தலைப்பு :
ரஹ்மத்தான ரமலான்
اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.(அல்குர்ஆன் : 7:56)
ரமலான் மாத முந்தைய பத்து, அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் ரஹ்மத்தான தினங்களாகும்.
அல்லாஹ்வின் ரஹ்மத்தினால்தான் அகிலம் இயங்குகிறது. அவனருள் இல்லை என்றால் உலகம் ஸ்தம்பித்துப் போய்விடும்.
மனிதன் தன் பாவங்களால் பதற்றமடைந்து வாழ்வில் நிம்மதியிழந்து தவிக்கிறான்.
அல்லாஹ்வின் அருளை பெறுவதன் மூலம் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை அடையலாம்.
அல்லாஹ்வின் அருளை பெறுவது மிகவும் கடினமான விஷயம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு அது மிகவும் சுலபமானது என்றும் ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களது கூற்று முரண்பாடாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை நிலையை உணரவும் வழிகள் இருக்கின்றன.தீயோர் மற்றும் பாவிகள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவர்கள்.பாவமீட்சி பெறாத வரை அவர்கள் அல்லாஹ்வின் அருளை பெறுவது கடினம்.ஆனால் நல்லோர்கள்,இறைவிசுவாசிகள் மிகச் சுலபமாக அல்லாஹ்வின் அருளைப் பெறமுடியும்.
ஒரு ஹதிஸில்....
وفي رواية ([2]): " «إن الله خلقَ الرحمةَ يومَ خلقَها مائةَ رحمةٍ، فأمسَك عنده تسعًا وتسعين رحمةً، وأرسلَ في خلقِه كلِّهم رحمةً واحدةً، فلو يعلَمُ الكافرُ بكلِّ الذي عند الله من الرحمةِ لم ييئسْ من الجنةِ، ولو يعلَمُ المؤمنُ بكلِّ الذي عند الله من العذابِ لم يأمَنْ من النارِ»
எனவே காஃபிர் அல்லாஹ்விடமுள்ள ரஹ்மத்கள் அனைத்தையும் அறிந்தால்,அவன் சுவனம் கிடைப்பதை விட்டும் நிராசையடைய மாட்டான்.
முஃமின் அல்லாஹ்விடமுள்ள வேதனைகள் அனைத்தையும் அறிந்தால்,நரக விடுதலையை விட்டும் நிம்மதியாக இருக்கமாட்டான்.
ரஹ்மத்தை கேட்போம்
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!(அல்குர்ஆன் : 2:286)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் என்னிடம் ரஹ்மத்தை கேளுங்கள் என்று முஃமின்களுக்கு சொல்கிறான்.
குகைவாசிகள் என்று அழைக்கப்படுகிற நல்லோர்கள் என்னிடம்,
اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْـكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.(அல்குர்ஆன் : 18:10) என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆக அல்லாஹ்விடம் ரஹ்மத்தை கேட்பதும்,அதை அடைய முயற்சி செய்வதும் ஒவ்வொரு முஃமினுக்கும் இறைகட்டளையாகும்.
அல்லாஹ்வின் ரஹ்மத்தை அடைய மனிதர்களுக்கு பல வழிகளையும்,வாய்ப்புகளையும் வழங்கிகொண்டேயிருக்கிறான்.அதில் மிக முக்கியமான வாய்ப்பு என்றால் அது ரமழானிய நாட்களாகும்.
2548» وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ ابْنِ أَبِي أَنَسٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِذَا كَانَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الرَّحْمَةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ)).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ரமளான் மாதம் ஆகிவிட்டால் ரஹ்மத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஸஹீஹ் முஸ்லிம் : 1957.
ஆனால் மக்களில் அநேக நபர்கள் ரஹ்மத்தான ரமலானின் மகத்துவம் புரியாமல் அவைகளை பாழாக்குகிறார்கள.
ரஹ்மத்திற்காக நிராசையடைய வேண்டாம்
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)' என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்தஆலா.....
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் (ரஹ்மத்)பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 39:53)என்ற வசனத்தை இறக்கியருளினான்.
அல்லாஹ் தனக்கு ரஹ்மதே செய்ய மாட்டான் என கருதுவது ஆகப் பெரிய அவநம்பிக்கையும், கெட்ட எண்ணமும், ஆகும்.
அல்லாஹ் (ஹாகிம்)தன் அடியார்களின் மீது கட்டளையை பிறப்பிப்பவன்.அடியார்கள் அக்கட்டளையின் படி வழிநடப்பவர்கள்.ஆனால் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ரஹ்மத் செய்வதை தனக்கு தானே கடமையாக்கிக்கொண்டதாக தனது திருமறையில் கூறுகிறான்.
كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ
உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 6:54)
அல்லாஹ்வின் ரஹ்மத்
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில் அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது மிகவும் ஆளுமைக்குரிய ஒன்றாகும்.
فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ
உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். ( அல்குர்ஆன்: 2: 64)
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 16:61)
அல்லாஹ்வின் ரஹ்மத்தான பார்வை கிடைக்காவிட்டால் நம் பாவத்திற்கு எப்போதே அழிந்திருப்போம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((قَالَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مَاتَ فَحَرِّقُوهُ وَاذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لاَ يُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ، فَأَمَرَ اللَّهُ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ، وَأَمَرَ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ قَالَ لِمَ فَعَلْتَ قَالَ مِنْ خَشْيَتِكَ، وَأَنْتَ أَعْلَمُ، فَغَفَرَ لَهُ)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் 'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்' என்று சொல்லி(விட்டு இறந்து)விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, 'நீ எதற்காக இப்படிச் செய்தாய்?' என்று கேட்டான். அதற்கு அவர், 'உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்' என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (புகாரி 7506)
நரகவாசிகளின் மீது ரஹ்மத்
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாகஅதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள்.இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில்போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள்முளைப்பது போலப் பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாகஇருப்பதை நீர் பார்த்ததில்லையா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி)-(புகாரி-22 )
நாய்க்கு கருணை காட்டிய விபச்சாரிக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ)). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 3321)
அல்லாஹ்வின் ரஹ்மத்தை எண்ணிப்பாருங்கள்.
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)
இவ்வுலகத்தின்நியதியை இவ்வாறு இறைவன் ஆக்கியுள்ளான்.
நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால்,குணத்தால்,அறிவால்,மொழியால்,உடல் அமைப்பால்,இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்,மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை விளக்குகிறது.
அல்லாஹ்வின் அர்ஷின் மீது எழுதப்பட்டுள்ள வாசகம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي رواه البخاري (7453)، ومسلم (2751).
நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்:அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது, தன்னிடமுள்ள அர்ஷுக்கு மேல் எழுதினான். "நிச்சயமாக என் ரஹ்மத் (எனும் கருணை) எனது கோபத்தை முந்திவிட்டது"அறிவிப்பவர் :அபூஹுரைரா (நூல் :புகாரி(7453)முஸ்லிம் (2751) இந்த நபிமொழிக்கு ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறும் விளக்கம்:அல்லாஹ் தன் அடியார்களின் மீது எந்த காரணமுமின்றியே ரஹ்மத் செய்கிறான்.
ரஹ்மத்-رحمة: என்ற அரபுச் சொல்லுக்கு அருள்,கருணை,இரக்கம், பரிவு,அன்பு,பாசம் ஆகிய பல மொழித்தல்கள் கூறப்பட்டாலும்.எப்படி அல்லாஹ்வின் ரஹ்மத்களை வரையறுக்க முடிவதில்லையோ அது போல் ரஹ்மத் என்ற சொல்லுக்கும் அர்த்தத்தையும் வரையறுக்க முடியாது.
ரஹ்மத் என்பதற்கு கருணை என சொல்வது ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கும்.காரணம் அன்பு என்பது நாம் யாரை பிரியம் கொள்கிறோமோ அவர்களின் மீது மட்டும் காட்டப்படுவதாகும்.யாரை வெறுக்கிறோமோ அவரின் மீது அன்பு ஏற்பாடாது.ஆனால் கருணை என்பது எந்த பிரதிபலனையும் பாராமல் ஏற்படுவது.நம் வெறுப்பை பெற்றவர் மீதும்,இன்னும் அனைத்து உயிரனங்களின் மீதும் கருணை ஏற்படலாம்.
அல்லாஹ்வின் அன்பிற்குறிவர்கள் மூன்மின்கள் மட்டுமே,அவன் கருணை எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு.
ஒரு ஹதீஸில்...
9/420- وعن ابي هريرة قَالَ: سمِعْتُ رسُولَ اللَّهِ ﷺ يقول: جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مئَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وتِسْعِينَ، وَأَنْزَلَ في الأَرْضِ جُزْءًا واحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَراحمُ الخَلائِقُ، حَتَّى تَرْفَعَ الدَّابَّةُ حَافِرَهَا عَنْ ولَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ.
وفي روايةٍ: إِنَّ للَّهِ تَعَالى مئَةَ رَحْمَةٍ، أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الجِنِّ والإِنْسِ وَالبَهَائمِ وَالهَوامِّ، فَبِهَا يَتَعاطَفُونَ، وبِهَا يَتَراحَمُونَ، وَبها تَعْطِفُ الوَحْشُ عَلى وَلَدِهَا، وَأَخَّرَ اللَّهُ تَعالى تِسْعًا وتِسْعِينَ رَحْمَةً، يَرْحَمُ بِهَا عِبَادهُ يَوْمَ القِيَامَةِ متفقٌ عَلَيهِ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது மற்றொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்கு கூட, தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (5312)
தாயை விடவும் இரக்கமுள்ளவன்
உலகில் நிகர் கூறமுடியா அன்பு தாயினுடைது.தன் குழந்தைகாக தன்னையே அர்ப்பணித்துக்கொள்பவள் தாய்.அத்தாயின் அன்பை விடவும் அல்லாஹ் தன் அடியார்களின் மீது பொழியும் கிருபை(ரஹ்மத்)பெரியது.
7/418- وعن عمرَ بنِ الخطاب قَالَ: قَدِمَ رسُولُ اللَّهِ ﷺ بِسَبْيٍ، فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبْي تَسْعَى، إِذْ وَجَدَتْ صَبِيًّا في السَّبْي أَخَذَتْهُ فَأَلْزَقَتْهُ بِبَطْنِها، فَأَرْضَعَتْهُ، فَقَالَ رسُولُ اللَّه ﷺ: أَتُرَوْنَ هَذِهِ المَرْأَةَ طارِحَةً وَلَدَهَا في النَّارِ؟ قُلْنَا: لا وَاللَّهِ، فَقَالَ: للَّهُ أَرْحَمُ بِعِبادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا متفقٌ عليه.
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்ட போது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ''இந்தப் பெண், தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்'' என்றார்கள். நாங்கள், ''இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்: புகாரி (5999)
ரஹ்மத்தை பெறுவதற்கு வழி
நம்மிடம் கருணை குணம் இருக்கவேண்டும்.இறைவன் படைப்பினங்களின் மீது இரக்கம் காட்டுகிறான், அல்லாஹ்வின் அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் . நாம் சக உயிரினங்களின் மீது காட்டும் கருணையே இறைவனை அடையும் எளிய வழி. ஹதீஸில்...
في الحَديثِ: أنَّهُ - علَيه الصَّلاةُ والسَّلامُ - قالَ: ((ارحَموا مَن في الأرضِ يَرحَمْكُم مَن في السَّماءِ))
وفي الصَّحيحِ أيضًا: ((مَن لا يَرحَمْ لا يُرحَمْ)).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
وقالَ - صلَّى الله عليْه وسلَّم -: ((لا تُنزَعُ الرَّحمة إلا مِن شَقي))،
மற்றோர் ஹதீஸில் வந்துள்ளது: “துர்பாக்கியவானிடமிருந்துதான் இரக்ககுணம் அகற்றப்படும்.” (அல் அதபுல் முஃப்ரத்)
முஃமினின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை இறைநம்பிக்கையின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்:
- لَنْ تُؤْمِنُوا حتى تراحمُوا قالوا : يا رسولَ اللهِ ! كلُّنا رَحِيمٌ . قال : إنَّهُ ليس بِرَحْمَةِ أَحَدِكُمْ صاحبَهُ ، ولَكِنَّها رَحْمَةُ العَامَّةِ الراوي : أبو موسى الأشعري | المحدث : الألباني التخريج : أخرجه الطبراني
அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்)அவர்களின் (இரக்ககுணம்)கருணை
நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் رحمة-இரக்ககுணம் மற்றும் கருணையின் மொத்த உருவமாக இருந்தார்கள்.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(அல்குர்ஆன் : 21:107)
நம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் இரக்க சுபாவம் படைத்தவர்கள் மிருதுவான உள்ளம் கொண்டவர் என்பதற்கு சான்று...
மக்கா வெற்றியின் போது நபியவர்கள் காட்டிய முன்மாதிரியையும், அழகிய அணுகுமுறையையும்,அங்கே அவர்களின் கருணையின் உச்ச கட்டத்தையும் இன்றும் வரலாறு அதை ஓர் வியக்கத்தக்க நிகழ்வாகப் போற்றுகிறது.
'இன்றையநாள் மன்னிப்பு வழங்கப்படும் நாள்' 'இன்றைய நாள் பழிவாங்கப்படும் நாளல்ல' என்று அறிவிப்புப் செய்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். அநியாயம், அட்டூழியம் புரிந்தவர்களை மன்னித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றி வைப்பதற்காக குறைஷிக் காபிர்கள் செய்த அநாகரீகமான செயல்கள் ஒன்றல்ல.
நம் கண்மணி நாயகம் சிரம் பணிந்திருக்கின்ற போது அழுகிய குடலை அவரது மேனியில் போட்டவர்கள்,
மகள் ஸைனப்(ரலி)அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அம்பெய்தார்கள். அதனால், அவர் கீழே விழுந்து கர்ப்பமும் கலைந்துபோனது. இப்படியாக கடுமையான செயல்களை செய்தவர்களையே நபியவர்கள் மன்னித்தார்கள்.
குழந்தைகளை கொஞ்சுவதும்,முத்தமிடுவதும் கருணையின் வெளிப்பாடே!
5998- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),நூல் : புகாரி 5998
5997- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.
அடுத்தவருக்கு துஆ செய்வதும் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்க காரணமாக அமையும்
நமது பெற்றோர்களுக்கு...
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என துஆ செய்தும்.
சக முஸ்லிமை சந்திக்கும் போது
السلام عليكم ورحمت الله....என ஸலாம் கூறுவதும்.
ஸலாம் கூறியவருக்கு.. وعليكم السلام ورحمت الله....என பதில் கூறுவதும்.
தும்மியவருக்கு...
يرحمك الله.. என துஆ செய்வதும். நமக்கு ரஹ்மத் கிடைக்க காரணமாக அமைகிறது.
பாவமன்னிப்புத் தேடுவது ரஹ்மதிற்கு காரணமாகும்
لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.(அல்குர்ஆன் : 27:46)
நம் அமல்களால் மட்டும் சுவனம் செல்ல முடியுமா?
لَنْ يُدْخِلَ أحَدًا عَمَلُهُ الجَنَّةَ. قالوا: ولا أنْتَ يا رَسولَ اللَّهِ؟ قالَ: لا، ولا أنا، إلَّا أنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بفَضْلٍ ورَحْمَةٍ، ...الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
"உங்களில் எவரும் தனது அமலால் சுவனம் நுழைய முடியாது".என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது.
யா ரசூலல்லாஹ்! "நீங்களுமா "(உங்களின் அமலால் நீங்களும் சுவனம் செல்ல முடியாதா?)என ஸஹாபாக்கள் கேட்டார்கள்,அதற்கு நபியவர்கள். "இல்லை,அல்லாஹ் ரஹ்மத்தையும் இன்னும் அருளையும் கொண்டு என்னை சூழ்ந்து கொள்ளாதவரை (நானும் சுவனத்தில் நுழைய) முடியாது. எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் :அபூஹுரைரா( ரலி) அவர்கள்.)நூல் :ஸஹீஹுல் புகாரி
அல்லாஹ்வின் ரஹ்மத் நமது அமல்களைத் தாண்டி நம் கற்ப்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.அல்லாஹ்வின் ரஹ்மத் இன்றி ஓர் அணுவும் அசையாது.
ரமலானின் முந்தைய பத்து, அல்லாஹ்வின் ரஹ்மத்கள் அடைமழையாய் பொழியும் தினங்களாகும்.நாம் நம் அமல்களாலும்,நம் நாயகம்(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த...