Thursday, 8 September 2022

ஜும்ஆ பயான் 09/09/2022

வீண் விரயம் செய்யாதீர்கள்.


இஸ்லாம் வாழ்வின் ஒவ்வொர் அம்சத்திலும் எளிமை,நீதம்,நிதானம் ஆகியனவற்றை கடைப்பிடிக்குமாறும்,வீண்விரயம், ஊதாரித்தனம்,படோடாபம்,ஆடம்பரம் முதலியனவற்றை தடுப்பதோடு,அவற்றை பழிப்பிற்குறிய செயலாக திருமறையில்  எச்சரிக்கின்றது.

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.(அல்குர்ஆன் : 17:29)

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    (அல்குர்ஆன் : 7:31)

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 25:67)

وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا‏

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.(அல்குர்ஆன் : 17:26)

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

  اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏

 நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”(அல்குர்ஆன் : 40:28)

மூன்று வகையினர்

பொதுவாக பொருளாதாரத்தை கையாள்வதை வைத்து மனிதர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்.

முதல்வகையினர்

பொருளாதாரத்தை வைத்திருந்தும் செலவழிக்கவேண்டிய இடத்தில் செலவு செய்யாதவன் இவனே بخیل கஞ்சன்,உலோபி ஆவான்.

இரண்டாம்வகையினர்;

பகட்டு,படோடாபத்திற்கு தேவையற்ற செலவினங்களை செய்பவன் இவனை ஊதாரி,வீண்விரயம் செய்பவன் என்பர்.

மூன்றாம்வகையினர்;

அவசியத்தேவைக்கு செலவு செய்பவன்,தன் சுயத்தேவைக்கும் சரியான முறையில் செலவிடுபவர்.

இம்மூன்று பிரிவினரில் இறைவனின் நேசத்தைப் பெற்றவர் மூன்றாம்பிரிவினரே காரணம் இவர்கள் தன் பொருளில் கஞ்சத்தனமும் செய்வதில்லை,வீண்விரயமும் செய்யமாட்டார்கள்.

நவீன கண்டுபிடிப்புகள்.

நவீன கண்டுபிடிப்புகள் பெருகி வரும் இன்றைய விஞ்ஞானயுகத்தில்,மக்களிடம் நுகர்வு மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.எதையும் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் விற்றுவிடலாம் என்கிற வியாபார யுக்தியில் மக்கள் வீழ்ந்துவிடுகின்றனர்.

சிறு குழந்தைகளுக்கு வாங்கித்தரும் சாக்லேட்,விளையாட்டு சாதனங்கள் தொடங்கி ஓட்டல்கள்,மால்கள்,சூப்பர்மார்கெட்கள் என எல்லா இடங்களிலும் மக்களை ஈர்ப்பதற்காக செய்யப்படும் விளம்பரங்களைப்பார்த்து நாம் ஏன் வாங்குகிறோம்?எதற்கு வாங்குகிறோம் என்கிற எந்த சிந்தனையும் இல்லாமல் பொருளைவாங்கி பணத்தை விரயம் செய்கின்றனர்.

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோறும் வாங்கிச் செல்கிறார்கள். இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள்.

சமீபத்தில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு மூலையில் ஓர் உடற்பயிற்சி இயந்திரத்தை மூட்டை கட்டி வைத்திருந்தனர். ஏன் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.

''இது ஆன்லைன் மூலம் ஒரு பொருள் வாங்கியபோது ஆஃபர் விலையில் கிடைத்தது. வீட்டு உபயோகப்பொருள் வாங்க ஆன்லைனில் தேடியபோது, அந்தப் பொருளின் விலையோடு கொஞ்சம் கூடுதலாகப் பணம் கட்டினால் இந்த இயந்திரமும் தருவதாகச் சொன்னார்கள். எனவேதான் வாங்கினோம். ஆனால், வாங்கிய நாளிலிருந்து இதைப் பயன்படுத்தவே இல்லை'' என்றனர். தேவைப்படாத பொருளுக்கு எதற்குப் பணத்தை விரயம் செய்தீர்கள் என்றால், சரியான பதில் இல்லை.

இதைப்போல இன்னொரு அனுபவமும் சமீபத்தில் கிடைத்தது. நண்பர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி ஒரு தையல் இயந்திரம் வாங்கி வந்திருந்தார். இத்தனைக்கும் அவருக்கு தையல் தொழில் தெரியாது. இனி, தையல் கலையைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று சொன்னார்கள். பிறகு ஏன்தான் இந்த தையல் இயந்திரத்தை வாங்கினீர்கள் என்று கேட்டேன். ''எனது தோழி ஒருத்தி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் நானும் வைத்திருக்கிறேன். அவளுக்கு தையல் தெரியும், எனக்கு தையல் தெரியாது, என்றாலும் அவள் வாங்கிவிட்டாள் என்பதற்காக நானும் வாங்கினேன்'' என்றார். இந்தப் பதிலை கேட்டபோது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் சமீப காலங்களாக மிகப் பெரிய மாற்றம் கண்டுவருகிறது என்பதைத்தான் இந்த இரு சம்பவங்களும் எடுத்துச் சொல்கின்றன. நுகர்வு மோகம் அதிகரித்து வருவதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மேலும், மக்களின் சேமிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

தீவிரமான நுகர்வு பழக்கத்தின் விளைவு என்னவாகிறது? வாங்குகிற பொருள் நமக்குப் பயன்படுமா என்பது குறித்து சிந்திப்பதில்லை. அதற்குக் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை ஆராய்வதும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் செய்கிறேன் என்கிறது இந்தத் தலைமுறை.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் பெருமளவில் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. நமது மக்கள் தங்களது வருமானத்தில் சேமிப்புக்கும் ஒரு முக்கியமான இடத்தை ஆரம்பக் காலந்தொட்டே கொடுத்து வருகின்றனர். இதைக் குடும்பச் சேமிப்புப் பழக்கம் என்பார்கள்.

இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான தூண் இந்தக் குடும்பப் பொருளாதார அமைப்புதான். எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதன் பயன்பாடு என்ன, அது எவ்வளவு நாட்களுக்கு உழைக்கும், அந்தப் பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பு சரியானதுதானா என்பதை ஆராய்ந்த பிறகே செலவு செய்வார்கள்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அமெரிக்க மக்கள் அதிகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டாததுதான். அப்போது அமெரிக்காவில் பலரும் தங்கள் வருமானத்தைவிடவும் அதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்கள். தங்களது தேவைக்கும் அதிகமான நுகர்வு பொருட்களை வாங்கி அடுக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது.

ஆனால், அந்த நெருக்கடி நிலையிலும் இந்திய பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பில்லை. காரணம், நமது இந்திய பொருளாதாரத்தின் சேமிப்பும் யோசித்து யோசித்துச் செலவு செய்யும் குணமும்தான்.

இதைத் தாண்டியும் இப்போதெல்லாம், ஆஃபர்களுக்காகப் பொருட்கள் வாங்குவதும், அடிக்கடி பர்ச்சேஸ்செய்வதும் ஹாபி என்கிற மாதிரி நமது செலவு பண்புகள் மாறி வருகிறது. நமது செலவுப் பழக்கம் ஏன் இப்படி மாறிவருகிறது என நிதி ஆலோசகர் சுபாஷினி அவர்களிடம் கேட்கப்பட்டது..

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மக்களின் பொருளாதாரப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம் தவிர்க்க முடியாது. என்றாலும், இப்படியான நுகர்வுப் பழக்கம் நமது இந்திய பொருளாதாரத்துக்குப் புதியது. பொருளையோ, சேவையையோ எதை வாங்கினாலும் அது நமக்கு முற்றிலும் பொருத்தமானதா, பயன்படுத்துகிறோமா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை கவனித்து வாங்கும் பண்பு நம்மிடம் உள்ளது.

அடிக்கடி ஷாப்பிங் செல்வது மனநிறைவு கொடுக்கிறது என்றாலும், அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை யோசிக்க வேண்டும். வருமானத்தில் இத்தனை சதவிதம்தான் இதர செலவுக்கு ஒதுக்க முடியும் என்றால், அந்த வரம்புக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனதுக்கு நிறைவு தருகிறது என்பதற்காக எல்லா வரம்புகளையும் கடந்தால் நெருக்கடிகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் குடும்பத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. திட்டமில்லாமல் செலவு செய்தால் அவசரத்துக்கு மருத்துவச் செலவுக்குகூட திண்டாட்டமாகிவிடும். மன திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதற்காக என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பார்க்காமலேயே வாங்கிவிட முடியாது.

#நீரை.மகேந்திரன் நன்றி;விகடன்

வீண்விரயாத்தினால் ஏற்படும் தனிமனித,சமூக வாழ்வியல் பாதிப்புகள்

வீண்விரயம் என்பது ஆரோக்கியம்,நோய்.வாலிபம்,வயோதிகம்வசதியானவர்,ஏழை, நடுத்தரவர்க்கத்தினர் என நபருக்கு நபர் மாறுப்படும்.ஒரு உணவோ அல்லது உடையோ ஒருவருக்கு வீண்விரயமாகவும்,மற்றவருக்கு அத்தியாவசியமாகவும் இருக்கலாம்.

விரயம் செய்பவன் ஷைத்தானின் தோழன்

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

விரயம் செய்பவன் இழிவானவன்,கோழை

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.(அல்குர்ஆன் : 17:29)

நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டவன்.

  اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”(அல்குர்ஆன் : 40:28)

அல்லாஹ்வின் அன்பை விட்டும் நீங்கியவன் 

 ‌ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

 ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 6:141)

வீண்விரயம் ஃபிர்அவ்னின் குணம்

وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِ‌  وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ‏

 நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.(அல்குர்ஆன் : 10:83)

விரயம்செய்பவன் மறுமையில் தண்டிக்கப்படுவான்

وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِاٰيٰتِ رَبِّهٖ‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏

ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.(அல்குர்ஆன் : 20:127)

வீண்விரயம் அழிவிற்கு காரணமாகும்

ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ‏

பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.(அல்குர்ஆன் : 21:9)

வீண்விரயம் செய்பவன் நரகம் செல்லத் தகுதியானவன்

 وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ‏

 நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 40:43)

வீண்விரயம் சமூக பிரச்சனைககளூக்கு காரணமாக அமையும்

وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ‏

“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.(அல்குர்ஆன் : 26:151)

الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ‏

“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).(அல்குர்ஆன் : 26:152)

வறுமையை உண்டாக்கும் வீண்விரயம்.

 قال امیر المومنین عمر رضي الله عنه ; سَبَبُ الفَقر الِاسراف

உமர் (ரலி)அவர்கள் சொன்னார்கள்;வறுமையை உன்டாக்கும் காரணம், வீண்விரயம்.

வீண்விரயம் வாழ்வாதாரத்தை குறைக்கும்.

ஹழ்ரத் அலீ(ரலி)அவர்கள் சொன்னார்கள்;வீண்விரயம் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் குறைவை உண்டாக்கும்.வீண்விரயம் அறிவீனர்களின் செயலாகும்.

வீண்விரயம் ஆரோக்கியத்தை கெடுக்கும்

ويقول عمر رضي الله عنه: إياكم والبطنة في الطعام والشراب، فإنها مفسدة للجسد، مورثة للسقم، مكسلة عن الصلاة، وعليكم بالقصد فيهما، فإنه أصلح للجسد، وأبعد عن السرف، وإن الله تعالى ليبغض الحبر السمين، وإن الرجل لن يهلك حتى يؤثر شهوته على دينه.

வயிறுபுடைக்க உண்பதையும்,பருகுவதையும் விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்.அது உடலை கெடுக்கும்,நோயை உண்டாக்கும்,வணக்கவழிப்பாடு செய்வதை விட்டும் சோம்பேறிதனத்தை உண்டாக்கும்.

வீண்விரயத்தை தவிர்ப்பதற்கான வழிகள்

- இஸ்லாமிய வகுத்தளித்த வாழ்வியல்  முறையை பின்பற்றுவது.

- பொருளாதாரம்,சொல்,செயல் என அனைத்திலும் வீணானவற்றை தவிர்த்தல்.

- எளிமை மற்றும் நடுநிலை பேணுவது.

- நுகர்வுக்கும்,உற்பத்திக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை கவனித்து பொருளாதாரத்தை கையாள்வது.

- காட்சிக்கு ஆடம்பரமாக செலவு செய்து மற்றவர்களுடன் போட்டி போடாமல், எளிமையை கடைபிடிப்பது.

- வாழ்வில் எளிமை,எண்ணத்தில் பணிவு இவ்விரண்டும் விரயத்தை தடுக்கும்.பெருமை,ஆடாம்பரம் வீண்விரயத்தை தூண்டும்.

- அல்லாஹ்  நமக்களித்த பொருளாதாரம் நமக்குறியது  மட்டுமல்ல, அதில் ஏழை,எளியோர்க்கும் பங்குண்டு என்பதை உணர வேண்டும்

வீண்விரயத்தை (ஆடம்பரத்தைத்) தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

-முதலில் இது ஷைத்தானின் தூண்டுதல்,விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதிரர்கள் என்கிறது திருமறை.

- வாழ்வாதாரத்தில் பரகத் அபிவிருத்தி.

- அடுத்தவரிடம் தேவையாகாமல் இருப்பது.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், பகட்டு,பெருமையைத் தவிர்க்கலாம்.

-பேராசை பிறர் உள்ளத்தில் எழுவதில்லை.

- நாம் நம் சக்திக்கு ஏற்ப செலவு செய்தால், இதயம் பணிவு மற்றும் நன்றியுடன் இருக்கும்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், சமூகத்தில் தீமைகள் பரவுவதையும் தவிர்க்கலாம்.

- அல்லாஹ்வை நெருங்குவதற்குச் சிறந்த வழி, அளவாகச் செலவு செய்வதும், அளவோடு இருப்பதும்தான்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், அல்லாஹ்வின் வெறுப்பைத் தவிர்க்கிறோம்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், நாம் மனோஇச்சையிலிருந்து விடுபடுகிறோம்.

- அல்லாஹ்வின் நல்ல அடியார்களில் கணிக்கப்படுவார்.

- அதிகப்படியான செல்வம் அல்லாஹ்வின் அடியார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே செலவிடப்படுகிறது.

அளந்து செலவு செய்.

வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:27)

'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழ்ப் பழமொழி. 'ஓடும் ஆற்றில் ஒளு செய்தாலும் தண்ணீரை வீண் விரயம் செய்யாதே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

இவ்வாறு அண்ணலாரின் வழிகாட்டுதல்களைப் பெற்ற இஸ்லாமிய சமூகம்தான் உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை அனைத்திலும் பகட்டையும் விரயத்தையும் காட்டுகிறார்கள். குறிப்பாக அரபு நாடுகள்

துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..! இதுவே அபுதாபியில் 500 டன் என்ற அளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறார்கள்.

UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார்.

விரயமும் ஒரு சமூக அநீதிதான்.

உணவை விரயமாக்குவது தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி! எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உணவுக்கான பொருளை விளைவித்துத் தரும் விவசாயிக்குச் செய்யப்படும் அவமரியாதை. உணவு என்பது ஜடமல்ல... அது ஓர் உயிர்ப் பொருள். உலகில் சுமார் 70 கோடி மக்கள் இரவில் உணவு கிடைக்காமல் பசித்த வயிற்றோடு தினமும் உறங்கச் செல்கின்ற சோகமான நிலைமை ஒருபுறம் என்றால், உணவின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% உணவு விரயமாகிறது என்கிறது ஐநாவின் ‘உணவு விரயக் குறியீடு 2021’ ஆய்வறிக்கை.

54 நாடுகளில் மேற்கொண்ட அந்த ஆய்வின்படி, உலக அளவில் 2019-ல் 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61% வீடுகளிலிருந்தும், 26% உணவு விடுதிகளிலிருந்தும் 13% சில்லறை விற்பனையிலிருந்தும் விரயமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வீடுகளில் 2019-ல் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டுள்ளது. உலகில் உணவை நுகரும் வாய்ப்புள்ள ஒரு தனிநபர் வருடத்துக்கு 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவைத் திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

முன்மாதிரி நாடுகள்

விரயம் செய்யப்படும் உணவைத் தடுப்பதிலும் அதை மறுபடியும் பயன்படுத்துவதிலும் முன்னெடுப்புகளுக்கு முகம் கொடுக்கும் உலக நாடுகளில் டென்மார்க்கும் நெதர்லாந்தும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகளில் உணவுப் பாதுகாப்புத் துறையானது சமூக நிகழ்வுகளில் உணவு விரயம் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாகக் கண்காணிப்புப் படைகளை அமைத்துள்ளன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றும் முயற்சியில் தற்போது தென்ஆப்பிரிக்காவும் இறங்கியுள்ளது.

விரயம் செய்யாமல் இருக்க நிபந்தனையிடுவது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) 'தம்ஃக்' என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. 'நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை' என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். (ஸஹீஹ் புகாரி 2764)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமுறைகள் நிர்ணயித்தார்கள். ஸஹீஹ் புகாரி( 2777)

- எளிமையாக  இருப்பது துன்பத்திற்கு வழிவகுக்காது

- மனிதன் சட்டவிரோதமான மற்றும் ஹராமான முறையில் பொருளீட்டுவதை தவிர்க்கிறான்.

அல்லாஹுத்தஆலா நாம் வீண்விரயம் செய்வதை விட்டும் பாதுகாத்து,நல்லோர்களாக வாழச்செய்வானாக!ஆமீன்...


வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 1 September 2022

ஜும்ஆ பயான்.02/08/2022

வட்டி ஒர் வன்கொடுமை

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌‏ 

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் : 3:130)

பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்வளங்களில் மிகப்பெரியதும்,மனித வாழ்வாதாரங்களில் மிக முக்கியமானதும் ஆகும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஆகுமான ஹலாலான வழியில் பொருளீட்டுமாறும்.
தடைசெய்யப்பட்ட ஹராமான வழியில் பொருளீட்டுவதை விட்டொழிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
 
நாளை மறுமையில் அடியானிடம் தொடுக்கப்படுகிற கேள்விக்கணைகளில் பொருளாதாரமும் ஒன்றாகும்.

عن أبي بَرْزَةَ نَضْلَةَ بن عبيد الأسلمي -رضي الله عنه- مرفوعاً: «لا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَومَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ؟ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ فِيهِ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ؟ وفِيمَ أَنْفَقَهُ؟ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ؟». (رواه الترمذي)
அடியானிடம் மறுமைநாளில் அவனின் வயதை குறித்து எவ்விதம் கழித்தாய்? என்றும்,அவன் கற்ற கல்வி பற்றி அதன் படி செயல்பட்டாயா?என்றும்,அவனின் பொருளாதாரம் குறித்து அதனை எவ்வழியில் ஈட்டினாய்?எவ்விதம் செலவழித்தாய்?என்றும்,அவனின் உடலை பற்றி அதனை எப்படி வளர்த்தாய்?என்றும் கேள்விக்கேட்க்கப்படும் வரை அவனின் பாதம் (ஒரு அடிக்கூட)நகராது.

பொருளாதாரம்,அல்லாஹ்வின் அருள் மற்றும் வாழ்வாதாரமாக இருந்தாலும், அதனை பல சந்தர்ப்பங்களில் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் فتنہ"பிரச்சனை" "குழப்பம்"என்றும் "கவலைத்தரும் காரணி"என்றும்
"உலக அலங்காரம்"என்றும் கூறியிருப்பது அறவே பொருளாதாரத்தின் நாட்டம் கூடாது என்கிற காரணத்தினால் அல்ல.மாறாக உலகை சம்பாதிக்கும் நோக்கில் மறுமையை மறந்து ஹலால்,ஹராம் பேணாமல் மனம்போனப் போக்கில் வாழ்ந்துவிடக்கூடாது.என்பதனை உணர்த்தவேயாகும்.

இன்றைய நவீனமயமாகல் உலகமயமாக்கலின் விளைவாக மக்கள், பொருளாதாரத்தின் மீதுள்ள அபரிமிதமான பேராசையினால் ஹலால்,ஹராம் குறித்த எந்த இலட்சியமும் இல்லாமல் பொருளாதாரத்தை சேகரிக்க முயற்சிக்கின்றனர்.

தீமைகளும்,குற்றங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில்  மனிதகுலத்தின் பேரழிவாக வட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தனிநபர்,பல குடும்பங்கள் தொடங்கி பெரும் நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளை திவாலாக்கியிக்கிறது. 

வட்டி என்றால் என்ன?

இரு நபர்கள் எடையிலும்,அளவிலும் ஒரே மாதிரி உள்ள பொருளையோ அல்லது பணத்திற்கு பகரமாக பணத்தையோ கூடுதல்,குறைவாக மாற்றிக்கொள்வதே வட்டியாகும்.

எதுவெல்லாம் வட்டி.

ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?' என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) 'என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தரமுடியாது!' என்றார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!' என உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி (2134)


வியாபாரம் ஹலால்,வட்டி ஹராம்.

 ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
 அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)

ஸதகா வளரும்,வட்டி அழியும்


يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:276)

வட்டியை அறவே விட்டொழியுங்கள்.


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் : 2:278)

அல்லாஹ்,ரஸுலோடு போர்ப்புரிய தயாரா?


فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு)   நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:279)

நாளை மறுமையில் பைத்தியம் பிடித்தவானாக...


اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்.
(அல்குர்ஆன் : 2:275)

மறுமையில் கிடைக்கும் தண்டனை.

இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! ‘அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)நூல்: புகாரி-2085)

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).முஸ்லிம்-3258 (4177)


நபியின் இறுதிப்பேருரையில் வட்டி.


நாயகம்  ﷺ அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது ஹஜ்ஜதுல் விதாஃவில் நிகழ்த்திய பேருரையில் வட்டியை முற்றிலும் தடைசெய்ததோடு மட்டுமல்லாமல் முதலில் தங்களின்  குடும்பத்தவர்களுக்கு உரித்தான வட்டியை தள்ளுபடி செய்தார்கள்.
أَلاَ وَإِنَّ كُلَّ رِبًا فِى الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ غَيْرَ رِبَا الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ

அறியாமைக்கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது.முதலாவதாக எனது குடும்பத்தில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு உரித்தான  வட்டியை  முழுவதுமாக தள்ளுபடி செய்கிறேன்.

ஏழு பாவங்கள்


நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)    புஹாரி 6857

இறைசாபத்தை பெற்றவர்கள்.


عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه

"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.

வங்கிக் கடன் (Loan)


அகில உ லக அறிஞப்பெருமக்களில் 99.99% பெரும்பான்மையானவர்களின் ஏகோபித்த முடிவு;வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் வட்டியாகும்.
வங்கியில் கடன்Loon பெற்றவர் செலுத்தும் அதிகப்படியான தொகையும்,
வங்கியில் இருப்புவைத்திருபருக்கு வரும் அதிகப்படியான Interest தொகையும் குர்ஆன்,ஹதீஸில் தடைசெய்யப்பட்ட வட்டியே ஆகும்.

அகில உலக உலமாக்கள், சமகால பிரச்சனைகளுகாக ’’مجمع الفقہ الإسلامي‘‘ இஸ்லாமிய சட்டங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் பல்வேறு  நாடுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவு "வங்கி பரிவர்த்தனை"அனைத்துமே வட்டியாகும் ஹராமாகும்.
இந்திய துணைகண்டத்தில் உலமாக்களின் ஏகோபித்தமுடிவும் இதுவே ஆகும்.

"பிக்ஹ் அகாடமி"எனும் பெயரில் புதுதில்லியில் நடத்தப்பட்ட பல்வேறு கூட்டங்களில் இதுவே இறுதி முடிவானது.

 தங்களை பரந்த சிந்தனையாளர்களாக கருதும் எகிப்திய உலமாக்களும்,வங்கிகளில் கடன் வாங்குவதும், தற்போதைய முறையின் கீழ் வைப்புத் தொகைக்கு வட்டி வசூலிப்பதும் சட்ட விரோதமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆக அகில உலக உலமாக்களின் ஏகோபித்த தீர்ப்பு:தற்கால வங்கியியல் பரிவர்த்தனை அனைத்தும் வட்டியாகும்,சட்டப்படி ஹராமாகும்.

தற்கால நவீன  யுகத்தில் வட்டியை  தவிர்க்க  நாம் என்ன செய்ய வேண்டும்? 



1:- வங்கியில் கடன் வாங்குவது அல்லது டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி வாங்குவது கூடும் என்று ஒருவர் கூறினால், உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களில் 99.99% உலமாக்களின் முடிவு அது ஹராம் எனக்கூறி தவிர்க்கவும். 

2:- குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வங்கியில் கடன் வாங்குவதும், வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி கட்டுவதும் ஹராம் என்று அறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்., ஏனெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் வட்டி பெரும் பாவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டிக்கு அல்லாஹ் பயன்படுத்திய கடின வார்த்தைகள் திருக்குர்ஆனில் மது அருந்துதல், பன்றி இறைச்சி உண்பது, விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. 

3:- நாம் உம்மத் என்று பெருமைப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டிக்காரர்களை சபித்துள்ளார்கள். சந்தேகத்திற்குரிய விஷயங்களைத் தவிர்க்க கற்றுக் கொடுத்துள்ளார்கள். 

4:- வங்கியில் கடன் வாங்குவதை தவிர்க்கவும், வங்கியில் கடன் வாங்காமல் உலக தேவைகளை பூர்த்தி செய்யவும், ஏதேனும் பிரச்சனைகள், சிரமங்கள் இருந்தால் பொறுமையாக இருங்கள். 

5:- வட்டியைத் தவிர்க்க வழியே இல்லாத நாட்டில் ஒருவர் இருந்தால், உங்கள் சக்திக்கேற்ப வட்டி முறையைத் தவிர்த்து விடுங்கள், அதிலிருந்து விடுபடுவதில் எப்போதும் அக்கறை கொண்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். 

6:- வட்டிப் பணத்தைப் பயன்படுத்தியவர்கள், முதல் சந்தர்ப்பத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தவ்பா செய்து, எதிர்காலத்தில் ஒரு பைசா கூட வட்டிப் பணத்தைக்  உண்ணாமல், மீதமுள்ள வட்டித் தொகையை ஜகாத் தகுதியுள்ள ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்.

7:- ஒருவர் பழைய தங்க நகைகளை விற்று, புதிய தங்க நகைகளை வாங்க விரும்பினால், இரண்டிற்கும் தனித்தனி விலையை வசூலித்து, புதிய தங்கத்திற்கு ஈடாக பழைய தங்கத்தையும் வித்தியாசத்தையும் தரலாம். இல்லையெனில் அதுவும் ஒரு வகை வட்டிதான்.

இன்றைய பொருளாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்ளும் ஒன்று;
வட்டி மற்றும் வங்கியின் தற்போதைய அமைப்பு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, மேலும் இது  பணவிக்கம் போன்ற பல குறைபாடுகளைக் ஏற்படுத்துகின்றது.

வட்டி ஏன் கொடும் பாவம் எனில்
அது  حقوق اللہ இறைக்கட்டளையை மீறுவதுமட்டுமல்லாமல் حقوق العباد மனித உரிமை மீறலாக இருப்பதால் தான்.

عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)

"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.

ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான் அதில் ஒன்றுதான் வட்டி.

சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?  


இவ்வசனத்தில் (3:130) "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு "சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது" என்று சிலர் வாதிடுகின்றனர். இது குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதமாகும். 2:278 வசனத்தில் "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். "வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்" எனக் கூறாமல், "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்" என்று பொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய அளவிலான வட்டியும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். 2:279 வசனத்தில் "வட்டியிலிருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமே சொந்தம்" எனக் கூறப்படுகிறது. "மூலதனமும் சிறிய அளவிலான வட்டியும் சொந்தம்" என்று கூறப்படவில்லை. மாறாக வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. அப்படியானால் "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்" என்று 3:130 வசனம் கூறுவது ஏன்? பொதுவாக வட்டியின் தன்மையே இது தான். வியாபாரத்துக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இது தான். அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டே செல்லும். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வாங்கிய கடனை விட வட்டி பல மடங்கு அதிகமாகியிருப்பதைக் காணலாம். ஒரு பொருளை நாம் இலாபம் வைத்து விற்பனை செய்தால் அந்த ஒரு தடவை மட்டுமே அப்பொருள் மூலம் இலாபம் அடைகிறோம். ஆனால் ஒரு தொகையை வட்டிக்குக் கொடுத்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல தடவை இலாபம் அடைகிறோம். இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்ற கருத்தை இது தராது.

வட்டியின் கொடுமை.


கந்து வட்டி கொடுமை காரணமாக தமிழகத்தில் ஒரு குடும்பம், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தது. மனைவி மற்றும் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழக்க, குடும்ப தலைவர் மட்டும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். கந்து வட்டிக்கு எதிராக பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காத காரணத்தால், ஒரு ஏழை குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.


நிரந்தர தீர்வு எங்கே?

இதற்கு நிரந்தரத் தீர்வு எங்கே கிடைக்கும்? திருக்குர்ஆனில் மட்டும் தான் இதற்குத் தீர்வு கிடைக்கும். திருக்குர்ஆனை அரசியல் மற்றும் ஆன்மீக சாசனமாகக் கொண்ட இஸ்லாத்தில் மட்டும் அதற்குத் தீர்வு இருக்கின்றது. முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான்.

இந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த உலக  வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதற்கு மறுமையில் பலன் கிடைக்கும் என்பதால் தான் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு தீய காரியத்தைச் செய்யாமல் விடுகின்றார்கள் என்றால் அதற்கு மறு உலக வாழ்க்கையில் தண்டனை கிடைக்கக்கூடாது என்பதால் தான் விடுகின்றார்கள்.

இன்று முஸ்லிம்கள் வங்கியில் வரவு செலவுக் கணக்கு வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதில் வருகின்ற வட்டியை வாங்கிக் கொள்வதில்லை. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதை உதறித் தள்ளி விடுகின்றார்கள். முஸ்லிம்கள் பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதில்லை. இதற்குக் காரணம் வட்டிக்கு விடுவோர் மறு உலக வாழ்க்கையில் நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதால் தான். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(அல்குர்ஆன்:2:275.)

இதுதான் அதிகமான முஸ்லிம்கள் வங்கியிலிருந்து  வருகின்ற வட்டியை வாங்க மறுப்பதற்குரிய முக்கியக் காரணமாகும். பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க மறுப்பதற்கும், வட்டித் தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபடாததற்கும் இது தான் காரணம். முஸ்லிம்கள் அறவே வங்கியிலிருந்து வட்டி வரவை வாங்குவதில்லை; பிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவதில்லை; வட்டித் தொழிலிலும் ஈடுபடுவதில்லை என்று நாம் வாதிடவில்லை.

முஸ்லிம்களிலும் வட்டியுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறைவானர்கள். அவர்கள் மறு உலக நம்பிக்கையில் அதிகப் பிடிமானம் இல்லாதவர்கள். அதனால் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றவர்கள் மறுமையை அஞ்சி வட்டியை விட்டு ஒதுங்கி விடுகின்றார்கள். 

அல்லாஹ் நம் அனைவரையும் வட்டியின் கொடுமையிலிருந்து பாதுகாப்பானாக! ஆமின்...


வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 25 August 2022

ஜும்ஆ பயான்.26/08/2022

இஸ்லாமிய பார்வையில் ஸஃபர் மாதம்.

  وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்,  ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன்:6:59.)


இஸ்லாமிய 12 மாதங்களில் இரண்டாவது மாதம் ஸஃபர்.அறியாமைக்கால அரபுகளிடம் இம்மாதம் மோசமானதாகக் கருதப்பட்டது.

ஆனால் முஸ்லிம்கள் இதை சஃபர்-உல்-கைர் அல்லது சஃபர்-உல்-முழஃப்பர் (வெற்றியின் மாதம்) என்று அழைக்கின்றனர். 

இந்த மாதம் அறியாமைக்கால அரபுகளிடம் (ஜாஹிலிய்யாவில்)துர்சகுனமாகக் கருதப்பட்டது.இம்மாதம் வானத்திலிருந்து ஆபத்துகளையும், பேரழிவுகளைக் கொண்டுவரும் என்பது அவர்களின் மூடநம்பிக்கை. 

ஜாஹிலிய்யா மக்கள் இந்த மாதத்தில் மகிழ்ச்சியான வைபவங்களை (திருமணம், பயணம், பரிவர்த்தனைகள்) செய்வதை மோசமானதாகக் கருதினர், 

அறியாமைக்கால அரபுகளின் இந்த மூடபழக்கம் வாழையடி வாழையாக இஸ்லாமியர்களிடமும் தொற்றிக்கொண்டது வேதனையான விஷயமாகும்.

சஃபர் மாதத்திற்கான பெயர் காரணம்.

சஃபர் என்றால் "காலியாக இருப்பது" என்று பொருள். ஜாஹிலியா காலத்தில், சஃபர் மாதம் அபசகுனமாக கருதப்பட்டது, 

மேலும் இது "சஃபர் அல்-மகன்" என்றும் அழைக்கப்பட்டது, அதாவது வீடுகளை காலி செய்யும் மாதம்,ஏனெனில் மூன்று புனித மாதங்களுக்குப் பிறகு (ஜுல்-கஃதா, ஜுல்-ஹிஜ்ஜா, முஹர்ரம்) இந்த மாதத்தில் வீடுகள் காலி செய்து.போர்தளவாடப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் சண்டையிடுவதற்கும், கொலை செய்வதற்கும் போர்க்களத்திற்குச் செல்வார்கள்.

இந்த அழிவு மற்றும் அழிவுக்கான உண்மையான காரணத்தை கவனித்து அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அரேபியர்கள் இந்த மாதத்தை துரதிர்ஷ்டம், பேரழிவுகள் மற்றும் பிரச்சனைகளின் மாதமாக நம்பினர்.( تفسیر ابن کثیر)

அறியாமை ஜாஹிலிய்யா காலத்தில் ஸஃபர் மாதம் பற்றிய கோட்பாடுகள்.

சஃபர் மாதத்தில் அரேபியர்கள் இரண்டு பெரிய தீமைகள் செய்தனர்:

1.சந்திர மாத கணக்கை  முன்னும் பின்னுமாக மாற்றுதல்

மக்கா முஷ்ரிக்குகள், புனித மாதங்களில் போர்செய்வது தடை என்பதால் முஹர்ரம் மாதத்தை ஸஃபர் என்றும் ஸஃபரை முஹர்ரம் ஆக மாற்றியும் போர்ப்புரிந்தனர்.

இன்னும் சில வருடங்கள் முஹர்ரம் மாதத்தை தடை செய்து ஸஃபரிலிருந்து வருடத்தை துவக்கி 11 மாதங்களாக அறிவிப்புச்செய்து சந்திர மாதக்கணக்கை மாற்றிவிடுவார்கள். முஹர்ரம் ஒரு புனித மாதமாகும், அதில் போர் செய்வது தடைசெய்யப்பட்டது. (துல்கஅதா, துல்ஹிஜ், முஹர்ரம் ஆகிய மூன்று புனித மாதங்களாகும்), இந்த மூன்று மாதங்களில் முஷ்ரிக்குகள் சண்டையிடுவது மிகவும் கடினமாக  இருந்ததால், அவர்கள் இப்படி ஒரு காரியத்தை செய்தனர்.

(سعیدی، تبیان القرآن، جلد: 5، ص: 133)

2. சஃபர் மாதத்தை அபசகுனமாக கருதினர்.

முஷ்ரிக்குகள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதினர்.சண்டை,கொலை போன்ற காரணங்களால் நிகழும் இழப்புகளால் வீடுகள் காலியாகி துன்பங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.என அதற்கு காரணம் கூறினர்.அவர்கள் செய்த செயல்களை சரி செய்யாமல் சஃபர் மாதத்தை அசுபமாக கருதினர்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ் வெளிச்சத்தில் சஃபர் மாதம்.

குர்ஆனின் ஒளியில்:

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌  وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌  وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا‏

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:79)

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌  وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌   وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 9:36) 

ஹதீஸ் ஒளியில்:

عن ابی هریرة قال قال النبی لا عدوی ولا صفر ولا هامة.

(صحیح البخاری، کتاب الطب، باب الهامة، رقم: 5770، دارالمعرفة بیروت)

தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு.. அபூஹுரைரா (ரலி)  புகாரி 5707,

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((لا عدوى، ولا صفر، ولا هامة))، فقال أعرابي: يا رسول الله، فما بال الإبل تكون في الرمل كأنها الظباء، فيجيء البعير الأجرب فيدخل بينها فيُجربُها كلها؟! قال: ((فمن أعدى الأول؟

நபி (ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல' என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?' என்று கேட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5717, முஸ்லிம் 2220

ஸஃபர் மாதமும், தவறான எண்ணங்களும்

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்று சொல்வதைப் போல அறியாமைக்கால இப்பழக்கம் இன்றைய நவீன யுக சில இஸ்லாமியர்கள் வரை ஸஃபர் பீடை மாதமாக கருத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய சில இஸ்லாமியர்கள்,ஸஃபர் மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியம் செய்யவதில்லை.திருமணமான பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புவதில்லை,பயணம் செய்வதில்லை.இம்மாததில் தொழில் துவங்குவதையும்,கொடுக்கல் வாங்கலையும் அபசகுனமாக கருதி தள்ளிப்போடுகின்றனர். 

"மக்கள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதுகிறார்கள், அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அவர்கள் பெண்களை அனுப்ப மாட்டார்கள்,பயணத்தைத் தவிர்க்கிறார்கள்." குறிப்பாக சஃபர் மாதத்தின் முதல் பதிமூன்று தினங்கள் மிகவும்  துற்சகுனமாக கருதப்படுகின்றன, அவை பதின்மூன்று நோன்புகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஷாஹ் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி(ரஹ்)அவர்களின்

"இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்", எனும் நூலில்  எழுதப்பட்டுள்ளது, 

இது ( சஃபர் மாதம்) பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் பேரழிவுகளின் மாதமாக மக்கள் கருதுகின்றனர், இந்த நம்பிக்கை தவறானது மற்றும் அதில் உண்மை இல்லை.

(اسلامی مهینوں کے فضائل، ص: 44)

ஸஃபர் மாதம் பீடை கிடையாது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (84 ஸஹீஹ் புகாரி (5757)

அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள். 

அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார். 

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி( 5717)

மூடநம்பிக்கையில் உலகம்.

எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை.

மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது !

அமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.     

மூட நம்பிக்கையை முறியடித்த மாமறைக் குர்ஆன்.

உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று ஜோதிடம் ஆகும். நட்சத்திர ஜோசியம், எண் ஜோசியம், கிளி ஜோசியம், நாடி ஜோசியம், கைரேகை ஜோசியம் என்று பல்வேறு வகையிலான ஜோதிடக் கலைகள் மக்களுக்கு மத்தியில் உலவிவருகின்றன.

நம்முடைய எதிர்காலத்தையும் மறைவான விஷயங்களையும் ஜோதிடர் கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை நம்பி தங்களுடைய எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற இயலாது. இந்த ஜோதிடத்தை நம்பியவர்களில் அதிகமானோர் இதன் மூலம் ஏமாற்றப்பட்டு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கற்பிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகும்.

தமிழக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் பலர் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றர். பச்சை நிறத்தில் சேலை அணிதல், மஞ்சள் நிறத்தில் துண்டு அணிதல், பெயரை நியூமராலஜி அடிப்படையில் மாற்றிக் கொள்வது, பெயரில் தேவையில்லாமல் ஓரிரு எழுத்துக்களை அதிகப்படுத்தி எழுதுவது, தோஷம் கழித்தல், பரிகார பூஜைகள் நடத்துதல் என இவர்களின் மூட நம்பிக்கைகளைப் பட்டியல் போட்டு மாளாது. பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் இதில் அடக்கம்.

ஜோதிடர்களின் வசீகரமான  பேச்சுக்களை நம்பி சொத்துக்களையும், கற்பையும் இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பால் கிடைத்த வருமானத்தைப் பெற்றோர்களுக்கும் மனைவி மக்களுக்கும் செலவிடாமல்  மது குடித்து சீரழிப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதற்கு நிகராக ஜோதிடர்களுக்கு அள்ளிக்கொடுத்து சீரழிப்பவர்கள் அதை விட அதிகம்.

மனித சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிகப் பெரும் பாதிப்பிற்குள்ளாவதற்குக் காரணம் இந்த ஜோதிட நம்பிக்கை தான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் மிகமிக அதிகம்.

ஆனால் உண்மையான இறைவனிடமிருந்து அருளப்பட்ட திருமறைக்  குர்ஆன், இது மூடநம்பிக்கை என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன் மனித சமூகம் நிம்மதியான வாழ்வடைய திருக்குர்ஆன் தெளிவான வழிகாட்டுகிறது.

ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையை ஒழிப்பதற்குத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் அற்புதமான அடிப்படை ‘‘நாளை நடப்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறுயாரும் அறிய முடியாது” என்ற கொள்கைப் பிகரடனம்தான்.

27:65   قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.”(அல்குர்ஆன்:27:65.)

  وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்,  ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன்:6:59.)

பதிமூன்று நோன்பின் ஷரிஅத் சட்டம்.

ஸஃபர் முதல் பதிமூன்று தினங்கள்  மற்றும் இந்த மாதத்தின் கடைசி புதன் கிழமை பற்றி பல  மார்க்கத்திற்கு முரணான பித்அத்கள் சிலரிடம் காணப்படுகிறது,

உதாரணமாக, முதல் 13 தினங்களில்  கோதுமை வேகவைக்கப்பட்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சூரா முஸ்ஸமில் ஓதப்பட்டு, அவ்வெண்ணிக்கைக்கேற்ப மாவு உருண்டைகள் கடற்கரையில் க ரைக்கப்படுகின்றன. அவற்றை  மீன்கள்  உண்பதால், ஸஃபர் மாதத்தில் ஏற்படும் துர்சகுனம்,   பேரிடர்களும் இவற்றைச் செய்வதன் மூலம் தவிர்க்கப்படும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. பிரச்சனைகள் மற்றும் சோதனைகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும் அவற்றுக்கென்று குறிப்பிட்ட நாள் அல்லது மாதம் கிடையாது. குர்ஆன் அல்லது  ஃபாத்திஹா ஓதுவது ஒரு முஸ்தஹப்பானசெயலாகும், 

மேலும் இது ஒவ்வொரு மாதத்தின் எந்த தேதியிலும் அனைத்து வகையான ஹலாலான வாழ்வாதாரத்திற்காகவும் ஓதலாம்.

ஆனால் ஸஃபர் மாதத்தில் பதிமூன்று நோன்பு நோற்பதற்கோ அல்லது குர்ஆன்,பாத்திஹா ஓதி கோதுமை உருண்டைகளை கடற்கரையில் கரைப்பதற்கோ இஸ்லாத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.  

ஒடுக்கத்து புதன் எனும் ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை.

ஸஃபர் மாத பதிமூன்று தினங்களைத் தவிர, சஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமையை ஒடுக்கத்து புதன் என  பல தவறான பித்அத்களில் ஈடுபடுகின்றனர், அதாவது, சஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை இந்தியாவில் ஒடுகத்து புதன் எனும் பெயரில்  கொண்டாடப்படுகிறது. 

அன்று தங்களின் அலுவல்களுக்கு விடுமுறை விட்டு, பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்கின்றனர், பூரிகள் சமைப்பார்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள், இதற்கு அவர்கள் கூறும் காரணம்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தை தழுவிய அவ்வாண்டில் ஸஃபர் மாதம் நோய்வாய் படுகிறார்கள்.

கடைசி புதன் கிழமை எழுந்து  குளித்து விட்டு மதீனாவுக்கு வெளியே நடந்து சென்றார்கள் என்று கூறுகிறார்கள், இவை அனைத்தும் ஆதாரமற்றவை. , 

உண்மையில்  நபி (ஸல்) அவர்கள் அந்நேரம்  கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள்.

சஃபர் மாதத்தில், துர்சகுனம் என நம்புவதும், ஆபத்துகள், ஜின்களின் இடர்கள் நிறைந்த மாதம் என கருதுவதும் இஸ்லாத்திற்கு முரணான செயலாகும். 

அல்லாஹுத்தஆலாவின் களா-கத்ரு எனும் விதியில் நிர்ணையிக்கப்பட்டவைகளைத் தவிர காலம்,நேரம் எந்த மாற்றத்தையும் செய்திட இயலாது.சஃபர் மாதமும் ஏனைய மாதங்களைப் போலவே ஒரு மாதமாகும், ஒருவர் இந்த மாதத்தில் ஷரியாவின் சட்டங்களைக் கடைப்பிடித்தால், இந்த மாதம் அவருக்கு பாக்கியமாகும், 

இந்த மாதத்தில் பாவம் செய்தால், அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவானேயானால்,  அவன் பாவியாகிவிடுவான்.பாவமே மனிதனின் பெரும் துர்சகுனமாகும்.

இறுதியாக...

இஸ்லாமிய நெறியை பின்பற்றுவதை விட்டும் இஸ்லாமியர்கள் தூரமாகும் போது தானாகவே அவர்கள்

மூடநம்பிக்கைகளுக்கும், கெட்ட சகுனங்களுக்கும் பலியாகின்றனர். அவை ஈமானை  பலவீனப்படுத்தி வழிகேடர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது, (நவூதுபில்லாஹ்...)

அல்லாஹ் நம்மை தீயஅனாச்சாரங்களை விட்டும் பாதுகாத்து,இஸ்லாமிய நெறியை பின்பற்றி வாழும் நன்மக்களாக ஆக்கி அருள்வானாக!ஆமீன்..


வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...