம் வாழ்வில் சிறதளவு ஹராமை அனுமதிப்பது நஞ்சு கலப்பதை போல நல் அமல்களை சிதைத்துவிடும்.
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَ كّٰلُوْنَ لِلسُّحْتِ
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (அல்குர்ஆன் : 5:42)
" مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ ، فِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا دَامَ عَلَيْهِ " ثُمَّ وَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فَقَالَ : صَمْتًا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُه
مشکوة
ஒரு முறை உமர் (ரலி)அவர்கள் (தங்களின் மாணவர்களிடம்)ஒருவர் பத்து திர்ஹத்திற்கு ஒரு ஆடையை வாங்கினார்.ஆனால் அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும்,அந்த ஆடையை அணிந்திருக்கும் காலெமல்லாம் அருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று கூறிவிட்டு தன் காதுகளில் விரல்களை நுழைத்து விட்டுச் சொன்னார்கள்:இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக நான் கேட்கவில்லை என்றால் என் காதுகள் செவிடாக்கட்டும்.(நூல்:அஹ்மத்)
عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «لَا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلَاةً أَرْبَعِينَ يَوْمًا»
ஹராமினால் ஏற்படும் விளைவு.
عن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை’’. (முஸ்லிம்) வெகு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைக் குறித்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘அவருடைய தலை முடி கலைந்துள்ளது. உடலில் புழுதி படிந்துள்ளது. வானை நோக்கி கரங்களை ஏந்தியவாறு, ‘என் இறைவா..! என் இறைவா..!’’ என்று இறைஞ்சுகின்றார். (ஆயினும் அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) இறைவன் எப்படிஅந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? அவனது உணவு ஹராம். அவனது பானம் ஹராம். அவனது உடை ஹராம். ஹராமிலேயே வளர்ந்திருக்கின்றான். பின் எப்படி அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?’’ (புகாரி)
ஹராம் பரவலாக்கப்படுவது அழிவுநாளின் அடையாளம்.
இன்று மக்களிடம் ஹலால்,ஹராம் விஷயத்தில் அலட்சிய போக்கை காணமுடிகிறது.வட்டிக்கு கொடுப்பது தான் பெரும் பாவம்,சிரமத்திற்கு வட்டி வாங்கிக்கொள்ளலாம் என்றும் வட்டியில்லாமல் இக்காலத்தில் வாழ முடியுமா?என்றும் கூறும் அளவுக்கு இஸ்லாமியர்கள் மனமாற்றம் அடைந்துவிட்டனர்.
عن النبي صلى الله عليه وسلم قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام
ஒரு காலம் வரும் ஹலாலா?ஹராமா?என்பதை மனிதன் பொருட்படுத்த மாட்டான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:புகாரி)
மனிதர்கள் பல ரகம்.
1)அறவே ஹராமை நாடாதவர்கள்
2)குற்றவுணர்வோடு ஹராமில் ஈடுபடுபவர்கள்
3)எந்த குற்றவுணர்வுமின்றி ஹராமை ஹலால் ஆக்குபவர்கள்
இது மிக ஆபத்தான போக்காகும்.
قد أخبر النبي صلى الله عليه وسلم أنه سيأتي أناس يستحلون الخمر ويسمونها بغير اسمها، وهذا من علامات الساعة.
விரைவில் சில மனிதர்கள் தோன்றுவார்கள் அவர்கள் மதுவிற்கு வேறு பெயரைச்சூட்டி அதை ஹலாலாக்குவார்கள்.இது அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்று வட்டி,மது,விபாச்சாரம் போன்ற கொடிய பாவங்களில் அவற்றின் பெயர்களை மாற்றி மக்கள் சர்வசாதாரணமாக ஈடுபடுவதை கணலாம்.காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் இறைசட்டங்கள் கியாம நாள் வரை மாறாது.
நாம் வாழும் உலகம் ,ஹராமை நீர்த்துபோகச்செய்ய துடிக்கின்றது.ஹராமை ஹலாலாக்க தந்திரமான வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றது.
இஸ்லாமியர்கள் கால ஓட்டத்தில் சிக்கி இஸ்லாமிய நெறியை விட்டுவிடுவது நிரந்தர நாசத்திற்கு காரணமாக அமைந்து விடும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அல்லாஹுத்தஆலா நம்மை ஹராமை விட்டும் பாதுகாத்து ஹலாலான முறையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்...