தலைப்பு:
பாவத்தை கரிக்கும் ரமலான்
ரமலானின் மூலச்சொல் رمض என்பதாகும். ரமல் رمض என்றால் கரிக்குதல் என்று பொருள்.நெருப்பு விறகை எரித்து சாம்பலாக்கி விடுவதுப்போல், ரமலானும் பாவத்தை எரித்து சாம்பலாக்கி விடுகிறது.இதன் காரணமாகவே ரமலான் மாதத்தின் நடுப்பகுதி நாட்களில், அல்லாஹ் தன் அடியார்களுக்கு பிரத்தியேகமாக பாவமன்னிப்பை அதிகமாக வழங்குகிறான்.
ரமலான் அது பாவமன்னிப்பின் மாதம்;
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (38)، ومسلم (760).
நபி( ஸல்) அவர்கள் சொன்னார்கள்:எவர் ரமலான் மாதத்தில் நம்பிக்கையோடும்,நன்மையை நாடியும், நோன்பு நோற்றாரோ,அவர் முன்செய்த பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படும். (நூல் :புகாரி, முஸ்லிம்)
பாவமன்னிப்பு வழங்கப்படுகிற மாதத்தில் கூட பாவமன்னிப்பு கேட்காதவரும்,பாவமன்னிப்பு பெறாதவரும் யார் தெரியுமா?
1,அவர் நபியின் சாபத்திற்குரியவர்
أن النبي صلى الله عليه وسلم قال : «رَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ»رواه الترمذي (3545)
ரமலான் மாதத்தை பெற்ற ஒருவன், அவன் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு முன்பே,அம்மாதம் அவனை விட்டும் கழிந்துவிட்டால், அம் மனிதனுக்கு நாசம் உண்டாகட்டும்".என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்.(நூல் :திர்மிதீ).
2,அவர் நஷ்டவாளி
قال صلى الله عليه وسلم"رغم انف امرئ ثم رغم انف امرئ ثم رغم انف امرى قال الصحابة"خاب وخسر يا رسول الله,من هو؟" قال "من ادرك رمضان ولم يغفر له"
ஒரு மனிதன் நாசம் அடைந்தான் என்று நபி(ஸல்)அவர்கள் மூன்றுமுறை கூறியபோது நஷ்டமடைந்த அந்த மனிதன் யார்? என ஸஹாபாக்கள் வினவினர்.அதற்கு நபி(ஸல்) அவர்கள்,எந்த மனிதர் ரமழான் மாதத்தை அடைந்தும் தன் பாவங்களுக்கு மன்னிப்பு பெறவில்லையோ அவன் தான் நஷ்டமைந்தவன் என்றார்கள்.
பாவமன்னிப்பு என்றால் என்ன?
التوبة لغة: من تاب يتوب ، إذا رَجع وشرعًا : الرجوع من معصية الله تعالى إلى طاعته
قال النووي – رحمه الله - تعالى قَالَ العلماءُ: التَّوْبَةُ وَاجبَةٌ مِنْ كُلِّ ذَنْب، فإنْ كَانتِ المَعْصِيَةُ بَيْنَ العَبْدِ وبَيْنَ اللهِ تَعَالَى لاَ تَتَعلَّقُ بحقّ آدَمِيٍّ، فَلَهَا ثَلاثَةُ شُرُوط:
أحَدُها: أنْ يُقلِعَ عَنِ المَعصِيَةِ .والثَّانِي: أَنْ يَنْدَمَ عَلَى فِعْلِهَا .والثَّالثُ: أنْ يَعْزِمَ أَنْ لا يعُودَ إِلَيْهَا أَبَدًا.فَإِنْ فُقِدَ أَحَدُ الثَّلاثَةِ لَمْ تَصِحَّ تَوبَتُهُ.
அரபி அகராதியின் படி தவ்பா என்றால் "மீள்வது"என்ற பொருள் கொண்ட வார்த்தையாகும்.
ஷரீஅத்தின் படி தவ்பா என்றால் "பாவங்களிலிருந்து அல்லாஹ்வுடைய வணக்கங்களின் பக்கம் மீள்வது"என்பதாகும்.
இமாம் நவவீ(ரஹ்) அறிஞப் பெருமக்கள் கூறுவதாக"
பாவமன்னிப்பு என்பது,"தான் செய்த பாவங்களில் மனித உரிமை சம்பந்தப்படாத வகையில் எந்த பாவங்கள் இருக்கின்றனவோ,அவை அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது"ஓர் அடியானின் கடமையாகும்.அதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு.
1,பாவத்தை விட்டும் முற்றிலும் நீங்குவது.
2,அவற்றைச் செய்தது குறித்து கவலைப்படுவது.
3,எக்காலமும் இனி பாவம் செய்யாமல் இருப்பது என உறுதி கொள்வது.
இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று இல்லாமல் போனாலும் பாவமன்னிப்பு முழுமையடையாது.
இந்த நிபந்தனைகளை பாவமன்னிப்பை கேட்பவர் பின்பற்றியே ஆக வேண்டும்.அப்பொழுது தான் அவரின் தவ்பா செம்மையாகும்.
நபிமார்களின் பாவமன்னிப்புகள்
ஆதம்(அலை)
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் : 7:23)
இப்ராஹிம்(அலை)
وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
(நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.(அல்குர்ஆன் : 2:128)
மூஸா(அலை)
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
(பிறகு மூஸா இறைவனை நோக்கி) "என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.(அல்குர்ஆன் : 7:151)
சுலைமான்(அலை)
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
ஆகவே, அவர்(சுலைமான்) "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார்.(அல்குர்ஆன் : 38:35)
இவர்களை தவிர்த்து நூஹ்(அலை), யூனுஸ்(அலை),தாவூத்(அலை) என எல்லா நபிமார்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கேட்டார்கள்.
ஏன் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ)).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், "நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்"என்றார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் : 5235)
மேற்கூறிய ஹதிஸ் நம் அனைவருக்கும் பாவமன்னிப்பின் முக்கியத்துவத்தை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது.
பாவமன்னிப்பு கேட்பதினால் ஏற்படும் பலன்கள்
1,அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கும்
அல்லாஹ் தன் திருமறையில்
وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.(அல்குர்ஆன் : 4:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.
2,மழையை பெற்றுக்கொள்ளலாம்.
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்று கூறினேன்.(அல்குர்ஆன் : 71:10)
يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ
“(அப்படிச் தவ்பா செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.(அல்குர்ஆன் : 71:11)
3,பொருள்செல்வத்தையும்,குழந்தைசெல்வத்தையும்பெற்று,தோட்டங்களையும்,நீர்நிலைகளையும் சொந்தமாக்கிகொள்ளலாம்.
وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.(அல்குர்ஆன் : 71:12)
4,கவலை மற்றும் நெருக்கடியிலிருந்து மீண்டு,வளமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
நபி(ஸல்)அவர்கள்
عن عبد الله بن عباس , قال: قال رسول الله صلى الله عليه وسلم:" من لزم الاستغفار , جعل الله له من كل هم فرجا , ومن كل ضيق مخرجا , ورزقه من حيث لا يحتسب".
எவர்"பாவமன்னிப்புத் தேடுவதை வழமையாக்கிக் கொண்டாரோ,அவருக்கு அல்லாஹ் அனைத்து கவலைகளையும் நீக்கி,அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் அவனை வெளியாக்கி,கணக்கின்றி அவருக்கு வாழ்வாதாரம் அளிக்கிறான்"என்று சொன்னார்கள்.(நூல்:இப்னு மாஜா ).
அதே நேரத்தில் பாவமன்னிப்பை கேட்கவில்லையென்றால்"அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்காது,மழை பெய்யாது,பொருளும்,புத்திரபாக்கியமும்உண்டாகாது,விவசாயம் நாசமாகி,நீர்நிலைகள் வற்றிப்போகும். கவலைக்கும்,நெருக்கடிக்கும் உள்ளாகி வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதியாக நிற்போம்"எனவே பாவமன்னிப்பைக் கேட்டு,பரிசுத்தமானவர்களாகுவோம்.
வாழ்க்கையின் அனைத்துப்பிரச்சினைகளுக்கும்,ஏன் இயற்கைப்பேரிடருக்கும் நாம் ஏந்த வேண்டிய ஒரே ஆயுதம் பாவமன்னிப்பு
عَنْ أَبِي مُوسَى قَالَ خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا، يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَأَتَى الْمَسْجِدَ، فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ وَقَالَ: ((هَذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ)).
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.
ஆக எல்லாப்பிரச்சனைக்கும் தீர்வு பாவமன்னிப்பில் உண்டு என்பதை நமக்கு நம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தண்டனையை தடுக்கிற சக்தியும் பாவமன்னிப்புக்கு உண்டு .
நபி யூனுஸ் (அலை) அவர்களின் சமுதாயம் அல்லாஹ்வை நிராகரித்த போது அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பாருங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள். பிறகு வானத்தில் ஒருவிதமான மாற்றத்தை பார்த்த போது. மக்கள் யூனுஸ் நபி சொன்னது உண்மை என்று நம்பி அனைவர்களும் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதன் மூலமாக தனக்கு வர இருந்த வேதனையில் இருந்து தப்பித்து கொண்டார்கள். அதை வல்ல ரஹ்மான் தன் திருமறையிலேயே
فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ
தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.(அல்குர்ஆன் : 10:98)என்று கூறுகிறான்.
பிறகு நபி யூனுஸ் (அலை) அவர்கள் மக்கள் அழிக்கப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்து வந்து பார்த்தால் மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள். ஒரு நபியின் துஆவை விட அடியார்கள் கேட்கும் பாவமன்னிப்பை அல்லாஹ் உடனே அங்கிகரித்து கொள்கிறான்.
பாவமன்னிப்பை பெற்றவரே உலகில் மிக சிறந்தவர்
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَى فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ فَدَعَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا فَقَالَ: ((أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَائْتِنِي بِهَا)). فَفَعَلَ فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ ثُمَّ صَلَّى عَلَيْهَا فَقَالَ لَهُ عُمَرُ تُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللَّهِ وَقَدْ زَنَتْ فَقَالَ: ((لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ تَعَالَى)).
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, "இவளை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3501.)
மேற்கண்ட சம்பவம்"அப்பெண்ணின் பாவமன்னிப்பை விட சிறந்த ஒன்று இவ்வுலகில் இல்லை"என்பதை உணர்த்துகிறது.
இறுதியாக .........
நபி ஆதம் (அலை) அவர்களும் தவறு செய்தார்கள். ஷைத்தானும் தவறு செய்தான்.ஆதம் (அலை) தான் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பு கேட்டார்கள்.அதனால் அல்லாஹ் ஆதமை(அலை) மன்னித்தான். ஷைத்தான் பாவமன்னிப்பு கேட்கவில்லை,அதனால் அவனை அல்லாஹ் மன்னிக்கவில்லை.
ஒருவேளை ஷைத்தான் பாவமன்னிப்பை கேட்டிருந்தால் நிச்சயமாக அல்லாஹ் அவனை மன்னித்திருப்பான்.
இந்த தன்னுடைய மன்னிக்கும் மனப்பான்மையைப்பற்றி அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்)அவர்கள்
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئًا لأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ
“ஆதமின் மகனே! நிச்சயமாக நீ என்னிடம் துஆ செய்யும் காலமெல்லாம் என்னை நீ நம்பும் காலமெல்லாம் உன்னில்; ஏற்படும் குற்றத்தை நான் மன்னிப்பேன். நான் பொருட்படுத்த மாட்டேன். ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உன் பாவங்கள் அடைந்து, பின்பு, என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன். நான் பொருட்படுத்தமாட்டேன். ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து, பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பைத் தருவேன்'' என்று அல்லாஹ் கூறினான் என நபி(ஸல்) கூற நான் கேட்டேன்.என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1878 )
மாஷா அல்லாஹ் 👌💐
ReplyDeleteஜஸாகல்லாஹூ கைரா
அல்ஹம்துலில்லாஹ்
Deleteبارك الله فيكم وجزاكم الله خير الجزاء
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
Deleteماشاء الله الحمد لله 👍👍🌹🌹
ReplyDeleteஜஸாக்கல்லாஹ்...
Delete