Wednesday, 10 August 2022

ஜும்ஆ பயான் 12/08/2021

பவள விழா காணும் இந்தியா.

சுதந்திர தினம் 75

 اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏

 எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(அல்குர்ஆன் : 13:11)

"இந்திய சுதந்திர வரலாறு,இஸ்லாமியர்களின் குருதியால் எழுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள்,தங்களின் உயிர்,பொருள்,உடமைகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்கள்.

தங்களின் விகிதாச்சாரத்தை விட அதிகமாக  இந்நாட்டிற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள்.

ஏராளமான முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றது மட்டுமல்லாமல், தங்கள் அன்பான நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர்."

இதனை சொன்னவர் ஒரு சாதாரண இந்தியரோ, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு முஸ்லீம் அறிஞரோ கிடையாது, மாறாக புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த குஷ்வான் சிங் அவர்களால் பேசப்பட்டது.

(இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.)

டெல்லியின் இந்தியா கேட் மீது சுமார் 95,300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, அவர்களில் 61,945 பேர் முஸ்லிம்கள். அதாவது இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதிர்த்து போராடி தியாகம் செய்தவர்களில் 65% பேர் முஸ்லிம் விடுதலைப் போராளிகள்.

இப்படி இந்திய தேசிய விடுதலைக்காக தம் சதவிகிதத்தை விடவும் அதிகமாக தியாகம் செய்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுகின்றது.

சன்னஞ்சன்னமாக வரலாற்றை மாற்றி மறக்கடிக்கப்படுகின்றது.

சச்சார் அறிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆண்டுகளாக இஸ்லாமியர்கள், ஆட்சி,அதிகாரம்,கல்வி,உயர்பதவி, பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

"இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14% ஆக இருக்கும்போது, அவர்கள் இந்திய அதிகாரத்துவத்தில் 2.5% மட்டுமே உள்ளனர். [9] இந்திய முஸ்லிம்கள் உள்ள நிலையானது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிலைமைகளுக்கும் தாழ்ந்து இருப்பதாக"  சச்சார் குழு பாராளுமன்றத்தில்2006ல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் இஸ்லாமியர்களின் மதவழிப்பாட்டுரிமை,உணவு, வாழ்வாதாரம் தொடங்கி அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி  நாடற்ற அகதிகளாக்கும் சதிவேலைகளை கனகச்சிதமாக திட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தங்களின் ஆட்சியில் பொருளாதார பிரச்சனை ,சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,எல்லைபாதுகாப்பு மந்தநிலை,ஊழல்குற்றச்சாட்டு, கருப்புப்பண விவகாரம் என பல விமர்சனங்களை மடைமாற்ற,

மக்களை ஜாதி,மத ரீதியில் பிளப்படுத்தி,ஒற்றுமையை சீர்குலைத்து நாட்டை வன்முறை காடாக்கும் சதிவேலைகள் சமுதாயத்தை சீர்குலைத்து வருகின்றன.

மதவெறியை தூண்டி,பிரிவினையை வளர்ப்பதற்காகவே ஆங்கிலேயர்கள் வரலாற்றை புனைந்தார்கள்.

அதே ஆயுதத்தை இன்று மதவெறியர்களான பாசிச சக்திகள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

மிருக பலத்தோடு ஆட்சி அதிகாரம் தங்களின் கரங்களில் இருக்கும் மமதையில், இந்திய வரலாற்றை மாற்றுவோம் என்று கொக்கரிக்கின்றனர்.

இந்திய திருநாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் உண்மை வரலாற்றை, மற்ற சமயத்தவருக்கும்,நம் அடுத்த சந்ததிகளான இளையசமுதாயம்,மற்றும் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பும்,கடமையும் நமக்கு உண்டு.

சுதந்திர வரலாறு.

ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 75 வருடங்கள் கடந்து விட்டன. இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 75 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.

இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. வியாபாரத்திற்காக நாட்டில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்கள், உள்நாட்டு பிரச்சனைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். தாய்மண்ணை ஆக்ரமித்துள்ள அந்நியர்களிடமிருந்து நாட்டை மீட்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடினர். தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. வெள்ளையன் வருகைக்கு முன்னர் பல்வேறு இன, மொழி மக்களாகப் பிரிந்து வாழ்ந்திருந்த இந்தியர்கள், வெள்ளையனை எதிர்க்க, தங்களிடையிலான அனைத்து வேற்று விருப்பு, வெறுப்புகளையும் களைந்து ஓரணியில் நின்றுப் போராடினர். எனினும் எப்பொழுதும் போல் அற்பக் காசிற்காகவும் அடிமைப் பதவிக்காகவும் விலைபோன சில துரோகிகளும் நாட்டில் இருக்கவே செய்தனர்.

வரலாறு தெரியாத சமூகம் வரலாறு படைக்க முடியாது...

தனது சொந்த வரலாற்றை பற்றி அறியாதவன் தன் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கின்றான்.

எனவே இம்மண்ணுக்காக நம் மக்கள் ஆற்றிய தன்னிகற்ற தியாகத்தை அறிந்து,அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்.

தெற்கில் முதல் சுதந்திரப்போராட்டம்.

ஆங்கிலேயர்களுக்கெதிரான முதல் சுதந்திரப் போராட்டம் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் 1780 இல் தொடங்கப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் பீரங்கிகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த மாவீரன் திப்பு சுல்தான்.

மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்து இருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.

வடக்கே வங்கத்து சிங்கம் சிராஜ்-உத்-தவ்ளா.

தெற்கே தென்னகத்து வேங்கை திப்பு சுல்தான் என்றால் வடக்கே வங்கத்து சிங்கம் சிராஜ்-உத்-தவ்ளா...

ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தவ்ளா ஆவார்.

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்.

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்டசிராஜ்-உத்-தௌலா.

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்...!  இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. 

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால்  கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு.

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி  என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

மௌலவி அஹ்துல்லாஹ் ஷா

இந்தியாவின் முதல் ஆங்கிலேயர்களுக்கெதிரான போரை ஏற்பாடு செய்து வழிநடத்தியது யார் தெரியுமா? முதல் சுதந்திரப் போரை தொடங்கி வழி நடத்தியவர் மௌலவி அஹமதுல்லா ஷா என்கிற இஸ்லாமிய அறிஞர். 

அஹ்மதுல்லா ஷா இஸ்லாத்தினை பின்பற்றும் முஸ்லீமாகவும், மத ஒற்றுமையை பேனக்கூடியராகவும் இருந்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில், நானா சாஹிப் மற்றும் கான் பகதூர் கான் போன்றோர் இவருடன் இணைந்து போராடினார்கள்.

ஆங்கிலேயர்களால் ஒருபோதும் மௌலவியை உயிருடன் பிடிக்க முடியவில்லை. அவரைப் பிடிக்க 50,000 ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது. கடைசியில் பாவன் சிற்றரசின் ராஜா ஜகந்நாத் சிங் வஞ்சகமாக விருந்துக்கு அழைத்தது தெரியாமல் வந்த மௌலவியைக் கோட்டைக்குள் யானையுடன் நுழைந்தவுடன் கதவுகள் சாத்தப்பட்டன. வஞ்சகத்தினை உணர்ந்து வெளியேற எத்தணிக்கும் முன்பே ராஜா ஜகந்நாத் சிங் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தலை துண்டிக்கப்பட்டு பரங்கி மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய உடல் துண்டு துண்டாக்கப்பட்டு தீயிலிட்டு சுட்டு பொசுக்கினர். ராஜா ஜெகந்நாத் சிங்கிற்க்கு அறிவிக்கப்பட்ட பரிசு வழங்கப்பட்டது. அடுத்த நாள், மௌலவியின் தலை கோட்வாலியில் உள்ள காவல் நிலையம் முன்பு தூக்கிலிடப்பட்டது.  1857 ல் நடைப்பெற்ற இத்துயர சம்பவத்தினை மற்றொரு புரட்சியாளர் பஸல்-உல்-ஹக் கைராபாதி சாட்சி பகற்கின்றார்.

அப் போராட்டத்தில், ஏராளமான சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர், அதில் 90 சதவீதம் பேர் முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 

முதல் சுதந்திரப் போரட்ட மங்கை பேகம் ஹஜ்ரத் மகால்

ஜான்சி ராணி தனது வளர்ப்பு மகனுக்கு ஆட்சியைப் பெறுவதற்காகப் ஆங்கிலேர்களோடு போராடினார் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும்,                                                    ஆனால் பிரிட்டிஷ் தலைவன் சர் ஹெண்ட்ரி லாரன்சை தன் கையால் சுட்டுக்கொன்று அதற்காக சிறை சென்றவர் முதல் சுதந்திரப் போரட்ட மங்கை பேகம் ஹஜ்ரத் மகால் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

முதல் சுதந்திர உயிர் தியாகி.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இதனால், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட முதல் சுதந்திர முஜாஹித் என்ற பெருமையைப் பெற்றார். தூக்கிலிடப்படும் போது அஷ்பகுல்லா கானுக்கு 27 வயதுதான்.

காங்கிரஸின் முதல் தலைவர்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு இஸ்லாமிய மத (ஆலிம்)அறிஞரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த முஸ்லீம் தலைவராகவும் இருந்தார்.

வெள்ளையனுக்கு எதிராகவும் , காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர் அபுல் கலாம் ஆசாத்.

வள்ளல் MAM அமீர் ஹம்சா.

MAM அமீர் ஹம்சா இந்திய தேசிய இராணுவத்திற்கு (ஆசாத் ஹிந்த் ஃபோஜ்) (INA) மில்லியன் கணக்கான ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?. 

அவர் இந்திய தேசிய இராணுவத்தின் சுதந்திர நூலக வாசிப்பு பிரச்சாரத்தின் தலைவராக இருந்தார்.

 இப்போது இந்த சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மிகவும் வறுமையில் வாடுகிறது.

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானி.

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானியை இந்தியர்களுக்குத் தெரியாது. இந்திய தேசிய ராணுவத்துக்கு 1 கோடி ரூபாய் முழுவதையும் நன்கொடையாக வழங்கியவர் இவர்தான். அந்தக் காலத்தில் ஒரு கோடி ரூபாய் என்பது ஒரு சிறிய தொகை அல்ல. 

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானி தனது செல்வம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

சுபாஷ் சந்திரபோஸ் படையில் முஸ்லிம்கள்

ஷாநவாஸ் கான் ஒரு சிப்பாய், அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை அதிகாரி மற்றும் தளபதி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய சுதந்திர இந்தியாவின் நாடுகடத்தப்பட்ட அமைச்சரவையில் 19 உறுப்பினர்களில் 5 பேர் முஸ்லிம்கள். 

கொடையாளி பி அம்மாள்

பி அம்மாள் என்ற முஸ்லிம் பெண் சுதந்திரப் போராட்டத்திற்காக 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நன்கொடையை வழங்கியிருந்தார்.

கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டம்

கள்ளுக்கடைகளுக்கு எதிரான மகாத்மா காந்தியின் தர்ணா மற்றும் உள்ளிருப்புப் பிரச்சாரத்தில் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர், அவர்களில் 10 பேர் முஸ்லிம்கள்.

மன்னர் பஹதூர்ஷா

கடைசி முகலாய இளவரசரான பஹதூர் ஷா ஜாபர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக மிகுந்த வீரியத்துடனும் தீவிரத்துடனும் போராடிய முதல் இந்தியர் ஆவார். அவர்களின் மீது ஆங்கிலேயர்கள் 1857ல் தேசத்துரோக வழக்கில் கைது செய்து ரங்கூன் சிறையில் அடைத்தனர்.ஆயுள் தண்டனை கைதியாக இறுதி வரை சிறையில் இருந்து அங்கேயே மரணித்தார்.

"இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது "பஹதூர்ஷாவின் கல்லறையில் முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி எழுதிய வாசகம்.

மருதநாயகம்.

தமிழகத்தில்  வெள்ளையனுக்கு எதிராக 7 வருடம் தொடர் போர் செய்து வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் மிரள வைத்தவன் மாவீரன் இஸ்மாயில் மருதநாயகம் கான் சாஹிப் ஆவார்.

ஃபக்கீர் முகமது ரவுத்தர்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்திய கப்பற்படையை தோற்றுவித்த முதல் மாலுமியாக வ.உ.சிதம்ரனார் பிள்ளை என்பவரை  நாம் அனைவரும் அறிவோம்.  ஆனால் இந்த கப்பலை நன்கொடையாக வழங்கிய கப்பலுக்கு சொந்தக்காரர் ஃபக்கீர் முகமது ரவுத்தர் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

வ உ சி கைது செய்த வெள்ளையனிடம்  வ உ சி யை விடுதலை செய் என்று போராடி வெள்ளையன் துப்பாக்கி சூட்டால் உயிர் நீத்தவர் முகமது யாசின் என்ற இஸ்லாமியர்.

கொடிகாத்த குமரன்

கொடிகாத்த குமரன் அவரோடு சேர்ந்து கொடியை பிடித்து சிறை சென்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி , மைதீன்கான் . அப்துல் லத்தீப் , அப்துல் ரஹீம், வாவு சாகிப் , ஷேக் பாபா சாகிப் ஆகியவர்கள்.

வரலாற்று திரிப்பு

இந்திய விடுதலை போராட்ட காலத்தில் இந்த ஒற்றுமை இன்னும் வலுவடைந்தது. இந்து, முஸ்லிம், கிருத்துவம், சீக்கியம், பார்சி என அனைத்து மதங்களை பின்பற்றுவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.

குறிப்பாக முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம்தொட்டு விடுதலை கிடைக்கும்வரை தனது மக்கள் தொகைக்கு மேலான அளவில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஏனோ பலரது தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்படவில்லை. சில வரலாறுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக : “History of Freedom Struggle in India” என்ற நூலில் மாப்பிள்ளை புரட்சி பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “மாப்பிள்ளை கிளர்ச்சி ஒரு சுதந்திர போராட்ட கிளர்ச்சியே அல்ல. அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம். மேலும்

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை கேரளாவில் பின்னடையைச் செய்தது இக்கிளர்ச்சியே. அது மட்டுமல்லாமல் மலபார் முஸ்லிம்களும், மதவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தார்கள் –மதமாற்றம் செய்தார்கள் – இந்துப் பெண்களைக் கற்பழித்தனர் – இந்துக்களின் உடைமைகளைக் கொள்ளையிட்டனர் – வீடுகளை தீயிட்டனர்” என்று மாப்பிள்ளை கிளர்ச்சியை தவறாக மதிப்பீடு செய்கிறது.

ஆனால் இந்திய மண்ணின் விடுதலைக்காக தென் இந்தியாவில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிதான் மாப்பிள்ளை புரட்சி. கேரளாவின் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இப்புரட்சியை ஒடுக்க ஆங்கில அரசு மாப்பிள அவுட்ரேஜ் சட்டம், மாப்பிள்ளை கத்திச் சட்டம் போன்றவற்றை இயற்றி மலபார் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை திணித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா காந்தியடிகள் ஆதரித்த கிலாபத் இயக்கத்தின் எழுச்சியில்தான் மாப்பிள்ளை கிளர்ச்சி உருவாயிற்று.

இம்மாபெரும் தியாக வரலாற்றை தவறாக சித்தரித்த நூலுக்கெதிராக உண்மை வரலாற்றை பதிவு செய்யாமல் முஸ்லிம் சமூகம் இருந்து வருவது துரதிஸ்டவசமானது.

அதேபோல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துணைத் தலைவர் டாக்டர். ஹரி பிரசாத் சாஸ்திரி எழுதிய ஒரு வரலாற்று நூலில் இப்படி ஒரு திரிபு. “திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் பலாத்தகாரம் செய்தபோது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்”. இந்த நூலைத்தான் அன்று ராஜஸ்தான், பிஹார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். இதை படித்த திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பி.என்.பாண்டே அதிர்ந்தார். இதற்கான ஆதாரம் என்னெவென்று டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பல கடிதத்திற்கு பிறகு அவரிடம் இருந்து பதில் வந்தது. “மைசூர் கெசட்டில் எடுத்தேன்” என்று..... ........

உடனே மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிஜேந்திர நாத்ஸீல் அவர்களுக்கு இந்த செய்தி உண்மைதானா, கெசட்டில் அப்படித்தான் இருக்கிறதா என வினவ, அவரும் ஆராய்ந்து அலசிவிட்டு இதுமாதிரி சம்பவம் எதுவும் கெசட்டில் இடம்பெறவில்லை என்று பதில் தருகிறார்.

இந்த ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் இருந்த அந்த பொய்யான வரலாற்று பிழையை நீக்க வைக்கிறார் பி.என்.பாண்டே. இது சில உதாரணங்கள்தான். இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் தவறாக பதிவு

செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இதுபோன்ற வரலாற்று திரிபுகளுக்கு எதிரான குரல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து எழுவதில்லை. நடுநிலையான

ஆய்வாளர்களிடமிருந்து மட்டுமே எழுகின்றன.

இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் செய்த தியாகங்களை ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மதவெறி, தீவிரவாத, பாசிச சக்திகள் இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் சாதாரண இந்தியர்களின் கண்களிலிருந்து மறைத்துவிட்டனர்,

இது மட்டுமல்ல, இந்திய வரலாற்றையும் பாடப்புத்தகங்களில் திரிக்கப்பட்டுள்ளது.அரசியல் ஆதாயத்திற்காகவும்,வாக்குகளைப் பெறுவதற்காகவும், மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவும், வரலாறு திரித்து எழுதப்பட்டுள்து என்பதே உண்மை. 

தேசபக்தியுள்ள இந்தியர்கள், அரசியல் வாதிகளின் கபட நாடகத்திற்கு பலியாகாமல், வலுவான, நிலையான மற்றும் முற்போக்கான நாட்டிற்காக அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைக்க பாடுபட வேண்டும்.


வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 4 August 2022

ஜும்ஆ பயான் 05/08/2022

ஆஷூராவின்    சிறப்புகள்.

சிறந்த மாதம்.........

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

١- [عن أبي بكرة نفيع بن الحارث:] إنَّ الزَّمانَ قَدِ اسْتَدارَ كَهَيْئَتِهِ يَومَ خَلَقَ اللَّهُ السَّمَواتِ والأرْضَ، السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ، وذُو الحِجَّةِ، والمُحَرَّمُ، ورَجَبُ، مُضَرَ الذي بيْنَ جُمادى، وشَعْبانَ.

ஹஜ்ஜத்துல் வதாவில்' உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து 'ரஜப்' மாதம் ஆகும் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.                  (ஸஹீஹ் புகாரி) (4662)

அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1444 புதுவருடம் துவங்கி,புனித முஹர்ரம் மாதத்தின் சங்கைமிகு ஆஷுரா தினம் எதிர்வரவிருகின்றது.

அல்லாஹுதஆலா ஓர் ஆண்டிற்கு 12மாதங்களை நிர்ணையித்து,ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30நாட்களாக வரையறுத்தான்,அந்த மாதங்களில் சிலவற்றையும்,நாட்களில் சிலநாட்களையும் சங்கையாக்கிவைத்திருக்கின்றான்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். இதுவல்லாது பல சுன்னத்தான நோன்புகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளில் சிறந்ததாக ஆஷுரா நோன்பு அமைந்துள்ளது.

ஆஷூரா தினம்

புனித முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை ’’ عاشوراء ‘‘ஆஷுரா என்று சொல்லப்படுகின்றது.

அல்லாஹுதஆலா ஆஷூரா நாளில் தன் பிரத்யேகமான ரஹ்மத்தையும்,பரகத்தையும் அபரிமிதமாக அருளுகிறான்.

عن عائشة رضي الله عنها: (أنّ قريشاً كانت تصوم عاشوراء في الجاهليّة، ثمّ أمر رسول الله بصيامه، حتّى فرض رمضان، فقال رسول الله صلّى الله عليه وسلّم: من شاء فليصمه، ومن شاء فليفطره) رواه مسلم، وفي رواية للبخاري: (كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان، وكان يوماً تستر فيه الكعبة) أخرجه البخاري، ومسلم، وأبو داود، والترمذي.

ரமலான் மாத நோன்பு கடமையாகுவதற்கு முன்பு முஹர்ரம் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது ஃபர்ளாக இருந்தது.

ரமலான் மாத நோன்பு கடமையானதும், அண்ணலம் பெருமானார் ﷺ அவர்கள் ஆஷுரா நோன்பை சுன்னத் ஆக ஆக்கினார்கள்.

ஒரு ஹதீஸில்..

عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “صيام يـوم عاشوراء: أحتسب على الله أن يكفر السنـة التي قبله”رواه مسلم

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்:அபூகதாதா(ரலி)               நூல்: முஸ்லிம் 1977)

ஆஷூராவும், தவறானப்புரிதலும்.

சில முஸ்லிம்களின் தவறானப்புரிதல்,கண்மணி நாயகம் ﷺஅவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி)அவர்கள் கர்பலாவில் ஷஹீதாகக்கப்பட்ட நிகழ்வு,யதார்த்தமாக ஆஷூரா நாளில் நிகழ்ந்ததை வைத்து ஆஷூரா சிறப்புப்பெற காரணமே ஹுஸைன்(ரலி)அவர்களின் ஷஹாதத்தினால் தான் என தவறாக எண்ணுகின்றனர்.

நாயகம் ﷺஅவர்களின் காலத்திலிருந்தே ஆஷுராவை முஸ்லிம்கள் சங்கையாக கருதினர்.அந்நாளில் நோன்பு நோற்குமாறு நபிﷺஅவர்கள் கட்டளையிட்டுருக்கின்றார்கள்.

குர்ஆனிலும் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

ஹுஸைன் (ரலி)அவர்களின் ஷஹாதத்தோ நாயகம் ﷺஅவர்களின் வஃபாதிற்கு 50 ஆண்டுகளுக்கு பின் ஹிஜ்ரி 61ல் நிகழ்ந்தது.எனவே ஆஷூராவிற்கும்,ஹுஸைன் (ரலி)அவர்களின் ஷஹாதத்திற்கும் எந்த தொடர்புமில்லை.

ஆஷூரா நாளில் ஹுஸைன் (ரலி)அவர்கள் ஷஹீதாகி இருப்பது அன்னவர்ளின் சிறப்பை காட்டுகின்றதே ஒழிய அதனால் அன்நாளுக்கு சிறப்பு இல்லை.

ஆஷூரா சிறப்புப்பெற காரணம்.

ஆஷூரா ஏன் சிறப்பான நாள் என்ற உண்மைக்காரணத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஆனால் சில அறிஞப்பெருமக்களின் கூற்று:ஆஷூரா என்ற பெயரும் ,அந்நாளை அல்லாஹ் சிறப்பாக்கிய காரணமும்,

அல்லாஹ் அந்நாளில் பத்து நபிமார்களுக்கு தன் பிரத்யேகமான உதவிளால் சங்கைச்செய்தான்

1-ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்களின் தவ்பாவை வை ஏற்றுக்கொண்டது.

2-ஹழ்ரத் இத்ரீஸ்(அலை)அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியது.

3-ஹழ்ரத் நூஹ்(அலை)அவர்களின் கப்பல் ஜூதி மலையில் கரை ஒதுங்கியது.

4-ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் பிறந்ததும்,கலீலுல்லாஹ் خلیل ஆனதும்,நெருப்பு குண்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதும்.

5-ஹழ்ரத் தாவூத் (அலை)அவர்களின் தவ்பாவை வை ஏற்றுக்கொண்டது.

6-ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டது.

7-ஹழ்ரத் மூஸா(அலை)அவர்கள்

ஃபிர்அவ்ன் படையை விட்டும் பாதுகாக்க கடல் பிளந்தது.பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டது.

8-ஹழ்ரத் யூனுஸ்(அலை)அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியாக்கப்பட்டது.

9-ஹழ்ரத் சுலைமான்(அலை)அவர்களுக்கு ஆட்சி வழங்கப்பட்டது.

10-ஒரு அறிவிப்பின் படி,நபி ﷺஅவர்களின் பிறப்பு.

மேற்கூறிய அனைத்தும் ஆஷூரா தினத்தில் நிகழ்ந்தன.

இன்னொரு அறிவிப்பில்  உலகம் அழியும் கியாமத் தினம் ஆஷூராவில் நிகழும் என வந்துள்ளது.

இப்படி பல்வேறு நிகழ்வுகளை வைத்து இந்நாளை அல்லாஹ் சிறப்பாக்கிவைத்திருக்கின்றான் எனக் கூறப்பட்டாலும் உண்மை காரணத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஆஷூரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுரா நோன்பு எனப்படும்.

- حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى ، عَنِ ابْنِ عُيَيْنَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ :

مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ

ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.                          அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி-2006    

- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ

أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ.

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராக காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி), புகாரி-1960

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللهِ ، هُوَ ابْنُ الْمُبَارَكِ- قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ

كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து).  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புகாரி-1592

 – وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْحُلْوَانِىُّ حَدَّثَنَا ابْنُ أَبِى مَرْيَمَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ – رضى الله عنهما – يَقُولُ

حِينَ صَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ – إِنْ شَاءَ اللَّهُ – صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ ». قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّىَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம்-2088‌.

அல்லாஹ்வின் அருளையும்,பரக்கத்தையும் பெற்றுத்தரும் சிறப்புவாய்ந்த ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தான அமலாகும்.

عن ابن عباس رضي الله عنهما أنّه قال: (حين صام رسول ‏الله - صلّى الله عليه وسلّم - يوم عاشوراء، وأمر بصيامه،

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளையிட்டார்கள்’.                          (ஆதாரம்: புகாரி)

وعن أبي قتادة رضي اللَّه عنه ، أن النبي صلى الله عليه وسلم قال: " صيام يوم عاشوراء، أحتسب على اللَّه أن يكفر السنة التي قبله" .  أخرجه مسلم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும்’ எனக் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

யூதர்களுக்கு ஒப்பாகுவதை விட்டும் தடுத்தல்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا ؟ قَالُوا : هَذَا يَوْمٌ صَالِحٌ ، هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى، قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ "

நபிﷺஅவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். ‘இந்நாளின் சிறப்பென்ன?’ என்று யூதர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாங்கள் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

قال الرسول صلّى الله عليه وسلّم: (لئن بقِيتُ إلى قابلٍ لأصومَنَّ التاسعَ

மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம்  உயிரோடு  இருந்தால்  ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள்

அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி, முஸ்லிம்

 النبي ﷺ أنه قال: خالفوا اليهود صوموا يومًا قبله ويومًا بعده[1] وفي رواية أخرى: صوموا يومًا قبله أو يومًا بعده[2

இஸ்லாம் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட உன்னத சன்மார்க்கமாகும்,மனித குலம் வாழ்வில் வளம் பெறவும்,மறுமையில் ஈடேற்றம் பெறவும் இறைவனால் அருளப்பட்ட சிறந்த மார்க்கமாகும்.

அதனால் தான் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் இஸ்லாம் ஒரு சிறு காரியத்தில் கூட பிற மதத்திற்கு ஒப்பாகுவதை வெறுத்தார்கள்.

ஆஷூரா நாளில் நோன்புநோற்பதை சுன்னத் ஆக்கிய நபி ﷺஅவர்கள் யூதர்களுக்கு மாற்றமாக 9அல்லது 11 இரண்டில் ஒரு நாளை சேர்த்து இரண்டு நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

இஸ்லாத்தின் மிக முக்கிய கட்டளைகளில் ஒன்று, பிற மதத்திற்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:

من تشبه بقوم فهو منهم۔                                                  ابو داود، کتاب الباس، باب فی لبس الشهرة﴾

யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்-4031 (3512)

இஸ்லாமியர்களின் அடையாளமாக உள்ள தாடியும் கூட யூத,கிருத்துவர்களுக்கு மாறுசெய்வதற்காக சொல்லப்பட்ட கடமையே ஆகும்.

முஷ்ரிக்களுக்கு மாற்றாமாக மீசையை கத்தரிக்கும் படியும்,தாடியை அடர்த்தியாக வைக்கும் படியும் இஸ்லாம் ஏவுகின்றது.

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: "خَالِفُوا الْمُشْرِكِينَ، أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى"

முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்யுங்கள்.அதுப்போல் தலைப்பாகை அணியும் தொப்பியுடன் அணியுங்கள் காரணம் முஷ்ரிக்கள் தொப்பியின்றி தலைப்பாகை அணிவார்கள் என்கிறது இஸ்லாம்.

இப்படி சிறுசிறு காரியங்களில் கூட பிறமதத்தவருக்கு ஒப்பாகுவதை இஸ்லாம் வெறுக்கிறது.

நற்காரியங்களில் கூட அன்னியவர்களுக்கு ஒப்பாகுவதை இஸ்லாம் தடைசெய்திருக்க, இன்று இஸ்லாமியர்கள் ஃபேஷன் என்கிற பெயரில் நடை,உடை,பேச்சி,கலாச்சாரம் ஏன் சிகையலங்காரம் உட்பட அனைத்திலும் ஆங்கிலேயர்களையும்,சினமா பிரபலங்களையும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

(அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகாப்பானாக!ஆமீன்)

ஆஷூராவின் சிறப்பை கூறும் மற்றுமொரு நபிமொழி.

عن أبى هريرة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: «مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ» أخرجه البيهقى فى "شعب الإيمان

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தவர்களின் மீது விசாலமாக செலவிடுகின்றாரோ, அல்லாஹ் அவருக்கு வருடம் முழுவதும் செல்வத்தை விசாலமாக வழங்கி விடுகின்றான்.             அறிவிப்பவர் : அபூஹீரைரா                             நூல் : பைஹகி.

அல்லாஹ் தஆலா நம்மை ஆஷுரா தினத்தின் சிறப்பை பெற்றவர்களாக ஆக்கி வைப்பானாக! ஆமின்.


வெளியீடு : செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Thursday, 7 July 2022

ஜும்ஆ பயான்08/07/2022

அரஃபா தின எழுச்சி பேருரை.

  اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌  فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 5:3)

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள்,அரஃபா பெருவெளியில்  தங்களின் இறுதி ஹஜ்ஜில் உலக மாந்தர்களுக்கு ஆற்றிய நுபுவ்வத்தின் முடிவுரை,இறுதி சாசன உரை, தனக்குப் பின்னால் தன் உம்மத் பயணிக்கும் பாதையை தீர்மானிக்கக்கூடிய உரை,ஜாதி மதம் இனம் மொழி நிறம் என்கிற பெயரில் நடக்கும் வர்க்க பேதங்களுக்கு எதிரான உரை,மனிதநேயம் சமய நல்லிணக்கம் பெண்ணுரிமை அனாதை ஏழை எளியோர் அநீதமிழைக்கப்பட்டோர் என ஒட்டு மொத்த உலகத்தவரின் உரிமைகளை பேசிய உரை,நபிகளார் தன் வாழ்வில் நிகழ்த்திய உரைகளிலே மிக முக்கிய உரை அரஃபா பேருரையாகும்.

முன்னுரையும், முடிவுரையும்....

நபித்துவத்தின் நான்காம் ஆண்டு: வெளிப்படையாகப் பரப்புரை செய்யும்படி இறைவனிடமிருந்து கட்டளை வந்தது. சபா மலைக் குன்றில் ஏறி நபிகளார் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்கள்.அதுவே நபியின் முதலுரை,முன்னுரை எனலாம்.

நபித்துவ வாழ்வில் 23 ஆண்டுகள் கழித்து நபிகளார் தனது இறுதி ஹஜ்ஜில் அரஃபாவில் பிரியா விடையாக ஆற்றிய உரை முடிவுரை.

நாயகம் (ஸல்)அவர்கள்  முதல் அழைப்பு பணியை மக்களிடம் துவக்கிய போது தங்களின் நுபுவ்வத்திற்கு தங்கள் வாழ்வையே சான்றாக காட்டினார்கள்.

இறுதி ஹஜ்ஜில் இறுதிப் பேருரையில் தங்களின் நுபுவ்வத் பணியின் பொறுப்புகளை முழுமையாக,சரிவர நிறைவேற்றியதற்கு சான்றாக தாங்கள் உருவாக்கிய இஸ்லாமிய சமூகத்தை இலட்சதிற்கும் அதிமான ஸஹாபாத் தோழர்களை சாட்சிகளாக ஆக்கி சென்றார்கள்.

அதுவரை தன் தூய வாழ்வையே சான்றாக காட்டிய,தன் பொறுப்புகளை சரிவர நிறைவுச் செய்து அதற்கு சன்றாக பெரும் சமூகத்தை சாட்சியாக ஆக்கி சென்ற எந்த தீர்க்கதரிசியையோ,தலைவரையோ வரலாறு கண்டதில்லை.

ஹஜ்ஜதுல் விதாஃ எனும் இறுதி ஹஜ்.

ஞானப் பேரொளி கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் துல்கஃதா மாதத்தில் (கிபி 632)ஹஜ்ஜுக்கான அறிவிப்பு செய்கிறார்கள்.

இதுவே நாயகம் (ஸல்)அவர்களின் வரலாற்றில் நிகழ்ந்த இறுதி ஹஜ் ஆகும். முதலாவதும் கடைசியுமான இந்த ஹஜ்ஜிக்கு "ஹஜ்ஜதுல் விதாஃ" எனப் பெயராகும்.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு ஆற்றிய வரலாற்று சிறப்பு வாய்ந்த உரையே "அரஃபா பேருரை" ஆகும்.

இந்த ஹஜ்ஜிலே நாயகம் (ஸல்)அவர்களோடு இலட்சத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் பங்கேற்றார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் துல்கஃதா பிறை 24ஆம் நாள் குளித்து முடித்து,லுஹர் தொழுதுவிட்டு மதீனாவிலிருந்து புறப்படுகிறார்கள்.ஒன்பது நாள் பயணம் செய்து,துல்ஹஜ் பிறை நான்காம் நாள் திங்கட்கிழமை மக்கா சென்று அடைகிறார்கள். காபாவை கண்டதும் நபி ஸல் அவர்கள் "இறைவா!இவ்வில்லத்தை அதிகம் கண்ணியம் மிக்கதாகவும்,சிறப்புடையதாகவும் ஆக்கு "என துஆ செய்கிறார்கள்.

கஃபாவை தவாஃப் செய்துவிட்டு,ஸஃபா மர்வாவில் ஸஈ செய்துவிட்டு, துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் எல்லா இஸ்லாமியர்களையும் மினாவில் தங்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

அடுத்த நாள் நபியவர்கள் தங்களின் ஒட்டகத்தில் சவாரி செய்து,அரஃபா மைதானம் நோக்கி செல்கிறார்கள்.

 அங்குதான் நாயகம் (ஸல்) அவர்கள் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த,பிரசத்தி பெற்ற உரையை நிகழ்த்துகிறார்கள்.அவ்வுரை ஒட்டுமொத்த இஸ்லாமிய போதனைகளின் சாராம்சமாகும்.

அரஃபா பேருரை..

அரபாவில் "நமிரா" என்ற இடத்தில் அவர்களுக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தன் கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்த செய்து அதில் வாகனித்து "பத்னுல் வாதி" என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் அவர்களை சுற்றி ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் முஸ்லிம்கள் அல்லது ஒரு லட்சத்து நாற்பத்தி நான்காயிரம் முஸ்லிம்கள் ஒன்றுகூடி இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி ஸல்லல்லாஹ் உரையாற்றினார்கள்.

மக்களே மிகக் கவனமாக கேளுங்கள் ஏனெனில் இந்த ஆண்டிற்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்கு தெரியாது.

 மக்களே இந்த துல்ஹஜ் மாதத்தையும் இந்த பிறை9 ஒன்பதாம் நாளையும் இந்த மக்கா நகரையும் புனிதமாக கருதுவது போல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.

அநீதம் செய்ய வேண்டாம்...

 ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின்  தண்டனையை அவருக்கு வழங்கப்படும். அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்தில் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

பழிக்குப்பழி வேண்டாம்

அறிந்துகொள்ளுங்கள் அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் என் கால்களுக்குக் கீழ் புதைத்து அளித்துவிட்டேன். அறியாமைக்கால கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிடவேண்டும். முதலாவதாக என் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காக பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக்கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

அல்லாஹ்வை வழிபடுங்கள்....

மக்களே எனக்குப்பின் எந்த ஒரு நபியும் இறைத்தூதரும் இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். மேற்கூறிய நற்செயல்களால் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்!! நிச்சயமாக சைத்தான்  இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதில்   மிக எளிதாக கருதும் செயல்களில் அல்லாஹ்விற்கும் மாறு செய்து சைத்தானுக்கு வழிபாட்டுவிடுவீர்கள் அதனால் அவனோ மகிழ்ச்சி அடைவான்.

அல்லாஹ் நீயே சாட்சி

மக்களே அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தை தவிர வேறு எந்த வகையிலும் ஓர் அரபி அரபி அல்லாதவரை விட . ஓர் அரபி அல்லாதவர் அரபியை விட .ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட. ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட . எந்தவித சிறப்பும் மேன்மையும் இல்லை.

 மறுமையில் என்னை பற்றி உங்களிடம் விசாரிக்கும்போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் என்று கேட்டார்கள். கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு எடுத்துரைத்தீர்கள். நிறைவேற்றினார்கள். நன்மையை நாடிநீர்கள். என நாங்கள் சாட்சி கூறுவோம் என்றார்கள். நபியவர்கள் தங்கள் ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி பின்பு மக்களை நோக்கி திரும்பி அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி என்று மூன்று முறை கூறினார்கள்.
 இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். ஏனெனில் இச் செய்தியை கேள்விப்படும் அவர்களில் சிலர் நேரடியாக கேட்பவர்களை விட நன்கு விளக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் உரையை முழுமையாக முடித்த போது. இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம் உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக பொருந்திக் கொண்டோம்(அல்குர்ஆன் 5.3) 
என்ற வசனம் இறங்கியது.

கண்கலங்கிய உமர் (ரலி) அவர்கள்....

இந்த வசனத்தை கேட்ட உமர் ரலி கண் கலங்கினார்கள் நபி (ஸல்) உமரே! நீங்கள் அழுவதற்கு காரணம் என்ன என வினவினார்கள். அல்லாவின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம் இப்பொழுது மார்க்கம் முழுமையாகி விட்டது. முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன் என உமர் (ரலி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) நீங்கள் உண்மைதான் கூறினீர்கள் என்றார்கள்.

யூதர்களின் கவலை....


தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்” என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்,

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌

இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன்.
(அல்குர்ஆன் : 5:3)
எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், “அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபாத்” பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5742.
(அர்ரஹீக் அல்மக்தூம் என்ற நூலிலிருந்து)


நிறைவு பேருரை....

وَقَالَ « إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِى شَهْرِكُمْ هَذَا فِى بَلَدِكُمْ هَذَا أَلاَ كُلُّ شَىْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَىَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ 

يَا أَيُّهَا النَّاسُ ، أَلاَ إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ ، أَلاَ لاَ فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ ، وَلاَ لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ ، وَلاَ أَحْمَرَ عَلَى أَسْوَدَ ، وَلاَ أَسْوَدَ عَلَى أَحْمَرَ ، إِلاَّ بِالتَّقْوَى أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، 

கண்மணி நாயகம்  (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;அறியாமைக்கால அனைத்து பழக்கவழக்கங்களும் என் பாதத்திற்கு கீழே புதைந்து விட்டன.

மக்களே!நிச்சயமாக உங்களின் அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான்.உங்களின் தந்தையும் ஒருவராக இருக்கிறார். ஒரு அரபிக்கு அரபி அல்லாதவரை விடவோ,ஒரு அரபி அல்லாதவருக்கு  அரபியை விடவோ எந்த சிறப்பும் கிடையாது.

ஒரு வெள்ளையனர் கருப்பரை விட சிறப்பானவர் அல்லர். 

சிறப்பின் அளவுகோல் இறையச்சத்தில் உள்ளது.

அனைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள் ஆவார்கள்.

அடிமைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் உண்ணுவதையே அவர்களுக்கும் கொடுங்கள்.நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் கொடுங்கள்.

فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ أَلاَ وَإِنَّ كُلَّ دَمٍ كَانَ فِى الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ وَأَوَّلُ دَمٍ أَضَعُ مِنْ دِمَاءِ الْجَاهِلِيَّةِ دَمُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ كَانَ مُسْتَرْضِعًا فِى بَنِى لَيْثٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ 

அறியாமைக்கால கொலைகளுக்கு பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும்.அனைத்தையும் நான் மன்னித்து விட்டேன்.முதலாவதாக எனது குடும்பத்தில் கொல்லப்பட்ட ராபிஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காக பழிவாங்குவதை நான் விட்டுவிட்டேன்.

أَلاَ وَإِنَّ كُلَّ رِبًا فِى الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ غَيْرَ رِبَا الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ

அறியாமைக்கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது.முதலாவதாக எனது குடும்பத்தில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு உரித்தான  வட்டியை  முழுவதுமாக தள்ளுபடி செய்கிறேன்.

أَلاَ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلاً أَلاَ إِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلاَ يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلاَ يَأْذَنَّ فِى بُيُوتِكُمْ مَنْ تَكْرَهُونَ أَلاَ وَإِنَّ حَقَّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِى كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ »

மக்களே!பெண்களின் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.உங்களுக்கு அவர்களிடம் சில உரிமைகள் இருக்கின்றது.அவர்களுக்கு உங்களிடம் சில உரிமைகள் இருக்கின்றது.அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِى بَلَدِكُمْ هَذَا فِى شَهْرِكُمْ هَذَا أَلاَ لاَ يَجْنِى جَانٍ إِلاَّ عَلَى نَفْسِهِ وَلاَ يَجْنِى وَالِدٌ عَلَى وَلَدِهِ وَلاَ وَلَدٌ عَلَى وَالِدِهِ أَلاَ إِنَّ الْمُسْلِمَ أَخُو الْمُسْلِمِ فَلَيْسَ يَحِلُّ لِمُسْلِمٍ مِنْ أَخِيهِ شَىْءٌ إِلاَّ مَا أَحَلَّ مِنْ نَفْسِهِ أَلاَ

எவ்விதம் நீங்கள் இந்த மாதத்தையும் இந்த இடத்தையும் இந்த நாளையும் கண்ணியப்படுத்துகிறீர்களோ, அவ்விதமே உங்களின் உயிரும் உடமைகளும் அடுத்தவரின் மீது ஹராம் ஆகும். எப்பொருள் எவர் கைவசம் உள்ளதோ,அது அடுத்தவருக்கு ஹராமாகும். மனமுவந்து கொடுத்தாலே தவிர!

நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் சொன்னார்கள்;நான் உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கிறேன்.அதனை நீங்கள் உறுதியாக பற்றி பிடிப்பீர்களேயானால் வழி தவற மாட்டீர்கள்.அது அல்லாஹ்வின் வேதமாகும்.

« يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَإِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِىٌّ مُجَدَّعٌ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا مَا أَقَامَ لَكُمْ كِتَابَ اللَّهِ 

மக்களே!உங்களுக்கு அபிசீனிய நாட்டின் ஒரு கறுப்பின அடிமை  தலைவராக ஆனாலும், அவர் இறை வேதத்தின் வழியில் உங்களை வழி நடத்தினால் அவருக்கு கட்டுப்படுங்கள். 

قَالَ: «اعْبُدُوا رَبَّكُمْ، وَصَلُّوا خَمْسَكُمْ، وَصُومُوا شَهْرَكُمْ، وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ، وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ

உங்களின் ரப்பை வணங்குங்கள்.தொழுகுங்கள். நோன்பு வையுங்கள்.எனது கட்டளைகளை பின்பற்றுங்கள். நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள். 

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;அமலில் மனத்தூய்மை முஸ்லிம்களுக்கு சிறந்ததாகும்.ஜமாஅத்தில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருப்பது உள்ளம் பரிசுத்தமாக இருப்பதன் அடையாளமாக இருக்கின்றது.

இந்த உரையின் இறுதியில் மக்களை நோக்கி "இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்." என்று கூறியதாக (ஸஹீஹுல் புகாரி) பதியப்பட்டுள்ளது.

புனித மாதங்கள்

அரபுகள்,சில பழக்கவழக்கங்களை தவிர பெரும்பாலும் ஹழ்ரத் இப்ராஹீம் (அலைஹி)அவர்களின் வழிமுறையின் படியே ஹஜ் செய்து கொண்டிருந்தனர்.அவற்றில்  ஹஜ் காலங்களில் இரத்தம் ஓட்டுவது ஹராமாக இருந்தது.எனவே அரபுகள் ஹஜ் காலங்களில்  போர் செய்வதை தடை செய்திருந்தனர்.

இஸ்லாம் வந்ததற்கு பின்னால் ஹஜ் அதன் தூய வடிவில் முழுமை பெற்ற போது, நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்;வருடத்தில் நான்கு மாதங்கள் (போர் செய்வது ஹராமான) சங்கையான மாதங்களாகும்.அவற்றில் தொடர்ந்து வரும் துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம் ஆகிய 3 மாதங்களும்,நான்காவது ரஜபு மாதமும் ஆகும்.  

உலகில் நீதி நேர்மை இன்னும் நம்பிக்கை நாணயம் ஆகியனவற்றில் சாரம்சம் இந்த மூன்று விஷயங்களில் இருக்கின்றன.(அவை)உயிர், பொருள் மற்றும் அடுத்தவர்களின் பாதுகாப்பு. (ஆகிய மூன்று விஷயம்) 

புனிதம் பேணுக!

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இன்னும் தெளிவான வார்த்தைகளில் தங்களின் பிரசங்கத்தை தொடர்ந்தார்கள்;

1742- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ   عَنْهُمَا ، قَالَ

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ أَفَتَدْرُونَ

أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَلَدٌ حَرَامٌ أَفَتَدْرُونأَيُّ شَهْرٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهْرٌ حَرَامٌ قَالَ : فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا 

அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள். என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும். பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                              (நூல்:ஸஹீஹ் புகாரீ1739.அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள்) 

 கண்மணி நாயகம் ஸல் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாஃ பிரசங்கத்தில் மனிதவாழ்வின் அடிப்படைகளான عبادات ، வணக்க வழிபாடு معاشرت வாழ்க்கைமுறை معاملات கொடுக்கல் வாங்கல் اخلاق குணநலன்கள் ஆகிய நான்கின் சீர்திருத்தத்தை  பேசியதோடு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.  

பகைமை பாரட்டாதீர்...

அறியாமைக்கால அனாச்சாரங்களையும், அட்டூழியங்களையும் ஒழித்தார்கள். அரபுகள் மற்ற இனத்தவர்களை இழிவாக கருதினார்கள்.அவர்களிடம்  மற்றவர்களின் உயிருக்கோ பொருளுக்கோ எந்த  மதிப்பும் கிடையாது.அடுத்தவரின் பொருளை அபகரிப்பதும்,அடுத்தவரோடு சண்டையிடுவதும் கொலை செய்வதும் அவர்களின் வழமையாக இருந்தது.

நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிப்பேருரையில்:மக்கள் தங்களுக்கிடையில் நல்ல முறையில் நடந்து கொள்வதன் அவசியத்தை உணர்த்தினார்கள்.பகைமை வளர்த்துக் கொள்வதும்,கொலை செய்து கொள்வதும் ஹராம் என பிரகடனப்படுத்தினார். 

நீங்கள் இம்மாதத்தையும் இன்நாளையும் இவ்விடத்தையும் புனிதமாக கருதுவதை போல  உங்களின் உயிரும்,உடமைகளும் புனிதமானவைதாகும். உங்களில் ஒருவர் மற்றவரின் புனிதத்தை பேணுங்கள்.

உங்களுக்கிடையில் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு நான் உத்தரவிடுகிறேன். ஒரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்.எனவே உங்களுக்கிடையில் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

அறியாமைக்கால அரபிகளிடம் பழிக்குப் பழி வாங்குவது எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.ஒன்றுமில்லாத காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அறியாமைக் காலத்தில் இருந்த அனைத்து பழிவாங்குதலயும் நீங்கள் விட்டுவிட வேண்டும்.எனக்கூறி முதலில் தங்களின் குடும்பத்தவர்களி லிருந்து பழிவாங்குதலை மன்னித்தார்கள். இந்த நடவடிக்கை அரபிகள் ஆட்சி அதிகாரம் கைப்பற்றுவதில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இனி அரபு தேசம் மக்கள் வாழ்வதற்கு தகுதியான நிம்மதியான இடம் என்பதனை கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

வட்டியை விட்டொழியுங்கள்..

அறியாமை கால அரபுகளிடம் வட்டி எனும் கொடிய பழக்கம் வேருன்றி இருந்தது.யூதர்களின்  பழக்கமான வட்டி,சிறுக சிறுக அரபகம் முழுவதும் பெரும் நோயாக பரவியிருந்தது.

வட்டியின் பெயரால் பல அத்துமீறல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். வட்டிக்கு பகரமாக ஏழைகளை அடிமைகளாக்கி கொண்டனர்,  மற்ற குலத்தவர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடமானமாக எடுத்துக்கொண்டனர்.

இந்த அட்டூழியங்களுக்கு முற்றிபுள்ளி வைத்திட, கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விதமான வட்டியையும் தடை செய்தார்கள்.முதலாவதாக தங்களின் குடும்பத்தவர்களுக்கு உரித்தான வட்டியை தள்ளுபடி செய்தார்கள். 

பெண்களை மதிப்புடன் நடத்துங்கள்!

அறியாமைக்கால அரபியர்கள் பெண்களை அடிமைகளை விடவும் இழிவாக நடத்தினார்கள்.பெண்களை போகப்பொருளாக கருதினார். ஒரு வீட்டில் தந்தை இறந்துவிட்டால் அவரின் மகன் அவனின் தாயைத் தவிர தந்தையின் மற்ற மனைவியர்களை அடிமைகளாக ஆக்கி கொள்வார்.  

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியாக ஏற்று இருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை யாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக ஆண்களும் பெண்களும் சம உரிமை உடையவர்கள் என நாயகம் ஸல் அவர்கள் சூளுரைத்தார். 

அடிமைகளிடம் அன்புக்காட்டுங்கள்..

அறியாமைக் காலத்தில் அடிமைகளின் நிலை மிக மோசமாக இருந்தது.      நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;அடிமைகளும் அல்லாஹ்வின் படைப்பினர் தாம். 

ஆதம் (அலை)அவர்களின் பிள்ளைகள் தாம்.உங்களுக்கு இருப்பதைப் போன்ற உணர்வுகள் அவர்களுக்கும் இருக்கின்றது.எனவே அவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் உண்ணுவதை அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்.நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்த வையுங்கள். இன்றுள்ள அனைத்து வேற்றுமைகளையும் தடை செய்தார்கள். 

ஜைத் இப்னு ஹாரிஸா(ரலி)உஸமா இப்னு ஜைது ஆகிய இரண்டு அடிமைகளை இஸ்லாமியப் படைகளுக்கு தலைவர்கள் ஆக்கி அதனை நடைமுறைப்படுத்தி காட்டினார்கள்.

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்கள்!

இன்று உலகில் நிகழக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம், இனம் மற்றும் நிற வேற்றுமைகளாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை குறிப்பாக வெள்ளையர்களின் கோட்டைகளாக உள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் நிறவெறி உச்சத்தில் இருக்கின்றது.அவர்கள் கருப்பின நீக்ரோக்களை மனிதர்களாகக்கூட மதிப்பது கிடையாது.அவர்களின் மீது மனித உரிமை அத்துமீறல்களை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வகையான அனைத்து மத இன நிற மொழி பேதங்களை நாயகம் (ஸல்)அவர்கள் தடை செய்தார்கள். அல்லாஹ்விடம் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் ஆவார்கள்.அரபியை விட அஜமியோ,அஜமியை விட அரபியோ எவ்வகையிலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் கிடையாது. அல்லாஹ்விடம் கண்ணியம், தக்வா எனும் இறையச்சத்தில் உள்ளது. 

நபி (ஸல்) அவர்களின் இந்த போதனையை உலகில் நடைமுறைப்படுத்தினால் அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். 

தலைமைக்கு கட்டுப்படுங்கள்..

எந்த அரசும்,மதமும் தலைமைக்கு கட்டுப்படாமல்,ஓரணியில் ஒன்று படாமல் முன்னேறமுடியாது.  இதனை இஸ்லாமியர்களுக்கு உணர்த்தவே தலைமைக்கு கட்டுப்படுதலை வலியுறுத்தினார்கள். மூக்கு அறுபட்ட அபீஸீனாவை சார்ந்த கறுப்பினத்தவர்,குர்ஆன்,ஹதீஸ் வழியில் உங்களை வழிநடத்தி தலைமை தாங்கினால் அவருக்கும் நீங்கள் கட்டுப்பட வேண்டும்.

ஒற்றுமையை பேனுங்கள் .....

ஓர் சமூகம் உயர வேண்டுமானால் ஓரணியில் ஒன்றுபட வேண்டும்.குடும்ப பெருமை,கோத்திர பெருமை,வசதிவாய்ப்புகளை வைத்து எந்த சமூகமும் முன்னேற முடியாது.

இதனாலே நாயகம் (ஸல்)அவர்கள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அமலில் மனத்தூய்மை முஸ்லிம்களுக்கு சிறந்ததாகும்.ஜமாஅத்தில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருப்பது உள்ளம் பரிசுத்தமாக இருப்பதன் அடையாளமாக இருக்கின்றது.

முறைதவறி நடக்காதீர்கள்!..

சமூகத்தில் தனிமனித ஒழுக்கம்,சுயகட்டுப்பாடு அவசியம் அது இல்லையெனில் சமூக அமைப்பு சீர்க்கெட்டுவிடும்.

இன்று மேற்கத்திய நாடுகளில் சுதந்திரம் என்கிற பெயரில் தனிமனித ஒழுக்கமும்,சுய கட்டுப்பாடும் இல்லாமல் போனாதால் விபச்சாரம்,ஓரினச்சேர்கை,பாலியல் அத்துமீறல்கள் அதிகமாகி சமூக அமைப்பே சீர்குழைந்துப் போய் இருப்பதை கணலாம். விளைவு தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் அந்நாடுகளில் அதிகமாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விதமான சீர்கேடுகளை விட்டொழிக்கும் படி நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ قَالَ

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ : إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ أَعْطَى لِكُلِّ ذِي حَقٍّ حَقَّهُ ، فَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ ، الوَلَدُ لِلْفِرَاشِ ، وَلِلْعَاهِرِ الحَجَرُ ، وَحِسَابُهُمْ عَلَى اللهِ ، وَمَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ التَّابِعَةُ إِلَى يَوْمِ القِيَامَةِ ، لاَ تُنْفِقُ امْرَأَةٌ مِنْ بَيْتِ زَوْجِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

முழுமைப் பெற்ற மார்க்கம் இஸ்லாம்...

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّى فَمَا أَنْتُمْ قَائِلُونَ ». قَالُوا نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ. فَقَالَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ وَيَنْكُتُهَا إِلَى النَّاسِ « اللَّهُمَّ اشْهَدِ اللَّهُمَّ اشْهَدْ ». ثَلاَثَ مَرَّاتٍ

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

‘இஸ்லாம் முழுமையாகி விட்டது!’ இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ்வருமாறு இறைவசனம் இறங்கியது:

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌  فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)   (அல்குர்அன் 5:3)

இந்நிகழ்விற்கு பின்னால் நபியவர்களுக்கு வஹி வருவது நின்று விட்டது.ஏனெனில்  அவர்களின் நுபுவ்வத்தின் நோக்கம் பூர்த்தியாகி விட்டது.(நூல்:ஸிஹாஹ் ஸித்தா,இப்னு ஹிஷாம்,தாரீக் தப்ரீ)

நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு லுஹர்,அசர் தொழுகைகளை ஒன்றாக சேர்த்து தொழுதுவிட்டு கிப்லாவை முன்னோக்கி வெகுநேரம் துஆவில் ஈடுபட்டார்கள்.

சூரியன் மறைந்ததற்குப்பின்னால் முஸ்தலிபாவில் மக்ரிப்,இஷா தொழுகைகளை ஒன்றாக சேர்த்து தொழுதார்கள். இரவு ஓய்வெடுத்துவிட்டு பஜர் தொழுகை அதற்குப்பின்னால் சூரியன் உதயமாவதற்கு முன் மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் மக்கள் நபியவர்களிடம் ஹஜ் சம்பந்தமான மஸாயில்களை வினவினார்கள்.

يَقُولُ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَرْمِى عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ وَيَقُولُ لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّى لاَ أَدْرِى لَعَلِّى لاَ أَحُجُّ بَعْدَ حَجَّتِى هَذِهِ

அப்போது நபி (ஸல்) அவர்கள்  சொன்னார்கள்;ஹஜ்ஜின் மஸாயில்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இதற்குப் பின்னால் எனக்கு இரண்டாவது முறை ஹஜ்ஜிக்கான வாய்ப்பு வராது. (நூல்:ஸஹீஹ் முஸ்லீம்)

இஸ்லாத்திற்கு முன் உலகில் பெரும் பெரும் மதங்கள் தோன்றியுள்ளன.அவற்றை தோற்றுவித்தவர்கள் அதனை முழுவடிவமாக்கி தன் சமூகத்திற்கு சமர்பித்து சென்றதாக சரித்திரம் இல்லை.

ஆனால் நாயகம் (ஸல்)அவர்கள் இஸ்லாமிய மார்கத்தை அறிமுகப்படுத்தி,அதனை முழுவடிவமாக்கி அதனை பெரும் சமூகத்திடம் முழுமையாக ஒப்படைத்து விட்டு,அதற்கு இலட்சத்திற்கும் அதிகமான அசசமூகத்தையே சட்சியாக்கிவிட்டு சென்றார்கள்.

சிந்திந்துப்பாருங்கள்!முழு உலக மக்களுக்கே நேர்வழிக் காட்டும் உயர்ந்த தத்துவங்களை நாயகம் (ஸல்)அவர்கள் கூறிச்சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இஸ்லாமிய சமூகம் அதனை விட்டுவிட்டு தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டும்,ஆட்சிஅதிகாரம்,உலக ஆசைகளுக்காக பிளவுப்பட்டும் நிற்கதியாக நிற்கின்றது.

அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகாப்பானாக!நாயகம் (ஸல்)அவர்களின் வழியில் ஓரணியில் ஒற்றுமையாக நம்மை ஆக்கி அருள்வானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...