Chengaiulama.in

Wednesday, 21 June 2023

ஜும்ஆ பயான் 23/06/2023.

குர்பானி..

குர்பானி என்றால் என்ன?

குர்பானி என்ற உருது வார்த்தை குர்பான் என்ற அரபி வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் பொருளுக்கு குர்பான் என்று சொல்லப்படும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் செய்யும் அனைத்து  நல்ல அமல்களுக்கும் குர்பான் என்று சொல்லலாம். எனினும் பொது வழக்கத்தில் அல்லாஹ்விற்காக கால்நடைகளை அறுப்பதற்கு இப்பெயர் கூறப்படுகிறது.

குர்பானி நமது சமுதாயத்தின் மீது மட்டும் கடமையாக்கப்பட்டுள்ளதா?

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:34)

ஆனால் முந்தைய உன்னத்தினருக்கு குர்பானி கடமையான விதம் நேரம் நிபந்தனைகள் மாறுபட்டு இருக்கலாம்.


குர்பானியின் துவக்கம்

குர்பானி எனும் பாரம்பரியம் ஆதிபிதா ஆதம் (அலை)அவர்களின் காலத்திலே துவங்கிவிட்டது.

அன்னவர்களின் இருமகன்களான ஹாபில்,காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாற்றை குர்ஆன் பேசுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ 

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (அல்குர்ஆன் : 5:27)

அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்)அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களின் ஒரு ரிவாயத்தை அறிவிக்கின்றார்கள்:

ஹாபில் ஒரு ஆட்டை தம் குர்பானியாக முன் வைத்தார்.காபில் விளைச்சலில்ருந்து தானியங்களை முன் வைத்தார்.

அக்காலத்தில் قبولیہ ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக வானில் இருந்து நெருப்பு கரித்துச் செல்லும். இதனையே குர்ஆனில்

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ 

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள்(அல்குர்ஆன் : 3:183)

வானிலிருந்து வந்த நெருப்பு ஹாபிலின் ஆட்டை கரித்துவிட்டது.காபிலின் தானியங்களை கரிக்கவில்லை.

இந்த சம்பவத்திலிருந்து குர்பானி என்கிற வணக்கம் ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்கள் காலம் தொட்டு எல்லா உம்மத்திலும் இருந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது.

குறிப்பாக ஹழ்ரத் இப்ராஹிம் (அலை)அவர்கள் தம் மகனார் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை)அவர்களை குர்பானி கொடுக்க முனைந்த போது அல்லாஹ் அவர்களுக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கி வைத்து குர்பானி கொடுத்ததால் உன்னதமான வணக்கமாகிவிட்டது.அதனை நினைவுக்கூறிடவே உம்மதே முஹம்மதிய்யாவில் குர்பானி واجب கடமையாக்கப்பட்டது.

குர்பானியின் மூலம் அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

”குர்பானிப் பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் ”.                                                                        ( அல்குர்ஆன்: 22:37 )

அல்லாஹ்வின் அச்சத்தோடும் அவனுக்காகவே செய்யும் தூய உள்ளத்தோடும் உள்ஹிய்யா (குர்பானி) கொடுக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

கூட்டு குர்பானி

உள்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

عن جابر رضي الله عنه قال : نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ .

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்"

எந்த நாட்களில் அறுக்க வேண்டும்?

ஈதுல் அள்ஹா தொழுகைக்குப் பின்னர் கொடுப்பது மிகச் சிறந்ததாகும். மேலும், அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்கள் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறுக்கலாம். எனினும் பகல் நேரத்தில் அறுப்பது சிறந்ததாகும்.

துல்ஹஜ் பிறை 13 சூரியன் மறையும் முன்பு வரை உள்ஹிய்யா கொடுக்கலாம். (இது ஷாஃபியீ )

துல்ஹஜ் பிறை 12 சூரியன் மறையும் முன்பு வரை கொடுக்க வேண்டும். (இது ஹனஃபீ )

குர்பானியில் முற்றிலும் தவிற்கப்பட வேண்டியவை.

1. அறுக்கும் போது தலை துண்டாகி விடுதல்.

2. பிராணியை படுக்க வைத்தபின் கத்தியை தீட்டுதல்.

3. கிப்லாவை முன்னோக்கி படுக்க வைக்காமல் அறுத்தல்.

4. அறுக்கப்பட்டபின் உயிர் முழுவதுமாக அடங்குமுன்பே தோலை உரித்தல்

5. உயிர் நன்கு பிரியுமுன் தலையை ஒடித்தல், துண்டித்தல்.

6. அறுக்கும்போது  தேவையில்லாதவைகளை செய்வதன் மூலம் பிராணிக்கு துன்பம் கொடுத்தல்.

7. ஒரு பிராணிக்கு முன் மற்றொரு  பிராணியை அறுத்தல்.

இக்குறைபாடுகள் உள்ள பிராணியை கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுக்கப்படும் பிராணி குருடு, கண்பார்வை குறைந்தது, நடக்க முடியாதது, சொறி பிடித்தது, காது, வால் போன்றவை துண்டிக்கப்பட்டிருத்தல், ஆணுமற்ற பெண்ணுமற்ற பிராணி போன்றவற்றை குர்பானி கொடுத்தல் கூடாது.

குர்பானி இறைச்சியை சாப்பிடக்கூடாதா?

ஒவ்வொரு வருடமும் சமூக வலைதளங்களில் குர்பானி கறியை மூன்று நாட்களுக்கு மேலாக சாப்பிட வேண்டாம் என்ற ஹதீஸை தெளிவுப்படுத்தாமல் பரப்புகி்ன்றவர்களை பார்க்கிறோம்.

இதற்கு விளக்கம் தருவதற்கு முன்னால் இந்த ஹதீஸ் எதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சொன்னார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்" என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நம்மை நாடி)  வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென)  உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 3986)

இப்போது உங்களுக்கு எதனால் இப்படி சொன்னார்கள் என்று புரிந்திருக்கும்.

குர்பானி குறித்து திருமறையில்...

குர்பானியின் மகத்துவம், சிறப்பு, தாத்பரியம் இவற்றை குர்ஆனில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சூரா ஹஜ்ஜில்...

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ‌ ‌  فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ‌  فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.(அல்குர்ஆன் : 22:36)

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)

சூரா ஹஜ்ஜில் இன்னொரு இடத்தில் குர்பானி அல்லாஹ்வின் அடையாளச்சின்னம் என்றும் அதனை சங்கைச்செய்வது تقویٰ இறையச்சத்தை பெற்றுத்தரும் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

முந்தய நபிமார்களின் காலம் தொட்டு நபி ஈஸா (அலை)அவர்களின் காலம் வரை குர்பானி என்கிற அமல் நடைமுறையில் இருந்தது.

அப்போது குர்பானி பிராணியை அறுத்து முன்வைக்க வேண்டும். அக்கால கட்டத்தில் உள்ள நபி துஆ செய்வார்.குர்பானி قبولیتஒப்புக்கொள்ளப்பட்டது அடையாளமாக வானிலிருந்து நெருப்பு அதனை கரித்து விட்டுச் செல்லும்.இதனையே குர்ஆனில்

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ 

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள்(அல்குர்ஆன் : 3:183)

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.(அல்குர்ஆன் : 6:162)

இமாம் ஜஸ்ஸாஸ் ராஸி(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்;

”ونسکی: الاضحیة، لانھا تسمی نسکاً، وکذلک کل ذبیحة علی وجہ القرابة إلی اللہ تعالیٰ فھی نسک، قال اللہ تعالی: ففدیة من صیام و صدقة و نسک“۔(۸)

இங்கு ونسکی என்பதன் நோக்கம் الاضحیةகுர்பானி அதற்குத்தான் نسکاً என்று சொல்லப்படும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அறுக்கும் ஒவ்வொரு பிராணிமே نسکஆகும்.

அல்லாஹுத்தஆலா குர்ஆனில்...

  فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ 

 அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல்  வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல்  வேண்டும் (அல்குர்ஆன் : 2:196)

குர்பானியை அல்லாஹுத்தஆலா குர்ஆனில் தொழுகைக்கு இணையான வணக்கமாக கூறுகிறான்.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.     (அல்குர்ஆன் : 108:2)

قال ابن عباس وعطاء ومجاھد وعکرمة والحسن: یعنی بذلک نحر البدن ونحوھا، وکذا قال قتادة ومحمد بن کعب القرظی، والضحاک والربیع وعطاء الخراسانی والحکم وإسماعیل بن أبی خالد وغیر واحد من السلف“۔(۱۰)

ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள், முஜாஹித்,இக்ரிமா,ஹஸன் (ரஹிமஹுமுல்லா)ஆகியோர்,மற்றும் அதிகமான முஃபஸ்ஸிரீன்களின் கருத்து;இங்கு نحر என்பதன் நோக்கம் البدن ஒட்டகம் ஆகும். ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் முறையையே نحر எனப்படும்.காரணம் அது குர்பானி பிராணிகளில் பெரிய பிராணியாகும். 

இந்த வசனத்திலிருந்து தான் فقہاء மார்க்கஅறிஞர்கள் ஈது தொழுகைக்கு பின்பு தான் குர்பானி கொடுக்கவேண்டும்.தொழுகைக்கு முன்பு குர்பானி கூடாது.என்ற சட்டத்தை ஆதாரமாக வைக்கிறார்கள்.

لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌  فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ‏

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.(அல்குர்ஆன் : 22:28)

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:34)

ஹதீஸ் ஒளியில் குர்பானி...

 عن عائشة رضی اللہ عنھا قالت: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ما عمل ابن آدم من عمل یوم النحر احب الی اللہ من اھراق الدم وانہ اتی یوم القیامة بقرونھا واشعارھا وظلافھا وان الدم لیقع من اللہ بمکان قبل ان یقع بالارض فطیبوا بھا نفسا“۔(۱۳)

நஹ்ருடைய நாளில் ஆதமுடைய மகன் செய்யும் செயலில் அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் இரத்தத்தை ஓட்டுவது ஆகும். மறுமையில் அப்பிராணி கொம்புகள், கால் குளம்புகள், முடிகள் இருக்கும் நிலையில் வரும். (அவன் ஓட்டிய) இரத்தம் தரையில் விழுவதற்கு முன்பு அல்லாஹ்விடத்தில் ((بِمَكَانٍ) يُرِيدُ الْقَبُولَ) அது ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நல்ல முறையில் இரத்தத்தை ஓட்டுங்கள்.

عن زید بن ارقم رضی اللہ عنہ قال: قال أصحاب رسول اللہ: یا رسول اللہ! ما ھذہ الأضاحی؟ قال: سنة أبیکم إبراھیم علیہ السلام، قالوا: فما لنا فیھا یا رسول اللہ؟ قال: بکل شعرة حسنة، قالوا: فالصوف؟ یا رسول اللہ! قال: بکل شعرة من الصوف حسنة“۔(۱۴)

ஸஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன?என்று கேட்கிறார்கள், இது உங்கள் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.

عن ابن عباس رضی اللہ عنہ قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم فی یوم اضحیٰ: ما عمل آدمی فی ھذا الیوم افضل من دم یھراق إلا أن یکون رحماً توصل“۔(۱۵)

ஈதுல் அழ்ஹாவுடைய நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும்.

عن أبی سعید رضی اللہ عنہ قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم یا فاطمة! قومی إلی أضحیتک فاشھدیھا، فإن لک بأول قطرة تقطر من دمھا أن یغفرلک ما سلف من ذنوبک․ قالت: یا رسول اللہ! ألنا خاصة أھلَ البیت أو لنا وللمسلمین؟ قال: بل لنا وللمسلمین

பாத்திமாவே எழுந்து உமது குர்பானி பிராணிற்கு அருகில் ஆஜராகுவாயாக, இரத்தத்திலிருந்து விழக்கூடிய  ஒவ்வொரு துளிக்கும் உமக்கு பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

”عن علی رضی اللہ عنہ عن النبی صلی اللہ علیہ وسلم قال: یا أیھا الناس! ضحوا واحتسبوا بدمائھا، فان الدم وإن وقع فی الأرض، فإنہ یقع فی حرز اللہ عز وجل۔“(۱۷)

மக்களே!குர்பானி கொடுங்கள்!அதன் இரத்தத்திற்கு பகரமாக நன்மை கிடைக்குமென்று நம்பிக்கை வையுங்கள் ! ஏனெனில் அதன் இரத்தம் தரையில் விழுவதற்கு முன் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும். 

عن ابی ھریرة رضی اللہ عنہ قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من وجد سعة لان یضحی فلم یضح، فلایحضر مصلانا“۔(۱۹)

எவர் குருபானி கொடுப்பதற்கு  வசதி பெற்றிருந்தும் குர்பானி கொடுக்க வில்லையோ அவர் (ஈது) தொழும் இடத்திற்கு வரவேண்டாம். 

”عن حسین بن علی رضی اللہ عنھما قال:قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من ضحی طیبة نفسہ محتسباً لاضحیتہ کانت لہ حجاباً من النار۔“(۲۰)

எவர் நல்ல மனதுடன் குர்பானியின் நன்மை எதிர்பார்த்தவராக குர்பானி கொடுப்பாரோ அவருக்கு அது நரகத்திலிருந்து திரையாக ஆகிவிடும்.

குர்பானியின் நோக்கம்

والثانی: یوم ذبح ابراھیم ولدہ اسماعیل علیھما السلام، وانعام اللہ علیھما: بان فداہ بذبح عظیم، اذ فیہ تذکر حال ائمة الملة الحنیفیة والاعتبار بھم فی بذل المھج، والاموال فی طاعة اللہ، وقوة الصبر، وفیہ تشبہ بالحاج، وتنویہ بھم، وشوق لماھم فیہ ولذلک سن التکبیر“۔(۲۱)

ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தம் அருமை மகனார் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை)அவர்களை அறுத்து பலியிட தயாரான போது அல்லாஹ் வானிலிருந்து ஒரு ஆட்டை இறக்கி வைத்தான்.

அன்னவர்களின் உயிர் பொருள் அனைத்தையும் விட அல்லாஹ்வின் பொருத்தத்தை முன்னிறுத்தும் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூறவே குர்பானி  கடமையானது எனவே தான் குர்பானி நாட்களில் ஹாஜிகளைப் போல التکبیر தக்பீர் சொல்வது  சுன்னத் ஆக்கப்பட்டது.


குர்பானியின் தாத்பரியம்.

1)ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுக்கூறும் சுன்னத் ஆகும்

2)குர்பானி என்பது ஒன்று அதன் வடிவம் மற்றொன்று உயிரோட்டமான அமல் ஆகும்.வடிவம் என்றால் ஒரு பிராணியை குர்பானி கொடுப்பதாகும்.

உயிரோட்டமான அமல் என்றால் நாம் நம் உயிருக்கு பகரமாக குர்பானி கொடுக்கின்றோம் என்ற எண்ணம் வரவேண்டும்.

பொருளுக்கு பகராமாக பொருளை صدقہ ஸதகா செய்யவேண்டும்.இது உயிருக்கு பகரமாக கொடுக்கும் صدقہ ஸதகா அதனால் ஒரு உயிரை குர்பானி கொடுக்கப்படுகிறது.صدقہ ஸதகா கொடுக்க நாள் குறிப்பில்லை.ஆனால் குர்பானி குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே கொடுக்க இயலும்.

குர்பானியின் சட்டங்கள்

குர்பானி இரண்டு வகை.

1)வாஜிப் واجب கடமை

2)விரும்பதக்கது مستحب

புத்திசுவாதீனமுள்ளعاقل வயதுக்கு வந்த بالغ சுதந்திரமான حر,ஊரிலுள்ள مقیم முஸ்லிமான مسلم வசதியுள்ள مال அனைவரின் மீதும் குர்பானி واجب கடமையாகும்.குர்பானி கொடுக்காதவன் பாவியாவானன்.

எனவே سفر பயணத்திலுள்ளவர், فقیرஏழை,محتاج தேவையுள்ளவர் இவர்கள் குர்பானி கொடுப்பது مستحب விரும்பதக்கதாகும்.

எப்படி ஜகாத் نصاب எனும் ஜகாத் அளவை சொந்தமாக்கிக்கொண்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையோ அதுப்போன்றே குர்பானியும் ஜகாத் நிஸாப் வைத்துள்ள ஒவ்வொருவரின் மீதும் واجب கடமையாகும்.

எனவே விட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதும்,அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் குர்பானி கொடுத்து விட்டால் கடமை நீங்கிவிடாது.ஜகாத் கடமையான ஒவ்வொருவருமே குர்பானி கொடுக்கவேண்டும்.இல்லாவிட்டால் அனைவரும் பாவியாக கருத்தப்படுவர்.

மரணித்தவர்களுக்கு اِیصالِ ثواب ஈசால் ஸவாபாக ஒரு குர்பானியை பலநபர்களுக்கு நிய்யத் செய்யலாம்.

மரணித்தவருக்கு  اِیصالِ ثواب ஈசால் ஸவாபாகவோ அல்லது ஊயிருடனுள்ளவர்களுக்கு நன்மையை நாடி குர்பானி கொடுப்பது கூடும்.

குர்பானியை نذر நேர்ச்சை செய்துவிட்டாலோ அல்லது فقیر ஏழை ஒருவர் குர்பானி நிய்யத்தில் பிராணியை வாங்கிவிட்டாலோ குர்பானி واجب ஆகிவிடும்.

குர்பானி واجب வாஜிப் ஆகுவதின் شرائط நிபந்தனைகள்.

1)புத்திசுவாதீனமுள்ளவனாக عاقل இருப்பது.எனவே புத்திசுவாதீனமில்லாதன்,பைத்தியம் இவர்களின் மீது குர்பானி கடமையாகாது.

2)வயதுக்கு வந்தவானாக  بالغ இருப்பது.எனவே சிறுவனின் மீது வசதியிருந்தாலும் குர்பானி கடமையாகாது.குர்பானி நாட்களில் بالغ ஆகிவிட்டால் அல்லது வசதிப்பெற்றவனாகிவிட்டால் குர்பானி கடமையாகும்.

3)சுதந்திரமானமானவானாக  حر இருப்பது.அடிமை மீது குர்பானி  கடமையாகாது.

4)ஊரிலுள்ளவனாக  مقیمஇருப்பது.பயணியின் மீது குர்பானி கடமையாது.

ஆனால் வசதியுள்ளவர் பயணத்தில் குர்பானி கொடுத்தால் அதன் நன்மை அவருக்கு கிடைக்கும்.

5)முஸ்லிமாக  مسلم இருப்பது.முஸ்லிம் அல்லாதவரின் மீது குர்பானி கடமையாகாது.ஒருவன் குர்பானி நாட்களில் முஸ்லிமாகி,வசதியுள்ளவனாக இருந்தால் அவன் மீது குர்பானி  கடமை ஆகும்.

6)ஜகாதின் அளளை சொந்தமாக்கியவானாக صاحب نصاب இருக்கவேண்டும்.ஏழையின் மீது குர்பானி கடமையாகாது.ஏழை குர்பானி கொடுத்தால் அதன் நன்மை அவருக்கு கிடைக்கும். ஒருவன் ஜகாதின் அளளை சொந்தமாக்கியவானாக صاحب نصاب இருக்கிறான்.ஆனால் அவன் கடனின் அளவு ஜகாதின் நிஸாபை விட அதிகமாக இருந்தால் அவன் மீது குர்பானி கடமையாகாது.

குர்பானி واجب வாஜிப் ஆகுவதின் அளவு ஒருவர் ஜகாத்தின் நிஸாபை சொந்தமாக்கியவராக இருந்தாலோ அல்லது ஒருவனிடம் சுய தேவையை விட பொருள்கள் அதிகமாக இருந்து அது நிஸாபின் அளவு இருந்தால் குர்பானி கடமையாகும். 

நிஸாப் என்றால் தங்கம் 87 கிராம் 480 மில்லி கிராம்(சுமார் 11 சவரனுக்குச் சமம்.)

வெள்ளியின் "நிஸாப்"அளவு:612 கிராம் 360 மில்லி கிராம்

அல்லது அந்த அளவு பணம் இருந்தால் குர்பானி கடமையாகும்.

எவரின் மீது ஸதகதுல் ஃபித்ர் வாஜிபோ அவரின் மீது குர்பானி வாஜிப் ஆகும்.

அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்கியும்,நம் குர்பானியை சிறந்ததாகவும் ஆக்கி வைப்பானாக!ஆமீன்...


வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


No comments:

Post a Comment