Chengaiulama.in

Wednesday, 12 June 2024

ஜும்ஆ பயான் 14/06/2024

தலைப்பு:

குர்பானியின் சட்டங்கள்.

குர்பானி என்றால் என்ன?

குர்பானி  என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கமாகும், இந்த புனித மாதத்தில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் இந்த கடமையைச் செய்கிறார்கள்,  இப்ராஹிம் (அலை) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அல்லாஹ்வுக்காக மில்லியன் கணக்கான பிராணிகள் பலியிடப்படுகின்றன.

குர்பானி   என்பது அடியார்கள் அல்லாஹுத்தஆலா உடனான தங்களின் காதலையும் அன்பையும் அ வெளிப்படுத்தும் வழிபாடாகும், அது உண்மையிலே உயர்ந்த அல்லாஹ்வின் திருப்தியை  பெற அவனை மகிழ்விக்க அடியானே தனது உயிரைக் கொடுத்திருக்க வேண்டும்;அதுவே யதார்த்தமும் ஆகும்.

ஆனால், உன்னதமானவனும், உயர்ந்தவனுமான அல்லாஹ்வின் கருணையே, விலங்குகளை அறுப்பதை மனித உயிருக்கு பகரமாக ஆக்கியதாகும்.

அல்லாஹ்வினால் செல்வச்செழிப்பையும்,வசதிவாய்ப்பையும் பெற்றவருக்கு,  குர்பானி ஒரு முக்கியமான தீனின் கடமையாகும், 

வசதிவாய்ப்பை பெற்றிருந்தும், இந்த மாபெரும் வணக்கத்தை இழந்தவர் மிகவும் துரதிர்ஷ்டசாலியாவார்.

குர்பானி கொடுக்கும் பாரம்பரியம், ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகின்றது.

குர்ஆனில் மரியம் சூராவில் ஹஸ்ரத் ஆதம் (அலைஹி) அவர்களின் இரு மகன்களான ஹாபில் மற்றும் காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாறு கூறப்படுகிறது. 

ஹாபில்  ஒரு ஆட்டையும்,காபில் சில விளைச்சல் பொருட்களையும் குர்பானியாக முன்வைக்கின்றனர்.

ஹாபிலின் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டு,காபிலின் குர்பானி மறுக்கப்படுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27

அக்காலத்தில் குர்பானி  ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பு வந்து குர்பானியை கரித்து செல்லும்.

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.(அல்குர்ஆன் : 3:183)

குர்பானி என்கிற வணக்கம் அமைப்பிலும்,வழிமுறையிலும் சற்று வித்தியாசங்களோடு எல்லா உம்மத்திலும் கடமையாக இருந்தது.

ஆனால் ஒரு முழுமைபெற்ற வணக்கமாக,உயர்ந்த நோக்கத்தை உள்ளடக்கிய அமலாக...

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தங்களின் பாசத்திற்குரிய மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்களை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட தயாரானபோது, அல்லாஹ் சுவனத்தில் இருந்து ஓர் செம்மறிஆட்டை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து,கியாம நாள் வரை அவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு திருநாளாக  உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு குர்பானியை ஒர் வணக்கமாக ஆக்கிவிட்டான்.

குர்பானியின் சிறப்பு

சங்கைப்பொருந்திய ஹதீஸ்களில், நபி (ஸல்) அவர்கள் குர்பானியின்  முக்கியத்துவத்தையும்,சிறப்பையும் விவரித்துள்ளனர்.

(( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم

قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة )) (ابن ماجہ ،کتاب الاضاحی)

”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

குர்பானி கொடுக்காவிட்டால்..

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                         ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

குர்பானி யாரின் மீது கடமையாகும்?

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2)

துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளன்று தனது தேவைகள் போக 87 1/2 கிராம் தங்கம் அல்லது 612 1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் மதிப்பு 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி (சுமார் 58,800 ரூபாய்) பணமாகவோ பொருளாகவோ அடையப்பெற்றிருக்கும் பருவ வயதை அடைந்த, முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண்ணின் மீதும் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும். ( வாஜிபாகும்).

வசதியற்ற ஏழைகளின் மீது குர்பானிக் கடமையில்லை . எனினும் ஒர் ஏழை குர்பானி நிய்யத்தில் ஓர் ஆட்டை வாங்கி விட்டால் அவர்மீது குர்பானி வாஜிபாகும். வசதி பெற்ற ஒருவர் ஈதுக்கு முன்னால் ஏழையாகிவிட்டால் அவர்மீதும் குர்பானி கடமையில்லை.

 ஹராமான முறையில் சேமித்த செல்வம் குர்பானிக்கு  தகுதி பெறாது. அதில் குர்பானிக் கொடுத்தால் குர்பானி நிறைவேறாது.

ஸதகதுல் ஃபித்ரின் (அளவு)நிஸாபே,குர்பானியின் நிஸாபாகும்.

குர்பானி வாஜிபாகுவதற்கு ஓராண்டு பூர்த்தியாகி இருப்பது ஷரத்து இல்லை. துல்ஹஜ் பிறை 12 அன்று சூரியன் மறைவதற்கு முன்பு நிஸாபை சொந்தமாக்கினாலும் வாஜிபாகும்.

அத்தியாவசிய தேவைகள் என்பது உயிர்வாழ,மானத்தோடு வாழ தேவையானவைகள் ஆகும்.

(எ.க)உணவு,தண்ணீர்,உடை,இருப்பிடம்

உபரியான பொருட்கள் என்றால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள் ஆகும்.

ஒவ்வொரு நபரின் தேவைகளும் விருப்பங்களும் பொதுவாக மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை, 

ஏகோபித்த கூற்றுப்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான, தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

சில பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும்,அதனை பயன்படுத்த விருப்பமுள்ள பொருளாகவும் இருக்கும்.

அதனை வியாபாரப்பொருளாக பார்க்கப்படாமல் அத்தியாவசிய தேவையான பொருளாக கனிக்கப்படும்.

எனவே எந்த பொருட்கள் பயன்பாட்டில் இல்லாமலும்,அத்தியாவசிய தேவையாகவும் இல்லாமல் இருக்குமோ அவை மேல்மிச்சமான அதிகப்படியான பொருளாகும்,அவை குர்பானி நிஸாபில் அடங்கும்.

குர்பானி பிராணி எது?


وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:34)


ஒட்டகம், ஆடு, மாடு இவைகளையே குர்பானியாகக் கொடுக்க வேண்டும்.  இவையல்லாத மற்றவைகளை குர்பானியாக கொடுப்பது கூடாது. அவ்வாறு கொடுத்தால் குர்பானிக் கடமை நீங்காது.

 عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ்(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, 'தக்பீர்' (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5558. 

ஒட்டகம் ஐந்து வயதும் மாடு இரண்டு வயதும் ஆடு ஒரு வயதும் பூர்த்தியானதாக இருக்க வேண்டும். ஒரு வருடத்தின் தோற்றம் கொண்ட ஆறு மாத செம்மறி ஆட்டையும் குர்பானி கொடுக்கலாம். வரையறுக்கப்பட்ட வயதுக்கு கீழ் உள்ள பிராணிகளை குர்பானிக் கொடுப்பது கூடாது.

ஒரு குடும்பத்திற்கு ஒர் ஆடு போதுமாகாது . ஒரு குடும்பத்தில் பல பேர் ஐகாத் கொடுக்க தகுதி உள்ளவர்கள் எனில் அவர்கள் ஒவ்வொருவரும் தனக்காக தனியாக குர்பானிக் கொடுக்க வேண்டும். ஒர் ஆட்டின் நன்மையில் குடும்பம் ஒன்று சேரலாம். கடமையில் ஒன்று சேர முடியாது.

குறையுள்ள பிராணி குர்பானிக்கு தகுதியாகாது?


 عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: «لَا يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلَا بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلَا بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلَا بِالعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِي»

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி)
( திர்மிதீ)

எனவே குர்பானி பிராணி ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இரு கண்கள் அல்லது ஒரு கண் குருடானவைகள், பாதிக்கு மேல் பார்வை குறைபாடு உடையவைகள், நொண்டி, ஒரு காது அல்லது இரு காது இல்லாதவைகள், மூன்றில் ஒரு பாகம் அல்லது பாதிக்கு மேல் காது அறுபட்டவைகள். அடிப்பகுதி வரை கொம்பு உடைந்தவைகள். நன்கு மெலிந்தது. வெளியில் தெரியக்கூடிய நோய் உடையவைகளைக் குர்பானிக் கொடுப்பது கூடாது.
இயற்கையிலேயே கொம்பில்லாத பிராணிகளைக் குர்பானிக் கொடுக்கலாம்.

குர்பானி பிராணியின் காதில் டேக் (tag) தொங்கவிடுவதற்காக போடப்படும் சிறு துளை ஒரு குறையல்ல. எனினும் அதுவும் இல்லாமலிருப்பது மிக சிறந்தது.

ஒரு விதை அடிக்கப்பட்ட பிராணிகளைக் குர்பானிக் கொடுப்பது கூடும்.சிறந்ததுமாகும்.

விரைவில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணி பிராணியை குர்பானி கொடுக்காமலிருப்பது நல்லது. ஒருவேளை குர்பானிக் கொடுத்த பின் வயிற்றில் குட்டி உயிருடன் இருந்தால் அதையும் உடனே குர்பானி கொடுக்க வேண்டும். இறந்திருந்தால் அதன் இறைச்சியை சாப்பிடுவது ஹராமாகும்.

கூட்டுசேர்வது


ஒட்டகம்.மாடு, 7 நபர்கள் வரை கூட்டு சேரலாம். கூட்டு சேரும் நபர்களில் யாரேனும் ஒருவர் ஒரு கூட்டில் அகீகாவை நிய்யத் செய்தால் அனைவரின் குர்பானியும் கூடும். ஆனால் அக்கூட்டில் ஒருவர் குர்பானியின் நிய்யத் இல்லாமல் வெறும் இறைச்சிக்காக வேண்டி மட்டும் கூட்டு சேர்ந்திருந்தால் யாருடைய குர்பானியும் கூடாது.

குர்பானிக் கொடுக்கும் நாட்கள்


துல் ஹஜ் பிறை பத்து முதல் பிறை 12 அஸர் வரை குர்பானி பிராணியை அறுக்கலாம். இந்த நாட்களுக்குள் ஒருவருக்கு குர்பானிக் கொடுக்க முடியாமல் போனால் அப்பிராணியை ஒரு ஏழைக்கு சதக்கா செய்துவிட வேண்டும். பிராணி வாங்கப்படாமல் இருந்தால் அதன் கிரையத்தை ஏழைக்கு சதக்கா செய்துவிட வேண்டும்.

குர்பானி பிராணியின் இறைச்சியை முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர், ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் கொடுக்கலாம். குர்பானி பிராணியின் இறைச்சியில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பதே சிறந்தது.

குர்பானித் தோலை தன் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். அல்லது பிறருக்கு சதக்காவாக கொடுத்து விடலாம். அதனை விற்பனை செய்வது கூடாது. ஒருவேளை விற்று விட்டால் அக்கிரயத்தை அப்படியே ஏழைக்கு சதக்கா செய்து விட வேண்டும். தான் வைப்பது கூடாது.

தக்பீர்


وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ أَيَّامُ الْعَشْرِ، وَالأَيَّامُ الْمَعْدُودَاتُ أَيَّامُ التَّشْرِيقِ.
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا.
وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ.
(22:28)வசனத்தில்  அறியப்பட்ட  நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும் என்று இப்னு அப்பாஸ் ரலி கூறுகின்றார்கள்.

இப்னு உமர்(ரலி ) யும்  ,அபூஹீரைரா (ரலி) யும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து  நாட்களில் கடை வீதிக்கு சென்றால் தக்பீர் சொல்வார்கள்  அதை பார்த்து மக்களும் சொல்வார்கள் நபிலான தொழுகைக்கு பிறகும் முஹம்மது பின் அலி (ரஹ்) அவர்கள் தக்பீர்  சொல்வார்கள்.

(குறிப்பு)
துல் ஹஜ் பிறை 9 ஃபஜ்ர் முதல் பிறை 13 அஸர் வரையுள்ள 23 தொழுகைகளுக்கு ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னால் ஒருமுறை தக்பீர் கூறுவது வாஜிபாகும். குர்பானி கொடுப்பவர், கொடுக்காதவர், ஊரில் இருப்பவர், வெளியூரில் இருப்பவர், ஜமாஅத்தாக தொழுபவர், தனியாக தொழுபவர், வீட்டில் தொழுபவர் என எவ்வித வித்தியாசமின்றி அனைவரும் தக்பீர் கூற வேண்டும்.

குர்பானி சம்பந்தமான சில முக்கிய சட்டங்கள்.

1)சிலர் முழு குடும்பத்தின் சார்பாக ஒரு ஆட்டை மட்டுமே குர்பானி கொடுக்கின்றனர், சில சமயங்களில் வீட்டில் பலர் நிசாபின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரின் சார்பாக ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் எவருக்கும் குர்பானி நிறைவேறாது,ஒரு ஆடு ஒரே நபருக்கு பகரமாகும்,ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு பகரமாகாது.


2)மாடு,ஒட்டம் இந்த இரு பிராணிகளில் ஏழு நபர்கள் பங்குதாரர்களாக குர்பானி கொடுக்கலாம்.(عالمگیری)

1584- عَنْ جَابِرٍ قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ.رواه الترمدي

ஜாபிர் (ரழி) அவர்கள்கூறினார்கள். ஹுதைபிய்யாவின் வருடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு ஒட்டகத்தை ஏழுவரின் சார்பாகவும், ஒருமாட்டை ஏழுவரின் சார்பாகவும் (குர்பானிக்காக)அறுத்தோம். (திர்மிதி)

3)கூட்டுகுர்பானியில் பங்குதாரர்களின் அனுமதியோடு அறுக்கவேண்டும்.அனுமதி பெறாமல் அறுத்தால் அவரின் குர்பானி நிறைவேறாது.

ஒரு இடத்தில் உறவினர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் பழக்க,வழக்கம் இருந்தால், அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை, அனுமதியின்றி கூட குர்பானி கொடுக்கலாம்.(عالمگیری)

4)குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானி அவசியமாகும்.அதற்கு  வேறொன்று பகரமாக ஆகமுடியாது.

(எ.கா)குர்பானிக்கு பகரமாக அதன் கிரயத்தை ஸதகா செய்வது கூடாது.

(عالمگیری )

5)குர்பானி பிராணி குறைபாடற்றதாக இருக்க வேண்டும், குறைபாடுள்ள பிராணிகளின் குர்பானி   அனுமதிக்கப்படாது.(ردالمحتار)

 وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)நூல் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.

(நூல் : துர்ருல்முக்தார் , ஆலம்கீரி, பக்கம் – 330)

6)குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகள் எவை?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று மட்டும்தான். இவற்றில் அனைத்து வகையும் (செம்மறி, வெள்ளாடு, எருது, எருமை) கூடும்.

இவையல்லாத கோழி, வாத்து, மான், முயல் போன்ற பிராணிகளை சாப்பிடுவது ஹலாலாக இருந்தாலும் குர்பானியாக கொடுப்பது கூடாது

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.(அல்குர்ஆன் : 22:34)

இவ்வசனத்தில் இடம் பெறும்”அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும்.

மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.

குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். அது குர்பானியாக ஏற்படாது.நூல் : ஆலம்கீரி, 

குர்பானிப் பிராணிகளின் வயது வரம்பு என்ன?

பதில்: 1. செம்மறியாடு, தும்பையாடு:- ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது ஆறு மாதமாகி நன்கு கொழுத்து ஒரு வயது உடையது போல் இருந்தால் அதனை குர்பானி கொடுப்பதும் கூடும்.

2. வெள்ளாடு : ஒரு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

3. மாடு : இரண்டு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

4. ஒட்டகம் : ஐந்து வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

(ஷாஃபிஈ மத்ஹபுப்படி வெள்ளாடு இரண்டு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். செம்மறி, தும்பையாடு ஒரு வயதைவிடக் குறைவாக இருந்து பல் விழுந்திருந்தால் கூடும்.

7)குர்பானி கொடுக்கும் நாள்கள் எத்தனை?

துல்ஹஜ் பிறை 10முதல் 12மாலை மஃக்ரிப் வரை மூன்று நாட்கள் (ஷாஃபிஈ மத்ஹப்படி 13 மஃக்ரிப் வரை நான்கு நாட்கள் ஆகும்.)

الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُ وَقَالَ الشَّافِعِيُّ : ثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا أَيَّامُ ذَبْحٍ } وَلَنَا مَا رُوِيَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُمْ قَالُوا : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (الهداية)

ஷாபி மத்ஹபின் படி பிறை 10, 11, 12, 13 நாட்களில் குர்பானி கொடுக்கலாம். ஹனபி மத்ஹபின் படி பார்க்கும் போது பிறை 10, 11, 12 நாட்கள் மட்டுமே.

அவற்றில் முதலாவது நாள் கொடுப்பது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள். 

இரவில் கொடுப்பது கூடும் என்றாலும் அது மக்ரூஹ் ஆகும்.

குர்பானி கொடுக்க ஆரம்ப நேரம் எது?

பதில் : ஈத் தொழுகை நடத்த ஷரீஅத்தில் அனுமதியில் லாத அளவு குக்கிராமமாக இருந்தால், துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹு ஏற்பட்டதிலிருந்து குர்பானியின் நேரம் ஆரம்ப மாகும். நகரவாசிகள் பெருநாள் தொழுகைக்கு முன்னர் குர் பானி கொடுப்பது கூடாது. தொழுகைக்குப் பின்னரே கொடுக்க வேண்டும். அவ்வூரில் ஏதாவது ஒர் இடத்தில் தொழுகை நடை பெற்றிருந்தாலும் போதும்.

கேள்வி:
நகரவாசிகள் தொழுகைக்கு முன்னரே குர்பானியை அறுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : அது குர்பானியாக(உள்ஹிய்யாவாக) நிறைவேறாது. மீண்டும் ஒரு பிராணியை தொழுகைக்குப் பின்னர் அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும்.

(ஷாஃபிஈ மத்ஹப் படி மேற்கூறிய நேரம் வந்தபின் தொழு கைக்கு முன்னர் அறுத்தாலும் கூடும். நேரம் வரும் முன் அறுத்து விட்டால் கூடாது.)

இன்று சில நாத்திக சிந்தனையுள்ள முஸ்லிம்கள்,தீன் நெறியற்றவர்களும் குர்பானியை விமர்சிக்கின்றனர். 

குர்பானி பணத்தையும்,காலத்தையும் வீணடிக்கும்காரியம் என பிதற்றுகின்றனர்.இருப்பினும் இது இஸ்லாமிய ஷரிஅத் படியும்,அறிப்பூர்வமாகவும் ஏற்புடைய கருத்தல்ல.

ஏனெனில் குர்பானி  கொடுப்பதால் பணமும் நேரமும் விரயம் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

குர்பானி கொடுப்பது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கும், மகிழ்ச்சிக்கும் காரணம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுகள் மற்றும் செயல்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இது அல்லாஹுத்தஆலாவின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாகவும்,முஃமீன்களுக்கு மன்னிப்புக்கான காரணமாகவும் இருக்கிறது, எனவே, அத்தகையவர்களின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளவேண்டாம். 

அல்லாஹுத்தஆலா தனது அளப்பெரும் கிருபையால் அனைத்து முஸ்லிம்களின் குர்பானிகளையும் ஏற்றுக்கொள்வானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Post a Comment