Friday, 18 March 2022

பராஅத் பயான் 18/03/2022.

 தலைப்பு:

பாக்கியம் நிறைந்த பராஅத் இரவு 2022.

 புனிதம் மிக்க ஷஃபான் மாதத்தின் பாக்கியங்கள் நிறைந்த இரவே "ஷபே பராஅத்"  ஆகும்.

   ஷப் شب என்றால் ஃபார்ஸி மொழியில் இரவு என்றுப் பொருள்.

பராஅத் برأتஎன்றால் "விடுதலைப் பெறுவது""விடுதலை தருவது"என்று பொருளாகும்.

இப்புனித இரவிலே அல்லாஹுதஆலா ஏராளமான முஸ்லிம்களுக்கு நரகவிடுதலை அளிக்கின்றான் என்பதாலும், இன்னும் இவ்விரவிலே தவ்பா செய்யக்கூடடிய முஸ்லீம்களுக்கு பாவமீட்சி வழங்கப்படுவதாலும் இந்த இரவுக்கு برأت பராஅத் என்று பெயராகும்.இன்னும் لیلتہ المبارکہ பரகத் பொருந்திய இரவு என்றும், விதி நிர்ணையிக்கப்படுவதால்    لیلتہ الصکஎன்றும்,அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குவதால் لیلتہ الرحمتہ என்றும் பெயர்கள் உள்ளன.

ஷஃபான் மாதத்தை பற்றி  ஷைகுனா அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்)

இம் மாதத்தில் ஒரு மனிதன் தன் பாவத்தை நினைத்து வருந்தி நல் அமல்கள் செய்தால் இந்த 10 தன்மை அந்த மனிதனிடம் ஏற்படும்.

1) رقة மன இலகள்.

மனிதனின் உள்ளம் கடினமானதாக இருக்கக் கூடாது. மாறாக ஒரு முஃமினின் உள்ளம் இலகியதாகவும், பாசமுள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டும் அது இந்த மாதத்திலே கிடைக்க பெறுகிறது.

2) اللين فى الخلق குணத்தில் மென்மை

குணத்திலே மென்மையான தன்மை ஏற்படுவதற்கும் இம்மாதத்தின் அமல்கள் காரணமாக உள்ளன.

3) القوة في الطاعة  வழிபாட்டில் உறுதி.

வழிப்படுவதிலே, வணக்கங்கள் செய்வதிலே சக்திகள் பிறக்கின்றது.

4) الصاخة في النفس ஆன்மாவில் மென்மை.

நப்ஸ் என்று சொல்லப்படும் ஆன்மாவிலே ஒரு மெல்லிய தான தன்மை மிருதுவான தன்னம மனிதனுக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அந்த நஃப்ஸ் நல்ல அமல்கள்  செய்வதற்கு ஊக்க முடையதாக ஆகிறது.

5) السقاوة في العمل 

அமலிலே தெளிவான நிலை ஏற்படுகிறது.

6)الحركة في الخير

 நன்மையான செயல்களிலே ஈடுபடுதல். ஆர்வமாக அந்த காரியங்களை செய்தல் ஏற்படும்.

7)الركوبة في العمل

 தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தி கண்ணீர் வடிக்கும் நிலை.கண்களிலே ஈரம் கசிந்திருப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

கண்களில் கண்ணீர் கசியும் தன்னம அல்லாஹ்வின் மீது இவனுக்கு பயம் உள்ளது என்பதற்கு அடையாளமாகும்.

அல்லாஹ்வின் பயம், ஆகிரத்தின் பயம், கப்ரின் பயம், மவ்த்தின் பயம், தன் பாவங்களை பற்றியுள்ள பயம் ஒரு மனிதனுக்கு இருந்தால் எப்போதுமே அவனின் கண்கள் கசிந்து கொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் அதிகம் கவலைப் படுவர்களாக இருந்தார்கள்.கவலை என்றால் சோகமான முகமுடையவர்களாக இருந்தார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக மனக்கவலை அவர்களுக்கு அதிகமாக இருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் நேர்வழி பெற வேண்டும் என கவலைப்பட்டார்கள்.கண்ணீர்விட்டார்கள்.

ஒரே ஒரு சொட்டு கண்ணீர் நரக நெருப்பை அனைத்து விடும். இந்த உலகத்தில் உள்ள கடல் நீரை கொட்டினாலும் அனையாத நரக நெருப்பு ஒரு சொட்டு கண்ணீரால் அணைந்து விடும்./

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்விற்கு பிடித்தமான கண்கள் இரண்டு. 1) அல்லாஹ்வின் பாதையிலே விழித்திருந்த கண்.

2) தன் பாவத்தை நினைத்து நினைத்து அழுகின்ற கண்.

இந்த இரண்டு கண்களும் அல்லாஹ்விற்கு விருப்பமான கண்கள் என நபி (ஸல்) குறிப்பிடுகின்றார்கள். இந்த அழும் தன்மை இம்மாதத்தின் பரக்கத்தினால் ஏற்படுகிறது.

8) البرودة في المعاصي

பாவத்தை நினைத்து நடுங்கும் தன்மை இந்த மாதத்தின் பரக்கத்தினால் ஏற்பட்டு விடும்.

9) التواضع في الخلق

மக்களிடத்திலே பணிவோடு வாழ்வதும், பணிவோடு உறவாடுவதும் இந்த மாத பரக்கத்தினால் ஏற்படும்.

10)الحياة عند السماع الحق

 உண்மையை சத்தியத்தை கேட்கக் கூடிய நேரத்திலே அந்த சத்தியத்தை தன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் தன்னம இந்த மாதத்திலே ஏற்படுகிறது.

ஆக இந்த ஷஃபான் மாதம் சிறப்பான மாதமாகும். அதிலே குறிப்பாக இந்த 15-வது நாள் இரவிலே பல அமல்களை, பல சிறப்புக்களை சொல்லியுள்ளார்கள்.

பராஅத் இரவுப் பற்றி....

ஷைகுனா ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்)அவர்கள் தங்களின் "குன்யதுத் தாலிபீன்" எனும் கிதாபில் இந்த இரவின் சிறப்பை எழுதுகிறார்கள்;

இந்த இரவு இரண்டு விதங்களில் பராஅத் எனப்படுகிறது.

ஒன்று அல்லாஹ் துர்பாக்கியவான்களுக்கு  தன்னிடமிருந்து விலக்கு அளிக்கிறான்.

மற்றொன்று அல்லாஹுதஆலா தன் நேசர்களுக்கு சிரமம்,கவலை,இழிவு போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறான்.

பூமியில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு இரண்டு ஈதுப் பெருநாட்களைப் போலவே,

வானிலுள்ள மலாயிகத்துமார்களுக்கு ஷபே பராஅத்,லைலதுல் கத்ரு ஆகிய இரவுகள் ஈதுபெருநாட்களாகும்.

முஸ்லிம்கள், பகலில் ஈது கொண்டாடுவார்கள் இரவில் உறங்குவார்கள்.

மலக்குமார்கள் தூங்குவது கிடையாது அவர்களுக்கு இரவுகளும் ஈதுகளாகும்.


 பராஅத் மன்னிப்பு வழங்கும் இரவு.

حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم  ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.

அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்: "ஒருநாள் இரவு வேளையில் நபி   ﷺ  அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான்." (நூல் :திர்மிதீ)

عن عائشة عن النبي -صلى الله عليه وسلم- قال: ((هل تدرين ما هذه الليل؟ " يعني ليلة النصف من شعبان قالت: ما فيها يا رسول الله فقال: " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم، 

நபி ﷺஅன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம்ﷺஅன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா                          ரலியல்லாஹு அன்ஹா.(நூல் மிஷ்காத் )


பராஅத் இரவின் தனிச்சிறப்புகள்.

பராஅத் இரவில் அல்லாஹ்வின் ஏராளமான ரஹ்மத்களும், நாயகம்ﷺஅவர்களின் துஆ பரகத்தும் கிடைக்கப்பெறுவதால் இவ்விரவு ஏனைய இரவுகளை காட்டிலும் மகத்துவமும்,சிறப்பும் பெறுகிறது.என்பதில் சந்தேகம் இல்லை.

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் அறிஞப்பெருமக்கள் பராஅத் இரவுக்கு பிரத்யேகமாக இரு சிறப்புகளை கூறுகிறார்கள்.

1)இந்த இரவில் அல்லாஹுதஆலாقضاء وقدر களா கத்ரில் நிர்ணையித்தவற்றை மலக்குமார்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுக்கும் பூர்வாங்கப் பணிகள் நடைபெகின்றது.

சுருக்கமாக ஒருவருடத்திற்கான பட்ஜெட் எனலாம்.

ஒருவருட பிறப்பு,இறப்பு,ரிஸ்க்,மழை, நோய்,ஆரோக்கியம் என அனைத்தும் பராஅத் இரவில் அந்தந்த மலக்குமார்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

2)இந்த இரவின் மஃரிபிலிருந்து சுப்ஹு வரை அல்லாஹ்வின் மக்ஃபிரதும்,பிரத்யேக ரஹ்மத்துகளும் இறங்குகின்றன.

قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை  கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான். 

   (அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)

அல்லாஹுதஆலா தன் அடியார்களின் மீது கருணையும்,கிருபையும் உள்ளவன். இதுப்போன்ற இரவுகளில் அடியார்களுக்கு மக்ஃபிரத்தையும்,ரஹ்மத்தையும் வாரிவழங்கிவிடுகிறான்.

அல்லாமா அப்துல் வஹ்ஹாப் ஸகஃபீ (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்:

நான் ஒரு ஜனாஸாவை மூன்று ஆண்களும்,ஒரு பெண்ணும் சுமந்து செல்லக் கண்டேன்.உடனே சென்று அந்த பெண்ணிடமிருந்து நான் வாங்கி சுமந்து சென்று அடக்கம் செய்தோம். அப்பெண்ணிடம்; "இது யாருடைய ஜனாஸா எனக்கேட்டேன்.

அப்பெண் "இது என் மகனின் ஜனாஸா,அவன் பார்ப்பதற்கு அருவருப்பானத்தோற்றத்திலும்,அவனின் நடத்தை பிடிக்காததாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் யாரும் அவனின் ஜனாஸாவிற்கு வரவில்லை.ஜனாஸாவை தூக்க ஆளில்லாததால் என் உறவினர்களோடு சேர்ந்து நானும் சுமந்துவந்தேன்."என கண்ணீர் மல்கக் கூறினாள்.

அன்றிரவு நான் கனவொன்று கண்டேன். வெண்ணிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்,அவரின் முகம் பொவுர்ணமி இரவின் சந்திரனைப் போல பிரகாசமாக இருந்தது.அவர் என்னிடம் வந்து சொன்னார்"என்னை நீங்கள் அடக்கம் செய்தீர்கள் அதற்கு மிக்க நன்றி!

மக்களெல்லாம் என்னை இழிவாக கருதிய காரணத்தினால் கருணையாளன் அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உயர்ந்த அந்தஸ்தை வாழங்கிவிட்டான்" 


ஒரு ஹதிஸில்....

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:  لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي  رواه البخاري (7453)، ومسلم (2751).

நபிﷺஅவர்கள் சொன்னார்கள்:அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது, தன்னிடமுள்ள அர்ஷுக்கு மேல் எழுதினான். "நிச்சயமாக என் ரஹ்மத் (எனும் கருணை) எனது கோபத்தை முந்திவிட்டது"        (அறிவிப்பவர் :அபூஹுரைரா )               நூல் :(புகாரி,முஸ்லிம்.

قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ‌  وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌  فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ‌‏

அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால்  என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.(அல்குர்ஆன் : 7:156)

அல்லாஹ்வின் கருணையினால் தான் உலகம் இயங்குகிறது.இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளிக்கின்றான்.பாவிகளின் பிழைகளை மன்னித்தருள்கிறான்.


பராஅத் நோன்பும்,இரவு வணக்கமும்.

பராஅத் இரவில் வணக்கவழிப்பாடுகளில் கழிப்பதும்,பகல் நோன்பு நோற்பதும் முஸ்தஹப்பான அமல்களாகும்.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் ایامِ بیض எனப்படும் பிறை 13,14,15ஆகிய மூன்று தினங்கள் நோற்கக்கூடிய சுன்னத்தான மூன்று நோன்புகளை ஷஃபானில் நோற்பது மிகச்சிறப்பானதாகும்.

பராஅத் அன்று மக்ரிப் முதல் பஜ்ரு வரை மஸ்ஜிதில் இஃதிகாஃப் நிய்யதில் தங்கி அமல்கள் செய்யலாம்.தனியாக தஸ்பீஹ் தொழுகை,வாழ்நாளில் தவறிப்போன களாத்தொழுகைகளை தொழலாம்,திக்ரு,திலாவதே குர்ஆன்,அதிகமாக துஆ,மக்ஃபிரத்,தஹஜ்ஜுத் என பயனுள்ளதாக அவ்விரவை கழிக்க முயற்சிக்கலாம்.

அல்லாஹுதஆலா அவனின் அளப்பெரும் கிருபையால் நம் பிழைகளைப் பொருத்து,நல் அமல்களை செய்யும் பாக்கியத்தை தருவானாக!ஆமீன்...

Wednesday, 9 March 2022

ஜும்ஆ பயான் 11/03/2022

தலைப்பு :


பொறாமை வேண்டாம்.

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)

மனித வாழ்வில் உடல் சார்ந்த நோய்கள் சோதனைகளாக வருவதைப் போன்றே, சில உள்ளம் சார்ந்த நோய்களும் அவனை சோதனைக்குள்ளாக்கும்.பொய்,புறம், குரோதம்,பொறாமை என்பன போன்றவை உள்ளம் சார்ந்த வியாதிகளாகும்.

இவற்றில் பொறாமை எனும் வியாதி மிக கொடிய மன நோயாகும்.இது மனித உள்ளத்தை மாத்திரம் அல்ல அவனின் உடலுக்கும் கேடுவிளைவித்துவிடும்.


பொறாமை என்றால் என்ன?

அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியிருக்கக்கூடிய கல்வி,செல்வம்,அழகு,பதவி, புகழ்,சொத்து சுகங்கள் ஆகிய நிஃமத்துகளை (வளங்கள்)பார்க்கும் போது  நிகழும்" ஒரு வித வெறுப்புணர்ச்சியே பொறாமையாகும்.

செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.

இன்ன நபர் போன்று நானும் ஆக வேண்டும் என்று எண்ணினால் அது பொறாமையாக ஆகாது. இவனெல்லாம் இப்படி இருக்கிறானே? இவனுக்கு மட்டும் இப்படி பொருளாதாரம் கிடைக்கிறதே என்று வேதனை அடைவதுதான் பொறாமை. 

நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன் கையில் இருந்தால் மெதுவாக பொறாமை வந்து எட்டிப் பார்க்கும்.

நம்மிடம் இல்லாத  ஒன்று...

நமக்கு கிடைக்காத ஒன்று...

நாம் அடைய விரும்பும் ஒன்று...

இன்னொருவரிடம் இருந்தால்...

ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு வந்து எட்டிப்பார்க்கும்.

அவரைப் பற்றித் தரக்குறைவாக பேச வைக்கும்.

அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி இன்பம் காணும்.

பார்த்தும் பார்க்காததுபோல போக வைக்கும்.

முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்கும்.

இவை எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.

அல்லாஹ் இறை மறையில் கூறுகிறான்....

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.  திருக்குர்ஆன் (4.32)

அறிஞப்பெருமக்கள்; 

பொறாமையை நான்காக வகைப்படுத்துகிறார்கள்.

முதலாவது:

அந்த நிஃமத் பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது.அது தனக்கு கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் சரியே!

இரண்டாவது:

அந்த நிஃமத்  பொறாமை கொள்ளும் அவனிடம் இருக்கக்கூடாது,அது தனக்கு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.(எ.க அழகியப் பெண்,அழகான இல்லம்)  இவ்விரண்டு வகைகளும் பெரும் பாவங்களாகும்.ஹராம் ஆகும்.

மூன்றாவது:

தான் விரும்பிய ஒன்று கிடைக்காத விரக்தியில், அடுத்தவருக்குள்ள ஒரு நிஃமத் அவரிடம் இருக்கக்கூடாது என ஆசைப்படுவது.இதுவும் ஹராமாகும்

நான்காவது:

அடுத்தவருக்குள்ள நிஃமத்தை போன்றதொரு நிஃமத் தனக்க கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவது.அது அவரிடம் இருக்கக்கூடாது என்ற தப்பெண்ணம் இருக்காது.

இவ்வகை உலகக்காரியங்களில் மன்னிக்கப்படும்.மறுமைக்கான காரியங்களில் வரவேற்கக்கப்படும்.

பொறாமையின் துவக்கம்..

வானில் நடந்த முதல் தவறு பொறாமையினால்...

 قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
நான் உனக்கு கட்டளையிட்டிருக்க (ஆதமுக்கு) நீ பணியாமல் இருக்க உன்னை தடுத்தது எது?என்று (இறைவன்) கேட்டான். அதற்கவன் நான் அவரை விட சிறந்தவன் நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (பொறாமைப் பட்டவனாக) சொன்னான்.
(அல் குர்ஆன் 7:12)

அல்லாஹ் ஆதம்(அலை)அவர்களை படைத்த போது,மலக்குமார்களை ஆதம்(அலை)அவர்களுக்கு ஸஜ்தா செய்ய கட்டளையிட்டான்.

அப்போது இப்லீஸோ,நெருப்பால் படைக்கப்பட்ட படைப்பாகிய தனக்கு கிடைக்காத மரியாதை,மண்ணிணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு கிடைப்பாதா என ஆதம் (அலை)அவர்களின் மீது பொறாமைக்கொண்டு,அல்லாஹ்விடமே தர்கித்து,நிறந்தர சாபத்திற்கு ஆளானான்.

ஆக பொறாமை ஒருவனின் நல்ல அமல்களை அழித்து, அவனது நற்பெயர்களை கெடுத்து, இவ்வுலகிலும், மறு உலகிலும் ஈடேற்றம் பெறமுடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதனை இப்லீஸின் வரலாறு நமக்கு  காட்டுகிறத

பூமியில் பொறாமையினால் நிகழ்ந்த முதல் குற்றம் கொலை.

ஆதம் நபிக்கு ஹாபீல்-காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவர்களுக்கும் உடன் பிறந்த இரு சகோதரிகள், ஹாபிழுடன் பிறந்த சகோதரியை காபில் திருமணம் செய்ய வேண்டும். காபிலுடன் பிறந்த சகோதரியை ஹாபிழ் திருமணம் செய்ய வேண்டும். இது தான் கட்டளை, காபிழுடன் பிறந்த சகோதரி அழகாக இருந்ததால் அதை காபில் ஹாபிலுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இருவருக்கும் பகை நீண்டது, எந்த அளவுக்கு என்றால் கொலை காபில் ஆபிலை கொலை செய்யும் அளவுக்கு சென்றது. ஹாபிலை காபில் ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்து விட்டான். ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்யும் சம்பவம் தான் உலகில் முதன் முதலில் நடந்த கொலை.  ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே இந்த திருமண பிரச்சினை  பிரச்சினையாக  எழுந்தது. இதில் இறைவன் புறத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்க இருவரும்  குர்பான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது.

இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏ 

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)

فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ‌ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ‌ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ‌ ۙ‏‏‏ 

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.(அல்குர்ஆன் : 5:31)

காபில் தனது சகோதரர் ஹாபில் மீது கொண்ட பொறாமையினால்,அவரை கொலை செய்தான். இதுவே உலகில் நிகழ்ந்த முதல் கொலை குற்றம் என்கிறது திருமறை...

முதலில் கொலையை அறிமுகப்படுத்தியதின் காரணமாக இவ்வுலகில் யார் கொலை செய்தாலும் அதில் ஒரு பங்கு அவரை (காபிலை) சேரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பொறாமையின் காரணமாக யூசுஃப் நபியை கொலைசெய்ய திட்டம்.

إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُّبِينٍ

12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் – நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),

اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ

12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,

قَالَ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِن كُنتُمْ فَاعِلِينَ

12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் – அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்

பொறாமைக்காரனை அல்லாஹ் எச்சரிக்கிறான்...

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.(அல்குர்ஆன் : 4:54)

பொறாமை எனும் தீ

பொறாமை ஷைதானின் குணம் என்பதால் அது ஒரு விதமான உஷ்ணத்தை மனிதனில் உண்டாக்கும்.

மனிதன் கோபம் கொள்ளும் போது கூட உஷ்ணத்தை உணருகிறான்,இந்த குணங்கள் மனிதனின் உடலையும் பாதிக்கின்றன.

அதனால் தான் நபிﷺஅவர்கள் "கோபம் வந்தால் தண்ணீர் அருந்துங்கள்,அது கோபத்தை தணிக்கும்" என்றார்கள் தமிழில் பொறாமையை வயிற்றேரிச்சல் என்பார்கள்.

இதே கருத்துப்பட நபிﷺஅவர்கள் பொறாமையை நெருப்புக்கு ஒப்பாக்கி உவமை கூறியுள்ளார்கள்.

- عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: பொறாமை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்.நிச்சயமாக பொறாமை ,நெருப்பு விறகைத் தின்பதைப் போல நன்மைகளைத் தின்றுவிடும்-அல்லது காய்ந்த புல்லை நெருப்புத் தின்பது போல நன்மைகளைத் தின்றுவிடும்.(அபூ தாவூது)

 எனவே பொறாமை எனும் தீய குணம் பொறாமைக்காரனை பலகீனப்படுத்தோவதோடல்லாமல்,அல்லாஹ் ரஸுலின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்நோய்யை குணமாக்கும் மருத்துவம் நல்லெண்ணமும்,இறைநம்பிக்கையும், நல்லோர்களின் சகவாசமும் ஆகும்.                             

صحبتِ صالح ترا صالح کند 

அல்லாமா ஷைகு ஸஃதி (ரஹ்)அவர்களின் அமுத மொழி;

"நல்லோர்களின் சகவாசம் உனை நல்லவானாக்கும்"

சிறந்த மனிதன் யார்?

[عن عبدالله بن عمرو:] قيل لرسولِ اللهِ ﷺ أيُّ الناسِ أفضلُ قال كلُّ مخمومِ القلبِ صدوقِ اللسانِ قالوا صدوقُ اللسانِ نعرفُه فما مخمومُ القلبِ قال هو التقيُّ النقيُّ لا إثمَ فيه ولا بغيَ ولا غِلَّ ولا حسدَ صحيح ابن ماجه ٣٤١٦ 

நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.

யார் மீது பொறாமைப்பட வேண்டும்......(غبطة )

 عَنِ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ

لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்)      (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி-5025)

இந்த பொறாமைக்கு அரபியில் (غبطة கிப்தா) எனப்படும். கிப்தா என்றால் பிறரிடம் இருப்பது தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைக் கொள்வது. இது ஷரீஅத்தில் தடுக்கப்பட்டது அல்ல.

சுவர்க்கம் செல்ல வேண்டுமா? 

இதோ சுவர்க்க வாசியான ஒர் சஹாபியின் அற்புத நிகழ்வு....

٢- [عن أنس بن مالك:] كنّا جُلوسًا مع رسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ فقال: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهلِ الجَنَّةِ، فطَلَعَ رَجُلٌ من الأنصارِ، تَنطِفُ لحيَتُهُ من وَضوئِهِ، قد تَعَلَّقَ نَعْلَيهِ في يَدِه الشِّمالِ، فلمّا كان الغدُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ ذلك، فطَلَعَ ذلك الرَّجُلُ مثلَ المرةِ الأولى. فلمّا كان اليومُ الثالثُ، قال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ، مِثْلَ مَقالَتِهِ أيضًا، فطَلَعَ ذلك الرَّجُلُ على مِثْلِ حالِه الأولى، فلمّا قام النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ تَبِعَهُ عبدُ اللهِ بنُ عَمْرِو بنِ العاصِ فقال: إنِّي لاحَيتُ أبي فأقسَمْتُ ألّا أدخُلَ عليه ثلاثًا، فإنْ رَأيْتَ أنْ تُؤويَني إليكَ حتى تَمضيَ فَعَلتَ؟ قال: نَعَمْ. قال أنَسٌ: وكان عبدُ اللهِ يُحَدِّثُ أنَّه باتَ معه تلك اللَّياليَ الثَّلاثَ، فلم يَرَهُ يقومُ من الليلِ شيئًا، غيرَ أنَّه إذا تَعارَّ وتَقَلَّبَ على فِراشِهِ ذَكَرَ اللهَ عزَّ وجَلَّ وكبَّرَ، حتى يقومَ لصلاةِ الفجرِ. قال عبدُ اللهِ: غيرَ أني لم أَسمَعْهُ يقولُ إلّا خَيْرًا، فلمّا مَضَتِ الثلاثُ ليالٍ وكِدْتُ أنْ أحقِرَ عمَلَهُ، قلتُ: يا عبدَ اللهِ، إنِّي لم يكن بَيْني وبينَ أبي غَضَبٌ ولا هَجْرٌ ثَمَّ، ولكِنْ سَمِعتُ رسولَ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ يقولُ لكَ ثلاثَ مِرارٍ: يَطلُعُ عليكم الآنَ رَجُلٌ من أهْلِ الجَنَّةِ فطَلَعتَ أنتَ الثلاثَ مِرارٍ، فأرَدْتُ أنْ آويَ إليكَ لِأنظُرَ ما عَمَلُكَ، فأقتَديَ به، فلم أرَكَ تَعمَلُ كثيرَ عَمَلٍ، فما الذي بَلَغَ بكَ ما قال رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ، فقال: ما هو إلّا ما رَأيتَ. قال: فلمّا وَلَّيتُ دَعاني، فقال: ما هو إلّا ما رَأيتَ، غيرَ أنِّي لا أجِدُ في نَفْسي لِأحَدٍ من المسلمينَ غِشًّا، ولا أحسُدُ أحَدًا على خَيْرٍ أعطاهُ اللهُ إيّاهُ. فقال عبدُ اللهِ: هذه التي بَلَغَتْ بكَ، وهي التي لا نُطيقُ. وأحمد (١٢٦٩٧) 

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: 

நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை என்று கூறிவிட்டு அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார். நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் என் உள்ளத்தில் இருந்ததில்லை. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான் பொறாமை கொள்ள மாட்டேன். என்று கூறினார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.

பிறர் மீது பொறாமைப்படாமல் இருப்பதை நாம் பழகிக் கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.

பொறாமையின் விளைவுகள்.

பொறாமையினால் உள்ளத்தில் அடுத்தவர் மீது வெறுப்பு,கோபம்,குரோதம் போன்ற பாவங்கள் உண்டாகும்.

பொறாமையினால் பொறாமைக்கொள்ளப்படுபவரின் மகிழ்ச்சி துக்கத்தையும்,அவரின் துன்பம் மகிழ்ச்சியையும் தரும்.

இப்படி அடுத்தவரை கவனிப்பதால் அல்லது தன்னோடு ஒப்பிட்டு பார்ப்பாதால் வாழ்வில் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் பொறாமைக்காரான் இழந்து தவிக்க நேரிடும்.

பொறாமை மனிதனை அவதூறு பரப்புதல்,உரிமையை பறித்தல்,கொலைப் போன்ற பெரும் பாவங்களில் சேர்த்துவிடும்.

எனவே பொறாமையை தவிர்த்து இறைவனின் அன்பை பெற்று வாழும் பாக்கியத்தை இறைவனிடம் இறைஞ்சுவோமாக! ஆமின்...


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

 

Thursday, 3 March 2022

ஜும்ஆ பயான் 04/03/2022

தலைப்பு :

துஆ எனும் ஆயுதம்.



மனிதன் தேவையுடையவன் .தன் தேவையனைத்தையும் ஒரு முஸ்லிம்  முதல் கோரிக்கையாக அல்லாஹ்விடமே
வைக்கவேண்டும். அல்லாஹ் தான் ஒட்டு மொத்த மனித சஞ்சாரத்தின் தேவையை நிறை வேற்றுபவனாக இருக்கிறான். செறுப்பின் வார்அறுந்தாலும், காலில் முள் தைத்தாலும் தன் ரப்பிடமே அதன் நிவாரணத்தை கேட்க வேண்டும். சிறிய பெரிய எந்த தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். அதற்கு ஒர் வழியாக தான் துஆ எனும் வசீலாவை அல்லாஹ்வும், ரசூலும் நமக்கு காண்பித்து தந்துள்ளார்கள்.

துஆ ஒர் முக்கிய வணக்கமாகும்.இன்னும் சொல்லப்போனால் இபாதாத்களின் மூளை,வணக்கவழிபாடுகளின் கருப்பொருளாகும்۔நாம் செய்யும் ஒவ்வொரு அமலும் துஆவின் மூலமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. துஆ மற்ற இபாதத்களைப் போன்று அதுவும் ஒரு இபாதத்தாகும். இறைவன் தன்னிடம் தன் அடியான் துஆ செய்வதை விரும்புகிறான். 

மேலும் நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.ஒரு அடியான் தன் ரப்பின் பால் தன் இரண்டு கைகளையும் உயர்த்திய பிறகு அந்த கையை வெறுங்கையாக விடுவதை அல்லாஹ் வெட்கப்படுகிறான். (திர்மிதி)

ஒரு மனிதன் மரணித்து விட்ட பிறகும் அவனுக்கு வந்து கொண்டே இருக்கும் அமல்களில் ஒன்று துஆவுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹழ்ரத் அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதன் அல்லாஹ்விடம் துஆ கேட்கவில்லையோ அந்த மனிதனின் மீது அல்லாஹ் கோபமடைகிறான்.(திர்மிதி)

துஆ ஒர் இபாதத்தாகும்.

۔ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ رضي الله عنهما قَالَ : سَمِعْتُ النَّبِيَّ ﷺ یَقُوْلُ : اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ، ثُمَّ قَرَأَ : {وَقَالَ رَبُّکُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَکُمْ ط اِنَّ الَّذِيْنَ یَسْتَکْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَo} [غافر، 40 : 60]۔

رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ وَأَبُوْ دَاوُد۔                          

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;துஆ அதுவே வணக்கமாகும்.

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்...

عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ رضی الله عنه أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ : اَلدُّعَائُ مُخُّ الْعِبَادَةِ۔

رَوَاهُ التِّرْمِذِي۔

"துஆ வணக்கங்களின்  மூளை" என நபி (ஸல்) கூறினார்கள்.

மேலும் வணக்கவழிபாடு அனைத்திலும் துஆவுக்கு முக்கிய இடமுண்டு.துஆ அன்றி எந்த அமலும் முழுமைப் பெறுவது கிடையாது.துஆ,ஸஜ்தா இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அடியான் அல்லாஹ்விற்கு மிக நெக்கமாகிவிடுகிறான்.

அதிலும் குறிப்பாக துஆவுடைய சந்தர்பத்தில் அல்லாஹ் அடியானின் பிடறி நரம்பை விட மிக நெருக்கமாகிவிடுகிறான்.துஆ மனிதனின் பேராயுதம்.விதியையே மாற்றும் சக்தி அதற்கு உண்டு.

துஆ மனிதனின் இயற்கை குணம் என்கிறது திருமறை...

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيْبًا اِلَيْهِ 

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; (அல்குர்ஆன் : 39:8)

அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ கேட்பது,நபிமார்கள் நல்லோர்களின் பண்பாகும்.நபிமார்கள் கேட்ட துஆக்களின் கூற்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறது.

துஆ கேட்பதன் அவசியம்

எல்லா மனிதர்களுமே தேவையுள்ளவர்கள்.வானம்,பூமி அனைத்தின் பொக்கிஷங்களும் அல்லாஹ்வின் கைவசம் உள்ளன.அவற்றை மனிதனுக்கு அவனை தவிர யாராலும் கொடுக்க இயலாது

وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ‌ 

அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள்.(அல்குர்ஆன் : 47:38)

ஆக கொடுப்பவன் அல்லாஹ்,அதனை அடியான் துஆ என்கிற இபாதத்தின் மூலம் கேட்டு பெறவேண்டும்.

துஆவின் முக்கியத்துவம்

அல்லாஹ் வெறுமனே துஆ கேளுங்கள் என கூறாமல் துஆ கேட்பதன் வழிமுறைகளையும் விளக்கமாக கூறுகிறான்.

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன் : 2:186

நபிகள் பெருமானார்ﷺஅவர்கள் துஆவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அதன் சிறப்புகளையும்,ஒழுக்கங்களையும் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَيْسَ شَيئٌ أَکْرَمَ عَلَی اللهِ تَعَالَی مِنَ الدُّعَاءِ۔

رَوَاهُ التِّرْمِذِيُّ

நபிﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹுதஆலாவிடம் துஆவை விட மிகச் சங்கையான விஷயம் வேறெதுவுமில்லை.

۔ عَنِ ابْنِ عُمَرَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَنْ فُتِحَ لَهُ مِنْکُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ، وَمَا سُئِلَ اللهُ شَيْئًا یَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ یُسْأَلَ الْعَافِیَةَ، وَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ : إِنَّ الدُّعَاءَ یَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ یَنْزِلْ، فَعَلَيْکُمْ عِبَادَ اللهِ، بِالدُّعَاءِ۔ رَوَاهُ التِّرْمِذِيُّ۔

عن علي رضي الله عنهم قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم : " الدعاء سلاح المؤمن ، وعماد الدين ، ونور السماوات والأرض " . " هذا حديث صحيح

عَنْ أَبِي ھُرَيْرَةَ رضی الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَنْ لَمْ یَسْأَلِ اللهَ عزوجل یَغْضَبْ عَلَيْهِ۔ رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْحَاکِمُ وَالْبُخَارِيُّ فِي الْأَدَبِ

துஆவின் வலிமை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முன்காலத்தில் மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. 

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். 

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.          (புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).


விதியை மாற்றும் துஆ.

عن أنس، قال:

أدركت في هذه الأمة ثلاثا لو كانوا في بني إسرائيل لما تقاسمتها الأمم، لكان عجبا، قلن: ما هن يا أبا حمزة؟ قال: كنا في الصفة عند رسول الله صلى الله عليه وسلم

فأتته امرأة مهاجرة ومعها ابن لها قد بلغ، فأضاف المرأة إلى النساء، وأضاف ابنها إلينا، فلم يلبث أن أصابه وباء المدينة، فمرض أياما ثم قبض، فغمضه النبي صلى الله عليه وسلم وأمر بجهازه، فلما أردنا أن نغسله، قال: يا أنس ائت أمه، فأعلمها، قال: فأعلمتها، فجاءت حتى جلست عند قدميه فأخذت بهما، ثم قالت: اللهم إني أسلمت لك طوعا وخلعت الأوثان زهدا، وهاجرت إليك رغبة، اللهم لا تشمت بي عبدة الأوثان، ولا تحملني من هذه المصيبة ما لا طاقة لي بحملها، قال: فو الله ما تقضى كلامها حتى حرك قدميه، وألقى الثوب عن وجهه، وعاش حتى قبض الله رسول صلى الله عليه وسلم، وحتى هلكت أمه.

அப்துல்லாஹ் இப்னு அவ்ன் (ரலி)அவர்கள் ஹழ்ரத் அனஸ்(ரலி)அவர்களின் கூற்றை அறிவிக்கிறார்கள:

நான் இந்த உம்மத்தில் இஸ்ரவேலர்களிடம் உள்ள மூன்று விஷயங்களைப் பெற்றுக்கொண்டேன்.அவற்றுக்கு நிகராகவோ,சமமாகவோ வேறேந்த உம்மத்தும் கிடையாது.

அபு ஹம்ஸாவே!"அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன" என நான் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார்;ஒரு தடவை நாங்கள் ஸுப்பா திண்ணையில், நாயகம்رﷺஅவர்களுக்கு அருகாமையில் அமர்ந்திருந்தோம்.அப்பொழுது ஒரு முஹாஜிர் பெண்மணி தன் வாலிபமான மகனோடு வந்தாள்.நாயகம் ﷺஅப்பெண்ணை (மதீனா)பெண்களிடமும்,அவளின் மகனை எங்களிடமும் ஒப்படைத்தார்கள்.சில காலங்களுக்கு பின்னால் மதினாவில் ஓர் கொள்ளை நோய் பரவியது.அதனால் அவ்வாலிபர் நோயுற்று,சில தினங்களில் மரணத்தை தழுவினார். 

நாயகம்ﷺஅவர்கள் அவரின் இரு கண்களை மூடிவிட்டு,அவரின் ஜனாஸாவின் தயாரிபிற்கு  உத்தரவிட்டார்கள்.நாங்கள் அவரை குளிப்பாட்ட தயாரானோம்.

அப்போது நாயாகம்ﷺஅவர்கள் அவரின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கும் படி சொன்னார்கள்.அவ்வாறே நான் அவரின் தாயாருக்கு தகவல் கூறினேன்.அத்தாய் வந்து,தனது மகனின் பாதங்களுக்கு அருகே அமர்ந்தார்கள்.மய்யித்தின் பாதங்களை பற்றிக்கொண்டு அத்தாய் துஆ செய்யலானாள்...

"யா அல்லாஹ்!நான் மனமகிழ்வோடு இஸ்லாத்தை தழுவினேன்.

(எனது உள்ளத்திலிந்து) சிலைகளை முற்றிலும் அகற்றிவிட்டேன்.

நான் சுமப்பதற்கு சக்திப் பெறாத இச்சோதனையை என் மீது சாட்டிவிடதே!"

அனஸ்( ரலி)அவர்கள் சொல்கிறார்கள்;அல்லாஹ்வின் மீதாணையாக!அப்பெண் துஆ செய்து முடிப்பதற்குள்ளாக,அவளின் மகனின் பாதங்கள் அசைந்தன.கஃபன் துணியை முகத்திலிருந்து விலக்கிக்கொண்டு உயிர்ந்தெழுந்தார்.அதன் பின் நீண்ட காலம் அவர் உயிர்வாழ்ந்தார்.அவருக்கு முன்னால் நாயாகம்ﷺஅவர்களும்,அவரின் தாயாரும் கூட மரணித்து விட்டனர்.

துஆவின் முக்கிய  நிபந்தனைகள்.

1)இக்லாஸ்:அல்லாஹ் நம் தேவைகளை நிறைவேற்றக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கையுடனும்,மனத்தூய்மையுடனும் கேட்பது.

فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.(அல்குர்ஆன் : 40:14)

2)நம் துஆவை அல்லாஹ் கபூல் செய்வான் என முழுமையாக நம்பிக்கைக் கொள்வது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ ، 

3) அல்லாஹ்வின் சிந்தனையோடு துஆ செய்வது.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ ) والحديث حسنه الألباني في صحيح الترمذي .

4)துஆவின் முக்கிய நிபந்தனை ஹலாலை பேணுவது.நம் உணவு,உடை,சம்பாத்தியம் அனைத்தும் ஹலாலாக இருப்பது.

عن أبى هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله صلى الله عليه وسلم ـ:(إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين؛ فقال تعالى: (يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا) وقال تعالى: (يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم) ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر؛ يمد يديه إلى السماء: يا رب. يا رب ومطعمه حرام، ومشربه حرام، وملبسه حرام، وغذى بالحرام؛ فأنى يستجاب له؟!) رواه مسلم

5)துஆவின் துவக்கத்தில் ஹம்து அல்லாஹ்வை புகழ்வது.நபிகளார் மீது ஸலவாத்து சொல்வது.

وقال ﷺ: إذا دعا أحدكم فليبدأ بتحميد ربه والثناء عليه، ثم يصلي علي ثم يدعو

6)பாவங்களை நினைத்து வருந்தி,அவற்றை விட்டொழிக்க உறுதிக்கொள்வது. 

7)மிதமான சப்தத்தில் துஆ கேட்பது.அதிக இறைச்சலோடு துஆ கேட்கக்கூடாது.

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

(அல்குர்ஆன் : 7:55)

துஆ ஒப்புக்கொள்ளப்படும் சில முக்கிய சந்தர்ப்பங்களும்,  நேரங்களும்.

1)ரமலானின் கடைசி 10 இரவுகள்.

 லைலதுல் கத்ரு இரவுகள்.

2)ரமலானின் பகல்,இரவு,ஸஹர்,இஃப்தார் என எல்லா நேரங்களும்.ஈதுல் ஃபித்ரின் இரவு.

3)அரஃபா 9ஆம் நாளின் ஸவால் நேரத்திலிருந்து சூரியன் மறையும் நேரம் வரை.

4)துல்ஹஜ் பத்தாம் நாள் ஃபஜ்ரு முதல் சூரிய உதயம் வரை.

5)ஜும்ஆ நாளின் இரவு,பகல்

6)பாதி இரவிலிருந்து சுப்ஹ் சாதிக் நேரம் வரை(தஹஜ்ஜுத் வேலை)

7)ஜும்ஆ நேரத்தில்...

8)பாங்கு,இகாமத்திற்கிடையில்...

9)பர்ளு தொழுகைக்கு பின்னால்...

10)ஸஜ்தாவில்...

11)ஜம் ஜம் நீர் அருந்தியதற்கு பின்னால்...

12)திலாவதே குர்ஆனுக்கு பின்னால்...

13)ஜிஹாதில் போர் நடக்கும் நேரத்தில்...

14)முஸ்லிம்கள் (இஜ்திமா)ஓரிடத்தில் ஒன்றுக்கூடும் போது...

15)மழை பொழியும் போது...

16)கஃபாவில் பார்வைப் பட்ட முதல் நேரம்...

துஆ என்பது இறைவனிடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் ஓர் சிறந்த வணக்கமாகும்.துஆ தடுமாற்றமான உள்ளங்களை சாந்தப்படுத்தும்,வழிகேடர்களை நன்நெறிப்படுத்தும்,இறையச்சம் கொண்டோரை இறையோடு நெருக்கமாக்கி வைக்கும்,பாவிகளுக்கு பாவமிட்சி பெற்றுத்தரும்.எனவே துஆ கேட்க சோம்பேறித்தனம் கூடாது.அது பெரும் கைசேதமும்,நஷ்டமும் ஆகும்.

துஆ எதிரிகள்,ஆபத்துக்கள்,சிரமங்கள் அனைத்தையும் விட்டும் தற்காக்கும் பேராயுதமாகும்.


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...