Wednesday, 15 December 2021

ஜும்ஆ பயான் 17/12/2021

தலைப்பு:

அழிக்க முடியாத இஸ்லாம்.

      "اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ"

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; (அல்குர்ஆன் : 3:19)

அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை அவன் பட்டித்தொட்டியெல்லாம் கொண்டுப்போய் சேர்ப்பான்.என்றும் உலகம் அழியும் நாளில் இந்த தீனை ஏற்காதார் உலகில் இல்லை என்கிற நிலை உருவாகும் என்றும் அண்ணலம் பெருமானார் (ஸல்)அவர்கள் உறுதிப்பட கூறியிருக்கிறார்கள்.ஆனால் எதிரிகள் இந்த தீனை எளிதில் வளரவிடமாட்டார்கள்.

1400 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் தாகுதலுக்குள்ளாக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.

நபி (ஸல்)அவர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை இதே நிலை தான் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை,ஊடங்கள்,சமூகவலைதளங்களில் இஸ்லாத்திற்கெதிரான பரப்புரைகள்,இஸ்லாமியர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை தாக்குதல்கள் என ஏராளம்...

உலகளவில் இஸ்லாமியர்களுக்கு  எதிராகவும்,இஸ்லாத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான சூழ்ச்சி வலைகள் பிண்ணப்பட்டு, முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.

ஆனால் எங்கெல்லாம் இஸ்லாம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிக வீரியத்துடன் எதிர்ப்புகளைச் சமாளித்து மீண்டு வரும். இது தான் இஸ்லாத்தின் தனித்தன்மை.

இஸ்லாத்தின் அசுரவளர்ச்சி விரோதிகளுக்கு இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் குரோதத்தையும்,வெறுப்பையும் அதிகமாக்குகின்றது. 

இஸ்லாமோஃபோபியா.

இஸ்லாமோபோபியா (Islamophobia அதாவது இஸ்லாமியர்வெறுப்பு மனநிலை) என்பது இஸ்லாம் அல்லது பொதுவாக முஸ்லிம்களின் மதத்திற்கு எதிரான அச்சம், வெறுப்பு, தப்பெண்ணம் அல்லது எதிர்மறையான முன்முடிவுகள் ஆகும்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கும்,இஸ்லாத்தை அழிப்பதற்கும் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு,பல முடிவுகள்,வரைவுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் ஒன்றுதான் இஸ்லாமோபோபியா Islamophobia என்கிற திட்டம்.

பொதுவாக உலகெங்கிலும்  குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாமிய விரோதத்தை மக்களின் உள்ளங்களில் விதைப்பது,சினிமா,மீடியாக்கள்,பத்திரிகைகளில் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் "அடிப்படைவாதிகள்""பயங்கரவாதிகள்"என தவறாக சித்தரித்துக்காட்டுவது.

இஸ்லாமிய நாடுகள் மீதும், மஸ்ஜித்களின் மீதும்,இஸ்லாமிய அடையாளங்களோடுள்ளவர்கள்(தொப்பி,தாடி,ஃபர்தா)மீதும் தாக்குதல் தொடுபப்து போன்ற எண்ணற்ற தாக்குதல் "இஸ்லாமோபோபியா" என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.

ஆனால் இஸ்லாத்தின் உயர்ந்த, உன்னதம் மிக்க தத்துவங்கள் மனிதமனங்களை வென்றுவிடுகின்றன.

இஸ்லாம் ஒர் மனிதகுல பாதுகாப்பு.

"அநீதமாக ஒரு மனிதன் கொள்ளப்படுவது மனிதஇனமே கொள்ளப்படுவதற்கு நிகராகும்"போன்ற இஸ்லாத்தின் மனிதநேய போதனைகள்   மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்திற்கெதிரான தவறான பொய்ப்பிரச்சாரங்களை தவிடுப்பொடியாக்கி மக்களை சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கின்றன.

ஒரு புறம் இஸ்லாமோபோபியா என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சசி வலைகள் பின்னப்படுகின்றன. மறுபுறம் இஸ்லாம் அதன் சத்திய பாட்டையில் வீறுகொண்டு நடைப்போடுகின்றது.

இறைவன் நாடினால் நாளை மேற்கத்திய கலாச்சாரம் ஒழிந்து அங்கெல்லாம் இஸ்லாமியமயமாகவும் வாய்ப்புள்ளது.

காரணம் இஸ்லாத்திற்கெதிராக அவர்களின் மீடியாக்கள்,சமூகவலைதளங்கள்,பத்திரிக்கைகளில் "இஸ்மிலாமிய அதீத மதப்பற்று" (Islamic Redicalism)، "இஸ்லாமிய தீவிரவாதம்"(Terrorism Islamic)، "இஸ்லாமிய அடிப்படைவாதம்"(Extremism Islamic)، "இஸ்லாமிய வன்முறை" (Violence Islamic)என்பனப் போன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும்  பொய்ப் பரப்புரைகள் மக்களை சிந்திக்க தூண்டுகின்றன.

உலகில் வாழும் 150கோடிகளுக்கு அதிகமான ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீது கடந்த 20 வருடங்களாக தீவிரவாத முத்திரைக் குத்துவதற்கான பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையின் படி: The Roots of islamo phobia வெறுப்பின் வேர் இஸ்லாம் என்ற தலைப்பிட்டு 7 அமைப்புகளை உருவாக்கி 2001 முதல் 2005 வரை இஸ்லாதிற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதிவேலைகள் செய்வதற்காக கிட்டத்தட்ட  43 மில்லயன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஓர் அறிக்கை:வெறும் ஐந்தாண்டுகளில் 33 அமைப்புகளுக்கு மட்டும் இஸ்லாதிற்கெதிராக சதிச்செயல்களில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்ட தொகை 206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Islamophobia வை உரு­வாக்­கு­வதில் மேற்­கத்­திய ஊட­கங்கள்.

இன்­றைய உலகம் ஊடகப் பயங்­க­ர­வா­தத்தின் (Media Terrorism) கோரப்­பி­டியில் சிக்­கி­யி­ருக்­கி­றது. ஊடகத் தொழில் நுட்­பத்தில் அப­ரி­மித­மான வளர்ச்சி கண்­டுள்ள மேற்­கு­லகின் தயா­ரிப்­புக்­க­ளுக்கும் விரி­வு­ப­டுத்­த­லுக்கும் முன்னால் ஏனைய ஊட­கங்­களால் தாக்­குப்­பி­டிக்க முடி­ய­வில்லை. எங்கு பார்த்­தாலும் மேற்கு ஊட­கங்­களின் ஆதிக்­கமே தொழிற்­ப­டு­கின்­றது. இதனால் மேற்­கத்­தே­யத்தின் சிந்­த­னை­களும் கருத்­துக்­களும் உல­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

2001/09/11 க்குப் பின்னர் மேற்­கு­லகின் தொலைக்­காட்­சிகள், இணை­யத்­த­ளங்கள், பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள் என பல்­வேறு தளங்­க­ளிலும் இஸ்­லா­மியப் பீதியை மேற்­கு­லகு உல­க­ம­யப்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­கா­விலும் ஐரோப்­பா­விலும் முன்­னணி ஊடக நிறு­வ­னங்­க­ளாக செயற்­பட்டு வரு­பவை யூத செல்­வந்­தர்­க­ளுக்கு சொந்­த­மா­னவை.

இது மட்­டு­மன்றி இஸ்­லாத்தின் எதி­ரிகள் இஸ்­லாத்தை கொச்­சைப்­ப­டுத்தி பல பத்­தி­ரிகை வெளி­யீ­டு­களை செய்தி வரு­கின்­றனர். வத்­தி­கானில் மட்டும் 200 க்கும் மேற்­பட்ட தின­ச­ரிகள் வெளி­வ­ரு­கின்­றன. இது தவிர வாராந்த, மாதாந்த இதழ்கள் வெளி­வ­ரு­கின்­றன.

இன்னும் 154 ஒளி­ப­ரப்பு நிலை­யங்கள் இஸ்­லாத்தை பற்றி பிழை­யான கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­காக அங்கு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஓர் அறிக்கைக் கூறுகிறது:2017ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் பிரபல்யமான ஐந்து பெரும் பத்திரிக்கை நிறுவனங்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சுமார் 5000 செய்திகளை வெளியிட்டுருக்கின்றன.

நியூஸ்வீக் மற்றும் டைம் நாளிதழ் இஸ்லாம் குறித்து இருபது தலைப்பு செய்திகளை வெளியிட்டன.அவற்றில் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்தன. 

இந்தியாவிலும் பல செய்திநிறுவனங்கள் இன்­றைய உலக ஊடகப் பயங்­க­ர­வா­தத்தின் (Media Terrorism) கோரப்­பி­டியில் சிக்­கி­யி­ருக்­கி­றதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

காரணம் தொடந்து இஸ்லாத்திற்கு எதிரான பரப்புரைகள் செய்வதில் பல மீடியாக்கள் ஆர்வம் காட்டுகின்றன.

2020 கொரானா முதல்அலை  வந்த போது தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு கொரானாவை வேண்டுமென்றே பரப்பியதாக ஓர் பிம்பத்தை உருவாக்கமுனைந்தன.

சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் அமெரிக்க,இஸ்ரேலின் செல்லப்பிள்ளை,அவரது நடவடிக்கை தொடர்ந்து சர்ச்சையாகி விடுகின்றன.

சவூதிக்கு நிறைய டூரிஸ்டகள் வந்தால் வருமானம் பெருகும் . பயணிகள் வரவேண்டுமானால் மது மாது களியாட்டத்திற்கும் ஆபாசத்திற்கும் அனுமதியளித்தால் தான் அது சாத்தியமாகும் என்பதால் இளவரசர் முஹம்மது ஸல்மான் பொறுப்பேற்றதும். மக்கா மதீனா இரண்டு நகரங்களை தவிர மற்ற பகுதி புனிதப் பகுதிஅல்ல என்று அறிவித்தார்.

இதை விட இளவரசர் ஸல்மான் சவூதி அரேபியாவை நவீனப் பாதைக்கு மாற்ற நினைக்கும் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை.

பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி, உள்ளிட்ட விஷயங்களை அவர் செயல்படுத்தியுள்ளார்.

தற்போது சவூதியில் தப்லீக் ஜமாத் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு தடை உத்தரவு கடந்த 30 வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும் அதனை பயங்கரவாத்தோடு தொடர்புப்படுத்தி அறிக்கைவெளியிட்டுருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு இந்தியாவின் தாருல்உலூம் தேவ்பந்த், ஜம்இய்யதுல் உலமாயே ஹிந்த்,மற்றும் உலக அறிஞர்கள் கடும்கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய ஊடகங்கள் சவூதி அரசாங்கத்தின்  இந்த அறிக்கையை முதன்மை செய்தியாக வெளியிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் சவூதியில் தப்லீக் ஜமாதிற்கு தடை என்று பரப்புரை செய்கின்றன.

இதுப் போன்றே 'லவ் ஜிஹாத்'என்றும் இஸ்லாமிய தீவிரவாதம்,பழமைவாதம் என்றும் இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்திவெளியிட்டுவருகின்றன.

இந்திய,பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறும் சாதாரண கிரிகெட் விளையாட்டைக்கூட இரு நாட்டிற்கிடையில் நடைபெறும் போராக சித்திரித்திக்கட்டுவது மீடியாக்களின் கீழ்தரமான வழமையில் உள்ள ஓர் விஷ(ய)ம்.

இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் கலந்த உணர்வினால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள் மனதாலும் உடலாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களின் சதவீதம் ஃப்ரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அதிகம் கூறப்பட்டாலும் ஜெர்மனி, பிரிட்டன்  ஸ்ரீலங்கா,மற்றும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் எல்லா இடங்களிலும் இஸ்லாமோஃபோபியா தலைவிரித்து ஆடுவதைக் கண்கூடாகக் காண இயலும்.

இந்தியாவில்  பசுவின் பெயரால் முஸ்லிம்களை கொலைசெய்வதும்,ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச் சொல்லி வற்புறுத்தி தாக்குவதும்.கலவரங்கள் செய்து இஸ்லாமியர்களின் உயிருக்கும்,உடமைக்கும் சேதம் ஏற்படுத்துவதையும்.

ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களே இஸ்லாமியர்களுக்கெதிரான பல சட்டங்களைப் போட்டுமுடக்குவதும் இப்படி பல இன்னல்களை இந்திய இஸ்லாமியர்கள் எதிர்க்கொள்கின்றனர்.

எதிர்­காலம் இஸ்­லாத்­திற்கே!

அமெ­ரிக்­காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்­கு­தலின் போது உலகில் அதி­க­மாகப் பேசப்­பட்ட மதம் இஸ்லாம் என்­றாலும் அத்­தாக்­கு­தலில்  மறைக்­கப்­பட்ட உண்­மை­களும், சதி­களும் பின்னர் மெது­வாக அம்­ப­ல­மா­கின. அதன்பின் அமெ­ரிக்­கர்கள் மட்­டு­மன்றி ஏனைய மேற்­கத்தேய ஐரோப்­பிய நாடு­களில் வாழும் மக்­களும் இஸ்­லாத்தை பற்றி ஆராய ஆரம்­பித்­தனர்.

அதன் விளைவு இஸ்­லா­மிய மார்க்­கத்தின் உண்மைத் தன்­மை­யுடன் ஒரிறைக் கொள்­கையின் பால் ஈர்க்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் அப்­போது புனித இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஏற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி, தொடர்ச்­சி­யாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­ப­வர்கள் அதி­க­மாகி இஸ்­லா­மிய மார்க்­கத்தை ஏற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி, தொடர்ச்­சி­யாக இஸ்­லாத்தை ஏற்றுக் கொள்­ப­வர்கள் அதி­க­மாகிக் கொண்டே போவதால், உலகில்  இஸ்லாத்தின் வளர்ச்­சியின் வேகம் துரிதமாகிக் கொண்டே போவ­தாக      ஆய்­வுகள் கூறு­கின்­றன.

இன்று உலகில்  மிகவும் வேக­மாகப் பரவும் மத­மாக இஸ்லாம் மாறி­விட்­டது. அதே போன்றுதான் (கிறைஸ்ட்)சர்ச் தாக்­கு­தலின் பின்­னரும் நியூ­சி­லாந்தில் இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­பட்டு ஓரிறைக் கொள்­கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஊடக செய்­தி­களில் காண முடி­கி­றது.

இன்னும் ஏரா­ள­மான நாடு­களில் வாழும் மக்கள் இஸ்­லாத்தின் கொள்­கை­களை ஆராய ஆரம்­பித்­தி­ருப்­பது இஸ்­லா­மிய எதிர்ப்பாளர்ளுக்கு பேரிடி தரும் செய்­தி­யாக இருக்கும் என்­பதில் எந்த ஐய­மு­மில்லை.

இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது.

ஓர் ஆய்வில்:  21 ஆம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது.

2050ல் ஐரோப்பா இஸ்லாமியமயமாகும் என்கிறது ஓர் ஆய்வு.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகம் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த மாயைகனை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.

அன்று பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று அதற்கான பரிகாரம் தேடுகிறார்கள். பாபர் மசூதியின் கூம்பின் மீது நின்று இடித்த பல்பீர்சிங் இன்று முகமது அமீர்! தாம் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரகராக பாழடைந்த மஸ்ஜிதுகளைப் புதுப்பித்து வலம் வந்தார்.

இஸ்லாத்தையும், முஹம்மத் நபியவர்களையும் தவறாகச் சித்தரித்து படம் எடுத்து உலகத்தையே உலுக்கிய ஆர்நோத் வான் டோர்ன் இன்று இஸ்லாமியனாக வாழ்கிறார். இஸ்லாமைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இறைவன் நாடினால் இந்தியாவில் இன்று ஆட்டம் போடும் காவிகள் சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்பார்கள்.

يُرِيدُونَ لِيُطْفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفْوَٰهِهِمْ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْكَٰفِرُون

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (திருக்குர்ஆன் 9:32)

தடைகளைத் தாண்டி இஸ்லாம் வளரும்.

குர்ஆன் வசனங்களோ,நபியின் போதனைகளோ  கேட்டுவிடக்கூடாது என்று தம் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்ட துஃபைல் இப்னு அம்ர் அத் தவ்ஸி (ரலி)அவர்கள் கடைசியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு,தனது தவ்ஸ் கோத்திரத்தில் உள்ள 1000 நபர்களை இஸ்லாமியராக்கிவிட்டார்கள்.

தான் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வை துஃபைல் (ரலி)அவர்கள் விவரிக்கிறார்கள்.

நான் மக்கா வந்துசேர்ந்தேன். மக்காவில் குறைஷ் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பார்த்தார்களோ இல்லையோ, உடனே ஓடோடிவந்து எனக்கு அழகிய முறையில் வரவேற்பு அளித்தார்கள். அவர்களிடையே மிகவும் கண்ணியமானதோர் இல்லத்தில் எனக்குத் தங்கும் வசதி செய்துகொடுத்தார்கள்.பின்னர் என்னிடம் வந்து ஒன்றுகூடிய அந்தத் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பின்வருமாறு எச்சரித்தனர்:

“துஃபைலே! நீர் எங்கள் ஊருக்கு வருகை தந்துள்ளீர். எங்கள் ஊரில் தன்னை நபியென்று கருதிக்கொண்டிருக்கும் இந்த மனிதர் (முஹம்மத்), எங்களின் மரபுகளையெல்லாம் கெடுத்துச் சுட்டிச்சுவராக்கிவிட்டார். எங்களின் ஒருமைப்பாட்டை உடைத்துவிட்டார். எங்களுடைய சமூகக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டார். எங்களுக்கு நேர்ந்த இந்த அவலம் உமக்கும் உம் சமூகத்தில் உமது தலைமைக்கும் நேர்ந்துவிடுமோ என்பதே எங்கள் அச்சம்.எனவே, அந்த மனிதரிடம் பேச்சுக்கொடுக்காதீர். அவர் சொல்லும் செய்தி எதற்கும் கண்டிப்பாகக் காது கொடுத்துவிடாதீர். அவரது சொல் மதியை மயக்கும் ஆற்றல் பெற்றவை. அதைக் கேட்டால் தந்தையும் தனயனுமே தகராறு செய்துகொள்வர். உடன்பிறந்த அண்ணன் தம்பிகளே அடித்துக்கொள்வர். அவரது வார்த்தையின் வசீகரம் கணவன் மனைவியைக்கூட எதிரெதிர் துருவங்களாக்கிவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்“.

அல்லாஹ்வின் மீதாணையாக, குறைஷியர் இவ்வாறு முஹம்மத் பற்றிய வினோதமான தகவல்களை என்னிடம் தொடர்ந்து எடுத்துச்சொல்லிக்கொண்டிருந்தனர். அவருடைய நூதனமான நவடிக்கைகள் மூலம் எனக்கும் என் சமூகத்திற்கும் ஆபத்து நேரும் என அச்சமூட்டிக்கொண்டிருந்தனர். இறுதியில், அவரிடம் நான் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. அவர் கூறும் எதற்கும் காது கொடுக்கப்போவதில்லை. ஏன், அவர் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டேன்.

காலை நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்தேன். கஅபாவை தவாஃப் சுற்ற வேண்டும், அங்குள்ள சிலைகளைத் தொட்டுத் தடவி அருளாசி பெற வேண்டும் என்பது எனது நோக்கம். இதுதான் கஅபாவுக்கு நாங்கள் கொடுக்கும் கௌரவம். இதுதான் எங்களின் ஹஜ். இந்த நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தபோது என்னிரு காதுகளிலும் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். முஹம்மத் எடுத்துரைக்கும் எதுவும் காற்றுவாக்கில்கூட என் காதைத் தீண்டிவிடக் கூடாது என்கிற அச்சமே இதற்குக் காரணம்.

இருப்பினும் நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்த மாத்திரத்தில் பார்த்தேன். முஹம்மத் கஅபாவுக்கு அருகில் தொழுதுகொண்டும் வழிபாடு செய்துகொண்டும் இருந்தார். அந்தத் தொழுகையும் வழிபாடும் எங்களுக்கு விநோதமாகத் தெரிந்தது. எனவே, அந்தக் காட்சி என்னை மேற்கொண்டு நகரவிடாமல் அங்கேயே கட்டிப்போட்டது. அவரின் வழிபாட்டு முறை எனக்குள் ஏதோ சலனத்தை ஏற்படுத்தியது. என்னை அறியாமலேயே என் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நோக்கி  நெருங்கியது. இறுதியில், யார் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேனோ அவருக்கு அருகிலேயே நான் போய்ச்சேர்ந்தேன். அவருடைய வார்த்தைகளில் சிலவற்றை என் காதில் விழவைத்தே தீருவது என்பதில் அல்லாஹ்வும் தீர்மானமாக இருந்தான். தேனினும் இனிய அந்த வார்த்தைகள் என் செவியில் வந்து விழுந்தன.

உள்ளத்தைப் பறிகொடுத்த துஃபைல்.

அப்போது நான் எனக்குள்ளேயே இப்படிப் பேசிக்கொண்டேன்: ‘’தாயற்றுப் போனவனே! துஃபைலே! நீயொரு புலவன். புலமை மிக்கவன். நல்லதும் அல்லதும் உனக்கு அத்துப்படி. இந்த ஆள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில் உனக்கென்ன தயக்கம்? அவர் சொல்வது நல்லதெனில் ஏற்றுக்கொள். அல்லதெனில் விட்டுவிட வேண்டியதுதானே’’.

இப்படி எனக்குள்ளேயே பேசிக்கொண்ட நான், சிறிது நேரம் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது முஹம்மத் தமது இல்லத்திற்குத் திரும்பலானார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். அவர் தமது இல்லத்தில் நுழைந்ததும் நானும் உள்ளே நுழைந்தேன். பின்னர் அவரிடம் இப்படிச் சொன்னேன்:

‘’முஹம்மதே! உம் சமுதாயத்தார் உம்மைப் பற்றி என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உமது நிலைப்பாட்டைக் குறித்து எனக்கு அச்சமூட்டிக்கொண்டே இருந்தனர். எனவே, நீர் கூறும் எதையும் காது கொடுத்துக் கேட்கக் கூடாது என்ற முடிவில் என்னிரு காதுகளில் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். ஆனால், அவற்றில் சிலவற்றை என் காதுகளில் அல்லாஹ் வலிந்து விழவைத்தான். உமது கூற்று அழகாக இருந்த்து. எனவே, உமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைப்பீராக’’.

இவ்வாறு நான் கூறியதும் முஹம்மத் தமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைத்தார். அல்இக்லாஸ் (112), அல்ஃபலக் (113) ஆகிய அத்தியாயங்களை எனக்கு ஓதிக்காட்டினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களின் கூற்றைவிட மிக அழகான நேர்மையான ஒரு கூற்றை இதுவரை நான் செவியுற்றதில்லை. அப்போதே நான் எனது கரத்தை அவர்களிடம் நீட்டி, ‘’அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்’’ என்று ஓரிறை உறுதிமொழி கூறி இஸ்லாத்தைத் தழுவினேன்.

பின்னர் மக்காவிலேயே சிறிது காலம் தங்கி இஸ்லாத்தின் கட்டளைகளைக் கற்றறிந்தேன். திருக்குர்ஆனில் என்னால் முடிந்ததை மனனமிட்டேன். என்னுடைய சமுதாயத்தாரிடம் திரும்பிச் செல்லலாம் என்று நான் முடிவு செய்தபோது நபியவர்களிடம் சென்று, ‘’அல்லாஹ்வின் தூதரே! என் சமூகத்தில் நான் ஒரு முக்கியப் புள்ளி. என் பேச்சுக்கு மறுபேச்சு யாரும் பேசமாட்டார்கள். எனவே, நான் அவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் எனக்கு ஒரு சான்றை வழங்க வேண்டும். அது எனது அழைப்புப் பணியில் எனக்கு உறுதுணையாக அமைய வேண்டும்’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘’இறைவா! துஃபைலுக்கு நீ ஒரு சான்றை வழங்குவாயாக’’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

துஃபைல் (ரலி) கூறுகிறார்: நான் சென்று தவ்ஸ் குலத்தார் வசித்த பகுதியில் இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டுவந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அப்பால் பத்ர், உஹுத், கன்தக் (அகழ்) ஆகிய அறப்போர்கள் நடந்து முடிந்திருந்தன.

அப்போது நான் மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என்னுடன் தவ்ஸ் குலத்தில் எண்பது குடும்பங்களும் வந்திருந்தன. அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்துவந்தனர். எங்களால் நபியவர்கள் மனமகிழ்ந்தார்கள். கைபர் போரில் கிடைத்த போர்ச்செல்வங்களைப் பங்கிடும்போது மற்ற முஸ்லிம்களுடன் சேர்த்து எங்களுக்கும் பங்கு வழங்கினார்கள்.

எனவே முஸா நபி(அலை)அவர்களை ஃபிர்அவ்னின் கோட்டையில் வளர்த்ததை போல அல்லாஹுத்தஆலா இந்த தீனுல் இஸ்லாத்தை எதிரிகளின் கோட்டையில் வைத்தே வளர்ப்பான் என்பது தான் வரலாறுக் கூறும் செய்தி.

அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி....

ஜெருசலேம் நகரத்தை உமர்(ரலி) அவர்கள்  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் சேர்த்த பொழுது அந்நகரில் எவ்விதமான ரத்தக்களறியும் ஏற்படவில்லை. மாறாக அந்நகரத்தின் கிறிஸ்தவ தலைவர் சோப்ரொனியூஸ்க்கும்  மற்ற கிறிஸ்துவ மக்களுக்கும் உமர்(ரலி) அவர்கள் அளித்த வாக்குறுதி....

"அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் எலியா நகரத்தின் மக்களில் நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், தேவாலயங்களுக்கும், சிலுவைகளுக்கும், அவர்கள் மதத்தினுடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கின்றேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவை அழிக்கப்படவும் மாட்டாது. இந்நகரில் வாழும் குடிமக்கள் அணியும் சிலுவைகளும், உடைமைகளும் அழிக்கப்பட மாட்டாது. அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் ஏற்படாது"என்று உடன்படிக்கை செய்தார்கள்.

 இதற்கு மாறாக இஸ்லாமை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்கா தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. இஸ்லாத்தின் மீது விஷம கருத்துக்களை பரப்புவதிலும், இஸ்லாமியர்களுக்கு துன்பம் கொடுப்பதில் இன்பம் காணுவதிலும் முதல் நாடு அமெரிக்காதான்.

ஆனால் எங்கு இஸ்லாத்திற்கு எதிராண அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் அளவுக்கு அதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீப்போல் பரவும்.         

 செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடம் ஏற்பட்டது. அதற்குப்பிறகு தான் அவர்கள் இஸ்லாத்தை திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமாண புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தண. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளண. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றண என்ற அமெரிக்க செய்தி ஊடகமாண CNN குறிப்பிடுகிறது.2000-ஆம் ஆண்டில் 10 இலட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 இலட்சமாக  அதிகரித்துள்ளது. 

(ASARB) என்பதின் உறுப்பிணர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்::இஸ்லாத்தை வெட்டுவதற்கு அது வாழை மரம் அல்ல... அது ஆலமரம்.....வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருக்கும்.   நீ 50 ஜ வெட்டினால் 500 ஆக வளரும்.

அதே போல் ஒருவன் இஸ்லாமை விட்டு வெளியே செல்கிறான் என்றால் அவன் செல்ல வில்லை...அவனை இஸ்லாம் தூக்கி எறிந்து விட்டது என்று தான் அர்த்தமாகும்..

தீயவர்களை இஸ்லாம் நீக்கிவிடும்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்  (நூல் : புகாரி (1883)

இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் தனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாக அந்த கிராமவாசி எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்துவிட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார். மதம் மாறிவிட்ட இவரை ஏன் நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? என்றால்  இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்பதை "மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்கள் மட்டும் வைத்திருக்கும் " என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஆகவே இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறுவதாலோ, இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரம் செய்வதாலோ, இஸ்லாமிய அழைப்பு பணிகளை முடக்குவதாலோ, இஸ்லாமிய கலாச்சாரத்தை அழிப்பதாலோ இஸ்லாத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுபடுத்த முடியாது...

மாறாக இஸ்லாம் வளரும்.... வளரும்....வளர்ந்து கொண்டே இருக்கும். 

ஆமின்...ஆமின்...யா ரப்பல் ஆலமீன்.

வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 9 December 2021

ஜும்ஆ பயான் 10/12/2021

தலைப்பு :

மனித உரிமைகள்.

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (அல்குர்ஆன் : 17:70)

மனித இனம் சிறந்தது.  படைப்பினங்களில் மனிதன் சங்கையும்,மேன்மையும் மிக்கப் படைப்பாகும்.மனிதன் சுய கட்டுப்பாட்டுடனும்,ஒழுக்கமாகவும் வாழ்ந்து தன் கண்ணியம் காப்பதுடனே,சக மனிதனின் மானம் மரியாதை,உயிர்,உடமைகள் இவற்றுக்கு குந்தகம் விளைவிக்காமல்,அவனுக்கு செலுத்தும் கடமைகள்,உரிமைகளைப் பேணுவது அவசியமாகும்.

இறைவழிப்பாட்டிற்கு நிகரான கடமை,சக மனிதனுக்கு ஆற்றவேண்டிய கடமைகளாகும். இன்னும் சொல்லப்போனால் இறைவழிப்பாட்டில் குறையிருப்பின் இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆனால் சக மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் குறையிருப்பின் அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.

நஷ்டவாளி யார்?

இம்மையில் மனித உரிமைப் பேணாதவன் நாளை மறுமையில் பெரும் நஷ்டவாளி.மேலும் எவ்விதம் அவன் நஷ்டமடைகிறான் என்பதனை விவரிக்கின்றது பின் வரும் நபிமொழி....

عن أبي هريرة رضي الله عنه:

« أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لا دِرْهَمَ لَهُ وَلا مَتَاعَ ، فَقَالَ : إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّار » [رواه مسلم]

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

ஆண்டுதோறும்......

டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (யு.டி.எச்.ஆர்) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படடுகிறது.

இனம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினம்.

உலகளவில் "மனித உரிமை"என்பது இந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் பேசுப் பொருளாகியிருக்கிறது.குறிப்பாக இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,பொருளாதார நெருக்கடி,அசாதாரன நிலை போன்றவை இது குறித்து சிந்திக்கவும்,மாநாடுகள்,கருத்தரங்குகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் சபை முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

ஆனால் இவ்வடிப்படை உரிமைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலத்திலே மனிதனுக்கு அவனுடைய உரிமைகளை உரிய முறையில் வழங்கிய பெருமை இஸ்லாத்திற்கே உரியது.

மனித உரிமைகளில் மிக முக்கியமானது நான்கு.

1. உயிர் பாதுகாப்பு.

2. உடமை பாதுகாப்பு.

3. கண்ணியம் பாதுகாப்பு.

4. தன் சார்ந்திருக்கும் கொள்கை பாதுகாப்பு.

உயிர் பாதுகாப்பு.

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ  كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 5:32)

ஒரு நாள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பார்க்க பால்குடித்தாய் ஹலிமா ஸஃதிய்யா அவர்களின் சகோதரி வருகை புரிந்த சமயத்தில் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கௌரவித்தார்கள்.

அதே அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்காத ஒரு மனிதர் வருகை புரிந்த சமயத்திலும் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கண்ணியப்படுத்தினார்கள். 

அண்ணல் நபி(ஸல்)அவர்களின் சபையில் உரிமையளிக்கும் விஷயத்தில் கலீபா அபுபக்கரும்(ரலி),காட்டரபியும் ஒன்றே!

ஒரு நாள் நபி(ஸல்)அவர்களின் சபையில் ஒரு குவளை நிரம்ப பால் வந்திருந்த சமயத்தில், சபையில் முதல் இடத்தைப் பிடித்த  சிறுவனிடம் தாமதமாக வந்திருந்த அபுபக்கர்(ரலி)அவர்களுக்கு அப்பாலை கொடுப்பதற்கு அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அனுமதியல்லவா கேட்டார்கள்.

இஸ்லாம் தன்னைப் பற்றியொழுகும் விசுவாசிகளின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும், அரசின் ஆணைகளை மதித்து நடக்கும் மாற்றுமத மக்கள் அனைவரின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும் ஒரே கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது.

இஸ்லாமியர்களின் உயிர்களும்,மாற்றுமத மக்களின் உயிர்களும்,ஏன் மற்ற உயிரினங்களின் உயிர்களும் இஸ்லாத்தில் ஒன்று தான். ஏனென்றால் உயிர் புனிதமானது.இதற்கு ஒரு முகம்,அதற்கு ஒரு முகம் என்றெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஒரு பூனையை பட்டினி போட்டு, அதை சித்திரவதை  செய்தால் என்பதால் அவள் நரகவாசியாக்கப்பட்டாள்.

அதே நேரத்தில் மற்றொரு பெண், அவள் விபச்சாரி, அவள்  ஒரு நாயின் தாகத்தை தீர்த்ததால் அவள் சுவனவாசியாக்கப்பட்டாள்.

இதுவே இஸ்லாத்தின் உண்மை நிலை.

كُنْتُ قَائِمًا عِنْدَ رَسولِ اللهِ ﷺ فَجَاءَ حِبْرٌ مِن أحْبَارِ اليَهُودِ فَقالَ: السَّلَامُ عَلَيْكَ يا مُحَمَّدُفَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ منها فَقالَ: لِمَ تَدْفَعُنِي؟ فَقُلتُ: ألَا تَقُولُ يا رَسولَ اللهِ، فَقالَ اليَهُودِيُّ: إنَّما نَدْعُوهُ باسْمِهِ الذي سَمَّاهُ به أهْلُهُ. فَقالَ رَسولُ اللهِ ﷺ: إنَّ اسْمِي مُحَمَّدٌ الذي سَمَّانِي به أهْلِي، فَقالَ اليَهُودِيُّ: جِئْتُ أسْأَلُكَ، فَقالَ له رَسولُ اللهِ ﷺ: أيَنْفَعُكَ شيءٌ إنْ حَدَّثْتُكَ؟ قالَ: أسْمَعُ بأُذُنَيَّ، فَنَكَتَ رَسولُ اللهِ ﷺ بعُودٍ معهُ، فَقالَ: سَلْ فَقالَ اليَهُودِيُّ: أيْنَ يَكونُ النَّاسُ يَومَ تُبَدَّلُ الأرْضُ غيرَ الأرْضِ والسَّمَوَاتُ؟ فَقالَ رَسولُ اللهِ ﷺ: هُمْ في الظُّلْمَةِ دُونَ الجِسْرِ قالَ: فمَن أوَّلُ النَّاسِ إجَازَةً؟ قالَ: فُقَرَاءُ المُهَاجِرِينَ قالَ اليَهُودِيُّ: فَما تُحْفَتُهُمْ حِينَ يَدْخُلُونَ ... المزيد مسلم (٢٦١ هـ)، صحيح مسلم ٣١٥ • [صحيح] .

தவ்பான்(ரலி)அவர்கள் நபி அவர்களின் பிரத்தியேகத் தோழர் ஆவார். அவர்கள் அறிவிக்கின்றனர்.ஒரு சமயம் நபி (ஸல்)அவர்களின் திருச்சமூகத்தில் நின்றுகொண்டிருந்தேன். யூத மதத்தைச் சார்ந்த அறிஞர் ஒருவர் நபி(ஸல்)அருகில் வந்து "அஸ்ஸலாமு அலைக்க யா முஹம்மத்"(முஹம்மது உம்மீது சாந்தி உண்டாக்க!)என்று கூறினார்.இவ்வார்த்தையை செவிமெடுத்த நான் மிக பலமாக அவரை என் கரத்தால் குத்தினேன்.யூத அறிஞர் கீழே விழுந்துவிட்டார்.அவர் எழுந்து என்னை நோக்கி  "என்னை ஏன் குத்தினீர் எனக் கேட்டார்.நான் அவரிடம் "அல்லாஹ்வின் ரஸூலே உங்கள் மீது சாந்தி உண்டாகுக! எனக் கூறுவதை விடுத்து, முஹம்மதே உம் மீது சாந்தி உண்டாகுக என்று ஏன் கூறனீர்கள்? எனக் கேட்டேன். அதற்கவர் உங்களின் தலைவருக்கு அவரின் குடும்பத்தார் என்ன பெயர் சூட்டியுள்ளனரோ அப்பெயரைக் கூறித்தானே அவர்களை நாங்கள் அழைக்கிறோம்(இதில் தவறு என்ன?)எனக் கேட்டார்.அப்போது நபி(ஸல்)"நிச்சயமாக என் பெயர் முஹம்மதுதான். அப்பெயரையே என் குடும்பத்தார் எனக்குச் சூட்டியுள்ளனர். யூத அறிஞர் நடந்து கொண்ட முறையில்ஆட்சசேபத்துக்குரியது எதுவுமில்லை "எனக் கூறி தவ்பான்(ரலி)அவர்களைக் கண்டித்தார்கள்.

பொதுவாகவே யூதர்கள் நபி(ஸல்)அவர்களைத் தரக்குறைவாக அழைப்பது வழக்கம். அதனால்தான் தான் தவ்பான்(ரலி)அவர்கள் யூத அறிஞர் 'முஹம்மதே! 'என்றழைத்து சலாம் கூறியதையும் ஒழுங்கீனமெனக் கருதினார்கள். எனினும் அகிலமனைத்திற்கும் அருளாக வந்த அண்ணல் நபி(ஸல்)அவர்கள் தவ்பான்(ரலி)அவர்கள் நடந்துகொண்ட முறையைக் சிறந்ததெனக் கருதவில்லை. மாறாக "என் நபித்துவத்தை நம்பாத மனிதரும் முஸ்லிம்களைப்போன்றே என்னை கண்ணியப்படுத்த வேண்டுமென்பது கட்டாயமல்ல'எனும் கருத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இச்சம்பவங்களின் மூலம் மாற்று மதத்தாரின் உரிமைகளுக்கும், உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வழங்கியுள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.

யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ('ஆம், அவன்தான்' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது. (ஸஹீஹ் புகாரி (2413)

நபி(ஸல்) அவர்கள் "மலை உச்சியிலிருந்து விழுந்தோ, நஞ்சை உண்டோ, இரும்பால் தாக்கியோ, தன்னைத்தானே ஒருவன் மாய்த்துக்கொண்டால் அதுபோன்ற தண்டனையை அவன் நீண்ட காலமாக நரகத்தில் அனுபவிப்பான். "என்று கூறியுள்ளார்கள்.

இதுபோன்று பல்வேறு நாயக வாக்குகள் மனிதன் தற்கொலை செய்து கொள்வதை வன்மையாக கண்டிக்கின்றன.

பரிசுத்த இஸ்லாம் மனிதர்கள் தம் உயிர்களைக் தாமே மாய்த்துக்கொள்வதற்குக்கூட அறவே அனுமதி வழங்கவில்லை.

அவ்விதமிருக்க மற்றோரைத் தகுந்த காரணமின்றி கொலை செய்ய எவ்விதம் அனுமதியளிக்கும்?

உடமை பாதுகாப்பு.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), 'எனக்காக (அல்லாய்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, 'நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணந்தாள். 

ஆயிஷா(ரலி) கூறினார்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன். (ஸஹீஹ் புகாரி (4304)

கண்ணியம் பாதுகாப்பு

ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். 

(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். 

அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். 

அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார். 

இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள். 

இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம் விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராம்விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். (ஸஹீஹ் புகாரி (755)

கொள்கை பாதுகாப்பு.

لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ 

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”(அல்குர்ஆன் : 109:6)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.          ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (2411)

மேற்கூறியவை அல்லாமல் இன்னும் எண்ணற்ற உரிமைகளை இஸ்லாம் கூறுகிறது.

பெண்ணுரிமை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.  பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள. அப்போது பரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார். ஸஹீஹ் புகாரி (5283)

பேச்சுரிமை.

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன்  இருந்தோம். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரைப் பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக் கொண்டு சென்று அவர்களின் போர்வையைப் பறித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு என் போர்வையைக் கொடுத்து விடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவிற்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள்' என்றார்கள். (ஸஹீஹ் புகாரி (3148)

சமத்துவ உரிமை.

இஸ்லாத்தில்  சமூக,பொருளாதார,அரசியல், நீதிபரிபாலன விவகாரங்கள் யாவற்றிலும் சமத்துவம் பேணச் சொல்லி வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.மக்கள் யாவரும் சமமானவர்ளே.குலத்தாலோ நிறத்தாலோ இனத்தாலோ பணபலம் படைப்பட்டாளத்தாலோ ஒருவர் இன்னொருவரை விட உயர்ந்து விடமுடியாது என்கிறது திருமறை...

("மக்கள் யாவரும் சமமானவர்களே"                           சம உரிமை)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)

கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிய சமயம் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உறையில் பின்வருமாறு கூறினார்கள்;

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.(அல்பைஹகீ)

பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.

ஒரு சமயம் அபுதர் கிஃபாரி(ரலி)அவர்களுக்கும் அபிஸீனியா நாட்டை சார்ந்த கறுத்த அடிமைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.தர்க்கம் சூடுபிடித்து முற்றியது.இருவருக்கும் கோபம் மேலிட்டது.கோபத்தால் நிதானமிழந்த அபுதர்(ரலி)அவர்கள் தன் பிரதிவாதியை பார்த்து "ஏ!கறுப்பியின் மகனே"என்று கூறிவிட்டார்கள்.இதைக்கேட்ட பெருமானார்(ஸல்)அவர்கள் "பேச்சு எல்லை மீறிவிட்டது!இறைபக்தியாளரையன்றி கறுத்த பெண்ணின் மகனை அன்றி வெள்ளை பெண்ணின் மகனுக்கு எந்த சிறப்பும் கிடையாது"எனக் கூறி தோழர் அபுதர்(ரலி)அவர்களை கண்டித்தார்கள்.

இந்த சம்பவம் நாயகம்(ஸல்)அவர்களின் காலத்தில் அடிமையும் தன் எஜமானனிடம் தர்க்கம்செய்ய முடியும் என்பதையும்,நிற இன பாகுபாடற்ற சமூகமாக அம்மக்களை நாயகம்(ஸல்)அவர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் காட்டுகிறது.

நீதி பரிபாலனத்தில் சமத்துவம்

இஸ்லாத்தில் நீதிக்கு முன் அனைவரும் சமம்.பனக்காரன் ஏழை,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,வலியவன் எளியவன் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.
وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ‌ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّ‌ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ‌ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِ‌ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ‏
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் : 5:48)

وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌  اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:42)

இஸ்லாம் கூறும் நீதி பரிபாலனங்களை அணுவளவும் வழுவாது பின்பற்றி ஆட்சி செலுத்திய நபித்தோழர்களில் முதன்மையானவர் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள். நீதிக்கு ஓர் உமர் என்றுப் போற்றப்படக்கூடிய
உமர் (ரலி)அவர்கள் ஆட்சி போறுப்பேற்றபோது இவ்வாறு பிரகடனம்செய்தார்கள்:
"அல்லாஹ்வின் மீதாணையிட்டு கூறுகிறேன்;என்னிடம் எவரும் எந்தவிதத்திலும் மற்றவரைவிட பலசாலியல்லர்.பலவீனருமல்லர்.
எல்லோருக்கும் நீதி நிலைநாட்டுவேன்.எவருக்கும் நியாயம் வழங்குவேன்"

கலீஃபா உமர் (ரலி) அவர்கள், நீதி வழுவாது ஆட்சி செலுத்தி வந்தார். அதற்கு ஒரு சான்றினைக் காண்போம். கலீஃபாவின் மகன் அப்துல்லா, ஒரு நாள் காரணமின்றி ஒருவனை அடித்துவிட்டார். கலீஃபா முறைப்படி விசாரித்து, தம் மகன் குற்றவாளி எனக் கண்டறிந்தார்; தான் பெற்ற மகன் என்று பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க உத்தரவிட்டார் என்பது வரலாறு.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் நீதி வழுவாத ஆட்சி, உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
அண்ணல் காந்தி இப்படிச் சொன்னார்கள்:
“இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்திரத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் அமைகிறபோது தான் சுவைக்க முடியும்.”

பொருளீட்டுவதில் சமத்துவம்.

பொருளியலில் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட இஸ்லாம் பல வகையிலும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.காரணம் ஒருவனின் பொருளீட்டும் ஆர்வம் அடுத்தவனை எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதால் பொருளாதாரத்தில் ஹராம்,வட்டி,மோசடி,பதுக்கல் போன்றவற்றை தவிர்த்து ஹலாலான வழியில் பொருளீட்ட வழிகாட்டுகிறது.

وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ 
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;
(அல்குர்ஆன் : 2:275)

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அறிவு,ஆற்றலைக்கொண்டு ஆகுமான வழிகளில் பொருளீட்டவும்,அதனை அபிவிருத்தி செய்யவும்,ஆகுமான வழியில் செலவுச்செய்யவும் முழு சுதந்தரம் இருகின்றது.
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)

அரசியல் உரிமை.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அரசியல் விவகாரங்களில் உரிமையோடு இயங்கவும்,கருத்துவெளியிடவும்,தனக்கு விருப்பமான பிரதிநிதியை தேர்வு செய்யும்  உரிமையும் இருக்கவேண்டும்.
நாட்டில் தலைவரை,மக்களை சகல விதத்திலும் இறைவழி நின்று வழி நடத்தும் தலைவரை தேர்வுசெய்யும் உரிமையை இஸ்லாம் பொதுமக்களுக்கு வழங்குவதுடன் அவர் வழிதவறுபட்சத்தில் அவரை கேள்விக்கேட்கும் உரிமையும் கண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்குகின்றது.

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி)அவர்கள் ஒரு தடவை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது" நான் தவறு செய்தால் என்னை திருத்துங்கள்"என்றார்கள். இதனைக் கேட்ட ஒருவர் எழுந்து நின்று "கலிஃபா உம்மிடம் நாம் தவறை கண்டால் இதனால் உம்மை திருத்துவோம்"என்று தம் கையிலிருந்த வாளைக்காட்டி சொன்னார்.இதனை கேட்ட கலிஃபா கோபம் கொள்ளவில்லை மாறாக மகிழ்ச்சியில் சிரித்து விட்டு " என் சகோதரர்கள் என் மீது இவ்வளவு அக்கறையோடிருக்கிறார்களே!அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்"என்று கூறினார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் மக்களுக்கு அரசியலில் முழுச்சுதந்திரமிருந்தது.
  

மத உரிமை.

மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும் விஷயம்.இதை வற்புறுத்தலாலோ அடக்குமுறையாலோ யார் மீதும் திணிக்கக் கூடாது.
இஸ்லாம் தன் போதனையை எங்கும் எவரிடமும் வற்புறுத்தியதில்லை. இதனையே குர்ஆன்...

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்குர்ஆன் : 2:256)
இஸ்லாத்தை போதிக்க வந்த தூதருக்கே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ‏
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
(அல்குர்ஆன் : 16:82)

மனித உரிமைகள் அனைத்தையும் செயல்படுத்திக்காட்டிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.
எனவே மனித உரிமைகளைப் பேணி இஸ்லாமிய வழிநடக்கும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Thursday, 2 December 2021

ஜும்ஆ பயான் குறிப்பு 03/12/2021

தலைப்பு :

மழை தரும்                             படிப்பினை. 

وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ‌  وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏

அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.(அல்குர்ஆன் : 42:28)

மழை அல்லாஹுவின் அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை,அவன் ஆற்றல்களில் பேராற்றலாகும்.                              மழைத்துளி மனிதனின் உயிர்த்துளி.மட்டுமல்ல பூமியில் வாழும் ஜீவராசிகள் பல்கிப்பெருகவும்,மரம் செடிக்கொடிகள் பூத்துக்குலுங்கவும்,பூமி பசுமையாக இருக்கவும் மழையே காரணம்.மழையற்ற பூமி உயிரற்றது.மழைப்பொழியும் பூமியே உயிருள்ளது என்கிறது திருக்குர்ஆன்....

وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ‏

இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.              (அல்குர்ஆன் : 16:65)

பிரிதோர் இடத்தில் மழை பரகத் (அபிவிருத்தி)என்கிறது குர்ஆன்...

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.(அல்குர்ஆன் : 50:9

மழை குறித்து முஃமினின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்...

 زيد بن خالد رضي الله عنه، قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية، فأصابنا مطر ذات ليلة، فصلى لنا رسول الله صلى الله عليه وسلم الصبح، ثم أقبل علينا فقال: أتدرون ماذا قال ربكم؟. قلنا: الله ورسوله أعلم، فقال:   (قال الله: أصبح من عبادي مؤمن بي وكافر بي، فأما من قال: مطرنا برحمة الله وبرزق الله وبفضل الله، فهو مؤمن بي، كافر بالكوكب، وأما من قال: مطرنا بنجم كذا، فهو مؤمن بالكوكب كافر بي)  ، رواه البخاري.

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி `உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்` என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்" என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.(நூல்:புகாரி)

படைப்பினங்களின் தேவைக்கு மழையை பொழியச்செய்வதாக குர்ஆன் கூறுகிறது...

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ‏

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.(அல்குர்ஆன் : 23:18)

உலகில் ஆண்டுமுழுவதும் எங்காவது ஒரு பகுதியில் மழைப்பொழிந்து கொண்டுதான் இருக்கின்றது.ஆண்டில் மழையில்லாத நாட்களே இல்லை.

சில பகுதிகளில் மிதமிஞ்சிய மழையும்,சில பகுதிகளில் மழையின்மையினால் பஞ்சமும் ஏற்படுகின்றது.

عن عبد الله بن مسعود: ما من عام بأمطر من عام، ولكن الله يقسمه حيث شاء، عاما هاهنا وعاما هاهنا ، ثم قرأ ( وَإِنْ مِنْ شَيْءٍ إِلا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنـزلُهُ إِلا بِقَدَرٍ مَعْلُومٍ 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)அவர்களின் விளக்கம்;ஓர் ஆண்டின் மழை இன்னொர் ஆண்டில் பொழிவதில்லை.(அந்தந்த ஆண்டிற்கான மழை அந்தந்த ஆண்டே பொழியும்)ஆனால் அல்லாஹ் மழையை பங்கிர்ந்தளிப்பதில் தன் விருப்பப்படி செயல்படுகிறான் எனக் கூறி பின் வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்

وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.            (அல்குர்ஆன் : 15:21)

மழை பொதுவாக (ரஹ்மத்)அல்லாஹ்வின் அருளாகும் ஆனால் சில வேளைகளில் ஆபத்தாகவும்,வேதனையாகவும்,   தண்டனையாகவும் மாறலாம்.

முன்வாழ்ந்த சில கூட்டத்தவர்கள் மழை வெள்ளத்தால் அழிக்கப்பட்ட வரலாறுகளை குர்ஆன் கூறுகின்றது...

நூஹ் (அலை)அவர்களின் கூட்டத்தவர்கள்....

فَدَعَا رَبَّهٗۤ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْـتَصِرْ‏

அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 54:10)

فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ‏

ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.(அல்குர்ஆன் : 54:11)

وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ‌‏

மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.(அல்குர்ஆன் : 54:12)

ஹுது (அலை)நபியின்ஆது கூட்டத்தவர்கள்...

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌  بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:(அல்குர்ஆன் : 46:24)

تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏

“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.(அல்குர்ஆன் : 46:25)

ஷுஐப் (அலை)நபியின் கூட்டாத்தார்...

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا  وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.(அல்குர்ஆன் : 11:94)

லூத்(அலை)நபியின் கூட்டத்தார்...

وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِىْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ‌  اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ‌ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا‏

இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.(அல்குர்ஆன் : 25:40)

முன்வாழ்ந்த கூட்டத்தவர்கள் மழை வெள்ளத்தால் அழிக்கப்பட்டதினால் நாயகம் (ஸல்)அவர்கள் வானில் கருமேகங்கள் சூழ்வதை கண்டால் நடுநடுங்கிப்போய்விடுவார்கள்.

 وحدثني أبو الطاهر أخبرنا ابن وهب قال: سمعت ابن جريج يحدثنا عن عطاء بن أبي رباح عن عائشة زوج النبي ﷺ أنها قالت كان النبي ﷺ إذا عصفت الريح قال اللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به قالت وإذا تخيلت السماء تغير لونه وخرج ودخل وأقبل وأدبر فإذا مطرت سري عنه فعرفت ذلك في وجهه قالت عائشة فسألته، فقال لعله يا عائشة كما قال قوم عاد { فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا }

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ‘ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.(நூல்:முஸ்லிம்)

தமிழ்நாட்டில் இடைவிடாது பெய்த அசாதாரண மழையும், இந்த ஆண்டு நவம்பரில் இரண்டு காற்றழுத்த தாழ்வுகள் காரணமாக பெய்த மழையும், பலரின் வாழ்வாதாரத்துடன் மனித உயிர் இழப்பு, கால்நடைகள் மற்றும் விவசாய உற்பத்தி போன்றவற்றிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. “நவம்பர் 6 ஆம் தேதி, சென்னையில் 210 மிமீ மழை பெய்துள்ளது என்று பிராந்திய வானிலை மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது. இது 2015-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும் (டிசம்பர் 1-ம் தேதி 494 மி.மீ. மழை பெய்தது)" என்று ஆர்எம்சி துணை இயக்குநர் என் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 6வது இரவில் இருந்து இடைவிடாத மழை நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிக அதிகமான மழையாக பதிவாகியுள்ளது. உபரி நீரை படிப்படியாக வெளியேற்றுவதற்காக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களின் மதகுகள் திறக்கப்பட்டன. பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இந்த பருவமழை காலத்தில், சென்னையில் மழை நீர் வழிந்தோட வழியின்றி, பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தான் அதிக மழை பெய்துள்ளதாக தகவல் பரவுகிறது. ஆனால், வானிலை ஆய்வு மைய புள்ளி விபரப்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் நாகையில் தான் அதிக மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் ௧ முதல் நேற்று வரை 63 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இது இயல்பான 35 செ.மீ., அளவை விட, 80 சதவீதம் அதிகம்.இந்த பருவ மழை காலத்தில் இதுவரை மயிலாடுதுறை 102; கடலுார் 108; விழுப்புரம் 110; செங்கல்பட்டு 111; சென்னை 113; நாகை 114; காரைக்கால் 144; புதுச்சேரி 141 செ.மீ., என, எட்டு மாவட்டங்களில் 100 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

இரு மாநிலங்களிலும் அதிகபட்சமாக காரைக்காலில் 144; இரண்டாவதாக புதுச்சேரியில் 141 செ.மீ., மழை பெய்துள்ளது. மூன்றாவதாக நாகப்பட்டினத்தில் 114 செ.மீ., மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி மற்றும் நாகை முறையே மூன்று அதிகபட்ச மழை அளவுள்ள மாவட்டங்களாக உள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம் ,கடலூர், திருச்சி, பெம்பலூர், உள்பட 29 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது.தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி , விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளது. மதுரையில்  மட்டும் இயல்பான மழையே பதிவாகியுள்ளது.

மழை வரவேற்கத்தக்கது. இது மிகவும் தேவை. ஆனால் அது அசாதாரணமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அது மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பொழிந்த பெருமழை.

عن أنس بن مالك -رضي الله عنه- «أن رجلا دخل المسجد يوم الْجُمُعَةِ من باب كان نحو دار الْقَضَاءِ، ورسول الله -صلى الله عليه وسلم- قائم يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رسول الله -صلى الله عليه وسلم- قائمًا، ثم قال: يا رسول الله، هَلَكَتِ الأموال، وانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ الله تعالى يُغِيثُنَا، قال: فرفع رسول الله -صلى الله عليه وسلم- يديه ثم قال: اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا. قال أنس: فلا والله ما نرى في السماء من سحاب ولا قَزَعَةٍ ، وما بيننا وبين سَلْعٍ من بيت ولا دار. قال: فطلعت من ورائه سَحَابَةٌ مثل التُّرْسِ. فلما تَوَسَّطَتْ السماء انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قال: فلا والله ما رأينا الشمس سَبْتاً. قال: ثم دخل رجل من ذلك الباب في الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، ورسول الله -صلى الله عليه وسلم- قائم يَخْطُبُ الناس، فَاسْتَقْبَلَهُ قائمًا، فقال: يا رسول الله، هَلَكَتْ الأَمْوَالُ وَانْقَطَعَتْ السُّبُلُ، فادع الله أن يُمْسِكَهَا عنَّا، قال: فرفع رسول الله -صلى الله عليه وسلم- يديه ثم قال: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا عَلَيْنَا, اللَّهُمَّ على الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر. قال: فَأَقْلَعَتْ، وخرجنا نمشي في الشمس». قال شريك: فسألت أنس بن مالك: أهو الرجل الأول قال: لاأدري.  صحيح البخاري)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது `தாருல்களா` எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, `இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, `இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது அணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களக்கும் (அதாவது மதீனாவுக்கும்) `ஸல்ஃ` என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்கப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ` இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)` என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். 

இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் `தெரியாது` என்றனர் என ஷரீக் கூறுகிறார்.(நூல்;புகாரி)

மழை சம்பந்தமாக நாயகம் (ஸல்)அவர்கள் கேட்ட சில முக்கிய துஆக்கள்..

1)மழை வேண்டி....

قال: اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا.

பொருள்:இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! 

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِل

பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வா

2)மழையினால் நன்மையை வேண்டியும்,அதனால் ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடி...

اللَّهُمَّ إِنِّي أسْألُكَ خَيْرَهَا، وخَيْرَ مَا فِيْهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وأعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيْهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

பொருள்:இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்"

3)பயனுள்ள மழை வேண்டி...

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

பொருள்:இறைவா!பயனுள்ள மழையை இறக்குவாயாக!

4)இடி,மின்னல் ஏற்பட்டால்...

إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ قَالَ اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

பொருள்:யா அல்லாஹ்!உன் கோபத்தினால் எங்களை நாசமாக்கிவிடாதே!உன் வேதனையினால் எங்களை அழித்துவிடாதே!அவற்றுக்கு முன் நலவை நல்குவாயாக!

5)தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது....

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا عَلَيْنَا, اللَّهُمَّ على الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر.

பொருள் :இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)

வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...